ஹஜ்ஜின் போது நபிகளாரின் கப்ரை ஜியாரத் செய்வது அவசியமா?
ஹஜ்ஜுக்கும், நபிகளாரின் கப்ரை ஸியாரத் செய்வதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஒருவர் ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டு மதீனா செல்லாமல் வந்துவிட்டால் அவரின் ஹஜ்ஜுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
கஅபத்துல்லாஹ், ஸஃபா, மர்வா, அரஃபா, முஸ்தலிஃபா, மினா ஆகிய இடங்களில் செய்ய வேண்டிய அமல்களை மட்டும் செய்தால் ஹஜ் முழுமையாக நிறைவேறிவிடும். இந்த இடங்களில் செய்ய வேண்டிய அமல்களைத் தான் ஹஜ்ஜின் கிரியைகளாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். வேறு இடங்களுக்குச் சென்று எந்த அமலையும் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஆதாரப்பூர்வமான செய்திகள் இல்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்யாதவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை வெறுத்தவராவார் என்ற செய்தி சில நூல்களில் இடம்பெற்றுள்ளது. ஆனால் அது ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல.
الكامل في ضعفاء الرجال)
ثنا على بن إسحاق ثنا محمد بن محمد بن النعمان بن شبل حدثني جدي حدثني مالك عن نافع عن بن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم من حج البيت فلم يزرنى فقد جفانى
யார் ஹஜ் செய்து என்னை (என் கப்ரை) சந்திக்கவில்லையோ அவர் என்னை வெறுத்தவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)நூல் : அல்காமில் ஃபில் லுஅஃபா இப்னு அதீ,
இச்செய்தியில் இடம்பெறும் நுஃமான் பின் ஷிப்ல் என்பவர் நபிமொழிகளை இட்டுக்கட்டிச் சொல்பவர் என்று ஹதீஸ்கலை அறிஞர்களால் குற்றம் சுமத்தப்பட்டவர்.
المجروحين –)
النعمان بن شبل: من أهل البصرة، يروى عن أبى عوانة ومالك أخبرنا عنه الحسن بن سفيان، يأتي عن الثقات بالطامات، وعن الاثبات بالمقلوبات.
இதைப் போன்று பின்வரும் செய்தியையும் சிலர் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.
من زارني وزار أبي ابراهيم في عام واحد ضمنت له الجنة
யார் ஒரு வருடத்தில் என் (கப்ரை) ஸியாரத் செய்து, என் தந்தை இப்ராஹீம் (அலை) அவர்களின் (கப்ரையும்) ஸியாரத் செய்வாரோ அவருக்கு நான் சொர்க்கத்திற்கு பெறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இந்தச் செய்தியின் தரத்தைப் பற்றி இமாம் நவவீ அவர்கள் பின்வருமாறு கூறியுள்ளார்கள் :
المجموع شرح المهذب –(
)فرع (مما شاع عند العامة في الشام في هذه الازمان المتأخرة ما يزعمه بعضهم ان رسول الله صلى الله عليه وسلم قال (من زارني وزار أبي ابراهيم في عام واحد ضمنت له الجنة) وهذا باطل ليس هو مرويا عن النبي صلى الله عليه وسلم ولا يعرف في كتاب صحيح ولا ضعيف بل وضعه بعض الفجرة
என்னையும் என் தந்தை இப்ராஹீம் (அலை) அவர்களையும் ஒரே வருடத்தில் ஜியாராத் செய்வாரோ அவருக்காக நான் சொர்க்கத்திற்கு பெறுப்பேற்றுக் கொள்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக சிரியா நாட்டு மக்களிடம் பரவியுள்ளது. இது பொய்யான செய்தியாகும். இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழியாக அறிவிக்கப்படவில்லை. ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் இது இல்லை. பலவீனமான ஹதீஸ்களிலும் இது இல்லை. மாறாக இது தீயவர்களால் இட்டுக்கட்டப்பட்டதாகும்.நூல் : அல்மஜ்மூவு,
لسان الميزان)
حدثنا النعمان بن هارون ثنا أبو سهل بدر بن عبد الله المصيصي ثنا الحسن بن عثمان الزيادي ثنا عمار بن محمد ثنا خالي سفيان عن منصور عن إبراهيم عن علقمة عن بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه و سلم من حج حجة الإسلام وزار قبري وغزا غزوة وصلى في بيت المقدس لم يسأله الله فيما افترض عليه
இந்தச் செய்தியில் இடம்பெறும் பத்ரு பின் அப்துல்லாஹ் என்பவரின் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் எந்தத் தகவலும் இல்லை. மேலும் இவர் பொய்யான செய்திகளை அறிவிப்பவர் என்று ஹாபிழ் தஹபீ அவர்கள் கூறியுள்ளார்கள்.
ميزان الاعتدال في نقد الرجال)
1137 ( 1548 ) بدر بن عبد الله أبو سهل المصيصي عن الحسن بن عثمان الزيادي بخبر باطل وعنه النعمان بن هارون
பத்ரு பின் அப்துல்லாஹ் என்பவர் ஹஸன் பின் உஸ்மான் என்பவர் வழியாக பொய்யான செய்திகளை அறிவித்துள்ளார்.நூல் : மீஸானுல் இஃதிதால்
سنن الدارقطني
2695 – ثنا الْقَاضِي الْمَحَامِلِيُّ , نا عُبَيْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الْوَرَّاقُ , نا مُوسَى بْنُ هِلَالٍ الْعَبْدِيُّ , عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ , عَنْ نَافِعٍ , عَنِ ابْنِ عُمَرَ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ زَارَ قَبْرِي وَجَبَتْ لَهُ شَفَاعَتِي
இந்தச் செய்தியில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளர் மூஸா பின் ஹிலால் அல்அப்தீ என்பவரின் நம்பகத் தன்மை உறுதி செய்யப்படவில்லை.
الجرح والتعديل
734 – موسى بن هلال العبدى البصري روى عن هشام بن حسان سمعت ابى يقول ذلك قال أبو محمد وروى عن عبد الله العمرى روى عنه أبو بجير محمد بن جابر المحاربي ومحمد بن اسماعيل الاحمسي وابو امية الطرسوسى محمد بن ابراهيم. حدثنا عبد الرحمن قال سألت ابى عنه فقال: مجهول.
மூஸா பின் ஹிலால் அல்அப்தீ என்பவர் யாரென அறியப்படாதவர் ஆவார்.நூல் : அல்ஜரஹ் வத்தஃதீல்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரை ஸியாரத் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வரும் செய்திகள் அனைத்தும் பலவீனமானவையாகும்.