கொசு பேட் பயன்படுத்தலாமா?

இன்றைய உலகில் கொசுவை அழிக்க bat (பேட்) போன்ற பொருட்களைப் பயன்படுத்துகின்றோம். இதில் பட்டு கொசு எரிந்து சாகின்றது. நெருப்பால் உயிர்களுக்குத் தண்டனையை அல்லாஹ் மட்டுமே வழங்குவான் என்ற ஹதீஸின் படி இதைப் பயன்படுத்தக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். சரியா? விளக்கவும்.

ரபிக், பவானி

பதில் :

நெருப்பால் தண்டனை கொடுக்கக் கூடாது என்ற கட்டளை இருப்பது உண்மை தான். மனிதர்களுக்கு மரண தண்டனை வழங்க நேர்ந்தால் அவர்களை நெருப்பில் எரித்து கொல்லக் கூடாது என்பது தான் இதன் கருத்தாகும். மனிதனல்லாத உயிரனத்தை எரிக்கக் கூடாது என்பது பொருள் அல்ல.

அல்லாஹ் தண்டிப்பது போல் தண்டிக்க வேண்டாம் என்ற சொல்லே இதைத் தெளிவாக்கி விடுகிறது. அல்லாஹ் மறுமையில் நெருப்பால் தண்டனை அளிப்பது மனிதர்கள், ஜின்கள், ஷைத்தான்களுக்கு மட்டுமே. கொசுக்களுக்கோ, இன்ன பிற ஜீவன்களுக்கோ அல்லாஹ் தண்டனை அளிப்பதில்லை.

மேலும் பின்வரும் ஹதீஸில் இருந்தும் இதை அறியலாம்.

حدثنا يحيى بن بكير حدثنا الليث عن يونس عن ابن شهاب عن سعيد بن المسيب وأبي سلمة أن أبا هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قرصت نملة نبيا من الأنبياء فأمر بقرية النمل فأحرقت فأوحى الله إليه أن قرصتك نملة أحرقت أمة من الأمم تسبح

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது:

இறைத் தூதர்களில் ஒருவரை ஒரு எறும்பு கடித்து விட்டது. உடனே, அந்த எறும்புப் புற்றையே எரித்து விடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ், ஓர் எறும்பு உங்களைக் கடித்து விட்ட காரணத்தால் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்த சமுதாயங்களில் ஒன்றையே நீங்கள் எரித்து விட்டீர்களே என்று (அவரைக் கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி

حدثنا إسماعيل بن أبي أويس قال حدثني مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال نزل نبي من الأنبياء تحت شجرة فلدغته نملة فأمر بجهازه فأخرج من تحتها ثم أمر ببيتها فأحرق بالنار فأوحى الله إليه فهلا نملة واحدة

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைத் தூதர்களில் ஒருவர் ஒரு (பயணத்தில்) மரத்தின் கீழே தங்கினார். அவரை ஒரு எறும்பு கடித்து விட்டது. உடனே, அவர் தமது (பயண) மூட்டை முடிச்சுகளை அப்புறப்படுத்தும்படி உத்தரவிட்டார். அவ்வாறே அவை மரத்தின் கீழிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. பிறகு எறும்புப் புற்றை எரிக்கும்படி உத்தரவிட்டார். அவ்வாறே அது தீயிட்டு எரிக்கப்பட்டது. உங்களைக் கடித்தது ஒரே ஒரு எறும்பல்லவா? (அதற்காக ஓர் எறும்பு கூட்டத்தையே எரிக்கலாமா?) என்று அறிவித்(து அல்லாஹ் அவரைக் கண்டித்)தான்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 3319

எறும்பை எரித்ததை அல்லாஹ் கண்டிக்கவில்லை; கடித்த ஒரு எறும்பை எரித்திருக்கலாமே? எல்லா எறும்புகளையும் ஏன் எரிக்க வெண்டும் என்று தான் அல்லாஹ் கண்டிக்கிறான். நெருப்பில் எரிக்காமல் வேறு வகையில் அழித்திருக்கலாமே என்று அல்லாஹ் கூறவில்லை. எனவே தாராளமாக பேட் மூலம் கொசுவைக் கொல்லலாம்.

சில சகோதரர்கள் பின்வரும் ஹதீஸை எடுத்துக்காட்டி கொசு பேட் பயன்படுத்தக் கூடாது என்று நமக்கு சுட்டிக் காட்டியுள்ளனர்.

حدثنا أبو صالح محبوب بن موسى أخبرنا أبو إسحق الفزاري عن أبي إسحق الشيباني عن ابن سعد قال غير أبي صالح عن الحسن بن سعد عن عبد الرحمن بن عبد الله عن أبيه- كان ثقة قليل الحديث ، وقد تكلموا في روايته عن أبيه وكان صغيرًا.- قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر فانطلق لحاجته فرأينا حمرة معها فرخان فأخذنا فرخيها فجاءت الحمرة فجعلت تفرش فجاء النبي صلى الله عليه وسلم فقال من فجع هذه بولدها ردوا ولدها إليها ورأى قرية نمل قد حرقناها فقال من حرق هذه قلنا نحن قال إنه لا ينبغي أن يعذب بالنار إلا رب النار

நாங்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அவர்கள் ஒரு தேவைக்காக வெளியே சென்றார்கள். அப்போது நாங்கள் சிறு குருவியையும், அதன் இரு குஞ்சுகளையும் கண்டோம். நாங்கள் இரு குஞ்சுகளையும் எடுத்துக் கொண்டோம். தாய்ப் பறவை சிறகடித்துக் கொண்டு வந்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து விட்டனர். இந்தத் தாய்ப் பறவையைப் பதறச் செய்தவர் யார் என்று கேட்டு விட்டு அதன் குஞ்சுகளை அதனிடம் விட்டு விடுங்கள் எனக் கூறினார்கள். மேலும் ஒரு எறும்புப் புற்றை நாங்கள் எரித்திருப்பதையும் அவர்கள் கண்டனர். யார் இதை எரித்தவர் என்று கேட்ட போது நாங்கள் தான் என்று கூறினோம். நெருப்பின் சொந்தக்காரன் (அல்லாஹ்) தவிர வேறு யாரும் நெருப்பின் மூலம் தண்டிக்கக் கூடாது எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி)

நூல் : அபூதாவூத்

இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமாக இருந்தால் இதில் இருந்து கொசு பேட் பயன்படுத்தக் கூடாது என்று முடிவு செய்வது சரியானது தான். ஆனால் இது பலவீனமான ஹதீஸாகும். நாம் முன்னர் சுட்டிக்காட்டிய ஆதாரப்பூர்வமான ஹதீஸின் கருத்துக்கும் எதிரானதாகும்.

இப்னு மஸ்வூத் அவர்களிடமிருந்து அவரது மகன் அப்துர் ரஹ்மான் என்பார் அறிவிக்கிறார். இப்னு மஸ்வூத் (ரலி) மரணிக்கும் போது இவரின் வயது ஆறாகும். எனவே இவர் தனது தந்தையிடமிருந்து எதையும் செவியுற்றதில்லை.

இதற்கான ஆதாரம் வருமாறு:

(79) خت 4 عبد الرحمن بن عبد الله بن مسعود ثقة قال بن معين لم يسمع من أبيه وقال بن المديني لقي أباه وسمع منه حديثين حديث الضب وحديث تأخير الصلاة وقال العجلي يقال أنه لم يسمع من أبيه الا حرفا واحدا محرم الحرام وذكر البخاري في التاريخ الاوسط من طريق بن خثيم عن القاسم بن عبد الرحمن عن أبيه قال اني مع أبي فذكر الحديث في تأخير الصلاة قال البخاري سمعته يقول لم يسمع من أبيه وحديث بن خثيم عندي وقال أحمد كان له عند موت أبيه ست سنين والثوري وشريك يقولان سمع وإسرائيل يقول في حديث الضب عنه سمعت وأخرج البخاري في التاريخ الصغير طريق القاسم بن عبد الرحمن عن أبيه لما حضرت عبد الله الوفاة قلت له أوصني قال أبك من خطيتك وسنده لا بأس به قلت فعلى هذا يكون الذي صرح فيه بالسماع من أبيه أربعة أحدها موقوف وحديثه عنه كثير ففي السنن خمسة عشر وفي المسند زيادة على ذلك سبعة أحاديث معظمها بالعنعنة وهذا هو التدليس والله أعلم

– تعريف اهل التقديس بمراتب الموصوفين بالتدليس بن حجر [ص 40]

437 – عبد الرحمن بن عبد الله بن مسعود قال يحيى بن سعيد القطان مات أبوه وله نحو ست سنين وقال بن معين في رواية لم يسمع من أبيه وروى معاوية بن صالح عن بن معين أنه سمع من أبيه ومن علي رضي الله عنه وسئل أحمد بن حنبل هل سمع عبد الرحمن من أبيه فقال أما الثوري وشريك فيقولان سمع وكذلك أثبت له بن المديني السماع من أبيه والله أعلم

جامع التحصيل في أحكام المراسيل [ص 223]