ஜாக்கின் சந்தர்ப்பவாதம்!

பீ.ஜைனுல் ஆபிதீன்

பீஜேயாகிய நான் எனது தவறான கொள்கையில் இருந்து விலகி ஜாக்கில் சேர்ந்து கொள்ள வேண்டும் என்று பொதுமேடையில் ஜாக் இயக்கத்தின் சார்பில் அழைப்பு கொடுத்தார்கள்.

ஜாக் கொள்கை சரியானது என்பதற்காக என்னை அழைப்பதாக இருந்தால் ஜாக் கொள்கை தான் சரியானது என்று என் முன்னால் நிரூபித்துக் காட்ட வேண்டும் என்பதால் கண்ணியமான முறையில் விவாதம் செய்ய ஜாக் இயக்கத்துக்கு நான் அழைப்பு கொடுத்தேன்.

இதை ஏற்க மறுத்து ஜாக் வெளியிட்ட அறிக்கை பொய்களை உள்ளடக்கியதாகவும், அறிவீனமாகவும் உள்ளதை சகோதார்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

தான் உருவாக்கிய அமைப்பு உட்பட சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களாலும், தனிமைப்படுத்தப்பட்டு சிறுமைப்பட்டு பெயரையும் அடையாளத்தையும் இழந்து நிற்கும் சகோதரர், பிஜெ வை பொதுத்தளத்திற்கு அழைத்து வந்து அவரின் வழிகெட்ட கொள்கைகளை பிரச்சாரம் செய்யும் வாய்ப்பை ஜம்யிய்யா நடத்தி வரும் “தவ்ஹீதால் ஒன்றிணைவோம்” என்ற நிகழ்ச்சி வழங்கும் என்று அவர் எண்ணினால் அது தவறு.

அவர் மார்க்கதை படிக்க விரும்பினால் ஜம்யிய்யாவின் மூத்த அறிஞர்களை தொடர்பு கொண்டு கல்வி கற்கலாமே தவிர, அல்லாஹ் கூறும் அழகிய விவாதத்திற்கான தகுதி மானக்கேடான குற்றத்தை சுமந்து நிற்கும் அவருக்கு இருப்பதாக நாம் கருதவில்லை.

ஜாக் தனது அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. மேடையில் விட்ட அழைப்புக்கும் இதற்கும் உள்ள வேறுபாட்டைக் கவனியுங்கள். இவர்களின் புரட்டு வாதம் தெரியும்.

விவாதம் செய்வதைத் தவிர்ப்பதற்கான காரணங்களில் பீஜே மக்களிடம் சிறுமைப்பட்டு நிற்கிறார் என்பதுவும் ஒன்று என்கிறது இந்த அறிக்கை. இது உண்மையா?

நான் விவாதம் செய்ய அழைப்பு விடுக்காமல் அவர்களின் அழைப்பை ஏற்று எனது கொள்கைகள் தவறு என்று அறிவிப்பதாக வைத்துக் கொள்வோம். அப்போது இவர்களுடன் தாராளமாக இணைந்து பணியாற்றலாம் என்று அழைப்பு விட்டார்களே அப்போது மக்களிடம் சிறுமைப்பட்டு நிற்பவனை அங்கீகரிக்கும் நிலை ஏற்படாதா? இவர்கள் சொல்வதை ஏற்றுக் கொண்டால் சிறுமை நீங்கிவிடுமா?

விவாதம் செய்யாமல் அப்படியே இவர்கள் கூறியதை ஏற்றுக் கொண்டால் நான் சிறுமைப்பட்டு இருந்தாலும் என்னை அங்கீகரிப்பார்களாம்! விவாதம் செய்ய அழைப்பு கொடுத்தால் மட்டும் சிறுமைப்பட்டு நிற்பது ஞாபகத்துக்கு வருமாம்!

இது புரட்டு வாதமல்லவா?

உண்மை என்ன?

இவர்களின் கொள்கை வழிகெட்ட கொள்கை. அதை ஒருக்காலும் இவர்களால் மெய் என்று ஆய்வாளர்கள் முன்னால் நிரூபிக்க முடியாது. இதைச் சொல்ல வெட்கப்பட்டு பீஜே சிறுமைப்பட்டு நிற்கிறார் என்று சொல்லி பின் வாங்கியுள்ளனர்.

இவர்களின் கொள்கை வழிகேடு என்பது விவாதம் செய்யாமலே நிரூபணம் ஆகிவிட்டது. அல்ஹம்து லில்லாஹ்

மானக்கேடான குற்றத்தைச் சுமந்து நிற்கும் பீஜேக்கு தகுதி இல்லை என்ற இவரின் வாதம் குறித்தும் நான் சில செய்திகளைச் சொல்ல வேண்டும்.

என் மீதான மானக்கேடான குற்றச்சாட்டு பொய்யானது என்று நான் திட்டவட்டமாக மறுத்துள்ளேன். பொதுவிசாரணையைச் சந்திக்கத் தயார் என்றும் அறிவித்துள்ளேன். இது தெரிந்து இருந்தும் குற்றச்சாட்டு உண்மை என்பது போல் சித்தரித்து விவாதம் செய்யாமல் ஓடி ஒளிய காரணம் கற்பிக்கின்றனர்.

மானக்கேடான செயல்கள் சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்பட்ட ஜாக் முக்கிய நிர்வாகிகள் சிலர் நீண்ட காலம் பெரிய பொறுப்பில் இருந்தார்களே? மீண்டும் மீண்டும், மீண்டும் குற்றச்சாட்டு வந்து இறுதியாகத் தான் நீக்கப்பட்டார்கள். இந்த வரலாறு நூர் முஹம்மதுக்குத் தெரியாதா? அப்போது தகுதி நினைவுக்கு வராமல் போனது ஏன்?

சில மாவட்ட நிர்வாகிகள் மீது பாலியல் குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அவர்களுக்கு பதவி உயர்வு கொடுத்த ஜாக் இதைப் பற்றிப் பேசலாமா?

பொருளாதார மோசடி, பிறரை ஏமாற்றுதல் போன்றவற்றைச் செய்த பல ஜாக் நிர்வாகிகள் தலைமையால் காப்பாற்றப்பட்ட பழைய வரலாறுகளை நூர்முஹம்மது அறிவது நல்லது.

இன்னும் சொல்லப் போனால் சிலை திறப்பு உள்ளிட்ட ஷிர்கான காரியம் செய்தவர்களையும் அங்கீகரித்த நீங்கள் இப்படி சொல்வது வியப்பாக உள்ளது. நாங்கள் மறந்த அந்த வரலாறுகளை நினைவூட்டும் நிலைக்குத் தள்ள வேண்டாம்.

குற்றம் நிரூபிக்கப்பட்ட பலர் உங்கள் ஜமாஅத்தில் மாநிலப் பொறுப்பிலும் பிரச்சாரப் பொறுப்பிலும் இருக்கலாம். குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர் விவாதம் செய்யக் கூட தகுதியற்றவராகி விட்டாரா?

இது போல் கீழ்த்தரமான பதில்கள் அளிக்காமல் விவாதம் செய்ய தயாரில்லை என்று ஒற்றை வரியில் முடித்துக் கொள்ளுங்கள்!

அடுத்து விவாதம் செய்யத் தயார் இல்லை என்பதற்கு ஜாக் சொல்லும் காரணங்களைப் பாருங்கள்!

வழிகேடுகளுக்கெதிராக நம்முடைய வீரியமான பிரச்சாரம் நடைபெறும் போதெல்லாம் நம்மை நோக்கி விவாத அழைப்புகள் வந்த வண்ணமிருந்தன.  விவாத அழைப்புகளைப் பொறுத்த வரையில் அதில் நாம் தெளிவான ஒரு நிலைபாட்டில் இருந்து வருகிறோம்.

இன்றைக்கு தமிழகத்தில் நடைபெறும் விவாதங்கள், அல்லாஹ் கூறும் அழகிய விவாதங்களாக இல்லை, விவாத மேடைகள் தனி மனித தாக்குதலுக்கான களங்களாக மாறிவிட்டன, ஒவ்வொரு விவாதங்கள் முடியும் போதும், நிராகரிக்கப்படும் ஸஹீஹான ஹதீஸ்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுதான் மிச்சம்,

விவாதங்களின் போது தங்களுக்கு சறுக்கல் ஏற்பட்டால் அதற்காகவே ஏற்பாடு செய்திருக்கும் கதாபாத்திரங்களின் மூலம் நாகரீகமின்றி தனி மனித தாக்குதலை நடத்தி விவாதக் களங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வர முயலும் சூழ்ச்சிகளையும் காண முடிகிறது,

அல்லாஹ் குறிப்பிடும் அழகிய விவாதங்கள், மக்கள் நேரான பாதையை அடைய உதவி செய்ய வேண்டும். ஆனால் தற்போது நடப்பது என்ன? இணைவைப்பிற்கெதிராக விவாதம் செய்கிறேன் என்று புறப்பட்டு இணைவைப்பாளர்களுக்கு புதிய முகவரியை தேடிக்கொடுத்ததைத் தவிர விவாதங்கள் சாதித்தவை என்ன ?

இன்று வரை ஏதாவது ஒரு விவாதம் வெற்றி தோல்வியில் முடிவடைந்திருக்கிறதா?  மாறாக,  “நாங்கள் தான் வென்றோம்” என்று இரு தரப்பினரும் விவாதத்தின் முடிவில் தம்பட்டம் அடித்துக்கொள்கின்றனர்

எனவேதான், இது போன்ற பயனற்ற விவாதங்களில் பங்கேற்பதில்லை என்று நாம் முடிவெடுத்திருக்கிறோம். நீண்டகாலமாக ஜம்யிய்யாவின் நிலைபாடும் இதுதான்.

இந்த அறிக்கை வெளியிட்டவர் ஜாக் பல மர்கஸ்கள் அமைந்து வசதிகள் பெருகிய பின்னர் ஜாக்கில் நுழைந்தவர் என்பதால் வரலாறு தெரியாமல் பொய்களைக் கட்டவிழ்த்து விட்டுள்ளார். நாற்பது ஆண்டுகளாக ஜாக்கின் நிலைபாடு என்ன்ன என்பது கூட இவருக்குத் தெரியவில்லை.

1980 களில் தவ்ஹீத் பிரச்சாரம் செய்த போது இப்படி ஒரு கொள்கை இருக்கிறது என்பது கூட மக்களுக்குத் தெரியவில்லை. மிகச் சில ஊர்களில் மட்டும் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்யும் அளவுக்கு பலவீனமான நிலையில் இருந்தோம்.

இந்த நேரத்தில் தான் குமரி மாவட்டம் கோட்டாரில் கேரளாவின் மிகப்பெரிய சுன்னத் ஜமாஅத் ஆலிமான AP.அபூபக்கர் முஸ்லியார் உள்ளிட்டவர்களுடன் பொது விவாதம் செய்தோம். அந்த முனாளராவுக்குப் பின்னர் தான் கோட்டாரில் மட்டும் இருந்த தவ்ஹீத் குமரி மாவட்டத்தின் எல்லா ஊர்களையும் சென்றடைந்தது. அந்த விவாதம் வீடியோவாக பதிவு செய்யப்படவில்லை. ஆடியோவாக பதிவு செய்யப்பட்டது. அந்த ஆடியோக்கள் தான் தமிழகம் முழுவதும் பரப்பப்பட்டு தவ்ஹீத் கொள்கை படர காரணமாக அமைந்தது.

தாமதமாக ஜாக்குக்கு வந்த நூர் முஹம்மத் அந்த ஆடியோவை கமாலுத்தீன் மதனியிடம் வாங்கிக் கேட்டுப் பார்க்கவும்.

அதன் பின்னர் கடையநல்லூரிலும் விவாதம் நடத்தப்பட்டது. அதனாலும் கொள்கை வளர்ச்சி ஏற்பட்டது.

காதியானிகள் கோவையில் வீரியமாக மக்களைக் குழப்பிய போது, ஜாக்கில் பயணித்தவர்களே காதியானிகளாக மாறிய போது ஜாக் சார்பில் ஒன்பது நாட்கள் காதியாணிகளுடன் விவாதம் நடத்தியது. அதன் பின்னர் காதியானிகள் பக்கம் ஜாக் இயக்கத்தவர் செல்வது இதன் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது.

அப்போது நூர் முஹம்மத் எங்கே இருந்தார் என்று தெரியவில்லை.

ஜெபமணி என்பவர் இஸ்லாத்தைக் கீழ்த்தரமாக விமர்சனம் செய்த போது அவருடன் மதுரையில் ஜாக் சார்பில் நான்கு நாட்கள் விவாதம் நடத்தப்பட்டது. இதன் பின்னர் தான் கிறித்தவர்களை நேருக்கு நேர் சந்திக்கும் பிரச்சாரகர்கள் உருவானார்கள். பல கிறித்தவர்கள் இஸ்லாத்தை ஏற்றனர்.

இந்த வரலாறு நூர் முஹம்மதுக்குத் தெரியாது.

இலங்கையில் ஏகத்துவம் வளர்ச்சி அடைய அங்கே நடந்த விவாதங்களில் ஜாக் சார்பில் பங்கேற்றது காரணமாக அமைந்தது.

ஜாக்கில் இருந்து பிரிந்த பின்னர் தவ்ஹீத் பிரச்சாரக்குழுவுடன் ஜாக் மதுரையில் ஒரு விவாதம், நெல்லை ஏர்வாடியில் ஒரு விவாதம் நடத்தியது.

இது போன்ற விவாதங்களால் மக்களுக்கு ஜாக் இயக்கம் அறிமுகமாகி கூட்டம் சேர்ந்து அதைக் காட்டி அரபு நாடுகளில் உதவி பெற்று பள்ளிவாசல்கள் கட்டப்பட்டன. அதன் பின்னர் அடி உதைகள் வாங்கி பிரச்சாரம் செய்வதை விடுத்து மர்கஸ்களிலும் எப்போதாவது நடத்தும் மாநாடுகளிலும் மட்டும் தாவா செய்யும் ஒயிட் காலர் தவ்ஹீத் பிரச்சாரமாக மாறியது.

இதன் பின்னர் தான் விவாதம் செய்து இருக்கின்ற மக்களை இழக்க வேண்டாம் என்பதற்காக விவாதம் செய்யக் கூடாது என்ற நிலைபாட்டை ஜாக் எடுத்தார்கள்.

இந்த உண்மைகளை மறைத்து விவாதத்தால் பயனில்லை என்று சொல்வது தங்களின் வழிகெட்ட கொள்கையில் அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது.

சூனியம், குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள், நபித்தோழர்களைப் பின்பற்றுதல் உள்ளிட்ட ஜாக்கின் வழிகெட்ட கொள்கைகளை அதன் உறுப்பினர்கள் ஆய்வு செய்யுமாறும் ஜாக்கின் வாதங்களுக்கு எதிராக மற்றவர்கள் அவிக்கும் வாதங்களையும் அறிந்து உண்மையை உணர்ந்து கொள்ள அழைப்பு விடுக்கிறேன்.

அன்புடன்

பீ.ஜைனுல் ஆபிதீன்

ஜாக் இயக்கத்துக்கு நான் விவாத அழைப்பு கொடுத்து அவர்கள் மறுத்த பின்னர் சில தனி நபர்கள் என்னோடு விவாதம் செய்யத் தயாரா என்று முக நூல் மூலம் அழைப்பு விடுக்கிறார்கள். பொதுவாக விவாதம் செய்ய நான் ஆரம்பம் முதல் ஒரு வழிமுறையைக் கடைப்பிடித்து வருகிறேன்.

ஒவ்வொரு நபரும் விவாத அழைப்பு கொடுக்கும் போதெல்லாம் அதை ஏற்பதில்லை. அப்படியானால் தினமும் ஒருவருடன் நான் விவாதம் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

அவனுடன் விவாதம் செய்து விட்டீர்கள்; என்னுடன் விவாதிக்கத் தயாரா? என்று ஆளாளுக்குக் கிளம்புகின்றனர்.

எனது கொள்கைக்கும், கருத்துக்கும் எதிராக மாற்றுக் கருத்தை ஒருவர் முன் வைத்து அது மக்களிடம் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றால் அவருடன் நான் விவாதம் செய்வதில்லை. அதற்குத் தேவையில்லை. யாராலும் கண்டு கொள்ளப்படாத, எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாத நபர்களுடன் விவாதம் செய்வதில்லை.

ஒருவரோ, சிலரோ எனக்கு எதிராக ஒரு கருத்தை முன் வைக்கிறார்கள். அது நம் கொள்கைச் சகோதரர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. விவாதம் நடத்தாவிட்டால் நம் சகோதரர்களே கூட கொள்கையில் சந்தேகம் கொள்வார்கள் என்ற அளவுக்குத் தாக்கம் ஏற்பட்டுள்ளது என்றால் அத்தகையவர்களிடம் நான் விவாதம் செய்வேன். இதற்குத் தேவை இருக்கிறது.

அது போல் இஸ்லாத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யும் கிறித்தவக் குழுக்கள் இஸ்லாத்துக்கு எதிரான அவதூறைப் பரப்பி பிரச்சாரம் செய்தால் அவர்களுக்குப் பதில் அளிக்கும் அவசியம் உள்ளது என்று வெகுஜன அபிப்பிராயம் இருந்தால் அவ்ர்களை நான் விவாதக் களத்தில் சந்திப்பேன்

ஜாக் இயக்கம் என்னை அழைத்தது ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நான் கருதியதால் தான் அவர்களுக்கு விவாத அழைப்பு கொடுத்தேன்.

இந்த வித்தியாசத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.

“பி.ஜைனுல் ஆபிதீன்”

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...