இவன் தான் காதியானி!

மிர்ஸா குலாம் அஹ்மத் என்பவன் தன்னை நபி என்று வாதிட்டு தனி மதத்தை உருவாக்கி இஸ்லாத்தை விட்டு வெளியேறினான்.

இவனைப் பின்பற்றும் குருட்டுக் கும்பல் தம்மை அஹ்மதியா ஜமாஅத் எனக் கூறிக் கொண்டு முஸ்லிம் வேடம் போட்டு அப்பாவிகளை ஏமாற்றப் பார்க்கிறது.

புதிய தலைமுறை மக்களுக்கு மிர்ஸா குலாம் என்பவனின் அயோக்கியத்தனம் தெரியாது என்ற தைரியத்தில் காதியானிகள் என அறியப்படும் இக்கூட்டம் அப்பாவிகளுக்கு வலை வீச ஆரம்பித்துள்ளது.

மிர்ஸா குலாம் என்பவன் எவ்வளவு பெரிய அயோக்கியன் என்பதைப் புதிய தலைமுறை மக்களுக்கும் தெளிவுபடுத்தி எச்சரிக்கும் கடமை நமக்கு உள்ளது.

இந்தக் கூட்டத்துடன் நான் நேருக்கு நேர் விவாதம் நடத்தி மிர்சா குலாம் என்பவன் பொய்யன் என்பதை நிரூபித்திருந்தும் எனக்கே அழைப்பு அனுப்பியது இந்தக் கூட்டம்.

ஆம் இந்தக் கும்பலைச் சேர்ந்த ஜஃபருல்லா என்பவர் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் இருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினார். அதில் காதியானி கும்பலின் வெப்சைட் இடம் பெற்றிருந்தது.  இது போன்ற குப்பைகளை எனக்கு அனுப்பக் கூடாது என்று நான் அவருக்குப் பதில் எழுதினேன்.

எது குப்பை? விளக்க முடியுமா என்று கேட்டு மேலும் சில லின்குகள் வந்தன. இந்த லின்குகள் எல்லாம் எனக்கு முன்னரே தெரியும். நீ சரியான ஆளாக இருந்தால் லின்க் அனுப்புவதை விட்டு விட்டு நான் கேட்கும் கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக பதில் சொல்லத் தயாரா என்று பதில் போட்டேன்.

அனுப்புங்கள் பார்ப்போம் என்று எனக்கு பதில் வந்தது.

நான் கீழ்க்கண்ட முதல் கேள்விப் பட்டியலை அனுப்பினேன்.

நான் எழுதியது:

முதலில் இந்த வீடியோவைப் பார்.

காதியானி கும்பலுடன் மிர்ஸா குலாம் நபியா என்ற தலைப்பில் நான் விவாதம் செய்தேன். அந்த விவாதங்கள் 18 பாகம் உள்ளது. இதை முதலில் பார்

மிர்சா குலாம் நபியா (18 பாகங்கள்)

மிர்ஸா குலாம் அந்த விவாதத்தில் சொன்னதில் சில விஷயங்களை முதலில் எடுத்துக் காட்டுகிறேன்.

முஹம்மதீ பேகத்தை அல்லாஹ் எனக்கு திருமணம் செய்து வைப்பதாக வஹி அறிவித்தான் என்று மிர்சா பொய் சொன்னான். இது குறித்து அவன் சொன்னதைப் பாருங்கள்!

புளுகு மூட்டை ஒன்று

முஹம்மதீ பேகத்தை நாம் உமக்கு திருமணம் செய்து வைத்தோம் என்று அல்லாஹ் எனக்கு வஹீ அறிவித்தான்.

இது ஒரு முன்னறிவிப்பு அல்ல. இதில் ஆறு முன்னறிவிப்புகள் உள்ளன.

முதலாவது : அவளைத் திருமணம் செய்யும் வரை நான் உயிருடன் இருப்பேன்.

இரண்டாவது; அவளைத் திருமணம் செய்யும் வரை அந்தப் பெண்ணின் தந்தை உயிருடன் இருப்பார்.

மூன்றாவது எனக்குத் திருமணம் செய்து தந்த பின் அவளுடைய தந்தை மூன்று வருடத்துக்குள் இறப்பார்.

நான்காவது முஹம்மதீ பேகத்தின் கணவர் சுல்தான் முஹம்மத் இரண்டரை வருடத்தில் மரணிப்பார்.

ஐந்தாவது அப்போது நான் முஹம்மதீ பேகத்தைத் திருமணம் செய்வேன்.

ஆறாவது அவளை மணப்பேன் . அது வரை அவள் உயிருடன் இருப்பாள்.

இந்த ஆறு அறிவிப்புக்கள் நிறைவேறாவிட்டால் அதுவே நான் பொய்யன் என்பதற்கான ஆதாரம்.

என்று மிர்ஸா குலாம் சொன்னான்.

ஆயினே கமாலாத் என்ற நூலில் 325 ஆம் பக்கத்தில் இதை அவன் எழுதினான்.

இப்போது நான் கேள்விக்கு வருகிறேன்.

ஸைனப் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மணமுடித்துக் கொடுத்ததாக அல்லாஹ் கூறும் போது ஸவ்வஜ்னாகஹா அவரை உமக்கு மணமுடித்துத் தந்தேன் என்று கூறினான்.

அதே வார்த்தையைத் தான் அல்லாஹ் தனக்கும் பயன்படுத்தினான் என்று மிர்ஸா சொன்னான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் மணமுடித்துக் கொடுத்ததாகக் கூறியதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸைனபைத் திருமணம் செய்யாமல் அல்லாஹ் செய்து கொடுத்த திருமணமே போதும் என்று மனைவியாக்கிக் கொண்டார்கள்.

இவ்வாறு ஸவ்வஜ்னாகஹா (அவரை உமக்கு மணமுடித்துத் தந்தேன்) என்று பொய்யன் மிர்சாவுக்கு அல்லாஹ் கூறினால் அது கட்டாயம் நிறைவேற வேண்டும்.

ஆனால் பொய்யன் மிர்சா செத்துப் போகும் வரை அந்தப் பெண்ணை அவன் மணமுடிக்கவில்லை.

இதில் இருந்து அவன் அல்லாஹ்வின் மீது ஆறு பொய்கள் கூறி விட்டான் என்பது உறுதியாகிறது. மேலும் இது தான் நான் பொய் சொல்லவில்லை என்பதற்கு ஆதாரம் என்றும் அவன் சொன்னான்.

இதற்கு நேரடியாகப் பதில் சொல்ல வேண்டும்.

சுல்தான் முஹம்மத் இரண்டரை வருடத்தில் செத்துப் போவார் என்று பொய்யன் மிர்சா கூறினான். அவ்வாறு நடக்காவிட்டால் நான் பொய்யன் என்றும் கூறினான். ஆனால் பொய்யன் சொன்ன படி சுல்தான் முஹம்மத் சாகவில்லை. நீண்ட காலம் வாழ்ந்தார்.

நான் உண்மை சொல்கிறேன் என்பதற்கு ஆதாரமாக இதை பொய்யன் காதியானி குறிப்பிட்டான். இதுவும் நிறைவேறவில்லை. நபிமார்களை மெய்ப்பிக்க அல்லாஹ் வழங்கும் அத்தாட்சிகள் அப்படியே நிறைவேற வேண்டும்.

அதுவும் இது தான் நான் உண்மை சொல்கிறேன் என்பதற்கு ஆதாரம் என்று பொய்யன் அறிவித்திருக்கும் போது அது நிறைவேறாமல் போகாது.  இந்தக் கேள்விகளை பொய்யன் கூட்டத்துடன் விவாதம் நடத்திய போது மூல நூலை வாசித்து நான் கேட்டது.

அதைப் பொய்யன் கூட்டம் விவாதத்தில் மறுக்கவில்லை.

அந்தப் பெண்ணின் தந்தை அவளுக்குத் திருமணம் நடக்கும் வரை உயிருடன் இருந்து எனக்கு திருமணம் செய்து வைப்பார் என்று பொய்யன் கூறினான். ஆனால் அந்தப் பெண்ணின் தந்தை மகளுக்கு கல்யாணம் செய்து வைக்காமலே செத்துப் போய் விட்டார்.

இதிலும் மிர்சா எனும் அயோக்கியன் மாபெரும் பொய்யன் என்பது உறுதியாகி விட்டது.

அல்லாஹ் எனக்குத் திருமணம் செய்து வைத்தான் என்று இந்தப் பாதகன் சொன்னானா இல்லையா?

அல்லாஹ் அப்படி சொல்லி இருக்கும் போது அது போல் நடந்ததா? இது நிறைவேறா விட்டால் அவன் பொய்யன்; இது நிறைவேறி இருந்தால் அவன் பொய்யன் அல்ல.

சுல்தான் முஹம்மத் இரண்டரை வருடத்தில் சாவார் என்று இந்த அயோக்கியன் சொன்னானா இல்லையா? அதன் படி நடந்ததா? நடந்தது என்றால் அவன் உண்மை சொன்னான்; நடக்கவில்லை என்றால் அவன் பொய் சொன்னான்.

அவளுடைய தந்தை தன் மகளை எனக்கு மணமுடித்து தந்து விட்டு மரணிப்பார் என்று இவன் சொன்னானா இல்லையா? அது நிறைவேறினால் அவன் உண்மை சொன்னான். நிறைவேறா விட்டால் அவன் பொய் சொன்னான்.

இது நான் காதியானி கூட்டத்துடன் நடந்த விவாதத்தில் நேருக்கு நேராகக் கேட்ட கேள்விகள். நான் கேட்கும் கேள்விகள் திடீர்க் கேள்விகள் அல்ல. பல வருடங்களுக்கு முன்னர் நான் கேட்ட கேள்விகள் தான். அந்த விவாதத்தின் போதும் அதற்குப் பதில் சொல்லவில்லை. இத்தனை ஆண்டுகள் அவகாசம் எடுத்துக் கொண்ட பிறகு கூட பதில் சொல்ல முடியாது.

நீ இந்தக் கிறுக்கன் மீது குருட்டு நம்பிக்கை வைத்து அவன் தனது பொய்யை நியாயப்படுத்துவதற்காக உளறியதை எனக்குச் சொல்ல வேண்டாம். அவன் அயோக்கியன் எனும் போது அவனுடைய சமாளிப்புகள் எனக்கு தேவை இல்லை. அவனை பொய்யனா? உண்மை சொன்னவனா? என்பதற்கு அவனே எதை ஆதாரமாகக் காட்டினானோ அதைக் கொண்டே அல்லாஹ் அவனை அடையாளம் காட்டி விட்டான்.

அவன் சொன்னது நடந்ததா இல்லையா? இது தான் தேவை. இதற்கு நேரடியாகப் பதில் சொல்லி முடித்த பின் இதே விஷயத்தில் மிச்சமுள்ள மற்ற கேள்விகள் வரும்.

இப்படி பதில் போட்டவுடன் அரை மணி நேரத்துக்கு ஒரு மெயில் அனுப்பிக் கொண்டிருந்த மேற்படி காதியானி அத்துடன் காணாமல் போய் விட்டார்.

2111 டிசம்பர் முதல் தேதியன்று இந்த மின்னஞ்சல் தொடர்பு நடந்தது. நான் கேட்ட கேள்விகளுக்குப் பின் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போய் விட்டார்.

குலாம் அஹ்மத் காதியானி என்ற அயோக்கியனைப் பற்றி இன்றைய பாமர மக்கள் தெரிந்திருக்க மாட்டார்கள் என்ற தைரியத்தில் இன்னும் யார் யாருக்கோ இது போல் குப்பைகளை மேற்படியார், அல்லது அவரைச் சேர்ந்தவர்கள் அனுப்பி வரலாம் என்பதற்காக ஒரு மாதம் வரை பதிலுக்கு காத்திருந்து விட்டு இதை வெளியிடுகிறேன்.

மேலும் காதியானிகள் என்று அழைக்கப்படும் இந்த அஹ்மதியா மதத்தை உருவாக்கிய மிர்சா குலாம் என்பவனைப் போல் மார்க்க விஷயத்தில் பொய் சொன்ன ஒருவன் உலகில் பிறந்தது இல்லை என்று அறிந்து கொள்ளலாம்.

புதிய தலைமுறையினர் இவனைப் பற்றி அறிந்து எச்சரிக்கையாக இருப்பதற்காக அவனது மறுக்க முடியாத புளுகு மூட்டைகளை வெளியிடுகிறேன்.

புளுகு மூட்டை இரண்டு

அல்லாஹ் எனக்கு நான்கு ஆண் மக்களைத் தந்துள்ளான். ஐந்தாவதாக ஒரு ஆண் மகன் குறித்து அல்லாஹ் எனக்கு நற்செய்தி கூறினான். இது என்றாவது ஒரு நாள் நடந்தே தீரும் என்று இவன் கூறினான்.

ஆனால் இவனுக்கு ஐந்தாவதாக ஆண் பிள்ளை பிறக்கவில்லை. தன்னைத் தானே பொய்யன் என்று இவன் நிரூபித்தான். இதன் மூலம் இவன் அல்லாஹ்வின் பெயரில் புளுகு மூட்டையை அவிழ்த்து விடுபவன் என்பது உறுதியாகி விட்ட பிறகு அவனைப் பொய்யன் என்று அவனது சீடர்களே உணர்ந்தார்கள். இதை மறைப்பதற்காக இவனது நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த போது மகன் என்ற இடத்தில் grand son  பேரன் என்று மாற்றிக் கொண்டது பொய்யனை நம்பிய கூட்டம்.

புளுகு மூட்டை மூன்று

மிர்சா குலாம் காதியானிக்கு ஆங்கிலம் சரியாகத் தெரியாது. அது ஒரு குறைபாடு அல்ல. ஆனால் இவன் தனக்கு உர்துவிலும் அரபியிலும் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் வஹீ வந்ததாக புருடா விட்டான்.

இந்த வஹியில் லட்சணம் பின்னால் வருகிறது

وَمَا أَرْسَلْنَا مِن رَّسُولٍ إِلاَّ بِلِسَانِ قَوْمِهِ لِيُبَيِّنَ لَهُمْ فَيُضِلُّ اللّهُ مَن يَشَاءُ وَيَهْدِي مَن يَشَاءُ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ (4)

எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டு விடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

திருக்குர்ஆன் 14:4

எந்த இறைத்தூதரை அனுப்புவதாக இருந்தாலும் அவரது சமுதாயம் எந்த மொழி பேசுகிறதோ அந்த மொழியிலேயே வஹீ அனுப்புவதாக அல்லாஹ் கூறுகிறான். மேலும் தூதர் அதை விளக்கிக் கூறுவார் என்றும் அல்லாஹ் கூறுகிறான். விளக்கிக் கூறும் அளவுக்கு தூதருக்கு அந்த மொழி தெரிந்திருக்க வேண்டும் என்பது இதில் இருந்து விளங்குகிறது. ஆனால் இவனோ தனக்கு ஆங்கிலத்தில் வஹீ வந்தது என்கிறான். அதன் அர்த்தத்தை மற்றவரிடம் கேட்டு தெரிந்து கொள்வதாகவும் கூறினான்.

இவனுக்கு வஹீ வரவில்லை என்பதற்கு இதுவே போதிய ஆதாரம்.

இந்தப் பொய் மட்டுமின்றி இது தொடர்பான மற்றொரு பொய்யை இப்போது பார்ப்போம்.

புளுகு மூட்டை 4

எந்த ஒரு மனிதனின் எந்த மொழியில் அமைந்த வாசகமானாலும் அதில் சில பிழைகள் வரலாம். அதைக் குறை சொல்ல முடியாது. ஆனால் அல்லாஹ்விடமிருந்து வந்த வஹியில் பிழை இருக்கக் கூடாது. அல்லாஹ் பிழைக்கு அப்பாற்பட்டவன்.

ஆனால் இந்தக் கேடு கெட்டவனுக்கு வந்த ஆங்கில வஹீயில் பிழைகள் பல இருந்தன. இவன் சுயமாக எழுதிய வாசகம் என்று சொல்வானானால் அதில் பிழை இருப்பதை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால் இவனுக்கு அல்லாஹ்விடமிருந்து வந்த வஹீயின் இலட்சணத்தைப் பாருங்கள்!

தத்கிரா நூல் பக்கம் 116

இதில் இவனுக்கு வந்த ஆங்கில வஹியை ஆங்கிலத்திலும் எழுதியுள்ளான். அதையே உருது லிபியிலும் எழுதியுள்ளான்.

கடவுளின் வார்த்தை மாற்ற முடியாது என்பதை அல்லாஹ் இவனுக்கு அங்கிலத்தில் சொன்னானாம்.

எப்படிச் சொன்னான் தெரியுமா?

Words of god not can exchange

இப்படி இவனுக்கு வஹீ வந்ததாம்.

Words of god cannot exchange

என்று கூறுவதற்குப் பதிலாக இவன் தனக்குத் தெரிந்த அரைகுறை ஆங்கிலத்தில்

Words of god not can exchange

என்று எழுதி விட்டான்.

என்னடா கடவுளின் வார்த்தையில் இப்படிப் பிழை வரலாமா என்று கேட்டு இவன் ஒரு அயோக்கியன் என்று புரிந்து கொண்டு சிலர் அவனை உதறி விட்டு வெளியேறினர்.

இதை நியாயப்படுத்தி வஹீ என்பது ஃபோர்ஸாக வரும் போது இலக்கண விதிகளைக் கண்டு கொள்ளாது எனக் கூறி தன்னுடன் உள்ள மரமண்டைகளை ஏமாற்றினான்.

ஆனால் இந்த நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியிடும் போது இலக்கணப் பிழையை நீக்கி அதாவது வஹீயை சேஞ்ச் பண்ணி வெளியிட்டனர் இந்தக் கேடு கெட்ட மூளையற்ற காதியானிக் கும்பல்.

தத்கிரா மொழியாக்கம் பக்கம் 63

அல்லாஹ்வின் வார்த்தையில் மாற்றம் இல்லை என்று சொல்லும் எனும் போது வார்த்தையே மாறிப்போய் விட்டது என்றால் இது எவ்வளவு பெரிய அற்புதம். தன் பெயரில் பொய் சொன்னவனை அவனது வாயாலே அல்லாஹ் பொய்யன் என்று எப்படி அடையாளம் காட்டி விட்டான் என்று பாருங்கள்.

இவனது புளுகு மூட்டை இன்னும் வரும் இன்ஷா அல்லாஹ்

 04.01.2011. 7:53 AM

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா?

ஜகாத் கொடுக்கப்பட்ட செல்வங்களுக்கு மீண்டும் ஜகாத் உண்டா? பீ. ஜைனுல் ஆபிதீன் வெளியீடு நபீலா பதிப்பகம் மூன் பப்ளிகேசன்ஸ் 3, போஸ்ட் ஆபீஸ் தெரு மண்ணடி, சென்னை 600001 பதிப்பு   : மூன்றாம் பதிப்பு ...

தினமும் 12 ரக்அத்கள் தொழுகை பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானதா?

கேள்வி யார் ஒரு நாளைக்கு 12 ரக்அத்கள் தொழுகிறாரோ அவருக்காக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படும். அவை ஃபஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்கள் என்று விபரமாகக் கூறப்படும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்று சிலர் ...

விண்ணில் பறந்து…

விண்ணில் பறந்து… மேகமாக இருக்கும் போது விமானம். ராக்கெட் போன்றவற்றின் மூலம் உயரத்துக்குச் சென்று பிறை பார்த்து வரலாமா? வானியல் அறிவு இல்லாததால் இந்தக் கேள்வி கேட்கப்படுகிறது. நாம் அமாவாசை என்று சொல்கிறோமே அந்த ...

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி

சேரமான் பெருமாள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சந்திரன் பிளந்த நிகழ்ச்சியை கேரளாவிலிருந்து சேரமான் பெருமாள் என்ற மன்னர் பார்த்து இஸ்லாத்தைத் தழுவினார். இது அரசுப் பதிவேட்டிலும் உள்ளது ...

சில சந்தேகங்களும் விளக்கங்களும்

சில சந்தேகங்களும் விளக்கங்களும் பிறை பற்றிய ஆய்வில் சில சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. இந்தச் சந்தேகங்கள் யாவும் பிறை குறித்து பலரும் வெளியிட்ட பிரசுரங்களிலிருந்து எடுக்கப்பட்ட கேள்விகளாகும். எனவே அவற்றுக்குத் தனியாக கேள்வி ...

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல்

பிறை பார்த்ததாக சாட்சியம் கூறுதல் பிறையை அனைவரும் பார்க்க வேண்டியது அவசியம் இல்லை. யாராவது பார்த்து சாட்சி கூறினால் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். விபச்சாரக் குற்றச்சாட்டு சுமத்தினால் அதை நேரில் பார்த்த நான்கு ...

வானியல் கணிப்பு பொய்யா?

வானியல் கணிப்பு பொய்யா? வானியல் ஆய்வாளர்களால் பிறையைக் கணிக்க முடியுமா? முடியாதா? என்பது கேள்வியல்ல! வானியல் கணிப்பை ஏற்று முதல் பிறையைத் தீர்மானிக்கக் கூடாது என்றால் அதன் பொருளையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும் ...

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா?

தஜ்ஜால் வரும் போது மட்டும் கணிக்கலாமா? ...அல்லாஹ்வின் தூதரே! தஜ்ஜால் இவ்வுலகில் வாழும் காலம் எவ்வளவு?'' என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நாற்பது நாட்களாகும். (அதில்) ஒரு நாள் ...

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்?

சூரியன் விஷயத்தில் மட்டும் கணிப்பது ஏன்? பிறை விஷயத்தில் முன் கூட்டியே கணித்துச் செயல்படக் கூடாது என்று கூறும் நீங்கள், தொழுகை நேரங்களைக் கணிப்பதை மட்டும் ஏற்றுக் கொள்வது ஏன்? என்று சிலர் கேள்வி ...

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள்

அறிவியலை வலியுறுத்தும் வசனங்கள் அடுத்ததாக, வானியல் கணிப்பை ஏற்று பிறையை முடிவு செய்ய வேண்டும் என்று வாதம் புரிவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் மற்றும் சில இருக்கின்றன. அவையெல்லாம் நேரடி ஆதாரமாக இல்லாவிட்டாலும் அவற்றையும் ...

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா?

கணித்துக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் கூறினார்களா? விஞ்ஞானத்தின் அடிப்படையில் மாதத்தின் முதல் நாளைத் தீர்மானிக்க வேண்டும் என்போர் தங்கள் வாதத்தை வலுப்படுத்த மற்றொரு ஆதாரத்தையும் முன்வைக்கிறார்கள். நீங்கள் பிறை பார்த்து நோன்பு வையுங்கள். பிறை ...

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? 

வானியல் தெரியாமல் இருப்பது உம்மி சமுதாயம் என்பதை உறுதிப்படுத்த எப்படி உதவும்? இன்று கூட எண்ணற்ற பட்டதாரிகள் வானியல் அறியாமல் உள்ளனர். அவர்கள் உம்மிகளாவார்களா? எழுதத் தெரிவது சாதாரணமான ஒரு அறிவு. அந்த அறிவு ...

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா?

பிறை பார்ப்பது இன்றைக்குப் பொருந்தாதா? தலைப்பிறையைத் தீர்மானிப்பதில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வந்தாலும் சமீப காலமாக வானியல் ஆய்வின் முடிவை ஏற்க வேண்டும் என்ற பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்பட்டு வருகிறது. நாம் இது வரை ...

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள்

நோன்பு வைக்க தடுக்கப்பட்ட நாட்கள் صحيح البخاري 1864 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَبْدِ المَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ قَزَعَةَ، مَوْلَى زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا ...