மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்று பொருள் உண்டா?
இக்பால், முத்துப்பேட்டை
பதில்
மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்ற பொருள் அகராதியில் இல்லை.
ரஹ்மத் رَحْمَة என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த சொல் தான் மர்ஹூம் مَرْحُوْم என்பது.
ரஹ்மத் رَحْمَة என்றால் அருள்.
மர்ஹூம் مَرْحُوْم என்றால் அருள் செய்யப்பட்டவர் என்று பொருள். இந்த வடிவத்தில் அமைந்த சொற்கள் இஸ்முல் மப்வூல் اِسْمُ الْمَفْعُوْل எனப்படும்.
நபிகள் காலத்திலும் அதைத் தொடர்ந்த பல நூற்றாண்டுகளிலும் மரணித்தவரைக் குறிக்க மர்ஹூம் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
எத்தனையோ நபித்தோழர்களைப் பற்றியும், தாபியீன்களைப் பற்றியும், இமாம்களைப் பற்றியும் குறிப்பிடும் போது மர்ஹூம் என்று சேர்த்துக் குறிப்பிடப்படவில்லை.
மர்ஹூம் அபூ அஹனீபா, மர்ஹூம் ஷாபி என்பது போன்ற சொற்களைக் 200 ஆண்டுகளுக்கு முன் நாம் பார்க்க முடியாது.
சில நன்மக்கள் மர்ஹூம் என்றே பெயரிப்பட்டுள்ளனர். அருள் செய்யப்பட்டவர் என்ற பொருளில் தான் இப்படி பெயர் வைத்தனர். செத்தவர் என்ற பொருள் இருந்தால் மர்ஹூம் என்று பெயரிட மாட்டார்கள்.
صحيح البخاري
5120 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا مَرْحُومُ بْنُ عَبْدِ العَزِيزِ بْنِ مِهْرَانَ، قَالَ: سَمِعْتُ ثَابِتًا البُنَانِيَّ، قَالَ: كُنْتُ عِنْدَ أَنَسٍ وَعِنْدَهُ ابْنَةٌ لَهُ، قَالَ أَنَسٌ: جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعْرِضُ عَلَيْهِ نَفْسَهَا، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، أَلَكَ بِي حَاجَةٌ؟ ” فَقَالَتْ بِنْتُ أَنَسٍ: مَا أَقَلَّ حَيَاءَهَا، وَا سَوْأَتَاهْ وَا سَوْأَتَاهْ، قَالَ: «هِيَ خَيْرٌ مِنْكِ، رَغِبَتْ فِي النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَرَضَتْ عَلَيْهِ نَفْسَهَا»
صحيح البخاري
6123 – حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا مَرْحُومٌ، سَمِعْتُ ثَابِتًا: أَنَّهُ سَمِعَ أَنَسًا رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعْرِضُ عَلَيْهِ نَفْسَهَا، فَقَالَتْ: هَلْ لَكَ حَاجَةٌ فِيَّ؟ فَقَالَتِ ابْنَتُهُ: مَا أَقَلَّ حَيَاءَهَا، فَقَالَ: «هِيَ خَيْرٌ مِنْكِ، عَرَضَتْ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَفْسَهَا»
புகாரி 5120, 6123 ஆகிய ஹதீஸ்களின் அறிவிப்பாளர்களில் மர்ஹூம் என்ற பெயருடைய அறிவிப்பாளர்கள் இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.
அருள் என்பது இறந்தருக்கு மட்டுமுரியது அல்ல. உயிருடன் உள்ளவருக்கும் அருள் வேண்டும். எனவே உயிருடன் உள்ளவரையும் மர்ஹூம் எனலாம். இறந்தவரையும் மர்ஹூம் எனலாம். மரணித்தவர் என்ற பொருளில் அல்ல. அல்லாஹ்வின் அருள் செய்யப்பட்டவர் என்ற பொருளில் இப்படிக் கூறலாம்.
நஜாத் பத்திரிகையில் மர்ஹூம் என்ற புனைப் பெயரில் நான் கட்டுரைகள் எழுதிய போது இந்தக் கேள்வி வந்தது. இதை அப்போதே நான் விளக்கியுள்ளேன். ஆந்த ஆக்கம் கிடைக்கவில்லை.
பண்டைய அகராதி நூல்களில் மர்ஹூம் என்றால் மரணித்தவர் என்று பொருள் காணப்படவில்லை.
மர்ஹூம் என்ற சொல்லை மரணித்தவருக்குப் பயன்படுத்தப்பட்ட பின்னர் எழுதப்பட்ட அகராதி நூல்களிலும், கூகுள் போன்ற தேடு பொறியிலும் மரணித்தவர் என்று பொருள் செய்திருந்தாலும் அது அகராதி அடிப்படையிலானது அல்ல. சில ஆண்டுகளாக இந்த அர்த்தத்தில் மக்கள் பயன்படுத்துவதன் அடிப்படையில் குறிப்பிட்டுள்ளனர். இது ஆதாரமாக ஆகாது.
நபிகள் நயகம் அவர்கள் தமது சமுதாயம் பற்றி குறிப்பிடும் போது மர்ஹூமான சமுதாயம் اُمَّةٌ مَرْحُوْمَةٌ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளனர். இதன் பொருள் செத்த சமுதாயம் என்பதல்ல. அருள் செய்யப்பட்ட சமுதாயம் என்பது தான்.
المستدرك على الصحيحين للحاكم
8372 – أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ سَلْمَانَ الْفَقِيهُ، بِبَغْدَادَ، ثَنَا الْحَسَنُ بْنُ مُكْرَمٍ، ثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ الْمَسْعُودِيُّ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي مُوسَى رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أُمَّتِي أُمَّةٌ مَرْحُومَةٌ لَا عَذَابَ عَلَيْهَا فِي الْآخِرَةِ، جَعَلَ اللَّهُ عَذَابَهَا فِي الدُّنْيَا الْقَتْلَ وَالزَّلَازِلَ وَالْفِتَنَ» هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ، وَلَمْ يُخْرِجَاهُ “
அல்லாஹ் அருள் செய்ய வேண்டும் என்று துஆ செய்யும் நோக்கில் மர்ஹூம் என்ற சொல்லை உயிருள்ளவருக்கும் பயன்படுத்தலாம். மரணித்தவருக்கும் பயன்படுத்தலாம்.