ஜாக்கின் சந்தர்ப்பவாதம்!

பீ.ஜைனுல் ஆபிதீன்

பீஜேயாகிய நான் எனது தவறான கொள்கையில் இருந்து விலகி ஜாக்கில் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று பொதுமேடையில் ஜாக் இயக்கத்தின் சார்பில் அழைப்பு கொடுத்தார்கள்.

ஜாக் கொள்கை சரியானது என்பதற்காக என்னை அழைப்பதாக இருந்தால் ஜாக் கொள்கை தான் சரியானது என்று என் முன்னால் நிரூபித்துக் காட்ட வேண்டும் என்பதால் கண்ணியமான முறையில் விவாதம் செய்ய ஜாக் இயக்கத்துக்கு நான் அழைப்பு கொடுத்தேன்.

இதை ஏற்க மறுத்து ஜாக் வெளியிட்ட அறிக்கை பொய்களை உள்ளடக்கியதாகவும், அறிவீனமாகவும் உள்ளதை சகோதார்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

தான் உருவாக்கிய அமைப்பு உட்பட சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களாலும், தனிமைப்படுத்தப்பட்டு சிறுமைப்பட்டு பெயரையும் அடையாளத்தையும் இழந்து நிற்கும் சகோதரர், பிஜெ வை பொதுத்தளத்திற்கு அழைத்து வந்து அவரின் வழிகெட்ட கொள்கைகளை பிரச்சாரம் செய்யும் வாய்ப்பை ஜம்யிய்யா நடத்தி வரும் “தவ்ஹீதால் ஒன்றிணைவோம்” என்ற நிகழ்ச்சி வழங்கும் என்று அவர் எண்ணினால் அது தவறு.

அவர் மார்க்கதை படிக்க விரும்பினால் ஜம்யிய்யாவின் மூத்த அறிஞர்களை தொடர்பு கொண்டு கல்வி கற்கலாமே தவிர, அல்லாஹ் கூறும் அழகிய விவாதத்திற்கான தகுதி மானக்கேடான குற்றத்தை சுமந்து நிற்கும் அவருக்கு இருப்பதாக நாம் கருதவில்லை.

ஜாக் தனது அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. மேடையில் விட்ட அழைப்புக்கும், இதற்கும் உள்ள வேறுபாட்டைக் கவனியுங்கள். இவர்களின் புரட்டு வாதம் தெரியும்.

விவாதம் செய்வதைத் தவிர்ப்பதற்கான காரணங்களில் பீஜே மக்களிடம் சிறுமைப்பட்டு நிற்கிறார் என்பதுவும் ஒன்று என்கிறது இந்த அறிக்கை. இது உண்மையா?

நான் விவாதம் செய்ய அழைப்பு விடுக்காமல் அவர்களின் அழைப்பை ஏற்று எனது கொள்கைகள் தவறு என்று அறிவிப்பதாக வைத்துக் கொள்வோம். அப்போது இவர்களுடன் தாராளமாக இணைந்து பணியாற்றலாம் என்று அழைப்பு விட்டார்களே அப்போது மக்களிடம் சிறுமைப்பட்டு நிற்பவனை அங்கீகரிக்கும் நிலை ஏற்படாதா? இவர்கள் சொல்வதை ஏற்றுக் கொண்டால் சிறுமை நீங்கிவிடுமா?

விவாதம் செய்யாமல் அப்படியே இவர்கள் கூறியதை ஏற்றுக் கொண்டால் நான் சிறுமைப்பட்டு இருந்தாலும் என்னை அங்கீகரிப்பார்களாம்! விவாதம் செய்ய அழைப்பு கொடுத்தால் மட்டும் சிறுமைப்பட்டு நிற்பது ஞாபகத்துக்கு வருமாம்!

இது புரட்டு வாதமல்லவா?

உண்மை என்ன?

இவர்களின் கொள்கை வழிகெட்ட கொள்கை. அதை ஒருக்காலும் இவர்களால் மெய் என்று ஆய்வாளர்கள் முன்னால் நிரூபிக்க முடியாது. இதைச் சொல்ல வெட்கப்பட்டு பீஜே சிறுமைப்பட்டு நிற்கிறார் என்று சொல்லி பின் வாங்கியுள்ளனர்.

இவர்களின் கொள்கை வழிகேடு என்பது விவாதம் செய்யாமலே நிரூபணம் ஆகிவிட்டது. அல்ஹம்து லில்லாஹ்

மானக்கேடான குற்றத்தைச் சுமந்து நிற்கும் பீஜேக்கு தகுதி இல்லை என்ற இவரின் வாதம் குறித்தும் நான் சில செய்திகளைச் சொல்ல வேண்டும்.

என் மீதான மானக்கேடான குற்றச்சாட்டு பொய்யானது என்று நான் திட்டவட்டமாக மறுத்துள்ளேன். பொதுவிசாரணையைச் சந்திக்கத் தயார் என்றும் அறிவித்துள்ளேன். இது தெரிந்து இருந்தும் குற்றச்சாட்டு உண்மை என்பது போல் சித்தரித்து விவாதம் செய்யாமல் ஓடி ஒளிய காரணம் கற்பிக்கின்றனர்.

மானக்கேடான செயல்கள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்ட ஜாக் முக்கிய நிர்வாகிகள் சிலர் நீண்ட காலம் பெரிய பொறுப்பில் இருந்தார்களே? மீண்டும் மீண்டும், மீண்டும் குற்றச்சாட்டு வந்து இறுதியாகத் தான் நீக்கப்பட்டார்கள். இந்த வரலாறு நூர் முஹம்மதுக்குத் தெரியாதா? அப்போது தகுதி நினைவுக்கு வராமல் போனது ஏன்?

சில மாவட்ட நிர்வாகிகள் மீது பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு பதவி உயர்வு கொடுத்த ஜாக் இதைப் பற்றிப் பேசலாமா?

பொருளாதார மோசடி, பிறரை ஏமாற்றுதல் போன்றவற்றைச் செய்த பல ஜாக் நிர்வாகிகள் தலைமையால் காப்பாற்றப்பட்ட பழைய வரலாறுகளை நூர்முஹம்மது அறிவது நல்லது.

இன்னும் சொல்லப் போனால் சிலை திறப்பு உள்ளிட்ட ஷிர்கான காரியம் செய்தவர்களையும் அங்கீகரித்த நீங்கள் இப்படி சொல்வது வியப்பாக உள்ளது. நாங்கள் மறந்த அந்த வரலாறுகளை நினைவூட்டும் நிலைக்குத் தள்ள வேண்டாம்.

குற்றம் நிரூபிக்கப்பட்ட பலர் உங்கள் ஜமாஅத்தில் மாநில பொறுப்பிலும் பிரச்சாரப் பொறுப்பிலும் இருக்கலாம். குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர் விவாதம் செய்யக் கூட தகுதியற்றவராகி விட்டாரா?

இது போல் கீழ்த்தரமான பதில்கள் அளிக்காமல் விவாதம் செய்ய தயாரில்லை என்று ஒற்றை வரியில் முடித்துக் கொள்ளுங்கள்!

அடுத்து விவாதம் செய்யத் தயார் இல்லை என்பதற்கு ஜாக் சொல்லும் காரணங்களைப் பாருங்கள்!

வழிகேடுகளுக்கெதிராக நம்முடைய வீரியமான பிரச்சாரம் நடைபெறும் போதெல்லாம் நம்மை நோக்கி விவாத அழைப்புகள் வந்த வண்ணமிருந்தன.  விவாத அழைப்புகளைப் பொறுத்த வரையில் அதில் நாம் தெளிவான ஒரு நிலைபாட்டில் இருந்து வருகிறோம்.

இன்றைக்கு தமிழகத்தில் நடைபெறும் விவாதங்கள், அல்லாஹ் கூறும் அழகிய விவாதங்களாக இல்லை, விவாத மேடைகள் தனி மனித தாக்குதலுக்கான களங்களாக மாறிவிட்டன, ஒவ்வொரு விவாதங்கள் முடியும் போதும், நிராகரிக்கப்படும் ஸஹீஹான ஹதீஸ்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுதான் மிச்சம்,

விவாதங்களின் போது தங்களுக்கு சறுக்கல் ஏற்பட்டால் அதற்காகவே ஏற்பாடு செய்திருக்கும் கதாபாத்திரங்களின் மூலம் நாகரீகமின்றி தனி மனித தாக்குதலை நடத்தி விவாதக் களங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயலும் சூழ்ச்சிகளையும் காண முடிகிறது,

அல்லாஹ் குறிப்பிடும் அழகிய விவாதங்கள், மக்கள் நேரான பாதையை அடைய உதவி செய்ய வேண்டும். ஆனால் தற்போது நடப்பது என்ன? இணைவைப்பிற்கெதிராக விவாதம் செய்கிறேன் என்று புறப்பட்டு இணைவைப்பாளர்களுக்கு புதிய முகவரியை தேடிக்கொடுத்ததைத் தவிர விவாதங்கள் சாதித்தவை என்ன ?

இன்று வரை ஏதாவது ஒரு விவாதம் வெற்றி தோல்வியில் முடிவடைந்திருக்கிறதா? மாறாக, “நாங்கள் தான் வென்றோம்” என்று இரு தரப்பினரும் விவாதத்தின் முடிவில் தம்பட்டம் அடித்துக்கொள்கின்றனர் எனவேதான், இது போன்ற பயனற்ற விவாதங்களில் பங்கேற்பதில்லை என்று நாம் முடிவெடுத்திருக்கிறோம். நீண்டகாலமாக ஜம்யிய்யாவின் நிலைபாடும் இதுதான்.

இந்த அறிக்கை வெளியிட்டவர் ஜாக் பல மர்கஸ்கள் அமைந்து வசதிகள் பெருகிய பின்னர் ஜாக்கில் நுழைந்தவர் என்பதால் வரலாறு தெரியாமல் பொய்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார். நாற்பது ஆண்டுகளாக ஜாக்கின் நிலைபாடு என்ன்ன என்பது கூட இவருக்குத் தெரியவில்லை.

1980 களில் தவ்ஹீத் பிரச்சாரம் செய்த போது இப்படி ஒரு கொள்கை இருக்கிறது என்பது கூட மக்களுக்குத் தெரியவில்லை. மிகச் சில ஊர்களில் மட்டும் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்யும் அளவுக்கு பலவீனமான நிலையில் இருந்தோம்.

இந்த நேரத்தில் தான் குமரி மாவட்டம் கோட்டாரில் கேரளாவின் மிகப்பெரிய சுன்னத் ஜமாஅத் ஆலிமான ஏ.பி. அபூபக்கர் முஸ்லியார் உள்ளிட்டவர்களுடன் பொது விவாதம் செய்தோம். அந்த முனாளராவுக்குப் பின்னர் தான் கோட்டாரில் மட்டும் இருந்த தவ்ஹீத் குமரி மாவட்டத்தின் எல்லா ஊர்களையும் சென்றடைந்தது. அந்த விவாதம் வீடியோவாக பதிவு செய்யப்படவில்லை. ஆடியோவாக பதிவு செய்யப்பட்டது. அந்த ஆடியோக்கள் தான் தமிழகம் முழுவதும் பரப்பப்பட்டு தவ்ஹீத் கொள்கை படர காரணமாக அமைந்தது.

தாமதமாக ஜாக்குக்கு வந்த நூர் முஹம்மத் அந்த ஆடியோவை கமாலுத்தீன் மதனியிடம் வாங்கிக் கேட்டுப் பார்க்கவும்.

அதன் பின்னர் கடையநல்லூரிலும் விவாதம் நடத்தப்பட்டது. அதனாலும் கொள்கை வளர்ச்சி ஏற்பட்டது.

காதியானிகள் கோவையில் வீரியமாக மக்களைக் குழப்பிய போது, ஜாக்கில் பயணித்தவர்களே காதியானிகளாக மாறிய போது ஜாக் சார்பில் ஒன்பது நாட்கள் விவாதம் நடத்தியது. அதன் பின்னர் காதியானிகள் பக்கம் செல்வது இதன் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. அப்போது நூர் முஹம்மத் எங்கே இருந்தார் என்று தெரியவில்லை.

ஜெபமணி என்பவர் இஸ்லாத்தைக் கீழ்த்தரமாக விமர்சனம் செய்த போது அவருடன் மதுரையில் ஜாக் சார்பில் நான்கு நாட்கள் விவாதம் நடத்தப்பட்டது. இதன் பின்னர் தான் கிறித்தவர்களை நேருக்கு நேர் சந்திக்கும் பிரச்சாரகர்கள் உருவானார்கள். பல கிறித்தவர்கள் இஸ்லாத்தை ஏற்றனர். இந்த வரலாறு நூர் முஹம்மதுக்குத் தெரியாது.

இலங்கையில் ஏகத்துவம் வளர்ச்சி அடைய அங்கே நடந்த விவாதங்களில் ஜாக் சார்பில் பங்கேற்றது காரணமாக அமைந்தது.

ஜாக்கில் இருந்து பிரிந்த பின்னர் தவ்ஹீத் பிரச்சாரக்குழுவுடன் ஜாக் மதுரையில் ஒரு விவாதம், நெல்லை ஏர்வாடியில் ஒரு விவாதம் நடத்தியது.

இது போன்ற விவாதங்களால் மக்களுக்கு ஜாக் இயக்கம்அறிமுகமாகி கூட்டம் சேர்ந்து அதைக் காட்டி அரபு நாடுகளில் உதவி பெற்று பள்ளிவாசல்கள் கட்டப்பட்டன. அதன் பின்னர் அடி உதைகள் வாங்கி பிரச்சாரம் செய்வதை விடுத்து மர்கஸ்களிலும் எப்போதாவது நடத்தும் மாநாடுகளிலும் மட்டும் தாவா செய்யும் ஒயிட் காலர் தவ்ஹீத் பிரச்சாரமாக மாறியது.

இதன் பின்னர் தான் விவாதம் செய்து இருக்கின்ற மக்களை இழக்க வேண்டாம் என்பதற்காக விவாதம் செய்யக் கூடாது என்ற நிலைபாட்டை ஜாக் எடுத்தார்கள்.

இந்த உண்மைகளை மறைத்து விவாதத்தால் பயனில்லை என்று சொல்வது தங்களின் வழிகெட்ட கொள்கையில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது.

சூனியம், குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள், நபித்தோழர்களைப் பின்பற்றுதல் உள்ளிட்ட ஜாக்கின் வழிகெட்ட கொள்கைகளை அதன் உறுப்பினர்கள் ஆய்வு செய்யுமாறும் ஜாக்கின் வாதங்களுக்கு எதிராக மற்றவர்கள் அவிக்கும் வாதங்களையும் அறிந்து உண்மையை உணர்ந்து கொள்ள அழைப்பு விடுக்கிறேன்.

அன்புடன்

பீ.ஜைனுல் ஆபிதீன்

ஜாக் இயக்கத்துக்கு நான் விவாத அழைப்பு கொடுத்து அவர்கள் மறுத்த பின்னர் சில தனி நபர்கள் என்னோடு விவாதம் செய்யத் தயாரா என்று முக நூல் மூலம் அழைப்பு விடுக்கிறார்கள். பொதுவாக விவாதம் செய்ய நான் ஆரம்பம் முதல் ஒரு வழிமுறையைக் கடைப்பிடித்து வருகிறேன்.

ஒவ்வொரு நபரும் விவாத அழைப்பு கொடுக்கும் போதெல்லாம் அதை ஏற்பதில்லை. அப்படியானால் தினமும் ஒருவருடன் நான் விவாதம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

அவனுடன் விவாதம் செய்து விட்டீர்கள்; என்னுடன் விவாதிக்கத் தயாரா? என்று ஆளாளுக்குக் கிளம்புகின்றனர்.

எனது கொள்கைக்கும், கருத்துக்கும் எதிராக மாற்றுக் கருத்தை ஒருவர் முன் வைத்து அது மக்களிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றால் அவருடன் நான் விவாதம் செய்வதில்லை. அதற்குத் தேவையில்லை. யாராலும் கண்டு கொள்ளப்படாத, எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாத நபர்களுடன் விவாதம் செய்வதில்லை.

ஒருவரோ, சிலரோ எனக்கு எதிராக ஒரு கருத்தை முன் வைக்கிறார்கள். அது நம் கொள்கைச் சகோதரர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விவாதம் நடத்தாவிட்டால் நம் சகோதர்ர்களே கூட கொள்கையில் சந்தேகம் கொள்வார்கள் என்ற அளவுக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளது என்றால் அத்தகையவர்களிடம் நான் விவாதம் செய்வேன். இதற்குத் தேவை இருக்கிறது.

அது போல் இஸ்லாத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யும் கிறித்தவக் குழுக்கள் இஸ்லாத்துக்கு எதிரான அவதூறைப் பரப்பி பிரச்சாரம் செய்தால் அவர்களுக்குப் பதில் அளிக்கும் அவசியம் உள்ளது என்று வெகுஜன் அபிப்பிராயம் இருந்தால் அவ்ர்களை நான் விவாதக் களத்தில் சந்திப்பேன்

ஜாக் இயக்கம் என்னை அழைத்தது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் கருதியதால் தான் அவர்களுக்கு விவாத அழைப்பு கொடுத்தேன்.

இந்த வித்தியாசத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.

“பி.ஜைனுல் ஆபிதீன்”

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...