முஸ்லிம் நாடுகளில் புரட்சிகள் நடப்பது ஏன்?

கேள்வி: உலக இஸ்லாமிய நாடுகளில் அடுத்தடுத்த அதிபர்கள் அரசுகள் மாற்றப்பட்டு உள்நாட்டுப் புரட்சிகள் ஏற்பட என்ன காரணம்?

– அபூ ஜஸீம் ஸார்ஜா

பொதுவாக மனிதர்கள் சுதந்திரத்தை விரும்பக் கூடியவர்களாக உள்ளனர். அரசாங்கம் எவ்வளவு நல்லதாக இருந்தாலும் அதன் தவறுகளைச் சுட்டிக்காட்டவும், தேவைப்பட்டால் அந்த ஆட்சியை மாற்றவும் நமக்கு உரிமை வேண்டும் என விரும்புகிறார்கள். கருத்துச் சுதந்திரமும், ஆட்சியாளர்களை மாற்றும் அதிகாரமும் மக்களிடம் வழங்கப்பட்டுள்ள நாடுகளில் இதுபோல் புரட்சி நடப்பதில்லை.

எழுத்தாலும், பேச்சாலும் அரசின் தவறுகளைச் சுட்டிக் காட்டும் வாய்ப்பு இருந்தால் அவர்களின் கோபத்துக்கு அது வடிகாலாக ஆவதால் புரட்சிக்கு வேலை இல்லை.

மேலும் ஜனநாயக நாடுகளில் ஆட்சியாளர்கள் மோசமானவர்கள் என்றால், அடுத்த தேர்தலில் ஆட்சியை மாற்ற முடியும் என்பதால் பொறுமையுடன் காத்திருக்கிறார்கள்.

ஆனால் முஸ்லிம் நாடுகளில் கருத்து சுதந்திரம் இல்லை. ஆட்சியாளர்களை மாற்றும் அதிகாரமும் மக்களுக்கு இல்லை எனும் போது அடக்கி வைக்கப்பட்ட கோபம் ஒரு நேரத்தில் பொங்கி விடுகிறது.

இந்தியாவில் இந்திரா காந்தி அவசர நிலைப் பிரகடனம் செய்த போது லஞ்சம், கலப்படம், ஊழல் அனைத்தும் கட்டுக்குள் வந்தன. அரசு அலுவலர்கள் விரைவாக தங்கள் கடமையைச் செய்தனர். விலைவாசியும் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. ஆனால் கருத்துச் சுதந்திரம் மட்டும் இல்லை. இதன் காரணமாக இந்திரா காந்தி படுதோல்வியைச் சந்தித்தார். மக்கள் சுதந்திர உணர்வைத்தான் பிரதானமாகக் கருதுகிறார்கள் என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

உணர்வு 16:14

29.12.2011. 4:17 AM