பிற மதவழிபாடுகள் நடந்த திடலில் தொழுகை நடத்தலாமா?

பதில்

முந்தைய சமுதாயத்தினர் தமது வழிபாட்டுத் தலங்களில் மட்டும் தான் தொழ வேண்டும் என்ற சட்டம் இருந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்தினருக்கு பூமியில் எங்கு வேண்டுமானாலும் தொழலாம் என்று தளர்த்தப்பட்டு விட்டது.

صحيح البخاري

335 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سِنَانٍ هُوَ العَوَقِيُّ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، قَالَ: ح وَحَدَّثَنِي سَعِيدُ بْنُ النَّضْرِ، قَالَ: أَخْبَرَنَا هُشَيْمٌ، قَالَ: أَخْبَرَنَا سَيَّارٌ، قَالَ: حَدَّثَنَا يَزِيدُ هُوَ ابْنُ صُهَيْبٍ الفَقِيرُ، قَالَ: أَخْبَرَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” أُعْطِيتُ خَمْسًا لَمْ يُعْطَهُنَّ أَحَدٌ قَبْلِي: نُصِرْتُ بِالرُّعْبِ مَسِيرَةَ شَهْرٍ، وَجُعِلَتْ لِي الأَرْضُ مَسْجِدًا وَطَهُورًا، فَأَيُّمَا رَجُلٍ مِنْ أُمَّتِي أَدْرَكَتْهُ الصَّلاَةُ فَلْيُصَلِّ، وَأُحِلَّتْ لِي المَغَانِمُ وَلَمْ تَحِلَّ لِأَحَدٍ قَبْلِي، وَأُعْطِيتُ الشَّفَاعَةَ، وَكَانَ النَّبِيُّ يُبْعَثُ إِلَى قَوْمِهِ خَاصَّةً وَبُعِثْتُ إِلَى النَّاسِ عَامَّةً “

335 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்கு முன்னர் (வாழ்ந்த இறைத்தூதர்கள்) எவருக்கும் வழங்கப்படாத ஐந்து விஷயங்கள் எனக்கு வழங்கப்பட்டுள்ளன.

1. (எதிரிகளுக்கும் எனக்குமிடையில்) ஒரு மாத காலப் பயணத் தொலைவிருந்தாலும் அவர்களுடைய உள்ளங்களில் என்னைப் பற்றிய அச்சம் ஏற்படுவதன் மூலம் எனக்கு உதவி செய்யப்பட்டுள்ளது.

2. பூமி முழுவதும் சுத்தம் (தயம்மும்) செய்வதற்கேற்றதாகவும் தொழுமிடமாகவும் எனக்கு ஆக்கப்பட்டுள்ளது. என் சமுதாயத்தாரில் யாருக்காவது தொழுகையின் நேரம் வந்துவிட்டால் தொழுதுகொள்ளட்டும்.

3. போரில் கிடைக்கும் செல்வங்கள் எனக்கு (மட்டும்) அனுமதிக்கப்பட்டுள்ளது. எனக்கு முன்னர் எவருக்கும் அனுமதிக்கப்படவில்லை.

4. (மறுமையில்) பரிந்துரை செய்யும் வாய்ப்பு எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

5. ஒவ்வோர் இறைத்தூதரும் தத்தம் சமூகத்திற்கு மட்டுமே தூதராக அனுப்பப்பட்டார்கள். ஆனால் நான், மனித இனம் முழுவதற்கும் இறைத்தூதராக அனுப்பப்பட்டுள்ளேன்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல் : புகாரி 335, 438

இந்த அனுமதி பொதுவானதல்ல.

எந்த இடங்களில் தொழக் கூடாது என்று தடுக்கப்பட்டதற்கான ஆதாரம் உள்ளதோ அந்த இடங்கள் தவிர மற்ற இடங்களில் தொழலாம் என்று தான் மேற்கண்ட ஹதீஸைப் புரிந்து கொள்ள வேண்டும்.

உருவப்படங்கள் சிலைகள் உள்ள இடங்களில் தொழுவதற்கு தடை உள்ளது.

صحيح البخاري

374 – حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، كَانَ قِرَامٌ لِعَائِشَةَ سَتَرَتْ بِهِ جَانِبَ بَيْتِهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمِيطِي عَنَّا قِرَامَكِ هَذَا، فَإِنَّهُ لاَ تَزَالُ تَصَاوِيرُهُ تَعْرِضُ فِي صَلاَتِي»

ஆயிஷா (ரலி) அவர்களிடம் வேலைப்பாடு மிக்க  திரைச் சீலை ஒன்று இருந்தது. அதன் மூலம் வீட்டின் ஒரு பகுதியை அவர்கள் மறைத்திருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இந்த அலங்காரத் திரைச் சீலையை நம்மிடமிருந்து அகற்றிவிடு! ஏனெனில், இதிலுள்ள உருவங்கள் என் தொழுகையில் குறுக்கிட்டுக் கொண்டேயிருந்தன என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி 374, 5959

திரைச் சீலையில் உருவங்கள் இருந்ததைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அது என் கவனத்தைச் சிதறடிப்பதால் அதை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டுள்ளதால் உருவப்படங்களும் சிலைகளும் உள்ள வீடுகளிலும் பிறமத வழிபாட்டுத் தலங்களிலும் அங்கே தொழக் கூடாது என்று அறியலாம்.

மேலும் பிற மத வழிபாட்டுத் தலங்கள் பிற மத மக்களுக்கு உரிமையானதாகும். அங்கே தொழுவது அவர்களின் உரிமையைப் பறிப்பதாகும். உரிமை படைத்தவர்களில் சிலருக்கு ஆட்சேபனை இருந்தாலும் அங்கே தொழுவது அத்து மீறலாகவும் அபகரிப்பாகவும் அமைந்து விடும். இந்தக் காரணத்துக்காகவும் பிறமத வழிபாட்டுத் தலங்களில் தொழக் கூடாது.

பிறமதத்தினர் ஒட்டு மொத்தமாக இஸ்லாத்தை ஏற்றால் அவர்கள் ஏற்கனவே வணங்கி வந்த ஆலயத்தில் அப்படியே தொழக் கூடாது. அதில் உள்ள வழிபாட்டுச் சின்னங்களை அப்புறப்படுத்தி பள்ளிவாசலாக ஆக்கிய பிறகு தான் தொழ வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளனர்.

سنن النسائي

701 – أَخْبَرَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، عَنْ مُلَازِمٍ قَالَ: حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بَدْرٍ، عَنْ قَيْسِ بْنِ طَلْقٍ، عَنْ أَبِيهِ طَلْقِ بْنِ عَلِيٍّ قَالَ: خَرَجْنَا وَفْدًا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَايَعْنَاهُ، وَصَلَّيْنَا مَعَهُ وَأَخْبَرْنَاهُ أَنَّ بِأَرْضِنَا بِيعَةً لَنَا، فَاسْتَوْهَبْنَاهُ مِنْ فَضْلِ طَهُورِهِ فَدَعَا بِمَاءٍ فَتَوَضَّأَ وَتَمَضْمَضَ، ثُمَّ صَبَّهُ فِي إِدَاوَةٍ وَأَمَرَنَا فَقَالَ: «اخْرُجُوا فَإِذَا أَتَيْتُمْ أَرْضَكُمْ فَاكْسِرُوا بِيعَتَكُمْ وَانْضَحُوا مَكَانَهَا بِهَذَا الْمَاءِ وَاتَّخِذُوهَا مَسْجِدًا» قُلْنَا: إِنَّ الْبَلَدَ بَعِيدٌ , وَالْحَرَّ شَدِيدٌ , وَالْمَاءَ يَنْشُفُ فَقَالَ: «مُدُّوهُ مِنَ الْمَاءِ؛ فَإِنَّهُ لَا يَزِيدُهُ إِلَّا طِيبًا» فَخَرَجْنَا حَتَّى قَدِمْنَا بَلَدَنَا فَكَسَرْنَا بِيعَتَنَا، ثُمَّ نَضَحْنَا مَكَانَهَا , وَاتَّخَذْنَاهَا مَسْجِدًا، فَنَادَيْنَا فِيهِ بِالْأَذَانِ , قَالَ: وَالرَّاهِبُ رَجُلٌ مِنْ طيِّئٍ، فَلَمَّا سَمِعَ الْأَذَانَ قَالَ: دَعْوَةُ حَقٍّ، ثُمَّ اسْتقْبَلَ تَلْعَةً مِنْ تِلَاعِنَا فَلَمْ نَرَهُ بَعْدُ

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்தித்து இஸ்லாத்தை ஏற்க குழுவாக சென்று இஸ்லாத்தை ஏற்பதாக உறுதி எடுத்தோம். எங்கள் ஊரில் எங்களுக்குச் சொந்தமான ஆலயம் உள்ளது. எனவே நீங்கள் உளூ செய்த தண்ணீரை எங்களுக்குத் தாருங்கள். அந்தத் தண்ணீர் மூலம் அந்த ஆலயத்தை சுத்தம் செய்கிறோம் எனக் கூறினோம். நீங்கள் புறப்பட்டுச் சென்று அந்த ஆலயத்தில் உள்ள வழிபாட்டுச் சின்னங்களை உடைத்து போடுங்கள். அந்த இடத்தில் இந்த தண்ணீர் மூலம் கழுவி விட்டு அதை பள்ளிவாசலாக ஆக்குங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (சுருக்கம்)

அறிவிப்பவர் : தல்க் பின் அலீ (ரலி)

நூல் : நஸாயீ

அவ்வூரில் உள்ள அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுள்ள நிலையில் அதில் அப்படியே தொழுங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக அதில் உள்ள வழிபாட்டு சின்னங்களை அப்புறப்படுத்தி விட்டு பின்னர் அதைப் பள்ளிவாசலாக ஆக்கி விட்டு அதில் தொழுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழிகாட்டி உள்ளதால் பிறமத வழிபாட்டுத் தலங்கள் அதே நிலையில் நீடிக்கும் வரை அதில் தொழக் கூடாது என்பது தெரிகிறது.

இந்த சட்டம் மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஆலயங்களுக்குத் தான் பொருந்தும். அல்லாஹ்வும் அவனது தூதரும் எதைப் பள்ளிவாசல் என்று ஆக்கினார்களோ அவற்றுக்கு பொருந்தாது. அதில் பிற்காலத்தில் சிலைகள் வைக்கப்பட்டாலும் அந்த நிலையில் அங்கே தொழலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஅபா ஆலயத்தில் சிலைகள் இருக்கும் நிலையிலேயே தொழுதுள்ளார்கள். ஏனெனில் கஅபா ஆலயம் என்பது அல்லாஹ்வால் புனிதமாக்கப்பட்டதாகும்.

அடக்கத்தலம் மீது கட்டப்பட்ட ஆலயங்களில் அதாவது தர்காக்களில் தொழ தடை உள்ளது.

صحيح البخاري

427 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ هِشَامٍ، قَالَ: أَخْبَرَنِي أَبِي، عَنْ عَائِشَةَ أُمِّ المُؤْمِنِينَ، أَنَّ أُمَّ حَبِيبَةَ، وَأُمَّ سَلَمَةَ ذَكَرَتَا كَنِيسَةً رَأَيْنَهَا بِالحَبَشَةِ فِيهَا تَصَاوِيرُ، فَذَكَرَتَا لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «إِنَّ أُولَئِكَ إِذَا كَانَ فِيهِمُ الرَّجُلُ الصَّالِحُ فَمَاتَ، بَنَوْا عَلَى قَبْرِهِ مَسْجِدًا، وَصَوَّرُوا فِيهِ تِلْكَ الصُّوَرَ، فَأُولَئِكَ شِرَارُ الخَلْقِ عِنْدَ اللَّهِ يَوْمَ القِيَامَةِ»

427, உம்மு ஹபீபா அவர்களும், உம்மு ஸலமா அவர்களும் (அபிசீனியாவுக்கு ஹிஜ்ரத் செய்திருந்த போது) அபிசீனியாவில் தாங்கள் பார்த்த உருவப்படங்கள் கொண்ட ஒரு கிறித்தவ ஆலயத்தைக் குறித்து (என்னிடம்) பேசினார்கள். மேலும் அவ்விருவரும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அதைப் பற்றிக் கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அவர்களிடையே நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து இறந்துவிடும் போது அவரது சமாதியின் மீது ஒரு வணக்கத்தலம்த்தைக் கட்டி அதில் அந்த உருவங்களை வரைவார்கள். அவர்கள் தாம் மறுமை நாளில் அல்லாஹ்விடம் மக்களிலேயே மிக மோசமானவர்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி

அதுபோல் சமாதிகள் எதிரில் இருந்தால் அங்கே தொழுவதற்கு தடை உள்ளது.

صحيح مسلم

97 – (972) وحَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ ابْنِ جَابِرٍ، عَنْ بُسْرِ بْنِ عُبَيْدِ اللهِ، عَنْ وَاثِلَةَ، عَنْ أَبِي مَرْثَدٍ الْغَنَوِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَجْلِسُوا عَلَى الْقُبُورِ، وَلَا تُصَلُّوا إِلَيْهَا»

அடக்கத்தலம் மீது அமராதீர்கள்! அதை நோக்கி தொழாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ மர்ஸத் (ரலி)

நூல் : முஸ்லிம்

இது போல் தடை உள்ள இடங்கள் தவிர்த்து மற்ற எல்லா இடங்களிலும் தொழலாம்.