இயேசு பிறப்பதற்கு முன் அது குறித்து நற்செய்தி இம்மானுவேல் என்று பெயரிடப்படுவார் தேவனால் சொல்லப்பட்டது என்று பைபிள் சொல்கிறது. அந்த விபரங்களைப் பாருங்கள்

14. ஆதலால் ஆண்டவர் தாமே உங்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பார்; இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவாள்.

ஏசாயா 7:14

இது பழைய ஏற்பாட்டில் ஏசாயா எனும் தீர்க்கதரிசி செய்த முன்னறிவிப்பு. இது யாரைக் குறிக்கிறது என்று தெளிவாக சொல்லபடாவிட்டாலும் கன்னிகை கர்ப்பம் தரித்து பிள்ளை பெறுவாள் என்பது மேரியைத் தவிர வேறு யாரையும் குறிக்காது. இந்த முன்னறிவ்வு இயேசுவைத் தான் குறிக்கிறது என்று மத்தேயுவும் தனது சுவிசேஷத்தில் பினவ்ருமாறு எடுத்துக் காட்டுகிறார்.

23. அவன்: இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தமாம்.

24. யோசேப்பு நித்திரை தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;

25. அவள் தன் முதற்பேறான குமாரனைப் பெறுமளவும் அவளை அறியாதிருந்து, அவருக்கு இயேசு என்று பேரிட்டான்.

மத்தேயு 1:23

இயேசு பிறந்தவுடன் இமானுவேல் என பெயரிடப்படுவார் என்று முன்னறிவிப்பு உள்ளதாக மத்தேயு கூறுகிறார். இந்த முன்னறிவிப்பின் படி இமானுவேல் என்று பெயர் சூட்டப்படவில்லை. மாறாக இயேசு என்று பெயரிட்டதாக அதே மத்தேயு அடுத்த வசனத்தில் கூருகிறார்.

இயேசுவுக்கு இமானுவேல் என்று பெயர் சூட்டப்படும் என்ற ஏசாயாவின் முன்னறிவிப்பு பொய்யாகி விட்டது. அல்லது ஏசாயா பெயரில் யாரோ இட்டுக்கட்டியுள்ளார்களா?

இயேசு என்ற பெயருடன் இமானுவேல் என்ற பெயரும் சூட்டப்பட்டு இருக்கலாமா என்றால் அதுவும் இல்லை. அப்படி சூட்டப்பட்டு இருந்தால் ஒரு தடவையாவது இயேசு இமானுவேல் என்று அழைக்கப்பட்டு இருப்பார். அதுவும் முன்னறிவிப்பான பெயர் என்பதால் அந்தப் பெயரில் அழைக்கபபட்டு இருக்க வேண்டும். ஆனால் இயேசு ஒரே ஒரு தடவை கூட இமானுவேல் என்று இயேசு அழைக்கப்பட்டதாக பைபிளில் ஒரு வசனம் கூட இல்லை.