பெரியவர்களை பெயர் சொல்லி அழைக்கலாமா?
வயதில் பெரியவர்களையும், கல்வியாளர்களையும், தலைவர்களாக மதிக்கப்படுபவர்களையும், மத குருமார்களையும், ஆசிரியர்களையும் பெயர் சொல்லி குறிப்பிடக் கூடாது என்றும் அழைக்கலாகாது என்றும் அதிகமான மக்கள் கருதுகிறார்கள். ஊர் உலக வழக்கப்படி அவர்கள் அப்படி அழைக்காமல் இருந்தால் அது அவர்களுக்கான உரிமையாகும். ஆனால் மார்க்கத்தில் இதற்கு ஏதும் தடை உள்ளதா என்றால் தடை ஏதும் இல்லை.
பெயர் சொல்லி அழைக்கப்பட்ட நபிகள் நாயகம்
5809 – حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي مَالِكٌ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «كُنْتُ أَمْشِي مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَلَيْهِ بُرْدٌ نَجْرَانِيٌّ غَلِيظُ الحَاشِيَةِ»، فَأَدْرَكَهُ أَعْرَابِيٌّ فَجَبَذَهُ بِرِدَائِهِ جَبْذَةً شَدِيدَةً، حَتَّى «نَظَرْتُ إِلَى صَفْحَةِ عَاتِقِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أَثَّرَتْ بِهَا حَاشِيَةُ البُرْدِ مِنْ شِدَّةِ جَبْذَتِهِ»، ثُمَّ قَالَ: يَا مُحَمَّدُ مُرْ لِي مِنْ مَالِ اللَّهِ الَّذِي عِنْدَكَ، «فَالْتَفَتَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ ضَحِكَ، ثُمَّ أَمَرَ لَهُ بِعَطَاءٍ»
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடித்த விளிம்புகளைக் கொண்ட நஜ்ரான் நாட்டு சால்வையைப் போர்த்தியிருக்க நான் அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவர்களை ஒரு கிராமவாசி கண்டு அவர்களுடைய சால்வையால் அவர்களைக் கடுமையாக இழுத்தார். எந்த அளவிற்கென்றால், அவர் கடுமையாக இழுத்த காரணத்தால் சால்வை விளிம்பின் அடையாளம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோளின் ஒரு பக்கத்தில் பதிந்திருப்பதைக் கண்டேன். பிறகு அந்தக் கிராமவாசி, முஹம்மதே! உங்களிடமிருக்கும் இறைவனின் செல்வத்திலிருந்து எனக்கும் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள் என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர் பக்கம் திரும்பிச் சிரித்தார்கள். அவருக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : புகாரி 5809
அல்லாஹ்வின் தூதராகவும், மாபெரும் சாம்ராஜ்யத்தின் அதிபராகவும் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முன்பின் அறிமுகமில்லாத சாதாரண மனிதரால் நெருங்க முடிகிறது. பெயரைச் சொல்லி அழைக்க முடிகிறது. சட்டையைப் பிடித்து இழுக்க முடிகிறது. கடுமையான முறையில் கோரிக்கை வைக்க முடிகிறது. இது நபிகள் நாயகத்தைக் கடுகளவும் பாதிக்கவில்லை. அவரது கோரிக்கையை நிறைவேற்ற சிரித்த முகத்துடன் ஆணையிடுகிறார்கள்.
ஹஜரத் கிப்லாக்களின் சட்டையைப் பிடித்து இழுத்து கேள்வி கேட்க முடியுமா? ஹஜரத் கிப்லாக்களின் பெயரைச் சொல்லி அழைக்க முடியுமா?
அப்படியானால் இவர்கள் நபிவழிக்கு எதிரான மரியாதையை தமக்காக எதிர்பார்க்கிறார்கள் என்பது உறுதியாகிறது.
63 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدٍ هُوَ المَقْبُرِيُّ، عَنْ شَرِيكِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ، يَقُولُ: بَيْنَمَا نَحْنُ جُلُوسٌ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي المَسْجِدِ، دَخَلَ رَجُلٌ عَلَى جَمَلٍ، فَأَنَاخَهُ فِي المَسْجِدِ ثُمَّ عَقَلَهُ، ثُمَّ قَالَ لَهُمْ: أَيُّكُمْ مُحَمَّدٌ؟ وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَّكِئٌ بَيْنَ ظَهْرَانَيْهِمْ، فَقُلْنَا: هَذَا الرَّجُلُ الأَبْيَضُ المُتَّكِئُ. فَقَالَ لَهُ الرَّجُلُ: يَا ابْنَ عَبْدِ المُطَّلِبِ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ أَجَبْتُكَ». فَقَالَ الرَّجُلُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنِّي سَائِلُكَ فَمُشَدِّدٌ عَلَيْكَ فِي المَسْأَلَةِ، فَلاَ تَجِدْ عَلَيَّ فِي نَفْسِكَ؟ فَقَالَ: «سَلْ عَمَّا بَدَا لَكَ» فَقَالَ: أَسْأَلُكَ بِرَبِّكَ وَرَبِّ مَنْ قَبْلَكَ، آللَّهُ أَرْسَلَكَ إِلَى النَّاسِ كُلِّهِمْ؟ فَقَالَ: «اللَّهُمَّ نَعَمْ». قَالَ: أَنْشُدُكَ بِاللَّهِ، آللَّهُ أَمَرَكَ أَنْ نُصَلِّيَ الصَّلَوَاتِ الخَمْسَ فِي اليَوْمِ وَاللَّيْلَةِ؟ قَالَ: «اللَّهُمَّ نَعَمْ». قَالَ: أَنْشُدُكَ بِاللَّهِ، آللَّهُ أَمَرَكَ أَنْ نَصُومَ هَذَا الشَّهْرَ مِنَ السَّنَةِ؟ قَالَ: «اللَّهُمَّ نَعَمْ». قَالَ: أَنْشُدُكَ بِاللَّهِ، آللَّهُ أَمَرَكَ أَنْ تَأْخُذَ هَذِهِ الصَّدَقَةَ مِنْ أَغْنِيَائِنَا فَتَقْسِمَهَا عَلَى فُقَرَائِنَا؟ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اللَّهُمَّ نَعَمْ». فَقَالَ الرَّجُلُ: آمَنْتُ بِمَا جِئْتَ بِهِ، وَأَنَا رَسُولُ مَنْ وَرَائِي مِنْ قَوْمِي، وَأَنَا ضِمَامُ بْنُ ثَعْلَبَةَ أَخُو بَنِي سَعْدِ بْنِ بَكْرٍ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நாங்கள் பள்ளிவாசலில் அமர்ந்திருந்த போது ஒட்டகத்தில் ஒரு மனிதர் வந்து பள்ளி(யின் வளாகத்தி)ல் ஒட்டகத்தைப் படுக்கவைத்து அத(ன் முன்னங்காலி)னை மடக்கிக்கட்டினார். பிறகு மக்களிடம் உங்களில் முஹம்மது அவர்கள் யார்?’ என்று கேட்டார். – அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களிடையே சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். – இதோ சாய்ந்து அமர்ந்திருக்கும் இந்த வெள்ளை நிற மனிதர் தாம்’ என்று நாங்கள் சொன்னோம். உடனே அம்மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அப்துல் முத்தலிபின் (மகனின்) புதல்வரே!’ என்றழைத்தார். அதற்கு நபியவர்கள் என்ன விஷயம்? என்று கேட்டார்கள். அப்போது அம்மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன். சில கடினமான கேள்விகளையும் நான் கேட்கப் போகிறேன். அதற்கு நீங்கள் என் மீது கோபப்பட்டுவிடக் கூடாது என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம் மனதில் பட்டதைக் கேளும்! என்றனர்.
உடனே அம்மனிதர் உம்முடைய, உம் முன்னோருடைய இரட்சகன் மீது ஆணையாகக் கேட்கிறேன்; அல்லாஹ்தான் உம்மை மனித இனம் முழுவதற்கும் தூதராக அனுப்பினானா?’ என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம், அல்லாஹ் சாட்சியாக! என்றனர். அடுத்து அவர் அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன்; அல்லாஹ்தான் இரவிலும் பகலிலுமாக (நாளொன்றுக்கு) ஐவேளைத் தொழுகைளைத் தொழுமாறு உமக்குக் கட்டளையிட்டிருக்கின்றானா? என்று கேட்டார். அதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம், அல்லாஹ் சாட்சியாக என்றனர். அவர் அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன்; அல்லாஹ்தான் ஒவ்வொரு ஆண்டிலும் இந்த மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும் என்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம், அல்லாஹ் சாட்சியாக!’ என்றனர். அவர், அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன்: அல்லாஹ்தான் எங்கள் செல்வர்களிடமிருந்து இந்த தர்மத்தைப் பெற்று எங்கள் வறியோரிடையே விநியோகிக்குமாறு உமக்குக் கட்டளையிட்டிருக்கின்றானா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஆம், அல்லாஹ் சாட்சியாக!’ என்றனர்.
(இவற்றைக் கேட்டுவிட்டு) அம்மனிதர் நீங்கள் (இறைவனிடமிருந்து) கொண்டு வந்தவற்றை நான் நம்பி ஏற்கின்றேன் என்று கூறிவிட்டு நான், எனது கூட்டத்தார்களில் இங்கு வராமல் இருப்பவர்களின் தூதுவனாவேன்; நான்தான் பனூ சஅத் பின் பக்ர் குலத்தாரின் சகோதரன் ளிமாம் பின் ஸஅலபா என்றும் கூறினார்.
அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல் : புகாரி 63
பொதுவாக தலவர்கள் ஒரு சபையில் அமர்ந்திருக்கும் போது அவர்கள் தனி இருக்கையிலோ அல்லது தனி அடையாளத்துடனோ காணப்படுவார்கள். அல்லது மக்களைவிட்டும் தனித்துக் காட்டும் ஏதோ ஒரு அடையாளத்துடனே காணப்படுவார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு சபையில் இருக்கிறார்கள். முன்பின் அவர்களைப் பார்த்திராத ஒருவர் வந்து முஹம்மது யார் என்று கேட்கிறார். இதிலிருந்து என்ன தெரிகிறது? முழங்காலுக்குக் கீழ் ஜுப்பா, ஏழரை முழ தலைப்பாகை என்ற அளவுக்குக் கூட மக்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் எந்த அடையாளமும் இல்லாமல் மக்களில் ஒருவராகவே இருக்கிறார்கள். நபித்தோழர்கள் இவர் தான் முஹம்மத் என்று கூறிய பிறகுதான் அவரால் நபிகள் நாயகத்தை அறிய முடிந்தது. அப்படியானால் ஹஜரத் கிப்லாக்கள் நபிவழிக்கு எதிராகவே இந்த வெற்று மரியாதையை விரும்புகிறார்கள் என்பது தெரிகிறது.
முஹம்மத் யார் என்று அந்த மனிதர் கேட்ட உடன் நபிகள் நாயகத்தை உயிருக்கும் மேலாக மதித்த எந்த நபித்தோழரும் கோபப்படவில்லை. எப்படி முஹம்மது என்று பெயர் சொல்லி விசாரிக்கலாம் எனக் கேட்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படித்தான் தமது தோழர்களுக்குப் பயிற்றுவித்துள்ளார்கள் என்று தெரிகிறது.
இதை இன்றைய முஸ்லிம் மதகுருமார்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்! இஸ்லாத்துக்கும், இவர்களுக்கும் இந்த விஷயத்தில் எந்தச் சம்மந்தமும் இல்லை என்பதை அறியலாம்.
4638 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرِو بْنِ يَحْيَى المَازِنِيِّ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: جَاءَ رَجُلٌ مِنَ اليَهُودِ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ لُطِمَ وَجْهُهُ، وَقَالَ: يَا مُحَمَّدُ، إِنَّ رَجُلًا مِنْ أَصْحَابِكَ مِنَ الأَنْصَارِ لَطَمَ فِي وَجْهِي، قَالَ: «ادْعُوهُ» فَدَعَوْهُ، قَالَ: «لِمَ لَطَمْتَ وَجْهَهُ؟» قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي مَرَرْتُ بِاليَهُودِ، فَسَمِعْتُهُ يَقُولُ: وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى البَشَرِ، فَقُلْتُ: وَعَلَى مُحَمَّدٍ، وَأَخَذَتْنِي غَضْبَةٌ فَلَطَمْتُهُ، قَالَ: «لَا تُخَيِّرُونِي مِنْ بَيْنِ الأَنْبِيَاءِ، فَإِنَّ النَّاسَ يَصْعَقُونَ يَوْمَ القِيَامَةِ، فَأَكُونُ أَوَّلَ مَنْ يُفِيقُ، فَإِذَا أَنَا بِمُوسَى آخِذٌ بِقَائِمَةٍ مِنْ قَوَائِمِ العَرْشِ، فَلَا أَدْرِي أَفَاقَ قَبْلِي أَمْ جُزِيَ بِصَعْقَةِ الطُّورِ»
யூதர்களில் ஒருவர் (அன்சாரி ஒருவரிடம்) தமது முகத்தில் அறைவாங்கிக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, முஹம்மதே! உங்கள் அன்சாரித் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார் என்று சொன்னார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவரைக் கூப்பிடுங்கள் என்று சொன்னார்கள். உடனே மக்கள் அவரை அழைத்(து வந்)தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீங்கள் இவர் முகத்தில் ஏன் அறைந்தீர்கள்? என்று கேட்க அவர், அல்லாஹ்வின் தூதரே! நான் யூதர்களைக் கடந்து சென்றேன். அப்போது இவர், மனிதர்கள் அனைவரிலும் மூஸாவை (சிறந்தவராக)த் தேர்ந்தெடுத்தவன் மீது சத்தியமாக என்று சொல்லக் கேட்டேன். உடனே நான், முஹம்மதை விடவுமா? என்று கேட்டேன். எனக்குக் கோபம் மேலிட, நான் இவரை அறைந்துவிட்டேன் என்று சொன்னார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இறைத்தூதர்களுக்கிடையே என்னைச் சிறந்தவர் ஆக்காதீர்கள். ஏனெனில், மக்கள் மறுமை நாளில் மூர்ச்சையாகி விடுவார்கள். மூர்ச்சை தெளிந்து எழுகின்றவர்களில் முதல் ஆளாக நான் இருப்பேன். அப்போது நான் மூஸாவின் அருகே இருப்பேன். அவர் இறைவனுடைய சிம்மாசனத்தின் கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருப்பார். அவர் எனக்கு முன்பே மூர்ச்சை தெளிந்து (எழுந்து)விட்டாரா? அல்லது தூர்சீனா’ மலையில் அடைந்த மூர்ச்சைக்குப் பதிலாக இங்கு (மூர்ச்சையாக்கப்படாமல்) விட்டு விடப்பட்டாரா என்று எனக்குத் தெரியாது என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : புகாரி 4638
சிறுபான்மைச் சமுதாயத்தைச் சேர்ந்த யூதர் ஒருவர் தனக்கு முஸ்லிமால் ஏற்பட்ட பாதிப்பைப் பற்றி முறையிட வந்த போது முஹம்மதே என்று அழைக்கிறார். இதற்காக நபிகளோ, மற்றவர்களோ கோபப்படவில்லை.
ஏராளமான அடைமொழிகளுடன் தாங்கள் அழைக்கப்படுவதில் மகிழ்ச்சி அடையும் உலமாக்களுக்கும், இஸ்லாத்துக்கும் இந்த விஷயத்தில் சம்மந்தம் இருக்கிறதா என்று சிந்தித்துப் பாருங்கள்!
3635 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ اليَهُودَ جَاءُوا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرُوا لَهُ أَنَّ رَجُلًا مِنْهُمْ وَامْرَأَةً زَنَيَا، فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا تَجِدُونَ فِي التَّوْرَاةِ فِي شَأْنِ الرَّجْمِ». فَقَالُوا: نَفْضَحُهُمْ وَيُجْلَدُونَ، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ: كَذَبْتُمْ إِنَّ فِيهَا الرَّجْمَ فَأَتَوْا بِالتَّوْرَاةِ فَنَشَرُوهَا، فَوَضَعَ أَحَدُهُمْ يَدَهُ عَلَى آيَةِ الرَّجْمِ، فَقَرَأَ مَا قَبْلَهَا وَمَا بَعْدَهَا، فَقَالَ لَهُ عَبْدُ اللَّهِ بْنُ سَلاَمٍ: ارْفَعْ يَدَكَ، فَرَفَعَ يَدَهُ فَإِذَا فِيهَا آيَةُ الرَّجْمِ، فَقَالُوا: صَدَقَ يَا مُحَمَّدُ، فِيهَا آيَةُ الرَّجْمِ، فَأَمَرَ بِهِمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرُجِمَا، قَالَ عَبْدُ اللَّهِ: فَرَأَيْتُ الرَّجُلَ يَجْنَأُ عَلَى المَرْأَةِ يَقِيهَا الحِجَارَة
யூதர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தம் சமுதாயத்தில் ஓர் ஆணும் பெண்ணும் விபச்சாரம் செய்துவிட்டதாகக் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் கல்லெறி தண்டனை குறித்து தவ்ராத்தில் என்ன காண்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், அவர்களை நாம் கேவலப்படுத்திட வேண்டும் என்றும், அவர்கள் கசையடி கொடுக்கப்படுவார்கள் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்கள். உடனே (யூத மத அறிஞராயிருந்து இஸ்லாத்தை ஏற்ற) அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்கள் நீங்கள் பொய் சொன்னீர்கள். (விபச்சாரம் செய்தவர்களை சாகும் வரை) கல்லால் அடிக்க வேண்டுமென்றுதான் அதில் கூறப்பட்டுள்ளது என்று சொன்னார்கள். உடனே, அவர்கள் தவ்ராத்தைக் கொண்டு வந்து அதை விரித்தார்கள். அவர்களில் ஒருவர் விபச்சாரிகளுக்கு கல்லெறிந்து கொல்லும் தண்டனை தரப்பட வேண்டும்’ என்று கூறும் வசனத்தின் மீது தனது கையை வைத்து மறைத்துக் கொண்டு, அதற்கு முன்பும் பின்பும் உள்ள வசனத்தை ஓதினார். அப்போது அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்கள், உன் கையை எடு என்று சொல்ல, அவர் தனது கையை எடுத்தார். அப்போது அங்கே (விபச்சாரக் குற்றத்திற்கு) கல்லெறி தண்டனை தரும்படி கூறும் வசனம் இருந்தது. உடனே யூதர்கள், அப்துல்லாஹ் பின் ஸலாம் உண்மை சொன்னார். முஹம்மதே! தவ்ராத்தில் கல்லெறி தண்டனையைக் கூறும் வசனம் இருக்கத்தான் செய்கிறது என்று சொன்னார்கள். உடனே, அவ்விரண்டு பேரையும் சாகும் வரை கல்லால் அடிக்கும்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்திரவிட்டார்கள். அவ்வாறே அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கப்பட்டது. அப்போது அந்த ஆண், அப்பெண்ணைக் கல்லடியிலிருந்து பாதுகாப்பதற்காக தன் உடலை (அவளுக்குக் கேடயம் போலாக்கி) அவள் மீது கவிழ்ந்து (மறைத்துக்) கொள்வதை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : புகாரி 3535
யூதர்கள் குற்றவியல் சட்டம் குறித்து தீர்ப்பு கேட்டு வந்த போது முஹம்மதே என்று அழைத்துள்ளார்கள். நபிகள் நாயகமோ, நபித்தோழர்களோ அதைக் கண்டிக்கவில்லை. அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் அவர்கள் கேட்டு வந்த விஷயம் குறித்து தீர்ப்பளிக்கிறார்கள்.
இப்படி ஹஜரத் கிப்லாக்கள் ஏன் நடக்க முடியவில்லை? பிறமதச் சாமியார்களுக்கு அந்த மதத்து மக்கள் அளிக்கும் மரியாதையைப் போல் முஸ்லிம்கள் தமக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதே இதற்குக் காரணம்.
மற்றொரு சம்பவத்தைப் பாருங்கள்!
4811 – حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَبِيدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: جَاءَ حَبْرٌ مِنَ الأَحْبَارِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا مُحَمَّدُ إِنَّا نَجِدُ: أَنَّ اللَّهَ يَجْعَلُ السَّمَوَاتِ عَلَى إِصْبَعٍ وَالأَرَضِينَ عَلَى إِصْبَعٍ، وَالشَّجَرَ عَلَى إِصْبَعٍ، وَالمَاءَ وَالثَّرَى عَلَى إِصْبَعٍ، وَسَائِرَ الخَلاَئِقِ عَلَى إِصْبَعٍ، فَيَقُولُ أَنَا المَلِكُ، فَضَحِكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ تَصْدِيقًا لِقَوْلِ الحَبْرِ، ثُمَّ قَرَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {وَمَا قَدَرُوا اللَّهَ حَقَّ قَدْرِهِ، وَالأَرْضُ جَمِيعًا قَبْضَتُهُ يَوْمَ القِيَامَةِ، وَالسَّمَوَاتُ مَطْوِيَّاتٌ بِيَمِينِهِ، سُبْحَانَهُ وَتَعَالَى عَمَّا يُشْرِكُونَ{
யூத மத அறிஞர்களில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, முஹம்மதே! அல்லாஹ், வானங்களை ஒரு விரல் மீதும், பூமிகளை ஒரு விரல் மீதும், மரங்களை ஒரு விரல் மீதும், தண்ணீர் மற்றும் ஈரமான மண்ணை ஒரு விரல் மீதும், இதர படைப்பினங்களை ஒரு விரல் மீதும் வைத்துக் கொண்டு, நானே அரசன் என்று சொல்வான் என நாங்கள் (எங்களது வேத நூலான தவ்ராத்தில்) கண்டோம் என்று சொன்னார். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த அறிஞரின் கருத்தை உண்மையென ஆமோதிக்கும் விதத்தில், தமது கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். பிறகு, அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ, அவ்வாறு மதிக்கவில்லை. மறுமை நாளில் பூமி முழுவதும் அவன் கைப் பிடியில் இருக்கும். வானங்கள் அவனது வலக்கரத்தில் சுருட்டப்பட்டிருக்கும். அவர்கள் இணை வைப்பவற்றிலிருந்து அவன் தூயவன்; உயர்ந்தவன் எனும் (39:67ஆவது) வசனத்தை ஓதினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)
நூல் : புகாரி 4811
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் யூதர்கள் சிறுபான்மையினராக இருந்தனர். அவர்களின் மதகுரு வந்து முஹம்மதே என்று பெயர் சொல்லி அழைத்து கேள்வி கேட்கிறார். அல்லாஹ்வின் தூதர் என்பதை அவர் நம்பாதவராக இருந்தாலும் நபிகள் நாயகம் அவர்கள் சக்கரவர்த்தியாக இருந்ததால் ராஜாதி ராஜ முஹம்மதுவே என்று அடைமொழியைக் கூட அவர் பயன்படுத்தாமல் வெறும் பெயரைமட்டும் சொல்லி அழைக்க முடிந்தது எப்படி?
முஹம்மது அவர்களை யாரும் பெயர் சொல்லி அழைக்கலாம்; அது எந்த வகையிலும் அவர்களைப் பாதிக்காது என்று பரவலாக அறியப்பட்டு இருந்ததால் தான் இது சாத்தியமானது.
ஹஜரத் கிப்லாக்கள் அவர்களை விட மேலான மரியாதைக்கு உரியவர்களா? என்று சிந்தித்துப் பாருங்கள்!
2422 – حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ، أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ: بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْلًا قِبَلَ نَجْدٍ، فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي حَنِيفَةَ يُقَالُ لَهُ ثُمَامَةُ بْنُ أُثَالٍ سَيِّدُ أَهْلِ اليَمَامَةِ، فَرَبَطُوهُ بِسَارِيَةٍ مِنْ سَوَارِي المَسْجِدِ، فَخَرَجَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا عِنْدَكَ يَا ثُمَامَةُ»، قَالَ: عِنْدِي يَا مُحَمَّدُ خَيْرٌ، فَذَكَرَ الحَدِيثَ، قَالَ: «أَطْلِقُوا ثُمَامَةَ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நஜ்து மாநிலத்தை நோக்கி குதிரை வீரர்களின் படை ஒன்றை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் பனூ ஹனீஃபா குலத்தைச் சேர்ந்த யமாமாவாசிகளின் தலைவரான சுமாமா பின் உஸால் எனப்படும் மனிதரைப் பிடித்து வந்து அவரைப் பள்ளிவாசலின் தூணில் கட்டி வைத்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரை நோக்கி வந்து, சுமாமாவே, உங்களிடம் என்ன (செய்தி) உள்ளது? என்று கேட்டார்கள். அவர், முஹம்மதே! என்னிடம் நல்ல செய்தி தான் உள்ளது என்று கூறினார். இறுதியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், சுமாமாவை அவிழ்த்து விட்டு விடுங்கள் என்று உத்தரவிட்டார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 2422
நபிகள் நாயகத்தால் சிறைப்பிடிக்கப்பட்ட கைதி ஒருவர் முஹம்மதே என்று அழைத்து பேச முடிகிறது. மன்னா! மன்னர் மன்னா என்பன போன்ற அடைமொழிகள் நபிகள் நாயகத்துக்கு அறவே பிடிக்காது என்பது பிற நாடுகளுக்கும் பரவி இருந்ததால் வெளிநாட்டில் இருந்து பிடித்து வரப்பட்ட அன்னிய பிரஜையும் முஹம்மதே என்று அழைக்க முடிந்தது.
ஹஜரத் கிப்லாக்கள் என்று பட்டம் சூட்டித் திரியும் மதகுருமார்கள் நபிகள் நாயகத்தை முன்மாதிரியாகக் கொள்ளவில்லை; பிற மதச் சாமியார்களைத் தான் முன்மாதிரிகளாகக் கொண்டுள்ளனர் என்பது இதிலிருந்து உறுதியாகிறது.