முஸ்லிம் பெயரில் யூதர்கள் தான் குண்டு வைக்கிறார்களா?

இஸ்லாத்தின் பெயரால் நடை பெறும் குண்டு வெடிப்புகள் வன்முறைகள் அனைத்தும் 90 சதவிகித யூதர்கள் இஸ்லாமியராக தங்கள் பெயரை மாற்றி இஸ்லாத்தைக் களங்கப்படுத்துவதற்காகச் செய்கிறார்கள் முஸ்லிம்கள் 10 % பேர் தான் இது போன்ற காரியத்தில் ஈடுபடுகிறார்கள் என எனது நண்பன் சொல்கிறார். இது எந்த அளவுக்குச் சரி?

அப்துல் மாலிக், திருத்துறைபூண்டி

இது போல் சொல்லக்கூடியவர்கள் குண்டு வைப்பவர்களை விட இஸ்லாத்துக்கு ஆபத்தானவர்கள். இது போல் உளறுவதால் உண்மையான நமது மறுப்பு கூட கேலிக்குரியதாக ஆகிவிடும்.

உலகம் முழுவதும் முஸ்லிம் நாடுகள் தான் கிறித்தவ நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், டென்மார்க் போன்ற நாடுகளால் ஆக்கிரமிக்கப்பட்டன. தங்க்ள் நாட்டை ஆக்கிரமித்துள்ள அமெரிக்கப் பயங்கரவாதிகளை எதிர்த்து சுதந்திரப் போர் நடத்துவோர் முஸ்லிம்களாகத் தான் இருப்பார்கள். ஜப்பானை அமெரிக்கா ஆக்கிரமித்தால் அதை எதிர்த்துப் போரிடக் கூடியவர்கள் புத்த மதத்தவர்களாக இருப்பார்கள். முஸ்லிம் நாடுகளில் நடக்கும் பெரும்பாலான தாக்குதல்கள் அந்நியரை எதிர்த்து நடத்தும் விடுதலைப் போராட்டமே. இதற்கும் மதத்துக்கும் சம்மந்தம் இல்லை என்பது தான் இதற்குச் சரியான விடை.

இதற்கு மாற்றமாக யூதர்கள் இல்லாத நாடுகளில் யூதர்கள் செய்கிறார்கள் எனக் கூறினால் முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பவர்களாக நம்மைப் பற்றி நினைப்பார்கள். மேலும் யூதர்கள் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்ளவோ தாக்குதலைத் தாங்கிக் கொள்ளவோ மனவலிமை இல்லாதவர்கள்.

கிரிமினல் மூளையைப் பயன்படுத்தித் தான் நமக்கு தீங்கு இழைப்பார்கள். இஸ்ரேலில் மட்டும் ஆட்சி இருக்கின்ற காரணத்தால் அதிகார பலத்தைப் பயன்படுத்தி நம்மை ஒடுக்குகின்றனர். மற்ற நாடுகளில் குள்ள நரித்தனமான சூழ்ச்சியின் மூலமே நமக்கு இடையூறு செய்வார்கள். தற்கொலை தாக்குதல் நடத்தி தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்ள மாட்டார்கள்.

உணர்வு 16:02