கேள்வி
நோன்பு வைத்தால் நமக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்று நபிகளார் சொன்னார்களா?
இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல
المعجم الأوسط
8312 – حدثنا موسى بن زكريا نا جعفر بن محمد بن فضيل الجزري نا محمد بن سليمان بن أبي داود نا زهير بن محمد عن سهيل بن أبي صالح عن أبيه عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه و سلم اغْزُوا تَغْنَمُوا، وَصُومُوا تَصِحُّوا، وَسَافِرُوا تَسْتَغْنُوا لم يرو هذا الحديث عن سهيل بهذا اللفظ إلا زهير بن محمد
போர் செய்யுங்கள் கனீமத் பொருட்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்! நோன்பு பிடியுங்கள் ஆரோக்கியத்தைப் பெறுங்கள்! பயணம் செய்யுங்கள் செல்வத்தை பெறுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)நூல் : தப்ரானீ – அல்அவ்ஸத்
இச்செய்தியில் இடம் பெறும் சுஹைர் பின் முஹம்மத் என்பவர் பலவீனமானவராவார்.
تهذيب التهذيب
قال البخاري ماروى عنه أهل الشام فانه مناكير وما روى عنه أهل البصرة فانه صحيح وقال الاثرم عن أحمد في رواية الشاميين عن زهير يروون عنه مناكير
ஸுஹைர் பின் முஹம்மதுவிடமிருந்து சிரியாவைச் சார்ந்தவர்கள் அறிவிப்பவது மறுக்கப்பட வேண்டியவையாகும். அவரிடமிருந்து பஸராவைச் சார்ந்தவர்கள் அறிவிப்பது ஆதாரப்பூர்வமானதாகும் என்று புகாரி கூறுகிறார்கள். சுஹைர் இடமிருந்து சிரியாவைச் சார்ந்தவர்கள் அறிவிப்பதில் மறுக்கப்பட வேண்டியவைகள் உள்ளன என்று அஹ்மத் அவர்களும் கூறியுள்ளார்கள்.நூல் ; தஹ்தீபுத் தஹ்தீப்
சுஹைர் பின் முஹம்மத் என்பவரிடமிருந்து அறிவிப்பவர் முஹம்மத் பின் சுலைமான் பின் அபிதாவூத் ஆவார். இவர் ஹிரான் பகுதியைச் சார்ந்தவர். ஹிரான் என்பது சிரியாவை பகுதியைச் சார்ந்ததாகும்.
شرح العقيدة الطحاوية للحوالي – كَانَ من أهل حران من بلاد الشام
ஹிரான் பகுதியில் உள்ளவர்கள் சிரியாவைச் சார்ந்தவர்கள்.
நூல் : ஷரஹுல் அகீதத்துத் தஹாவிய்யா
எனவே இந்தச் செய்தி சிரியா நாட்டவர் மூலம் அறிவிக்கப்படுவதால் இது சரியான செய்தி அல்ல.
இதே செய்தி அலீ (ரலி) அவர்கள் வழியாக இப்னு அதி அவர்களின் அல்காமில் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல. இதில் இடம்பெறும் ஹுஸைன் பின் அப்துல்லாஹ் என்பவர் பொய்யராவார்.
الكامل لابن عدي
محمد بن روح بن نصر ثنا أبو الطاهر قال ثنا أبو بكر بن أبي أويس عن حسين بن عبد الله عن أبيه عن جده أن عليا قال قال لي رسول الله صلى الله عليه وسلم لم يحل الله قليلا حرم كثيره وبإسناده عن جده عن علي أن رسول الله صلى الله عليه وسلم قال تسحروا ولو بشربة من ماء وأفطروا ولو على شربة من ماء وبإسناده عن علي أن رسول الله صلى الله عليه وسلم قال صوموا تصحوا
நோன்பு பிடியுங்கள் ஆரோக்கியமாக இருங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அலீ (ரலி)நூல் : அல்காமில்
لسان الميزان
1214 – الحسين بن عبد الله بن ضميرة بن أبي ضميرة سعيد الحميري المدني … كذبه مالك وقال أبو حاتم متروك الحديث كذاب وقال بن معين ليس بثقة ولا مأمون وقال البخاري منكر الحديث ضعيف وقال أبو زرعة ليس بشيء … وقال أبو داود ليس بشيء وقال النسائي ليس بثقة ولا يكتب حديثه وقال بن الجارود كذاب ليس بشييء
ஹுஸைன் பின் அப்துல்லாஹ் என்பவரை மாலிக் பொய்யர் என்று கூறியுள்ளார்கள். அபூஹாத்திம் அவர்கள், இவர் ஹதீஸ் துறையில் விடப்படவேண்டியவர், பொய்யர் என்று கூறியுள்ளார்கள். இவர் நம்பகமானவர் இல்லை, உறுதியானவரும் இல்லை என்று இப்னு மயீன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இவர் மறுக்கப்படவேண்டியவர், பலவீனமானவர் என்று புகாரி அவர்கள் கூறினார்கள். இவர் மதிப்பற்றவர் என்று அபூஸுர்ஆ மற்றும் அபூதாவூத் ஆகியோர் கூறியுள்ளார்கள். இவர் நம்பகமானவர் இல்லை, இவருடைய ஹதீஸ்கள் எழுதப்படாது என்று நஸாயீ அவர்கள் கூறியுள்ளார். இவர் மதிப்பற்றவர் பொய்யர் என்று இப்னுல் ஜாரூத் அவர்கள் கூறியுள்ளார்கள்.நூல் : லிஸானுல் மீஸான்
நோன்பு பிடியுங்கள் ஆரோக்கியத்தைப் பெறுங்கள் என்ற செய்தி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாகவும் இப்னு அதீ அவர்களின் அல்காமில் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவும் ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல.
الكامل في ضعفاء الرجال
ثنا عبد الرحمن بن محمد بن علي القرشي ثنا محمد بن رجاء السندي ثنا محمد بن معاوية النيسابوري ثنا نهشل بن سعيد عن الضحاك عن بن عباس قال رسول الله صلى الله عليه وسلم سافروا تصحوا وصوموا تصحوا
இச்செய்தியில் இடம்பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் நஹ்ஷல் பின் ஸயீத் என்பவர் பொய்யுரைப்பவர் என்று குற்றம் சாட்டப்பட்டவர்.
تقريب التهذيب –
بخ ت ق نهشل بن سعيد بن وردان الورداني بصري الأصل سكن خراسان متروك وكذبه إسحاق بن راهويه من السابع
நோன்பு பிடிப்பதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றாலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இக்கருத்தைச் சொன்னார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை.
நோன்பு வைப்பது நல்லது என்று அல்லாஹ் கூறுகிறான். அதில் ஆரோக்கியமும் அடங்கும். பார்க்க : நோன்பு வைப்பது நல்லது