மர்யம் அவர்களிடம் வந்தவர் ஒரு வானவரா? பல வானவர்களா?
கேள்வி
மர்யம் அவர்களிடம் ஒரு வானவர் வந்ததாக 19:19 வசனம் சொல்கிறது, பல வானவர்கள் வந்ததாக 3:45 வசனம் சொல்கிறது. இந்த முரண்பாடு ஏன்
பதில்
திருக்குர்ஆனில் கிறித்தவர்கள் எழுப்பும் கேள்விகள் இந்த வகையில் தான் அமைந்துள்ளன.
ஒரு நிகழ்ச்சியில் முதல்வரும், இன்னும் பல அமைச்சர்களும் பல கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இதைப் பற்றி பேசும் போது
அ. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொண்டார் என்று சொல்லலாம் அதில் பொய் இல்லை.
ஆ. முதல்வரும் அமைச்சர்களும் கலந்து கொண்டார்கள் என்றும் சொல்லலாம். இதுவும் உண்மை தான்.
இ. அமைச்சர்கள் கலந்து கொண்டனர் என்றும் சொல்லலாம். அதிலும் பொய் இல்லை.
ஈ. இந்த நிகழ்ச்சியில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர் என்றும் சொல்லலாம். அதுவும் உண்மையே.
இவை அல்லாமல் இன்னும் மக்கள் கலந்து கொண்டனர் எனவும், காவல் துறையினர் கலந்து கொண்டார்கள் எனவும் உளவுத் துறையினர் கல்ந்து கொண்டார்கள் என்றும் கூறலாம். அனைத்துமே உண்மை தான்
ஒன்றை ஏற்றால் மற்றவை மறுக்கப்படும் என்றால் தான் முரண்பாடு ஏற்படும். இதில் எந்த ஒன்றைச் சொன்னாலும் மற்றவைகளை மறுப்பதாக ஆகாது.
பல வானவர்கள் வந்து ஒருவர் மட்டும் பேசும் போது அந்த ஒருவர் பேசியதாக கூறினாலும் அதுவும் சரிதான்.
பலரும் பேசினார்கள் என்றாலும் அதுவும் சரிதான். பேசியது ஒருவர் என்றாலும் அனைவரின் சார்பிலும் அவர்கள் பேசியதால் அனைவரும் பேசியதாகத் தான் பொருள்.
பிரதமரைச் சந்திக்க ஐந்து பேர் செல்கிறோம். அதில் ஒருவர் கோரிக்கையை வலியுறுத்திப் பேசுவார். இன்னார் பிதரமரிடம் பேசினார் என்றும் இதைச் சொல்லலாம்.
ஐவரும் பேசினார்கள் என்றும் சொல்லலாம்.
இது போல் தான் மேற்கண்ட வசனமும் சொல்கிறது.
இரண்டு உண்மைகளை இரண்டு வகையில் சொல்கிறது என்ற சாதாரன உண்மை தான் இது.