வஞ்சிக்கப்படும் முஸ்லிம் சமுதாயம்!

மராட்டிய மாநிலம், புனே நகரில் உள்ள ஜெர்மன் பேக்கரியில் 2010-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி பயங்கர குண்டு வெடித்தது. இந்தக் குண்டு வெடிப்பில் சிக்கி 5 வெளிநாட்டவர்கள் உட்பட 17 பேர் இறந்தனர். 64 பேர் படுகாயமடைந்தனர். இந்தக் குண்டுவெடிப்பு சம்பந்தமாக அதே ஆண்டு செப்டம்பர் மாதம் புனே பேருந்து நிலையத்தில் வைத்து மிர்சா ஹிமாயத் பெய்க் என்பவரை போலீசார் கைது செய்தனர். இது தவிர அபு ஜிண்டால் என்பவரையும் இந்தக் குண்டு வெடிப்பு வழக்கில் சேர்த்தனர்.

ஜெர்மன் பேக்கரியில் குண்டு வெடித்தபோது அபு ஜிண்டால் வெளியில் இல்லை. மாறாக மும்பை தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்தார். இப்படி சிறைக்குள் இருந்தவரைத் தான் ஜெர்மன் பேக்கரியில் குண்டு வைத்த வழக்கில் போலீசார் சேர்த்தனர்.

ஒருவர் சிறைக்குள் இருந்துகொண்டு, வெளியில் வந்து ஜெர்மன் பேக்கரியில் குண்டு வைத்தார் எனில் இந்தக் குற்றச்சாட்டு முழுக்க முழுக்க பொய்யாக இருக்க வேண்டும். அல்லது சிறை அதிகாரிகள் இவரை சட்டவிரோதமான முறையில் வெளியில் அனுப்பி குண்டுகளை வெடிக்கச் செய்தார்கள் என்று சொல்ல வேண்டும். அப்படிச் சொல்லும் போது அபு ஜிண்டாலுடன் சேர்த்து, சிறை அதிகாரிகளையும் ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு வழக்கில் சேர்க்க வேண்டும். இதில் எதையுமே செய்யவில்லை.

இதில் இன்னொரு கூத்தும் நடந்துள்ளது. அபு ஜிண்டாலை ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பில் போலீசார் சேர்த்தார்களே தவிர இந்த வழக்கில் இவரை போலீசார் கைது செய்யவே இல்லை. கைது செய்து, போலீஸ் கஸ்டடியில் எடுத்து இவரை விசாரிக்கவும் இல்லை. இவர் மீதான வழக்கை நடத்தவும் இல்லை. இவருக்கு நீதிமன்றம் எந்தத் தண்டனையும் வழங்கவில்லை. ஆனால் ஹிமாயத் பெய்க்குக்கு மட்டும் புனே அமர்வு நீதிமன்றம் 18.04.2013 அன்று தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்த பெய்க்கின் வழக்கறிஞர் அப்துர் ரஹ்மான் ஜெர்மன் பேக்கரியில் குண்டு வெடித்தபோது பெய்க் புனேவிலேயே இல்லை. மாறாக அவர் ஔரங்காபாத்தில் இருந்தார். ஔரங்காபாத்தில் இருந்துகொண்டு ஒருவர் ரிமோட் கண்ட்ரோல் மூலம் புனேயில் எப்படி வெடிகுண்டு வெடிக்கச் செய்ய முடியும்? இதை நீதிபதி கவனிக்கத் தவறி விட்டார். எனவே நாங்கள் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என்று தெரிவித்தார்.

இந்த நாட்டில் குண்டு வெடிப்பு வழக்கில் ஒருவரை தூக்கில் போடுவதற்கு அவர் குற்றம் செய்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை. அவர் முஸ்லிமாக இருந்தால் போதும். இந்த குறைந்தபட்ச தகுதிக்காகவே அவர் தூக்கில் போடப்படுவார் என்பது கடந்த கால வரலாறு.

பாராளுமன்றத் தாக்குதலில் பேராசிரியர் ஜிலானி, அப்சல் குரு ஆகியோருக்கு நேரடியான எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த இருவருக்கும் செசன்ஸ் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து, உயர் நீதிமன்றம் அதை உறுதி செய்து, உச்சநீதிமன்ற மேல் முறையீட்டில் பேராசிரியர் ஜிலானி குற்றவாளி அல்ல என்று நிரூபிக்கப்பட்டு அப்சல் குரு மட்டும் தூக்கில் போடப்பட்டார்.

அப்சல் குருவும் கூட பாராளுமன்றத் தாக்குதலில் நேரடியாகச் சம்பந்தப்பட்டு துப்பாக்கியை தூக்கிக் கொண்டு பாராளுமன்ற வளாகத்திற்குள் அத்துமீறி புகுந்து சுட்டார் என்பதற்காக அவர் தூக்கிலிடப்படவில்லை. ஆதாரங்களும், சாட்சிகளும், ஆவணங்களும் உள்ளன என்பதற்காகவும் அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை.  அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்று சொல்லியும் இவருக்கு நீதிபதிகள் தூக்குத் தண்டனை விதிக்கவில்லை.

மாறாக கூட்டு மனசாட்சி என்ற ஒன்று இருக்கிறது. அப்சல்குரு தாக்குதல் நடத்தினார் என்று நிரூபிக்கப்படவில்லையாயினும், கூட்டு மனசாட்சி அடிப்படையில் தூக்குத் தண்டனை விதிக்கிறோம் என்று சொல்லித் தான் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அப்சல் குருவுக்கு தூக்குத் தண்டனை விதித்தனர். அவரும் தூக்கில் போடப்பட்டார்.

உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை அடிப்படையாக வைத்து உயர் நீதிமன்றங்களும், உச்சநீதிமன்ற, உயர் நீதிமன்ற தீர்ப்புகளை அடிப்படையாக வைத்து செசன்ஸ் நீதிமன்றம் உள்ளிட்ட நாட்டில் உள்ள எல்லா கீழ் நீதிமன்றங்களும் தீர்ப்பு வழங்கலாம்.

அதனால் ஹிமாயத் பெய்க் குற்றம் செய்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அதை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கவும் வேண்டியதில்லை. மாறாக கூட்டு மனசாட்சி அடிப்படையில் ஆதாரங்கள், சாட்சிகள், ஆவணங்கள் இல்லாமலும் பெய்க்கிற்கு தூக்குத் தண்டனை விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.

இப்படி கூட்டு மனசாட்சி அடிப்படையில் எந்த நாட்டிலும் எவருக்கும் தூக்குத் தண்டனை வழங்கப்படுவதில்லை. இந்தியாவில் மட்டும்தான், அதுவும் முஸ்லிம்களுக்கு மட்டும் தான் இந்த வகையில் தூக்குத் தண்டனை விதிக்கப்படும். இதை எதிர்த்து முஸ்லிம்கள் எதுவும் பேசி விடக்கூடாது. அவ்வளவுதான்.

2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரோடா பாட்டியா என்ற இடத்தில் 97 அப்பாவி முஸ்லிம்களை மோடியின் அமைச்சரவையில் இருந்த பெண் மந்திரி மாயா கோட்னானி, பஜ்ரங்தள் தலைவர் பாபு பஜ்ரங்கி தலைமையிலான கும்பல் கொடூரமாகக் கொன்று குவித்தது. இவர்கள் குற்றவாளிகள் என்று நீதிமன்றத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டது. அப்போது நீதிபதி என்ன செய்திருக்க வேண்டும்?

97 அப்பாவி முஸ்லிம்களைக் கொன்ற இவர்கள் அனைவருக்கும் தூக்குத் தண்டனை விதித்திருக்க வேண்டும். அப்படி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதா? இல்லவே இல்லை. ஒருவருக்குக் கூட தூக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை.

மாறாக அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஏனெனில் கொலையாளிகள் அனைவரும் காவிக் கட்சிக்காரர்கள். கொல்லப்பட்ட 97 பேரும் அப்பாவி முஸ்லிம்கள். முஸ்லிம்களின் உயிருக்கு இந்த நாட்டில் அவ்வளவுதான் மதிப்பு. இதை முஸ்லிம்கள் புரிந்து கொண்டு குற்றம் நிரூபிக்கப்பட்ட மாயா சோட்னானிக்கு ஏன் தூக்குத் தண்டனை விதிக்கவில்லை? ஔரங்காபாத்தில் இருந்த ஹிமாயத் பெய்க்குக்கு ஏன் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது என்று கேள்வி கேட்கக்கூடாது. அப்படி கேள்வி கேட்டால் அது தேசத் துரோகமாகிவிடும். நீதிமன்ற அவமதிப்பும் ஆகிவிடும்.

அதே குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் போது குல்பர்க் சொஸைட்டியில் வைத்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.இஹ்ஸான் ஜாப்ரி உள்ளிட்ட 69 பேர் சங்பரிவார பயங்கரவாதிகளால் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த கொலைக் குற்றவாளிகள் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதே தவிர ஒருவருக்குக் கூட தூக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை. 17 பேர் மரணத்திற்கு காரணம் என சொல்லப்படும் ஹிமாயத்திற்கு ஏன் தூக்குத் தண்டனை?

69 முஸ்லிம்களைக் கொன்று குவித்த காவி பயங்கரவாதிகளுக்கு ஏன் ஆயுள் தண்டனை? இவ்வாறு முஸ்லிம்கள் இந்த நாட்டில் நியாயம் பேசிவிடக் கூடாது. பேசினால் தீவிராவதிகள், பயங்கரவாதிகள் என்று அவர்களுக்குப் பட்டம் சூட்டப்படும்.

அதே குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் போது தர்வாஜா என்ற இடத்திலும் அப்பாவி முஸ்லிம்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். இந்த பச்சைப் படுகொலைகளுக்காகவும் சங் பரிவார பயங்கரவாதிகள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார்கள். அந்த தண்டனை ஆயுள் தண்டனையாக இருந்ததே தவிர ஒருவருக்குக் கூட தூக்குத் தண்டனை விதிக்கப்படவில்லை. இதைத் தெரிந்து முஸ்லிம்கள் கேள்வி கேட்டு, ஹிமாயத் பெய்க்குக்கு பரிந்து பேசிவிடக் கூடாது. பேசினால் தீவிரவாதி, பயங்கரவாதி பட்டத்தைத்தான் சுமக்க வேண்டி வரும்.

மாலேகான் குண்டு வெடிப்பு, மர்ம கோவா குண்டு வெடிப்பு, சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு, ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு, அஜ்மீர் தர்கா குண்டு வெடிப்பு, நான்டெட் குண்டு வெடிப்பு ஆகிய இடங்களில் குண்டுவெடிப்புகளைச் செய்து நூற்றுக் கணக்கான அப்பாவி முஸ்லிம்களை நாடு முழுவதும் திட்டமிட்டுக் கொன்று குவித்த பெண் சாமியார் பிரக்யா சிங், ஆண் சாமியார் அசிமானந்த், கர்னல் புரோஹித் ஆகியோர் மீதான வழக்கு விசாரணை பல்லாண்டுகள் ஆன பிறகும் நடக்கவில்லை. இன்னும் அவர்கள் விசாரணைக் கைதிகளாகவே உள்ளனர்.

ஆனால் ஹிமாயத் பெய்க் மீதான வழக்கு 2 ஆண்டுகளுக்குள் விசாரிக்கப்பட்டு, தூக்குத் தண்டனையும் விதிக்கப்பட்டது. முஸ்லிம் மீதான வழக்கு மட்டும் ஏன் இவ்வளவு சீக்கிரம் விசாரிக்கப்படுகிறது? காவி பயங்கரவாதிகள் மீதான வழக்குகள் மட்டும் ஏன் விசாரிக்கப்படாமல் கிடப்பில் போடப்படுகின்றன என்று கேள்வி கேட்க இரண்டாம் தர குடி மக்களான முஸ்லிம்களுக்கு உரிமையில்லை என்பதை முஸ்லிம்கள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

ஹிமாயத் பெய்க்கிற்கு மாவட்ட அமர்வு நீதிமன்றம்தான் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. இதற்கு மேல் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவை இந்த தூக்குத் தண்டனையை உறுதி செய்து, ஜனாதிபதியும் கருணை மனுவை நிராகரித்தால் தான் அவர் தூக்கில் போடப்படுவார் என எதிர்பார்க்கக் கூடாது. ஆள்வோர் நினைத்தால் நாளையே கூட பெய்க்கை தூக்கில் போட்டு விடுவார்கள். இதற்கும் முன் உதாரணங்கள் உள்ளன. ஆம். அஜ்மல் கசாப், அப்சல் குரு ஆகியோரின் கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரித்தவுடன் இவ்விருவரும் கமுக்கமாக தூக்கில் போடப்பட்டார்கள்.

காலிஸ்தான் தீவிரவாதி தேவேந்தர் சிங் புல்லாரின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்து விட்டார். அதற்காக புல்லாரை ஆட்சியாளர்கள் தூக்கில் போடவில்லை. கருணை மனு நிராகரிக்கப்பட்ட புல்லார் உச்ச நீதிமன்றத்தில் தண்டனையை குறைக்க மனு செய்ய ஆள்வோரால் அனுமதிக்கப்பட்டார். அந்த மனுவையும் உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டது.

அதற்குப் பிறகும் புல்லார் தூக்கில் போடப்படவில்லை. புல்லாருக்காக வளைந்த சட்டம் அஜ்மல் கசாபுக்கும், அப்சல் குருவுக்கும் ஏன் வளையவில்லை? என்று கேட்கக் கூடாது. ஏனெனில் அவர்கள் முஸ்லிம்கள். புல்லார் முஸ்லிம் அல்லாதவர்; இதை முஸ்லிம்கள் புரிந்து அடக்கமாக நடந்து கொள்ள வேண்டும்.

ராஜிவ் காந்தி கொலையாளிகளான பேரறிவாளன், சாந்தன், முருகன், சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனின் கூட்டாளிகளான மாதையன், சைமன், பிலவேந்திரன், ஞானப்பிரகாசம், உள்ளிட்ட 16 தூக்குத் தண்டனை கைதிகளின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்து நீண்ட வருடங்களாகி விட்டது.

அஜ்மல் கசாபையும், அப்சல் குருவையும் போல கருணை மனு நிராகரிக்கப்பட்ட இவர்கள் ஏன் தூக்கில் போடப்படவில்லை? என்று எந்த முஸ்லிமும் கேள்வி கேட்கக் கூடாது. ஏனெனில் முஸ்லிம் சமுதாயம் அடிமைச் சமுதாயம். இப்படி அடிமைச் சமுதாயமாக இருப்பதற்காகத் தான் ஆங்கிலேயரிடம் இருந்து போராடி விடுதலை பெற்று, இன்றைய ஆள்வோருக்கு அடிமையாக இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து அடக்கமுடன்(?) நடந்துகொள்ள வேண்டும்.

பாபரி மஸ்ஜித் – முஸ்லிம்களுக்குத் தான் சொந்தமானது என்று உலகுக்கே தெரியும்! ஆனால் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் பாபரி மஸ்ஜிதை 3 பங்காகப் பிரித்து அதில் ஒரு பங்கு முஸ்லிம்களுக்கு உரியது. மீதி இரண்டு பங்கு முஸ்லிம் அல்லாதவர்களுக்கு உரியது என்று அளித்த வினோதத் தீர்ப்பை இன்றுவரை முஸ்லிம்களால் மாற்ற முடிந்ததா?

25 கோடி முஸ்லிம்கள் சம்பந்தப்பட்ட பாபரிமஸ்ஜித் பிரச்சினையிலேயே இப்படித்தான் தீர்ப்பு இருக்கும் என்று அறிந்த பிறகு, பெய்க் சட்டப்படி தண்டிக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பது அறியாமை ஆகும்.

ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயத்திற்கே நீதி கிடைக்கவில்லை எனும் போது தனிப்பட்ட பெய்க்கிற்கு எப்படி நீதி கிடைக்கும்? என முஸ்லிம் சமுதாயம் புரிந்து அடங்கி நடந்து கொள்ள வேண்டும்.

பாபரி மஸ்ஜித் இடிப்பில் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, சாத்வி ரிதம்பரா, உமாபாரதி, வினய் கத்தியார், அசோக் சிங்கால், தொகாடியா ஆகியோருக்கு இருந்த பங்கு அகில உலக பிரசித்தம். பாபர் மஸ்ஜித் வழக்கில் இவர்களுக்கு எதிரான ஆதாரம் இருந்த அளவுக்கு இந்தியாவில் நடந்த எந்த வழக்குக்கும் ஆதாரம் இருக்கவில்லை.

அதற்காக இவர்கள் தண்டிக்கப்பட்டு விட்டார்களா? இல்லையே! இதையெல்லாம் தெரிந்து கொள்ளாமல் பெய்க்கிற்காக முஸ்லிம்கள் உரிமைக் குரல் எழுப்பி தேசத்தின் அமைதியை கெடுக்கக் கூடாது. இந்த நாடு மதசார்பற்ற நாடு. ஆனால் இங்கு சட்டம் ஆட்சி செய்யவில்லை. மனு நீதிதான் ஆள்கிறது. ஆள்வோரின் மற்றும் அதிகார வர்க்கத்தின் உள்ளத்தில் இந்த மனுநீதிதான் மண்டிப்போய் கிடக்கிறது.

இந்நிலை மாறாதவரை முஸ்லிம்களுக்கு எதிரான அநியாயங்கள் நடக்கத்தான் செய்யும். இந்த அவலநிலை மாறி, சட்டத்தின் முன் முஸ்லிம்களும் சமமாக நடத்தப்பட வேண்டுமெனில் முஸ்லிம் மக்கள் திரண்டெழுந்து வீதிகளில் இறங்கிப் போராட வேண்டும்.

உள்ளாட்சி, சட்டமன்ற, பாராளுமன்றங்களில் உள்ள முஸ்லிம் பிரதிநிதிகள் இந்த அநியாயங்களுக்கு எதிராக உரத்து உரிமை முழக்கமிடவேண்டும். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்றக் கதவுகளை பொது நலன் வழக்குப்போட்டு ஓங்கித் தட்ட வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் அதிகாரம் இவற்றில் இட ஒதுக்கீடு பெற்று, ஆளும் இடத்திற்கு முஸ்லிம்கள் வரவேண்டும்.

(முஹம்மதே!) உம்மை இப்பூமியிலிருந்து கிளப்பி வெளியேற்றிட அவர்கள் முயன்றனர். அப்போது உமக்குப் பின்னர் அவர்கள் குறைவாகவே தங்கியிருப்பார்கள். (முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய தூதர்கள் விஷயத்தில் (இதுவே நமது) வழி முறையாகும். நமது வழி முறையில் எந்த மாற்றத்தையும் காண மாட்டீர்!

அல்குர் ஆன் 17:76, 77

24.04.2013. 11:55 AM

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...