மூன்று மாத கருவுக்கும் பித்ரா உண்டு என்பது சரியா?

மூன்று மாத கருவுக்கும் பித்ரா உண்டு என்பது சரியா?

– முஹம்மது இஸ்மாயில்

பதில் : ஃபித்ரா யார் யார் மீது கடமை என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

صحيح البخاري

1503 – حَدَّثَنَا يَحْيَى بْنُ مُحَمَّدِ بْنِ السَّكَنِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَهْضَمٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عُمَرَ بْنِ نَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: «فَرَضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَكَاةَ الفِطْرِ صَاعًا مِنْ تَمْرٍ، أَوْ صَاعًا مِنْ شَعِيرٍ عَلَى العَبْدِ وَالحُرِّ، وَالذَّكَرِ وَالأُنْثَى، وَالصَّغِيرِ وَالكَبِيرِ مِنَ المُسْلِمِينَ، وَأَمَرَ بِهَا أَنْ تُؤَدَّى قَبْلَ خُرُوجِ النَّاسِ إِلَى الصَّلاَةِ»

அடிமைகள், அடிமைகள் அல்லாத மற்றவர்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர், பெரியோர் ஆகிய அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். பேரீச்சம் பழம், தீட்டப்படாத கோதுமை ஆகியவற்றிருந்து ஒரு ஸாவு எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். மேலும் (பெருநாள்) தொழுகைக்கு மக்கள் புறப்படுவதற்கு முன்பே அதை வழங்கிவிட வேண்டும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி 1503

கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்றால் அதை நபிகளார் தெளிவுபடுத்தியிருப்பார்கள். அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் இதைக் குறிப்பிடாததில் இருந்து கருவில் இருக்கும் குழந்தைக்காக ஃபித்ரா கொடுக்கத் தேவையில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
கருவில் இருக்கும் குழந்தைக்கும் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்பதற்கு  எந்த ஒரு ஆதாரமும் இல்லை.