ஜும்மா உரையை மிம்பரில் தான் நிகழ்த்த வேண்டுமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பர் எனும் மேடைமீது உரை நிகழ்த்தியதாக ஏராளமான சான்றுகள் உள்ளன. இதை நாம் எப்படிப் புரிந்து கொள்வது?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல்கள் மூன்று வகைகளில் அமைந்துள்ளன.

முற்றிலும் வணக்கமாக அமைந்த காரியங்கள் முதல் வகையாகும். தொழுகை, நோன்பு, தஸ்பீஹ் போன்ற காரியங்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

இது போன்ற காரியங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு வழிகாட்டினார்களோ அவ்வாறு நாமும் நடைமுறைப்படுத்துவது அவசியமாகும்.

வணக்கத்துடன் தொடர்பில்லாத முற்றிலும் உலகத் தேவை என்ற அடிப்படையில் செய்தவை இரண்டாம் வகை. கோதுமை, பேரீச்சை உணவாக உட்கொண்டது, ஒட்டகத்தில் பயணித்தது போன்றவைகளை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

இவற்றை நாம் செய்ய வேண்டும் என்பது அவசியமில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபி என்ற அடிப்படையில் இவற்றைப் பயன்படுத்தவில்லை. நபியாக ஆவதற்கு முன்பும் பயன்படுத்தினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரிகளும் இவ்வாறே பயன்படுத்தினார்கள். இது அனுமதிக்கப்பட்ட்து என்ற பொருள் தான் தரும்.

வணக்கத்துடன் இணைந்துள்ள உலகக் காரியங்கள் மூன்றாவது வகையாகும்.

உதாரணமாக ஜும்மாவில் உரை நிகழ்த்துதல் என்ற மார்க்க விஷயத்தை மிம்பர் எனும் உலக வசதியுடன் இணைத்து செய்தல்.

இந்த மூன்றாம் வகைக் காரியங்களை நாம் ஆய்வு செய்து பார்க்க வேண்டும். இதை வணக்கத்தின் ஒரு பகுதி என்பதற்காகவோ, வணக்கத்தின் நிபந்தனை என்பதற்காகவோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்களா? அல்லது தமது சவுகரியத்துக்காக செய்தார்களா என்று ஆய்வு செய்ய வேண்டும்.

வணக்கத்தின் நிபந்தனை என்பதற்காக இதைச் ச்செய்தால் அது சுன்னத் ஆகிவிடும்.

தமது வசதிக்காக செய்த ஏற்பாடு என்றால் அது சுன்னத் என்பதில் சேராது.

இந்த அடிப்படையைக் கவனத்தில் கொண்டு மிம்பர் குறித்து நாம் ஆய்வு செய்வோம்.

3584 حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ أَيْمَنَ ، قَالَ : سَمِعْتُ أَبِي ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُومُ يَوْمَ الْجُمُعَةِ إِلَى شَجَرَةٍ – أَوْ نَخْلَةٍ – فَقَالَتِ امْرَأَةٌ مِنَ الْأَنْصَارِ – أَوْ رَجُلٌ – : يَا رَسُولَ اللَّهِ، أَلَا نَجْعَلُ لَكَ مِنْبَرًا ؟ قَالَ : ” إِنْ شِئْتُمْ “. فَجَعَلُوا لَهُ مِنْبَرًا، فَلَمَّا كَانَ يَوْمَ الْجُمُعَةِ دُفِعَ إِلَى الْمِنْبَرِ، فَصَاحَتِ النَّخْلَةُ صِيَاحَ الصَّبِيِّ، ثُمَّ نَزَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَضَمَّهُ إِلَيْهِ، تَئِنُّ أَنِينَ الصَّبِيِّ الَّذِي يُسَكَّنُ. قَالَ : كَانَتْ تَبْكِي عَلَى مَا كَانَتْ تَسْمَعُ مِنَ الذِّكْرِ عِنْدَهَا.

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளின் போது (பள்ளிவாசலில் தூணாக இருந்த) ஒரு மரம்… அல்லது பேரீச்ச மரத்தின்…. (அடிப்பாகத்தின்) மீது சாய்ந்த படி (உரையாற்றிய வண்ணம்) நின்றிருந்தார்கள். அப்போது ஓர் அன்சாரிப் பெண்மணி… அல்லது ஓர் அன்சாரித் தோழர்.., ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் உங்களுக்கு ஓர் உரை மேடை (மிம்பர்) செய்து தரலாமா?’ என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘நீங்கள் விரும்பினால் (செய்து கொடுங்கள்)’ என்று பதிலளித்தார்கள். அவ்வாறே அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு (மிம்பர்) உரை மேடை ஒன்றைச் செய்து கொடுத்தார்கள். ஜும்ஆ நாள் வந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (உரை நிகழ்த்திட) உரை மேடைக்குச் சென்றார்கள். உடனே, அந்தப் பேரீச்ச மரக்கட்டை குழந்தையைப் போல் தேம்பிய (படி அமைதியாகிவிட்ட)து.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘தன் மீது (இருந்தபடி உரை நிகழ்த்தும் போது) அது கேட்டுக் கொண்டிருந்த நல்லுபதேசத்தை நினைத்து (‘இப்போது நம் மீது அப்படி உபதேச உரைகள் நிகழ்த்தப்படுவதில்லையே’ என்று ஏங்கி) இது அழுது கொண்டிருந்தது’ என்று அறிவிப்பாளர் கூறுகிறார்.

நூல் புகாரி : 3584

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மார்க்கத்தின் ஒரு அம்சம் என்பதற்காக மிம்பரைப் பயன்படுத்தவில்லை. தமது வசதிக்காகத் தான் பயன்படுத்தினார்கள் என்பது இந்த ஹதீஸில் இருந்து தெரிகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரமப்படுவதைப் பார்த்த அன்சாரிப் பெண் நான் மேடை செய்து தரட்டுமா என்று கேட்டதால் சரி என்று சொன்னார்கள். அப்போது கூட நீ விரும்பினால் செய்து தா என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். மிம்பர் கட்டாயம் என்று இருந்தால் விரும்பினால் செய்து தா என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியிருக்க மாட்டார்கள். ஆம் உடனே செய்து தான் கட்டாயம் செய்து தா என்று கூறியிருப்பார்கள்.

917 حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ، قَالَ : حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدٍ الْقَارِيُّ الْقُرَشِيُّ الْإِسْكَنْدَرَانِيُّ ، قَالَ : حَدَّثَنَا أَبُو حَازِمِ بْنُ دِينَارٍ أَنَّ رِجَالًا أَتَوْا سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ وَقَدِ امْتَرَوْا فِي الْمِنْبَرِ مِمَّ عُودُهُ ؟ فَسَأَلُوهُ عَنْ ذَلِكَ، فَقَالَ : وَاللَّهِ إِنِّي لَأَعْرِفُ مِمَّا هُوَ، وَلَقَدْ رَأَيْتُهُ أَوَّلَ يَوْمٍ وُضِعَ وَأَوَّلَ يَوْمٍ جَلَسَ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَرْسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى فُلَانَةَ – امْرَأَةٍ مِنَ الْأَنْصَارِ قَدْ سَمَّاهَا سَهْلٌ – : ” مُرِي غُلَامَكِ النَّجَّارَ أَنْ يَعْمَلَ لِي أَعْوَادًا أَجْلِسُ عَلَيْهِنَّ إِذَا كَلَّمْتُ النَّاسَ “. فَأَمَرَتْهُ فَعَمِلَهَا مِنْ طَرْفَاءِ الْغَابَةِ ، ثُمَّ جَاءَ بِهَا فَأَرْسَلَتْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرَ بِهَا فَوُضِعَتْ هَاهُنَا، ثُمَّ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَيْهَا وَكَبَّرَ وَهُوَ عَلَيْهَا، ثُمَّ رَكَعَ وَهُوَ عَلَيْهَا، ثُمَّ نَزَلَ الْقَهْقَرَى فَسَجَدَ فِي أَصْلِ الْمِنْبَرِ، ثُمَّ عَادَ فَلَمَّا فَرَغَ أَقْبَلَ عَلَى النَّاسِ فَقَالَ : ” أَيُّهَا النَّاسُ، إِنَّمَا صَنَعْتُ هَذَا لِتَأْتَمُّوا وَلِتَعَلَّمُوا صَلَاتِي “.

அபூ ஹாஸிம் இப்னு தீனார் அறிவித்தார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மிம்பர் எந்த மரத்தினாலானது என்று சர்ச்சை செய்த நிலையில் சில மனிதர்கள் ஸஹ்ல் இப்னு ஸஃது (ரலி) அவர்களிடம் வந்து இது பற்றிக் கேட்டனர். அதற்கு ஸஹ்ல் இப்னு ஸஃது (ரலி) ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக அது எந்த மரத்தினாலானது என்பதை அறிவேன். அது தயாரிக்கப்பட்ட முதல் நாளிலேயே அதை நான் பார்த்துள்ளேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதன் முதலில் அதில் அமர்ந்த நாளிலும் அதை நான் பார்த்திருக்கிறேன்’ என்று கூறிவிட்டுப் பின்வரும் நிகழ்ச்சியைக் கூறலானார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பெண்மணியிடம் — அப்பெண்மணியின் பெயரையும் ஸஹ்ல் குறிப்பிட்டார்கள். ஆளனுப்பி ‘நான் மக்களிடம் பேசும்போது அமர்ந்து கொள்வதற்காகத் ‘தச்சு வேலை தெரிந்த உன் வேலைக்காரரிடம் எனக்கொரு மேடை செய்து தரச் சொல்!’ எனச் சொல்லியனுப்பினார்கள். அப்பெண்மணி அவ்வாறே தம் ஊழியரிடம் கூறினார். மதீனாவின் சமீபத்தில் காபா எனும் பகுதியிலுள்ள கருவேல மரத்திலிருந்து அதைச் செய்து அவர் அப்பெண்ணிடம் கொண்டு வந்தார். உடனே அப்பெண் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டதற்கேற்ப இவ்விடத்தில் அது வைக்கப்பட்டது.

அதன் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதன் மீதே தொழுததை – அதன் மீதே தக்பீர் கூறியதையும் அதன் மீதே ருகூவு செய்ததையும் அதன் பிறகு மிம்பரின் அடிப்பாகத்திற்குப் பின் பக்கமாக இறங்கி அதில் ஸஜ்தா செய்துவிட்டு மீண்டும் மேலேறியதையும் – நான் பார்த்துள்ளேன். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி ‘மக்களே நீங்கள் என்னைப் பின்பற்ற வேண்டுமென்பதற்காகவும் என் தொழுகையை நீங்கள் அறிந்து கொள்வற்காகவுமே நான் இவ்வாறு செய்தேன்’ என்று குறிப்பிட்டார்கள்.

புகாரி : 917.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த நோக்கத்துக்காக மிம்பர் செய்யச் சொன்னார்கள் என்று இதில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ஜும்மா உரை நிகழ்த்துவது என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பர் செய்யுமாறு கோரவில்லை. மாறாக மக்களிடம் பேசும் போது அமர்வதற்காக என்று தான் காரணம் கூறுகிறார்கள்.

ஜும்மா மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியில் பேசுவதற்கு அனைவரும் பார்க்கும் வகையில் உயரமாக ஒரு மேடை வேண்டும் என்ற காரணத்துக்காகத் தான் மிம்பர் செய்யச் சொன்னார்கள். இது தொழுகையின் ஷரத்து என்பதற்காக அல்ல என்பதை இதிலிருந்து அறியலாம்.

அது மட்டுமில்லாமல் மிம்பர் அமைப்பு தற்போது உள்ள அமைப்பில் இருக்கவில்லை. அதன் மீது நின்று தொழுதார்கள்; ருகூவு செய்தார்கள் என்பதையும் இதில் இருந்து அறிகிறோம். பொதுக்கூட்டம் போடும் போது அமைக்கப்படும் சிறிய ஸ்டேஜ் போல் தான் அந்த மிம்பர் இருந்துள்ளது என்பதை அறியலாம். தற்போது வழக்கத்தில் உள்ள மிம்பரில் ருகூவு செய்ய முடியாது.

எனவே உயரமான இடத்தில் இருந்து உரையாற்றினால் மக்கள் அதைப் பார்க்க முடியும்; உயரமான இடத்தில் இருந்து தொழுது காட்டினால் அதைப் பார்த்து மக்கள் பின்பற்ற முடியும் என்ற நோக்கத்துக்காகவே மிம்பரைப் ப்யன்படுத்தியுள்ளார்கள் என்பது இவ்விரு ஹதீஸ்களில் இருந்தும்  தெரிகிறது.

எனவே நாமும் ஜும்மா உரை நிகழ்த்தும் போது மேடை போன்ற அமைப்பு இல்லாமல் இருந்தால் சிறிய ஒரு பலகை அல்லது நாற்காலி போன்றவை மீது நின்று உரையாற்றலாம்.

அதிகக் கூட்டம் இல்லாமல் இருந்தால் தரையில் நின்றால் கூட மக்களால் பார்க்க முடியும் என்றால் தரையில் நின்று உரை நிகழ்த்தலாம்.

பயன்படுத்தும் மிம்பரில் ஒரு மனிதரால் நிற்க மட்டும் தான் இடமிருக்குமே தவிர நின்று தொழுவதற்கு இடமிருக்காது. ஆக நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மிம்பர் என்பது ஒரு பெரிய மேடையாக இருந்தது. அதில் நின்று தொழுகை நடத்தும் அளவிற்கு அது பெரியதாக இருந்தது என்பதை அறியலாம்.  உயரமான இடத்தில நின்றால் மக்களுக்கு எளிதாக இருக்கும் என்கிற கூடுதல் வசதிக்காக தான் மிம்பரை நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்த துவங்கினார்கள், அதற்கு முன் மிம்பர் இல்லாமல் தான் உரை நிகழ்த்தி வந்தார்கள் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. இந்த சம்பவத்திற்கு பிறகு நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் தான் ஜும்மா உரை நிகழ்த்தி வந்தார்கள் என்பதால் இயன்ற வரை நாமும் அதையே கடைப்பிடிப்போம் ஆனால் மிம்பர் வசதி இல்லை என்றால் அது தவறு என்று கருதி விட தேவையில்லை. மிம்பர் இல்லாத இடங்களில் வெறும் தரையில் நின்று கூட ஜும்மா  உரை நிகழ்த்தலாம் !!

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...