தொழுகையில் கைகளை உயர்த்துதல் ஓர் ஆய்வு

கடமையான தொழுகைகளிலும், கடமையல்லாத தொழுகைகளிலும் நான்கு சந்தர்ப்பங்களில் கைகளை உயர்த்த வேண்டும்.

  • தொழுகையைத் துவக்கும் போது அல்லாஹு அகபர் கூறி கைகளை உயர்த்துதல்
  • ருகூவுக்குச் செல்லும் போது அல்லாஹு அக்பர் கூறி கைகளை உயர்த்துதல்
  • ருகூவிலிருந்து எழும் போது அல்லாஹு அக்பர் கூறி கைகளை உயர்த்துதல்
  • இரண்டாம் ரக்அத் முடித்து அத்தஹிய்யாத் இருப்பில் இருந்து எழும் போது அல்லாஹு அக்பர் கூறி கைகளை உயர்த்துதல்

இதற்கான ஆதாரங்கள் வருமாறு:

صحيح البخاري

735 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ: ” أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَرْفَعُ يَدَيْهِ حَذْوَ مَنْكِبَيْهِ إِذَا افْتَتَحَ الصَّلاَةَ، وَإِذَا كَبَّرَ لِلرُّكُوعِ، وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ، رَفَعَهُمَا كَذَلِكَ أَيْضًا، وَقَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، رَبَّنَا وَلَكَ الحَمْدُ، وَكَانَ لاَ يَفْعَلُ ذَلِكَ فِي السُّجُودِ “

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போது தமது தோள்களுக்கு நேராகத் கைகளை உயர்த்துவார்கள். ருகூஉவிற்காக தக்பீர் கூறும் போதும், ருகூவிலிருந்து தலையை உயர்த்தும் போதும் அவ்வாறே (தோள்களுக்கு நேராக) இரு கைகளையும் மீண்டும் உயர்த்துவார்கள். மேலும் (ருகூவிலிருந்து நிமிரும் போது) சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா வல(க்)கல் ஹம்து’ என்று கூறுவார்கள். சஜ்தாவில் (குனியும் போதும் சஜ்தாவிலிருந்து நிமிரும் போதும்) இவ்வாறு செய்ய மாட்டார்கள் (கைகளை உயர்த்த மாட்டார்கள்).

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி 735

صحيح البخاري

739 – حَدَّثَنَا عَيَّاشٌ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ، كَانَ ” إِذَا دَخَلَ فِي الصَّلاَةِ كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ، وَإِذَا رَكَعَ رَفَعَ يَدَيْهِ، وَإِذَا قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ، رَفَعَ يَدَيْهِ، وَإِذَا قَامَ مِنَ الرَّكْعَتَيْنِ رَفَعَ يَدَيْهِ “، وَرَفَعَ ذَلِكَ ابْنُ عُمَرَ إِلَى نَبِيِّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَوَاهُ حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنْ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَرَوَاهُ ابْنُ طَهْمَانَ، عَنْ أَيُّوبَ، وَمُوسَى بْنِ عُقْبَةَ مُخْتَصَرًا

இப்னு உமர் (ரலி) அவர்கள் தொழ ஆரம்பிக்கும் போது தக்பீர் கூறித் தம் கைகளை (தோள்களுக்கு நேராக) உயர்த்துவார்கள். ருகூஉவுக்குச் செல்லும் போதும் கைகளை உயர்த்துவார்கள். சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ எனக் கூறும் போதும் தம் கைகளை உயர்த்துவார்கள். இரண்டாவது ரக்அத்திலிருந்து நிலைக்கு உயரும் போதும் கைகளை உயர்த்துவார்கள். இவ்வாறே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்ததாகவும் குறிப்பிட்டார்கள்.

நூல் : புகாரி 739

அறிவிப்பவர் : நாஃபிவு

மேற்கண்ட நான்கு சந்தர்ப்பங்களில் கைகளை உயர்த்த வேண்டும் என்பதற்கு இன்னும் ஏராளமான ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.

தொழுகையைத் துவக்கும் போது மட்டும் தான் கைகளை உயர்த்த வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் ஒரு ஹதீஸைத் தவிர மற்ற அனைத்தும் பலவீனமானவையாக உள்ளன.

அறிவிப்பாளர் வரிசை சரியாக அமைந்த அந்த ஒரு ஹதீஸ் இது தான்:

سنن الترمذي

257 – حَدَّثَنَا هَنَّادٌ قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَسْوَدِ، عَنْ عَلْقَمَةَ، قَالَ: قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ: «أَلَا أُصَلِّي بِكُمْ صَلَاةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَصَلَّى، فَلَمْ يَرْفَعْ يَدَيْهِ إِلَّا فِي أَوَّلِ مَرَّةٍ».

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், “நபிகள் நாயகம் (ஸல்) தொழுதது போல் தொழுது காட்டட்டுமா?’ என்று கூறி விட்டுத் தொழுது காட்டினார்கள். முதல் தடவை தவிர அவர்கள் கைகளை உயர்த்தவில்லை.

நூல்: திர்மிதி 238

سنن النسائي

1058 – : أَخْبَرَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ الْمَرْوَزِيُّ، قَالَ: حَدَّثَنَا وَكِيعٌ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْأَسْوَدِ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ أَنَّهُ قَالَ: «أَلَا أُصَلِّي بِكُمْ صَلَاةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَصَلَّى فَلَمْ يَرْفَعْ يَدَيْهِ إِلَّا مَرَّةً وَاحِدَةً»

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், “நபிகள் நாயகம் (ஸல்) தொழுதது போல் தொழுது காட்டட்டுமா?’ என்று கூறி விட்டுத் தொழுது காட்டினார்கள். ஒரு தடவை தவிர அவர்கள் கைகளை உயர்த்தவில்லை.

நஸாயீ

மேற்கண்ட ஹதீஸைப் பொருத்தவரை அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் ஆவர். நான்கு சந்தர்ப்பங்களில் கைகளை உயர்த்த வேண்டும் என்றும், ஒருதட்வை மட்டுமே கைகளை உயர்த்த வேண்டும் என்றும் முரண்பட்ட இரு செய்திகள் வரும் போது இதை எப்படி அணுகுவது?

இரண்டு கருத்துடைய ஹதீஸ்களும் சமமானவையாக இருந்தால் இரண்டையும் செயல்படுத்தலாம் என்ற முடிவை நாம் எடுக்க வேண்டும்.

தரத்தில் ஒரு ஹதீஸ் மேலானதாக அதிக நம்பிக்கை உள்ளதாக இருந்தால் அதிக நம்பிக்கை உள்ள ஹதீஸையே நாம் செயல்படுத்த வேண்டும்.

ஹதீஸ் கலையில் மட்டுமின்றி உலக நடைமுறையிலும் நாம் இப்படித் தான் முடிவு செய்கிறோம்.

இந்த இரு கருத்துடைய ஹதீஸ்களை நாம் எடை போட்டால் இரண்டின் தரத்திலும் அதிகமான வேறுபாடுகள் உள்ளன.

நான்கு சந்தர்ப்பங்களில் கைகளை உயர்த்த வேண்டும் என்ற கருத்தில் அமைந்த ஹதீஸ்களை பதினான்கு சஹாபாக்கள் அறிவித்துள்ளனர்.

  • உமர் (ரலி)
  • இப்னு உமர் (ரலி)
  • அலீ (ரலி)
  • வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
  • மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி)
  • அனஸ் (ரலி)
  • அபூ ஹுரைரா (ரலி)
  • அபூ அஸீத் (ரலி)
  • ஸஹ்ல் பின் ஸஅது (ரலி)
  • முஹம்மத் பின் மஸ்லமா (ரலி)
  • அபூ மூஸா (ரலி)
  • ஜாபிர் (ரலி)
  • உமைர் அல்லைஸி (ரலி)
  • இப்னு அப்பாஸ் (ரலி)

ஆகிய 14 நபித்தோழர்கள் அறிவித்துள்ளனர்.

ஒரு தடவை மட்டுமே கைகளை உயர்த்த வேண்டும் என்ற கருத்தில் இப்னு மஸ்வூது (ரலி) மட்டுமே அறிவித்துள்ளார்.

14 நபித்தோழர்கள் அறிவிப்பதற்கு மாற்றமாக ஒரு நபித்தோழர் அறிவிப்பதால் அதன் நம்பகத் தன்மை குறைகிறது.

அதிகமானவர்கள் அறிவிப்பதை மறுக்கும் வகையில் ஒரே ஒருவரின் அறிவிப்பு இருந்தால் அந்தக் காரணத்திற்காக ஒரே ஒருவரின் அந்த ஹதீஸை ஏற்காமல் அதிகமானவர்களின் அறிவிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் இப்னு மஸ்ஊத் (ரலி) ஹதீஸை ஏற்க முடியாது

பலரிடம் தவ்றுகள் ஏற்படுவதை விட ஒருவரிடம் தவறு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

மேலும் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் ஆரம்ப கால நபித்தோழர் என்றாலும் அவர்கள் செய்திகளை அறிவிப்பதில் கவனக் குறைவாக இருந்துள்ளதை நாம் பார்க்க முடிகிறது.

صحيح مسلم

28 – (534) حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُوسَى، عَنْ إِسْرَائِيلَ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، وَالْأَسْوَدِ، أَنَّهُمَا دَخَلَا عَلَى عَبْدِ اللهِ، فَقَالَ: ” أَصَلَّى مَنْ خَلْفَكُمْ؟ قَالَ: نَعَمْ، فَقَامَ بَيْنَهُمَا، وَجَعَلَ أَحَدَهُمَا عَنْ يَمِينِهِ وَالْآخَرَ عَنْ شِمَالِهِ، ثُمَّ رَكَعْنَا، فَوَضَعْنَا أَيْدِيَنَا عَلَى رُكَبِنَا فَضَرَبَ أَيْدِيَنَا، ثُمَّ طَبَّقَ بَيْنَ يَدَيْهِ، ثُمَّ جَعَلَهُمَا بَيْنَ فَخِذَيْهِ، فَلَمَّا صَلَّى، قَالَ: هَكَذَا فَعَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ “

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களிடம் அல்கமா, அஸ்வத் ஆகிய இருவர் சென்றார்கள். உங்களுக்குப் பின் உள்ள மற்றவர்கள் தொழுது விட்டார்களா என்று இப்னு மஸ்வூத் (ரலி) கேட்டார்கள். இருவரும் ஆம் என்றனர். இப்னு மஸ்வூத் (ரலி) எழுந்து ஒருவரை வலது புறமாகவும், இன்னொருவரை இடது புறமாகவும் நிற்க வைத்து இருவருக்கும் நடுவில் நின்றார்கள். பின்னர் நாங்கள் ருகூவு செய்தோம். அப்போது எங்கள் கைகளை முட்டுக்கால்களில் வைத்தோம். அவர்கள் எங்கள் கைகளைத் தட்டி விட்டு தமது இரு கைகளையும் இரு தொடைகளுக்கு மத்தியில் வைத்தார்கள். தொழுது முடித்த உடன் இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழக் கண்டேன் என்றார்கள்.

நூல் : முஸ்லிம்

மிக ஆரம்ப காலத்தில் ருக்கூவின் போது தொடைகளுக்கு இடையில் கைகளை வைக்கும் வழக்கம் இருந்து பின்னர் மாற்றப்பட்டு விட்டது. ஆனால் இந்தச் செய்தி இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களுக்குத் தெரியவில்லை. அல்லது அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை என்பது இதிலிருந்து தெரிகிறது.

மேலும் மூவர் இருந்தால் இருவர் பின்னால் நிற்க வேண்டும் என்ற நபி வழிக்கு மாற்றமாக வலப்பக்கம் ஒருவரையும் இடப்பக்கம் ஒருவரையும் நிற்க வைத்து தொழுதுள்ளார்கள்.

இதில் இருந்து தொழுகை விஷயத்தில் இப்னு மஸ்வூது (ரலி) போதுமான அப்டேட் இல்லாமல் இருந்துள்ளார் என்பதை அறியலாம்.

صحيح البخاري

790 – حَدَّثَنَا أَبُو الوَلِيدِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي يَعْفُورٍ، قَالَ: سَمِعْتُ مُصْعَبَ بْنَ سَعْدٍ، يَقُولُ: صَلَّيْتُ إِلَى جَنْبِ أَبِي، فَطَبَّقْتُ بَيْنَ كَفَّيَّ، ثُمَّ وَضَعْتُهُمَا بَيْنَ فَخِذَيَّ، فَنَهَانِي أَبِي، وَقَالَ: كُنَّا نَفْعَلُهُ، «فَنُهِينَا عَنْهُ وَأُمِرْنَا أَنْ نَضَعَ أَيْدِينَا عَلَى الرُّكَبِ»

நான் என் தந்தை (சஅத் பின் அபீவக்காஸ் -ரலி) அருகில் நின்று தொழுதேன். அப்போது (ருகூவில்) என் இரு கைகளையும் கோத்து என் இரு தொடைகளின் இடுக்கில் வைத்துக் கொண்டேன். அவ்வாறு செய்ய வேண்டாமென என்னை அவர்கள் தடுத்துவிட்டு, நாங்கள் இவ்வாறு செய்து கொண்டிருந்தோம். பின்னர் அவ்வாறு செய்யக் கூடாதென நாங்கள் தடுக்கப்பட்டு, எங்கள் கைகளை முழங்கால்கள் மீது வைக்குமாறு உத்தரவிடப்பட்டோம் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஸ்அப் பின் ஸஅது

நூல் : புகாரி 790

ஆரம்ப கால நடைமுறை மாற்றப்பட்டு ஆண்டுகள் பல கடந்த பின்பும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகும் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் பழைய நடைமுறையிலேயே தொழுதுள்ளார்.

இது அவர்களின் கவனமின்மைக்கு ஆதாரமாக உள்ளது.

மற்றொரு செய்தியைப் பாருங்கள்!

صحيح البخاري

346 – حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، قَالَ: حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ: سَمِعْتُ شَقِيقَ بْنَ سَلَمَةَ، قَالَ: كُنْتُ عِنْدَ عَبْدِ اللَّهِ، وَأَبِي مُوسَى، فَقَالَ لَهُ أَبُو مُوسَى: أَرَأَيْتَ يَا أَبَا عَبْدِ الرَّحْمَنِ إِذَا أَجْنَبَ فَلَمْ يَجِدْ مَاءً، كَيْفَ يَصْنَعُ؟ فَقَالَ عَبْدُ اللَّهِ: لاَ يُصَلِّي حَتَّى يَجِدَ المَاءَ، فَقَالَ أَبُو مُوسَى: فَكَيْفَ تَصْنَعُ بِقَوْلِ عَمَّارٍ حِينَ قَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَانَ يَكْفِيكَ» قَالَ: أَلَمْ تَرَ عُمَرَ لَمْ يَقْنَعْ بِذَلِكَ، فَقَالَ أَبُو مُوسَى: فَدَعْنَا مِنْ قَوْلِ عَمَّارٍ كَيْفَ تَصْنَعُ بِهَذِهِ الآيَةِ؟ فَمَا دَرَى عَبْدُ اللَّهِ مَا يَقُولُ، فَقَالَ: إِنَّا لَوْ رَخَّصْنَا لَهُمْ فِي هَذَا لَأَوْشَكَ إِذَا بَرَدَ عَلَى أَحَدِهِمُ المَاءُ أَنْ يَدَعَهُ وَيَتَيَمَّمَ فَقُلْتُ لِشَقِيقٍ فَإِنَّمَا كَرِهَ عَبْدُ اللَّهِ لِهَذَا؟ قَالَ: «نَعَمْ»

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி), அபூமூஸா (ரலி) ஆகியோர் அருகில் நான் இருந்தேன். அப்போது அபூமூஸா (ரலி) அவர்கள் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களிடம், அபூ அப்திர்ரஹ்மானே! பெருந்துடக்கு ஏற்பட்ட ஒருவருக்கு (குளியலுக்குத்) தண்ணீர் கிடைக்காவிட்டால் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள், தண்ணீர் கிடைக்கும் வரை அவர் தொழ வேண்டியதில்லை என்று பதிலளித்தார்கள். (இதைக் கேட்ட) உடன் அபூமூஸா (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களிடம் (தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்திருந்தால்) உமக்குப் போதுமானதாக அமைந்திருக்கும்’ என்று சொன்னதாக அம்மார் (ரலி) அவர்கள் கூறிய செய்தியை நீங்கள் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள், அம்மார் (ரலி) அவர்கள் அச்செய்தியை தம்மிடம் கூறிய போது உமர் (ரலி) அவர்கள் அதைக் கேட்டு மனநிறைவு அடையவில்லை என்பது உங்களுக்குத் தெரியாதா? என்று (திருப்பிக்) கேட்டார்கள். அதற்கு அபூமூஸா (ரலி) அவர்கள், அம்மாரின் சொல்லை விடுங்கள். (தண்ணீர் கிடைக்காவிடில் தயம்மும் செய்து கொள்ளுங்கள் எனும் இந்த (5:6) இறை வசனத்தை என்ன செய்வீர்கள்? என்று கேட்டார்கள். ஆயினும் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களுக்கு (தாம் வழங்கும் தீர்ப்புக்கேற்ப அந்த வசனத்திற்கு விளக்கம்) சொல்லத் தெரியாமலேயே, (பெருந்துடக்குடையவர் தண்ணீர் கிடைக்காத போது தயம்மும் செய்யலாம்’ எனும்) இவ்விஷயத்தில் மக்களுக்கு சலுகையளித்தால் யாருக்காவது தண்ணீர் குளிராகத் தெரிந்தால் கூட உளூ செய்வதை விட்டுவிட்டு தயம்மும் செய்யப் போய்விடுவார்கள் என்று சொன்னார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அஃமஷ் கூறுகின்றார்கள்:

அப்படியானால் (மக்கள் குளிருக்காக தயம்மும் செய்து விடுவார்கள் எனும்) இந்தக் காரணத்தை முன்னிட்டுத்தான் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் (அந்தச் சலுகையை வழங்க) வெறுத்தார்கள் என்கிறீர்களா? என்று ஷகீக் பின் சலமா அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு அவர்கள், ஆம் (அதற்காகத் தான் வெறுத்தார்கள்) என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : ஷகீக் பின் சலமா

நூல் : புகாரி 346

தயம்மும் செய்வதற்கு தெளிவான ஆதாரத்தை – குர்ஆன் வசனத்தை எடுத்துக் காட்டிய பின்பும் இப்னு மஸ்வூத் (ரலி) ஒப்புக் கொள்ளவில்லை. மேலும் சுய கருத்தின் அடிப்படையில் நாம் சலுகை அளித்தால் அதை துஷ்பிரயோகம் செய்வார்கள் என்ற பொருத்தமற்ற பதிலைக் கூறியுள்ளதை இதன் மூலம் அறியலாம்.

திருக்குர்ஆனில் 114 அத்தியாயங்கள் உள்ளன என்பதை ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் அறிந்து வைத்துள்ளது. ஆனால் இப்னு மஸ்வூத் (ரலி) ஃபலக், நாஸ் ஆகிய 113, 114 அத்தியாயங்களை  தமது குர்ஆன் பிரதியில் எழுதவில்லை.

مسند أحمد

21186 – حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، أَخْبَرَنَا عَاصِمُ بْنُ بَهْدَلَةَ، عَنْ زِرِّ بْنِ حُبَيْشٍ، قَالَ: قُلْتُ لِأُبَيِّ بْنِ كَعْبٍ: إِنَّ ابْنَ مَسْعُودٍ كَانَ لَا يَكْتُبُ الْمُعَوِّذَتَيْنِ فِي مُصْحَفِهِ، فَقَالَ: “أَشْهَدُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَنِي: “أَنَّ جِبْرِيلَ قَالَ لَهُ: قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ، فَقُلْتُهَا، فَقَالَ: قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ، فَقُلْتُهَا “. فَنَحْنُ نَقُولُ مَا قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் தனது குர்ஆன் கை எழுத்துப் பிரதியில் 113, 114 அத்தியாயங்களை எழுதாமல் விட்டு விட்டாரே என்று உபை பின் கஅபு (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். ஜிப்ரீல் (அலை) அவர்கள் குல் அவூது பிரப்பில் ஃபலக் எனக் கூறுவீராக என்றார். நான் அதை ஓதினேன். குல் அவூது பிரப்பின் நாஸ் என்று கூறுவீராக என்றார் அவ்வாறே நான் கூறினேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) என்னிடம் கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியவாறு நானும் கூறுவேன் என்று உபை பின் கஅபு (ரலி) விடையளித்தார்கள்.

நூல் : அஹ்மத்

பொதுவாக இப்னு மஸ்வூத் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ்களை நாம் அப்படியே ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அதிகமான நபித்தோழர்களுக்கு மாற்றமாக அறிவித்தால் அவரது அறிவிப்பை விட மற்றவர்களின் அறிவிப்பையே எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே தொழுகையில் நான்கு சந்தர்ப்பங்களில் கைகளை உயர்த்துவதே சரியான நிலைபாடாகும்.

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...