நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதுகுக்குப் பின்னால் உள்ளதை அறிவார்கள் என்று ஹதீஸ் உள்ளதா?
பதில்
صحيح البخاري
718 – حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، قَالَ حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، عَنْ عَبْدِ العَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أَقِيمُوا الصُّفُوفَ، فَإِنِّي أَرَاكُمْ خَلْفَ ظَهْرِي»
வரிசைகளை சரி செய்யுங்கள் ஏனெனில் நான் எனது முதுகுக்குப் பின்னால் இருந்து உங்களை நான் பார்க்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி 718, 719, 725,
பின்புறமாக நான் உங்களைப் பார்க்கிறேன் என்று மேற்கண்ட ஹதீஸ்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை தவறாக புரிந்து கொண்டு நபிகள் நாயகம் முதுக்க்குப் பின்னாலும் பார்ப்பார்கள் என்று கூறுகின்றனர்.
இவ்வாறு புரிந்து கொள்ள முடியாது எனக் கூறும் வேறு ஆதாரங்கள் உள்ளன. அவற்றையும் இணைத்தே இது குறித்து நாம் முடிவு செய்ய வேண்டும்.
பின்வரும் ஹதீஸைப் பாருங்கள்!
صحيح مسلم
47 – (398) حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، كِلَاهُمَا عَنْ أَبِي عَوَانَةَ، قَالَ سَعِيدٌ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، قَالَ: صَلَّى بِنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَاةَ الظُّهْرِ – أَوِ الْعَصْرِ – فَقَالَ: «أَيُّكُمْ قَرَأَ خَلْفِي بِسَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى؟» فَقَالَ رَجُلٌ: أَنَا وَلَمْ أُرِدْ بِهَا إِلَّا الْخَيْرَ، قَالَ: «قَدْ عَلِمْتُ أَنَّ بَعْضَكُمْ خَالَجَنِيهَا»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹர் அல்லது அஸர் தொழுகை நடத்தினார்கள். (தொழுது முடித்தவுடன்) எனக்குப் பிறகு ஸப்பிஹிஸ்ம ரப்பிகல் அஃலா அத்தியாயத்தை ஓதியவர் யார் என்று கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் நான் தான் எனக்கூறி விட்டு இதன் மூலம் நன்மையைத் தான் நாடினேன் எனக் கூறினார்.
நூல் : முஸ்லிம்
தொழுகையில் தனக்குப் பின்னால் உள்ள ஒருவர் சப்தமாக சப்பிஹிஸ்ம அத்தியாயத்தை ஓதுவதை நபிகளார் செவிமடுத்தார்கள். அப்படி ஓதியவர் முதுகுக்குப் பின்னால் இருந்ததால் அவர் யார் என்று அவர்களால் அறிய முடியவில்லை. விசாரித்த்துத் தான் அறிந்து கொள்கிறார்கள் என்பதை இந்த ஹதீஸில் இருந்து அறியலாம்.
صحيح البخاري
799 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ المُجْمِرِ، عَنْ عَلِيِّ بْنِ يَحْيَى بْنِ خَلَّادٍ الزُّرَقِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ رِفَاعَةَ بْنِ رَافِعٍ الزُّرَقِيِّ، قَالَ: ” كُنَّا يَوْمًا نُصَلِّي وَرَاءَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا رَفَعَ رَأْسَهُ مِنَ الرَّكْعَةِ قَالَ: سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ “، قَالَ رَجُلٌ وَرَاءَهُ: رَبَّنَا وَلَكَ الحَمْدُ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ، فَلَمَّا انْصَرَفَ، قَالَ: «مَنِ المُتَكَلِّمُ» قَالَ: أَنَا، قَالَ: «رَأَيْتُ بِضْعَةً وَثَلاَثِينَ مَلَكًا يَبْتَدِرُونَهَا أَيُّهُمْ يَكْتُبُهَا أَوَّلُ»
ஒரு நாள் நாங்கள் நபிகளாருக்குப் பின்னால் தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி சமிஅல்லாஹு லிமன் ஹமிதா எனக் கூறிய போது பின்னால் இருந்து ஒரு மனிதர் ரப்பனா லகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி எனக் கூறினார். தொழுது முடித்ததும் இதைக் கூறியவர் யார் என்று கேட்டார்கள். நான் என்று அம்மனிதர் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை யார் முதலில் பதிவு செய்வது என்று முப்பதுக்கு மேற்பட்ட வானவர்கள் போட்டியிட்டதைக் கண்டேன் எனக் கூறினார்கள்
நூல் : புகாரி 799
ஹம்தன் கஸீரன் என்ற துஆவை பின்னால் ஒருவர் ஓதுகிறார். அவரது குரலைக் கேட்க முடிந்த நபிகளாருக்கு அவர் யார் என்பதை அறிய முடியவில்லை. தொழுது முடித்து விசாரித்து அறிந்து கொள்கிறார்கள்.
மலக்குகள் போட்டி போடுவதை வஹியின் மூலம் அறிந்த நபி அவர்களால் அவர் என்பதை அறிய முடியவில்லை. முதுகுக்குப் பின்னால் உள்ளதை அவர்களால் பார்க்க முடியவில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.
அப்படியானால் பின்னால் இருந்தும் உங்களைப் பார்ப்பேன் என்று நபிகள் சொன்னதற்கு என்ன அர்த்தம்? அந்த அர்த்த்தை நபிகள் நாயகத்தின் கூற்றில் இருந்தே நாம் விளங்கிக் கொள்ளலாம்.
இமாம் ருகூவு செய்யும் போது முதுகுக்குப் பின்புறம் வரிசையில் ருகூவில் இருப்பவர்களக் காண முடியும். வரிசை சரியாக உள்ளதா என்பதையும் அறிய முடியும். இப்படி பார்ப்பத்தைத் தான் நபிகள் குறிப்பிட்டார்கள் என்பதை பின்வரும் ஹதீஸ்களில் இருந்து அறிய முடியும்.
صحيح البخاري
742 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: سَمِعْتُ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” أَقِيمُوا الرُّكُوعَ وَالسُّجُودَ فَوَ اللَّهِ إِنِّي لَأَرَاكُمْ مِنْ بَعْدِي – وَرُبَّمَا قَالَ: مِنْ بَعْدِ ظَهْرِي – إِذَا رَكَعْتُمْ وَسَجَدْتُمْ “
742 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ருகூவுவையும் ஸஜ்தாவையும் நிறைவாகச் செய்யுங்கள்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் எனக்கு பின்புறமாக’ அல்லது என் முதுகுக்குப் பின்புறமாக’ நீங்கள் ருகூவு செய்யும் போதும் ஸஜ்தா செய்யும் போதும் உங்களைப் பார்க்கிறேன்.
நூல் : புகாரி 742
صحيح البخاري
6644 – حَدَّثَنِي إِسْحَاقُ، أَخْبَرَنَا حَبَّانُ، حَدَّثَنَا هَمَّامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَتِمُّوا الرُّكُوعَ وَالسُّجُودَ، فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنِّي لَأَرَاكُمْ مِنْ بَعْدِ ظَهْرِي إِذَا مَا رَكَعْتُمْ، وَإِذَا مَا سَجَدْتُمْ»
6644 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தொழுகையில்) ருகூவையும் ஸஜ்தாவையும் பரிபூரணமாகச் செய்யுங்கள். ஏனெனில், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நீங்கள் ருகூவு செய்யும் போதும் ஸஜ்தா செய்யும் போதும் என் முதுகுக்குப் பின்னால் உங்களை நான் பார்க்கிறேன்.
நூல் : புகாரி 6644