உங்களை யூதக்கைக்கூலி என்று உங்கள் எதிரிகள் சொல்கிறார்களே அது ஏன்?

அப்துல்லாஹ், வத்தலக்குண்டு

பதில் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலம் முதல் இன்றைய தேதி வரை யூதர்கள் முஸ்லிம்களை எதிரிகளாகக் கருதி செயல்பட்டு வருகின்றனர். தாங்கள் உயர்ந்த இனம் என்று யூதர்கள் கொண்டிருந்த இறுமாப்பை இஸ்லாம் ஒழித்துக் கட்டியது போல் வேறு எந்த இஸங்களும் ஒழித்துக் கட்டியதில்லை.

பிறப்பால் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று யூதர்கள் கட்டிவைத்த கோட்டை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் தகர்த்து எறியப்பட்டதால் இஸ்லாத்தை ஒழிக்க வேண்டும் என்ற வெறி அவர்கள் இரத்தத்தில் ஊறிப் போனது.

வலிமையால் இஸ்லாத்தை வெல்ல முடியாததால் நரித்தனம் செய்து இஸ்லாத்தை வீழ்த்த நினைத்தனர். கேடுகெட்ட கொள்கைகளை இஸ்லாமியக் கொள்கை என்ற சாயம் பூசி முஸ்லிம்களிடம் தினித்தனர். இதனால் இஸ்லாமும் மற்ற மதங்களைப் போல் மூட நம்பிக்கை நிறைந்த மார்க்கம் என்ற கருத்தை விதைக்க நினைத்தனர். ஆனால் அதிலும் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை.

இந்த வரலாறை அனைத்து முஸ்லிம்களும் அறிந்து வைத்திருப்பதால் சீர்திருத்தம் செய்பவர்களுக்கு யூதக்கைக்கூலி என்ற முத்திரை குத்தினால் அதன் மூலம் சத்தியப் பிரச்சாரத்தை முடக்கிவிடலாம் என்று கருதி இவ்வாறு விமர்சிக்கின்றனர். நாம் எடுத்துக் காட்டும் எந்த ஆதாரத்துக்கும் பதில் இல்லாததால் யூதக் கைக்கூலி என்ற ஒரு பதிலில் தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றனர்.

இந்தச் சமுதாயத்தில் அவ்வப்போது யூதக் கைக்கூலிகள் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் யூதக்கைக்கூலி என்று ஒருவரை அல்லது ஒரு இயக்கத்தைச் சொல்வதாக இருந்தால் அதற்கான காரண காரியத்தை விளக்க வேண்டும்.

யூதர்களின் கொள்கைக்கு நாம் வக்காலத்து வாங்குகிறோம் என்பதற்காக இப்படி சொல்கிறார்களா? அல்லது யூதர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு நாம் பிரச்சரம் செய்கிறோம் என்பதற்காக இப்படி சொல்கிறார்களா என்பதை அவர்கள் தெளிவுபடுத்துவதில்லை.

ஆனால் நம்மை இப்படி விமர்சிப்பவர்கள் தான் யூதக் கைக்கூலிகள் என்று நாம் ஆதாரத்துடன் சொல்ல முடியும்.

யூதர்கள் உசைரைக் கடவுளின் மகன் என்று சொன்னார்கள். அதாவது உசைர் என்பார் கர்த்தரின் மகன் என்ற தரத்தில் உள்ளவர் என்பது அவர்களின் கொள்கை.

அப்துல் காதிர் ஜீலானி என்பவர் அல்லாஹ்வின் அர்ஷுக்கு அருகில் தொட்டிலில் துங்கிக் கொண்டு இருப்பதாகக் கதை எழுதி வைத்துக் கொண்டு சுன்னத் ஜமாஅத்தினர் பலர் அதை நம்புகின்றனர்.

இது தான் யூதக் கொள்கை. இவர்கள் தான் யூதக்கைக்கூலி என்று சொல்ல முடியும்.

யூதர்கள் தங்களின் நபிமார்களின் அடக்கத்தலங்களை தர்காவாக ஆக்கிக் கொண்டார்கள் என்பதற்காக அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மரணத்தறுவாயில் கண்டித்தார்கள்.

செத்துப் போனவர்களுக்கு ஊர்கள் தோறும் தர்கா கட்டி அந்த யூதர்கள் வழியில் யூதக் கொள்கைக்கு உயிர் கொடுக்கும் சுன்னத் ஜமாஅத்தினர் தான் யூதக் கைக்கூலிகள். தர்காவைத் தகர்க்க வெண்டும் எனக் கூறி நாம் யூதக் கொள்கைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கிறோம்.

பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை. மொழியால் உயர்வு தாழ்வு இல்லை என்பது நபி வழி.

ஆனால் யூதர்கள் தங்களை உயர்ந்த இனம் என்று நினைத்துக் கொண்டார்கள். சுன்னத் ஜமாஅத்தினர் அரபி பேசுபவன் சிறந்தவன் என்றும் குறிப்பிட்ட வம்சத்தில் பிறந்தவன் சிறந்தவன் என்றும் மத்ஹபு நூல்களில் எழுதி வைத்து யூதக் கொளகையை இஸ்லாத்தில் தினித்தார்கள். இவர்கள் தான் யூதக் கைக்கூலிகள்.

எழுத்துக்களுக்கு நம்பர் கொடுத்து மந்திர வேலை பார்ப்பது யூதர்களின் வழிமுறை. அதை அப்படியே பின்பற்றி அப்ஜத் கணக்கு என்று போட்டு அதே போல் மக்களை ஏமாற்றிவரும் கூட்டம் தான் யூதக் கைக்கூலிகள்.

இன்று நாம் எதிர்த்து பிரச்சாரம் செய்யும் கொள்கைகளில் அதிகமானவை யூதர்களைப் பார்த்து காப்பி அடிக்கப்பட்டவையாகும். யூதக் கொள்கையை முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து ஒழித்துக்கட்டுபவர்கள் ஒருக்காலும் யூதக்கைக்கூலிகளாக இருக்க முடியாது.

மேலும் யூதர்களின் இஸ்ரேல் அரசுக்கு நரசிம்மராவ் அரசு அங்கீகாரம் அளித்த போதும் இன்னபிற சந்தர்ப்பங்களிலும் நாம் அதை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்தியுள்ளோம்.

ஆனால் நம்மை யூதக் கைக்கூலி எனச் சொல்லும் கூட்டத்தினராகிய மத்ஹப்வாதிகள் எகிப்தில் என்ன செய்தார்கள்? இஸ்ரேலுடன் காதல் கொண்டு உறவை வளர்த்தனர். சரணாகதி அடைந்தனர்.

இஸ்ரேலுக்கும், நமக்கும் நிலப் பிரச்சனை தான் உள்ளது; கொள்கைப் பிரச்சனை இல்லை என்று சொன்ன கிறுக்கனை எல்லாம் இன்றும் மார்க்க் அறிஞராக ஒரு கூட்டம் போற்றிக் கொண்டு அவனது நூல்களை மொழி பெயர்த்து வெளியிட்டுக் கொண்டுள்ளது. இவர்கள் தான் யூதக் கைக்கூலிகள்

நாம் யூதக் கொள்கையை ஒழித்துக் கட்ட சபதம் ஏற்ற கூட்டத்தினராவோம். நம்மை யூதக்கைக்கூலி என்று சொல்லக் கூடியவர்கள் அதற்கான காரணத்தைச் சொல்லட்டும்.

உணர்வு 16:31

28.03.2012. 12:06 PM

test 6 னகனம் df

test 6 test 6 test 6 Read in OnlinePJ.in ...

test 7

test 7 test 7 test 7 Read in OnlinePJ.in ...

test 8b

test 8b test 8b test 8b Read in OnlinePJ.in ...

test 8c

test 8c test 8c test 8cRead in OnlinePJ.in ...

test 4

test 4 44 4 Read in OnlinePJ.in ...

test 5

test 5 5 5 Read in OnlinePJ.in ...

மழைத் தொழுகை – 3 delete

நாட்டில் பஞ்சம், வறட்சி ஏற்படும் போது அவற்றை நீக்குவதற்காக, மழை வேண்டி வல்ல அல்லாஹ்விடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழை வேண்டி இரண்டு ரக்அத்கள் தொழுவித்துள்ளார்கள். மழைத் ...

Yes

நாட்டில் பஞ்சம், வறட்சி ஏற்படும் போது அவற்றை நீக்குவதற்காக, மழை வேண்டி வல்ல அல்லாஹ்விடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழை வேண்டி இரண்டு ரக்அத்கள் தொழுவித்துள்ளார்கள். மழைத் ...

இஸ்திகாரா தொழுகை – 2 delete

நமக்கு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டு, எதைச் செய்வது என்று சிக்கல் ஏற்பட்டால் நமக்கு நன்மையானதைத் தேர்வு செய்ய நாடி இரண்டு ரக்அத் தொழுவதற்கு இஸ்திகாரா தொழுகை என்று சொல்லப்படும். இரண்டு ரக்அத்கள் தொழுத பின் ...

மழைத் தொழுகை – 2

நாட்டில் பஞ்சம், வறட்சி ஏற்படும் போது அவற்றை நீக்குவதற்காக, மழை வேண்டி வல்ல அல்லாஹ்விடம் தொழுது பிரார்த்தனை செய்ய வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழை வேண்டி இரண்டு ரக்அத்கள் தொழுவித்துள்ளார்கள். மழைத் ...

பிரயாணத்தில் வித்ரு தொழுகையின் அவசியம்: ஒரு மார்க்க விளக்கம்

இஸ்லாமிய மார்க்கம் பயணத்தில் இருப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளது. அந்த வகையில், நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டாகச் சுருக்கித் தொழுவதற்கும் (கஸர்), இரு நேரத் தொழுகைகளை இணைத்துத் தொழுவதற்கும் (ஜம்வு) அனுமதி உண்டு. இத்தகைய ...

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...