மதீனாவுக்குள் பிளேக் நோய், கொள்ளை நோய் ஏற்படாது என்று நபிகள் சொன்னார்களா? அப்படியானால் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் மக்கா மதீனாவில் இருப்பது ஏன்?
பதில்
மதீனாவுக்கு பிளேக் நோய் மட்டும் வராது என்று ஹதீஸ்கள் உள்ளன. எந்தக் கொள்ளை நோயும் வராது என்று ஹதீஸ்கள் இல்லை
صحيح البخاري
1880 – حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ المُجْمِرِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «عَلَى أَنْقَابِ المَدِينَةِ مَلاَئِكَةٌ لاَ يَدْخُلُهَا الطَّاعُونُ، وَلاَ الدَّجَّالُ»
1880 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மதீனாவின் வாசல்களில் வானவர்கள் இருப்பர்! மதீனாவிற்குள் பிளேக் நோயும், தஜ்ஜாலும் நுழைய முடியாது!
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 1880
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு அறிவித்து 1400 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த 1400 ஆண்டுகளில் சவூதி அரேபியா உள்ளிட்ட உலகில் பல நாடுகளை பிளேக் நோய் பாதித்துள்ளது. கொத்து கொத்தாக மனிதர்கள் மடிந்து போனார்கள். பிளேக் நோய் பாதித்த வரலாற்றில் மதீனா நகர் மட்டும் பிளேக் நோயால் பாதிக்கப்படவில்லை.
கீழ்க்கண்ட பிளேக் வரலாற்றில் மதீனா நகர் மட்டும் பதிக்காமல் தப்பியது.
165 ஆம் ஆண்டு
ஆன்டோனியன் பிளேக்: 165-180களில் பரவிய ஆன்டோனைன் பிளேக் 5 மில்லியன் மக்களின் உயிரைக் காவு வாங்கியது.
541 ஆம் ஆண்டு
ஜஸ்ட்டினியன் பிளேக்: 541-42ஆம் ஆண்டுகளில் பரவிய ஜஸ்ட்டினியன் பிளேக் 30-40 மில்லியன் மக்களின் உயிரைக் குடித்தது..
1347 ஆம் ஆண்டு
பிளேக் டெத் எனப்படும் பியுபோனிக் பிளேக்: 1347-51ஆம் ஆண்டுகளில் ஐரோப்பிய நாடுகளை உலுக்கிய ஒரு தொற்று நோய் பிளேக் டெத். எலியில் இருந்து இந்த வைரஸ் பரவியது. ஐரோப்பா 30 முதல் 50% மக்கள் தொகையை இழந்தது. சுமார் 200 மில்லியன் மக்கள் இறந்தனர். இந்த துயரத்தில் இருந்து மீண்டு வர ஐரோப்பாவுக்கு 200 ஆண்டுகள் பிடித்தது.
ஹிஜ்ரி 881 ஆம் ஆண்டு (கிபி 1459) சவூதி அரேபியாவை தாக்கிய பிளேக்
منار القاري شرح مختصر صحيح البخاري – معاصر
ثانياً: أن المدينة محمية من الطاعون، ولم ينقل في التاريخ قط أنه دخل المدينة أصلاً. والطاعون أورام دموية ودمامل خبيثة، قال السمهودي: وقد امتنع الطاعون عن المدينة هذه الدهور الطويلة مع أنه يقع بالحجاز، ودخل جدة وينبع والفرع والصفراء والخبت وغير ذلك من الأماكن القريبة من المدينة، ولم يدخلها كما شاهدنا ذلك في طاعون سنة إحدى وثمانين وثمانمائة فإنه عم أكثر الأماكن القريبة من المدينة وكثر بجدة وهي محفوظة منه أتم الحفظ، فلله الحمد والمنة
ஹிஜாஸ், ஜித்தா, யான்பு, ஃபரா, ஸஃப்ரா, கப்த் ஆகிய மதீனாவை அடுத்துள்ள ஊர்களை பிளேக் தாக்கியும் மதீனாவைத் தக்கவில்லை.
1720 ஆம் ஆண்டு
மத்திய கிழக்கில் பிளேக் நோய் பரவிய போதும் மதீனாவைத் தாக்கவில்லை.
1592-ஆம் ஆண்டு
1592-ஆம் ஆண்டு லண்டன் மாநகரை பிளேக் எனும் கொடிய நோய் அலைக்கழிக்கத் தொடங்கியது.
1629 ஆம் ஆண்டு
இத்தாலியன் பிளேக்: 1629-31ஆம் ஆண்டுகளில் பரவிய இத்தாலியன் பிளேக்கிற்கு 2 லட்சத்து 80 ஆயிரம் மக்கள் பலியாயினர்.
1665 ஆம் ஆண்டு
தி கிரேட் பிளேக் ஆப் லண்டன்: 1665 – 1966ஆம் ஆண்டுகளில் வெடித்த இந்த பிளேக் நோய்க்கு 75000 முதல் 1 லட்சம் மக்கள் மக்கள் இறந்தனர்.
1720 ஆம் ஆண்டு
தி கிரேட் பிளேக் மார்செல்லி: 1720ஆம் ஆண்டில் வெடித்த இந்த பிளேக் நோய் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பிரான்சுக்கு பரவியது. இதற்கு 1 லட்சம் மக்கள் பலியாயினர்.
1855 ஆம் ஆண்டு
மூன்றாவது பிளேக்: 1855ல் பரவிய மூன்றாவது பிளேக்கிற்கு உலகம் முழுவதும் சுமார் 12 மில்லியன் மக்கள் பலியாயினர். சீனாவின் யுனான் மாகாணத்தில் இந்த தொற்று உருவானது. இந்த தொற்றுக்கு அதிகமாக சீனா மற்றும் இந்தியாவில் பலியாயினர். இதைத்தொடர்ந்து தெற்கு ஆப்ரிக்காவில் இருந்து சான் பிரான்சிஸ்கோ வரைக்கும் இந்த தொற்றுக்கு ஆயிரக்கணக்கில் பலியாயினர்.
இப்படி பிளேக் நோய் வரலாற்றில் மதீனா நகர் மட்டும் பிளேக் நோய் வராமல் தப்பித்துக் கொண்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு நிறைவேறியது.
ஆனால் பிளேக் அல்லாத மற்ற கொள்ளை நோய்கள் மதீனாவைத் தாக்கியுள்ளது. தற்போது கொரோனாவும் தாக்கியுள்ளது.
மதீனாவுக்கு வந்த நோய்கள்
صحيح البخاري
1889 – حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ، وُعِكَ أَبُو بَكْرٍ، وَبِلاَلٌ، فَكَانَ أَبُو بَكْرٍ إِذَا أَخَذَتْهُ الحُمَّى يَقُولُ:
كُلُّ امْرِئٍ مُصَبَّحٌ فِي أَهْلِهِ … وَالمَوْتُ أَدْنَى مِنْ شِرَاكِ نَعْلِهِ
، وَكَانَ بِلاَلٌ إِذَا أُقْلِعَ عَنْهُ الحُمَّى يَرْفَعُ عَقِيرَتَهُ يَقُولُ:
أَلاَ لَيْتَ شِعْرِي هَلْ أَبِيتَنَّ لَيْلَةً … بِوَادٍ وَحَوْلِي إِذْخِرٌ وَجَلِيلُ،
وَهَلْ أَرِدَنْ يَوْمًا مِيَاهَ مَجَنَّةٍ … وَهَلْ يَبْدُوَنْ لِي شَامَةٌ وَطَفِيلُ،
قَالَ: اللَّهُمَّ العَنْ شَيْبَةَ بْنَ رَبِيعَةَ، وَعُتْبَةَ بْنَ رَبِيعَةَ، وَأُمَيَّةَ بْنَ خَلَفٍ كَمَا أَخْرَجُونَا مِنْ أَرْضِنَا إِلَى أَرْضِ الوَبَاءِ، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ حَبِّبْ إِلَيْنَا المَدِينَةَ كَحُبِّنَا مَكَّةَ أَوْ أَشَدَّ، اللَّهُمَّ بَارِكْ لَنَا فِي صَاعِنَا وَفِي مُدِّنَا، وَصَحِّحْهَا لَنَا، وَانْقُلْ حُمَّاهَا إِلَى الجُحْفَةِ»، قَالَتْ: وَقَدِمْنَا المَدِينَةَ وَهِيَ أَوْبَأُ أَرْضِ اللَّهِ، قَالَتْ: فَكَانَ بُطْحَانُ يَجْرِي نَجْلًا تَعْنِي مَاءً آجِنًا
1889 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த போது ஆபூபக்ர் (ரலி), பிலால் (ரலி) ஆகியோருக்குக் காய்ச்சல் ஏற்பட்டது. அபூபக்ர் (ரலி) அவர்கள் தமக்குக் காய்ச்சல் ஏற்படும் போது, மரணம் தனது செருப்புவாரை விடச் சமீபத்தில் இருக்கும் நிலையில் ஒவ்வொரு மனிதனும் தன் குடும்பத்தாருடன் காலைப்பொழுதை அடைகிறான்! என்ற கவிதையைக் கூறுவார்கள். பிலால் (ரலி) அவர்கள் காய்ச்சல் நீங்கியதும் வேதனைக் குரலை உயர்த்தி, இத்கிர், ஜலீல் எனும் புற்கள் என்னைச் சூழ்ந்திருக்க, ஒரு பள்ளத்தாக்கில் ஓர் இராப் பொழுதையேனும் நான் கழிப்பேனா? மஜின்னா’ எனும் (சுனையின்) நீரை நான் அருந்துவேனா? ஷாமா, தஃபீல் எனும் இரு மலைகள் (அல்லது இரு ஊற்றுகள்) எனக்குத் தென்படுமா? என்ற கவிதையைக் கூறுவார்கள்.
மேலும் பிலால் (ரலி) அவர்கள், இறைவா! ஷைபா பின் ரபிஆ, உத்பா பின் ரபீஆ, உமையா பின் கலஃப் ஆகியோர் எங்கள் நாட்டிலிருந்து எங்களை (அப்புறப்படுத்தி) இந்த நோய்ப் பிரதேசத்திற்கு விரட்டியது போன்று, அவர்களை நீ உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தி (சபித்து) விடுவாயாக! என்று கூறுவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இறைவா! நாங்கள் மக்காவை நேசித்தது போன்று அல்லது அதைவிட அதிகமாக மதீனாவை எங்கள் நேசத்திற்குரியதாக ஆக்கு! இறைவா! எங்களுடைய (அளவைகளான) ஸாஉ’, முத்’து ஆகியவற்றில் (எங்கள் உணவில்) எங்களுக்கு நீ வளம்புரிவாயாக! இவ்வூரை எங்களுக்கு ஆரோக்கியமானதாக ஆக்குவாயாக! இங்குள்ள காய்ச்சலை ஜுஹ்ஃபா’ எனும் பகுதிக்கு இடம் பெயரச் செய்! என்று பிரார்த்தித்தார்கள். நாங்கள் மதீனாவிற்கு வந்த போது, அது அல்லாஹ்வின் பூமியிலேயே நோய்நொடிகள் அதிகமான பிரதேசமாக இருந்தது; (ஏனெனில்) புத்ஹான்’ எனும் ஓடையில் மாசடைந்த தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது!
நூல் : புகாரி 1889
صحيح البخاري
2643 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا دَاوُدُ بْنُ أَبِي الفُرَاتِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ، عَنْ أَبِي الأَسْوَدِ، قَالَ: أَتَيْتُ المَدِينَةَ وَقَدْ وَقَعَ بِهَا مَرَضٌ وَهُمْ يَمُوتُونَ مَوْتًا ذَرِيعًا، فَجَلَسْتُ إِلَى عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَمَرَّتْ جَنَازَةٌ، فَأُثْنِيَ خَيْرًا، فَقَالَ عُمَرُ: وَجَبَتْ، ثُمَّ مُرَّ بِأُخْرَى، فَأُثْنِيَ خَيْرًا، فَقَالَ: وَجَبَتْ، ثُمَّ مُرَّ بِالثَّالِثَةِ، فَأُثْنِيَ شَرًّا، فَقَالَ: وَجَبَتْ، فَقُلْتُ: وَمَا وَجَبَتْ يَا أَمِيرَ المُؤْمِنِينَ؟ قَالَ: قُلْتُ كَمَا قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيُّمَا مُسْلِمٍ شَهِدَ لَهُ أَرْبَعَةٌ بِخَيْرٍ أَدْخَلَهُ اللَّهُ الجَنَّةَ»، قُلْنَا: وَثَلاَثَةٌ، قَالَ: «وَثَلاَثَةٌ»، قُلْتُ: وَاثْنَانِ، قَالَ: «وَاثْنَانِ»، ثُمَّ لَمْ نَسْأَلْهُ عَنِ الوَاحِدِ
2643 அபுல் அஸ்வத் அவர்கள் கூறியதாவது:
மதீனா நகரை (கொள்ளை) நோய் பீடித்திருக்கும் நிலையில் நான் அங்கு சென்றேன். மக்கள் பரவலாகவும் விரைவாகவும் இறந்து கொண்டிருந்தார்கள். நான் உமர் (ரலி) அவர்களிடம் சென்று அமர்ந்தேன். அப்போது ஒரு ஜனாஸா சென்றது. அதைக் குறித்து நல்லவிதமாகப் (புகழ்ந்து) பேசப்பட்டது. உடனே, உமர் (ரலி) அவர்கள், உறுதியாகி விட்டது என்று கூறினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா அவர்களைக் கடந்து சென்றது. அதைக் குறித்தும் நல்ல விதமாகப் பேசப்பட்டது. அதற்கும் உமர் (ரலி) அவர்கள், உறுதியாகி விட்டது என்று கூறினார்கள். பிறகு, •மூன்றாவது ஜனாஸா அவர்களைக் கடந்து சென்றது. அதைக் குறித்து (இகழ்ந்து) கெட்ட விதமாகப் பேசப்பட்டது. உமர் (ரலி) அவர்கள், உறுதியாகி விட்டது என்று கூறினார்கள். நான், விசுவாசிகளின் தலைவரே! என்ன உறுதியாகி விட்டது? என்று கேட்டேன். அவர்கள் (பின் வருமாறு) பதிலளித்தார்கள்: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே நானும் சொன்னேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், எந்த முஸ்லிமுக்கு நான்கு பேர், அவர் நல்லவர்’ என்று சாட்சி சொல்கின்றார்களோ அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்துவான் என்று கூறினார்கள். நாங்கள், மூன்று பேர் சாட்சி சொன்னாலுமா? என்று கேட்டோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஆம்; மூன்று பேர் சாட்சி சொன்னாலும் சரி (அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்துவான்) என்று கூறினார்கள். நாங்கள், இரண்டு பேர் சாட்சி சொன்னாலுமா? என்று கேட்டோம். அவர்கள், ஆம்; இரண்டு பேர் சாட்சி சொன்னாலும் சரியே என்று கூறினார்கள். பிறகு, நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவரைப் பற்றி (ஒருவர் சாட்சி சொன்னாலுமா? என்று) கேட்கவில்லை.
நூல் : புகாரி 2643
صحيح البخاري
233 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَدِمَ أُنَاسٌ مِنْ عُكْلٍ أَوْ عُرَيْنَةَ، فَاجْتَوَوْا المَدِينَةَ «فَأَمَرَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِلِقَاحٍ، وَأَنْ يَشْرَبُوا مِنْ أَبْوَالِهَا وَأَلْبَانِهَا» فَانْطَلَقُوا، فَلَمَّا صَحُّوا، قَتَلُوا رَاعِيَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَاسْتَاقُوا النَّعَمَ، فَجَاءَ الخَبَرُ فِي أَوَّلِ النَّهَارِ، فَبَعَثَ فِي آثَارِهِمْ، فَلَمَّا ارْتَفَعَ النَّهَارُ جِيءَ بِهِمْ، «فَأَمَرَ فَقَطَعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ، وَسُمِرَتْ أَعْيُنُهُمْ، وَأُلْقُوا فِي الحَرَّةِ، يَسْتَسْقُونَ فَلاَ يُسْقَوْنَ». قَالَ أَبُو قِلاَبَةَ: «فَهَؤُلاَءِ سَرَقُوا وَقَتَلُوا، وَكَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ، وَحَارَبُوا اللَّهَ وَرَسُولَهُ»
233. உக்ல்’ அல்லது உரைனா’ குலத்தாரில் சிலர் (மதீனாவிற்கு) வந்தனர். அவர்களுக்கு மதீனாவின் தட்ப வெப்பநிலை ஒத்துக் கொள்ளவில்லை. எனவே பால் ஒட்டகங்களைச் சென்றடைந்து, அவற்றின் சிறு நீரையும் பாலையும் பருகிக் கொள்ளுமாறு அவர்களை நபியவர்கள் பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் (ஒட்டகங்களை நோக்கி) நடந்தனர். அவர்கள் உடல் நலம் தேறியதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒட்டகப் பராமரிப்பாளரைக் கொன்று விட்டு ஒட்கங்களை ஓட்டிச் சென்றனர். முற்பகல் வேளையில் இந்தச் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வரவே அவர்களுக்குப் பின்னால் படைப் பிரிவை அனுப்பி வைத்தார்கள். நண்பகல் நேரத்தில் அவர்கள் கொண்டு வரப்பட்டனர். அவர்களுடைய கைகளையும், கால்களையும் துண்டிக்கச் செய்தார்கள். அவர்களுடைய கண்களில் பழுக்கக் காய்ச்சிய ஆணிகளால் சூடிடப்பட்டது. பிறகு ஹர்ரா பகுதியில் அவர்கள் போடப்பட்டனர். அவர்கள் தண்ணீர் கேட்டும் அவர்களுக்கு தண்ணீர் புகட்டப்படவில்லை.
அறிவிப்பாளர் அபூகிலாபா அவர்கள் கூறுகின்றார்கள்:
இவர்கள் திருடினார்கள்; கொலை செய்தார்கள்; நம்பிக்கை கொண்ட பின்னர் நிராகரிப்பாளர்களாய் மாறினார்கள்; அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் எதிர்த்துப் போரிட்டனர்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : புகாரி 233
இப்படி மதீனாவை பிளேக் அல்லாத மற்ற கொள்ளை நோய்கள் பாதித்துள்ளன.
மக்காவுக்கு பிளேக் நோய் வருமா?
مسند أحمد
10265 – حَدَّثَنَا سُرَيْجٌ، قَالَ: حَدَّثَنَا فُلَيْحٌ، عَنْ عُمَرَ (2) بْنِ الْعَلَاءِ الثَّقَفِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” الْمَدِينَةُ وَمَكَّةُ مَحْفُوفَتَانِ بِالْمَلَائِكَةِ، عَلَى كُلِّ نَقْبٍ مِنْهَا مَلَكٌ لَا يَدْخُلُهَا الدَّجَّالُ، وَلَا الطَّاعُونُ “
மக்காவிலும் மதீனாவிலும் பிளேக் நோய் வராது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்னத் அஹமதில் ஹதீஸ் உள்ளது.
وهذا إسناد ضعيف لجهالة عمر بن العلاء الثقفي وأبيه، وهما من رجال “تعجيل المنفعة”، وتساهل ابن حبان فذكرهما في “ثقاته” وأما فُليح- وهو ابن سليمان- فليس بذاك القوي لكن يُعتَبر به.
இதன் அறிவிப்பாளர் தொடரில் மூன்று குறைபாடுகள் உள்ளதால் இது மிகவும் பலவீனமான ஹதீஸாகும்.
இதை அபூஹுரைரா என்ற நபித்தோழர் கூறியதாக அலா என்பார் அறிவிக்கிறார். இவர் மஜ்ஹுல் அதாவது யாரென அறியப்படாதவர் ஆவார். இவர் சொன்னதாக இவரது மகன் அம்ரு என்பார் அறிவிக்கிறார். இவரும் யாரென அறியப்படாதவர். இவர் சொன்னதாக ஃபுலைஹ் என்பார் அறிவிக்கிறார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார். எனவே இது ஆதாரத்துக்கு எடுக்கத் தகுதியில்லாத பலவீனமான ஹதீஸ் ஆகும்.
فتح الباري – ابن حجر
و ولا مكة أيضا لكن نقل جماعة أنه دخل مكة في الطاعون العام الذي كان في سنة تسع وأربعين وسبعمائة بخلاف المدينة فلم يذكر أحد قط أنه وقع بها الطاعون أصلا
மேலும் மக்காவுக்குள் பிளேக் நுழைந்த வரலாறும் உள்ளது. ஹிஜ்ரி 749 (கிபி 1327) ஆண்டில் மக்காவை பிளேக் நோய் தாக்கியது. ஆனால் மதீனாவை ஒரு போதும் பிளேக் நோய் தாக்கியதில்லை.
நூல் : ஃபத்ஹுல் பாரி