اَللّٰهُ يَـبْدَؤُا الْخَلْقَ ثُمَّ يُعِيْدُهٗ ثُمَّ اِلَيْهِ تُرْجَعُوْنَ‏

அல்லாஹ்தான் படைப்புகளை முதன்முறையாகப் படைக்கின்றான். பின்னர், அவனே அதை மீண்டும் படைப்பான். அவன் பக்கமே நீங்கள் திரும்பக் கொண்டுவரப்படுவீர்கள்.

(அல்குர்ஆன் : 30:11)

அல்லாஹ்வே முதலில் படைத்தான்.

மீண்டும் அவன் படைப்பான். பின்னர் அவனிடம் நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்! 30:11

படைத்தான் என்பது சரியா? படைக்கின்றான் என்பது சரியா?

நைனா முஹம்மத், கும்பகோனம்

பதில்

மூலத்தில் யப்தவு  يَـبْدَؤُا என்ற சொல் உள்ளது இது வருங்காலம் நிகழ்காலம் ஆகிய இரண்டுக்குமான சொல்லாகும். படைப்பான் படைக்கிறான் என்று பொருள் கொள்ளலாம். படைத்தான் என்ற சென்றகால வினைச் சொல்லின் அர்த்தம் இதற்கு இல்லை.

அல்லாஹ் படைக்கிறான் என்பது தான் சரி; சென்றகாலமாகச் சொல்வதை விட நிகழ்காலமாக சொல்வதே பொருத்தமானது.

படைத்தான் என்றால் முடிந்து விட்டதைக் குறிக்கும். அல்லாஹ்வின் படைத்தல் முடிந்து விடவில்லை.  ஒவ்வொரு விநாடியும் அவனது படைத்தல் இருந்து கொண்டே உள்ளது. எனவே நிகழ்காலம் தான் பொருத்தமானது என்பதால் அல்லாஹ் சென்ற கால வினையாகச் சொல்லவில்லை