பொன்னாடையும் ஒரு அன்பளிப்பு தானே?

அன்பளிப்புகள் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் போது பொன்னாடை போர்த்திக் கொள்வதை எந்த அடிப்படையில் கூடாது என்கிறீர்கள்? விளக்கம் தரவும்.

– அபு ரிஃபா, துபை

பதில்:

மனிதனை மனிதன் துதிபாடுவதும் அன்பளிப்பும் ஒன்றாகாது.

சாதாரண ஆடையைப் பொன் (தங்கம்) ஆடை என்று சொல்லி தங்க ஆடை போர்த்துவதற்கு தகுதியானவர் இந்தத் தலைவர் என்று சித்தரிக்கவே பொன்னாடை கலாச்சாரம். பொன் ஆடை அதாவது தங்க ஆடை என்று அதற்குப் பெயர் சூட்டியதில் இருந்து இதன் போலித் தன்மையை உணரலாம்.

இவனுக்கெல்லாம் பொன்னாடை போர்த்த வேண்டியுள்ளதே என்று வேண்டா வெறுப்பாக இது போர்த்தப்படுவதும், இது முழு நடிப்பு என்பதும் கவனிக்க வேண்டியதாகும்.

இது போன்ற துதிபாடலுக்கும் நடிப்புக்கும் இஸ்லாத்தில் இடமில்லை.

அந்தப் பொன்னாடையை வாங்கியவர் அதைப் பயன்படுத்த மாட்டார். அதை எந்த வகையிலும் பயன்படுத்தவும் முடியாது. அவரது அடிவருடிகள் அதை எடுத்துக் கொள்வார்கள். வெறும் பந்தா தவிர இதில் ஒருபயனும் இல்லை.

உணர்வு 16:10