ஹிஜ்ரி ஆண்டு ஆங்கில ஆண்டு இவற்றில் எதை நாம் பயன்படுத்த வேண்டும்?

(வீடியோவை எழுத்து வடிவில் தயாரித்தவர் கோவை இம்ரான்)

விஞ்ஞான அடிப்படையில் ஒரு வருடத்திற்கு 365 நாட்கள் வருகின்றது. ஆனால் நம் இஸ்லாமிய அடிப்படையில் மாதத்திற்கு 29 அல்லது 30 நாட்கள் என்ற கணக்கில் 12 மாதங்களுக்கு 360 அல்லது 355 நாட்கள் மட்டுமே வருகின்றது. இந்தக் கணக்கீடுகளில் எது சரியானது? இதற்கு விஞ்ஞான மற்றும் மார்க்க அடிப்படையில் பதில் அளிக்கவும்!

முஹம்மது நூஹு,  எலந்தங்குடி, மயிலாடுதுறை.

பதில்:

சந்திரனின் சுழற்சியின் அடிப்படையில் ஒரு மாதம் என்பது 29 ½ நாட்கள் ஆகும். அரை நாள் என்பதைக் கணக்கில் எடுக்க முடியாததால் ஒரு மாதத்திற்கு 30 அல்லது 29 நாட்கள் என்று மாறி மாறி வருகின்றது. இந்தச் சந்திரக் கணக்கின் படி பார்த்தால் ஒரு வருடத்திற்கு 355 நாட்கள் எடுக்கின்றன. இது ஒரு வகை.

சூரியக் கணக்கின் அடிப்படையில் பார்த்தால் பூமி, சூரியனைச் சுற்றி வருவதற்கு 365 ¼ நாட்கள் எடுத்துக்கொள்கின்றது. இந்த 365 நாட்களுடன் ஒரு நாளின் கால்பகுதியைச் சேர்க்க முடியாது என்பதால் தான் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிப்ரவரி மாதத்திற்கு வழமையான 28 நாட்களுடன், ஒரு நாள் கூடுதலாகச் சேர்த்து 29 நாட்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆக, சூரியக் கணக்கின் அடிப்படையில் ஒரு வருடத்திற்கு தோராயமாக 365 நாட்கள் என்று கணக்கிடுகின்றோம்.

இந்தச் சூரியன் மற்றும் சந்திரக் கணக்கை ஒப்பிடும்போது வருடத்திற்கு 10 நாட்கள் வித்தியாசப்படுகின்றது. இது பலருக்கும் குழப்பமாகத் தோன்றலாம். ஆனால் இதில் எந்தக் குழப்பமும் இல்லை.

ஏனென்றால் மாதத்தைக் கணக்கிடுவதற்கு அல்லாஹ் நமக்கு பிறையைக் காலம் காட்டியாக ஆக்கியுள்ளான். பிறையில் தான் நாட்களைக் கணக்கிடக்கூடிய அம்சம் இருக்கின்றது. ஒவ்வொரு நாளும் பிறையின் அளவு பார்வைக்கு வித்தியாசப்படும். முதல் பிறையைப் போன்று இரண்டாம் பிறை இருக்காது. இரண்டாம் பிறையைப் போன்று ஐந்தாம் பிறை இருக்காது. ஒவ்வொரு நாளும் அது வளர்ந்து கொண்டே இருக்கும். இதனைத் தான் ‘வளர்பிறை’ என்று சொல்கின்றோம். 14 ஆம் நாளில் பிறை முழு தோற்றத்துடன் காணப்படும்.

அதற்குப் பிறகு ஒவ்வொரு நாளும் அப்படியே அளவில் குறைந்து கொண்டே வரும். இதனை ‘தேய்பிறை’ என்று சொல்கின்றோம்.

ஆனால் சூரியனில் இந்த நிலை இல்லை. எல்லா நாட்களிலும் சூரியன் ஒரே மாதிரியாகத் தான் காணப்படும். அது நாளுக்கு நாள் வித்தியாசப்படாது.

பிறையில் இந்த மாறுதல் வருவதால் தான் அது நாட்களை எண்ணுவதற்கு ஏதுவாக இருக்கின்றது. எனவே தான், பிறையின் தோற்றத்தை வைத்து அது எந்த நாளுக்குரியது என்பதைக் கணிக்க முடிகின்றது. ஆனால் சூரியனை அது எந்த நாளுக்குரியது என்பதைக் கணிக்க முடியாது.

இந்தச் சூரியன் மற்றும் சந்திரனைப் பற்றி இறைவன் கூறுகின்றான் :

هُوَ الَّذِي جَعَلَ الشَّمْسَ ضِيَاءً وَالْقَمَرَ نُورًا وَقَدَّرَهُ مَنَازِلَ لِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ ۚ مَا خَلَقَ اللَّهُ ذَ‌ٰلِكَ إِلَّا بِالْحَقِّ ۚ يُفَصِّلُ الْآيَاتِ لِقَوْمٍ يَعْلَمُونَ

ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்துக் கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான். தக்க காரணத்துடன் தான் அல்லாஹ் இதைப் படைத்துள்ளான். அறிகின்ற சமுதாயத்திற்கு வசனங்களை அவன் தெளிவாக்குகிறான்.

திருக்குர்ஆன்  10:5

وَجَعَلْنَا اللَّيْلَ وَالنَّهَارَ آيَتَيْنِ ۖ فَمَحَوْنَا آيَةَ اللَّيْلِ وَجَعَلْنَا آيَةَ النَّهَارِ مُبْصِرَةً لِّتَبْتَغُوا فَضْلًا مِّن رَّبِّكُمْ وَلِتَعْلَمُوا عَدَدَ السِّنِينَ وَالْحِسَابَ ۚ وَكُلَّ شَيْءٍ فَصَّلْنَاهُ تَفْصِيلًا

இரவையும், பகலையும் இரண்டு சான்றுகளாக்கினோம். உங்கள் இறைவனிடமிருந்து அருளைத் தேடவும், ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக் கணக்கையும் நீங்கள் அறிந்துக் கொள்வதற்காகவும் இரவின் சான்றை ஒளியிழக்கச் செய்து, பகலின் சான்றை வெளிச்சமாக்கினோம். ஒவ்வொரு பொருளையும் நன்கு தெளிவுபடுத்தியுள்ளோம்.

திருக்குர்ஆன்  17:12

إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும்.

திருக்குர்ஆன்  9:36

இந்த வசனங்களின் அடிப்படையில், இறைவனின் படைப்புகளான சூரியன், சந்திரன் இரண்டுமே கணக்கிடத் தகுந்தவை தாம். எனவே சூரியனை வைத்தும் வருடத்தைக் கணக்கிடலாம்; சந்திரனை வைத்தும் வருடத்தைக் கணக்கிடலாம்.

குழப்பத்தைத் தவிர்ப்பதற்காக சூரிய ஆண்டு, சந்திர ஆண்டு என்று வேறுபடுத்தி நாம்  சொல்லிக் கொள்ளலாம்.

வணக்க வழிபாடுகளைப் பொருத்தவரை,  அன்றாடத் தொழுகை நேரங்கள், நோன்புக் காலங்களில் ஸஹ்ருடைய நேரம் ஆகியவற்றை அறிந்து கொள்வதற்கு சூரியனையும், நோன்புக்கான மாதத்தைக் கணக்கிடுவது, இத்தா, போர் செய்ய தடைசெய்யப்பட்ட காலங்கள் ஆகியவற்றைக் கணக்கிடுவதற்கு சந்திரனையும் கணக்கீட்டிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆனால், உலக நடைமுறையைப் பார்க்கும் போது உலகம் முழுவதும் ஏன் அரபு நாடுகளில் கூட சூரியக் கணக்கை அடிப்படையாக வைத்தே நிறுவனங்களின் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பது, அரசு விடுமுறை நாட்களை அறிவிப்பது, கல்வி நிறுவனங்களில் பாட நாட்களை நிர்ணயிப்பது போன்றவற்றை முடிவு செய்கின்றனர்.

பெரும்பாலும், சூரியனின் அடிப்படையில் கணக்கீடு செய்வதை முஸ்லிம்களாகிய நாம் தவிர்த்துக் கொண்டதால் அது ‘கிறிஸ்தவர்களின் கண்டுபிடிப்பு’ என்று தவறாக விளங்கி வைத்திருக்கின்றோம். ஆனால், சூரியன், சந்திரன் இரண்டுமே இறைவனால் காலம் காட்டுவதற்காக படைக்கப்பட்டவை தாம். அவை இரண்டின்  அடிப்படையில் கணக்கிடப்படுவதும் இஸ்லாமிய ஆண்டுகள் தாம். நம் வசதிக்குத் தகுந்தவாறு இரண்டையுமே காலக்கணக்கீட்டிற்கு நாம் பயன்படுத்தலாம்.

الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَانٍ

சூரியனும், சந்திரனும் கணக்கின் படி இயங்குகின்றன.

திருக்குர்ஆன்  55:5

صحيح البخاري مشكول (4/ 108)
3202 – حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي أُوَيْسٍ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الشَّمْسَ وَالقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللَّهِ لاَ يَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ وَلاَ لِحَيَاتِهِ، فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَاذْكُرُوا اللَّهَ»

“சூரியனும், சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரண்டு சான்றுகளாகும்” என இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி)

புகாரி : 3202

எனவே சூரிய ஆண்டிற்கும், சந்திர ஆண்டிற்கும் இடையே வருடத்திற்கு பத்து நாட்கள் வித்தியாசம் இருந்தாலும் எதைப் பயன்படுத்தினாலும் அது அல்லாஹ்வின் பார்வையில் குற்றம் ஆகாது.

சிலர் ஹிஜ்ரி ஆண்டின் அடிப்படையில்  தான் கணக்கிட வேண்டும் என்று தவறாக விளங்கி, அதன் அடிப்படையில் செயல்பட்டும் வருகின்றனர். ஹிஜ்ரி ஆண்டின் அடிப்படையிலான கணக்கீடு என்பதே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு உருவாக்கப்பட்டது தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ‘யானை ஆண்டு’ என்பது தான் மக்களிடையே பயன்படுத்தப்பட்டு வந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின், இஸ்லாமிய ஆண்டாக எதை வைத்துக் கொள்ளலாம் என்று உமர் (ரலி) அவர்களின் காலத்தில் ஆலோசனை செய்யப்பட்டு, ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு,  முதல் ஆண்டைக் கணக்கிட்டுக் கொள்ளலாம் என்று முடிவு செய்தனர். எனவே, ஹிஜ்ரி ஆண்டு என்பதற்கும், இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

சூரிய ஆண்டையும், சந்திர ஆண்டையும் வித்தியாசப்படுத்தி அறிந்து கொண்டால் அதில் எவ்விதமான குழப்பமும் இல்லை. உதாரணமாக, ஒருவருடைய வயதைக் குறிப்பிடும் போது 60 என்று சொன்னால், உலக நடைமுறைப்படி எல்லோருமே சூரியக் கணக்கின் அடிப்படையில் தான் அதனை எடுத்துக் கொள்வார்கள். நாம் அதனைச் சந்திரக்கணக்கின் அடிப்படையில் சொல்லும்போது வருடத்திற்கு 10 நாட்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இந்த வித்தியாசத்தைப் புரிந்துக் கொண்டால் இதில் குழம்புவதற்கு எதுவும் இல்லை.

test 6 னகனம் df

test 6 test 6 test 6 Read in OnlinePJ.in ...

test 7

test 7 test 7 test 7 Read in OnlinePJ.in ...

test 8b

test 8b test 8b test 8b Read in OnlinePJ.in ...

test 8c

test 8c test 8c test 8cRead in OnlinePJ.in ...

test 4

test 4 44 4 Read in OnlinePJ.in ...

test 5

test 5 5 5 Read in OnlinePJ.in ...

மழைத் தொழுகை – 3 delete

நாட்டில் பஞ்சம், வறட்சி ஏற்படும் போது அவற்றை நீக்குவதற்காக, மழை வேண்டி வல்ல அல்லாஹ்விடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழை வேண்டி இரண்டு ரக்அத்கள் தொழுவித்துள்ளார்கள். மழைத் ...

Yes

நாட்டில் பஞ்சம், வறட்சி ஏற்படும் போது அவற்றை நீக்குவதற்காக, மழை வேண்டி வல்ல அல்லாஹ்விடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழை வேண்டி இரண்டு ரக்அத்கள் தொழுவித்துள்ளார்கள். மழைத் ...

இஸ்திகாரா தொழுகை – 2 delete

நமக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டு, எதைச் செய்வது என்று சிக்கல் ஏற்பட்டால் நமக்கு நன்மையானதைத் தேர்வு செய்ய நாடி இரண்டு ரக்அத் தொழுவதற்கு இஸ்திகாரா தொழுகை என்று சொல்லப்படும். இரண்டு ரக்அத்கள் தொழுத பின் ...

மழைத் தொழுகை – 2

நாட்டில் பஞ்சம், வறட்சி ஏற்படும் போது அவற்றை நீக்குவதற்காக, மழை வேண்டி வல்ல அல்லாஹ்விடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழை வேண்டி இரண்டு ரக்அத்கள் தொழுவித்துள்ளார்கள். மழைத் ...

பிரயாணத்தில் வித்ரு தொழுகையின் அவசியம்: ஒரு மார்க்க விளக்கம்

இஸ்லாமிய மார்க்கம் பயணத்தில் இருப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. அந்த வகையில், நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டாகச் சுருக்கித் தொழுவதற்கும் (கஸர்), இரு நேரத் தொழுகைகளை இணைத்துத் தொழுவதற்கும் (ஜம்வு) அனுமதி உண்டு. இத்தகைய ...

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...