மொத்த நபிமார்கள் எத்தனை?
உலகம் படைக்கப்பட்டது முதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வரை அனுப்பப்பட்ட மொத்த நபிமார்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 24 ஆயிரம் என்று பரவலாக ஆலிம்களால் சொற்பொழிவுகளில் கூறப்பட்டு வருகிறது. இதற்கு ஆதாரம் உள்ளதா?
ஏ.சுலைமான், விருத்தாசலம்.
பதில்:
مسند أحمد 22288 حدثنا أبو المغيرة ، حدثنا معان بن رفاعة ، حدثني علي بن يزيد ، عن القاسم أبي عبد الرحمن ، عن أبي أمامة ، قال : كان رسول الله صلى الله عليه وسلم في المسجد جالسا، وكانوا يظنون أنه ينزل عليه، فأقصروا عنه، حتى جاء أبو ذر، فاقتحم، فأتى فجلس إليه، فأقبل عليهم النبي صلى الله عليه وسلم، فقال : ” يا أبا ذر، هل صليت اليوم ؟ “. قال : لا. قال : ” قم فصل “. فلما صلى أربع ركعات الضحى أقبل عليه، فقال : ” يا أبا ذر، تعوذ بالله من شر شياطين الجن والإنس “. قال : يا نبي الله، وهل للإنس شياطين ؟ قال : ” نعم، شياطين الإنس والجن يوحي بعضهم إلى بعض زخرف القول غرورا “. ثم قال : ” يا أبا ذر، ألا أعلمك كلمة من كنز الجنة ؟ “. قال : بلى، جعلني الله فداءك. قال : ” قل : لا حول ولا قوة إلا بالله “. قال : فقلت : لا حول ولا قوة إلا بالله. قال : ثم سكت عني، فاستبطأت كلامه، قال : قلت : يا نبي الله، إنا كنا أهل جاهلية وعبادة أوثان، فبعثك الله رحمة للعالمين، أرأيت الصلاة، ماذا هي ؟ قال : ” خير موضوع، من شاء استقل، ومن شاء استكثر “. قال : قلت : يا نبي الله، أرأيت الصيام، ماذا هو ؟ قال : ” فرض مجزي “. قال : قلت : يا نبي الله، أرأيت الصدقة، ماذا هي ؟ قال : ” أضعاف مضاعفة، وعند الله المزيد “. قال : قلت : يا نبي الله، فأي الصدقة أفضل ؟ قال : ” سر إلى فقير، وجهد من مقل “. قال : قلت : يا نبي الله، أيما أنزل عليك أعظم “. قال : { الله لا إله إلا هو الحي القيوم } ؛ آية الكرسي “. قال : قلت : يا نبي الله، أي الشهداء أفضل ؟ قال : ” من سفك دمه، وعقر جواده “. قال : قلت : يا نبي الله، فأي الرقاب أفضل ؟ قال : ” أغلاها ثمنا، وأنفسها عند أهلها “. قال : قلت : يا نبي الله، فأي الأنبياء كان أول. قال : ” آدم “. قال : قلت : يا نبي الله، أونبي كان آدم ؟ قال : ” نعم، نبي مكلم، خلقه الله بيده، ثم نفخ فيه روحه، ثم قال له : يا آدم. قبلا “. قال : قلت : يا رسول الله، كم وفى عدة الأنبياء ؟ قال : ” مائة ألف وأربعة وعشرون ألفا، الرسل من ذلك ثلاثمائة وخمسة عشر جما غفيرا “.
அல்லாஹ்வின் தூதரே! நபிமார்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு லட்சத்து இருபத்து நான்காயிரம் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி)
நூல் : அஹ்மத், தப்ரானி
இது பலவீனமான ஹதீஸாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் அலீ பின் யஸீத் அல் ஹானி என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவராவார்.
இது போல் மற்றொரு ஹதீஸ் இப்னு ஹிப்பான் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவும் பலவீனமான ஹதீஸாகும்.
இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்ராஹீம் பின் ஹிஷாம் அல்கஸ்ஸானி என்பவர் இடம் பெறுகிறார். இவர் பொய்யர் என்று சந்தேகிக்கப்பட்டவர் என்பதால் இதுவும் பலவீனமான ஹதீஸாகும்.
அல்லாஹ் ஏராளமான நபிமார்களை அனுப்பியுள்ளான். அவர்களின் எண்ணிக்கை நமக்குச் சொல்லப்படவில்லை என்பதே சரியான நம்பிக்கையாகும்.
இந்த எண்ணிக்கையை விட அதிகமான நபிமார்கள் அனுப்பப்பட்டு இருந்தால் அவர்களை நாம் மறுத்த குற்றம் ஏற்படும்.
அதை விட குறைவான எண்ணிக்கையில் நபிமார்கள் அனுப்பப்பட்டு இருந்தால் நபியல்லாதவர்களை நபி என்று நம்பிய குற்றம் ஏற்படும். இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.