முஹம்மது நபிக்கு முன் வந்த நபிமார்கள் அனைவரும் மரணித்து விட்டார்களா?

ஒற்றுமை மாதம் இருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட திருக்குர்ஆன் வசனங்களுக்கு பீஜே எழுதிய விளக்கம்

144. முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர்.101 அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.

திருக்குர்ஆன் 3:144

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலக முஸ்லிம்களின் ஒரே தலைவராகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறார்கள். ஆனாலும், அவர்கள் இறைவனின் தூதரே தவிர இறைவனல்லர் என்பதை இவ்வசனம் வலியுறுத்துகின்றது. முஹம்மத் (ஸல்) அவர்கள் மரணித்து விட்டால் வந்த வழியே திரும்பிச் சென்று விடக்கூடாது. இறைவனது தண்டனைக்கு அஞ்சியும், இறைவனது பரிசுகளை எதிர்பார்த்தும் தான் இம்மார்க்கத்தில் இருக்க வேண்டுமே தவிர முஹம்மத் (ஸல்) அவர்களுக்காக இம்மார்க்கத்தில் இருக்கக் கூடாது என்று இவ்வசனம் அழுத்தம் திருத்தமாகக் கூறுகின்றது.

இந்தக் கருத்தைத் தெரிவிப்பதற்காக இவ்வசனம் அருளப்பட்டாலும் இவ்வசனத்தைச் சிந்திக்கும் போது ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளதாக சிலர் வாதிடுகின்றனர்.

“முஹம்மது நபிக்கு முன் தூதர்கள் சென்றுவிட்டனர்” என்ற சொற்றொடரின் அடிப்படையில் இவ்வாறு வாதிடுகின்றனர். முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர் என்றால் அவர்களுக்கு முன் வந்த அனைத்துத் தூதர்களும் மரணித்து விட்டனர் என்பதே பொருள். எனவே, முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முன் வந்த ஈஸா நபி உள்ளிட்ட அனைத்துத் தூதர்களும் மரணித்து விட்டனர் என்பது இவர்களின் வாதம்.

ஏற்கனவே வந்த தூதர்கள் மரணித்ததை முன்னுதாரணமாகக் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) மரணிப்பார்கள் என்பதை இறைவன் அறிவிப்பதால் இக்கருத்து மேலும், வலுவடைகின்றது எனவும் கூறுகின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது, பெரும்பாலான நபித்தோழர்கள் அவர்களின் மரணத்தை நம்ப மறுத்தனர். அப்போது அபூபக்கர் (ரலி) அவர்கள் இவ்வசனத்தை எடுத்துச் சொல்லித்தான் நபித்தோழர்களைச் சரியான வழிக்குக் கொண்டு வந்தார்கள். இந்த வரலாறு புகாரி (3670, 1242, 4454) மற்றும் பல ஹதீஸ் நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.

இந்த ஹதீஸ்களையும் தங்களின் வாதத்துக்கு வலுசேர்ப்பதற்கு இவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

ஈஸா நபி மரணிக்காமல் இருந்திருந்தால் அபூபக்கர் (ரலி)யின் வாதத்தை நபித்தோழர்கள் ஏற்றிருக்க மாட்டார்கள். ஈஸா நபி மரணிக்காமல் இருப்பது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஏன் மரணிக்காமல் இருக்கக் கூடாது என்று எதிர்க்கேள்வி கேட்டிருப்பார்கள்.

அபூபக்கர் (ரலி) இவ்வசனத்தை ஆதாரமாகக் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்ததை நிரூபித்தபோது நபித்தோழர்கள் எவ்வித எதிர்க் கேள்வியும் இல்லாமல் ஏற்றுக் கொண்டனர். எனவே, ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்பதை நபித்தோழர்கள் ஏகமனதாக நம்பியிருந்தார்கள் என்பதும் இவர்களின் வாதமாகும்.

திருக்குர்ஆனை அணுக வேண்டிய விதத்தில் அணுகாமல் இந்த வாதத்தை எடுத்து வைக்கின்றனர் ஒரு விஷயத்தைப் பற்றி ஒரு வசனத்தில் கூறப்பட்டதை வைத்து உடனேயே ஒரு முடிவுக்கு வருவது குர்ஆனை அணுகும் வழிமுறையல்ல.

இது பற்றி வேறு வசனங்களில் கூடுதல் விளக்கம் உள்ளதா? அல்லது விதி விலக்குகள் உள்ளனவா? என்றெல்லாம் தேடிப் பார்க்க வேண்டும். அப்படி ஏதும் இல்லாவிட்டால் அந்த ஒரு வசனத்திலிருந்து எது விளங்குகிறதோ அதை அடிப்படையாகக் கொண்டு வாதிடலாம். அவ்வாறு இல்லாமல் பல இடங்களில் அந்த விஷயம் குறித்து கூறப்பட்டால் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு முடிவுக்கு வருவதே குர்ஆனை அணுகும் முறையாகும்.

திருக்குர்ஆனில் எத்தனையோ வசனங்களில் பொதுவாகக் கூறப்பட்டதற்கு வேறு இடங்களில் விதிவிலக்குகள் கூறப்பட்டுள்ளன. இது தான் குர்ஆனின் தனி நடையாகும்.

இந்த இடத்திலேயே ஈஸா நபியைத் தவிர என்று கூறப்படவில்லையே என்று கேட்பது குர்ஆனின் நடையைப் புரிந்து கொள்ளாதவர்களின் கேள்வியாகும்.

“பெற்றோருக்கு உபகாரம் செய்யுமாறு மனிதனுக்கு நாம் வலியுறுத்தினோம்” என்று குர்ஆன் கூறுகிறது. மேலும், மனிதனை அவனது தாய் சிரமத்துடன் பெற்றெடுத்தாள் எனவும் கூறுகிறது. (பார்க்க திருக்குர்ஆன் 31:14)

இவ்வசனத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மனிதர்கள் அனைவரது நிலையும் இதுதான் என்று கூற முடியாது. மனிதன் என்பதில் ஆதம், ஹவ்வா,, ஈஸா ஆகியோரும் அடங்குவார்கள். எனவே, அவர்களுக்கும் தாய், தந்தையர்கள் இருந்தார்கள் என்று ஒருவர் வாதிடுவது எந்தளவு அறிவீனமோ இந்த வாதமும் அது போன்றதாகும்.

இவ்வசனத்தில் மனிதன் என்று பொதுவாகக் கூறப்பட்டாலும் திருக்குர்ஆனின் வேறு வசனங்களில் ஆதம், ஹவ்வா, ஆகியோருக்கு இவ்வாறு பெற்றோரைப் பேணுமாறு கட்டளை பிறப்பித்திருக்க முடியாது என்று அறிந்து கொள்கிறோம்.

மனிதர்களே என்று அழைத்து உங்களை ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான். (பார்க்க திருக்குர்ஆன் 49:13)

இந்த ஒரு வசனத்தை மட்டும் வைத்துப் பார்த்தால் ஈஸா நபிக்கும் தந்தை இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய இயலும். ஆயினும் வேறு இடங்களில் அவருக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டதால் அவரை இதிலிருந்து நீக்கி விடுகிறோம்.

மனிதனை விந்திலிருந்து படைத்ததாகப் பல வசனங்கள் கூறுகின்றன. இதில் ஆதம், ஹவ்வா, ஈஸா ஆகியோர் விதி விலக்குப் பெற்றது வேறு வசனங்களில் கூறப்பட்டுள்ளது. இது போல் ஏராளமான வசனங்கள் குர்ஆன் முழுவதும் உள்ளன.

எனவே, முஹம்மதுக்கு முன் தூதர்கள் சென்றுவிட்டனர் என்ற வார்த்தைக்குள் ஈஸா நபி அடங்கினாலும் அவர்களுக்கு வேறு இடங்களில் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதைக் கவனிக்காததால் தான் இவ்வாறு வாதிட்டு வருகின்றனர்.

ஈஸா நபி கியாமத் நாளின் அடையாளமாக இருக்கிறார்.

ஈஸா நபி மரணிப்பதற்கு முன் அவரை வேதக்காரர்கள் நம்பிக்கை கொள்வார்கள்

என்ற கருத்திலமைந்த இரு வசனங்கள் (43:61, 4:159) பற்றி முன்னர் குறிப்பிட்டுள்ளோம். அவ்விரு வசனங்களும் ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை என்று அறிவிக்கின்றன. இவ்வசனத்தைக் காட்டி ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று வாதிடுவோர் அவ்விரு வசனங்களை என்ன செய்யச் சொல்கிறார்கள்? வேதத்தில் பாதியை ஏற்று மீதியை மறுப்பவர்கள் தான் இவ்வாறு வாதிட முடியும்.

எனவே அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டார்கள் என்பதையும் இவ்விரு வசனங்களையும் இணைத்து “ஈஸா நபி தவிர மற்ற தூதர்கள் இவருக்கு முன் மரணித்து விட்டார்கள்” என்று தான் முடிவு செய்ய வேண்டும்.

மனிதனை விந்துத் துளியிலிருந்து படைத்தோம் என்பதையும், ஆதமைக் களிமண்ணால் படைத்தோம் என்பதையும் இணைத்து “ஆதம் தவிர மற்றவர்களை விந்துத் துளியில் படைத்தோம் என்று முடிவு செய்தது போல் தான் இங்கேயும் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு முடிவு செய்யும் போது எந்த வசனத்தையும் நாம் மறுக்கவில்லை. எல்லா வசனங்களும் சேர்ந்து எந்தக் கருத்தைத் தருகிறதோ அந்தக் கருத்தைத் தான் நாம் கொள்கிறோம்.

இவர்களின் வாதம் தவறானது என்பதற்கு மேற்கண்ட இரு வசனங்கள் மட்டுமின்றி மற்றொரு வசனமும் சான்றாக அமைந்துள்ளது. ஏறத்தாழ இந்த வசனத்தைப் போல் அமைந்த அந்த வசனம் இவர்களின் கருத்து தவறானது என்பதைச் சந்தேகமற நிரூபிக்கின்ற விதமாக அமைந்துள்ளது.

75. மர்யமின் மகன் மஸீஹ்92 தூதரைத் தவிர வேறில்லை.459 அவருக்கு முன் பல தூதர்கள் சென்று விட்டனர்.101 அவரது தாய் உண்மையாளர். அவ்விருவரும் உணவு உண்போராக இருந்தனர். இவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்தியுள்ளோம் என்பதைச் சிந்திப்பீராக! பின்னர் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் சிந்திப்பீராக!

திருக்குர்ஆன்: 5:75

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றி  3:144 வசனம் குறிப்பிடுவது போலவே இவ்வசனம் ஈஸா நபியைக் குறித்துப் பேசுகிறது.

இவ்வசனத்தைக் கவனமாகப் பார்த்தால் ஈஸா நபியவர்கள் மரணிக்கவில்லை என்பது பளிச்சென விளங்கும்.

இவ்வசனம் அருளப்பட்ட காலத்தில் – நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்த காலத்தில் – ஈஸா நபி மரணித்திருந்தார்கள் என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். அவரைக் கடவுளாக நம்புகிற மக்களுக்கு மறுப்புக் கூறும் போது எவ்வாறு கூற வேண்டும்?

“ஈஸா தூதர் தான். அவரே மரணித்து விட்டார்” என்று கூறினால் அது தான் சரியான பதிலாக இருக்க முடியும்.

மரணித்தவரை எப்படிக் கடவுள் எனக் கருதலாம் என்ற கருத்தை இது அழுத்தமாகச் சொல்லும். ஈஸா நபி மரணித்திருந்தால் அதைச் சொல்ல வேண்டிய இடம் இது தான். ஈஸா நபியைக் கடவுளாக்கியவர்களுக்கு மறுப்புச் சொல்லும் இந்த இடத்தில் இறைவன் பயன்படுத்திய வார்த்தையைக் கவனித்தீர்களா?

“ஈஸா தூதர் தான். அவருக்கு முன்னர் தூதர்கள் சென்று விட்டனர்” என்று அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ் ஞானமிக்கவன். நுண்ணறிவாளன். அவன் பொருத்தமற்ற சொற்களைப் பயன்படுத்துவதை விட்டும் தூய்மையானவன். ஈஸா நபி மரணித்திருந்தால் இந்த வாசக அமைப்பு இறைவன் தெளிவாகக் கூறுபவன் அல்லன் என்ற கருத்தைத் தந்து விடும்.

அவரே இறந்திருக்கும் போது அதைக் கூறாமல் அவருக்கு முன் சென்றவர்கள் இறந்து விட்டார்கள் என்று விவேகமுள்ளவர் யாரேனும் பேசுவதுண்டா?

அவருக்கு முன்னர் தூதர்கள் சென்றுவிட்டனர் எனக் கூறி விட்டு அவர்கள் பூமியில் வாழும் போது சாப்பிட்டுக் கொண்டிருந்ததைக் காரணமாகக் காட்டி கடவுள் தன்மையை மறுக்கிறான். அவர் மரணித்திருந்தால் அதையே காரணமாகக் காட்டி இறைவன் தக்க பதில் கூறியிருப்பான்.

முஹம்மதுக்கு முன் தூதர்கள் சென்றுவிட்டனர் என்ற வசனம் அருளப்படும் போது முஹம்மத் (ஸல்) உயிரோடு இருந்தனர் என்று புரிந்து கொள்கிறோம்.

அதுபோல் ஈஸாவுக்கு முன் தூதர்கள் சென்றுவிட்டனர் என்ற வசனம் இறங்கும் போதும் ஈஸா நபி உயிருடன் இருந்தனர் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒரே மாதிரியாக அமைந்த இரண்டு இடங்களில் வித்தியாசமாகப் பொருள் கொள்வது ஏற்புடையதன்று.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த போது நபித்தோழர்கள் நடந்து கொண்ட முறையை அவர்கள் ஆதாரமாகக் காட்டுவதும் சரியல்ல.

ஈஸா நபி வருவார்கள் என்ற ஏராளமான ஹதீஸ்களை நபித்தோழர்கள் தான் அறிவிக்கின்றனர். நாம் முன்னர் சுட்டிக் காட்டிய 43:61, 4:159 இரு வசனங்களையும் அறிந்திருந்தனர். ஈஸா நபிக்கு விதிவிலக்கு இருந்ததைச் சந்தேகமற அவர்கள் அறிந்திருந்தனர். நபிகள் நாயகத்துக்கும் அது போல விதிவிலக்கு இருக்கும் என்று அவர்கள் எண்ணியதால் தான் அவர்கள் மரணிக்கவில்லை என்று வாதிட்டனர். நபிகள் நாயகத்துக்கு விதிவிலக்கு இல்லை என்பது அபூபக்கர் (ரலி)யின் வாதத்தின் மூலம் தெரிந்ததும் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டார்கள்.

ஈஸா நபி வருகை பற்றி அறிந்து கொள்ள 4:159 வசனத்தை ஓதுங்கள் என்று அபூஹுரைரா (ரலி) கூறியதை முன்னர் நாம் குறிப்பிட்டதும், ஈஸா நபியின் வருகை பற்றிய ஹதீஸ்களைப் பல நபித்தோழர்கள் அறிவித்திருப்பதும் நபித்தோழர்களின் நிலைப்பாட்டை நமக்கு விளக்குகிறது.

அனைவருக்கும் சர்வசாதாரணமாகத் தெரிந்த விதிவிலக்குகளை யாரும் ஆதாரமாகக் காட்டிப் பேச மாட்டார்கள்.

வவ்வால் பறவையினமாக இருந்தும் அது பாலூட்டியாக இருப்பது அனைவருக்கும் தெரிந்த விதிவிலக்கு. இது அனைவருக்கும் தெரிந்த விஷயமாக இருப்பதால் “பறவைகள் பாலூட்டுவதில்லை” என்று நாம் பேசலாம். அதை யாரும் குறை காண மாட்டார்கள். பேசுபவருக்கும் கேட்டவருக்கும் வவ்வால் விதிவிலக்கு என்பது சொல்லாமலேயே தெரியும்.

ஈஸா நபி விஷயம் விதிவிலக்கானது என்பதை நபித்தோழர்கள் நம்பியிருந்ததால் தான் அவர்கள் அதை ஆதாரமாகக் காட்டி கேள்வியெழுப்பவில்லை.

எனவே, இவ்வசனம் ஈஸா நபி மரணித்ததைக் கூறவில்லை. இது போல அமைந்த 5:75 வசனம் அவர்கள் இதுவரை மரணிக்கவில்லை என்று விதிவிலக்கைக் கூறுகிறது என்பதே சரியாகும்.

ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று கூறுவோர் வேறு சில வாதங்களையும் முன் வைக்கிறார்கள்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...