பெண்ணுறுப்பைப் பற்றி குர்ஆன் சொல்கிறதே இது சரியா?

இஸ்லாத்துக்கு எதிராக கிறித்தவ போதகர்கள் கேட்கும் கேள்விகளில் இதுவும் ஒன்றாகும்.

கீழ்க்காணும் வசனத்தை எடுத்துக் காட்டி கேள்வியை எழுப்புகிறார்கள்.

وَمَرْيَمَ ابْنَتَ عِمْرَانَ الَّتِي أَحْصَنَتْ فَرْجَهَا فَنَفَخْنَا فِيهِ مِن رُّوحِنَا وَصَدَّقَتْ بِكَلِمَاتِ رَبِّهَا وَكُتُبِهِ وَكَانَتْ مِنَ الْقَانِتِينَ

12. இம்ரானின் மகள் மர்யமையும் (இறைவன் முன்னுதாரணமாகக் கூறுகிறான்) அவர் தமது கற்பைக் காத்துக்கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம். அவர் தமது இறைவனின் வார்த்தைகளையும், அவனது வேதங்களையும் உண்மைப்படுத்தினார். அவர் கட்டுப்பட்டு நடப்பவராகவும் இருந்தார்.

திருக்குர்ஆன்  66:12

இவ்வசனத்தில் அரபு மூலத்தில் ஃபர்ஜ் எனும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இச்சொல் பெண்ணுறுப்பைக் குறிக்கும் ஆபாசமான சொல்லாகும். மர்யமுடைய ஃபர்ஜில் நமது உயிரை ஊதினோம் என்று இதில் உள்ளது. பெண்ணின் உறுப்புக்குள் ஊதுவதுதான் அல்லாஹ்வின் வேலையா?

இது போன்ற சொற்களைக் கொண்டு கேள்வி எழுப்புகிறார்கள்.

கிறித்தவ போதகர்கள் 66:12 வசனம் பற்றி இக்கேள்வி கேட்டாலும் இது போல் 21:91 வசனத்திலும் சொல்லப்பட்டுள்ளது. இரண்டுக்கும் சேர்த்தே உரிய விடையை நாம் விளங்கிக் கொள்வோம்

ஆண் உறுப்பையோ பெண் உறுப்பையோ குறிப்பிட்டு பேசுவது தவறா? அது கேவலமானதா? பொதுவாக அப்படி கூற முடியாது. அந்த உறுப்பு பற்றி சொல்லும் அவசியம் எழுந்தால் குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.

ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ அந்தரங்க உறுப்பில் காயமோ பிரச்சனையோ இருந்தால் மருத்துவரிடம் அதைப் பற்றி பேசித்தான் ஆக வேண்டும்.

ஆனால் இவ்வுறுப்புக்களைக் குறிப்பிட கொச்சையான சொற்களும் உள்ளன. நாகரிகமாகக் கருதும் சொற்களும் உள்ளன. கொச்சையான சொற்களைத் தவிர்த்து நாகரிகமான சொல்லைப் பயன்படுத்தலாம்

ஐயா எனது மர்ம உறுப்பில், அந்தரங்க உறுப்பில் கொப்புளம் உள்ளது; அதற்கு என்ன செய்யலாம் என்று மருத்துவரிடம் பேசினால் அதை யாரும் ஆபாசம் எனக் கருத மாட்டோம். சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படும் போது கொச்சையான சொல்லைப் பயன்படுத்தாமல் நாகரிகமான சொல்லைப் பயன்படுத்துவதை அறிவுடைய யாரும் ஆபாசமாக கருத மாட்டார்கள்.

இந்த வசனத்தில் சொல்ல வேண்டிய அவசியம் காரணமாக சொல்லப்பட்டுள்ளதா? நாகரிகமான சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பதை விளங்கிக் கொண்டால் இந்தக் கேள்வி அபத்தமான கேள்வி என்பது தெளிவாகும்.

ஃபர்ஜ் என்பது பெண்களின் உறுப்பைக் குறிக்கும் பச்சையான சொல்லா என்றால் இல்லவே இல்லை. இது ஆண் பெண் இரு பாலரின் அந்தரங்க உறுப்பைப் பற்றிக் குறிக்கும் நாகரிகமான பொதுவான சொல்லாகும்.

இச்சொல்லை பொது மேடைகளிலும் பயன்படுத்தலாம். யாரும் முகம் சுளிக்க மாட்டார்கள்.

ஆண்களே பெண்களே! உங்கள் அந்தரங்க உறுப்புக்களை தூய்மையான வைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னால், சிறுநீர் கழித்த பின் அந்தரங்க உறுப்புக்களைக் கழுவிக் கொள்ளுங்கள் என்று சொன்னால் அது ஆபாசமா? யாரும் அப்படி சொல்ல மாட்டார்கள்.

இதே விஷயத்தை …… போன்ற சொல்லைப் பயண்டுத்தி சொன்னால் அதை ஆபாசம் என்று நாம் கூறுவோம்.

ஃபர்ஜ் எனும் சொல் எந்த வகையானது?  அந்தரங்க உறுப்பு என்ற சொல் எப்படி இருபாலரின் உறுப்பைக் குறிக்குமோ அது போன்ற சொல் தான் இது.

உதாரணமாக புகாரி எனும் ஹதீஸ் நூலில் நபிகள் நாயகம் இச்சொல்லைப் பயண்டுத்திய ஹதீஸ்கள் கீழே உள்ளன. இவை அனைத்திலும் ஃபர்ஜ் என்ற சொல் இருக்கிறது. அதை சிவப்பு வன்னத்தில் சுட்டிக்காட்டியுள்ளோம். ஒரு நூலை மட்டும் உதாரணமாக எடுத்துக் காட்டியுள்ளோம்.

صحيح البخاري

6284 – حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: ” نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لِبْسَتَيْنِ وَعَنْ بَيْعَتَيْنِ: اشْتِمَالِ الصَّمَّاءِ، وَالِاحْتِبَاءِ فِي ثَوْبٍ وَاحِدٍ لَيْسَ عَلَى فَرْجِ الإِنْسَانِ مِنْهُ شَيْءٌ، وَالمُلاَمَسَةِ وَالمُنَابَذَةِ “

صحيح البخاري

367 – حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا لَيْثٌ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، أَنَّهُ قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ اشْتِمَالِ الصَّمَّاءِ، وَأَنْ يَحْتَبِيَ الرَّجُلُ فِي ثَوْبٍ وَاحِدٍ، لَيْسَ عَلَى فَرْجِهِ مِنْهُ شَيْءٌ»

صحيح البخاري

5819 – حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الوَهَّابِ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ خُبَيْبٍ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: ” نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ المُلاَمَسَةِ وَالمُنَابَذَةِ، وَعَنْ صَلاَتَيْنِ: بَعْدَ الفَجْرِ حَتَّى تَرْتَفِعَ الشَّمْسُ، وَبَعْدَ العَصْرِ حَتَّى تَغِيبَ، وَأَنْ يَحْتَبِيَ بِالثَّوْبِ الوَاحِدِ لَيْسَ عَلَى فَرْجِهِ مِنْهُ شَيْءٌ بَيْنَهُ وَبَيْنَ السَّمَاءِ، وَأَنْ يَشْتَمِلَ الصَّمَّاءَ “

صحيح البخاري

5820 – حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ يُونُسَ، عَنِ ابْنِ شِهَابٍ، قَالَ: أَخْبَرَنِي عَامِرُ بْنُ سَعْدٍ، أَنَّ أَبَا سَعِيدٍ الخُدْرِيَّ، قَالَ: «نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لِبْسَتَيْنِ وَعَنْ بَيْعَتَيْنِ، نَهَى عَنِ المُلاَمَسَةِ وَالمُنَابَذَةِ فِي البَيْعِ» وَالمُلاَمَسَةُ: لَمْسُ الرَّجُلِ ثَوْبَ الآخَرِ بِيَدِهِ بِاللَّيْلِ أَوْ بِالنَّهَارِ وَلاَ يُقَلِّبُهُ إِلَّا بِذَلِكَ. وَالمُنَابَذَةُ: أَنْ يَنْبِذَ الرَّجُلُ إِلَى الرَّجُلِ بِثَوْبِهِ، وَيَنْبِذَ الآخَرُ ثَوْبَهُ، وَيَكُونَ  ذَلِكَ بَيْعَهُمَا عَنْ غَيْرِ نَظَرٍ وَلاَ تَرَاضٍ، وَاللِّبْسَتَيْنِ: اشْتِمَالُ الصَّمَّاءِ، وَالصَّمَّاءُ: أَنْ يَجْعَلَ ثَوْبَهُ عَلَى أَحَدِ عَاتِقَيْهِ، فَيَبْدُو أَحَدُ شِقَّيْهِ لَيْسَ عَلَيْهِ ثَوْبٌ. وَاللِّبْسَةُ الأُخْرَى: احْتِبَاؤُهُ بِثَوْبِهِ وَهُوَ جَالِسٌ، لَيْسَ عَلَى فَرْجِهِ مِنْهُ شَيْءٌ

صحيح البخاري

5821 – حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: ” نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ لِبْسَتَيْنِ: أَنْ يَحْتَبِيَ الرَّجُلُ فِي الثَّوْبِ الوَاحِدِ لَيْسَ عَلَى فَرْجِهِ مِنْهُ شَيْءٌ، وَأَنْ يَشْتَمِلَ بِالثَّوْبِ الوَاحِدِ لَيْسَ عَلَى أَحَدِ شِقَّيْهِ، وَعَنِ المُلاَمَسَةِ وَالمُنَابَذَةِ “

صحيح البخاري

5822 – حَدَّثَنِي مُحَمَّدٌ، قَالَ: أَخْبَرَنِي مَخْلَدٌ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي ابْنُ شِهَابٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَهَى عَنِ اشْتِمَالِ الصَّمَّاءِ، وَأَنْ يَحْتَبِيَ الرَّجُلُ فِي ثَوْبٍ وَاحِدٍ، لَيْسَ عَلَى فَرْجِهِ مِنْهُ شَيْءٌ»

இந்த ஹதீஸ்களில் ஒரு ஆண் தனது ஃபர்ஜை மறைக்காமல் ஒரு ஆடை அணிய வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இங்கே ஃபர்ஜ் என்பதன் பொருள் தெளிவாகிறது. பெண்ணின் உறுப்பை இச்சொல்லால் குறிப்பிடுவது போல் ஆணின் உறுப்பையும் குறிப்பிடலாம் என்று தெரிகிறது. அப்படியானால் கிறித்தவ போதகர்கள் கருதுவது போல் இது ஆபாசமான சொல் அல்ல என்பது உறுதியாகிறது.

கீழே உள்ள ஹதீஸ்களும் புகாரியில் உள்ள ஹதீஸ்கள் தான். இதிலும் ஃபர்ஜ் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

صحيح البخاري

249 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ: «تَوَضَّأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وُضُوءهُ لِلصَّلاَةِ، غَيْرَ رِجْلَيْهِ، وَغَسَلَ فَرْجَهُ وَمَا أَصَابَهُ مِنَ الأَذَى، ثُمَّ أَفَاضَ عَلَيْهِ المَاءَ، ثُمَّ نَحَّى رِجْلَيْهِ، فَغَسَلَهُمَا، هَذِهِ غُسْلُهُ مِنَ الجَنَابَةِ»

صحيح البخاري

259 – حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، قَالَ: حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، قَالَ: حَدَّثَنِي سَالِمٌ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: حَدَّثَتْنَا مَيْمُونَةُ قَالَتْ: «صَبَبْتُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غُسْلًا، فَأَفْرَغَ بِيَمِينِهِ عَلَى يَسَارِهِ فَغَسَلَهُمَا، ثُمَّ غَسَلَ فَرْجَهُ، ثُمَّ قَالَ بِيَدِهِ الأَرْضَ فَمَسَحَهَا بِالتُّرَابِ، ثُمَّ غَسَلَهَا، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ، وَأَفَاضَ عَلَى رَأْسِهِ، ثُمَّ تَنَحَّى، فَغَسَلَ قَدَمَيْهِ، ثُمَّ أُتِيَ بِمِنْدِيلٍ فَلَمْ يَنْفُضْ بِهَا»

صحيح البخاري

260 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ الحُمَيْدِيُّ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اغْتَسَلَ مِنَ الجَنَابَةِ، فَغَسَلَ فَرْجَهُ بِيَدِهِ، ثُمَّ دَلَكَ بِهَا الحَائِطَ، ثُمَّ غَسَلَهَا، ثُمَّ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلاَةِ فَلَمَّا فَرَغَ مِنْ غُسْلِهِ غَسَلَ رِجْلَيْهِ»

صحيح البخاري

266 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الجَعْدِ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ بِنْتِ الحَارِثِ، قَالَتْ: «وَضَعْتُ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غُسْلًا وَسَتَرْتُهُ، فَصَبَّ عَلَى يَدِهِ، فَغَسَلَهَا مَرَّةً أَوْ مَرَّتَيْنِ» – قَالَ: سُلَيْمَانُ لاَ أَدْرِي، أَذَكَرَ الثَّالِثَةَ أَمْ لاَ؟ – ثُمَّ أَفْرَغَ بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ، فَغَسَلَ فَرْجَهُ، ثُمَّ دَلَكَ يَدَهُ بِالأَرْضِ أَوْ بِالحَائِطِ، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ، وَغَسَلَ وَجْهَهُ وَيَدَيْهِ، وَغَسَلَ رَأْسَهُ، ثُمَّ صَبَّ عَلَى جَسَدِهِ، ثُمَّ تَنَحَّى فَغَسَلَ قَدَمَيْهِ، فَنَاوَلْتُهُ خِرْقَةً، فَقَالَ بِيَدِهِ هَكَذَا، وَلَمْ يُرِدْهَا “

صحيح البخاري

274 – حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى، قَالَ: أَخْبَرَنَا الفَضْلُ بْنُ مُوسَى، قَالَ: أَخْبَرَنَا الأَعْمَشُ، عَنْ سَالِمٍ، عَنْ كُرَيْبٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ قَالَتْ: «وَضَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَضُوءًا لِجَنَابَةٍ، فَأَكْفَأَ بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا، ثُمَّ غَسَلَ فَرْجَهُ، ثُمَّ ضَرَبَ يَدَهُ بِالأَرْضِ أَوِ الحَائِطِ، مَرَّتَيْنِ أَوْ ثَلاَثًا، ثُمَّ مَضْمَضَ وَاسْتَنْشَقَ، وَغَسَلَ وَجْهَهُ وَذِرَاعَيْهِ، ثُمَّ أَفَاضَ عَلَى رَأْسِهِ المَاءَ، ثُمَّ غَسَلَ جَسَدَهُ، ثُمَّ تَنَحَّى فَغَسَلَ رِجْلَيْهِ» قَالَتْ: «فَأَتَيْتُهُ بِخِرْقَةٍ فَلَمْ يُرِدْهَا، فَجَعَلَ يَنْفُضُ بِيَدِهِ»

صحيح البخاري

276 – حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ: أَخْبَرَنَا أَبُو حَمْزَةَ، قَالَ: سَمِعْتُ الأَعْمَشَ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَتْ مَيْمُونَةُ: «وَضَعْتُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غُسْلًا، فَسَتَرْتُهُ بِثَوْبٍ، وَصَبَّ عَلَى يَدَيْهِ، فَغَسَلَهُمَا، ثُمَّ صَبَّ بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ، فَغَسَلَ فَرْجَهُ، فَضَرَبَ بِيَدِهِ الأَرْضَ، فَمَسَحَهَا، ثُمَّ غَسَلَهَا، فَمَضْمَضَ وَاسْتَنْشَقَ، وَغَسَلَ وَجْهَهُ وَذِرَاعَيْهِ، ثُمَّ صَبَّ عَلَى رَأْسِهِ وَأَفَاضَ عَلَى جَسَدِهِ، ثُمَّ تَنَحَّى، فَغَسَلَ قَدَمَيْهِ، فَنَاوَلْتُهُ ثَوْبًا فَلَمْ يَأْخُذْهُ، فَانْطَلَقَ وَهُوَ يَنْفُضُ يَدَيْهِ»

281 – حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الجَعْدِ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ مَيْمُونَةَ قَالَتْ: «سَتَرْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَغْتَسِلُ مِنَ الجَنَابَةِ، فَغَسَلَ يَدَيْهِ، ثُمَّ صَبَّ بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ، فَغَسَلَ فَرْجَهُ وَمَا أَصَابَهُ، ثُمَّ مَسَحَ بِيَدِهِ عَلَى الحَائِطِ أَوِ الأَرْضِ، ثُمَّ تَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلاَةِ غَيْرَ رِجْلَيْهِ، ثُمَّ أَفَاضَ عَلَى جَسَدِهِ المَاءَ، ثُمَّ تَنَحَّى، فَغَسَلَ قَدَمَيْهِ» تَابَعَهُ أَبُو عَوَانَةَ، وَابْنُ فُضَيْلٍ فِي السَّتْرِ

صحيح البخاري

288 – حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا أَرَادَ أَنْ يَنَامَ، وَهُوَ جُنُبٌ، غَسَلَ فَرْجَهُ، وَتَوَضَّأَ لِلصَّلاَةِ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும் போது தமது ஃபர்ஜை தேய்த்துக் கழுவுவார்கள் என்று அவர்களின் மனைவியரான ஆயிஷா, மைமூனா ஆகியோர் அறிவிக்கிறார்கள்.

குளிக்கும் போது ஆண்கள் தமது அந்தரங்க உறுப்பைத் தேய்த்து குளிக்க வேண்டும் என்ற சட்டத்தை சொல்லும் போது இவ்வாறு அறிவிக்கிறார்கள்.

பெண்கள் கூட சாதாரணமாக பயன்படுத்தும் நாகரிகமான சொல்லே ஃபர்ஜ் என்பது.

ஆண்கள் அந்தரங்க உறுப்பைக் கழுவ வேண்டும் பெண்களும் அந்தரங்க உறுப்பைக் கழுவ வேண்டும் என்று சொன்னால் அது ஆபாசமான சொல் அல்ல. இது போல் ஆண்கள் தமது ஃபர்ஜைக் கழுவ வேண்டும்; பெண்கள் தமது ஃபர்ஜைக் கழுவ வேண்டும் என்று சர்வதாரணமாக சொல்லலாம்.

எனவே ஃபர்ஜ் என்ற சொல் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளதில் கடுகளவும் ஆபாசம் இல்லை.

சொல்ல வேண்டிய இடத்தில் இது சொல்லப்பட்டுள்ளதா என்பதையும் சிந்திக்க வேண்டும்.

ஒரு பெண்ணுக்கு குழந்தை தரிக்க வேண்டுமானால் கர்ப்பப் பைக்குள் ஆணின் உயிரணு செல்ல வேண்டும். இதுதான் அல்லாஹ் ஏற்படுத்திய நியதி. மர்யம் எனும் மேரிக்கு ஆணின் விந்து இல்லாமல் குழந்தையை இறைவன் கொடுக்க முடிவு செய்கிறான். முழு வடிவம் பெற்ற குழந்தையை வயிற்றுக்குள் அனுப்பவில்லை. எல்லாக் குழந்தைகளையும் போல் கருவில் உருவாகி படிப்படியாக வளரும் வகையில் தான் குழந்தையைக் கொடுத்தான்.

உயிரணுவோ அல்லது குழந்தையை உருவாக்கும் வேறு அணுவோ பெண்ணின் கருவறைக்குச் செல்லாமல் குழந்தை உருவாக முடியாது. கருவறைக்கு உள்ளே செல்ல அந்தரங்கள் உறுப்பு வழியாகத் தான் செல்ல முடியும். வாய்க்குள் உயிரணுவைச் செலுத்தினால் அது கருவறைக்கு போகாது.

இறைவன் நினைத்தால் இந்த வழிமுறை இல்லாமலும் குழந்தையைக் கொடுக்க முடியும். ஆனால் அப்படி இறைவன் நினைக்கவில்லை. அதனால் தான் ஜிப்ரீல் எனும் தேவதூதனை அல்லாஹ் அனுப்பி  அந்த உயிரணுவை ஊதி கருவறைக்கு உயிரணு செல்வதன் மூலம் அந்தக் குழந்தையை அல்லாஹ் வழங்குகிறான்.

மனிதன் ஊதினான் என்றால் ஆடையைக் களைந்து ஊதினான் என்று பொருள் கொள்ள முடியும். உள்ளங்களிலும் ஊடுறுவும் தன்மை பெற்ற வானவர்களுக்கு அது அவசியம் இல்லை. ஆடையைக் களையாமல் அருகில் நின்று ஊதினால் கூட உள்ளே செலுத்த வேண்டிய உயிரணு உள்ளே சென்று விடும்.

குழந்தை எப்படி பெண்ணின் கருவ்றைக்குள் செல்கிறது என்று அறிவியல் பாடம் நடத்தும் போது அதைப் பற்றி பேசினால் அது ஆபாசம் ஆகாது. இன்றைக்கு கணவனின் விந்தை மட்டும் எடுத்து அதில் இருந்து உயிரணுவை மட்டும் பிரித்து பெண்ணுக்குள் செலுத்துகிறார்கள். அந்தரங்கள் உறுப்பு வழியாகவே செலுத்துகிறார்கள். இப்படி சொல்வது ஆபாசமா? உண்மை விளக்கமா?

இது குறித்து கிறித்தவ போதகர்கள் கேட்கும் கேள்வியில் நியாயம் இல்லை.

மேலும் மற்ற சமுதாய மக்கள் இதைப் பற்றிக் கேட்டால் கூட அதில் நியாயம் உள்ளது. கிறித்தவர்கள் இக்கேள்வியைக் கேட்க முடியாது. அவர்கள் நம்பிக்கை கொண்ட பைபிளிலும் இது போல் தான் சொல்லப்பட்டுள்ளது.

18. இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாராகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடி வருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.

மத்தேயு 1

20. அவன் இப்படிச் சிந்தித்துக்கொண்டிருக்கையில், கர்த்தருடைய தூதன் சொப்பனத்தில் அவனுக்குக் காணப்பட்டு: தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளை சேர்த்துக்கொள்ள ஐயப்படாதே; அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது.

மத்தேயு 1

ஒரு பெண் இன்னாரால் கர்ப்பமானாள் என்று சொன்னால் என்ன அர்த்தம்? அவனால் செலுத்தப்பட்ட உயிரணு மூலம் குழந்தை உருவானது என்று தான் பொருள்.

பரிசுத்த ஆவியால் கர்ப்பவதியானாள் என்றால் அந்தக் குழந்தை உருவாவதற்கான உயிரணு பரிசுத்த ஆவியால் செலுத்தப்பட்டுள்ளது என்று தான் அர்த்தம். கிறித்தவ மத போதகர்கள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்?

34. அதற்கு மரியாள் தேவதூதனை நோக்கி: இது எப்படியாகும்? புருஷனை அறியேனே என்றாள்.

35. தேவதூதன் அவளுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்.

லூக்கா1

ஒரு பெண் மேலே பரிசுத்த ஆவி வரும் அதனால் குழந்தை உண்டாகும் என்றால் அதன் அர்த்தம் என்ன? ஏதோ உடறுறவு கொண்டார்கள் என்பது போன்ற அர்த்தம் இதில் உள்ளது. ஆனால் குர்ஆன் வானவர் ஊதினார் என்று நாகரிகமாக இதைச் சொல்கிறது.

அதே சமயம் இப்படி கேள்வி கேட்கும் கிறித்தவ போதகர்கள் தங்கள் பைபிளில் மலிந்து கிடக்கும் ஆபாசங்களுக்கு பதில் சொல்ல முன்வர வேண்டும்

பார்க்க பைபிளில் ஆபாசங்கள்