இயக்கங்கள் வழிகேடா?
இயக்கங்கள் வழிகேடு என்று சிலர் கூறுகிறார்களே இது சரியா?
எம்.ஐ.எம்.சைஃபுல்லாஹ்
இயக்கம் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் இந்தக் கேள்வியின் அபத்தத்தைப் புரிந்து கொள்ளலாம். சிலர் ஒன்று சேர்ந்து சில செயல் திட்டங்களை வகுத்துக் கொண்டு செயல்படுவதற்குப் பெயர் தான் இயக்கம்.
இயக்கம் கூடாது என்று சொல்பவர்களும் ஒரு இயக்கமாகத் தான் செயல்படுகிறார்கள். அவர்கள் தனி மனிதராக இருந்து அதைச் சொல்லாமல் ஒருவரைத் தலைவராக ஏற்றுக் கொண்டு அவரின் கீழ் செயல்படுகிறார்கள். இது தான் இயக்கம் என்பது.
தனக்கென ஆள் சேர்ப்பது, தன்னை ஒரு குழுவுக்கு தலைவராக்கிக் கொள்வது என இயக்கமாக செயல்படக் கூடியவர்கள் இயக்கம் கூடாது எனக் கூறுவது கோமாளித்தனமானது.
இயக்கம் கூடாது என்று கூறுவோர் இதற்கு எந்த ஆதாரத்தையாவது எடுத்துக் காட்டி அதில் அர்த்தம் உள்ளதாக உங்களுக்குத் தோன்றினால் தெரிவியுங்கள். அது குறித்து விளக்கம் அளிப்போம்