பன்மடங்காகப் பெருகும் வட்டி

(ஒற்றுமை மாதமிருமுறை இதழில் தேர்வு செய்யப்பட்ட வசங்களுக்கு பீஜே விளக்கம் எழுதினார். அதன் இரண்டாவது கட்டுரை இது)

நம்பிக்கை கொண்டோரே! பன்மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை84 உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால் வெற்றி பெறுவீர்கள்.

திருக்குர்ஆன்: 3:130

இ ஸ்லாம் மார்க்கம் எல்லாக் காலத்துக்கும் பொருந்தக் கூடிய, நடைமுறைப்படுத்தக் கூடிய வாழ்க்கை நெறியாகும். மார்க்கத்தைப் பற்றிய சரியான அறிவும், ஆய்வும் இல்லாத சிலர் நவீன காலத்துக்கு ஏற்றவாறு இஸ்லாத்தை வளைக்க முயன்று வருகின்றனர். இஸ்லாம் தடை செய்த பல விஷயங்களில் ஈடுபாடு கொண்ட இவர்கள் அதற்கு இஸ்லாமியச் சாயம் பூசி அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர்.

மதுபானத்தை அல்லாஹ் ஹராமாக – விலக்கப்பட்டதாக – ஆக்கியுள்ளான். ஆனாலும், மதுவுக்கு புதுப்புது வியாக்கியானம் கொடுத்து பீர் குடிக்கலாம், பிராந்தி குடிக்கலாம், கள் சாராயம் தான் குடிக்கக் கூடாது என்று கூறி மேலை நாட்டுக் கலாச்சாரத்துக்கு இஸ்லாமிய வர்ணம் பூசுவோர் உள்ளனர்.

இது போன்ற பிரச்சினைகளில் வட்டியும் ஒன்றாகும். வட்டியை அல்லாஹ் தடை செய்து விட்டான். மிகப் பெரிய குற்றம் எனவும் பிரகடனம் செய்து விட்டான்.

275. வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்.83 “வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

276. அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றிகெட்ட எந்தப் பாவியையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.

277. நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிந்து, தொழுகையை நிலைநாட்டி, ஜகாத்தையும் கொடுத்து வருவோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

278. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்!84

279. அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.

திருக்குர்ஆன்: 2:275-2:279

வட்டி வாங்குவோர் நிரந்தர நரகத்தை அடைவார்கள் என்பதும், அல்லாஹ்வுக்கு எதிராகப் போர் பிரகடனம் செய்கிறார்கள் என்பதும் சாதாரணமான எச்சரிக்கை அல்ல. இறைவனை அஞ்சுகிற எந்த முஸ்லிமும் நிரந்தர நரகத்தில் தள்ளுகின்ற காரியத்தை ஒருக்காலும் செய்ய மாட்டான்.

ஆனால், இன்றைய நவீன உலகில் வட்டியை அறவே தவிர்க்க முடியவில்லை. பல உலக நாடுகள் வட்டியைச் சட்டப்பூர்வமாக அங்கீகரித்து விட்டன. வட்டியில்லாத எந்தக் கொடுக்கல் வாங்கலையும் காண முடியவில்லை. அரசாங்கம் கூட வட்டியின் அடிப்படையில் தான் நாட்டு மக்களுக்கு உதவுவதைப் பார்க்கிறோம்.

இதையெல்லாம் பார்க்கும் சிலர் இஸ்லாம் வட்டியைத் தடை செய்துள்ளதே! ஆனால், அது தவிர்க்க முடியாததாக இருக்கிறதே! வட்டியைத் தடை செய்யாமல் இருந்தால் சிறப்பாக இருக்குமே என்றெல்லாம் எண்ணத்  தலைப்படுகின்றனர். வட்டியை அனுமதிக்கின்ற வகையில் அல்லது ஓரளவுக்காவது வட்டியை அனுமதிக்கின்ற வகையில் ஒரு ஆதாரம் இருக்கக் கூடாதா? என்று கருதுவோரின் கண்ணில் பட்ட ஆதாரம் தான் நாம் ஆரம்பமாக எடுத்துக்காட்டியுள்ள வசனம்.

பன்மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்! என்ற வாசகத்துக்கு புதுமையான விளக்கம் கூறிக் கொண்டு இஸ்லாமும் ஓரளவு வட்டியை ஆதரிக்கவே செய்கிறது என்று கூறினார்கள்.

(திருக்குர்ஆனை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்த யூசுப் அலி போன்றவர்களும் இதிலிருந்து தப்பவில்லை. பின்னர் அது திருத்தப்பட்டது)

வட்டிக்கு வட்டி; அந்த வட்டிக்கும் வட்டி என்ற அடிப்படையில் தான் வட்டி வாங்கக் கூடாது. பன்மடங்காகப் பெருக்கப்பட்ட நிலையில் என்று கூறப்படுவதன் விளக்கம் இது தான். எனவே, சாதாரண வட்டி கூடும், கொடும் வட்டி, வட்டிக்கு வட்டி, மீட்டர் வட்டி போன்றவை தான் கூடாது என மேற்கண்ட வசனத்திற்கு விளக்கம் தருகின்றனர்.

அறிவு ஜீவிகள் எனப்படுவோரும் குர்ஆன் மட்டுமே போதும் நபி வழி தேவையில்லை என்று கூறும் குர்ஆனைப் பற்றிய அறிவில்லாதவர்களும் இவ்வாறு கூறுபவர்களில் முக்கியமானவர்களாவர்.

இவர்கள் கூறும் விளக்கம் தவறானது என்பது திருக்குர்ஆனைச் சிந்தித்தாலே விளங்கும்.

2:279 வசனத்தைப் பாருங்கள்!

“நீங்கள் வட்டியிலிருந்து விலகிக் கொண்டால் உங்கள் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநியாயம் செய்ய வேண்டாம். அநியாயம் செய்யப்படவும் வேண்டாம் என்று அவ்வசனம் கூறுகிறது.

வட்டிக்குப் பணம் கொடுத்தவர்கள் திருந்துவதாக இருந்தால் கொடுத்த கடனை – அசலை – மூலதனத்தை – மட்டும் தான் திருப்பி வாங்க வேண்டும் என்று கூறப்படுவது கவனமாக சிந்திக்கப்பட வேண்டும்.

“கொடுத்த கடனும் சாதாரண வட்டியும் உங்களுக்கு உரியது” என்று கூறவில்லை. அசல் மட்டுமே சொந்தம் என்று அல்லாஹ் கூறுகிறான். இதிலிருந்து வட்டி சிறிதளவும் அனுமதிக்கப்படவில்லை என்பதை  அறியலாம்.

“பன்மடங்காகப் பெருக்கப்பட்ட நிலையில்” என்ற வார்த்தையின் பொருள் என்ன என்பதை இப்போது ஆராய்வோம்.

பொதுவாக வட்டி என்பதே சாதாரணமாகப் பன்மடங்காகவே பெருகிக் கொண்டு தான் இருக்கும். சாதாரண வட்டியிலும் கூட அந்த நிலை இருக்கத் தான் செய்யும். “நூறு ரூபாய்க்கு இரண்டு ரூபாய் வட்டி” என்று வைத்துக் கொள்வோம். எவ்வளவு காலம் கடந்தாலும் இரண்டு ரூபாயை மட்டும் வட்டியாக வாங்கிக் கொள்ள மாட்டார்கள். அந்த மாதம் இரண்டு ரூபாய் அடுத்த மாதம் இரண்டு ரூபாய் அசலைத் திருப்பித் தர எவ்வளவு மாதம் ஆகுமோ அவ்வளவு இரண்டு ரூபாய் என்று பெருகிக் கொண்டே செல்லும்.

பத்து ரூபாய் பொருளை 20 ரூபாய்க்கு விற்றாலும் அத்துடன் உறவு முடித்து விடும். மாதா மாதம் பத்து ரூபாய் கொடுக்க மாட்டோம்.

வட்டியில் – அது எந்த வகை வட்டியானாலும் அது பல்கிப் பெருகிக் கொண்டே தான் இருக்கும். பல்கிப் பெருகுதல் வட்டிக்கு வட்டியில் மட்டும் தான் ஏற்படும் என்பது தவறாகும்.

இதைப் புரிந்து கொண்டு 2:279 வசனத்தையும் சிந்திக்கின்ற யாரும் எல்லாவிதமான வட்டியையும் இஸ்லாம் அடியோடு தடுத்திருப்பதை அறிந்து கொள்வர்.

இன்ஷா அல்லாஹ் தொடரும்…

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...