முஹம்மத் நபிக்கும், ஈஸா நபிக்கும் இடையே நபிமார்கள் உண்டா?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் ஈஸா (அலை) அவர்களுக்கும் இடையே உலகில் எந்த நபியும் அனுப்பப்படவில்லை.
صحيح البخاري
3442 – حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «أَنَا أَوْلَى النَّاسِ بِابْنِ مَرْيَمَ، وَالأَنْبِيَاءُ أَوْلاَدُ عَلَّاتٍ، لَيْسَ بَيْنِ وَبَيْنَهُ نَبِيٌّ»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் மர்யமின் மைந்தருக்கு – ஈஸா நபிக்கு- மிகவும் நெருக்கமானவன் ஆவேன். இறைத்தூதர்கள் தந்தை வழிச் சகோதரர்கள் ஆவர். எனக்கும், ஈஸா நபிக்கும் இடையே எந்த நபியும் இல்லை.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 3442