இரண்டு சிறகுடையவர் என்ற சிறப்பு பெற்ற நபித்தோழர் யார்?
ஷாகுல் ஹமீது
பதில்
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் அவர்களின் மகனும், அலீ (ரலி) அவர்களின் சகோதரருமாகிய ஜஃபர் பின் அபீதாலிப் இப்பெயரால் குறிப்பிடப்படுகிறார்.
முஅத்தா எனும் போரில் இவர்களின் இரு கைகள் வெட்டப்பட்டன.
فتح الباري لابن حجر
وَالطَّبَرَانِيُّ عَنِ بن عَبَّاسٍ مَرْفُوعًا دَخَلْتُ الْبَارِحَةَ الْجَنَّةَ فَرَأَيْتُ فِيهَا جَعْفَرًا يَطِيرُ مَعَ الْمَلَائِكَةِ وَفِي طَرِيقٍ أُخْرَى عَنْهُ أَنَّ جَعْفَرًا يَطِيرُ مَعَ جِبْرِيلَ وَمِيكَائِيلَ لَهُ جَنَاحَانِ عَوَّضَهُ اللَّهُ مِنْ يَدَيْهِ وَإِسْنَادُ هَذِهِ جَيِّدٌ
இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது ஜஃபர் அவர்களுக்கு இரு கைகளுக்குப் பகரமாக இரு சிறகுகளை அல்லாஹ் கொடுத்து வானவர்களுடன் அவர் பறந்து கொண்டிருந்ததைப் பார்த்தேன் என்று குறிப்பிட்டார்கள். (தப்ரானி)
இதுபோல் இன்னும் பல ஹதீஸ்கள் உள்ளன. இரு கைகளை அல்லாஹ்வின் பாதையில் இழந்து அதற்குப் பகரமாக இரு சிறகுகளைப் பெற்றதால் இவர் துல் ஜனாஹைன் – இரு சிறகுகள் உடையவர் என்று அழைக்கப்பட்டார்.
இப்னு உமர் (ரலி) அவர்கள் ஜஃபரைச் சந்தித்தால் இரு சிறகுகள் கொண்டவரே உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் எனக் கூறுவார்கள்.
நூல் புகாரி 3709, 4264
24.09.2014. 23:58 PM