ஜனாஸாவுக்காக எழுந்து நிற்க வேண்டும்

முஸ்லிமின் உடலோ, முஸ்லிம் அல்லாதவரின் உடலோ ‎நம்மைக் கடந்து சென்றால் உடனே எழுந்து நிற்க வேண்டும். ‎அது நம்மைக் கடந்து சென்ற பின் தான் அமர வேண்டும்.‎

صحيح البخاري

‎1308 – ‎حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنْ عَامِرِ بْنِ رَبِيعَةَ رَضِيَ اللَّهُ ‏عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا رَأَى أَحَدُكُمْ جِنَازَةً، فَإِنْ لَمْ يَكُنْ مَاشِيًا مَعَهَا، فَلْيَقُمْ حَتَّى يَخْلُفَهَا أَوْ تُخَلِّفَهُ ‏أَوْ تُوضَعَ مِنْ قَبْلِ أَنْ تُخَلِّفَهُ‎»‎

உங்களில் ஒருவர் ஜனாஸாவைக் கண்டால் அதனுடன் அவர் ‎நடப்பவராக இல்லையென்றால் அது கடக்கும் வரை எழுந்து ‎நிற்க வேண்டும்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎கூறினார்கள்.‎

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)‎

நூல்: புகாரி 1308‎

صحيح البخاري

‎1311 – ‎حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ مِقْسَمٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ ‏عَنْهُمَا، قَالَ: مَرَّ بِنَا جَنَازَةٌ، فَقَامَ لَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقُمْنَا بِهِ، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا جِنَازَةُ يَهُودِيٍّ، قَالَ: ‏‏«إِذَا رَأَيْتُمُ الجِنَازَةَ، فَقُومُوا‎»‎

ஒரு ஜனாஸா எங்களைக் கடந்து சென்றது. இதற்காக நபிகள் ‎நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் ‎எழுந்தோம்.  அல்லாஹ்வின் தூதரே! இது யூதரின் ஜனாஸா ‎என்று நாங்கள் கூறினோம். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள்  ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள்  எனக் ‎கூறினார்கள்.‎

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)‎

நூல்: புகாரி 1311, 1313‎

எழுந்து நிற்கும் சட்டம் மாற்றப்படவில்லை

ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நிற்க வேண்டும் என்ற சட்டம் ‎மாற்றப்பட்டு விட்டது என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். பின் ‎வரும் ஹதீஸ்களை இதற்கு ஆதாரமாக எடுத்துக் ‎காட்டுகின்றனர்.‎

صحيح مسلم

‎2274 – ‎وَحَدَّثَنِى زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِىٍّ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ قَالَ سَمِعْتُ مَسْعُودَ ‏بْنَ الْحَكَمِ يُحَدِّثُ عَنْ عَلِىٍّ قَالَ رَأَيْنَا رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَامَ فَقُمْنَا وَقَعَدَ فَقَعَدْنَا. يَعْنِى فِى الْجَنَازَةِ‎.‎

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜனாஸாவில் எழுந்ததைக் ‎கண்டோம். நாங்களும் எழுந்தோம். உட்கார்ந்ததைக் கண்டோம். ‎நாங்களும் உட்கார்ந்தோம்

அறிவிப்பவர் அலீ (ரலி)‎

நூல்: முஸ்லிம் 1599‎

இந்த ஹதீஸை அவர்கள் தவறாகப் புரிந்து கொண்டதன் ‎அடிப்படையில் இவ்வாறு வாதிடுகின்றனர்.‎

எழுந்து நின்றார்கள்; பின்னர் எழுந்து நிற்கவில்லை  என்பது ‎போன்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தால் முதலில் ‎எழுந்துவிட்டு பின்னர் எழாமல் இருந்துள்ளனர் என்று பொருள் ‎கொள்ள முடியும்.‎

ஆனால் மேற்கண்ட ஹதீஸின் வாசகம் அவ்வாறு இல்லை. ‎எழுந்தார்கள்; நாங்களும் எழுந்தோம். உட்கார்ந்தார்கள்; நாங்களும் ‎உட்கார்ந்தோம் என்று தான் ஹதீஸின் வாசகம் உள்ளது. ‎அதாவது ஜனாஸாவைக் கண்டவுடன் எழுந்தார்கள். பின்னர் ‎உட்கார்ந்தார்கள் என்ற கருத்திலேயே மேற்கண்ட வாசகம் ‎அமைந்துள்ளது.‎

ஜனாஸாவைக் கண்டவுடன் நின்று கொண்டே இருக்க வேண்டும் ‎என்பதில்லை; எழுந்துவிட்டு உட்கார்ந்து விடலாம் என்ற ‎கருத்தைத் தான் இது தரும்.‎

எழுந்தார்கள்  என்பதை எழவில்லை  அல்லது எழுவதைத் ‎தடுத்தார்கள் என்பன போன்ற சொற்கள் தான் மாற்றும்.‎

எழுந்தார்கள்  என்பதை பின்னர் உட்கார்ந்தார்கள்  என்பது மாற்றாது.‎

இந்தக் கருத்தில் அமைந்த மற்றொரு ஹதீஸையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.‎

صحيح مسلم

‎2271 – ‎وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحِ بْنِ الْمُهَاجِرِ – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا اللَّيْثُ عَنْ يَحْيَى ‏بْنِ سَعِيدٍ عَنْ وَاقِدِ بْنِ عَمْرِو بْنِ سَعْدِ بْنِ مُعَاذٍ أَنَّهُ قَالَ رَآنِى نَافِعُ بْنُ جُبَيْرٍ وَنَحْنُ فِى جَنَازَةٍ قَائِمًا وَقَدْ جَلَسَ يَنْتَظِرُ أَنْ ‏تُوضَعَ الْجَنَازَةُ فَقَالَ لِى مَا يُقِيمُكَ فَقُلْتُ أَنْتَظِرُ أَنْ تُوضَعَ الْجَنَازَةُ لِمَا يُحَدِّثُ أَبُو سَعِيدٍ الْخُدْرِىُّ. فَقَالَ نَافِعٌ فَإِنَّ مَسْعُودَ بْنَ ‏الْحَكَمِ حَدَّثَنِى عَنْ عَلِىِّ بْنِ أَبِى طَالِبٍ أَنَّهُ قَالَ قَامَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- ثُمَّ قَعَدَ‎.‎

நாங்கள் ஒரு ஜனாஸாவில் நின்று கொண்டிருக்கும் போது ‎என்னை நாஃபிவு பின் ஸுபைர் என்பார் பார்த்தார். ஜனாஸா ‎வைக்கப்படுவதை எதிர்பார்த்தவராக அவர் உட்கார்ந்திருந்தார். ‎ஏன் எழுந்து நிற்கிறாய்?  என்று என்னிடம் கேட்டார்.  ஜனாஸா ‎வைக்கப்படுவதற்காகக் காத்திருக்கிறேன்; இவ்வாறு அபூ ஸயீத் ‎அல்குத்ரீ அவர்கள் அறிவித்துள்ளனர்  என்று நான் கூறினேன். ‎நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்துவிட்டு பின்னர் ‎உட்கார்ந்தார்கள்  என்று அலீ (ரலி) அவர்கள் அறிவித்ததாக ‎மஸ்வூத் பின் ஹகம் எனக்குக் கூறினார்  என அவர் ‎பதிலளித்தார்.‎

அறிவிப்பவர்: வாகித் பின் அம்ர்

நூல்: முஸ்லிம் 1597‎

இந்த ஹதீஸும் இவர்கள் கூறுகின்ற கருத்தில் இல்லை. நபிகள் ‎நாயகம் (ஸல்) அவர்கள் எழுந்தார்கள்; பின்னர் உட்கார்ந்தார்கள் ‎என்ற சொற்றொடர் ஒன்றன் பின் ஒன்றாக இரண்டையும் ‎செய்தார்கள் என்ற கருத்தைத் தருமே தவிர எழுந்து நிற்பதை ‎விட்டு விட்டார்கள் என்ற கருத்தைத் தராது.‎

ஜனாஸாவைப் பின் தொடர்ந்தவர் அது கீழே இறக்கப்படும் வரை ‎உட்காரக் கூடாது

ஜனாஸாவைப் பின் தொடர்ந்து சென்றவர் ஜனாஸாவை முந்திக் ‎கொண்டு அடக்கத்தலம் சென்றுவிடலாம். அப்படி முந்திச் ‎சென்றவர்கள் உடனே அமர்ந்து விடக் கூடாது. ஜனாஸா வரும் ‎வரை காத்திருக்க வேண்டும். ஜனாஸா கொண்டு வரப்பட்டு ‎தோள்களிலிருந்து கீழே இறக்கப்படும் வரை நின்றுவிட்டு கீழே ‎இறக்கப்பட்ட பின் தான் உட்கார வேண்டும்.‎

صحيح البخاري

‎1307 – ‎حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، حَدَّثَنَا الزُّهْرِيُّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَامِرِ بْنِ رَبِيعَةَ، عَنِ النَّبِيِّ ‏صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا رَأَيْتُمُ الجَنَازَةَ، فَقُومُوا حَتَّى تُخَلِّفَكُمْ» قَالَ سُفْيَانُ: قَالَ الزُّهْرِيُّ: أَخْبَرَنِي سَالِمٌ، عَنْ أَبِيهِ، ‏قَالَ: أَخْبَرَنَا عَامِرُ بْنُ رَبِيعَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَادَ الحُمَيْدِيُّ: «حَتَّى تُخَلِّفَكُمْ أَوْ تُوضَعَ‎»‎

அது உங்களைக் கடக்கும் வரை அல்லது கீழே வைக்கப்படும் ‎வரை நில்லுங்கள்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‎கூறியுள்ளனர்.‎

நூல்: புகாரி 1307, 1308, 1310‎

கடக்கும் வரை என்பது ஜனாஸாவுடன் தொடர்ந்து ‎செல்லாதவருக்காகச் சொல்லப்பட்டது. கீழே வைக்கப்படும் வரை ‎என்பது பின் தொடர்ந்து அடக்கத்தலம் வரை செல்பவருக்காகக் ‎கூறப்பட்டது.‎

صحيح البخاري

‎1309 – ‎حَدَّثَنَا أَحْمَدُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ سَعِيدٍ المَقْبُرِيِّ، عَنْ أَبِيهِ، قَالَ: كُنَّا فِي جَنَازَةٍ، فَأَخَذَ أَبُو ‏هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ بِيَدِ مَرْوَانَ فَجَلَسَا قَبْلَ أَنْ تُوضَعَ، فَجَاءَ أَبُو سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فَأَخَذَ بِيَدِ مَرْوَانَ، فَقَالَ: قُمْ فَوَاللَّهِ ‏لَقَدْ عَلِمَ هَذَا «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَانَا عَنْ ذَلِكَ» فَقَالَ أَبُو هُرَيْرَةَ صَدَقَ

நாங்கள் ஒரு ஜனாஸாவில் கலந்து கொண்டோம். அப்போது அபூ ‎ஹுரைரா (ரலி) அவர்கள் (அன்றைய ஆட்சியாளரான) ‎மர்வானின் கையைப் பிடித்து ஜனாஸா கீழே வைக்கப்படுவதற்கு ‎முன்னர் உட்கார வைத்து, தானும் உட்கார்ந்தார். அப்போது அபூ ‎ஸயீத் (ரலி) அவர்கள் வந்து மர்வானின் கையைப் பிடித்து ‎‎ எழுங்கள்  என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைத் ‎தடுத்தார்கள் என்பதை இவர் (அபூ ஹுரைரா) அல்லாஹ்வின் ‎மீது ஆணையாக நிச்சயமாக அறிந்து வைத்துள்ளார்  என்றும் ‎கூறினார். அப்போது அபூ ஹுரைரா (ரலி) அவர்கள்,  இவர் ‎சொல்வது உண்மை தான்  என்றார்கள்.‎

அறிவிப்பவர்: ஸயீத் அல் மக்புரி

நூல்: புகாரி 1309‎

صحيح البخاري

‎1310 – ‎حَدَّثَنَا مُسْلِمٌ يَعْنِي ابْنَ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ ‏عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا رَأَيْتُمُ الجَنَازَةَ، فَقُومُوا، فَمَنْ تَبِعَهَا فَلاَ يَقْعُدْ حَتَّى تُوضَعَ‎»‎

ஜனாஸாவை நீங்கள் கண்டால் எழுங்கள்! யார் அதைப் பின் ‎தொடர்ந்து செல்கிறாரோ அவர் ஜனாஸா (கீழே) வைக்கப்படும் ‎வரை உட்கார வேண்டாம்  என்று நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் கூறினார்கள்.‎

அறிவிப்பவர்: அபூ ஸலமா (ரலி)‎

நூல்: புகாரி 1310‎

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...