ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

பீ. ஜைனுல் ஆபிதீன்

வெளியீடு நபீலா பதிப்பகம்

மூன் பப்ளிகேசன்ஸ்

3, போஸ்ட் ஆபீஸ் தெரு

மண்ணடி, சென்னை 600001

பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ஜனவரி 2025

உரிமை : ஆசிரியருக்கே

பக்கங்கள்     : 88

அச்சிட்டோர் : சன் பிரிண்டிங் ஏஜன்ஸி

மதுரை , செல் நம்பர் : 94438 79861

விலை : 32.00

பதிப்புரை

இஸ்லாம் மிகவும் வலியுறுத்திக் கூறும் ஐந்து கடமைகளில் ஒன்றாக ஜகாத் எனும் கடமை அமைந்துள்ளது.

ஜகாத்தை வலியுறுத்தும் ஏராளமான திருக்குர்ஆன் வசனங்களும், நபிமொழிகளும் உள்ளன.

ஜகாத் கட்டாயக் கடமை என்பதில் முஸ்லிம் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு ஏதும் இல்லாவிட்டாலும் ஜகாத் உட்பிரிவுச் சட்டங்கள் பலவற்றில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் இருந்து வருகின்றன.

* எந்தெந்த பொருட்களில் ஜகாத் கடமையாகும்?

* தங்கம் மற்றும் வெள்ளி நகைகளுக்கு ஜகாத் கடமையில் விதிவிலக்கு உள்ளதா?

* குடியிருக்கும் வீடு, பயன்படுத்தும் வாகனங்கள் ஆகியவை ஜகாத்திலிருந்து விதிவிலக்கு பெறுமா?

* அழுகும் பொருட்கள் மற்றும் இதர விளை பொருட்களில் எவற்றுக்கு ஜகாத் உண்டு?

என்பன போன்ற பல்வேறு சட்டங்களில் அறிஞர்களிடையே முரண்பட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றன.

இவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இவை திறந்த மனதுடன் தான் விவாதிக்கப்பட்டு வருகின்றன. மாற்றுக் கருத்துடையவர்களை இஸ்லாத்தின் விரோதிகளாகப் பார்க்கும் மனப் போக்கு இருந்ததில்லை.

ஆனால் ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வத்துக்கு மீண்டும் ஜகாத் இல்லை என்று தக்க ஆதாரங்களுடன் நாம் விளக்கும் போது மட்டும் இந்தப் பார்வை அதிகமானவர்களுக்கு இல்லை.

எனவே தான் இது குறித்து விளக்கம் அளிக்கும் நோக்குடன் இந்நூல் வெளியிடப்படுகிறது,

இதில் சொல்லப்படும் செய்திகளை திறந்த மனதுடன் வாசித்தால் நாம் சொல்லும் கருத்து மிகச் சரியானது என்பதை அறிந்து கொள்வீர்கள். இன்ஷா அல்லாஹ்

நபீலா பதிப்பகம்

பொருள் அட்டவணை

இக்கருத்தை இதற்கு முன் யாரும் சொன்னதுண்டா என்ற வாதம்

மார்க்கத்தின் கட்டளைகளைப் புரிந்து கொள்ளும் சரியான முறை

பொருட்களைத் தூய்மைப்படுத்தவே ஜகாத்

பொருளைத் தூய்மைப்படுத்துமா? மனிதர்களைத் தூய்மைப்படுத்துமா

அனாதைகளின் சொத்துக்கள் பற்றிய ஹதீஸ் ஆதாரமாகுமா?

இரண்டு வருட ஜகாத்தை முன்கூட்டியே வாங்கிய ஹதீஸ் ஆதாரமாகுமா?

ஆண்டு தோறும் ஜகாத் என்ற ஹதீஸ்களின் நிலை

அபூபக்ர் ஆட்சியில் மீண்டும் மீண்டும் ஜகாத் வசூலிக்கப்பட்டதா?

கால்நடைகளுக்கான ஜகாத் மீண்டும் மீண்டும் வசூலிக்க ஆதாரமாகுமா?

வஹீ மட்டுமே மார்க்க ஆதாரம்

இக்கருத்தை இதற்கு முன் யாரும் சொன்னதுண்டா என்ற வாதம்

ஒரு செல்வத்துக்கு உரிய ஜகாத்தை ஒருவர் கொடுத்து விட்டால் அதன் பின்னர் அதே செல்வத்துக்காக மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுப்பது கடமையில்லை. ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்டவுடன் அப்பொருளுக்கான ஜகாத் கடமை நீங்கி விடுகிறது என்ற கருத்தை நாம் முன் வைக்கிறோம்.

ஒரு பொருளுக்கு ஒரு தடவை ஜகாத் கொடுத்தாலும் அதே பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் மிக மிக அதிகமான அறிஞர்களும் மக்களும் உள்ளனர்.

நமது கருத்தை அதிகமான மக்கள் எதிர்க்கிறார்கள் என்றாலும் அவர்களின் எதிர்ப்பில் ஏற்கத்தக்க ஆதாரங்கள் இல்லை. நியாயமான வாதங்கள் இல்லை.

இதைப் பற்றி நாம் விரிவாக அறிந்து கொள்வோம்.

நமது இக்கருத்தை எதிர்ப்பவர்கள் முக்கியமான வைக்கும் வாதம் என்னவென்றால் ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் கொடுக்கத் தேவை இல்லை என்ற கருத்து இதற்கு முன் யாராலும் சொல்லப்படாத புது கருத்தாக உள்ளது. உலகில் ஒருவரும் சொல்லாத கருத்தாக உள்ளதால் இது தவறான கருத்தாகும் என்ற வாதத்தை வைக்கிறார்கள்.

இந்தக் கருத்தை இதற்கு முன் ஒருவரும் சொன்னதில்லை; இப்போது தான் முதன் முதலாகச் சொல்லப்படுகிறது என்று மக்கள் கருதுவதால் இதைப் பாரதூரமான விஷயமாகக் கருதுகிறார்கள்.

இதற்கு முன்னால் யாராவது சொன்னதுண்டா என்ற கேள்விக்கு இஸ்லாத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை.

கடந்த காலத்தில் யாராவது சொன்னார்களா என்பதை வைத்தோ, சொல்லவில்லை என்பதை வைத்தோ இஸ்லாத்தின் சட்டங்களை முடிவு செய்ய முடியாது.

அல்லாஹ் கூறியுள்ளானா? அல்லாஹ்வின் தூதர் கூறியுள்ளார்களா? என்பதை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மறுபடியும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ கூறப்படவில்லை. இதுவே நமக்குப் போதுமாகும். – இதை ஆதாரங்களுடன் பின்னர் எடுத்துக் காட்டவுள்ளோம்-

யாராவது கூறியுள்ளார்களா என்பதைக் கவனிக்கத் தேவை இல்லை என்பதை முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இருந்தாலும் ஒருவருமே இப்படிச் சொல்லவில்லை என்ற வாதம் பலவீனமான நம்பிக்கை உள்ளவர்களுக்கு தடுமாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் இதை முக்கிய ஆதாரம் போல் முன்வைக்கிறார்கள்.

ஆனால் இந்தக் கேள்விக்குள் ஏராளமான அபத்தங்கள் அடங்கியுள்ளன,

எந்த ஒரு விஷயத்தைக் குறித்தும் முந்தைய காலத்தில் இக்கருத்தை யாரும் சொல்லவில்லை என்று யாராலும் கூறவே முடியாது.

முந்தைய காலத்தில் வாழ்ந்த ஒவ்வொருவரின் வரலாறையும் அவர்களின் ஒவ்வொரு கருத்துக்களையும் தேடிப்பார்த்து அவர் சொன்னாரா இல்லையா என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது..

அப்படி தேடிப்பார்க்கும் போது சில அறிஞர்கள் அவர் அப்படிச் சொல்லி இருந்தது தெரிய வந்தால் அந்த அறிஞர்  சொன்னார் என்று உறுதிபடக் கூறலாம்.

எந்த அறிஞரும் இக்கருத்தைக் கூறியதாக ஆதாரம் கிடைக்காவிட்டால் அப்போது கூட எந்த அறிஞரும் இக்கருத்தைக் கூறவில்லை என்று சொல்ல முடியாது. இதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை என்று தான் கூறலாம்.

ஏனெனில் சில அறிஞர்கள் அக்கருத்தைக் கூறி இருந்து அது எழுத்து வடிவில் பாதுகாக்கப்படாததால் அது நமக்குக் கிடைக்காமல் போயிருக்கலாம். அல்லது காலத்தால் அழிந்து போனதால் நமக்குக் கிடைக்காமல் போகலாம். எனவே ஒருவரும் குறிப்பிட்ட கருத்தைச் சொல்லவில்லை என்று கூறுவது அறிவீனமான வாதமாகும்.

உலகில் வாழ்ந்த அனைத்து அறிஞர்களின் அனைத்து கருத்துக்களையும் திரட்ட முடியுமா? எத்தனையோ அறிஞர்கள் தமது கருத்துக்களை எழுத்து வடிவமாக்காமல் சென்றுள்ளனர். எத்தனையோ அறிஞர்களின் எழுத்துக்கள் பாதுகாக்கப்படாமல அழிந்துள்ளன.

எனவே யாருமே கூறவில்லை என்ற வாதம் பொய்யை அடிப்படையாகக் கொண்டதாகும்.

யாராவது இப்படிக் கூறினார்கள் என்று ஆதாரம் கிடைக்காவிட்டால் இந்தக் கருத்தை யாரும் கூறியுள்ளார்களா என்ற தகவல் கிடைக்கவில்லை என்று தான் கூறமுடியும். இக்கருத்தை யாரேனும் கூறியும் இருக்கலாம்; கூறாமலும் இருக்கலாம் என்று தான் சொல்ல முடியும்.

ஒருவரும் கூறவே இல்லை என்று அல்லாஹ்வால் மட்டுமே சொல்ல முடியும். அவன் தான் ஒவ்வொருவரின் அனைத்துக் கருத்துக்களையும் அறிந்தவன். அல்லாஹ் மட்டுமே அறிந்துள்ள விஷயத்துக்கு உரிமை கொண்டாடும் ஆபத்தான வாதமாக இது அமைந்துள்ளது.

மேலும் இக்கேள்வியைக் கேட்பவர்கள் இதில் உண்மையாளர்களாக இல்லை. முன்னர் சொல்லப்படாத பல கருத்துக்களை பல அறிஞர்கள் பல்வேறு கால கட்டங்களில் கூறியுள்ளனர். அந்த அறிஞர்களை இவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அவர்களின் கருத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

பல அறிஞர்கள் தமக்கு முன்னர் சொல்லப்பட்ட பல கருத்துக்களை மறுத்துள்ளனர். மறுக்கப்பட்ட அந்தக் கருத்துக்களும் காலப்போக்கில் அங்கீகாரம் பெற்றுவிட்டன.

ஆனால் முன்பு இருந்த கருத்துக்கு மாற்றுக் கருத்துச் சொன்ன அறிஞர் மாற்றுக் கருத்து கூறும் காலத்தில் நாம் இருந்து கவனித்தால் அதற்கு முன் யாரும் சொல்லாத கருத்தைச் சொல்கிறார் என்று தான் அறிந்து கொள்வோம்.

மாற்றுக் கருத்து சொன்ன ஒவ்வொரு அறிஞரும் அதற்கு முன் யாரும் சொல்லாத ஒன்றைத் தான் சொல்கிறார் என்பதற்காக அறிவுடைய மக்கள் அதனைப் புறக்கணிக்கவில்லை. இதை ஏற்கத்தக்க வழிமுறையாகவும் மக்கள் கருதியதில்லை. மற்ற பல விஷயங்களில் இக்கேள்வியைக் கேட்காமல் ஏற்றுக் கொண்டு இருக்கும் மக்கள் ஜகாத் விஷயத்தில் மட்டும் தான் இக்கேள்வியைப் பெரிய ஆதாரமாகக் காண்கிறார்கள்.

ஹதீஸ் கலை விதி என்று ஒவ்வொரு ஹதீஸ் கலை மேதையும் சொன்ன எல்லா விதிகளும் அதற்கு முன் சென்ற நபித்தோழர்களால் சொல்லப்பட்டதாக இருக்கவில்லை. ஆனாலும் அது சரியானதாக இருந்ததால் சமுதாயம் ஏற்றுக் கொண்டது. ஒருவரும் சொல்லாத கருத்து என்று புறம் தள்ளவில்லை.

சொல்லும் கருத்து குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தான் அமைந்துள்ளது என்று நமது நேர்மையான பார்வைக்குத் தெரியுமானால் அதை ஏற்றுக் கொள்ளும் கடமை நமக்கு வந்து விடும்.

மேலும் ஒரு பொருளுக்கு ஒருதடவை தான் ஜகாத் என்று பொதுவாக முந்தைய அறிஞர்கள் கூறாவிட்டாலும் குறிப்பிட்ட சில பொருட்கள் விஷயத்தில் இக்கருத்தைக் கூறியுள்ளனர்.

நாம் அனைத்து செல்வங்களுக்கும் கூறும் நிலைபாட்டை சில செல்வங்களுக்கு மட்டும் கூறியுள்ளனர் என்பது தான் வித்தியாசம்.

 تُحفة الأحوذي

قَالَ فِي سُبُلِ السَّلَامِ : وَفِي الْمَسْأَلَةِ أَرْبَعَةُ أَقْوَالٍ : الْأَوَّلُ وُجُوبُ الزَّكَاةِ ، وَهُوَ مَذْهَبُ الْهَدَوِيَّةِ وَجَمَاعَةٍ مِنْ السَّلَفِ وَأَحَدُ أَقْوَالِ الشَّافِعِيِّ عَمَلًا بِهَذِهِ الْأَحَادِيثِ . وَالثَّانِي لَا تَجِبُ الزَّكَاةُ فِي الْحِلْيَةِ وَهُوَ مَذْهَبُ مَالِكٍ وَأَحْمَدَ وَالشَّافِعِيِّ فِي أَحَدِ أَقْوَالِهِ لِآثَارٍ وَرَدَتْ عَنْ السَّلَفِ قَاضِيَةً بِعَدَمِ وُجُوبِهَا فِي الْحِلْيَةِ ، وَلَكِنْ بَعْدَ صِحَّةِ الْحَدِيثِ لَا أَثَرَ لِلْآثَارِ ، وَالثَّالِثُ أَنَّ زَكَاةَ الْحِلْيَةِ عَارِيَتُهَا ، كَمَا رَوَى الدَّارَقُطْنِيُّ عَنْ أَنَسٍ وَأَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ ، الرَّابِعُ أَنَّهَا تَجِبُ فِيهَا الزَّكَاةُ مَرَّةً وَاحِدَةً رَوَاهُ الْبَيْهَقِيُّ عَنْ أَنَسٍ

அணியப்படும் ஆபரணங்களில் ஒரு முறை மட்டுமே ஜகாத் என்று நபித்தோழர் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். இந்தத் தகவல் பைஹகீயில் 7331 வது செய்தியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

நூல் : துஹ்பதுல் அஹ்வதீ

உரிமையாளரால் தீனி போடப்பட்டு வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு அவற்றின் ஆயுளில் ஒரு முறை மட்டுமே ஸகாத் உண்டு என்ற கருத்தைச் சில அறிஞர்கள் கூறியுள்ளனர்.

ஆபரணங்களுக்கும், பணியில் ஈடுபடுத்தப்படும் கால்நடைகளுக்கும் ஒரு முறை ஜகாத் கொடுத்துவிட்டால் மறு தடவை கொடுக்க வேண்டியதில்லை என்று சிலர் கூறியுள்ளனர்.

المحلي بالاثار لابن حزم

مَسْأَلَةٌ: وَالزَّكَاةُ تَتَكَرَّرُ فِي كُلِّ سَنَةٍ، فِي الإِبِلِ، وَالْبَقَرِ، وَالْغَنَمِ، وَالذَّهَبِ وَالْفِضَّةِ، بِخِلافِ الْبُرِّ وَالشَّعِيرِ وَالتَّمْرِ، فَإِنَّ هَذِهِ الأَصْنَافَ إذَا زُكِّيَتْ فَلا زَكَاةَ فِيهَا بَعْدَ ذَلِكَ أَبَدًا

அறுவடை செய்யப்பட்ட பயிர்களுக்கு ஒரு முறை மட்டுமே ஜகாத் என்று பெரும்பாலான அறிஞர்கள் கூறுகின்றனர்.

இந்தத் தகவல்களை இமாம் இப்னு ஹஸ்ம் அவர்கள் அல்முஹல்லா என்ற தனது சட்ட ஆய்வு நூலில் ஜகாத்துடைய பாடத்தில் பதிவு செய்துள்ளார்.

எனவே ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஸகாத் கொடுக்க வேண்டும் என்பதில் யாரும் மாற்றுக் கருத்து கொண்டதில்லை என்ற வாதம் பொய்யானது என்பது இதிலிருந்து தெளிவாகின்றது.

சமுதாயத்தில் கடைப்பிடிக்கப்பட்டு வரும் நடைமுறைகள் எத்தனை காலம் நடைமுறையில் இருந்தாலும் அது திருக்குர்ஆன் மற்றும் நபிவழியில் அமைந்துள்ளதா? என்பதை ஆய்வு செய்யும் கடமை நமக்கு உண்டு.

மார்க்கத்தின் கட்டளைகளைப் புரிந்து கொள்ளும் சரியான முறை

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டுமா? என்ற பிரச்சனையில் உலகில் பெரும்பாலான அறிஞர்கள், ஒரு பொருளுக்கு நாம் ஜகாத் கொடுத்து விட்டால் ஒவ்வொரு வருடமும் மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கின்றனர்.

அதாவது ஒரு முஸ்லிமிடம் ஒரு லட்சம் ரூபாய் இன்றைக்கு இருந்தால் அதில் இரண்டரை சதவிகிதம் ஜகாத் கொடுக்க வேண்டும். அடுத்த வருடம் எஞ்சியுள்ள 97500.00 ரூபாயில் இரண்டரை சதவிகிதம் கொடுக்க வேண்டும். இப்படியே வருடா வருடம் கொடுத்துக் கொண்டே வர வேண்டும் என்பது பெரும்பாலான மார்க்க அறிஞர்களின் கருத்தாகும்.

நாம் இந்தக் கருத்திலிருந்து முரண்படுகிறோம்.

ஒருவரிடம் ஒரு லட்சம் ரூபாய் இருந்தால் அவர் அதற்கான ஜகாத்தாக இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வழங்க வேண்டும்; இதன் பின்னர் இதே தொகைக்காக மீண்டும் ஜகாத் கொடுக்கத் தேவையில்லை; இதன் பின்னர் அவருக்குக் கிடைத்தவற்றுக்குத் தான் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பது நமது கருத்தாகும்.

அதாவது ஒரு லட்ச ரூபாய்க்கு ஜகாத் கொடுத்த பின்னர் மேலும் ஒரு லட்ச ரூபாய் ஒருவருக்குக் கிடைத்தால் அவர் இரண்டாவதாகக் கிடைத்த ஒரு லட்ச ரூபாய்க்கு ஜகாத் கொடுத்தால் போதும். அது தான் அவர் மீதுள்ள கடமை. ஏற்கனவே ஜகாத் கொடுக்கப்பட்ட ஒரு லட்ச ரூபாய்க்கு மீண்டும் ஜகாத் கொடுக்கத் தேவையில்லை.

நூறு பவுன் நகை ஒருவரிடம் இருந்தால் அதற்குரிய ஜகாத் இரண்டரை பவுன் கொடுக்க வேண்டும். இதன் பின்னர் மேலும் 50 பவுன் நகை அவருக்குக் கிடைத்தால் இந்த 50 பவுனுக்கு ஜகாத் கொடுப்பது தான் அவருக்குக் கடமையாகும். ஏற்கனவே ஜகாத் வழங்கி விட்ட 100 பவுனுக்கு ஜகாத் கொடுக்கும் கடமை அவருக்கு இல்லை என்பது நமது முடிவாகும்.

நாம் இந்த முடிவுக்கு வருவதற்குக் காரணம் என்ன?

கொடுத்த பொருளுக்கே மீண்டும் ஜாகத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன.

வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கருத்தை நேரடியாகவும், மறைமுகமாகவும் கூறும் சில ஹதீஸ்கள் உள்ளன.

இந்த ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவையாக இருந்தால் இவற்றின் அடிப்படையில் முடிவு செய்வதில் நியாயம் இருக்கின்றது. ஆனால் இந்தக் கருத்தில் இடம் பெறும் ஹதீஸ்களில் எதுவுமே ஆதாரப்பூர்வமானதாக இல்லை. அவற்றில் சில ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டவையாகவும், வேறு சில ஹதீஸ்கள் பலவீனமானவையாகவும் உள்ளன.

-அந்த ஹதீஸ்கள் எவை என்பதும் அவை எவ்வாறு பலவீனமானவையாக அமைந்துள்ளன என்பதும் தனியாக விளக்கப்பட்டுள்ளது-

* ஜகாத் கொடுப்பது எப்போது கடமை என்பதற்கு ஆதாரம் உள்ளது.

* எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம் உள்ளது.

* யார் யாருக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம் உள்ளது.

ஆனால் ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் கொடுக்க வேண்டும் என்பதற்கு ஏற்கத்தக்க ஆதாரம் ஏதும் இல்லை. இதற்கு ஏற்கத்தக்க ஆதாரம் இல்லாத நிலையில் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற கட்டளையை எவ்வாறு புரிந்து கொள்வது?

எவ்விதக் காலக் கெடுவும் நிர்ணயிக்காமல் ஒரு காரியத்தைச் செய்யுமாறு பொதுவாகக் கட்டளையிட்டால் அதை ஒரு தடவை செய்ய வேண்டும் என்பது தான் அதன் பொருளாகும்.

வணக்க வழிபாடுகள் மட்டுமின்றி, உலகில் நாம் செய்கின்ற கொடுக்கல் வாங்கல் உள்ளிட்ட அனைத்தையும் இப்படித் தான் புரிந்து கொள்கிறோம்; புரிந்து கொள்ள வேண்டும்.

தொழுகையைப் பொறுத்த வரை தினமும் ஐந்து வேளை தொழ வேண்டும் என்பதற்கு நேரடியான கட்டளை இருக்கின்றது. அதனால் தினமும் ஐந்து வேளை தொழுகை கடமை என்று நாம் புரிந்து கொள்கிறோம்.

குர்ஆனிலோ, நபிவழியிலோ தொழ வேண்டும் என்ற கட்டளை மட்டும் இருந்து எவ்வளவு தொழ வேண்டும் என்பது பற்றி ஒரு குறிப்பும் அறவே இல்லாவிட்டால் தினசரி ஐந்து வேளை என்று நாம் புரிந்து கொள்ள மாட்டோம். மாதம் ஒரு தடவை என்றும் புரிந்து கொள்ள மாட்டோம். வருடம் ஒரு தடவை என்றும் புரிந்து கொள்ள மாட்டோம். அப்படிப் புரிந்து கொண்டால் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இவ்வாறு புரிந்து கொண்டீர்கள் என்ற கேள்வி எழும்.

நோன்பைப் பொறுத்த வரை ரமளான் மாதம் முழுவதும் நோன்பு நோற்றாக வேண்டும் என்று தெளிவான கட்டளை உள்ளது. ரமளானை அடைபவர் நோன்பு நோற்க வேண்டும் என்றும் கட்டளை உள்ளது. ரமளான் என்பது குறிப்பிட்ட ஒரு மாதத்தின் பெயராகும். இம்மாதம் வருடந்தோறும் திரும்பத் திரும்ப வருவதால் ஒவ்வொரு வருடமும் நோன்பு நோற்க வேண்டும் என்று புரிந்து கொள்கிறோம்.

இப்படிக் கூறப்படாமல், நோன்பு நோற்க வேண்டும் என்று மட்டும் குர்ஆனிலோ, நபிவழியிலோ கூறப்பட்டு,  நாளோ,  கிழமையோ,  மாதமோ  அத்துடன் குறிப்பிடப்படாமல் இருந்தால் அதனை நாம் எப்படிப் புரிந்து கொள்வோம்?

வாழ்நாளில் ஒரு தடவை என்று தான் அதைப் புரிந்து கொள்ள முடியும். அவ்வாறு புரிந்து கொண்டால் அதில் ஏற்கத்தக்க எந்த எதிர்க் கேள்வியும் எழாது.

அவ்வாறு இல்லாமல் வாரா வாரம் என்றோ, மாதா மாதம் என்றோ, வருடத்தில் ஒரு மாதம் என்றோ, வருடத்தில் ஒரு வாரம் என்றோ நாம் அதைப் புரிந்து கொண்டால் அந்தக் காலக் கெடுவை எங்கிருந்து எடுத்தீர்கள் என்ற கேள்வி எழும். அதற்கு விடை கூற இயலாது.

ஹஜ் என்ற கடமையை இதற்குரிய சரியான உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

صحيح مسلم

2599 وحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ مُسْلِمٍ الْقُرَشِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ زِيَادٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: خَطَبَنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: أَيُّهَا النَّاسُ قَدْ فَرَضَ اللهُ عَلَيْكُمُ الْحَجَّ، فَحُجُّوا، فَقَالَ رَجُلٌ: أَكُلَّ عَامٍ يَا رَسُولَ اللهِ؟ فَسَكَتَ حَتَّى قَالَهَا ثَلَاثًا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَوْ قُلْتُ: نَعَمْ لَوَجَبَتْ، وَلَمَا اسْتَطَعْتُمْ ، ثُمَّ قَالَ: ذَرُونِي مَا تَرَكْتُكُمْ، فَإِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِكَثْرَةِ سُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ، فَإِذَا أَمَرْتُكُمْ بِشَيْءٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ، وَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَدَعُوهُ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரையாற்றும் போது அல்லாஹ் ஹஜ்ஜைக் கடமையாக்கியுள்ளான். எனவே ஹஜ் செய்யுங்கள் என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே! ஒவ்வொரு வருடமுமா? என்று கேட்டார். அவர் மூன்று முறை இவ்வாறு கேட்கும் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மவுனமாக இருந்தார்கள். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான் ஆம் என்று கூறினால் அவ்வாறே (வருடா வருடம்) கடமையாகி விடும். அது உங்களுக்கு இயலாது என்று கூறி விட்டு, நான் உங்களுக்கு (விவரிக்காமல்) விட்டதை நீங்களும் என்னை (கேள்வி கேட்காமல்) விட்டு விடுங்கள். தங்களுடைய நபிமார்களிடம் அதிகமாகக் கேள்வி கேட்டதாலும், முரண்பட்டதாலும் தான் உங்களுக்கு முன் சென்றவர்கள் அழிந்தனர் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 2599

ஹஜ் கடமை என்று பொதுவாகக் கூறப்பட்ட பின் ஒவ்வொரு வருடமுமா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு நபித்தோழர் கேட்டதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடும் கோபத்தை வெளிப்படுத்துகின்றார்கள். வாழ்நாளில் ஒரு தடவை தான் என்று விளக்கம் அளிக்கின்றார்கள்.

கால நிர்ணயம் எதையும் கூறாமல் ஒன்றைச் செய்யுமாறு கட்டளையிட்டால் மொத்தத்தில் ஒரு தடவை செய்ய வேண்டும் என்றே அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை இதிலிருந்து நாம் அறிகிறோம்.

மூஸா என்பவருக்கு ஆயிரம் ரூபாய் கொடு என்று நாம் ஒருவருக்குக் கட்டளையிடுகிறோம் என்று வைத்துக் கொள்வோம். ஒரே ஒரு தடவை மூஸாவுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்று தான் அந்த நபரும், மூஸாவும் புரிந்து கொள்வார்கள்.

மேற்கண்ட நமது கட்டளையின் அடிப்படையில் மூஸா அந்த நபரிடம் சென்று வருடா வருடம் ஆயிரம் ரூபாய் கேட்டால் அந்த நபர் கொடுப்பாரா? நிச்சயம் கொடுக்க மாட்டார்.

இந்த அடிப்படையில் தான் ஜகாத் குறித்த கட்டளையும் அமைந்துள்ளது.

ஒரு பொருளுக்கு ஒரு தடவை தான் ஜகாத் கொடுப்பது கடமை எனக் கூறும் நீங்கள் அதற்கான ஆதாரத்தைக் காட்ட இயலுமா? என்ற கேள்வியை மாற்றுக் கருத்துடையவர்கள் அடிக்கடி கேட்டு வருகின்றனர்.

ஒரு சொல்லுக்கு இது தான் பொருள் என்பது திட்டவட்டமாகத் தெரியும் போது, இதை விடத் தெளிவான ஆதாரம் வேறு என்ன வேண்டும்? வலிமையான இந்த ஆதாரத்துக்கு மேல் வேறு ஆதாரம் கேட்பது அறிவுடைமையாகுமா? இதை இவர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றார்கள்.

உனக்கு ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று ஒருவரிடம் நாம் கூறுகிறோம். அது போல் அவரிடம் ஆயிரம் ரூபாயைக் கொடுத்து விடுகிறோம். அவர் அடுத்த வருடம் வந்து மீண்டும் ஆயிரம் ரூபாய் தாருங்கள் என்று நம்மிடம் கேட்கிறார். ஆயிரம் ரூபாய் தந்து விட்டேனே! என்று நாம் கூறுகிறோம். வருடா வருடம் தர மாட்டேன் என்று சொன்னீர்களா? அதற்கு என்ன ஆதாரம்? என்று அவர் கேட்டால் அவரைப் பற்றி நாம் என்ன நினைப்போம்?

வருடா வருடம் தருவேன் என்று கூறாமல் பொதுவாகச் சொன்னதே இதற்குரிய ஆதாரம் என்பது விளங்கவில்லையா? என்று அவரிடம் திருப்பிக் கேட்போம்.

செல்வங்களுக்கு ஜகாத் கொடுங்கள் என்பது பொதுவான சொல்.

* ஒவ்வொரு வினாடியும் கொடுக்க வேண்டுமா?

* ஒவ்வொரு நிமிடமும் கொடுக்க வேண்டுமா?

* ஒவ்வொரு மணிக்கும் கொடுக்க வேண்டுமா?

* ஒவ்வொரு நாளும் கொடுக்க வேண்டுமா?

* ஒவ்வொரு வாரமும் கொடுக்க வேண்டுமா?

* ஒவ்வொரு மாதமும் கொடுக்க வேண்டுமா?

* இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கொடுக்க வேண்டுமா?

* மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை கொடுக்க வேண்டுமா?

* ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை கொடுக்க வேண்டுமா?

* வருடம் ஒரு தடவை கொடுக்க வேண்டுமா?

* ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை கொடுக்க வேண்டுமா?

என்று நூற்றுக்கணக்கான அர்த்தங்களுக்கு இச்சொல் இடம் தரும் போது வருடா வருடம் என்ற ஒரு அர்த்தத்தை மட்டும் திட்டவட்டமாக யார் முடிவு செய்கிறார்களோ அவர்கள் தான் அதற்கான ஆதாரங்களை முன் வைக்க வேண்டும்.

எந்தக் கால கட்டமும் குறிப்பிடாமல் சொல்லப்பட்டதே நமக்குப் போதுமான ஆதாரமாகும்.

காலக் கெடு எதையும் குறிப்பிடாமல் ஒரு செய்தி சொல்லப்பட்டால் பொதுவாக ஒரு தடவை என்ற பொருளைத் தான் தரும் என்பதற்கு மற்றொரு உதாரணத்தையும் கூறலாம்.

صحيح البخاري

1499 ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: العَجْمَاءُ جُبَارٌ، وَالبِئْرُ جُبَارٌ، وَالمَعْدِنُ جُبَارٌ، وَفِي الرِّكَازِ الخُمُسُ

ஒரு மனிதருக்குப் புதையல் கிடைக்கின்றது. இதில் 20 சதவிகிதம் வழங்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்.

நூல் : புகாரி 1499, 2355, 6912, 6913

புதையலை எடுத்தவர் வருடா வருடம் 20 சதவிகிதம் கொடுக்க வேண்டும் என்று இதைப் புரிந்து கொள்வார்களா? மொத்தத்தில் ஒரு தடவை என்று புரிந்து கொள்வார்களா?

قَالَ: آمُرُكُمْ بِأَرْبَعٍ وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ: آمُرُكُمْ بِالإِيمَانِ بِاللَّهِ، وَهَلْ تَدْرُونَ مَا الإِيمَانُ بِاللَّهِ؟ شَهَادَةُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَإِقَامُ الصَّلاَةِ، وَإِيتَاءُ الزَّكَاةِ، وَتُعْطُوا مِنَ المَغْنَمِ الخُمُسَ

போர்க் காலங்களில் எதிரிகளிடம் கைப்பற்றப்படும் பொருட்களில் ஐந்தில் ஒரு பங்கைச் செலுத்தி விட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள்.

நூல் : புகாரி 6179, 53, 87, 523, 1398, 3095, 3510, 4368, 4369, 7266, 7556

போரில் கைப்பற்றப்பட்ட பொருட்களில் வருடா வருடம் 20 சதவிகிதம் வழங்க வேண்டும் என்பது தான் இதன் பொருளா? அல்லது மீண்டும் போர்க் களத்தைச் சந்தித்து பொருட்களைக் கைப்பற்றினால் அதற்கு மட்டும் 20 சதவிகிதம் என்பது பொருளா?

எனவே வருடா வருடம் கொடுத்த பொருளுக்கே மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கூறுவோர் தங்கள் கூற்றை நிரூபிக்கத் தக்க ஆதாரம் காட்ட முடியாததால் ஒரு பொருளுக்கு ஒரு தடவை என்பது தானாகவே நிரூபணமாகி விடும்.

இது தான் நாம் எடுத்து வைக்கும் முக்கியமான சான்றாகும்.

பொருட்களைத் தூய்மைப்படுத்தவே ஜகாத்

இதை வலுப்படுத்தும் வகையில் துணை ஆதாரங்கள் சிலவற்றையும் நாம் எடுத்துக் காட்டுகிறோம்.

மாற்றுக் கருத்துடையோர் துணை ஆதாரங்களுக்கும் பதிலளிக்க வேண்டும்; அதை விட முக்கியமாக ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கே மீண்டும் மீண்டும் வருடந்தோறும் கொடுக்க வேண்டும் என்பதைச் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் நிரூபிப்பது அவர்களின் முதல் கடமையாகும்.

ஜகாத் கடமையாக்கப்பட்ட நோக்கம் என்ன என்பது இஸ்லாத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அந்த நோக்கம் நமது முடிவை மேலும் வலுப்படுத்துகின்றது.

سنن أبي داود

فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَا أُفَرِّجُ عَنْكُمْ، فَانْطَلَقَ، فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ، إِنَّهُ كَبُرَ عَلَى أَصْحَابِكَ هَذِهِ الْآيَةُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ لَمْ يَفْرِضِ الزَّكَاةَ، إِلَّا لِيُطَيِّبَ مَا بَقِيَ مِنْ أَمْوَالِكُمْ، وَإِنَّمَا فَرَضَ الْمَوَارِيثَ لِتَكُونَ لِمَنْ بَعْدَكُمْ، فَكَبَّرَ عُمَرُ، ثُمَّ قَالَ لَهُ: أَلَا أُخْبِرُكَ بِخَيْرِ مَا يَكْنِزُ الْمَرْءُ؟ الْمَرْأَةُ الصَّالِحَةُ، إِذَا نَظَرَ إِلَيْهَا سَرَّتْهُ، وَإِذَا أَمَرَهَا أَطَاعَتْهُ، وَإِذَا غَابَ عَنْهَا حَفِظَتْهُ

தங்கத்தையும் வெள்ளியையும் அல்லாஹ்வின் பாதையில் யார் செலவிடாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்குக் கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பீராக (9:34) என்ற வசனம் அருளப்பட்டவுடன் அது முஸ்லிம்களுக்கு பெரிய பாரமாகத் தெரிந்தது. உடனே உமர் (ரலி) அவர்கள், உங்கள் சிரமத்தை நான் நீக்குகின்றேன் என்று கூறி விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! இந்த வசனம் உங்கள் தோழர்களுக்குப் பெரிய பாரமாகத் தெரிகின்றது என்று கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உங்கள் செல்வத்தில் எஞ்சியதைத் தூய்மைப் படுத்துவதற்காகவே தவிர வேறு எதற்கும் அல்லாஹ் ஜகாத்தைக் கடமையாக்கவில்லை என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: அபூதாவூத் 1417

எஞ்சிய பொருட்களைத் தூய்மைப் படுத்துவதற்காகவே தவிர வேறு எதற்காகவும் அல்லாஹ் ஜகாத்தைக் கடமையாக்கவில்லை என்ற நபிகள் நாயகத்தின் இந்தக் கூற்று நமது முடிவை வலுப்படுத்தும் தெளிவான சான்றாக அமைந்துள்ளது.

பொருட்களைச் சுத்தப்படுத்தும் ஒரே நோக்கத்திற்காகத் தான் ஜகாத் கடமை என்றால் ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் கொடுக்கத் தேவையில்லை என்பது மிகத் தெளிவு.

மேற்கண்ட ஹதீஸ் பலவீனமானது என்று இவர்கள் கூறுகின்றனர்.

முஜாஹித் என்பாரிடமிருந்து ஜஃபர் பின் இயாஷ் அறிவிப்பதாக மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் அமைந்துள்ளது. ஆனால் ஜஃபர் பின் இயாஷ் என்பவர் முஜாஹிதிடமிருந்து எதையும் செவியுற்றதில்லை என்று அறிஞர் ஷுஅபா கூறுவதால், இது தொடர்பு அறுந்த செய்தி என்று இதற்குக் காரணம் கூறுகின்றனர்.

ஷுஅபா அவர்கள் இவ்வாறு கூறினாலும், ஷுஅபா அவர்களுக்குப் போதிய விபரம் கிடைக்காததால் இவ்வாறு கூறி விட்டார்கள் என்று கருதுவதற்கு தக்க முகாந்திரம் உள்ளது..

ஜஃபர் பின் இயாஷ், நான் முஜாஹிதிடம் கேட்டேன் என்ற சொல்லைப் பயன்படுத்திப் பல ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இது போன்ற செய்திகள் புகாரி 4940, 4310ஆகிய இலக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட நம்பகமான அறிவிப்பாளர் நானே நேரடியாக முஜாஹிதிடம் கேட்டேன் என்று கூறியிருக்கும் போது, இதில் சம்பந்தப்படாத ஷுஅபா அவர்களின் கூற்றை ஆதாரமாகக் கொள்ள முடியாது. முஜாஹிதிடம் ஜஃபர் செவியுற்றது ஷுஅபாவுக்குத் தெரியவில்லை என்று தான் முடிவு செய்ய வேண்டும்.

மற்றொரு குறைபாடும் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதாக மாற்றுக் கருத்துடையவர்கள் வாதிக்கின்றனர்.

இதன் அறிவிப்பாளர் தொடர் பின்வருமாறு அமைந்துள்ளது.

நூலாசிரியர் அபூதாவூத்

உஸ்மான் பின் அபீஷைபா

யஹ்யா

யஃலா

கைலான்

ஜஅபர் பின் இயாஸ்

முஜாஹித்

இப்னு அப்பாஸ் (ரலி)

உமர் (ரலி)

நபிகள் நாயகம் (ஸல்)

மேற்கண்ட ஒவ்வொரு அறிவிப்பாளரும் தமக்கு அடுத்த அறிவிப்பாளரிடமிருந்து இதை அறிவிக்கின்றார்கள்.

இந்தப் பட்டியலில் கைலான் (5) என்பவர் ஜஅபர் பின் இயாஸ் (6) என்பாரிடமிருந்து அறிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இவ்விருவருக்கும் இடையில் சந்திப்பு ஏதும் இல்லை. எனவே இது தொடர்பு அறுந்த (முன்கதிவு) ஹதீஸாகும் என்று மறுப்பு கூறுகின்றனர்.

இருவரிடையே சந்திப்பு இல்லை என்று கூறுவோர் அதற்கான காரணத்தைக் கூற வேண்டும். அவ்வாறு கூறாமல் அல்பானி கூறி விட்டார் என்பதைத் தான் ஆதாரமாகக் காட்டுகின்றார்கள்.

நாஸிருத்தீன் அல்பானியை விடப் பல மடங்கு ஹதீஸ்களை ஆய்வு செய்த இப்னு ஹஜர், தஹபீ, இப்னு மயீன், யஹ்யா பின் ஸயீத் உள்ளிட்ட பல அறிஞர்கள் செய்துள்ள விமர்சனங்களை நிராகரிக்கும் இவர்கள் நமது காலத்தில் வாழ்ந்து மறைந்த நாசிருத்தீன் அல்பானியின் ஆய்வில் மட்டும் தவறே ஏற்படாது என்ற தவறான நம்பிக்கையில் இந்த ஹதீஸைத் தொடர்பு அறுந்தது என்று கூறுகின்றார்கள்.

அல்பானி அவர்கள் சிறந்த அறிஞர் என்றாலும் மனிதர் என்ற அடிப்படையில் அவரிடமும் தவறுகள் ஏற்படவே செய்யும். இது போன்ற குறைபாடுகளுக்கு அப்பாற்பட்ட எந்த ஹதீஸ் கலை அறிஞரும் கிடையாது. நாஸிருத்தீன் அல்பானி அவர்கள் சரி என்று சொல்லி விட்டால் அதைக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்க வேண்டும் என்ற நம்பிக்கை பலரிடம் காணப்படுகின்றது. ஆனால் அல்பானி அவர்கள் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களைப் பலவீனமானவை என்றும், பலவீனமான ஹதீஸ்களை ஆதாரப்பூர்வமானவை என்றும், ஹதீஸில் இல்லாததை இருக்கின்றது என்றும் கூறியதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.

இந்த அறிவிப்பு, தொடர்பு அறுந்தது என்பதற்கு அல்பானி எடுத்து வைக்கும் காரணம் இது தான்.

இந்த ஹதீஸ் இரு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு வழியில் கைலான் என்பார் ஜஅபர் என்பாரிடமிருந்து அறிவிப்பதாக உள்ளது.

மற்றொரு வழியில் கைலான் என்பார் உஸ்மான் என்பார் வழியாகவும் அந்த உஸ்மான் ஜஅபர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இரு வகையான அறிவிப்புகளை அடிப்படையாக வைத்துத் தான் இது தொடர்பு அறுந்த ஹதீஸ் என்று அல்பானி கூறுகிறார்.

இதை விபரமாக விளங்கிக் கொள்வோம்.

ஜஅபர் பின் இயாஸ் > உஸ்மான் பின் கத்தான் >கைலான்

என்ற அறிவிப்பாளர் வரிசையில் இதே ஹதீஸ் ஹாகிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கைலானுக்கும் ஜஃபருக்கும் இடையே உஸ்மான் பின் கத்தான் இடம் பெற்றுள்ளார்.

ஆனால் அபூதாவூத் அறிவிப்பில்

ஜஅபர் பின் இயாஸ் > கைலான்

என்ற அறிவிப்பாளர் வரிசையில் பதிவு செய்யப்பட்டுள்ளது

அபூதாவூத் அறிவிப்பில் கைலான் என்பார் ஜஃபரிடமிருந்து அறிவிப்பது உண்மையாக இருந்தால் மற்றொரு அறிவிப்பில் கைலான் என்பார் ஜஃபரிடமிருந்து நேரடியாக அறிவிக்காமல் உஸ்மான் வழியாக ஏன் அறிவிக்கிறார்? இதிலிருந்து கைலான் என்பார் ஜஃபர் என்பாரிடம் நேரடியாகக் கேட்கவில்லை. இடையில் ஒருவர் விடுபட்டுள்ளார் என்ற அல்பானியின் வாதம் பல காரணங்களால் நிராகரிக்கத் தக்கதாகும்.

ஒரு ஹதீஸை ஒருவர் ஒரு ஆசிரியர் வழியாக அறிவித்து விட்டு மற்றொரு தடவை நேரடியாக ஆசிரியரைக் கூறாமல் இன்னொருவர் வழியாக அதே ஆசிரியர் வழியாக அறிவித்தால் இரு வழிகளில் இந்த ஹதீஸ் அவருக்குக் கிடைத்திருக்கலாம். இரண்டும் ஒன்றுக் கொன்று முரணானவை அல்ல. இதுதான் ஹதீஸ் கலை விதியாகும். அல்பானி கூறுவது ஹதீஸ் கலை விதியில் இல்லாமல் அவர் சுயமாகக் கூறும் கருத்தாகும்.

சம்மந்தப்பட்ட அறிவிப்பாளர் நான் நேரடியாக கேட்கவில்லை என்று மறுக்காத வரை இரண்டையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இப்படி ஏராளமான ஹதீஸ்கள் ஏற்கப்பட்டுள்ளன.

மேலும் இரண்டு அறிவிப்புகளும் சமமான தரத்தில் நம்பகமானவையாக இருக்கும் போது இப்படி கூறுவதை சதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஹாகிமில் இடம் பெறும் அறிவிப்பாளர் உஸ்மான் பின் கத்தான் பலவீனமானவர் என்பதால் இது ஏற்கத்தக்க ஹதீஸ் அல்ல.

பலவீனமான இந்த அறிவிப்பின் இடையில் ஒருவர் நுழைக்கப்பட்டதால் அபூதாவூதின் ஆதாரப்பூர்வமான அறிவிப்பில் அவர் விடுபட்டுள்ளார் என்று முடிவு செய்வது அர்த்தமற்ற ஆய்வாகும்.

அடுத்ததாக ஒருவர் தனது ஆசிரியராகக் கூறுபவரை சந்தித்துள்ளாரா என்பதில் சந்தேகம் வந்தால் இருவரது காலத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். இருவரும் சந்தித்திருக்க வாய்ப்பு உள்ளது என்றால் சந்தித்துள்ளார்கள் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கைலான் மரணம் ஹிஜ்ரி 132ஆம் ஆண்டாகும்.

ஜஅபர் மரணம் ஹிஜ்ரி 126 ஆகும்

ஆதாரம் தக்ரீபுத் தஹ்தீப் 1/443, தக்ரீபுத் தஹ்தீப் 1/139

இருவரின் மரணத்திற்கிடையே ஆறு வருட இடைவெளி உள்ளது. ஒருவரையொருவர் சந்திப்பதற்கு ஏற்ற காலத்தை விட இது பன்மடங்கு அதிகமாகும்.

மேலும் ஜஃபர் பின் இயாஸ் பஸராவையும், கைலான் கூஃபாவையும் சேர்ந்தவர்கள். அருகருகே உள்ள இவ்வூர்களைச் சேர்ந்தவர்கள் சந்தித்திருப்பதில் எந்த வியப்பும் இல்லை.

ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெறும் ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை என்பதை அறிந்து வைத்திருக்கிறோம். இரண்டு அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்து, இருவரும் ஒரே காலத்தில் வாழ்ந்திருப்பதற்கும்,  இருவரும் சந்தித்திருப்பதற்கும் சாத்தியமிருக்குமானால் ஒருவரிடமிருந்து மற்றவர் கேட்டார் என்பதற்கு அதுவே போதுமானதாகும் என்று முஸ்லிம் இமாம் தமது முன்னுரையில் குறிப்பிடுகின்றார்கள். இந்த அளவு கோலின் படியே தமது ஹதீஸ்களை முஸ்லிமில் பதிவு செய்துள்ளார்கள். ஹதீஸ்கலை அறிஞர்களும் இதை ஏற்றுள்ளார்கள்.

எனவே கைலான், ஜஅபரிடமிருந்து செவிமடுத்தார் என்பதை மறுக்க முடியாது.

மேலும் ஹதீஸ் கலை நூற்களில் ஜஃபரின் மாணவர்கள் பட்டியலில் கைலான் சேர்க்கப்பட்டுள்ளார். அது போல் கைலானின் ஆசிரியர் பட்டியலில் ஜஅபர் சேர்க்கப்பட்டுள்ளார். இருவரும் சந்திக்கவில்லை என்று கூறுவதற்கு எந்த முகாந்திரமும், ஆதாரமும்  இல்லை.

யாருமே ஒப்புக் கொள்ளாத தவறான அளவுகோலின் படி அல்பானி செய்த தவறான ஆய்வு என்பதில் ஐயம் இல்லை..

பொருட்களைத் தூய்மைப்படுத்தவே ஜகாத் என்பதை மேலும் சில ஹதீஸ்களும் வலுப்படுத்துகின்றன.

صحيح البخاري

1404 حَدَّثَنَا أَحْمَدُ بْنُ شَبِيبِ بْنِ سَعِيدٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ خَالِدِ بْنِ أَسْلَمَ، قَالَ: خَرَجْنَا مَعَ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، فَقَالَ أَعْرَابِيٌّ: أَخْبِرْنِي عَنْ قَوْلِ اللَّهِ: {وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالفِضَّةَ، وَلاَ يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ} التوبة: 34 قَالَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: مَنْ كَنَزَهَا، فَلَمْ يُؤَدِّ زَكَاتَهَا، فَوَيْلٌ لَهُ، إِنَّمَا كَانَ هَذَا قَبْلَ أَنْ تُنْزَلَ الزَّكَاةُ، فَلَمَّا أُنْزِلَتْ جَعَلَهَا اللَّهُ طُهْرًا لِلْأَمْوَالِ

நாங்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் வெளியில் புறப்பட்டோம். அப்போது ஒரு கிராமவாசி, யார் தங்கத்தையும்,  வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் இருக்கிறார்களோ…என்ற வசனத்தைப் பற்றி எனக்கு அறிவியுங்கள் எனக் கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி), யார் அவற்றைப் பதுக்கி வைத்து அதற்கான ஜகாத்தைக் கொடுக்காமல் இருக்கின்றாரோ அவருக்குக் கேடு தான். இவ்வசனம் ஜகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்புள்ளதாகும். ஜகாத் பற்றிய வசனம் அருளப்பட்டதும் செல்வங்களைப் பரிசுத்தமாக்கக் கூடியதாக ஜகாத்தை அல்லாஹ் ஆக்கி விட்டான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: காலித் பின் அஸ்லம்

நூல்: புகாரி 1404

ஜகாத் என்பது பொருட்களைத் தூய்மையாக்குவதற்குத் தான் என்ற அபூதாவூதின் 1917 ஹதீஸில் உள்ளது போல் தான் நபித்தோழர்களும் விளங்கியிருந்தார்கள் என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ் சான்றாகும்.

இவ்வாறு நாம் கூறும் போது, நபித்தோழர்களின் கருத்தை எப்படி ஆதாரமாகக் காட்டலாம் என்று, புரிந்தும் புரியாதது போல் சிலர் பேசுகின்றார்கள். ஆதாரமாகக் காட்டுவது வேறு, ஆதாரத்தின் மூலம் நிரூபிக்கப்பட்ட ஒன்றை வலுப்படுத்துவதற்காக எடுத்துக் காட்டுவது வேறு என்பதைப் புரியாமல் திசை திருப்புகின்றனர்.

நபித் தோழரின் இந்தக் கூற்றை நாம் ஆதாரமாகக் காட்டவில்லை. அபூதாவூதில் இடம் பெறும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றை ஆதாரமாகக் காட்டி, மேலதிக விளக்கத்திற்காகத் தான் மேற்கண்ட இப்னு உமரின் கூற்றை எடுத்துக் காட்டியுள்ளோம். ஆனால் ஸஹாபாக்களின் கூற்று, இஸ்லாத்தின் மூன்றாவது ஆதாரம் என்ற கருத்துடையவர்கள் இந்த மூன்றாவது ஆதாரத்தை (?) மறுப்பதன் மர்மம் என்ன என்பது நமக்குப் புரியவில்லை.

ஜகாத், பொருளைத் தூய்மைப்படுத்துமா? மனிதர்களைத் தூய்மைப்படுத்துமா?

ஜகாத் பொருட்களைத் தூய்மைப்படுத்தாது. மனிதர்களைத் தான் தூய்மைப்படுத்தும் எனக் கூறி பின்வரும் ஆதாரத்தை முன் வைக்கிறார்கள்.

صحيح مسلم

ثُمَّ قَالَ لَنَا إِنَّ هَذِهِ الصَّدَقَاتِ إِنَّمَا هِيَ أَوْسَاخُ النَّاسِ، وَإِنَّهَا لَا تَحِلُّ لِمُحَمَّدٍ، وَلَا لِآلِ مُحَمَّدٍ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கும், தமது குடும்பத்தாருக்கும் ஜகாத்தை ஏன் ஹராமாக்கிக் கொண்டார்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) விளக்கும் போது, இவை மனிதர்களின் அழுக்குகள் என்று குறிப்பிட்டார்கள்.

நூல் : முஸ்லிம் 1945

இந்த ஹதீஸிலிருந்து, ஜகாத் மனிதர்களைத் தான் தூய்மைப்படுத்தும், பொருட்களைத் தூய்மைப்படுத்தாது என்ற வாதத்தை எடுத்து வைக்கின்றனர்.

பொருட்களைத் தூய்மைப்படுத்தும் என்பது ஹதீஸ் அடிப்படையில் நாம் கூறிய கருத்தாகும். இவர்கள் அந்த ஹதீஸுக்குப் போட்டியாக இந்த ஹதீஸைக் கொண்டு வந்து அந்த ஹதீஸை மறுக்கின்றனர்.

கீழ்க்காணும் வசனத்தையும் ஆதாரமாக முன்வைக்கின்றனர்.

(முஹம்மதே!) அவர்களின் செல்வங்களில் தர்மத்தை எடுப்பீராக! அதன் மூலம் அவர்களைத் தூய்மைப்படுத்தி, பரிசுத்தமாக்குவீராக!

திருக்குர்ஆன் 9:103

சிந்தித்துப் பார்த்தால் இரண்டுக்கு முரண்பாடு இல்லை என்பது விளங்கும்.

மனிதர்களின் அழுக்குகள் என்றால் மனிதர்களின் உடலிலிருந்து நீக்கப்பட்ட அழுக்குகள் என்பது அதன் பொருள் அல்ல.

உடல் முழுவதும் அழுக்கடைந்து இருப்பவர் குளித்து கழுவி அழுக்கை நீக்குவதற்குப் பதிலாக நூறு ரூபாய் ஜகாத் கொடுத்து விட்டால் அந்த அழுக்கு நீங்கி விடும் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

ஆன்மீக ரீதியிலான அழுக்கைப் பற்றியே அந்த ஹதீஸ் பேசுகிறது என்று தான் அறிவுடைய மக்கள் புரிந்து கொள்வார்கள்.

பொருட்களைத் தூய்மைப்படுத்தும் என்பதற்கும் இப்படித்தான் பொருள் கொள்ள வேண்டும். அழுக்கடைந்த லட்சம் ரூபாயில் ஆயிரம் ரூபாயை ஜகாத்தாக கொடுத்து விட்டால் அழுக்கடந்த நோட்டுக்கள் சலவை நோட்டுக்களாக மாறி விடும் என்று யாரும் பொருள் கொள்ள மாட்டார்கள்.

பொருளைத் திரட்டும் போது நம்மை அறியாமலோ அறிந்தோ தவறான வழைமுறைகள் கையாளப்பட்டு இருக்கலாம் இதனால் அந்தப் பொருள் ஆன்மிக ரீதியான அழுக்காகிறது. அந்தப் பொருள் அழுக்கானால் அது மனிதனின் அழுக்கு தான்.

ஆன்மீக ரீதியான அழுக்கு என்றால் அது மனிதனுடன் தொடர்புடையதாக இருப்பது போல் பொருளுடனும் தொடர்புடையதாக ஆகின்றது.

பணத்தில் அழுக்கு உள்ளதால் அதையும் தூய்மையாக்கும் அவசியம் உள்ளது போல் அழுக்கான முறையில் பணம் திரட்டிய மனிதனிடமும் அழுக்குப் படிகின்றது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று பிண்ணிப் பிணைந்தவையாகும்

எனவே பொருளைச் சுத்தமாக்கும் என்றாலும் மனிதனைச் சுத்தமாக்கும் என்றாலும் இரண்டுமே ஒரே கருத்தைச் சொல்லும் வாசகங்கள் தான் என்பதை அறியாமல் இப்படி வாதிடுகிறார்கள்.

ஜகாத் கொடுப்பது மனிதர்களைச் சுத்தப்படுத்தும் என்பதால் பொருட்களைச் சுத்தப்படுத்தாது என்றாகி விடுமா?

புதிய துணியை ஊசி தைக்கும் என்று கூறினால் கிழிசலைத் தைக்காது என்று இதற்குப் பொருள் கொள்ள முடியுமா?

ஜகாத் மனிதர்களைத் தூய்மைப்படுத்தும் என்று மேற்கண்ட வசனம் சொல்வதால் அதையும் நாம் நம்ப வேண்டும். பொருட்களைத் தூய்மைப்படுத்தும் என்று முன்னர் நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ் கூறுவதால் அதையும் நம்ப வேண்டும். இரண்டும் ஒன்றுக்கொன்று முரணானவை அல்ல!

ஜகாத் மனிதர்களையும் தூய்மைப்படுத்தும்; பொருட்களையும் தூய்மைப்படுத்தும் என்றே நாம் கூறுகின்றோம்.

அனாதைகளின் சொத்துக்கள் பற்றிய ஹதீஸ் ஆதாரமாகுமா?

ஒரு தடவை ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் வருடந் தோறும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கூறுவோர் சில ஆதாரங்களை முன் வைக்கின்றனர். அந்த ஆதாரங்கள் அனைத்துமே பலவீனமானவையாக அமைந்துள்ளன.

அவற்றில் சில ஆதாரங்கள் பலவீனமாக அமைந்திருப்பதுடன் அவர்களின் வாதத்தை நிலைநாட்ட உதவுவதாக இல்லை.

மற்றும் சில ஆதாரங்கள் பலவீனமாக அமைந்திருப்பதுடன் இஸ்லாத்தின் வேறு பல அடிப்படைகளைத் தகர்க்கும் வகையில் அமைந்துள்ளன.

முதலாவது ஹதீஸ்

அந்த ஆதாரங்களை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

سنن الترمذي

641 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى قَالَ: حَدَّثَنَا الوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ المُثَنَّى بْنِ الصَّبَّاحِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ النَّاسَ فَقَالَ: أَلَا مَنْ وَلِيَ يَتِيمًا لَهُ مَالٌ فَلْيَتَّجِرْ فِيهِ، وَلَا يَتْرُكْهُ حَتَّى تَأْكُلَهُ الصَّدَقَةُ: وَإِنَّمَا رُوِيَ هَذَا الحَدِيثُ مِنْ هَذَا الوَجْهِ، وَفِي إِسْنَادِهِ مَقَالٌ، لِأَنَّ المُثَنَّى بْنَ الصَّبَّاحِ يُضَعَّفُ فِي الحَدِيثِ، وَرَوَى بَعْضُهُمْ هَذَا الحَدِيثَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، أَنَّ عُمَرَ بْنَ الخَطَّابِ فَذَكَرَ هَذَا الحَدِيثَ

அனாதைகளின் சொத்துக்களுக்கு ஒருவர் பொறுப்பேற்றால் அதை வியாபாரத்தில் முதலீடு செய்யட்டும். அவ்வாறு செய்யாமல் விட்டு வைத்தால் ஜகாத் அதனைச் சாப்பிட்டு விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.

அறிவிப்பவர்: அம்ரு பின் ஷுஐப்

நூல்: திர்மிதீ 581

எதிர்வாதத்துக்கு மறுப்பு

இந்த ஹதீஸை அவர்கள் தமது ஆதாரமாக முன் வைக்கின்றனர். இந்த ஹதீஸிலிருந்து அவர்கள் எவ்வாறு வாதத்தை எடுத்து வைக்கின்றனர் என்பதை அறிந்து விட்டு இந்த ஹதீஸின் தரத்தையும், இவர்களின் வாதம் சரியானது தானா என்பதையும் ஆராய்வோம்.

கொடுத்த பொருளுக்கு மீண்டும் ஜகாத் இல்லையென்றால், ஜகாத் அதனைச் சாப்பிட்டு விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள். ஒரு தடவை இரண்டரை சதவிகிதம் ஜகாத் கொடுத்து விட்டால் மீதி தொன்னூற்று ஏழரை சதவிகிதம் மிச்சமாக இருந்து விடும். ஆனால் வருடா வருடம் ஜகாத் கொடுத்துக் கொண்டே இருந்தால் படிப்படியாக சொத்து கரைந்து கொண்டே வரும். எனவே தான் அனாதையின் சொத்துக்கள் கரைந்து விடாமல் இருப்பதற்கேற்ப வியாபாரத்தில் முதலீடு செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதிலிருந்து ஒரு பொருளுக்கு வருடா வருடம் ஜகாத் கொடுத்து வர வேண்டும் என்பது தெரிகின்றது என அவர்கள் வாதிடுகின்றனர்.

ஹதீஸின் தரம்

மேற்கண்ட ஹதீஸின் தரம் சரியானதல்ல என்பதால் எடுத்த எடுப்பிலேயே இவர்களின் வாதம் அடிபட்டுப் போகின்றது.

இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ள இமாம் திர்மிதீ அவர்கள், இதன் அறிவிப்பாளர் தொடரில் விமர்சனம் உள்ளது என்றும் முஸன்னா பின் ஸப்பாஹ் என்பவர் பலவீனமானவர் என்றும் ஹதீஸின் கடைசியில் குறிப்பிடுகின்றார்கள்.

இரண்டாவது ஹதீஸ்

இதே ஹதீஸ் தாரகுத்னீயிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

سنن الدارقطنى

1993 – حَدَّثَنَا عَلِىُّ بْنُ مُحَمَّدِ بْنِ أَحْمَدَ الْمِصْرِىُّ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ غُلَيْبٍ الأَزْدِىُّ حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ عَنِ الْمُثَنَّى بْنِ الصَّبَّاحِ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَامَ يَخْطُبُ النَّاسَ فَقَالَ مَنْ وَلِىَ يَتِيمًا لَهُ مَالٌ فَلْيَتَّجِرْ لَهُ وَلاَ يَتْرُكْهُ حَتَّى تَأْكُلَهُ الصَّدَقَةُ

மேற்கண்ட ஹதீஸும் முஸன்னா பின் ஸப்பாஹ் என்பவர் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளதைக் காண்க.

முஸன்னா பின் ஸப்பாஹ் பற்றிய விமர்சனம்

تهذيب التهذيب

-المثنى بن الصباح اليماني الأبناوي أبو عبد الله  قال عمرو بن علي كان يحيى وعبد الرحمن لا يحدثان عنه وقال عبد الله بن أحمد عن أبيه لا يساوي حديثه شيئا مضطرب الحديث  قال إسحاق بن منصور عن بن معين ضعيف وكذا قال معاوية بن صالح عن بن معين وقال عباس الدوري عن بن معين مثنى بن الصباح مكي ويعلي بن مسلم مكي والحسن بن مسلم مكي وجميعا ثقة  وقال بن أبي حاتم سألت أبي أبا زرعة عنه فقالا لين الحديث وقال الجوزجاني لا يقنع بحديثه وقال الترمذي يضعف في الحديث  وقال النسائي ليس بثقة  وقال في موضع آخر متروك الحديث  وقال بن عدي له حديث صالح عن عمرو بن شعيب وقد ضعفه الأئمة المتقدمون والضعف على حديثه بين  قال بن سعد وله أحاديث وهو ضعيف وقال علي بن الجنيد متروك الحديث  وقال الدارقطني ضعيف وقال بن عمار ضعيف  وقال الساجي ضعيف الحديث جدا حدث بمناكير  وقال أبو أحمد الحاكم ليس بالقوي عندهم وضعفه أيضا سحنون الفقيه وغيره  وذكره العقيلي في الضعفاء

யஹ்யா, அப்துர்ரஹ்மான் ஆகிய இரு ஹதீஸ் கலை வல்லுநர்களும் முஸன்னா பின் ஸப்பாஹ் வழியாக எதையும் அறிவித்ததில்லை என்று அம்ரு பின் அலீ குறிப்பிடுகின்றார்கள். இவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் சரியானவை அல்ல; ஹதீஸ்களை இவர் மாற்றி மாற்றிக் கூறுபவர் என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறுகின்றார்கள். இவரிடம் ஏற்பட்ட மனக் குழப்பத்தின் காரணமாக இவர் வழியாக எதையும் நான் அறிவிப்பதில்லை என்று யஹ்யா கூறுகின்றார். இவர் தனிப்பட்ட முறையில் நல்ல மனிதர் என்றாலும் ஹதீஸ் துறையில் சரியானவர் அல்லர் என்றும் இவரது ஹதீஸ்களைப் பதிவு செய்யலாம்; இவர் பலவீனமானவர் என்றும் யஹ்யா பின் மயீன் கூறுகின்றார்.

இவர் பலவீனமானவர் என்று நஸாயீ, அபூஸுர்ஆ, அலீ பின் அல்ஜுனைத், தாரகுத்னீ, இப்னு ஹிப்பான், இப்னு அம்மார், ஸாஜி, அபூஅஹ்மத், அபூஹாத்திம், ஜவ்ஸஜானி, திர்மிதீ,  இப்னு ஸஅது, இப்னு அம்மார், ஹாகிம், உகைலீ, யஹ்யா அல் கத்தான், யஹ்யா பின் ஸயீத், யஹ்யா பின் மயீன் ஆகியோர் கூறியதாக ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தமது தஹ்தீப் நூலில் (10/32) குறிப்பிடுகின்றார்கள்.

நூல் : தஹ்தீபுத் தஹ்தீப்

இந்தச் செய்தியை அறிவிக்கும் முஸன்னா பின் ஸப்பாஹ் பலவீனமானவர் என்பதால் இதை ஆதாரமாகக் கொண்டு எந்தச் சட்டமும் வகுக்கக் கூடாது.

மூன்றாவது ஹதீஸ்

இதே ஹதீஸ் முஸன்னா பின் ஸப்பாஹ் வழியாக அல்லாமல் வேறு வழியிலும் தாரகுத்னீயில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

سنن الدارقطنى

1994  حَدَّثَنَا أَبُو مُحَمَّدِ بْنُ صَاعِدٍ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُبَيْدِ بْنِ إِسْحَاقَ الْعَطَّارُ بِالْكُوفَةِ حَدَّثَنَا أَبِى حَدَّثَنَا مِنْدَلٌ عَنْ أَبِى إِسْحَاقَ الشَّيْبَانِىِّ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم احْفَظُوا الْيَتَامَى فِى أَمْوَالِهِمْ لاَ تَأْكُلُهَا الزَّكَاةُ

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் உபைத் பின் இஸ்ஹாக் என்பவரும், மின்தல் என்பவரும் இடம் பெற்றுள்ளனர். இவ்விருவரும் பலவீனமானவர்கள்.

மின்தல் பற்றிய விமர்சனம்

تهذيب التهذيب

مندل بن علي العنزي أبو عبد الله الكوفي  وقال عبد الله بن أحمد عن أبيه ضعيف الحديث  وقال أحمد بن أبي مريم عن ابن معين ليس به بأس يكتب حديثه قال ابن أبي خيثمة عن ابن معين ليس بشيء وقال عثمان الدارمي عن ابن معين لا بأس به وقال الدوري عن ابن معين حبان ومندل ضعيفان  وأصحابنا يحيى بن معين وعلي بن المديني وغيرهما من نظرائهم يضعفونه في الحديث وكان خيرا فاضلا صدوقا وهو ضعيف الحديث وكان البخاري ادخل مندلا في الضعفاء وسئل أبو زرعة عن مندل فقال لين الحديث وقال النسائي ضعيف  وقال بن عدي له غرائب وأفراد وهو ممكن يكتب حديثه  وقال علي بن الحسين بن الجنيد سئل ابن معين عنه فقال ليس بذاك القوي وقال الجوزجاني واهي الحديث وقال الحاكم أبو أحمد ليس بالقوي عندهم وقال الساجي ليس بثقة روى مناكير  وقال لي بن مثنى كان عبد الرحمن بن مهدي لا يحدث عنه وقال بن قانع والدارقطني ضعيف  وقال ابن حبان كان ممن يرفع المراسيل ويسند الموقوفات من سوء حفظه فاستحق الترك  وقال الطحاوي ليس من أهل التثبت في الرواية بشيء ولا يحتج به.

அஹ்மத் பின் ஹம்பல், யஹ்யா பின் மயீன், அலீ பின் மத்யனி, புகாரி, அபூஸுர்ஆ, நஸாயீ, இப்னுஅதீ, அபூஹஸ்ஸான், ஜவ்ஸஜானி, அபூஅஹ்மத்,  ஹாகிம்,  ஸாஜி,  அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ,  இப்னு கானிவு, தாரகுத்னீ, தஹாவீ உள்ளிட்ட பல அறிஞர்கள் இவரைப் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளனர். இப்னு மயீன் அவர்கள் இவரைப் பலவீனமானவர் என்று கூறியதாகவும் நம்பகமானவர் என்று கூறியதாகவும் முரண்பட்ட இரண்டு அறிவிப்புக்கள் உள்ளன. முஆத் பின் முஆத், அஜலீ, ஆகியோர் மட்டும் தான் இவரது ஹதீஸ்களை ஏற்கலாம் என்று கூறியுள்ளனர் என்றாலும் இவரைக் குறை கூறியவர்கள் மோசமான நினைவாற்றல் உள்ளிட்ட பல குறைபாடுகள் உள்ளவர் என தக்க காரணத்துடன் குறை கூறியுள்ளதால் அதையே ஏற்றுக் கொள்ள வேண்டும்.

நூல் : தஹ்தீபுத் தஹ்தீப்

எனவே இவர் இடம் பெறும் மேற்கண்ட ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு எந்தச் சட்டமும் வகுக்கக் கூடாது.

உபைத் பின் இஸ்ஹாக் பற்றிய விமர்சனம்

மேற்கண்ட ஹதீஸில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பாளரான உபைத் பின் இஸ்ஹாக் என்பவரும் பலவீனமானவர்.

الكامل في ضعفاء الرجال

عُبَيد بن إسحاق العطار كوفي حَدَّثَنَا ابن حَمَّاد، حَدَّثَنا العباس، عَن يَحْيى، قَالَ: عُبَيد عطار المطلقات قلت له هذه الأحاديث التي يحدث بها باطل قَالَ اتق الله ويحك، قلتُ: وَهو باطل فسكت. وسمعتُ ابن حماد يقول: قال البُخارِيّ عُبَيد العطار هُوَ منكر الحديث.  وَعَامَّةُ مَا يَرْوِيهِ إما أن يكون منكر الإسناد أو منكر المتن.

புகாரி, யஹ்யா ஆகியோர் இவரது ஹதீஸ்கள் முன்கர் (நிராகரிக்கத்தக்கது) என்ற தரத்தில் அமைந்தவை என்று குறிப்பிட்டுள்ளனர். இவர் அறிவித்துள்ள தவறான பல ஹதீஸ்கள் தக்க சான்றுகளுடன் காமில் என்ற நூலில் விளக்கப்பட்டுள்ளது.

நூல் : அல்காமில்

எனவே மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்களில் இரண்டு பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம் பெற்றுள்ளதால் இதையும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.

நான்காவது ஹதீஸ்

المعجم الأوسط

998 – حَدَّثَنَا أَحْمَدُ قَالَ: نا عَبْدُ الْعَزِيزِ قَالَ: نا مَنْدَلُ بْنُ عَلِيٍّ، عَنْ سُلَيْمَانَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ابْتَغُوا الْيَتَامَى فِي أَمْوَالِهِمْ، لَا تَأْكُلُهَا الزَّكَاةُ

மேற்கண்ட ஹதீஸ் மற்றொரு வழியிலும் தப்ரானியின் அவ்ஸத் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் மின்தல் பின் அலீ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்பதை மேலே விளக்கியுள்ளோம்.

ஐந்தாவது ஹதீஸ்

மேற்கண்ட ஹதீஸ் மேற்கூறப்பட்ட மூவர் வழியாக இல்லாமல் வேறு சில அறிவிப்பாளர்கள் மூலமும் தாரகுத்னீயில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

سنن الدارقطنى

1995  حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ عَلِىٍّ الْبَزَّازُ حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْقَطَّانُ حَدَّثَنَا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْوَزَّانُ حَدَّثَنَا رَوَّادُ بْنُ الْجَرَّاحِ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِى مَالِ الْيَتِيمِ زَكَاةٌ

இந்த ஹதீஸில் மேற்கண்ட மூவரில் எவரும் இடம் பெறாவிட்டாலும் முஹம்மத் பின் உபைதுல்லாஹ் (அல்அஸ்ரமி) என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரும் நம்பகமானவர் அல்லர்.

முஹம்மத் பின் உபைதுல்லாஹ் அல்அஸ்ரமி பற்றிய விமர்சனம்

المجروحين لابن حبان

– محمد بن عُبَيد الله العرزمي. ، وكان صدوقا إلا أن كتبه ذهبت وكان رديء الحفظ فجعل يحدث من حفظه ويهم فكثر المناكير في روايته. تركه ابن المبارك، ويَحيَى القطان، وابن مهدي، ويَحيَى بن مَعِين. كان يحيى، وعَبد الرحمن لا يحدثان، عَن مُحَمد بن عُبَيد الله العرزمي قلت لابن نمير: ما تقول في محمد بن عُبَيد الله العرزمي؟ فقال: رجل صدوق ولكن ذهبت كتبه وكان رديء الحفظ فمن ثم أنكرت أحاديثه.

இவர் உண்மையாளராக இருந்தாலும் இவரது நூற்கள் அழிந்து விட்டன. இவர் நினைவாற்றல் குறைந்தவராக இருந்தார். தனது நினைவில் உள்ளதை இவர் அறிவிக்கும் போது தவறாக அறிவித்து விடுவார். நிராகரிக்கப்படும் ஹதீஸ்கள் பலவற்றை இவர் அறிவித்துள்ளார். இப்னுல் முபாரக், யஹ்யா பின் அல்கத்தான், இப்னு மஹ்தீ, யஹ்யா பின் மயீன் ஆகியோர் இவரை விட்டு விட்டனர்.

நூல் : அல்மஜ்ரூஹீன்

எனவே இதையும் ஆதாரமாகக் கொண்டு எந்தச் சட்டத்தையும் வகுக்க முடியாது.

ஆறாவது ஹதீஸ்

மேற்கண்ட நால்வர் வழியாக அல்லாமல் வேறு அறிவிப்பாளர்கள் மூலமாகவும் தப்ரானியின் அவ்ஸத் நூலில்  இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

المعجم الأوسط

4152 – حَدَّثَنَا عَلِيٌّ قَالَ: نا الْفُرَاتُ بْنُ مُحَمَّدٍ الْقَيْرَوَانِيُّ قَالَ: نا شَجَرَةُ بْنُ عِيسَى الْمَعَافِرِيُّ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي كَرِيمَةَ، عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: اتَّجِرُوا فِي أَمْوَالِ الْيَتَامَى، لَا تَأْكُلْهَا الزَّكَاةُ

இந்த அறிவிப்பும் ஆதாரப்பூர்வமானது அல்ல. இதில் ஃபுராத் பின் முஹம்மத் என்பவரும் உமாரா பின் கஸிய்யா என்பவரும் இடம் பெறுகின்றார்கள். இவ்விருவரும் பலவீனமானவர்கள் ஆவர்.

ஃபுராத் பின் முஹம்மத் பற்றிய விமர்சனம்

لسان الميزان

فرات بن محمد بن فرات العبدي القيرواني  وقال ابن حارث كان يغلب عليه الرواية والجمع ومعرفة الأخبار وكان ضعيفا متهما بالكذب

இவர் பலவீனமானவர் மட்டுமின்றி பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டவராகவும் இருந்தார்

நூல் : லிஸானுல் மீஸான்

உமாரா பின் கஸிய்யா பற்றிய விமர்சனம்

மற்றொரு அறிவிப்பாளரான உமாரா பின் கஸிய்யா என்பவரும் பலவீனமானவராவார்.

الضعفاء الكبير للعقيلي

– حَدثنا مُحمد بن عيسى، قال: حَدثنا صالح، قال: حَدثنا عَلي، قال: قُلت لسُفيان: كُنت جالَست عُمارة بن غَزيَّةَ؟ قال: نَعَم، جالَستُه كَم مِن مَرَّة، فَلَم أَحفَظ عنه شَيئًا، ثُم قال لي سُفيان: أَيش رَوى؟ قُلتُ: ابن أَبي سَعيد الخُدريّ, عن أَبيه، قال: مَن سَأَل ولَه أُوقيَّة، قال سُفيان هَذا، وحَدثناه عنه زَيد بن أَسلَم، عن عَطاء بن يَسار.

இவருடன் எத்தனையோ தடவை நான் அமர்ந்துள்ளேன். ஆயினும் இவரிடமிருந்து எந்த ஹதீஸையும் நான் மனனம் செய்ததில்லை என்று சுஃப்யான் கூறுகின்றார். இவரைப் புகழ்ந்து கூறும் விமர்சனம் எதையும் நாம் காணவில்லை எனவும் கூறுகின்றார்.

நூல் : லுஅஃபாவுல் உகைலீ

ஆக அனாதைகளின் சொத்துக்களுக்குப் பொறுப்பேற்றவர் அதை வியாபாரத்தில் முடக்க வேண்டும். இல்லாவிட்டால் ஜகாத் கொடுத்தே அந்தச் சொத்து கரைந்து விடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் எந்தவொரு அறிவிப்பும் ஆதாரப்பூர்வமானது அல்ல.

எனவே இதன் அடிப்படையில் எந்தச் சட்டத்தையும் வகுக்க முடியாது.

இது தவிர உமர் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாக மேற்கண்ட கருத்து தாரகுத்னீ 2/110,பைஹகீ 4/107 மற்றும் 6/2, முஸ்னத் ஷாஃபி 1/204, முஅத்தா 1/251, முஸன்னப் அப்துர்ரஸாக்4/69 ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் குர்ஆனையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல், செயல்,அங்கீகாரத்தையும் மட்டுமே பின்பற்ற வேண்டும். மற்ற எவருக்கும் வஹீ வராது என்பதால் அதை வைத்து எந்தச் சட்டத்தையும் வகுக்க முடியாது.

மற்றொரு அறிவிப்பில் பைஹகீ (4/107) நபிகள் நாயகத்தின் கூற்றாக சரியான அறிவிப்பாளர்கள் வழியாகப் பதிவு செய்யப் பட்டிருந்தாலும் அதில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளதாக பைஹகீ அவர்களே கூறுகின்றார்கள்.

ஆக இவர்கள் எடுத்து வைத்த முதல் ஆதாரம் ஏற்புடையதாக இல்லை.

வருடா வருடம் என்று ஹதீஸில் இல்லை

இது தவிர ஒரு வாதத்துக்காக மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதத்தை இந்த ஹதீஸிலிருந்து நிலைநாட்ட முடியாது.

ஜகாத் கொடுத்தால் அனாதையின் சொத்து கரைந்து விடும் என்று மட்டும் தான் மேற்கண்ட பலவீனமான ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. வருடா வருடம் என்று கூறப்படவில்லை. வருடா வருடம் என்பது இவர்களாக நுழைத்துக் கொண்டதாகும்.

ஜகாத் கொடுத்துக் கொண்டிருந்தால் அனாதைகளின் சொத்து கரையும் என்றால் வருடா வருடம் கொடுப்பதை விட மாதந்தோறும் கொடுத்தால் இன்னும் சீக்கிரமாகக் கரைந்து விடும். எனவே மாதாமாதம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள் என்று நாம் வாதிட்டால் அவர்களிடம் ஏற்கத்தக்க எந்தப் பதிலும் இருக்காது.

இன்னும் ஒருவர் வாரா வாரம் ஜகாத் கொடுப்பதைத் தான் இது குறிப்பிடுகின்றது. சொத்தைக் கரைத்து விடும் என்ற கருத்து வாரா வாரம் கொடுத்தால் தான் அதிகம் பொருந்தும் என்று வாதிடலாம். வேறொருவர் தினமும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்பதற்கு இதை ஆதாரமாகக் காட்டலாம்.

தினசரி ஐந்து வேளை தொழுகை போல் தினசரி ஐந்து வேளை ஜகாத் கொடுப்பதைத் தான் இது குறிப்பிடுகின்றது என்றும் கூற முடியும்.

இவையெல்லாம் எப்படி ஹதீஸில் இல்லாமல் திணிக்கப்பட்டதாக உள்ளதோ அது போல் தான் வருடா வருடம் என்பதும் மேற்கண்ட ஹதீஸில் திணிக்கப்பட்டதாகும்.

இதை ஒரு வாதத்துக்காகவும், மேலதிக விளக்கத்திற்காகவும் தான் குறிப்பிடுகின்றோம். அந்த ஹதீஸ் பலவீனமானது என்பது தான் அடிப்படையான விஷயமாகும்.

மேற்கண்ட ஹதீஸ்கள் பலவீனமானவை என்ற நம் வாதங்களுக்கு மாற்றுக் கருத்துடையோரிடம் தக்க பதில் இல்லை.

அனாதைக்கு அநீதி

அறிவிப்பாளர்களில் பலவீனம் என்பதுடன், வருடா வருடம் என்ற வார்த்தை இந்த ஹதீஸில் இடம் பெறவில்லை என்பதை மேலே கண்டோம். அது மட்டுமின்றி இந்த ஹதீஸ் கூறும் கருத்தும் இஸ்லாமிய நெறிகளுக்கு உகந்ததாக இல்லை.

பருவ வயதை அடைவதற்கு முன்பு தான் ஒருவரை அனாதை என்று கூற முடியும். இவர்களும் ஒப்புக் கொண்ட இஸ்லாமியச் சட்டப்படி பருவ வயது வராதவர்களின் எந்த ஒப்பந்தமும் செல்லாது.

அனாதையின் சொத்தை வியாபாரத்தில் முடக்க வேண்டுமானால் அனாதையின் சம்மதம் அவசியம்.

அனாதையின் சொத்தை அவர் பருவமடைவது வரை அழகிய முறையிலேயே தவிர நெருங்காதீர்கள்! வாக்கை நிறைவேற்றுங்கள்! வாக்கு விசாரிக்கப்படும்.

திருக்குர்ஆன் 17:34

அனாதை சம்மதம் கொடுக்கும் வயதுடையவனாக இல்லாததால் அனாதை சொத்தை வியாபாரத்தில் போடுவதற்கு பொறுப்பாளருக்கு உரிமை இல்லை.

இந்தக் காரணத்தாலும் மேற்கண்ட ஹதீஸ் மேலும் பலவீனப்படுகின்றது.

வியாபாரம் என்பது லாபமும், நட்டமும் ஏற்படும் என்ற இரண்டு தன்மைகளைக் கொண்டதாகும்.

அனாதைச் சொத்தை வியாபாரத்தில் போடாமல் இருந்தால் இவர்களின் வாதப்படி ஜகாத் கொடுத்தே கரைவதற்குப் பல வருடங்கள் ஆகும். ஆனால் வியாபாரத்தில் போட்டு, நட்டம் ஏற்பட்டால் ஒரு மாதத்திலேயே, ஏன் ஒரு நாளில் கூட அனாதையின் சொத்து அழிந்து விடும்.

மேலும் இவர்களது வாதப்படி ஜகாத் கரைந்து கொண்டே வந்து ஒரு குறிப்பிட்ட தொகை வந்ததும் ஜகாத் கடமையாகாத நிலை ஏற்படும். அப்போது அந்தத் தொகை மட்டுமாவது அனாதைக்காக மிஞ்சியிருக்கும். ஆனால் வியாபாரத்தில் நட்டமடைந்து விட்டால் எதுவுமே மிஞ்சாத நிலை கூட ஏற்படலாம்.

ஜகாத் கொடுத்தே சொத்து கரைந்து விடும் என்ற கருத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக இந்தப் பலவீனமான ஹதீஸ் கூறுகின்றது. இந்தக் கருத்து உண்மைக்கு மாற்றமாக உள்ளது.

இவர்கள் வாதப்படியே ஆண்டுக்கு ஒரு முறை ஜகாத் கொடுப்பதாக வைத்துக் கொண்டாலும் ஒரு காலத்திலும் முழுமையாகக் கரைவதற்கு வாய்ப்பே இல்லை.

ஒரு வயதுடைய அல்லது அன்று பிறந்த குழந்தை அனாதையாகி விட்ட நிலையில் சொத்தை ஒருவன் பராமரிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அனாதை பருவ வயது அடையும் வரை தான் பராமரிக்க வேண்டும். அதாவது அதிகபட்சமாக 15 வருடங்கள் வரை ஒருவர் அனாதையின் சொத்தைப் பராமரிக்க வேண்டிய நிலை ஏற்படும். சொத்தில் இரண்டரை சதவிகிதம் ஜகாத் என்ற அடிப்படையில் இதைக் கணக்கிடுவோம்.

ஒரு லட்ச ரூபாய் அனாதைச் சொத்தை ஒருவர் பராமரிக்கின்றார். இவர்களின் வாதப்படி ஓர் ஆண்டுக்கு இரண்டரை சதவிகிதம் ஜகாத் கொடுக்க வேண்டும். அதாவது 2500 ரூபாய் கொடுக்க வேண்டும்.

அடுத்த வருடம் 2437 ரூபாய் ஐம்பது காசுகள் ஜகாத் கொடுக்க வேண்டும்.

15 வருடங்கள் இப்படியே கொடுத்தால் கூட அதிகபட்சமாக 31,598 ரூபாய் தான் ஜகாத் கொடுக்க வேண்டி வரும்.

அனாதையாக இருப்பவன் பருவமடையும் போது 68,402 ரூபாய் கண்டிப்பாக மீதம் இருக்கும். அப்படிப் பார்க்கும் போது மேற்கண்ட பலவீனமான ஹதீஸ்களின் கூறப்பட்டுள்ளது போல் ஜகாத் கொடுத்தே சொத்து கரைந்து விடுவதற்கோ, அல்லது சொத்தை ஜகாத் விழுங்கி விடுவதற்கோ வாய்ப்பில்லை.

எனவே இது போன்ற பொருத்தமற்ற வாதங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள் என்பதால் இது மேலும் பலவீனப்படுகின்றது.

மேலும் அனாதைச் சொத்தை மோசடி செய்ய நினைப்பவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்து விடும்.

உன் சொத்தை வியாபாரத்தில் போட்டேன். எல்லாம் நட்டமாகி விட்டது என்று சொத்தைப் பராமரித்தவர் அனாதை வளர்ந்து பெரியவனாகும் போது கூறும் வாய்ப்பை நபிகள் நாயகம் (ஸல்) ஏற்படுத்த மட்டார்கள் என்பதும் மேற்கண்ட ஹதீஸை இன்னும் பலவீனப்படுத்துகின்றது.

இரண்டு வருட ஜகாத்தை முன்கூட்டியே வாங்கிய ஹதீஸ் ஆதாரமாகுமா?

ஒரு பொருளுக்கு ஜகாத் கொடுத்து விட்டாலும் மீண்டும் மீண்டும் வருடா வருடம் ஜகாத் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற கருத்துடையவர்கள் மற்றொரு ஹதீஸையும் தங்களின் வாதத்துக்குச் சான்றாக எடுத்து வைக்கின்றனர்.

அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஜகாத் வசூலிக்க உமர் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். அப்பாஸ் (ரலி) அவர்களிடம் உமர் (ரலி) ஜகாத்தைக் கேட்டார்கள். அவர்களிடம் அப்பாஸ் (ரலி) கடுமையாக நடந்து கொண்டார். உடனே உமர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அப்பாஸ் இந்த வருட ஜகாத்தையும் வரும் ஆண்டின் ஜகாத்தையும் முன் கூட்டியே தந்து விட்டார் எனக் கூறினார்கள்.

மேற்கண்ட கருத்தில் சில ஹதீஸ்கள் சில நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதை ஆதாரமாகக் கொண்டு, கொடுத்த பொருளுக்கே ஆண்டு தோறும் ஜகாத் கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர்.

வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டியது அவசியம் என்பதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டு வருட ஜகாத்தை முன் கூட்டியே வாங்கியுள்ளனர் என்பது இவர்களின் வாதம்.

இந்த ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவையா என்பதையும், ஆதாரப்பூர்வமானவை என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதத்துக்கு இதில் இடம் உள்ளதா என்பதையும் விரிவாக நாம் ஆராய்வோம்.

மேற்கண்ட கருத்தில் அமைந்த எந்த அறிவிப்பும் ஆதாரமாகக் கொள்ளத் தக்கதாக இல்லை.

முதல் ஹதீஸ்

سنن الدارقطنى

2034 حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ عُتْبَةَ حَدَّثَنَا وَلِيدُ بْنُ حَمَّادٍ حَدَّثَنَا الْحَسَنُ بْنُ زِيَادٍ عَنِ الْحَسَنِ بْنِ عُمَارَةَ عَنِ الْحَكَمِ عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ عَنْ طَلْحَةَ أَنَّ النَّبِىَّ صلى الله عليه وسلم قَالَ يَا عُمَرُ أَمَا عَلِمْتَ أَنَّ عَمَّ الرَّجُلِ صِنْوُ أَبِيهِ إِنَّا كُنَّا احْتَجْنَا إِلَى مَالٍ فَتَعَجَّلْنَا مِنَ الْعَبَّاسِ صَدَقَةَ مَالِهِ لِسَنَتَيْنِ. اخْتَلَفُوا عَلَى الْحَكَمِ فِى إِسْنَادِهِ وَالصَّحِيحُ عَنِ الْحَسَنِ بْنِ مُسْلِمٍ مُرْسَلٌ.

நூல் : தாரகுத்னீ

மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் ஹஸன் பின் உமாரா என்பவர் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் ஆவார்.

ஹஸன் பின் உமாரா பற்றிய விமர்சனம்

تهذيب التهذيب

 532 خت ت ق البخاري في التعاليق والترمذي وابن ماجة الحسن بن عمارة بن المضرب البجلي  قال النضر بن شميل عن شعبة أفادني الحسن بن عمارة سبعين حديثا عن الحكم فلم يكن لها أصل وقال الطيالسي قال شعبة ائت جرير بن حازم فقل له لا يحل لك أن تروي عن الحسن بن عمارة فإنه يكذب  قال أبو داود فقلت لشعبة ما علامة ذلك قال روى عن الحكم أشياء فلم نجد لها أصلا  وقال أبو بكر المروزي عن أحمد متروك الحديث وكذا قال أبو طالب عنه وزاد قلت له كان له هوى قال ولكن كان منكر الحديث وأحاديثه موضوعة لا يكتب حديثه وقال مرة ليس بشيء وقال بن معين لا يكتب حديثه وقال مرة ضعيف وقال مرة ليس حديثه بشيء  وقال عبد الله بن المديني عن أبيه ما أحتاج إلى شعبة فيه أمره أبين من ذلك قيل له كان يغلط فقال أي شيء كان يغلط كان يضع  وقال أبو حاتم ومسلم والنسائي والدارقطني متروك الحديث  وقال الساجي ضعيف متروك أجمع أهل الحديث على ترك حديثه  وقال الجوزجاني ساقط وقال جزرة لا يكتب حديثه  وقال عمرو بن علي رجل صالح صدوق كثير الوهم والخطأ متروك الحديث وقال بن المبارك عن بن عيينة كنت إذا سمعت الحسن بن عمارة يحدث عن الزهري جعلت أصبعي في أذني  وقال بن سعد كان ضعيفا في الحديث  وذكره يعقوب في باب من يرغب عن الرواية عنهم  وقال أبو بكر البزار لا يحتج أهل العلم بحديثه إذا انفرد  وقال بن المثنى ما سمعت يحيى ولا عبد الرحمن رويا عنه شيئا قط  وقال أبو العرب قال لي مالك بن عيسى إن أبا الحسن الكوفي يعني العجلي ضعفه وترك أن يحدث عنه وقال الحميدي ذمر عليه وقال يعقوب بن شيبة متروك الحديث  وقال بن حبان كان بلية الحسن التدليس عن الثقات ما وضع عليهم الضعفاء كان يسمع من موسى بن مطير وأبي العطوف وإبان بن أبي عياش واضرابهم ثم يسقط أسماءهم ويرويها عن مشائخه الثقات فالتزقت به تلك الموضوعات وقال السهيلي ضعيف بإجماع منهم

ஹஸன் பின் உமாரா, ஹகம் என்பாரின் பெயரைப் பயன்படுத்தி 70 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். அவற்றில் ஒன்றுக்குக் கூட அடிப்படை இல்லை என்று ஷுஅபா கூறுகின்றார். (மேற்கண்ட ஹதீஸையும் ஹகம் வழியாகவே ஹஸன் பின் உமாரா அறிவித்துள்ளார்.) ஹஸன் பின் உமாரா வழியாக எதையும் அறிவிக்காதே! அவர் பொய் சொல்பவர் என்று ஜரீர் பின் ஹாஸிம் என்பாரிடம் ஷுஅபா கூறினார். இவரது ஹதீஸ்களை விட்டு விட வேண்டும் என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறுகின்றார். மேலும் இவரது ஹதீஸ்கள் யாவும் இட்டுக் கட்டப்பட்டவை, அவற்றைப் பதிவு செய்யக் கூடாது என்றும் அஹ்மத் பின் ஹம்பல் கூறுகின்றார். இப்னு மயீன் அவர்களும் இதே கருத்தைக் கூறியுள்ளனர். அப்துல்லாஹ் பின் அல்மத்யனி, அபூஹாதம், முஸ்லிம், நஸாயீ, தாரகுத்னீ ஆகியோரும் இவரது ஹதீஸ்களை விட்டு விட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

நூல் : தஹ்தீபுத் தஹ்தீப்

எனவே பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்ட இவர் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு ஒரு பொருளுக்கு வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற முடிவுக்கு வர முடியாது.

இரண்டாவது ஹதீஸ்

السنن الكبرى للبيهقي

7366 أَخْبَرَنَا أَبُو عَلِيٍّ الرُّذْبَارِيُّ، أنبأ مُحَمَّدُ بْنُ بَكْرٍ، ثنا أَبُو دَاوُدَ، ثنا سَعِيدُ بْنُ مَنْصُورٍ فَذَكَرَهُ. قَالَ أَبُو دَاوُدَ هَذَا الْحَدِيثُ رَوَاهُ هُشَيْمٌ عَنْ مَنْصُورِ بْنِ زَاذَانَ، عَنِ الْحَكَمِ، عَنِ الْحَسَنِ بْنِ مُسْلِمٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , وَحَدِيثُ هُشَيْمٍ أَصَحُّ. قَالَ الشَّيْخُ: هَذَا حَدِيثٌ مُخْتَلَفٌ فِيهِ عَلَى الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ فَرَوَاهُ إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّا عَنْ حَجَّاجٍ عَنِ الْحَكَمِ هَكَذَا، وَخَالَفَهُ إِسْرَائِيلُ عَنْ حَجَّاجٍ فَقَالَ: عَنِ الْحَكَمِ عَنْ حُجْرٍ الْعَدَوِيِّ عَنْ عَلِيٍّ , وَخَالَفَهُ فِي لَفْظِهِ فَقَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِعُمَرَ: ” إِنَّا قَدْ أَخَذْنَا مِنَ الْعَبَّاسِ زَكَاةَ الْعَامِ عَامَ الْأَوَّلِ وَرَوَاهُ مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللهِ هُوَ الْعَرْزَمِيُّ عَنِ الْحَكَمِ عَنْ مِقْسَمٍ عَنِ ابْنِ عَبَّاسٍ فِي قِصَّةِ عُمَرَ وَالْعَبَّاسِ رَضِيَ اللهُ عَنْهُمَا. وَرَوَاهُ الْحَسَنُ بْنُ عُمَارَةَ عَنِ الْحَكَمِ عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ عَنْ طَلْحَةَ وَرَوَاهُ هُشَيْمٌ عَنْ مَنْصُورِ بْنِ زَاذَانَ عَنِ الْحَكَمِ عَنِ الْحَسَنِ بْنِ مُسْلِمٍ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْسَلًا أَنَّهُ قَالَ لِعُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ فِي هَذِهِ الْقِصَّةِ: إِنَّا كُنَّا قَدْ تَعَجَّلْنَا صَدَقَةَ مَالِ الْعَبَّاسِ لِعَامِنَا هَذَا عَامَ أَوَّلَ وَهَذَا هُوَ الْأَصَحُّ مِنْ هَذِهِ الرِّوَايَاتِ وَرُوِيَ عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ مِنْ وَجْهٍ آخَرَ مَرْفُوعًا

மேற்கண்ட கருத்தில் பைஹகியில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த ஹதீஸிலும் ஹஸன் பின் உமாரா என்ற அறிவிப்பாளர் இடம் பெறுகின்றார். அத்துடன் முஹம்மத் பின் உபைதுல்லாஹ் அல்அஸ்ரமீ என்பவரும் இத்தொடரில் இடம் பெற்றுள்ளனர்.

இவரும் பலவீனமானவர் என்பதற்கான ஆதாரத்தை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். எனவே இது முந்தையதை விட இன்னும் பலவீனமானதாகும்.

மூன்றாவது ஹதீஸ்

இவை தவிர இன்னோர் அறிவிப்பும் தாரகுத்னியில் உள்ளது.

سنن الدارقطنى

2035  حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ عَمْرِو بْنِ عَبْدِ الْخَالِقِ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ نَائِلَةَ الأَصْبَهَانِىُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُغِيرَةِ حَدَّثَنَا النُّعْمَانُ بْنُ عَبْدِ السَّلاَمِ عَنْ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنِ الْحَكَمِ عَنْ مِقْسَمٍ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ بَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عُمَرَ سَاعِيًا قَالَ  فَأَتَى الْعَبَّاسَ يَطْلُبُ صَدَقَةَ مَالِهِ قَالَ فَأَغْلَظَ لَهُ الْعَبَّاسُ فَخَرَجَ إِلَى النَّبِىِّ صلى الله عليه وسلم فَأَخْبَرَهُ قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِنَّ الْعَبَّاسَ قَدْ أَسْلَفَنَا زَكَاةَ مَالِهِ الْعَامَ وَالْعَامَ الْمُقْبِلَ

இதன் அறிவிப்பாளர் தொடரில் முஹம்மத் பின் உபைதுல்லாஹ் அல்அஸ்ரமீ இடம் பெற்றுள்ளதைக் காண்க!

இவர் பலவீனமானவர் என்பதற்கான ஆதாரத்தை முன்னர் குறிப்பிட்டுள்ளோம். எனவே இந்த அறிவிப்பையும் ஆதாரமாகக் கொண்டு எந்தச் சட்டமும் வகுக்கக் கூடாது.

நான்காவது ஹதீஸ்

سنن الدارقطنى

2036 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ وَمُحَمَّدُ بْنُ جَعْفَرٍ الْمَطِيرِىُّ قَالاَ حَدَّثَنَا أَبُو خُرَاسَانَ مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ السَّكَنِ حَدَّثَنَا مُوسَى بْنُ دَاوُدَ حَدَّثَنَا مِنْدَلُ بْنُ عَلِىٍّ عَنْ عُبَيْدِ اللَّهِ عَنِ الْحَكَمِ – وَقَالَ الْمَطِيرِىُّ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنِ الْحَكَمِ – عَنْ مِقْسَمٍ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم بَعَثَ عُمَرَ عَلَى الصَّدَقَةِ فَرَجَعَ وَهُوَ يَشْكُو الْعَبَّاسَ فَقَالَ إِنَّهُ مَنَعَنِى صَدَقَتَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَا عُمَرُ أَمَا عَلِمْتَ أَنَّ عَمَّ الرَّجُلِ صِنْوُ أَبِيهِ إِنَّ الْعَبَّاسَ أَسْلَفَنَا صَدَقَةَ عَامَيْنِ فِى عَامٍ. كَذَا قَالَ عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَإِنَّمَا أَرَادَ مُحَمَّدَ بْنَ عُبَيْدِ اللَّهِ. وَاللَّهُ أَعْلَمُ.

இதே கருத்தில் தாரகுத்னீயில் இடம் பெற்ற இந்த அறிவிப்பில் ஏற்கனவே நாம் சுட்டிக் காட்டியுள்ள உபைதுல்லாஹ் அல்அஸ்ரமீ என்பாரும், அனாதைகளின் சொத்து பற்றிய ஹதீஸில் நாம் சுட்டிக் காட்டிய மின்தல் பின் அலீ என்பாரும் இடம் பெற்றுள்ளார். பலவீனமான இருவர் வழியாக அறிவிக்கப்படுவதால் இதுவும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ் அல்ல.

ஐந்தாவது ஹதீஸ்

மேற்கண்ட அறிவிப்பாளர்கள் அல்லாத வேறு அறிவிப்பாளர்கள் வழியாகவும் தப்ரானியின் கபீர் எனும் நூலிலும், அவ்ஸத் என்ற நூலிலும் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

المعجم الكبير للطبراني

9842 حَدَّثَنَا أَحْمَدُ بن دَاوُدَ الْمَكِّيُّ، حَدَّثَنَا أَبُو عَوْنٍ الزِّيَادِيُّ، حَدَّثَنَا مُحَمَّدُ بن ذَكْوَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:إِنَّ عَمَّ الرَّجُلِ صنُوُّ أَبِيهِ. وَإِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعَجَّلَ مِنَ الْعَبَّاسِ صَدَقَةَ عَامَيْنِ فِي عَامٍ.

المعجم الأوسط

1000 – حَدَّثَنَا أَحْمَدُ قَالَ: نَا مُحْرِزُ بْنُ عَوْفٍ قَالَ: نَا مُحَمَّدُ بْنُ ذَكْوَانَ، عَنِ مَنْصُورٍ، عَنِ إِبْرَاهِيمَ، عَنِ عَلْقَمَةَ، عَنِ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ عَمَّ الرَّجُلِ صِنْوُ أَبِيهِ ، وَإِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعَجَّلَ مِنَ الْعَبَّاسِ صَدَقَةَ عَامَيْنِ فِي عَامٍ

மேற்கண்ட இரண்டு அறிவிப்புக்களிலும் முஹம்மத் பின் தக்வான் என்பவர் இடம் பெறுகின்றார்.

முஹம்மத் பின் தக்வான் பற்றிய விமர்சனம்

الضعفاء الكبير للعقيلي

محمد بن ذكوان ، مولى الجهاضم بصري حدثني آدم قال : سمعت البخاري قال : محمد بن ذكوان مولى الجهاضم ، منكر الحديث

இவரது ஹதீஸ்கள் நிராகரிக்கத்தக்கவை என்று புகாரி இமாம் கூறுகின்றார்கள். எனவே இதையும் ஆதாரமாகக் கொள்ள இயலாது.

நூல் : லுஅஃபாவுல் கபீர்

ஆறாவது ஹதீஸ்

السنن الكبرى للبيهقي

7367 أَخْبَرَنَا أَبُو نَصْرِ بْنُ قَتَادَةَ، أنبأ أَبُو عَلِيٍّ الرَّفَّاءُ، ثنا مُحَمَّدُ بْنُ يُونُسَ الْكُدَيْمِيُّ، ثنا وَهْبُ بْنُ جَرِيرٍ، ح وَأَخْبَرَنَاهُ مُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ الْفَضْلِ الْقَطَّانُ، أنبأ عَبْدُ اللهِ بْنُ جَعْفَرٍ، ثنا يَعْقُوبُ بْنُ سُفْيَانَ، ثنا عِيسَى بْنُ مُحَمَّدٍ، ثنا وَهْبُ بْنُ جَرِيرٍ، ثنا أَبِي قَالَ: سَمِعْتُ الْأَعْمَشَ، يُحَدِّثُ عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي الْبَخْتَرِيِّ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ فَذَكَرَ قِصَّةً فِي بَعْثِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُ سَاعِيًا وَمَنْعِ الْعَبَّاسِ صَدَقَتَهُ , وَأَنَّهُ ذَكَرَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا صَنَعَ الْعَبَّاسُ فَقَالَ: أَمَا عَلِمْتَ يَا عُمَرُ أَنَّ عَمَّ الرَّجُلِ صِنْوُ أَبِيهِ إِنَّا كُنَّا احْتَجْنَا فَاسْتَسْلَفْنَا الْعَبَّاسَ صَدَقَةَ عَامَيْنِ  لَفْظُ حَدِيثِ الْقَطَّانِ , وَفِي رِوَايَةِ ابْنِ قَتَادَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعَجَّلَ مِنَ الْعَبَّاسِ صَدَقَةَ عَامٍ أَوْ صَدَقَةَ عَامَيْنِ وَفِي هَذَا إِرْسَالٌ بَيْنَ أَبِي الْبَخْتَرِيِّ وَعَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ وَقَدْ وَرَدَ هَذَا الْمَعْنَى فِي حَدِيثِ أَبِي هُرَيْرَةَ مِنْ وَجْهٍ ثَابِتٍ عَنْهُ

மேற்கண்ட ஹதீஸ் அலீ (ரலி) வழியாக அபுல் பக்தரி என்பார் அறிவிப்பதாக பைஹகியின் மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்தாலும் அபுல் பக்தரி என்பார் அலீ (ரலி) அவர்களைச் சந்தித்து எதையும் அறிவித்ததில்லை.

இதை இந்த ஹதீஸின் இறுதியில் பைஹகீ அவர்களே குறிப்பிடுகின்றார்கள். அலீ (ரலி), அபுல் பக்தரி ஆகிய இருவருக்குமிடையே தொடர்பு இல்லாததால் இதுவும் பலவீனமான ஹதீஸாகும்.

இந்தக் கருத்தில் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் சரியான அறிவிப்பு ஒன்று உள்ளது என்று இந்த ஹதீஸின் இறுதியில் பைஹகீ குறிப்பிடுகின்றார்கள். அந்தச் சரியான அறிவிப்பு புகாரியிலும், முஸ்லிமிலும் இடம் பெற்றுள்ளது. ஆயினும் அந்த ஹதீஸ் இந்தக் கருத்தைக் கூறவில்லை என்பது பின்னர் விளக்கப்பட்டுள்ளது.

ஏழாவது ஹதீஸ்

மேற்கண்ட அறிவிப்பாளர்கள் இன்றி வேறு அறிவிப்பாளர்கள் வழியாகவும் தாரகுத்னீயில் ஓர் அறிவிப்பு உள்ளது.

سنن الدارقطنى

2037  حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ أَبَانٍ حَدَّثَنَا أَبُو دَاوُدَ عَنْ شَرِيكٍ عَنْ إِسْمَاعِيلَ عَنْ سُلَيْمَانَ الأَحْوَلِ عَنْ أَبِى رَافِعٍ أَنَّ النَّبِىَّ صلى الله عليه وسلم بَعَثَ عُمَرَ سَاعِيًا فَكَانَ بَيْنَهُ وَبَيْنَ الْعَبَّاسِ شَىْءٌ فَقَالَ النَّبِىُّ صلى الله عليه وسلم أَمَا عَلِمْتَ أَنَّ عَمَّ الرَّجُلِ صِنْوُ أَبِيهِ إِنَّ الْعَبَّاسَ أَسْلَفَنَا صَدَقَةَ الْعَامِ عَامَ الأَوَّلِ.

இதன் அறிவிப்பாளர் தொடரில் இஸ்மாயீல் மக்கீ என்பார் இடம் பெறுகின்றார். இவரும் பலவீனமானவர்.

இஸ்மாயீல் மக்கீ என்பார் குறித்த விமர்சனம்

مختصر الكامل في الضعفاء

إِسْمَاعِيل بن مُسلم الْمَكِّيّ قَالَ سُفْيَان: كَانَ يخطيء فِي الحَدِيث، جعل يحدث فيخطيء. وَقَالَ الفلاس: كَانَ يحيى وَعبد الرَّحْمَن لَا يحدثان عَنهُ. وَقَالَ ابْن الْمَدِينِيّ عَن يحيى الْقطَّان وَسُئِلَ عَن إِسْمَاعِيل الْمَكِّيّ كَيفَ كَانَ فِي أول أمره؟ قَالَ: لم يزل مختلطا، كَانَ يحدثنا بِالْحَدِيثِ الْوَاحِد على ثَلَاثَة أضْرب. وَقَالَ ابْن معِين: لَيْسَ بِشَيْء.. .وَقَالَ عَليّ بن الْمَدِينِيّ: ضَعِيف، لَا يكْتب حَدِيثه.

இவர் ஹதீஸில் தவறிழைப்பவர் என்று சுஃப்யான் கூறுகிறார். யஹ்யா அப்துர்ரஹ்மான் ஆகியோர் இவர் வழியாக எதையும் அறிவிக்க மாட்டார்கள். இவர் ஹதீஸை அறிவிக்கும் போது ஒரு ஹதீஸை மூன்று விதமாக அறிவிப்பார் என்று யஹ்யா அல்கத்தான் கூறுகிறார். இவர் கணக்கில் கொள்ளத் தகாதவர் என்று இப்னு மயீன் கூறுகிறார். இவர் பலவீனமானவர் என்று இப்னு மயீன் கூறுகிறார்.

நூல் : முக்தஸர் அல் காமில்

எட்டாவது ஹதீஸ்

இவை தவிர பஸ்ஸார், அபூ யஃலாவிலும் இந்த ஹதீஸ் பதியப்பட்டுள்ளது.

مسند البزار = البحر الزخار

945  حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، قَالَ: نا مُحَمَّدُ بْنُ حُمْرَانَ، قَالَ: نا الْحَسَنُ الْبَجَلِيُّ، أَحْسِبُهُ عَنِ الْحَكَمِ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِيهِ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، تَعَجَّلَ مِنَ الْعَبَّاسِ صَدَقَةَ سَنَتَيْنِ  وَهَذَا الْحَدِيثُ لَا نَعْلَمُ رَوَاهُ إِلَّا الْحَسَنَ الْبَجَلِيَّ وَهُوَ الْحَسَنُ بْنُ عُمَارَةَ، وَالْحَسَنُ، فَقَدْ سَكَتَ أَهْلُ الْعِلْمِ عَنْ حَدِيثِهِ

مسند أبي يعلى الموصلي

635- 638- حَدثنا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ، حَدثنا يُوسُفُ بْنُ خَالِدٍ، حَدثنا الحَسَنُ بْنُ عُمَارَةَ، عَنِ الحَكَمِ بْنِ عُتَيْبَةَ، وَحَبِيبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، عَنْ أَبِيهِ ؛ أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وسَلمَ كَانَ تعَجِّلُّ صَدَقَةَ العَبَّاسِ بْنِ عَبدِ المُطَّلِبِ سَنَتَيْنِ.

இதன் அறிவிப்பாளராக ஹஸன் பின் உமாரா இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம்.

ஒன்பதாவது ஹதீஸ்

مسند البزار = البحر الزخار

1482  وَحَدَّثَنَا الْحَسَنُ بْنُ يَحْيَى، قَالَ: نا مُحَمَّدُ بْنُ عَوْنٍ أَبُو عَوْنٍ  قَالَ: نا مُحَمَّدُ بْنُ ذَكْوَانَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعَجَّلَ مِنَ الْعَبَّاسِ صَدَقَةَ سَنَتَيْنِ وَهَذَا الْحَدِيثُ إِنَّمَا يَرْوِيهِ الْحُفَّاظُ عَنْ مَنْصُورٍ، عَنِ الْحَكَمِ بْنِ عُتَيْبَةَ مُرْسَلًا، وَمُحَمَّدُ بْنُ ذَكْوَانَ هَذَا لَيِّنُ الْحَدِيثِ قَدْ حَدَّثَ بِأَحَادِيثَ كَثِيرَةٍ لَمْ يُتَابَعْ عَلَيْهَا

பஸ்ஸாரில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பில் முஹம்மத் பின் தக்வான் இடம் பெறுகின்றார். இவரும் பலவீனமானவர் என்பதை முன்பே விளக்கியுள்ளோம்.

பத்தாவது ஹதீஸ்

سنن أبي داود

1624  حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ زَكَرِيَّا، عَنِ الْحَجَّاجِ بْنِ دِينَارٍ، عَنِ الْحَكَمِ، عَنْ حُجَيَّةَ، عَنْ عَلِيٍّ، أَنَّ الْعَبَّاسَ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي تَعْجِيلِ صَدَقَتِهِ قَبْلَ أَنْ تَحِلَّ، فَرَخَّصَ لَهُ فِي ذَلِكَ، قَالَ مَرَّةً: فَأَذِنَ لَهُ فِي ذَلِكَ، قَالَ أَبُو دَاوُدَ: رَوَى هَذَا الْحَدِيثَ هُشَيْمٌ، عَنْ مَنْصُورِ بْنِ زَاذَانَ، عَنِ الْحَكَمِ، عَنِ الْحَسَنِ بْنِ مُسْلِمٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَحَدِيثُ هُشَيْمٍ أَصَحُّ

அபூதாவூத், அஹ்மத், ஹாகிம், திர்மிதீ, இப்னுமாஜா உள்ளிட்ட நூல்களில் இந்தக் கருத்தில் ஒரு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீஸை ஹுஷைம் என்பார் அறிவிக்கும் போது அலீ (ரலி) கூறியதாகவும், சில வேளை ஹஸன் பின் முஸ்லிம் என்ற நபித்தோழர் அல்லாத ஒருவர் கூறியதாகவும் முரண்படுகின்றார். இதை ஆய்வு செய்த தாரகுத்னீ, அபூதாவூத் ஆகியோர் நபித்தோழர் அல்லாதவர் அறிவிப்பதாகக் கூறுவது தான் சரியான அறிவிப்பாகும் என்று கூறுகின்றனர்.

அதாவது நபித்தோழர் அறிவிப்பதாகக் கூறுவது தவறு என்று கூறுகின்றார்கள். இந்த விபரம் தல்கீஸ் நூலில் இடம் பெற்றுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக நபித்தோழர் அல்லாதவர் அறிவித்தால் அது ஏற்கத்தக்கதல்ல.

எனவே இந்தக் கருத்தில் ஒரு ஹதீஸ் கூட ஆதாரப்பூர்வமானதாக இல்லை. எனவே இதை அடிப்படையாகக் கொண்டு சட்டம் வகுக்க முடியாது.

ஆதாரப்பூர்வமான ஹதீசுக்கு முரண்

அறிவிப்பாளர் சரியில்லை என்பதாலும், தொடர்பு அறுந்துள்ளதாலும் இந்த ஹதீஸ்கள் பலவீனமாக இருப்பதுடன் ஆதாரப்பூர்வமான பின் வரும் ஹதீஸுடன் முரண்படுவதால் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்ற நிலைக்கு மேலும் இறங்குகிறது.

صحيح مسلم

وحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا وَرْقَاءُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: بَعَثَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عُمَرَ عَلَى الصَّدَقَةِ، فَقِيلَ: مَنَعَ ابْنُ جَمِيلٍ، وَخَالِدُ بْنُ الْوَلِيدِ، وَالْعَبَّاسُ عَمُّ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا يَنْقِمُ ابْنُ جَمِيلٍ إِلَّا أَنَّهُ كَانَ فَقِيرًا فَأَغْنَاهُ اللهُ، وَأَمَّا خَالِدٌ فَإِنَّكُمْ تَظْلِمُونَ خَالِدًا، قَدِ احْتَبَسَ أَدْرَاعَهُ وَأَعْتَادَهُ فِي سَبِيلِ اللهِ، وَأَمَّا الْعَبَّاسُ فَهِيَ عَلَيَّ، وَمِثْلُهَا مَعَهَا ثُمَّ قَالَ: يَا عُمَرُ، أَمَا شَعَرْتَ أَنَّ عَمَّ الرَّجُلِ صِنْوُ أَبِيهِ

அப்பாஸ் (ரலி) அவர்களிடம் ஜகாத் வசூலிக்க உமர் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பிய போது அப்பாஸ் (ரலி) அவர்கள் மறுத்தார்கள். இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது, அது என்னைச் சார்ந்தது. அது போல் ஒரு மடங்கும் என்னைச் சார்ந்தது என்று குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 1790

புகாரியின் அறிவிப்பில் அதுவும், அத்துடன் அது போன்றதும் அவர் மீது கடமையாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

صحيح البخاري

1468  حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: أَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالصَّدَقَةِ، فَقِيلَ مَنَعَ ابْنُ جَمِيلٍ، وَخَالِدُ بْنُ الوَلِيدِ، وَعَبَّاسُ بْنُ عَبْدِ المُطَّلِبِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا يَنْقِمُ ابْنُ جَمِيلٍ إِلَّا أَنَّهُ كَانَ فَقِيرًا، فَأَغْنَاهُ اللَّهُ وَرَسُولُهُ، وَأَمَّا خَالِدٌ: فَإِنَّكُمْ تَظْلِمُونَ خَالِدًا، قَدِ احْتَبَسَ أَدْرَاعَهُ وَأَعْتُدَهُ فِي سَبِيلِ اللَّهِ، وَأَمَّا العَبَّاسُ بْنُ عَبْدِ المُطَّلِبِ، فَعَمُّ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَهِيَ عَلَيْهِ صَدَقَةٌ وَمِثْلُهَا مَعَهَا

இந்த அறிவிப்புக்களில் எந்தக் குறைபாடும் இல்லை. இந்த ஹதீஸின் வாசகங்களைக் கவனித்தால் இரண்டு வருட ஜகாத்தை அப்பாஸ் (ரலி)யிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசூலிக்கவில்லை என்பதும், மாறாக அவர் மீதுள்ள ஜகாத்தையும் அது போல் இன்னொரு மடங்கையும் வசூலித்தார்கள் என்பதும் தெரிய வருகின்றது.

ஜாகத் கொடுக்க மறுத்ததற்காக இன்னொரு மடங்கை வாங்கினார்கள் என்பது இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்க்கும் போது, சாதாரண அறிவு படைத்தவருக்கும் தெரியும். பத்து ரூபாய் தர வேண்டியவர் அதைத் தர மறுக்கும் போது 20 ரூபாய் கொடு என்று கூறினால், அது மறுத்ததற்கான தண்டனை என்பதை யாரும் விளங்கலாம்.

புகாரியின் விரிவுரை நூலான ஃபத்ஹுல்பாரியில் இது பற்றிக் கூறப்பட்டதை இங்கே நினைவுபடுத்துவது பொருத்தமானதாக இருக்கும்.

இப்னு ஹஜர் விளக்கம்

فتح الباري

على الرواية الأولى يكون صلى الله عليه و سلم ألزمه بتضعيف صدقته ليكون أرفع لقدره وأنبه لذكره وأنفى للذم عنه فالمعنى فهي صدقة ثابتة عليه سيصدق بها ويضيف إليها مثلها كرما

அவரது ஜகாத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரு மடங்காக வாங்கியதற்கான காரணம் தமது தகுதிக்கு ஏற்றதாக இருக்க வேண்டும் என்பதற்காகவும், தம் மீது பழி சேரக் கூடாது என்பதற்காகவும் தான். இதன் கருத்து, அவர் அந்த ஜகாத்தைக் கொடுத்தாக வேண்டும். அது போன்ற இன்னொரு மடங்கை உபரியாக வழங்க வேண்டும் என்பது தான்.

நூல் ஃபத்ஹுல் பாரி

அவர் மீது கடமையான ஜகாத் போன்று இன்னொரு மடங்கை வாங்கியது இரண்டு வருடத்துக்காக அல்ல. உபரியாகத் தான் வாங்கினார்கள் என்று இப்னு ஹஜர் அவர்கள் தெளிவுபடுத்துகின்றார்கள்.

அப்பாஸ் (ரலி) அவர்கள் ஜகாத் கொடுக்க மறுத்த சம்பவம் புகாரி, முஸ்லிம் நூற்களில் ஒரு விதமாக உள்ளது. இது ஆதாரப்பூர்வமாக உள்ளது.

மற்ற நூற்களில் வேறு விதமாக உள்ளது. அது பலவீனமானதாக உள்ளது.

மேலும் ஆதாரப்பூர்வமான இந்த ஹதீசுக்கு முரண்படுவதாலும்,  இரண்டு வருட ஜகாத்தை முன் கூட்டியே வசூலித்தார்கள் என்பது இட்டுக்கட்டப்பட்ட நிலைக்குத் தரம் குறைந்து விடுகின்றது.

ஆண்டு தோறும் ஜகாத் என்ற ஹதீஸ்களின் நிலை

அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இரண்டு ஆண்டுக்கான ஜகாத்தை முன் கூட்டியே வாங்கி விட்டனர் என்பது ஆதாரமற்றது என்பதால் இதை ஆதாரமாகக் கொண்ட இவர்களது வாதமும் அடிபட்டுப் போகின்றது.

மேலும் பல காரணங்களால் அந்த ஹதீஸ்களின் பலவீனம் அதிகரிக்கின்றது.

ஜகாத் கொடுக்கப்பட்ட ஒரு பொருளுக்கே மீண்டும் மீண்டும் வருடந்தோறும் கொடுக்க வேண்டும் என்று இவர்கள் கூறுகின்ற படியே வைத்துக் கொண்டாலும் முன் கூட்டியே இரண்டு ஆண்டுக்கான ஜகாத்தை வாங்குவது நடைமுறை சாத்தியமற்றது.

ஜகாத் என்பது தலைக்கு இவ்வளவு என்று வசூலிக்கப்படுவதல்ல. மாறாக, ஒருவரது சொத்துக்களைக் கணக்கிட்டு அதற்கேற்ப வசூலிக்கப்படுவதாகும்.

இந்த வருடத்துக்கான ஜகாத்தை ஒருவரிடம் வசூலித்து விட முடியும். ஏனெனில் அவரிடம் உள்ள இந்த வருடச் சொத்துக்களைக் கணக்கிடுவது சாத்தியமானது தான்.

ஆனால் அடுத்த வருடம் அவரது சொத்துக்கள் எவ்வளவு இருக்கும் என்பதை இந்த ஆண்டு கணக்கிட முடியுமா?

இவர்களின் வாதப்படி வருடம் முடிவடையும் போது தான் ஜகாத் கடமையாகும். அடுத்த வருடம் முடிவடையாத போது இப்போதே வசூலிப்பது அநீதியாகி விடும் அல்லவா?

இந்த வருடம் கணக்குப் பார்க்கும் போது 5 லட்சம் ஒருவரிடம் இருந்தால் அடுத்த வருடமும் அதே 5 லட்சத்திற்கு நாம் ஜகாத் வாங்க இயலுமா? அடுத்த வருடம் வருவதற்குள் அவரிடம் இருந்த 5 லட்சமும் முடிந்து போய் விட்டால் அவரிடம் வாங்கிய அந்த ஜகாத் அநீதியாக ஆகாதா?

அல்லது வருடம் முடிவதற்கு இடையில் அவர் மரணித்து விட்டால், இவர்களின் வாதப்படி அவர் அந்த வருடத்தின் ஜகாத்தைக் கொடுக்கத் தேவையில்லை. அப்படியானால் அட்வான்ஸாக வாங்கிய ஜகாத் எந்த வகையில் நியாயமாகும்?

பலவீனமான இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு வாதிக்கும் இவர்கள், ஒரு மனிதன் 10 வருட ஜகாத்தை இப்போதே வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி வழங்கினால் அதை வாங்கலாம் என்பார்களா? பத்து வருடத்தில் ஆயிரம் மடங்கு அவனது சொத்து பெருகி விட்டாலோ, அல்லது சொத்துக்கள் அழிந்து விட்டாலோ, அல்லது அவனே மரணித்து விட்டாலோ அந்த அநீதியை எப்படிச் சரி செய்வார்கள்?

இதைச் சிந்திக்கும் போது இரண்டு வருட ஜகாத்தை முன்பணமாக வாங்கியது கட்டுக் கதை என்பது மேலும் உறுதியாகின்றது.

ஒரு வருடம் நிறைவடையும் முன் ஜகாத் கடமையில்லை என்ற ஹதீஸ் ஆதாரமாகுமா?

முதல் ஹதீஸ்

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கூறுவோர் மற்றொரு ஆதாரத்தை எடுத்துக் காட்டுகின்றனர்.

سنن الترمذي

631 حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى، حَدَّثَنَا هَارُونُ بْنُ صَالِحٍ الطَّلْحِيُّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، عَنْ ابْنِ عُمَرَ،  قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَنْ اسْتَفَادَ مَالًا فَلَا زَكَاةَ عَلَيْهِ، حَتَّى يَحُولَ عَلَيْهِ الحَوْلُ عِنْدَ رَبِّهِ وَفِي البَابِ عَنْ سَرَّاءَ بِنْتِ نَبْهَانَ

سنن الترمذي

632  حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ الثَّقَفِيُّ قَالَ: حَدَّثَنَا أَيُّوبُ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، قَالَ: مَنْ اسْتَفَادَ مَالًا فَلَا زَكَاةَ فِيهِ حَتَّى يَحُولَ عَلَيْهِ الحَوْلُ عِنْدَ رَبِّهِ. وَهَذَا أَصَحُّ مِنْ حَدِيثِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زَيْدِ بْنِ أَسْلَمَ. وَرَوَاهُ أَيُّوبُ، وَعُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، وَغَيْرُ وَاحِدٍ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، مَوْقُوفًا. وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ زَيْدِ بْنِ أَسْلَمَ ضَعِيفٌ فِي الحَدِيثِ، ضَعَّفَهُ أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، وَعَلِيُّ بْنُ المَدِينِيِّ، وَغَيْرُهُمَا مِنْ أَهْلِ الحَدِيثِ وَهُوَ كَثِيرُ الغَلَطِ

ஒருவன் ஒரு பொருளைப் பெற்றுக் கொண்டால் ஒரு வருடம் கடக்கும் வரை அப்பொருளுக்கு ஜகாத் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக திர்மிதியில் (572) இடம் பெற்ற ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் அப்துர்ரஹ்மான் பின் ஸைத் பின் அஸ்லம் என்பவர் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் என்று திர்மிதீ இமாம் அவர்களே அடுத்த ஹதீஸின் இறுதியில் கூறுகின்றார்கள். அஹ்மத் பின் ஹம்பல், அலீ பின் மத்யனீ உள்ளிட்ட பலர் இவரைப் பலவீனமானவர் என்று முடிவு செய்திருப்பதாகவும் திர்மிதீ இமாம் தெரிவிக்கின்றார்கள்.

இரண்டாவது மூன்றாவது நான்காவது ஹதீஸ்

மேலும் இதே கருத்துடைய ஹதீஸ் இப்னுமாஜாவிலும்,  பைஹகீயிலும் தாரகுத்னியிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

سنن ابن ماجه

1792  حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِي، حَدّثَنَا شُجَاعُ بْنُ الْوَلِيدِ، حَدّثَنَا حَارِثَةُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ، قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ  صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  يَقُولُ: لَا زَكَاةَ فِي مَالٍ، حَتَّى يَحُولَ عَلَيْهِ الْحَوْلُ

السنن الكبرى للبيهقي

7274 أَخْبَرَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ بِشْرَانَ، وَمُحَمَّدُ بْنُ الْحُسَيْنِ بْنِ الْفَضْلِ الْقَطَّانُ بِبَغْدَادَ قَالَا أنبأ أَبُو عَمْرٍو عُثْمَانُ بْنُ أَحْمَدَ بْنِ السَّمَّاكِ ثنا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي دَاوُدَ، ثنا أَبُو بَدْرٍ شُجَاعُ بْنُ الْوَلِيدِ , ثنا حَارِثَةُ بْنُ مُحَمَّدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا , قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: لَا زَكَاةَ فِي مَالٍ حَتَّى يَحُولَ عَلَيْهِ الْحَوْلُ. وَكَذَلِكَ رَوَاهُ أَبُو مُعَاوِيَةَ وَهُرَيْمُ بْنُ سُفْيَانَ وَأَبُو كُدَيْنَةَ عَنْ حَارِثَةَ مَرْفُوعًا. وَرَوَاهُ الثَّوْرِيُّ عَنْ حَارِثَةَ مَوْقُوفًا عَلَى عَائِشَةَ , وَحَارِثَةُ لَا يُحْتَجُّ بِخَبَرِهِ , وَالِاعْتِمَادُ فِي ذَلِكَ عَلَى الْآثَارِ الصَّحِيحَةِ فِيهِ عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللهُ عَنْهُ وَعُثْمَانَ بْنِ عَفَّانَ وَعَبْدِ اللهِ بْنِ عُمَرَ وَغَيْرِهِمْ رَضِيَ اللهُ عَنْهُمْ

سنن الدارقطنى

1912  حَدَّثَنَا أَبُو طَلْحَةَ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْكَرِيمِ الْفَزَارِىُّ حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِىٍّ حَدَّثَنَا شُجَاعُ بْنُ الْوَلِيدِ عَنْ حَارِثَةَ بْنِ مُحَمَّدٍ ح وَحَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ دُبَيْسِ بْنِ أَحْمَدَ الْحَدَّادُ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الْمُنَادِى حَدَّثَنَا أَبُو بَدْرٍ حَدَّثَنَا حَارِثَةُ ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ كَامِلٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَعْدٍ الْعَوْفِىُّ حَدَّثَنَا أَبُو بَدْرٍ حَدَّثَنَا حَارِثَةُ ح وَحَدَّثَنَا عَلِىُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُبَشِّرٍ حَدَّثَنَا عَلِىُّ بْنُ أَحْمَدَ الْجَوَارِبِىُّ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ حَدَّثَنَا هُرَيْمٌ عَنْ حَارِثَةَ عَنْ عَمْرَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيْسَ فِى الْمَالِ زَكَاةٌ حَتَّى يَحُولَ عَلَيْهِ الْحَوْلُ. قَالَ نَصْرٌ لاَ زَكَاةَ فِى مَالٍ. وَقَالَ الْبَاقُونَ لَيْسَ فِى الْمَالِ زَكَاةٌ.

இதன் அறிவிப்பாளர் தொடரில் ஹாரிஸா பின் முஹம்மத் என்பார் இடம் பெறுகின்றார். இவரது செய்தி நம்பத்தக்கதல்ல என்று பைஹகீ குறிப்பிடுகின்றார்கள்.

ஹாரிஸா பின் முஹம்மத் குறித்த விமர்சனம்

المجروحين لابن حبان

275  حَارِثَة بْن مُحَمَّد بْن أَبِي الرِّجَال وَاسم أبي الرّحال مُحَمَّد بْن عَبْد الرَّحْمَنِ الأَنْصَارِي من أهل الْمَدِينَةِ يروي عَن عَمْرو روى عَنْهُ وَكِيع كَانَ مِمَّن كثر وهمه وفحش خطوه تَركه أَحْمَد وَيَحْيَى سَمِعْتُ مُحَمَّدَ بن الْمُنْذر يَقُول سَمِعت عَبَّاس بن مُحَمَّد يَقُول سَمِعت يحيى بْنَ مَعِينٍ يَقُولُ حَارِثَةُ بْنُ أَبِي الرِّجَالِ ضَعِيفٌ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الرِّجَالِ أَخُوهُ ثِقَةٌ

ஹாரிஸா என்பவரின் கற்பனை அதிகமாகி விட்டது. அவரது தவறுகள் அதிகமாகி விட்டன. அஹ்மத் பின் ஹம்பல், யஹ்யா ஆகியோர் இவரை புறக்கணித்து விட்டனர். இவர் பலவீனமானவர் என்று யஹ்யா பின் முயீன் கூறியுள்ளார் என இப்னு ஹிப்பான் கூறுகிறார்.

இந்த ஹதீசும் பலவீனமானது என்பதால் இதனடிப்படையில் இவர்கள் எழுப்பிய வாதமும் விழுந்து விடுகின்றது.

ஐந்தாவது ஹதீஸ்

سنن الدارقطنى

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ أَحْمَدَ بْنِ صَالِحٍ الْحَلَبِىُّ حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُثْمَانَ الْوَرَّاقُ حَدَّثَنَا أَبُو التَّقِىِّ هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ حَدَّثَنَا بَقِيَّةُ عَنْ إِسْمَاعِيلَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم  لاَ زَكَاةَ فِى مَالِ امْرِئٍ حَتَّى يَحُولَ عَلَيْهِ الْحَوْلُ . رَوَاهُ مُعْتَمِرٌ وَغَيْرُهُ عَنْ عُبَيْدِ اللَّهِ مَوْقُوفًا.

தாரகுத்னியின் மேற்கண்ட அறிவிப்பாளர் தொடரில் சயீத் பின் உஸ்மான் அல் வர்ராக் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் யாரென அறியப்படாதவர்.

ஸயீத் பின் உஸ்மான் பற்றிய விமர்சனம்

تراجم رجال الدارقطني في سننه

سعيد بن عثمان الوراق قال الدارقطني  رحمه الله: حدثنا الحسن بن أحمد بن صالح الحلبي، ثنا سعيد بن عثمان الوراق. لم نجده.

ஸயீத் பின் உஸ்மான் என்ற அறிவிப்பாளர் குறித்த எந்த விபரமும் கிடைக்கவில்லை என தாரகுத்னீ கூறுகிறார்.

ஆறாவது ஹதீஸ்

سنن الدارقطنى

1914  حَدَّثَنَا الْحَسَنُ بْنُ الْخَضِرِ الْمُعَدِّلُ بِمَكَّةَ حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ يُونُسَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الأَسَدِىُّ حَدَّثَنَا حَسَّانُ بْنُ سِيَاهٍ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ  لَيْسَ فِى مَالٍ زَكَاةٌ حَتَّى يَحُولَ عَلَيْهِ الْحَوْل

மேலும் இந்தக் கருத்துடைய ஹதீஸ் தாரகுத்னீயிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் ஹஸ்ஸான் பின் ஸியாஹ் என்பவர் இடம் பெறுகின்றார். இவரும் பலவீனமானவர் ஆவார்.

ஹஸ்ஸான் பின் ஸியாஹ் பற்றிய விமர்சனம்

ميزان الاعتدال

حسان بن حسان الواسطي.قال الدارقطني: ليس بالقوى، يخالف الثقات، وينفرد عن الثقات بما لا يتابع عليه.وليس هو بالذي يروي عنه البخاري.

இவர் பலமானவர் அல்ல; நம்பகமானவர்களின் அறிவிப்புகளுக்கு மாற்றமாக அறிவிப்பவர் என்று தார குத்னீ கூறுகிறார்.

ஏழாவது எட்டாவது ஹதீஸ்

அபூதாவூத், பைஹகீ ஆகிய நூற்களிலும் இந்த ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

سنن أبي داود

1573  حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْمَهْرِيُّ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي جَرِيرُ بْنُ حَازِمٍ، وَسَمَّى آخَرَ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ، وَالْحَارِثِ الْأَعْوَرِ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَعْضِ أَوَّلِ هَذَا الْحَدِيثِ، قَالَ: فَإِذَا كَانَتْ لَكَ مِائَتَا دِرْهَمٍ، وَحَالَ عَلَيْهَا الْحَوْلُ، فَفِيهَا خَمْسَةُ دَرَاهِمَ، وَلَيْسَ عَلَيْكَ شَيْءٌ  يَعْنِي  فِي الذَّهَبِ حَتَّى يَكُونَ لَكَ عِشْرُونَ دِينَارًا، فَإِذَا كَانَ لَكَ عِشْرُونَ دِينَارًا، وَحَالَ عَلَيْهَا الْحَوْلُ، فَفِيهَا نِصْفُ دِينَارٍ، فَمَا زَادَ، فَبِحِسَابِ ذَلِكَ، قَالَ: فَلَا أَدْرِي أَعَلِيٌّ يَقُولُ: فَبِحِسَابِ ذَلِكَ، أَوْ رَفَعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَلَيْسَ فِي مَالٍ زَكَاةٌ حَتَّى يَحُولَ عَلَيْهِ الْحَوْلُ، إِلَّا أَنَّ جَرِيرًا، قَالَ ابْنُ وَهْبٍ يَزِيدُ فِي الْحَدِيثِ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَيْسَ فِي مَالٍ زَكَاةٌ حَتَّى يَحُولَ عَلَيْهِ الْحَوْلُ

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் நம்பகமானவர்கள் இடம் பெறுவதால் இது ஆதாரப்பூர்வமானது என்று நாஸிருத்தீன் அல்பானி கூறுகின்றார். இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்பதைக் கவனித்த அல்பானி இதிலுள்ள மற்றொரு  குறைபாட்டைக் கவனிக்கத் தவறி விட்டார்.

எனவே இது பற்றி விரிவாக நாம் விளக்கியாக வேண்டும். இதன் அறிவிப்பாளர் தொடர் பின்வருமாறு அமைந்துள்ளது.

* அப்துல்லாஹ் பின் முஹம்மத் என்பார் தனக்கு ஸுஹைர் கூறியதாகத் தெரிவிக்கின்றார்.

* ஸுஹைர் என்பார் தனக்கு அபூ இஸ்ஹாக் கூறியதாகக் குறிப்பிடுகிறார்.

* அபூ இஸ்ஹாக் என்பார் தனக்கு ஆஸிம், ஹாரிஸ் ஆகிய இருவர் கூறியதாகக் கூறுகிறார்.

* ஆஸிம், ஹாரிஸ் ஆகிய இருவரும் தமக்கு அலீ (ரலி) கூறியதாகக் குறிப்பிடுகின்றார்கள்.

இந்தத் தொடரில் அலீ (ரலி) அவர்களிடம் கேட்ட இருவரில் ஹாரிஸ் என்பார் பெரும் பொய்யர் என்றாலும் அவர்களிடம் செவியுற்ற மற்றொரு அறிவிப்பாளர் ஆஸிம் பின் ளமுரா என்பார் ஏற்கத் தக்கவராவார். எனவே இந்த அடிப்படையில் இது சரியான அறிவிப்பாளர் தொடரைக் கொண்டதாக அமைந்து விடுகின்றது. எனவே இது சரியான அறிவிப்பு தான் என்று அல்பானி கூறுகின்றார்.

ஆனாலும் அலீ (ரலி) அவர்கள் தமது சொந்தக் கூற்றாக இதைக் கூறினார்களா? அல்லது நபிகள் நாயகத்தின் கூற்றைத் தெரிவிக்கிறார்களா? இது பற்றி மேற்கண்ட ஹதீஸில் சந்தேகத்துக்கிடமான சொற்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலீ (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றை எடுத்துக் கூறுவதாகத் தான் நினைக்கிறேன் என்று ஸுஹைர் என்பார் கூறுகின்றார். இந்த வாசகம் இந்த ஹதீஸின் துவக்கத்தில் இடம் பெறுகின்றது.

அலீ (ரலி) அவர்கள் நபியவர்களின் கூற்றை எடுத்துக் காட்டியதாக நினைக்கிறேன் என்று அலீ (ரலி) அவர்களைச் சந்தித்திராத ஸுஹைர் என்பார் யூகத்தின் அடிப்படையில் கூறுகின்றார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக யூகத்தின் அடிப்படையில் முடிவு செய்ய முடியாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றால் அதை அலீ (ரலி) அவர்கள் தெளிவாகக் கூறியிருக்க வேண்டும்.

ஆனால் ஸுஹைர் என்பார் யூகமாகக் கூறுவதால் இது நபிமொழியாக ஆகாது.

எனவே இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்றாலும் இக்கூற்று அலீ (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றே ஆகும். எனவே இதையும் ஆதாரமாகக் கொண்டு எந்த முடிவும் எடுக்க முடியாது.

ஒன்பதாவது ஹதீஸ்

ஒரு பொருளுக்கு ஜகாத் கொடுத்து விட்டாலும் ஆண்டு தோறும் அப்பொருளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற வாதத்தை நிலைநாட்ட மற்றொரு ஹதீஸையும் எடுத்து வைக்கின்றார்கள்.

سنن أبي داود

1582  قَالَ أَبُو دَاوُدَ: وَقَرَأْتُ فِي كِتَابِ عَبْدِ اللَّهِ بْنِ سَالِمٍ بِحِمْصَ عِنْدَ آلِ عَمْرِو بْنِ الْحَارِثِ الْحِمْصِيِّ، عَنِ الزُّبَيْدِيِّ، قَالَ: وَأَخْبَرَنِي يَحْيَى بْنُ جَابِرٍ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُعَاوِيَةَ الْغَاضِرِيِّ، مِنْ غَاضِرَةِ قَيْسٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ثَلَاثٌ مَنْ فَعَلَهُنَّ فَقَدْ طَعِمَ طَعْمَ الْإِيمَانِ: مَنْ عَبَدَ اللَّهَ وَحْدَهُ وَأَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَعْطَى زَكَاةَ مَالِهِ طَيِّبَةً بِهَا نَفْسُهُ، رَافِدَةً عَلَيْهِ كُلَّ عَامٍ، وَلَا يُعْطِي الْهَرِمَةَ، وَلَا الدَّرِنَةَ ، وَلَا الْمَرِيضَةَ، وَلَا الشَّرَطَ اللَّئِيمَةَ، وَلَكِنْ مِنْ وَسَطِ أَمْوَالِكُمْ، فَإِنَّ اللَّهَ لَمْ يَسْأَلْكُمْ خَيْرَهُ، وَلَمْ يَأْمُرْكُمْ بِشَرِّهِ

மூன்று காரியங்களை யார் செய்கிறாரோ அவர் ஈமானின் ருசியைச் சுவைத்து விட்டார். 1. வணக்கத்திற்கு உரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நம்பி அல்லாஹ்வை மட்டும் வணங்குதல். 2. ஒவ்வொரு வருடமும் தனது பொருளின் ஜகாத்தை மன விருப்பத்துடன் வழங்குதல். 3. கிழப் பருவம் அடைந்தது, சொறி பிடித்தது, நோயுற்றது, அற்பமானது ஆகியவற்றை ஜகாத்தாகக் கொடுக்காமல் நடுத்தரமானதை வழங்குதல் ஆகிய மூன்று காரியங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் பைஹகீயிலும் தப்ரானியின் ஸகீர் என்ற நூலிலும் அபூதாவூதிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது மிகவும் ஆதாரப்பூர்வமானது என்று இக்கருத்துடையவர்கள் கூறுகின்றனர் ஆனால் மேற்கண்ட மூன்று அறிவிப்புகளுமே பலவீனமான அறிவிப்புகளாகும்.

பத்தாவது ஹதீஸ்

السنن الكبرى للبيهقي

7275  وَأَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ بْنُ الْفَضْلِ الْقَطَّانُ بِبَغْدَادَ. أنبأ عَبْدُ اللهِ بْنُ جَعْفَرِ بْنِ دَرَسْتَوَيْهِ، ثنا يَعْقُوبُ بْنُ سُفْيَانَ، ثنا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، حَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ سَالِمٍ، عَنِ الزُّبَيْدِيِّ، قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ جَابِرٍ، أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ جُبَيْرٍ، حَدَّثَهُ أَنَّ أَبَاهُ حَدَّثَهُ أَنَّ عَبْدَ اللهِ بْنَ مُعَاوِيَةَ الْغَاضِرِيَّ حَدَّثَهُمْ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:  ثَلَاثٌ مَنْ فَعَلَهُنَّ فَقَدْ طَعِمَ طَعْمَ الْإِيمَانِ: مَنْ عَبَدَ اللهَ وَحْدَهُ فَإِنَّهُ لَا إِلَهَ إِلَّا اللهُ , وَأَعْطَى زَكَاةَ مَالِهِ طَيِّبَةً بِهَا نَفْسُهُ رَافِدَةً عَلَيْهِ فِي كُلِّ عَامٍ , وَلَمْ يُعْطِ الْهَرِمَةَ وَلَا الدَّرِنَةَ وَلَا الشَّرَطَ اللَّائِمَةَ وَلَا الْمَرِيضَةَ وَلَكِنْ مِنَ أَوْسَطِ أَمْوَالِكُمْ , فَإِنَّ اللهَ عَزَّ وَجَلَّ لَمْ يَسْأَلْكُمْ خَيْرَهُ , وَلَمْ يَأْمُرْكُمْ بِشَرِّهِ , وَزَكَّى عَبْدٌ نَفْسَهُ  فَقَالَ رَجُلٌ: مَا تَزْكِيَةُ الْمَرْءِ نَفْسَهُ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: يَعْلَمُ أَنَّ اللهَ مَعَهُ حَيْثُ مَا كَانَ. وَقَالَ غَيْرُهُ: وَلَا الشَّرَطَ اللَّئِيمَةَ

இந்த அறிவிப்பாளர் தொடரில் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் என்பார் இடம் பெற்றுள்ளார்.

இவரைப் பற்றி இப்னு மயீன் புகழ்ந்து கூறியிருக்கின்றார். ஆயினும் நஸாயீ அவர்கள் இவர் பலமான அறிவிப்பாளர் அல்ல எனக் கூறுகின்றார். இவர் பொய் சொல்பவர் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை என்று முஹம்மத் பின் அவ்ன் கூறுகின்றார்.

நூல் : தஹ்தீபுத் தஹ்தீப்

இஸ்ஹாக் பின் இப்ராஹீம் என்பவரை சிலர் நல்லவர்கள் என்று கூறியிருந்தாலும் அவர் பொய் சொல்பவர் என்று தெளிவான காரணம் சொல்லப்பட்டுள்ளதால் நிறையை விட குறையை முற்படுத்த வேண்டும் என்று ஹதீஸ் கலையில் வகுக்கப்பட்டுள்ள சரியான நிலைபாட்டின் அடிப்படையில் இவர் பலவீனமானவர் என்று முடிவு எடுக்க வேண்டும்.

மேற்கண்ட பைஹகீயின் அறிவிப்பில் அம்ரு பின் ஹாரிஸ் என்ற அறிவிப்பாளரும் இடம் பெறுகின்றார்.

(தஹ்தீபுத் தஹ்தீப் 8/13)

இவரைப் பற்றி விபரம் கிடைக்கவில்லை. தஹபீ அவர்கள் இவரது நேர்மை நிரூபணமாகவில்லை என்று கூறுகின்றார்.

இவர் நம்பகமானவரா? இல்லையா? என்பது தெரியாத நிலையில் மேற்கண்ட ஹதீஸ் மேலும் பலவீனமடைகின்றது.

பதினோராவது ஹதீஸ்

المعجم الصغير

 555  حدثنا علي بن الحسن بن معروف الحمصي حدثنا أبو تقي عبد الحميد بن إبراهيم حدثنا عبد الله بن سالم بن محمد بن الوليد الزبيدي حدثنا يحيى بن جابر الطائي أن عبد الرحمن بن جبير بن نفير حدثه أن أباه حدثه أن عبد الله بن معاوية الغاضري رضي الله عنه حدثهم أن رسول الله صلى الله عليه و سلم : قال ثلاث من فعلهن فقد ذاق طعم الإيمان من عبد الله عز و جل وحده بأنه لا إله ألا هو وأعطى زكاة ماله طيبة بها نفسه في كل عام ولم يعط الهرمة ولا الدرنة ولا المريضة ولكن من أوسط أموالكم فإن الله عز و جل لم يسألكم خيرها ولم يأمركم بشرها وزكى نفسه فقال رجل وما تزكية النفس فقال أن يعلم أن الله عز و جل معه حيث كان لا يروى هذا الحديث عن بن معاوية إلا بهذا الإسناد ولا نعرف لعبد الله بن معاوية الغاضري حديثا مسندا غير هذا

தப்ரானி அவர்களின் ஸகீர் என்ற நூலில் இடம் பெற்ற ஹதீஸும் பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் வரிசையில் அபூதகீ அப்துல் ஹமீத் பின் இப்ராஹீம் என்பவர் இடம் பெறுகின்றார்.

அபூதகீ அப்துல் ஹமீத் பற்றிய விமர்சனம்

الجرح والتعديل لابن أبي حاتم

عبد الحميد بن ابراهيم الحضرمي (الحمصى  أبو تقى روى عن عبد الله بن سالم صاحب محمد بن الوليد الزبيدي روى عنه محمد بن عوف، نا عبد الرحمن قال سألت محمد بن عوف الحمصى عنه فقال كان شيخا ضريرا لا يحفظ وكنا نكتب من نسخه الذى كان عند اسحاق ابن زبريق لابن سالم فنحمله إليه ونلقنه فكان لا يحفظ الاسناد ويحفظ بعض المتن فيحدثنا وانما حملنا الكتاب عنه شهوة الحديث،

இவர் பார்வை இழந்த முதியவராக இருந்தார். இவருக்கு நினைவாற்றலும் இருக்கவில்லை. இவர் நம்பகமானவர் அல்லர். கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவரும் அல்லர் என்று அபூஹாதம் கூறுகின்றார்.

நூல் : அல்ஜரஹ் வத்தஃதீல்

மேற்கண்ட மூன்று அறிவிப்புகளில் இது தான் பலமானது என்று சில அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் ஹதீஸ் கலை அறிஞர்கள் அபூதகீ அப்துல் ஹமீது என்பாரைப் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

எனவே இந்த ஹதீஸை ஆதாரப்பூர்வமானது என்று வாதிடக் கூடியவர்கள் மேற்கண்ட அறிவிப்பாளரைப் பற்றி விமர்சனத்திற்குப் பதில் கூறி விட்டு வாதிட வேண்டும்.

இந்த ஹதீஸ் பலவீனமானது என்பதைத் தக்க காரணத்துடன் நாம் விளக்கியுள்ளோம். அந்தக் காரணம் இருக்கும் வரை இது பலவீனமானது என்ற முடிவில் எந்த மாற்றமும் இல்லை.

பன்னிரண்டாவது ஹதீஸ்

سنن أبي داود

1582  قَالَ أَبُو دَاوُدَ: وَقَرَأْتُ فِي كِتَابِ عَبْدِ اللَّهِ بْنِ سَالِمٍ بِحِمْصَ عِنْدَ آلِ عَمْرِو بْنِ الْحَارِثِ الْحِمْصِيِّ، عَنِ الزُّبَيْدِيِّ، قَالَ: وَأَخْبَرَنِي يَحْيَى بْنُ جَابِرٍ، عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُعَاوِيَةَ الْغَاضِرِيِّ، مِنْ غَاضِرَةِ قَيْسٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ثَلَاثٌ مَنْ فَعَلَهُنَّ فَقَدْ طَعِمَ طَعْمَ الْإِيمَانِ: مَنْ عَبَدَ اللَّهَ وَحْدَهُ وَأَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَعْطَى زَكَاةَ مَالِهِ طَيِّبَةً بِهَا نَفْسُهُ، رَافِدَةً عَلَيْهِ كُلَّ عَامٍ، وَلَا يُعْطِي الْهَرِمَةَ، وَلَا الدَّرِنَةَ  وَلَا الْمَرِيضَةَ، وَلَا الشَّرَطَ اللَّئِيمَةَ، وَلَكِنْ مِنْ وَسَطِ أَمْوَالِكُمْ، فَإِنَّ اللَّهَ لَمْ يَسْأَلْكُمْ خَيْرَهُ، وَلَمْ يَأْمُرْكُمْ بِشَرِّه

அபூதாவூதில் இடம் பெற்ற ஹதீஸிலும் இரண்டு குறைபாடுகள் உள்ளன.

இதை அறிவிப்பாளர்கள் இடையே தொடர்பு விடுபட்ட ஹதீஸ் என்று இமாம் முன்திரி அவர்கள் கூறுகின்றார்கள்.

تحفة التحصيل في ذكر رواة المراسيل

يحيى بن جَابر الطَّائِي أخرج لَهُ أَبُو دَاوُد عَن عَوْف بن مَالك وَجبير بن نفير وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ عَن الْمِقْدَام بن معدي كرب وروى ايضا عَن عبد الله بن حِوَالَة وَأبي ثَعْلَبَة النَّهْدِيّ والنواس بن سمْعَان وَذكر الْمزي فِي التَّهْذِيب ان حَدِيثه عَن هَؤُلَاءِ كلهم مُرْسل لم يلقهم

அவுப் பின் மாலிக், ஜுபைர் பின் நுபைர், மிக்தாம் பின் மஅதீ கரிப், அப்துல்லாஹ் பின் ஹிவாலா, அபூ ஸஅலபா அன்னஹ்தீ, நவ்வாஸ் பின் ஸம்ஆன் ஆகியோர் வழியாக யஹ்யா பின் ஜாபிர் அறிவித்துள்ளார். ஆனால் அவர்களை  இவர்  சந்தித்ததில்லை

அபூதாவூத் அவர்கள் தமக்கு அறிவித்தவரைக் கூறவில்லை. அம்ரு பின் ஹாரிஸ் குடும்பத்தாரிடம் அப்துல்லாஹ் பின் ஸாலிமுடைய ஏடு இருந்தது. அதில் வாசித்தேன் எனக் கூறி மேற்கண்ட ஹதீஸை அபூதாவூத் பதிவு செய்கிறார்கள்.

அப்துல்லாஹ் பின் ஸாலிம் அவர்களின் ஏட்டை அப்துல்லாஹ் பின் ஸாலிமிடமிருந்து அபூதாவூத் வாசிக்கவில்லை. அம்ரு பின் ஹாரிஸ் என்பாரின் குடும்பத்தாரிடம் வாசித்தேன் என்று கூறுகின்றார்.

அம்ரு பின் ஹாரிஸ் குடும்பத்தார் என்றால் யார்? அவர்களின் நம்பகத் தன்மை எத்தகையது? அப்துல்லாஹ் பின் ஸாலிம் என்பாரின் ஏடு என்று கூறி வேறு எதையாவது காட்டக் கூடியவர்களா? என்ற விபரம் ஏதுமில்லை.

ஒருவரின் குடும்பத்தார் என்பது அவரது தாய், தந்தை, அண்ணன், தம்பி, மனைவி, மக்கள் என பலரையும் குறிக்கக் கூடியது. அம்ரு பின் ஹாரிசுடைய குடும்பத்தார் யார் என்பதும், அவர்களின் நம்பகத் தன்மை எத்தகையது என்பதும் நிரூபணமாகவில்லை என்பதால் இது பலவீனமானதாகும்.

அம்ரு பின் ஹாரிசுடைய நம்பகத்தன்மையே நிரூபிக்கப் படவில்லை என்பதை முன்னரே கண்டுள்ளோம். நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாத ஒருவரின் குடும்பத்தார் வைத்திருந்த ஏட்டில் வாசித்தேன் என்று அபூதாவூத் கூறுவதிலிருந்தே இதன் பலவீனம் தெளிவாகத் தெரிகின்றது.

ஹதீஸ் நூற்கள் அச்சிடப்பட்டு பலராலும் உறுதி செய்யப்படாத அந்தக் காலத்தில், இந்த நூலை இவர் எழுதினார் என்று கூறினால், அந்த நூலாசிரியர் அதைக் கூறியிருக்க வேண்டும்; நூலாசிரியர் அனுமதியும் அளிக்க வேண்டும்.

ஏனெனில் ஒருவர் ஒரு விஷயத்தை எழுதி வைத்து விட்டு, அதில் சில திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று எண்ணியிருப்பார். எனவே அவரது அனுமதியில்லாமல் வேறொருவர் அதைக் கையாளும் போது அவர் வெளியிட விரும்பாத செய்திகள் அவரது பெயரால் வெளிவந்து விடக் கூடும். இது போன்ற காரணங்களால் எழுதியவரின் அனுமதி பெற்றே அவரது நூலிலிருந்து எதையும் அறிவிக்க வேண்டும் என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் முடிவு செய்தனர்.

எனவே ஒருவரது நூலை இன்னொருவரின் குடும்பத்தாரிடம் வாசித்தேன் என்று அபூதாவூத் கூறுவதால் இது தொடர்பு அறுந்தது என்பதில் ஐயம் இல்லை.

இந்த மூன்று ஹதீஸ்களின் நிலையும் இது தான். பலவீனமான ஒரு ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு மிக முக்கியமான கடமையான வணக்கத்தைத் தீர்மானிப்பது எந்த வகையிலும் நியாயமாகாது.

நபித்தோழர் இலக்கணம்

இது தவிர இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிப்பவராக இருந்த அப்துல்லாஹ் பின் முஆவியா அல் காளிரீ என்பாரின் பெயர் இடம் பெற்றுள்ளது. இவர் நபித்தோழர் என்று சில நூற்களில் எழுதப்பட்டிருந்தாலும் நபித்தோழர் என்பதை முடிவு செய்வதற்குரிய அளவுகோல் இவருக்குப் பொருந்தவில்லை.

நபித்தோழர் என்று முடிவு செய்வதாக இருந்தால் அவர் நபித்தோழர் என்று பரவலாக அறியப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த ஒரு ஹதீஸில் இவர் பெயர் இடம் பெறுவதைத் தவிர வேறு விபரம் ஏதும் இல்லை. இந்த ஒரு ஹதீஸும் பலவீனமாக உள்ளது.

அல்லது நான் நபியிடம் கேட்டேன் என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அவர் அறிவித்திருக்க வேண்டும். இந்த ஹதீஸில், நான் நபியிடம் கேட்டேன் என்பது போன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை. மாறாக நபிகள் நாயகம் சொன்னார்கள் என்ற வார்த்தை தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அளவுகோலின் படியும் இவர் ஸஹாபி என்பது நிரூபணமாகவில்லை.

அல்லது ஒரு நபித்தோழரோ அல்லது ஒரு தாபியீயோ இவரைப் பற்றி நபித்தோழர் என்று சான்றளித்திருக்க வேண்டும். அப்படி யாரும் சான்றளிக்கவில்லை.

تدريب الراوي في شرح تقريب النواوي

 ثم تعرف صحبته بالتواتر والاستضافة أو قول صحابي أو قوله إذا كان عدلا في كتابيهما وشرط الماوردي في الصحابي أن يتخصص بالرسول ويتخصص به الرسول صلى الله عليه و سلم ( ثم تعرف صحبته ) إما ( بالتواتر ) كأبي بكر وعمر وبقية العشرة في خلق منهم ( أو الاستفاضة ) والشهرة القاصرة عن التواتر كضمام بن ثعلبة وعكاشة ابن محصن ( أو قول صحابي ) عنه أنه صحابي كحممة بن أبي حممة الدوسي الذي مات بأصبهان مبطونا فشهد له أبو موسى الأشعري أنه سمع النبي صلى الله عليه و سلم حكم له بالشهادة ذكر ذلك أبو نعيم في تاريخ أصبهان وروينا قصته في مسند الطيالسي ومعجم الطبراني وزاد شيخ الإسلام ابن حجر بعد هذا أن يخبر آحاد التابعين بأنه صحابي بناء على قبول التزكية من واحد وهو الراجح

நவவீ அவர்கள் நபித்தோழர்களின் இலக்கணம் குறித்து தமது தட்ரீப் நூலில் நபித் தோழரைத் தீர்மானிப்பதற்குரிய இந்த அளவுகோல் கூறப்பட்டுள்ளது.

நபித் தோழரைத் தீர்மானிப்பதற்குரிய இந்த அளவுகோலின் படி இவர் நபித்தோழர் என்பது நிரூபணமாகவில்லை. எனினும் சில நூற்களில் இவரை நபித்தோழர் என்று கூறியிருப்பது ஏன் என்பது புரியவில்லை.

இப்படிப் பல குறைபாடுகள் கொண்ட ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு தான் தங்கள் வாதத்தை நிறுவுகின்றனர்.

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கே மீண்டும் மீண்டும் வருடாவருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று கூறுவோர் அதை நிரூபிக்க எந்தச் சான்றையும் முன் வைக்கவில்லை.

எல்லாம் ஒவ்வொன்றாக விழுந்து விட்ட நிலையில் சம்பந்தமில்லாத ஹதீஸ்களைக் கூறி சொந்த ஊகத்தை அதில் புகுத்தி சமாளிக்க முயல்கின்றனர்.

அபூபக்ர் ஆட்சியில் மீண்டும் மீண்டும் ஜகாத் வசூலிக்கப்பட்டதா?

அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் சிலர் ஜகாத் கொடுக்க மறுத்த போது, நபிகள் நாயகத்திடம் கொடுத்து வந்த ஒரு ஆட்டுக் குட்டியை என்னிடம் தர மறுப்பார்களானால் அவர்களுடன் நான் போரிடுவேன் என்று குறிப்பிட்டார்கள்.

(புகாரி 1400, 1457, 6924, 7285)

இதையும் தங்கள் கூற்றுக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர். இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்றாலும் இந்த ஹதீஸில் இவர்களின் வாதத்தை நிலைநாட்ட ஒரு சான்றும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் கொடுத்து வந்த என்ற சொற்றொடர் தொடர்ச்சியாகக் கொடுத்து வந்தது என்ற கருத்தைத் தான் தரும், ஒரு தடவை கொடுத்திருந்தால் கொடுத்து வந்த என்ற சொல்லை அபூபக்ர் (ரலி) பயன்படுத்தியிருப்பார்களா? என்பது இவர்களின் வாதம்.

இந்த வாதம் உச்சக்கட்ட அறியாமையின் வெளிப்பாடாக உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் தொடர்ச்சியாகக் கொடுத்து வந்தனர் என்பது உண்மை தான். ஒரு மனிதனுக்கு ஒரு தடவை ஜகாத் என்று கூறினால் தான் தொடர்ச்சி என்பது இல்லாமல் போகும்.

ஒரு பொருளுக்கு ஒரு தடவை என்று கூறினால் நமது வாதத்தின் படியும் தொடர்ச்சியாகக் கொடுத்து வர முடியும்.

இன்று ஜகாத்தாக ஓர் ஆட்டைக் கொடுத்தவுடன் மேலும் ஆடுகள் பெருகலாம். பெருகிய ஆட்டுக்காக மீண்டும் கொடுக்கலாம். மீண்டும் பெருகலாம். அதற்காகவும் மீண்டும் கொடுக்க வேண்டி வரும். ஒரு பொருளுக்கு ஒரு தடவை கொடுத்தாலும் பொருளாதாரம் பெருகுவதன் காரணமாக தொடர்ச்சியாக ஜகாத் கொடுக்கும் நிலை ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

மேலும் இவர்கள் வாதத்தின் படி பார்த்தாலும் நமக்குத் தான் மறுப்பு சொல்கிறார்களே தவிர தங்கள் வாதத்தை இந்த விளக்கத்தின் மூலம் அவர்களால் நிலை நாட்ட முடியாது. ஏனெனில் தொடர்ச்சியாக என்பது வருடந்தோறும் என்பதை மட்டும் குறிக்காது. மாதந்தோறும் என்று கூட பொருள் கொள்ளலாம். வாரந்தோறும் என்றும் பொருள் கொள்ளலாம். ஏன்? தினந்தோறும் என்றும் பொருள் கொள்ளலாம்.

எனவே வருடந்தோறும் என்பதை எதனடிப்படையில் இந்த ஹதீஸில் இவர்களாக நுழைத்தார்கள் என்பதற்கு விளக்கம் சொல்லக் கடமைப்பட்டுள்ளார்கள்.

கால்நடைகளுக்கான ஜகாத் மீண்டும் மீண்டும் வசூலிக்க ஆதாரமாகுமா?

தக்க ஆதாரம் இல்லாமல் ஒரு முடிவை எடுத்து விட்டு அதை நியாயப்படுத்துவதற்காக சம்பந்தமில்லாத ஹதீஸ்களையெல்லாம் தமக்குரிய ஆதாரமாகக் காட்டுகின்றார்கள்.

இந்த வகையில் அவர்களின் மற்றொரு ஆதாரம் கால்நடைகளுக்கான ஜகாத் பற்றிய ஹதீஸைத் தங்கள் இஷ்டத்திற்கு வளைப்பதாகும்.

ஒரு மனிதனிடம் நாற்பது முதல் 120 வரை ஆடுகள் இருந்தால் அதற்கான ஜகாத் ஒரு ஆடு ஆகும். 121 முதல் 200 வரை இரண்டு ஆடுகளாகும். 201 முதல் 300 வரை மூன்று ஆடுகளாகும். 300க்கு மேல் ஒவ்வொரு நூறு ஆடுகளுக்கும் ஒரு ஆடு வீதம் ஜகாத் ஆகும்.

இந்தக் கருத்தில் அமைந்த ஹதீஸ்களையும் தங்கள் கருத்தை நிரூபிக்கும் ஆதாரமாகப் பயன்படுத்துகின்றனர்.

அவர்கள் தமது வாதத்தை எவ்வாறு எடுத்து வைக்கிறார்கள் என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.

மேற்கண்ட சட்டத்திலிருந்து இரண்டு எதிர்க்கேள்விகளை நம்மிடம் கேட்கின்றனர்.

ஒருவனிடம் 40 ஆடுகள் இருந்து அதற்குரிய ஜகாத்தை அவன் கொடுத்து விட்டான். சில நாட்களில் இன்னோர் 40 ஆடுகள் அவனுக்குக் கிடைக்கின்றன. இந்த 40 ஆட்டுக்கு ஓர் ஆடு ஜகாத் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் கூறுவீர்கள் என்றால் 80க்கு 2 ஆட்டை கொடுத்தவர்களாவீர்கள். இது 120க்கு 1 என்ற ஹதீஸுக்கு முரணாக இருக்கிறது.

இரண்டாவதாக வந்த 40க்கு கொடுக்கத் தேவையில்லை என்று நீங்கள் கூறினால் முதல் 40 மட்டும் தான் சுத்தமாகி இருக்கின்றது. இரண்டாவதாக வந்த 40 எப்படி சுத்தமாகும்? என்று நம்மை நோக்கி கேள்வி எழுப்புகின்றனர். நாம் என்ன சொல்கிறோம் என்பது புரியாததால் எழுந்த கேள்வி இது.

நாற்பது ஆடு இருக்கும் போது ஒருவன் ஓர் ஆட்டைக் கொடுத்தான் என்றால் அது நாற்பது ஆட்டுக்குரிய ஜகாத் அல்ல. 40 முதல் 120 வரையுள்ள ஒரு ஸ்டேஜுக்கான ஜகாத் ஆகும். எனவே 120 வரை அவன் ஏதும் கொடுக்கத் தேவையில்லை.

மேலும் ஒவ்வொரு நூறுக்கும் ஓர் ஆடு என்று அந்த ஹதீஸ் கூறுகின்றது. அதையும் தமது இஷ்டத்துக்கு வளைத்து வியாக்கியானம் கொடுத்து தங்கள் வாதத்தை நிலைநாட்ட முயல்கின்றனர்.

ஒருவனிடம் முன்னூறு ஆடுகள் இருந்தன. அதற்கு அவன் மூன்று ஆடுகளைக் கொடுத்து விட்டான். அதன் பின்னர் நூறு ஆடு கிடைக்கின்றது. இப்போது என்ன செய்ய வேண்டும்?எனவும் கேட்கின்றனர். ஏற்கனவே 300க்குக் கொடுத்து விட்டதால் அதிகப்படியான நூறுக்கு ஓர் ஆட்டைக் கொடுத்தால் மேற்கண்ட ஹதீஸ் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப் படுகின்றது.

இதில் அவர்களுக்கு எந்த ஆதாரமும் இல்லை. இதிலிருந்து இவர்கள் தமது வாதத்தை, வருடந்தோறும் திரும்பத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்பதை எப்படி நிலைநாட்டுவார்கள்? என்பது தான் முக்கியமான கேள்வியாகும்.

வருடா வருடம் கொடுத்த பொருளுக்கு மீண்டும் கொடுக்க வேண்டும் எனக் கூறுவோர் அதற்கான ஆதாரத்தைக் காட்டுவதை விடுத்து நமக்கு மறுப்பு தான் சொல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜகாத் கொடுப்பது அவசியம் என்ற வாதத்துக்கு, திருக்குர்ஆனிலும், ஏற்கத்தக்க நபிமொழிகளிலும் எந்தச் சான்றும் இல்லை என்பதில் ஐயம் இல்லை. அல்லாஹ் மிக அறிந்தவன்.

வஹீ மட்டுமே மார்க்க ஆதாரம்

இவ்வளவு சான்றுகளை நாம் எடுத்துக் காட்டிய பின்னரும் இக்கருத்து முற்றிலும் சரியானது என்று மனசாட்சி அதை ஏற்றுக் கொண்ட பின்னரும் இதை ஏற்க சிலர் தயக்கம் காட்டுவதற்கு ஒரே ஒரு காரணம் தான் இருக்க வேண்டும்.

முன்னர் வாழ்ந்த நபித்தோழர்களும் நல்லறிஞர்களும் இக்கருத்தைச் சொல்லவில்லையே? அவர்களுக்குத் தெரியாதவை இவர்களுக்குத் தெரிந்து விட்டதா என்ற எண்ணம் தான் அந்தக் காரணம்.

அல்லாஹ்வுடைய வேதத்திலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல் இது தான் என்று தெரிந்து விட்டால் அதற்கு முரணாக முன்னோர்களையும் பெரியார்களையும் கொண்டு வந்து நிறுத்தலாமா? இந்தப் பதிலை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா? இதை சிந்தித்துப் பார்த்தால் இந்த தயக்கம் விலகி விடும்

இது பற்றி அல்லாஹ்வின் எச்சரிக்கை சிலவற்றை எடுத்துக் காட்டுகிறோம்.

வஹீ இல்லாமல் தேனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹராமாக்கியதையும், வஹீ இல்லாமல் மகரந்தச் சேர்க்கையை மறுத்ததையும் இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொல், செயலைக் கூட வஹீ என்றும் வஹீ இல்லாதது என்றும் பிரித்துக் காட்டிய பின்னரும், வஹீயைப் பெறாத நபித்தோழர்களையும் முன்னோர்கலையும் முன்னிறுத்துவது சரியாகுமா?

உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்டதையே பின்பற்றுங்கள்! அவனை விடுத்து (மற்றவர்களை) பொறுப்பாளர்களாக்கிப் பின்பற்றாதீர்கள்! குறைவாகவே படிப்பினை பெறுகிறீர்கள்!

திருக்குர்ஆன் 7:3

என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும் போது எனது நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 2:38

(முஹம்மதே!) உமது இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுவதை நீர் பின்பற்றுவீராக!

திருக்குர்ஆன் 6:106

அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது “செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்” என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

திருக்குர்ஆன் 24:51

“அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்!” என கூறுவீராக! அவர்கள் புறக்கணித்தால் இவர் (முஹம்மத்) மீது சுமத்தப்பட்டது இவரைச் சேரும். உங்கள் மீது சுமத்தப் பட்டது உங்களைச் சேரும். இவருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நேர்வழி பெறுவீர்கள். தெளிவாக எடுத்துச் சொல்வது தவிர இத்தூதரின் மீது வேறு (கடமை) இல்லை.

திருக்குர்ஆன் 24:54

“நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங் களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்” என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 3:31

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! (அவ்வாறு செய்தால்) கோழைகளாவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும். சகித்துக் கொள்ளுங்கள்! சகித்துக் கொள்வோருடன் அல்லாஹ் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 8:46

இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரு) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வ-யுறுத்துகிறான்.

திருக்குர்ஆன் 6:153

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண் பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.

திருக்குர்ஆன் 4:59

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழிகெட்டு விட்டார்.

திருக்குர்ஆன் 33:36

எனக்கே அஞ்சுங்கள்! இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.

திருக்குர்ஆன் 5:3

இந்த வசனங்கள் யாவும் இறைச் செய்தியை, குர்ஆனையும் நபிவழியையும் மட்டுமே பின்பற்ற வேண்டும் என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

இவ்வாறு நாம் கூறும் போது ஸஹாபாக்களை மதிக்காத, திட்டுகின்ற கூட்டம் என்று நமக்கு எதிராக மக்களைத் தூண்டி விடுகின்றார்கள்.

நபித்தோழர்கள் சிறப்பு மிக்கவர்கள், நம்மை விட ஈமானில் சிறந்தவர்கள் என்றெல்லாம் வரக்கூடிய விஷயங்களில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. இதற்கு ஏராளமான குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் உள்ளன.

இத்தகைய சிறப்புகள் நபித்தோழர்களுக்கு இருப்பதை நாம் எப்போதுமே மறுத்ததில்லை.

ஆனால் அதே சமயம் இத்தனை சிறப்புகள் உள்ளதால் நபித்தோழர்களின் கருத்துக்களை மார்க்கமாகக் கருதும் எந்தவொரு செயல்பாட்டையும் ஏற்றுக் கொள்ள முடியாது. குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டும் தான் மார்க்கத்தின் ஆதாரங்கள். நபித்தோழர்கள் சிறந்தவர்கள் தான் என்றாலும் அவர்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. அவர்களிடமும் தவறுகள் ஏற்படத் தான் செய்யும்.

இதை நாம் கற்பனையாகக் கூறவில்லை.

சில நபித் தோழர்களின் கருத்துக்களும் செயல்களும் குர்ஆன், ஹதீசுக்கு மாற்றமாக இருந்துள்ளன.

பல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அவர்களுக்குத் தெரியாமல் இருந்துள்ளன.

குர்ஆன், ஹதீஸில் இல்லாத சில விஷயங்களை அவர்களாக உருவாக்கினார்கள்.

என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

நபித்தோழர்களும் நமது நிலையும் என்ற நூலில் இது குறித்து விரிவாக விளக்கியுள்ளோம்.

எனவே தான் குர்ஆனையும் நபிவழியையும் தவிர வேறு எதையும் ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறோம்.

உள்ளதை உள்ளபடி ஏற்று நடக்கும் நன்மக்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்வானாக!