நாம் நபிக்கு அடிமை என்று குர்ஆன் கூறுகிறதா?

மனிதர்களாகிய நாம் அல்லாஹ்வுக்கு மட்டும் அடிமையல்ல! அவனுடைய தூதருக்கும் அடிமை தான் என்று சிலர் கூறுகின்றனர். அதற்கு ஆதாரமாக பின்வரும் குரான் வசனத்தையும் கூறுகின்றனர்.

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று தெரிவிப்பீராக! திருக்குர்ஆன் 39:53

“எனது அடியார்களே”! என்று மக்களை அழைக்குமாறு நபிக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான். இதன் மூலம் நாம் நபியவர்களுக்கும் அடிமைகளே என்று கூறுகின்றனர். இது சரியா?

முஹம்மது இஹ்ஸாஸ்

பதில்:

இறைவனுக்கு இணை வைக்கின்ற விஷயத்தில் வெறிபிடித்து திரிபவர்கள் இப்படிப்பட்ட வாதத்தை வைக்கின்றனர்.

இந்தப் பெரும் பாவத்தைச் செய்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் புகழ் சேர்க்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.

ஆனால் இவ்வாறு கூறுபவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி முழு இணைவைப்பில் விழுந்து விடுகிறார்கள்.

இறைவனுக்கும், மனிதர்களுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வேறுபாடு இறைவன் எஜமானாகவும், மனிதர்கள் அவனுக்கு அடிமையாகவும் இருப்பது தான்.

இறைவனுக்கு மட்டும் உரிய இந்தத் தகுதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உள்ளது என்று நம்பிவிட்டால் இதற்கு மேல் பெரிய இணைவைப்பு என்ன இருக்கின்றது?.

இவர்கள் சுட்டிக்காட்டும் வசனத்தின் கருத்து என்ன?

பொதுவாக எல்லா மொழிகளிலும் இது போன்ற சொற்களுக்கு இரண்டு கருத்துக்கள் உள்ளன.

உங்களுக்கும், உங்கள் தகப்பனாருக்கும் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பேசிக் கொள்வதில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர் ஒருவரை அழைத்து தந்தையிடம் ஒரு செய்தியைச் சொல்லி அனுப்புகிறீர்கள். என் தந்தையே நான் இனிமேல் உங்கள் மனம் புண்படும்படி நடக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு வா என்று நண்பரிடம் கூறுகிறீர்கள். இந்த வார்த்தையை மட்டும் பார்த்தால் உங்கள் தந்தை உங்கள் நண்பருக்கு தந்தை போல் தோற்றம் தருகிறது.

வார்த்தையில் அந்தக் கருத்து இருந்தாலும் செய்தியைச் சொன்ன நீங்களும், சொல்லி அனுப்பிய உங்கள் நண்பரும், உங்கள் தந்தையும் அவ்வாறு பொருள் கொள்ள மாட்டார்கள்.

ஏனெனில் மேற்கண்ட வாசகத்தில் ஒரு சொல் மறைந்து நிற்கிறது என்று தான் இதைப் புரிந்து கொள்வோம்.

என் தந்தையே நான் இனிமேல் உங்கள் மனம் புண்படும்படி நடக்கமாட்டேன் என்று சொல்லி விட்டு வா என்றால் என் தந்தையே நான் இனிமேல் உங்கள் மனம் புண்படும்படி நடக்கமாட்டேன் என்று (நான் சொன்னதாக) சொல்லி விட்டு வா என்றுதான் அர்த்தம்.

நான் சொன்னதாக என்ற வார்த்தை இல்லாவிட்டாலும் பயன்படுத்தப்பட்ட சூழ்நிலை இதை நமக்குச் சொல்லித் தந்து விடுகிறது.

உங்கள் நண்பரின் தந்தை வேறு; உங்கள் தந்தை வேறு என்பதால் அதுவே சரியான பொருளை நமக்குச் சொல்லித்தந்து விடுகிறது.

இது போல் ஆயிரமாயிரம் சொற்பிரயோகங்கள் அனைத்து மொழி பேசும் மக்கள் மத்தியிலும் பரவலாகக் காணப்படுகிறது.

மனிதர்களின் பேச்சு வழக்கில் தான் குர்ஆனும் அருளப்பட்டதால் இது போல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எழுத்து நடையில் குர்ஆன் அருளப்படவில்லை. பேச்சு நடையில் அருளப்பட்டது. பேச்சு வழக்கில் அதை எடு இதை எடு என்று சொல்வோம். எதைச் சொல்கிறோம் என்பதை வார்த்தை விளக்காவிட்டாலும் சூழ்நிலை அதை விளக்கி விடும்.

ஆனால் எழுத்து நடையில் பேனாவை எடு பென்சிலை எடு என்று தான் எழுத வேண்டும். அதாவது பேச்சுக்களுக்கு பொருள் கொள்ளும் போது அது சொல்லப்பட்ட சூழ்நிலைகளும் கவனத்தில் கொள்ளப்படுதல் வேண்டும்.

இன்னும் தெளிவாக இதைப் புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தைப் பாருங்கள்.

திருக்குர்ஆனின் முதல் அத்தியாயம் அல்ஃபாத்திஹா அத்தியாயம். எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் அகிலத்தில் அதிபதி. அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் என்று அது ஆரம்பிக்கிறது. சூழலைக் கவனிக்காமல் சொல்லை மட்டும் பார்த்தால் இது அல்லாஹ்வின் வார்த்தை அல்ல எனக் கூறலாம். அல்லாஹ் சொல்வதாக இருந்தால் இப்படி படர்க்கையாகக் கூறாமல் எல்லாப் புகழும் எனக்கே. நான் அகிலத்தின் அதிபதி. நான் அளவற்ற அருளாளன். நிகரற்ற அண்புடையோன் என்று தான் கூற வேண்டும்.

சொல்லமைப்பை மட்டும் வைத்துக் கொண்டு 39:53 வசனத்துக்கு இந்தக்கேடு கெட்டவர்கள் அர்த்தம் செய்தது போல் இதற்கும் அர்த்தம் செய்வார்களா? இச்சொல்லமைப்பு அல்லாஹ் கூறுவது போல் இல்லை. எனவே இது அல்லாஹ்வைப் புகழ்வதற்காக முஹம்மது நபி சுயமாகச் சொன்ன வார்த்தை என்று இவர்கள் கூறுவார்களா?

எனவே தான் இவ்வசனத்துக்கான நம்முடைய தமிழாக்கத்தில் அடைப்புக் குறிக்குள் மறைந்து கிடக்கும் வார்த்தையைப் போட்டுள்ளோம்.

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! என்று நாம் நமது தமிழாக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளோம்.

நபிகள் நாயகத்துக்கோ, வேறு நபிமார்களுக்கோ மனிதர்கள் அடிமைகள் அல்லர் என்று பல வசனங்கள் தெளிவாகக் கூறுவதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

மனிதர்கள் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் அடிமைகளாக இருக்க முடியாது. மக்கள் தனக்கு அடிமையாக இருக்க வேண்டும் எனக் கூற எந்த இறைத் தூதருக்கும் தகுதியில்லை என்று குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது.

مَا كَانَ لِبَشَرٍ أَنْ يُؤْتِيَهُ اللَّهُ الْكِتَابَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ ثُمَّ يَقُولَ لِلنَّاسِ كُونُوا عِبَادًا لِي مِنْ دُونِ اللَّهِ وَلَكِنْ كُونُوا رَبَّانِيِّينَ بِمَا كُنْتُمْ تُعَلِّمُونَ الْكِتَابَ وَبِمَا كُنْتُمْ تَدْرُسُونَ (79)3

எந்த மனிதருக்காவது அல்லாஹ் வேதத்தையும், அதிகாரத்தையும், நபி எனும் தகுதியையும் வழங்கினால் (அதன்) பின் “அல்லாஹ்வையன்றி எனக்கு அடிமைகளாக ஆகி விடுங்கள்!” என்று கூறுகின்ற அதிகாரம் அவருக்கு இல்லை. மாறாக, “வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக் கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகி விடுங்கள்!” (என்றே கூறினர்)
திருக்குர்ஆன் 3:79

நபிமார்கள் உட்பட பூமியில் உள்ளவர்கள் அனைவரும் அல்லாஹ் ஒருவனுக்குத் தான் அடிமையாக இருக்க வேண்டும்.

இதைப் பின்வரும் வசனமும் தெளிவுபடுத்துகின்றது.

إِنْ كُلُّ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ إِلَّا آتِي الرَّحْمَانِ عَبْدًا(93)19

வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அளவற்ற அருளாளனிடம் அடிமையாகவே வருவார்கள்.
திருக்குர்ஆன் 19:93

திருக்குர்ஆனில் பல இடங்களில் மனிதர்களை எனது அடியார்களே என்று அல்லாஹ் அழைக்கின்றான்.

அது போன்று  39:53 வது வசனத்திலும் எனது அடியார்களே என்று இறைவனே அழைத்துள்ளான்.

இறைவனுடைய இந்த அழைப்பை மக்களிடம் எடுத்துச் சொல்லுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உத்தரவிடப்படுகின்றது. இதுவே குர்ஆனைச் சரியாக புரிந்துகொள்ளும் முறை.

நபிமார்களும் அல்லாஹ்வின் அடிமைகளாகத் தான் இருக்க முடியும். அவர்கள் எவ்வளவு தான் இறைவனுக்கு நெருக்கமானாலும் இறைவனுக்கு அடிமை என்ற நிலையிலிருந்து மாற முடியாது. பின்வரும் ஆதாரங்கள் இதை தெளிவுபடுத்துகின்றது.

وَأَنَّهُ لَمَّا قَامَ عَبْدُ اللَّهِ يَدْعُوهُ كَادُوا يَكُونُونَ عَلَيْهِ لِبَدًا(19)72

அல்லாஹ்வின் அடியார் (முஹம்மது) அவனிடம் பிரார்த்திக்க எழும் போது (மக்கள்) கூட்டம் கூட்டமாக அவரை நெருங்கி விடுகின்றனர்.
திருக்குர்ஆன் 72:19

سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ (1)17

மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.
திருக்குர்ஆன் 17:1

1130 حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ حَدَّثَنَا مِسْعَرٌ عَنْ زِيَادٍ قَالَ سَمِعْتُ الْمُغِيرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ إِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَقُومُ لِيُصَلِّيَ حَتَّى تَرِمُ قَدَمَاهُ أَوْ سَاقَاهُ فَيُقَالُ لَهُ فَيَقُولُ أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا رواه البخاري

முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “தமது பாதங்கள்’ அல்லது “கணைக்கால்கள்’ வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்படும்போது “நான் நன்றியுள்ள அடிமையாக இருக்க வேண்டாமா?” என்று கேட்பார்கள்.
நூல் : புகாரி 1130

3445 حَدَّثَنَا الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ سَمِعْتُ الزُّهْرِيَّ يَقُولُ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ ابْنِ عَبَّاسٍ سَمِعَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ عَلَى الْمِنْبَرِ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا تُطْرُونِي كَمَا أَطْرَتْ النَّصَارَى ابْنَ مَرْيَمَ فَإِنَّمَا أَنَا عَبْدُهُ فَقُولُوا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ رواه البخاري

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

“கிறித்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை வரம்பு மீறி உயர்த்தியதைப் போல் நீங்கள் என்னை வரம்பு மீறி உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடிமை தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) “அல்லாஹ்வின் அடிமை’ என்றும் “அல்லாஹ்வின் தூதர்’ என்றும் சொல்லுங்கள்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.
நூல் : புகாரி 3445

இந்த ஆதாரங்கள் நபிகள் நாயகமும் அல்லாஹ்வின் அடிமை என்று கூறுவதாலும், அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் மனிதர்கள் அடிமைகள் அல்லர் என்று கூறுவதாலும் இதற்கு ஏற்பத்தான் 33:59 வசனத்துக்குப் பொருள் கொள்ள வேண்டும்.

எனது அடியார்களே அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழக்காதீர்கள் என்று அல்லாஹ் கூறுவதைத் தெரிவிப்பீராக என்பது தான் இதன் பொருளாகும்.

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...