பண்டிகையின் போது பிறர் தரும் உணவை உண்ணலாமா?

முஹம்மத் அப்துல் அஸீஸ்

பதில் :

நமக்கு அனுமதிக்கப்பட்ட உணவுப் பொருட்களை பிற மதத்தினர் நமக்கு அளித்தால் அதை உண்பது தவறல்ல. எனினும் இஸ்லாம் தடை செய்த பொருட்களை அவர்கள் தந்தால் அவற்றை நாம் பயன்படுத்தக் கூடாது. சிலைகளுக்குப் படைத்த பொருட்களை பண்டிகைக் காலங்களிலோ, அல்லது மற்ற காலங்களிலோ தந்தாலும் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான். யார் வரம்பு மீறாதவராகவும், வலியச் செல்லாதவராகவும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 16:115

அறுக்கப்பட்டவை என்று மொழிபெயர்க்கப்பட்ட இடத்தில் அரபு மூலத்தில் உஹில்ல என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சப்தமிடப்பட்டவை என்பது இதன் பொருள். சிலைகளுக்கு முன்னால் மந்திரங்கள் சொல்லி பூஜிக்கப்பட்டவை மற்றும் மந்திரங்கள் சொல்லி அறுக்கப்பட்டவைகளையும் இந்தச் சொல் எடுத்துக் கொள்ளும்.

எனவே பூஜை செய்து தரும் பொருட்கள், அல்லாஹ் அல்லாத பெயர் கூறி அறுக்கப்பட்டவை, மது போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் இவற்றை அவர்கள் தரும் போது வாங்கக் கூடாது. மற்றவற்றைப் பெற்றுக் கொள்வதில் தவறேதும் இல்லை.

27.06.2010. 18:46 PM