கட்டப்பட்ட சமாதிகளை இடிக்க வேண்டும்

மேலும் நமது முன்னோர்கள் அவ்வாறு கட்டிச் சென்றிருப்பார்களானால் நமக்குச் சக்தியும், அதிகாரமும் இருந்தால் அவற்றை இடித்துத் தள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

حدثنا يحيى بن يحيى وأبو بكر بن أبى شيبة وزهير بن حرب قال يحيى أخبرنا وقال الآخران حدثنا وكيع عن سفيان عن حبيب بن أبى ثابت عن أبى وائل عن أبى الهياج الأسدى قال قال لى على بن أبى طالب ألا أبعثك على ما بعثنى عليه رسول الله -صلى الله عليه وسلم- أن لا تدع تمثالا إلا طمسته ولا قبرا مشرفا إلا سويته.

நாயகம் (ஸல்) அவர்கள் என்னை எதற்கு அனுப்பினார்களோ அதற்காக உன்னை நான் அனுப்புகிறேன். எந்தச் சிலைகளையும் தகர்க்காது விடாதே! உயர்த்தப்பட்ட எந்தச் சமாதியையும் தரை மட்டமாக்காமல் விடாதே!’ என்று அலீ (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபுல் ஹய்யாஜ்

நூல்: முஸ்லிம் 1609

சமாதிகள் கட்டப்பட்டால் அதை இடித்து தரைமட்டமாக ஆக்க வேண்டும் என்று நபியவர்கள் தடை செய்திருந்தது இந்த ஹதீஸ் மூலம் தெரிகின்றது.

இவ்வளவு தெளிவான கட்டளைக்குப் பின்னரும் போலி மார்க்க அறிஞர்கள் இந்த நபிமொழிக்குத் தவறான பொருள் கூறி மக்களை வழிகெடுத்து வருவதையும் நாம் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

மேற்கண்ட நபிமொழியில் ‘கப்ரைத் தரை மட்டமாக்காமல் விடாதே’ என்று கூறப்படவில்லை. மாறாக ‘கப்ரைச் சீர்படுத்து’ என்று தான் உள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.

‘தரை மட்டமாக்கு’ என்று நாம் பொருள் கொண்ட இடத்தில் ஸவ்வைத்தஹு என்ற மூலச் சொல் இடம் பெற்றுள்ளது. ஸவ்வா என்பதிலிருந்து இச்சொல் பிறந்துள்ளது. இச்சொல்லின் நேரடிப் பொருள் ‘சீர்படுத்துதல்’ என்பது தான் எனவும் வாதிடுகின்றனர்.

கப்ரை அழகான முறையில் கட்ட வேண்டும் என்பதைத் தான் மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது என்று சாதிக்கின்றனர்.

வானத்தை ஒழுங்குபடுத்தினான் என்று கூறும் பல வசனங்களில் இதே ஸவ்வா என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. அப்படியானால் வானத்தைத் தரை மட்டமாக்கினான் என்று பொருள் கொள்வீர்களா? என்று நம்மைப் பார்த்துக் கேட்கின்றனர்.

அவனே பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தை நாடி, அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்குபடுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

திருக்குர்ஆன் 2:29

பின்னர் அவனைச் சீரமைத்து தனது உயிரை அவனிடம் ஊதினான். உங்களுக்குச் செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் ஏற்படுத்தினான். நீங்கள் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள்.

திருக்குர்ஆன் 32:9

முதல் மனிதரைப் படைத்தது பற்றிக் கூறும் போது மனிதனைச் சீரமைத்தான் என்று மேற்கண்ட வசனத்தில் கூறப்படுகிறது. இதிலும் சவ்வா என்ற சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. மனிதனைத் தரைமட்டமாக்கினான் என்று கூற முடியுமா எனவும் கேட்கின்றனர்.

சமாதிகளைக் கட்டக் கூடாது என்றும், அதிகப்படுத்தக் கூடாது என்றும், பூசக் கூடாது என்றும், பூசினால் இடிக்க வேண்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகக் கட்டகையிட்டு இருக்க, அதற்கு மாற்றமாக இந்த ஹதீசுக்கு தவறான விளக்கம் கொடுத்து மக்களை வழிகெடுக்க முயல்கின்றனர்.

சவ்வா என்ற சொல்லுக்கு அடக்கத்தலத்தை அழகாகக் கட்டுதல் என்ற பொருள் வராது என்பதைப் பற்றி விபரமாகப் பார்ப்போம்.

ஸவ்வா என்ற சொல்லுக்கு சீர்படுத்துதல் என்ற பொருள் உண்டு. அதிகப்படுத்துவதன் மூலமும் சீர்படுத்துதல் ஏற்படும். குறைப்பதன் மூலமும் சீர்படுத்துதல் ஏற்படும். இன்னும் பல வகைகளிலும் சீர்படுத்துதல் ஏற்படும். எதைப் பற்றிப் பேசப்படுகிறது என்பதைப் பொருத்து இதற்குப் பொருள் கொள்ள வேண்டும்.

ஒவ்வொன்றையும் சீர்படுத்தும் முறைகள் வெவ்வேறாகவுள்ளதால் இடத்திற்கு ஏற்ப அதற்குப் பொருள் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையை இவர்கள் அறியாததே இந்த விளக்கத்துக்குக் காரணம்.

கிழிந்த துணியைச் சீராக்கு என்று கூறினால் அதைத் தைக்க வேண்டும் என்று பொருள்.

அழுக்குத் துணியைச் சீராக்கு என்றால் அதைக் கழுவு எனப் பொருள்.

அளவுக்குப் பொருந்தாமல் பெரிதாகத் தைக்கப்பட்ட ஆடையைச் சீராக்கு என்றால் அதிகப்படியானதை வெட்டிக் குறைத்தல் என்பது பொருள்.

இச்சொல்லுடன் சேர்க்கப்படும் அடைமொழிக்கேற்ப பொருளும் மாறும். கிழிந்த, அழுக்கான, பெரியதாக என்பன போன்ற சொற்கள் சேர்க்கப்படும் போது அந்த அம்சத்தைச் சரி செய்ய வேண்டும் என்ற பொருளைத் தரும்.

உயரமாக்கப்பட்ட எந்தக் கப்ரையும் சீராக்காமல் விடாதே என்ற சொற்றொடரில் உயரமாக்கப்பட்ட என்ற அடைமொழி சேர்க்கப்பட்டுள்ளது. உயரத்தை நீக்குவது தான், அதாவது இடிப்பது தான் இங்கே சரி செய்வது எனக் கூறப்பட்டுள்ளது.

صحيح البخاري

فقال أنس: فكان فيه ما أقول لكم قبور المشركين، وفيه خرب وفيه نخل، فأمر النبي صلى الله عليه وسلم بقبور المشركين، فنبشت، ثم بالخرب فسويت، وبالنخل فقطع، فصفوا النخل قبلة المسجد

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மஸ்ஜிதுன் நபவி கட்டுவதற்காக வாங்கிய இடத்தில் முஸ்லிமல்லாதவர்களின் அடக்கத் தலங்களும், குட்டிச் சுவர்களும் பேரீச்சை மரங்களும் இருந்தன. நபிகள் நாயகம் (ஸல்)அவர்களின் கட்டளைப்படி அந்த அடக்கத்தலங்கள் தோண்டப்பட்டன. பின்னர் பாழடைந்த சுவர்கள் சமப்படுத்தப்பட்டன. பேரீச்சை மரங்கள் வெட்டப்பட்டு கிப்லா திசையில் நடப்பட்டன.

புகாரி 428, 11868, 3932

குட்டிச் சுவர்கள் சமப்படுத்தப்பட்டன என்று மொழிபெயர்த்த இடத்தில் சவ்வா என்ற சொல்லில் இருந்து பிறந்த சுவ்வியத் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. குட்டிச் சுவர்கள் தரைமட்டமாக்கப்பட்டதைக் குறிப்பதற்கு சவ்வா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சமாதியை அழகுபடுத்தச் சொன்னார்கள் என்று கூறி மக்களை வழிகெடுக்க முயல்பவர்கள் குட்டிச் சுவர்களை அழகாக அலங்கரித்து வைத்தார்கள் என்று பொருள் செய்வார்களா?

குட்டிச் சுவருக்கு வெள்ளை அடித்து அழகுபடுத்த வேண்டும் என்று நபித்தோழர்கள் பொருள் கொண்டிருந்தால் மஸ்ஜிதுன்னபவிக்குள் இன்று வரை அந்தக் குட்டிச் சுவர்கள் நின்று கொண்டிருக்க வேண்டும். ஆனால் அந்தக் குட்டிச் சுவர்கள் இடிக்கப்பட்டு தரைமட்டமாக ஆக்கப்பட்டன.

‘உயரமாக்கப்பட்ட எந்தக் கப்ரையும் சரிப்படுத்தாமல் விடாதே!’ என்பதற்கு ‘தரை மட்டமாக்காமல் விடாதே!’ என்பதைத் தவிர வேறு பொருள் கொள்ள முடியாது. மேலும் கப்ரின் மேல் வெளிப் பொருள்களால் அதிகப்படுத்தக் கூடாது என்பதை முன்னரே நாம் எடுத்துக் காட்டியிருக்கிறோம்.

அதன் அடிப்படையில் சிந்திக்கும் போது கப்ரிலிருந்து எடுக்கப்பட்ட மண் நாளடைவில் படிந்து தரைமட்டமாகி விடும். அதற்கு மேல் இருப்பது அனைத்தும் அதிகமாக்கப்பட்டவை தான். அதிகமாக்கப்பட்டதை அப்புறப்படுத்துவது தான் மேற்கண்ட கட்டளையைச் செயல்படுத்துவதாக அமையும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கப்ரு கட்டக்கூடாது என தடை செய்தார்கள். அவர்கள் தடை செய்த ஒன்று கட்டப்பட்டிருக்கிறது. மார்க்க அடிப்படையில் அதனைச் சீர்படுத்துங்கள் என்றால் கப்ருகளைத் தரைமட்டமாக்க வேண்டும் என்பது தான் பொருள்.

சவ்வா என்ற சொல் இடம் பெற்ற சில வசனங்களை எடுத்துக் காட்டி வானங்களைத் தரை மட்டமாக்கினான் என்று அர்த்தம் செய்ய முடியுமா என்று இவர்கள் கேட்பது விதண்டாவாதமாகும்.

வானத்தைச் சீராக்கினான் என்று தான் நாம் பொருள் கொள்கிறோம். அது போல் கப்ரைச் சீராக்கினான் என்று பொருள் கொள்கிறோம். வானத்தை எவ்வாறு அமைப்பது சீர்படுத்துவதாக ஆகுமோ அவ்வாறு அல்லாஹ் ஆக்கினான். அது போல் சமாதிகளைச் சீர்படுத்துவது என்று கூறப்பட்டால் நபிகள் நாயகம் எதைத் தடுத்தார்களோ அதைத் தகர்ப்பதன் மூலம் சீராக்குதல் என்று பொருளாகும்.

பின்வரும் வசனத்தில் இருந்தும் சவ்வா என்பதன் பொருளை அறிந்து கொள்ளலாம்.

يَوْمَئِذٍ يَوَدُّ الَّذِينَ كَفَرُوا وَعَصَوُا الرَّسُولَ لَوْ تُسَوَّى بِهِمُ الْأَرْضُ وَلَا يَكْتُمُونَ اللَّهَ حَدِيثًا (42) [النساء : 42]‏

 (ஏக இறைவனை) மறுத்து, இத்தூதருக்கு மாறு செய்தோர் “தம்மை பூமி விழுங்கி விடாதா?” என்று அந்நாளில் விரும்புவார்கள். அல்லாஹ்விடம் அவர்கள் எந்தச் செய்தியையும் மறைக்க முடியாது.

திருக்குர்ஆன் 4:42

மேற்கண்ட வசனத்தில் சவ்வா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. காஃபிர்கள் உயிர் கொடுத்து எழுப்பப்பட்ட உடன் தாங்கள் தப்பிக்க முடியாது என்பதை உணர்வார்கள். நம்மைப் பூமி விழுங்கி தரைமட்டமாக நம்மை ஆக்கினால் மறுமை தண்டனையில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியுமே என்று அவர்கள் கூறுவதைத் தான் சவ்வா என்ற சொல் மூலம் அல்லாஹ் எடுத்துக் காட்டுகிறான்.

சமாதிகளை அழகுபடுத்த வேண்டும் என்று அர்த்தம் செய்தவர்கள் அதே அர்த்தத்தை இங்கே கொடுக்க முடியுமா? பூமியில் தங்களை அலங்காரமாக வைக்க காஃபிர்கள் விரும்புவார்கள் எனப் பொருள் செய்ய முடியுமா?

கப்ர் கட்டுவது கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லி இருக்க கப்ர் கட்டி அதை அழகுபடுத்தலாம் என்று பொருள் செய்தால் அது மார்க்கத்தைக் கேலி செய்யும் விதமாக அமையும். இறைத்தூதரின் வார்த்தைகளில் கேலிக்கு இடமேயில்லை என்பதை மறந்து விடக்கூடாது.

மேலும் சவ்வா என்ற சொல் இடம் பெற்ற இந்த ஹதீஸுக்கு மட்டும்தான் இப்படி உளறுகிறார்கள். கப்ரின் மேல் பூசக் கூடாது என்றும், கப்ரின் மேல் கட்டக்கூடாது என்றும் வரும் ஹதீஸ்களைப் பற்றி வாய் இவர்கள் வாய் திறப்பதில்லை.

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...

நாமே தீர்மானிக்கலாமா?

நாமே தீர்மானிக்கலாமா? பிறை சம்பந்தமான ஆதாரங்களில் நாமே தீர்மானிக்கலாம் என்ற கருத்திலமைந்த ஹதீஸும் முக்கியமான ஆதாரமாக அமைந்துள்ளது. அந்த ஹதீஸ் இது தான். سنن الترمذي 697 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ: ...

அரஃபா நோன்பு

அரஃபா நோன்பு சவூதி அரசாங்கம் எப்போது தலைப் பிறை என்று அறிவிக்கிறதோ அது தான் உலகத்துக்கே தலைப் பிறை என்ற கருத்துடையோர் அரஃபா நோன்பை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். ஹஜ்ஜுப் பெருநாளைக்கு முந்திய நாள் அரஃபா ...

கிரகணத் தொழுகை

கிரகணத் தொழுகை தலைப்பிறை பற்றி முடிவு செய்வதற்கான ஆதாரங்களில் சூரிய சந்திர கிரகணங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. صحيح البخاري 1042 – حَدَّثَنَا أَصْبَغُ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي عَمْرٌو، ...

நீட்டப்படும் மாதங்கள் 

நீட்டப்படும் மாதங்கள் பிறையைக் கண்களால் பார்த்துத் தான் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்பதை மற்றொரு ஹதீசும் கூறுகிறது. அந்த ஹதீஸ் இது தான். صحيح مسلم 2582 – حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ ...

மேக மூட்டத்தின் போது…

மேக மூட்டத்தின் போது… பிறை பார்த்தல் குறித்த அடிப்படையான ஆதாரங்களாக சில ஹதீஸ்கள் உள்ளன. அந்த ஹதீஸ்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியான கருத்தில் அமைந்தவை என்றாலும் சின்னச் சின்ன வேறுபாடுகள் அவற்றுக்கிடையே உள்ளதால் அவற்றை ...