ஹஜ் பெருநாள் தினம் மட்டுமே குர்பானி கொடுக்கும் நாள்

ஹஜ் பெருநாள் தினத்திலும் அதைத் தொடர்ந்து வரும் மூன்று நாட்களிலும் குர்பானி கொடுக்கலாம் என்று நாம் பேசியும், எழுதியும் பிரச்சாரம் செய்து வந்தோம். குர்பானியின் சட்டங்கள் என்ற நூலில் இந்த நிலைபாட்டையே பின்வருமாறு எழுதி இருந்தோம்.

எவ்வளவு நாட்களுக்குள் அறுத்துப் பலியிட வேண்டும்?

பெருநாள் மற்றும் அதற்கு அடுத்துள்ள மூன்று நாட்களுக்குள் குர்பானிப் பிராணியை அறுத்துவிட வேண்டும். பெருநாளுக்கு அடுத்துள்ள மூன்று நாட்களுக்கு தஷ்ரீக்குடைய நாட்கள் என்று சொல்லப்படும். இந்நாளில் மக்கள் குர்பானிப் பிராணிகளின் இறைச்சியை சூரிய ஒளியில் காயவைத்து உப்புக்கண்டம் தயாரித்ததால் இதற்கு அய்யாமுத் தஷ்ரீக் உப்புக் கண்டம் தயாரிக்கும் நாள் என்ற பெயர் வந்தது.

தஷ்ரீக்குடைய நாட்களுக்கு மினாவுடைய நாட்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இதை பின்வரும் ஹதீஸ்களிலிருந்து அறிந்துகொள்ளலாம்.

தஷ்ரீக்குடைய நாட்கள் உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : நுபைஷா (ரலி)

நூல் : முஸ்லிம் (2099)

என்னையும், அவ்ஸ் பின் அல்ஹதஸான் (ரலி) அவர்களையும் அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் அனுப்பி இறை நம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் சொர்க்கத்தில் நுழைய மாட்டார். மினாவின் நாட்கள் உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்களாகும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடையே) அறிவிக்கச் செய்தார்கள்.

அறிவிப்பவர் : கஅப் பின் மாலிக் (ரலி)

நூல் : முஸ்லிம் (2100)

மினாவுடைய நாட்கள் அதாவது தஷ்ரீக்குடைய நாட்கள் என்பது மூன்று நாளாகும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

மினாவுடைய நாட்கள் மூன்றாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மக்களுக்கு) அறிவிக்கச் செய்தார்கள்.

அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் யஃமர் (ரலி)

நூல் : திர்மிதி (814)

பெருநாளுக்கு அடுத்துள்ள இந்த மூன்று நாட்களும் குர்பானிப் பிராணியை அறுப்பதற்குரிய நாட்களாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தஷ்ரீகுடைய நாட்கள் (துல்ஹஜ் 11, 12, 13) அனைத்தும் அறுப்பதற்குரியதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜுபைர் இப்னு முத்இம்(ரலி)

நூல் : தாரகுத்னீ (பாகம் : 4) (பக்கம் : 284)

நமது இந்த நிலைபாடு தவறானது என்று சுட்டிக்காட்டப்பட்ட அடிப்படையில் அது குறித்து மறு ஆய்வு செய்த போது துல்ஹஜ் மாதம் பத்தாம் நாள் மட்டும் தான் குர்பானி கொடுக்கும் நாள் என்று தெரிகிறது. எனவே அது குறித்த ஆய்வை மக்கள் மன்றத்தில் வைக்கிறோம்.

தஷ்ரீகுடைய நாட்கள் அனைத்தும் அறுத்துப் பலியிடும் நாட்களாகும் என்ற வாசகத்தைக் கொண்ட ஹதீஸ்கள் பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று கூட ஆதாரப்பூர்வமானதாக இல்லை.

முதலாவது ஹதீஸ்

இந்தக் கருத்தில் உள்ள ஹதீஸ்கள் முஸ்னத் அஹ்மத், பைஹகீ ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

مسند أحمد- முஸ்னத் அஹ்மத்

16751 – حَدَّثَنَا أَبُو الْمُغِيرَةِ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، قَالَ: حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ مُوسَى، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” كُلُّ عَرَفَاتٍ مَوْقِفٌ، وَارْفَعُوا عَنْ بَطْنِ عُرَنَةَ ، وَكُلُّ مُزْدَلِفَةَ مَوْقِفٌ، وَارْفَعُوا عَنْ مُحَسِّرٍ، وَكُلُّ فِجَاجِ مِنًى مَنْحَرٌ، وَكُلُّ أَيَّامِ التَّشْرِيقِ ذَبْحٌ “

السنن الكبرى للبيهقي- பைஹகீ1

10226 – أَخْبَرَنَا أَبُو حَامِدِ بْنُ عَلِيٍّ الرَّازِيُّ الْحَافِظُ , أنا زَاهِرُ بْنُ أَحْمَدَ , ثنا أَبُو بَكْرِ بْنُ زِيَادٍ النَّيْسَابُورِيُّ , ثنا أَبُو الْأَزْهَرِ , ثنا أَبُو الْمُغِيرَةِ , ثنا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ , حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ مُوسَى , عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ , عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , قَالَ: ” كُلُّ مِنًى مَنْحَرٌ , وَكُلُّ أَيَّامِ التَّشْرِيقِ ذَبْحٌ “

السنن الكبرى للبيهقي -பைஹகீ2

19239 – أَخْبَرَنَا أَبُو حَامِدٍ أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ أَحْمَدَ الْحَافِظُ الْإِسْفِرَايِينِيُّ بِهَا، أنبأ أَبُو عَلِيٍّ زَاهِرُ بْنُ أَحْمَدَ , ثنا أَبُو بَكْرِ بْنُ زِيَادٍ النَّيْسَابُورِيُّ، ثنا أَبُو الْأَزْهَرِ، ثنا أَبُو الْمُغِيرَةِ، ثنا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ مُوسَى، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ رَضِيَ اللهُ عَنْهُ , عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” كُلُّ عَرَفَاتٍ مَوْقِفٌ , وَارْفَعُوا عَنْ عَرَفَاتٍ , وَكُلُّ مُزْدَلِفَةَ مَوْقِفٌ وَارْفَعُوا عَنْ مُحَسِّرٍ , وَكُلُّ فِجَاجِ مِنًى مَنْحَرٌ , وَكُلُّ أَيَّامِ التَّشْرِيقِ ذَبْحٌ.

இந்த மூன்று ஹதீஸ்களிலும் ஜுபைர் பின் முத்இம் என்ற நபித்தோழர் அறிவிப்பதாக சுலைமான் பின் மூஸா என்பார் கூறுகிறார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜுபைர் பின் முத்இம் அவர்களை சுலைமான் பின் மூஸா சந்தித்ததில்லை என்பதால் இது அறிவிப்பாளர் இடையே தொடர்பு அறுந்த ஹதீஸாகும்.

العلل الكبير للترمذي

 – وَسَأَلْتُهُ عَنْ حَدِيثِ سَعِيدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ , عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى , عَنْ أَبِي سَيَّارَةَ , قُلْتُ يَا رَسُولَ اللَّهِ: إِنَّ لِي نُحْلًا , فَقَالَ: «أَدِّ مِنْهُ الْعُشْرَ» . فَقَالَ: هُوَ حَدِيثٌ مُرْسَلٌ , سُلَيْمَانُ لَمْ يُدْرِكْ أَحَدًا مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

சுலைமான் பின் மூஸா எந்த நபித்தோழரையும் சந்தித்ததில்லை என்று புகாரி கூறியதாக திர்மிதி தெரிவிக்கிறார்.

நூல் : திர்மிதி அவர்களின் அல் இலல் அல் கபீர்

معرفة السنن والآثار للبيهقي

قال البخاري : سليمان بن موسى لم يدرك أحدا من أصحاب النبي صلى الله عليه وسلم

சுலைமான் பின் மூஸா ஒரு நபித்தோழரையும் சந்தித்ததில்லை என்று புகாரி கூறியதாக பைஹகி கூறுகிறார்.

நூல் : பைஹகியின் மஃரிஃபதுஸ் ஸுனனி வல் ஆஸார்

نصب الراية

وَكُلُّ أَيَّامِ التَّشْرِيقِ ذَبْحٌ”، انْتَهَى. قَالَ ابْنُ كَثِيرٍ: هَكَذَا رَوَاهُ أَحْمَدُ، وَهُوَ مُنْقَطِعٌ، فَإِنَّ سُلَيْمَانَ بْنَ مُوسَى الْأَشْدَقَ لَمْ يُدْرِكْ جُبَيْرَ بْنَ مُطْعِمٍ

ஜுபைர் பின் முத்இம் அவர்களை சுலமான் பின் மூஸா அடையவில்லை என்று இப்னு கஸீர் கூறுகிறார்.

நூல் : நஸ்புர் ராயா

فتح الباري – ابن حجر

وفي كل أيام التشريق ذبح أخرجه أحمد لكن في سنده انقطاع

இதன் அறிவிப்பாளர் தொடர்பு அறுந்த ஹதீஸாகும் என்று இப்னு ஹஜர் கூறுகிறார்.

நூல் : ஃபத்ஹுல் பாரி

இரண்டாவது ஹதீஸ்

இந்தக் கருத்தில் உள்ள மற்றொரு ஹதீஸ் தப்ரானி அவர்களின் அல்கபீர் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

المعجم الكبير للطبراني – அல் கபீர்

1562- حَدَّثَنَا أَحْمَدُ بن يَحْيَى بن خَالِدِ بن حَيَّانَ الرَّقِّيُّ ، حَدَّثَنَا زُهَيْرُ بن عَبَّادٍ الرُّوَاسِيُّ ، حَدَّثَنَا سُوَيْدُ بن عَبْدِ الْعَزِيزِ ، عَنْ سَعِيدِ بن عَبْدِ الْعَزِيزِ ، عَنْ سُلَيْمَانَ بن مُوسَى ، عَنْ نَافِعِ بن جُبَيْرٍ ، عَنْ أَبِيهِ ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : كُلُّ عَرَفَةَ مَوْقِفٌ ، وَارْفَعُوا عَنْ عُرَنَةَ ، وَكُلُّ مُزْدَلِفَةَ ، مَوْقِفٌ ، وَارْفَعُوا عَنْ بَطْنِ مُحَسِّرِ ، وَكُلُّ أَيَّامِ التَّشْرِيقِ ذَبْحٌ ، وَكُلُّ فِجَاجِ مَكَّةَ ، مَنْحَرٌ.

இதன் அறிவிப்பாளர் தொடரில் சுவைத் பின் அப்துல் அஸீஸ் என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார்.

تهذيب التهذيب

484- “ت ق – سويد” بن عبد العزيز بن نمير السلمي مولاهم الدمشقي… قال عبد الله بن أحمد بن حنبل عن أبيه متروك الحديث وقال الإسماعيلي رأيت في تاريخ أبي طالب أنه سأله يعني أحمد بن حنبل عن شيء من حديث سويد بن سعيد عن سويد بن عبد العزيز فضعف حديث سويد بن عبد العزيز من أجلة أم من أجل سويد بن سعيد وقال ابن معين ليس بثقة وقال مرة ليس بشيء وقال مرة ضعيف وقال مرة لا يجوز في الضحايا وقال ابن سعد روى أحاديث منكرة وقال البخاري في حديثه مناكير أنكرها أحمد وقال مرة فيه نظر لا يحتمل وقال النسائي ليس بثقة وقال مرة ضعيف وقال يعقوب بن سفيان مستور في حديثه لين وقال مرة ضعيف الحديث وقال ابن أبي حاتم عن أبيه لين الحديث في حديثه نظر وقال أبو حاتم قلت لدحيم كان سويد عندك ممن يقرأ إذا دفع إليه ما ليس من حديثه قال نعم وقال عثمان الدارمي عن دحيم ثقة وكانت له أحاديث يغلط فيها وقال علي بن حجر أثنى عليه هشيم خبرا قال أبو زرعة وجماعة مات سنة أربع وتسعين ومائة وقال دحيم سمعته يقول ولدت سنة “108” قلت وقال أبو عيسى الترمذي في كتاب العلل الكبير سويد بن عبد العزيز كثير الغلط في الحديث وقال الحاكم أبو أحمد حديثه ليس بالقائم وقال الخلال ضعيف الحديث وقال أبو بكر البزار في مسنده ليس بالحافظ ولا يحتج به إذا انفرد وضعفه ابن حبان جدا وأورد له أحاديث مناكير ثم قال وهو ممن استخير الله فيه لأنه يقرب من الثقات.

இவர் விடப்பட்டவர் (அதாவது பொய்யர் என சந்தேகிக்கப்பட்டவர்) என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறுகிறார். இவர் நம்பகமானவர் அல்ல, பலவீனமானவர் என்று இப்னு மயீன், இப்னு சஅது, புகாரி, நஸாயீ, அபூஹாத்தம், யாகூப் பின் சுஃப்யான், ஹாகிம், இப்னு ஹிப்பான், பஸ்ஸார் உள்ளிட்ட அறிஞர்கள் கூறுகின்றனர். இவர் ஹதீஸ்களில் அதிகம் தவறிழைப்பவர் என்று திர்மிதீ கூறுகிறார்.

 நூல் : இப்னு ஹஜர் அவர்களின் தஹ்தீப்

மூன்றாவது ஹதீஸ்

இதே கருத்துடைய மற்றொரு ஹதீஸை இப்னு ஹிப்பான், இப்னு அதீ, பஸ்ஸார் ஆகிய அறிஞர்களும் பதிவு செய்துள்ளனர். இதை அப்துர்ரஹ்மான் பின் அபீ ஹுஸைன் என்பார் அறிவிக்கிறார்.

ابن حبان

(3942)- [3854] أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ الْحَسَنِ بْنِ عَبْدِ الْجَبَّارِ الصُّوفِيُّ بِبَغْدَادَ، حَدَّثَنَا أَبُو نَصْرٍ التَّمَّارُ عَبْدُ الْمَلِكِ بْنِ عَبْدِ الْعَزِيزِ الْقُشَيْرِيُّ فِي شَوَّالٍ سَنَةَ سَبْعٍ وَعِشْرِينَ وَمِائَتَيْنِ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي حُسَيْنٍ، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” كُلُّ عَرَفَاتٍ مَوْقِفٌ، وَارْفَعُوا عَنْ عُرَنَةَ، وَكُلُّ مُزْدَلِفَةَ مَوْقِفٌ، وَارْفَعُوا عَنْ مُحَسِّرٍ، فَكُلُّ فِجَاجِ مِنًى مَنْحَرٌ، وَفِي كُلِّ أَيَّامِ التَّشْرِيقِ ذَبَحٌ “

الكامل في ضعفاء الرجال

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الحسين الصُّوفيّ، حَدَّثَنا أبو نصر التمار، قَال: حَدَّثَنا سَعِيد بْنِ عَبد الْعَزِيزِ عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى عَنْ عَبد الرَّحْمَنِ بْنِ أَبِي حُسَيْنٍ عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، قَال: قَال رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ عَرَفاَتٍ مَوْقِفٌ وَارْفَعُوا عَنْ عُرَنَةَ وَكُلُّ مُزْدَلِفَةَ مَوْقِفٌ وَارْفَعُوا عَنْ مُحَسِّرٍ وَكُلُّ فِجَاجِ مِنًي مَنْحَرٌ وَفِي كُلِّ أَيَّامِ التشريق ذبح.

مسند البزار

2916 – وأخبرناه يوسف بن موسى ، قال : أخبرنا عبد الملك بن عبد العزيز ، قال : أخبرنا سعيد بن عبد العزيز التنوخي ، عن سليمان بن موسى ، عن عبد الرحمن بن أبي حسين ، عن جبير بن مطعم رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : « كل عرفات موقف ، وارتفعوا عن عرنة ، وكل مزدلفة موقف ، وارتفعوا عن محسر ، وكل فجاج منى منحر (1) ، وفي كل أيام التشريق (2) ذبح » ، وهذا الحديث لا نعلم أحدا قال فيه عن نافع بن جبير عن أبيه إلا سويد بن عبد العزيز ، وهو رجل ليس بالحافظ ولا يحتج به إذا انفرد بحديث ، وحديث ابن أبي حسين هذا هو الصواب وابن أبي حسين لم يلق جبير بن مطعم ، وإنما ذكرنا هذا الحديث لأنا لم نحفظ عن رسول الله صلى الله عليه وسلم أنه قال : « في كل أيام التشريق ذبح » إلا في هذا الحديث فمن أجل ذلك ذكرناه وبينا العلة فيه

இந்த ஹதீஸை ஜுபைர் பின் முத்இம் என்ற நபித்தோழர் வழியாக அப்துர்ரஹ்மான் பின் அபீ ஹுசைன் அறிவிக்கிறார். ஆனால் இவர் அந்த நபித்தோழரைச் சந்தித்ததில்லை என்று பஸ்ஸார் கூறுகிறார்.

நான்காவது ஹதீஸ்

இதே கருத்துடைய மற்றொரு ஹதீஸை தாரகுத்னீ, பைஹகீ அகியோர் பதிவு செய்துள்ளனர்.

இந்த ஹதீஸ் நம்பகமான அறிவிப்பாளர்களைக் கொண்டது என்று இப்னு ஹஜர் கூறுகிறார்.

فتح الباري – ابن حجر

وفي كل أيام التشريق ذبح أخرجه أحمد لكن في سنده انقطاع ووصله الدارقطني ورجاله ثقات

தஷ்ரீகுடைய நாட்களில் அறுத்துப் பலியிடலாம் என்ற ஹதீஸை அஹ்மத் பதிவு செய்துள்ளார். இது அறிவிப்பாளர் தொடர்பு அறுந்ததாகும். ஆனால் தாரகுத்னீ தொடர்பு அறுபடாத ஹதீஸைப் பதிவு செய்துள்ளார். அதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று இப்னு ஹஜர் கூறுகிறார்.

நூல் : ஃபத்ஹுல் பாரி

அந்த ஹதீஸ் இது தான்.

سنن الدر قطني தாரகுத்னீ

(4190)- [4713] حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ، نَا أَحْمَدُ بْنُ عِيسَى الْخَشَّابُ، نَا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ، نَا أَبُو مُعَيْدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، أَنَّ عَمْرَو بْنَ دِينَارٍ، حَدَّثَهُ، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ  قَالَ: ” كُلُّ أَيَّامِ التَّشْرِيقِ ذَبْحٌ “

السنن الكبرى للبيهقي

19243 – وَرُوِيَ مِنْ وَجْهٍ آخَرَ عَنْ سُلَيْمَانَ، كَمَا أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ الْحَارِثِ، أنبأ عَلِيُّ بْنُ عُمَرَ الْحَافِظُ، ثنا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ، ثنا أَحْمَدُ بْنُ عِيسَى الْخَشَّابُ، ثنا عَمْرُو بْنُ أَبِي سَلَمَةَ، ثنا أَبُو مُعَيْدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ مُوسَى، أَنَّ عَمْرَو بْنَ دِينَارٍ حَدَّثَهُ، عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ رَضِيَ اللهُ عَنْهُ , أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” كُلُّ أَيَّامِ التَّشْرِيقِ ذَبْحٌ “

இந்த அறிவிப்பாளர் தொடர் நம்பகமானவர்களைக் கொண்டது என்று இப்னு ஹஜர் கூறுவது முற்றிலும் தவறாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் உள்ள அஹ்மத் பின் ஈஸா அல் கஷ்ஷாப் என்பார் நம்பகமானவர் அல்ல. இப்னு ஹஜர் இதைக் கவனிக்கத் தவறிவிட்டார்.

المجروحين لابن حبان

76 – احْمَد بْن عِيسَى الخشاب التنيسِي من أهل تنيس يروي عَن عُمَر بْن أَبِي سَلمَة وَعبد اللَّه بن يُوسُف أخبرنَا عَنهُ بن قُتَيْبَة وَغَيره من شُيُوخنَا يروي عَن المجاهيل الْأَشْيَاء الْمَنَاكِير وَعَن الْمَشَاهِير الْأَشْيَاء المقلوبة لَا يَجُوز عِنْدِي الِاحْتِجَاج بِمَا انْفَرد بِهِ من الْأَخْبَار

அஹ்மத் பின் ஈஸா அல் கஷ்ஷாப் என்பார் பிரபலமானவர்கள் பெயரிலும், யாரென அறியப்படாதவர்கள் பெயரிலும் பல இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இவர் தனித்து அறிவிக்கும் ஹதீஸ்களில் இவரை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்று இப்னு ஹிப்பான் கூறுகிறார்.

நூல் : அல்மஜ்ரூஹீன்

الكامل في ضعفاء الرجال

وَهَذَا حَدِيثٌ بَاطِلٌ بِهَذَا الإِسْنَادِ مَعَ أَحَادِيثَ أُخَرَ يَرْوِيهَا عَنْ عَمْرو بْنِ أَبِي سَلَمَةَ بَوَاطِيلَ

அஹ்மத் பின் ஈஸா அல்கஷ்ஷாப் என்பார் அம்ரு பின் ஸலமா வழியாக பொய்யான பல செய்திகளை அறிவித்துள்ளார் என்று இப்னு அதீ கூறுகிறார்.

நூல் : அல்காமில்

மேற்கண்ட ஹதீஸும் அம்ரு பின் ஸலமா வழியாகவே அவர் அறிவிப்பதாக உள்ளது.

معرفة التذكرة

282 – إِن للقلب فرحة عِنْد أكل اللَّحْم: فِيهِ أَحْمد بن عِيسَى الخشاب التنيسِي هُوَ كَذَّاب.

இறைச்சி சாப்பிடும் போது மனதுக்கு நிறைவு ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) சொன்னதாக அறிவிக்கப்படும் செய்தியில் அஹ்மத் பின் ஈஸா அல்க்‌ஷ்ஷாப் எனும் பெரும் பொய்யர் இடம் பெற்றுள்ளார்.

நூல் மஃரிபது தத்கிரா

معرفة التذكرة

361 – الْأُمَنَاء عِنْد الله ثَلَاثَة أَنا وَجِبْرِيل وَمُعَاوِيَة: فِيهِ أَحْمد بن عِيسَى الخشاب هُوَ كَذَّاب يضع الحَدِيث.

அல்லாஹ்வின் நம்பிக்கைக்கு உரியவர்கள் நான், ஜிப்ரீல், முஆவியா ஆகிய மூவர் தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதாக அறிவிக்கப்படும் செய்தியில் அஹ்மத் பின் ஈஸா அல் கஷ்ஷாப் இடம் பெற்றுள்ளார். இவர் பெரும் பொய்யராவார்.

நூல் : மஃரிஃபது தத்கிரா

اللآلىء المصنوعة في الأحاديث الموضوعة

وَقَدْ رَوَاهُ أَحْمَد بْن عِيسَى الخشاب عَنْ مُصْعَب بْن ماهان عَنِ الثَّوْرِيّ وأَحْمَد مُنكر الحَدِيث

அஹ்மத் பின் ஈஸாவின் ஹதீஸ்கள் நிராகரிக்கத்தக்கவை என்று சுயூத்தி கூறுகிறார்.

நூல் : அல் லஆலில் மஸ்னூஆ

இப்படி இன்னும் பலர் இவரைக் கடும் விமர்சனம் செய்துள்ளனர். எனவே இந்த ஹதீஸும் பலவீனமானதாகும்.

سلسلة الأحاديث الصحيحة وشيء من فقهها وفوائدها

وقد رواه غيره موصولا عن جبير على وجه آخر، وهو: الوجه الرابع: يرويه أحمد بن عيسى الخشاب : حدثنا عمرو بن أبي سلمة حدثنا أبو معيد عن سليمان بن موسى أن عمرو بن دينار حدثه عن جبير بن مطعم به. أخرجه الدارقطني حدثنا أبو بكر النيسابوري أخبرنا أحمد بن عيسى الخشاب.. قلت: وهذا إسناد رجاله كلهم ثقات غير الخشاب هذا، وهو ضعيف، قال ابن عدي: ” له مناكير “. وقال الدارقطني: ” ليس بالقوي “. وقال مسلمة: ” كذاب، حدث بأحاديث موضوعة “. وقال ابن يونس: ” مضطرب الحديث جدا “. وقال ابن حبان: ” يروي المناكير عن المشاهير، والمقلوبات عن الثقات، لا يجوز الاحتجاج بما انفرد به “. وقال ابن طاهر: ” كذاب يضع الحديث “. قلت: فإذا عرفت هذا، يتبين لك خطأ البيهقي في قوله جازما: ” وقد روى أبو معيد عن سليمان بن موسى.. ” كما تقدم لأن الجزم به يشعر بأن السند إلى أبي معيد صحيح، فكيف وفي الطريق إليه هذا الضعيف المتهم؟ ! فمثله لا يصلح للاستشهاد، بله الاحتجاج! ولعل الحافظ قلد البيهقي فيما سبق حين قال في ” الفتح ” (10 / 6) : ” أخرجه أحمد لكن في سنده انقطاع، ووصله الدارقطني ورجاله ثقات “! فإن الدارقطني لم يوصله إلا من هذه الطريق وطريق سويد الضعيف !! 2 – عن رجل من أصحاب النبي صلى الله عليه وسلم.

மற்றொரு ஹதீஸ்

பைஹகீ நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள கீழ்க்காணும் இரு ஹதீஸ்களையும் ஆதாரமாக காட்டுகிறார்கள்.

السنن الكبرى للبيهقي

19245 – وَرَوَاهُ مُعَاوِيَةُ بْنُ يَحْيَى الصَّدَفِيُّ عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، مَرَّةً عَنْ أَبِي سَعِيدٍ وَمَرَّةً عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُمَا عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَيَّامُ التَّشْرِيقِ كُلُّهَا ذَبْحٌ “. أَخْبَرَنَاهُ أَبُو سَعْدٍ الْمَالِينِيُّ , أنبأ أَبُو أَحْمَدَ بْنُ عَدِيٍّ الْحَافِظُ , أنبأ عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدِ بْنِ مُسْلِمٍ , ثنا دُحَيْمٌ , ثنا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ , ثنا مُعَاوِيَةُ بْنُ يَحْيَى , فَذَكَرَهُ وَقَالَ: عَنْ أَبِي سَعِيدٍ.

19246 – وَأَخْبَرَنَا أَبُو سَعْدٍ، أنبأ أَبُو أَحْمَدَ، ثنا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ عَاصِمٍ، ثنا دُحَيْمٌ، ثنا مُحَمَّدُ بْنُ شُعَيْبٍ، عَنِ الصَّدَفِيِّ، فَذَكَرَهُ وَقَالَ: عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ. قَالَ أَبُو أَحْمَدَ: وَهَذَا سَوَاءٌ قَالَ: عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ وَسَوَاءٌ قَالَ: عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي سَعِيدٍ، جَمِيعًا غَيْرُ مَحْفُوظَيْنِ لَا يَرْوِيهُمَا غَيْرُ الصَّدَفِيِّ. قَالَ الشَّيْخُ رَحِمَهُ اللهُ: وَالصَّدَفِيُّ ضَعِيفٌ لَا يُحْتَجُّ بِهِ

தஷ்ரீகுடைய நாட்கள் அறுக்கும் நாட்களாகும் என்ற பொருளில் அமைந்த இந்த ஹதீஸை அபூஹுரைரா (ரலி) மற்றும் அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) வழியாக அறிவிக்கப்படுகிறது.

இவ்விரு ஹதீஸ்களையும் முஆவியா பின் யஹ்யா அஸ்ஸதபி என்பார் ஸுஹ்ரி வழியாக அறிவிக்கிறார்.

இதைப் பதிவு செய்துள்ள பைஹகீ அவர்கள்

وَالصَّدَفِيُّ ضَعِيفٌ لَا يُحْتَجُّ بِهِ

ஸதபி என்ற இந்த அறிவிப்பாளரை ஆதாரமாகக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

இவர் பலவீனமானவர் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாததாகும். ஆனாலும் சிலர் விதண்டாவாதம்ம் செய்து இதை சரியான ஹதீஸ் என்று நிலைநாட்டப் பார்க்கின்றனர்.

அதாவது முஆவியா பின் யஹ்யா என்பார் மனப்பாடம் செய்து அறிவிப்பதில் தான் பலவீனம் உள்ளது. எழுதி வைத்த ஏட்டில் இருந்து பார்த்து அறிவித்தால் அது சரியானது என்பது அவர்க்ளின் வாதம்.

இது ஹதீஸ் கலை விதியை சரியாக அறியாத காரணத்தால் எழுப்பப்படும் வாதமாகும்.

முஆவியா என்பார் ஒரு ஆசிரியரிடம் கேட்டு அதை எழுதி வைத்துக் கொண்டு அறிவித்து இருந்தால் இந்த வாதத்தைக் கணக்கில் எடுக்கலாம். ஆனால் இவர் ஆசிரியரிடம் கேட்டு எழுதுக் கொண்டவர் அல்ல. மாறாக கடைவீதியில் இன்னார் ஹதீஸ்கள் என்று எழுதி விற்பனை செய்யப்பட்டதை விலைக்கு வாங்கி அதை அந்த ஆசிரியரிடம் கேட்டது போல் அறிவிப்பார்.

குறிப்பாக ஸுஹ்ரி ஹதீஸ்கள் என்ற பெயரில் பரப்பப்பட்ட நூலை வாங்கி சுஹ்ரி சொன்னார் என்று அறிவித்துள்ளார். ஸுஹ்ரி தான் அந்த நூலை எழுதினாரா என்று இவர் சுஹ்ரியிடம் காட்டி ஒப்புதல் பெறவில்லை.

இவரைப் பற்றி ததீப் நூலில் காணப்படும் விமர்சனங்களை பாருங்கள்.

وأورد له البخاري في الضعفاء حديثه عن سليمان بن سليم عن أنس مرفوعا أحترسوا من الناس بسوء الظن.

பலவீனமானவர்கள் என்ற நூலில் புகாரி இவரது ஹதீஸை பதிவு செய்துள்ளார். இதன் மூலம் இவர் பலவீனமானவர் என்று புகாரி அடையாளம் காட்டுகிறார்.

وقال الدولابي قال أحمد بن حنبل تركناه

அஹ்மத் பின் ஹம்பல் இவரை நாம் விட்டுவிட்டோம் எனக் கூறியுள்ளனர்.

وقال أبو علي النيسابوري ضعيف

இவர் பலவீனமானவர் என்று அபூ அலீ நைசாபூரி கூறுகிறார்.

وقال أبو بكر البزار لين الحديث

இவர் பலவீனமானவர் என்று பஸ்ஸார் கூறுகிறார்.

قال معاوية بن صالح عن يحيى بن معين معاوية بن يحيى الصدفي مالك ليس بشيء

இவர் ஒன்றுக்கும் உதவாதவர் என்று யஹ்யா பின் மயீன் கூறுகிறார்

وقال الجوزجاني ذاهب الحديث

இவர் பலவீனமானவர் என்று ஜவ்ஸஜானி கூறுகிறார்.

وقال أبو زرعة ليس بقوي أحاديثه كأنها منكرة

இவர் உறுதியானவர் அல்லர். இவரது ஹதீஸ்கள் மறுக்கப்படும் தரத்தில் உள்ளவை என அபூ ஸுர்ஆ கூறுகிறார்.

وقال أبو حاتم ضعيف في حديثه إنكار

இவர் பலவீனமானவர்; இவரது ஹதீஸில் மறுக்கத்தக்க தன்மை உள்ளது.

وقال أبو داود والنسائي ضعيف

இவர் பலவீனர் என்று அபூதாவூத், நஸாயீ ஆகியோர் கூறுகிறார்

وقال النسائي أيضا ليس بثقة

இவர் நம்பகமானவர் அல்ல என்று நஸாயீ கூறுகிறார்.

وقال في موضع آخر ليس بشيء

இவர் கணக்கில் எடுக்க முடியாதவர் என்று நஸாயீ மற்றொரு சந்தர்ப்பத்தில் கூறினார்.

وقال بن عدي عامة رواياته فيها نظر

இவரது அனைத்து ஹதீஸ்களிலும் ஆட்சேபனை உண்டு என்று என இப்னு அதீ கூறுகிறார்

قلت وقال بن حبان كان يشتري الكتب ويحدث بها ثم تغير حفظه فكان يحدث بالوهم

இவர் நூல்களை விலைக்கு வாங்கி அதில் இருந்து அறிவிப்பார். பின்னர் இவரது நினைவாற்றல் கெட்டு விட்டது. ஊகத்தில் அறிவிக்கலானார் என்று இப்னு ஹிப்பான் கூறுகிறார்.

وقال الساجي ضعيف الحديث جدا وكان اشتري كتابا للزهري من السوق فروى عن الزهري

இவர் ஹதீஸ் விஷயத்தில் முற்றிலும் பலவீனமானவர். இவர் ஸுஹ்ரியின் நூலை கடை வீதியில் வாங்கி ஸுஹ்ரி சொன்னதாக அறிவித்து விட்டார் என ஸாஜீ கூறுகிறார்.

وقال النسائي قال أبو بكر محمد بن إسحاق يعني الصاغاني لا احتج بمعاوية بن يحيى صاحب الزهري

முஆவியா பின் யஹ்யா என்பவரை நான் ஆதாரமாகக் கொள்ள மாட்டேன் என்று முஹ்ம்மத் பின் இஸ்ஹாக் கூறுகிறார்.

இதுதான் இந்த அறிவிப்பாளரின் நிலை.

பல அறிஞர்கள் பெயரில் ஹதீஸ்களைத் தயாரித்து விற்கப்பட்ட அந்தக் காலத்தில் அதை விலைக்கு வாங்கி அவர் பெயரில் அறிவிப்பது மோசடியாகும். சுஹ்ரி இதை அறிவித்தாரா என்று ஷுஹ்ரியிடம் இவர் ஒப்புதல் பெறவில்லை.

இந்த குர்பானி ஹதீஸையும் ஸுஹ்ரி வழியாகவே அறிவித்துள்ளதால் இது பலவீனமாந்து என்பதில் சிறிதும் ஐயமில்லை

தஷ்ரீக் நாட்களில் குர்பானி கொடுக்கலாம் என்ற கருத்தில் உள்ள ஹதீஸ்கள் இவ்வளவு தான். இவை அனைத்துமே பலவீனமாக உள்ளன.

மற்றொரு ஹதீஸ்

நான்கு நாட்கள் குர்பானி கொடுக்கலாம் என்ற கருத்துள்ளவர்கள் தஷ்ரீகுடைய நாட்கள் உண்பதற்கும் பருகுவதற்கும் உரிய நாட்கள் என்ற கருத்தில் வரும் ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

صحيح مسلم

144 – (1141) وحَدَّثَنَا سُرَيْجُ بْنُ يُونُسَ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ أَبِي الْمَلِيحِ، عَنْ نُبَيْشَةَ الْهُذَلِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَيَّامُ التَّشْرِيقِ أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ»

صحيح مسلم

145 – (1142) وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَابِقٍ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنِ ابْنِ كَعْبِ بْنِ مَالِكٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَهُ وَأَوْسَ بْنَ الْحَدَثَانِ أَيَّامَ التَّشْرِيقِ، فَنَادَى «أَنَّهُ لَا يَدْخُلُ الْجَنَّةَ إِلَّا مُؤْمِنٌ وَأَيَّامُ مِنًى أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ»

தஷ்ரீகுடைய நாட்கள் உண்பதற்கும், பருகுவதற்கும் உரிய நாட்களாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : முஸ்லிம்

உன்பதற்கும், பருகுவதற்கும் உரிய நாட்கள் என்பது இந்த நாட்களில் அறுத்துப் பலியிடலாம் என்ற கருத்தைத் தரவில்லை. இதன் கருத்து என்ன என்பது மற்றொரு ஹதீஸில் இருந்து தெளிவாகும்.

مسند أحمد ط الرسالة

567 – حَدَّثَنَا أَبُو سَعِيدٍ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ سَلَمَةَ (1) بْنِ أَبِي الْحُسَامِ، – مَدَنِيٌّ مَوْلًى لِآلِ عُمَرَ – حَدَّثَنَا يَزِيدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ الْهَادِ عَنْ عَمْرِو بْنِ سُلَيْمٍ (2) عَنْ أُمِّهِ، قَالَتْ: بَيْنَمَا نَحْنُ بِمِنًى إِذَا عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ رَضِيَ اللهُ عَنْهُ، يَقُولُ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ” إِنَّ هَذِهِ أَيَّامُ أَكْلٍ وَشُرْبٍ، فَلا يَصُومُهَا أَحَدٌ ” وَاتَّبَعَ النَّاسَ عَلَى جَمَلِهِ يَصْرُخُ بِذَلِكَ

இந்த நாட்கள் உண்பதற்கும், பருகுவதற்கு உரிய நாட்கள்; எனவே இந்நாட்களில் நோன்பு நோற்க வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்தார்கள்.

அறிவிப்பவர் : அலீ (ரலி)

நூல் : அஹ்மத்

உண்பதற்கும், பருகுவதற்கும் உரிய நாட்கள் என்பதன் பொருள் இந்த நாட்களில் நோன்பு வைக்கக் கூடாது என்பது தான். இந்த நாட்களில் அறுக்கலாம் என்பதல்ல.

மேலும் தஷ்ரீக் என்ற சொல்லுக்கு இறைச்சியைத் துண்டுகளாக ஆக்கி காயப் போடுதல் என்பது பொருள். இந்த நாட்களில் இறைச்சியைக் காயப் போடும் பணிகள் உள்ளதால் தான் இந்த நாட்கள் தஷ்ரீக் நாட்கள் எனப்படுகின்றன.

எந்த நாட்களை உண்பதற்குரிய நாட்கள் என்று மார்க்கம் சொல்கிறதோ அன்றைய தினம் நோன்பு வைக்கலாகாது என்பது தான் பொருளாகும்.

குர்ஆன் சொல்வது என்ன?

குர்ஆனில் ஆதாரம் உள்ளதா?

அடுத்து 22:28 வசனத்தில் இதற்கு ஆதாரம் உள்ளதாக வாதிடுகின்றனர்.

22:28 வசனத்தின் கீழ்க்காணும் வாசகத்துக்குச் செய்யும் மொழிபெயர்ப்பு தான் இவர்களின் வாதத்துக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ

இந்த வாசகத்துக்கு அகராதியின் அடிப்படையில் இரு விதமாகப் பொருள் செய்யலாம்.

ஹஜ்ஜின் போது சாதுவான கால்நடைகள் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காக அதாவது குர்பானி கொடுப்பதற்காக குறிப்பட்ட நாட்களில் வருவார்கள் என்றும் பொருள் கொள்ள முடியும்.

இப்படிப் பொருள் கொண்டால் கால்நடைகள் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுதல் என்றால் கால்நடைகளை அறுத்தல் என்ற பொருள் வரும்.

அந்தக் கருத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட நாட்கள் என்று பன்மையாக உள்ளதால் குர்பானி நாட்கள் ஒரு நாள் அல்ல என்று வாதிடுகின்றனர்.

அகராதிப்படி இப்படி பொருள் செய்ய வழி இருப்பது போல் வேறு விதமாகவும் பொருள் கொள்ள இடமுண்டு.

கால்நடைகளை அவர்களுக்கு வழங்கியதற்காக குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவார்கள் என்றும் பொருள் செய்யலாம்.

இப்படிப் பொருள் கொண்டால் கால்நடைகளை அல்லாஹ் வழங்கியதற்காக நன்றி செலுத்தும் வகையில் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்வதற்காக ஹஜ்ஜுக்கு வருவார்கள் என்ற கருத்து கிடைக்கும்.

ஒரு வாசகத்தில் இரண்டு கருத்துக்கு இடம் இருக்குமானால் நாம் விரும்பிய பொருளைச் செய்ய முடியாது. மாறாக எந்த மொழிபெயர்ப்பு குர்ஆனுடைய எந்த வசனத்துக்கும் முரணில்லாமல் உள்ளது என்று பார்த்து அந்தப் பொருளையே கொள்ள வேண்டும்.

நாம் செய்யும் பொருளே சரியானது என்பதற்கும், மாற்றுக் கருத்துள்ளவர்கள் செய்யும் பொருள் தவறானது என்பதற்கும் 2:196 வசனம் ஆதாரமாக அமைந்துள்ளது.

‎உங்களில் அச்சமற்ற நிலையை அடைந்து ஹஜ்ஜையும்உம்ராவையும் தமத்துவ் முறையில் செய்பவர்இயன்ற பலிப்பிராணியை (பலியிட வேண்டும்) அது கிடைக்காதவர் ஹஜ்ஜின் போது மூன்று நோன்புகளும் ‎‎(ஊர்) திரும்பிய பின் ஏழு நோன்புகளும் நோற்க வேண்டும். இதனால் பத்து முழுமை பெறும். இ(ச்சலுகையான)து (கஅபா எனும்) புனிதப்பள்ளியில் ‎யாருடைய குடும்பம் வசிக்கவில்லையோ அவருக்குரியது. அல்லாஹ்வை ‎அஞ்சுங்கள்! அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன் என்பதை அறிந்து ‎கொள்ளுங்கள்! ‎

திருக்குர்ஆன் 2:196

ஹஜ் செய்பவர்கள் குர்பானி கொடுக்க வேண்டுமா என்பதைப் பற்றி இவ்வசனம் பேசுகிறது.

அதாவது ஹஜ் மட்டும் செய்பவர் குர்பானி கொடுக்கத் தேவையில்லை. ஹஜ்ஜையும், உம்ராவையும்  சேர்த்துச் செய்பவர் தான் பலியிட வேண்டும் என இவ்வசனம் கூறுகிறது.

அது இயலாவிட்டால் பரிகாரமாக மூன்று ‎நாட்கள் ஹஜ்ஜிலும், ஏழு நாட்கள் ஊர் சென்ற பின்பும் நோன்பு நோற்க ‎வேண்டும். இவ்வாறு பத்து நோன்புகள் இதற்கான பரிகாரமாகும்.‎

அதாவது ஹஜ் மட்டும் செய்பவருக்கு குர்பானி இல்லை என்று இவ்வசனம் கூறுகிறது.

மாற்றுக் கருத்துடையவர்கள் செய்த மொழிபெயர்ப்பின் படி 22:28 வசனம் குர்பானியைப் பற்றி பேசுகிறது உண்மை என்றால் அது இவ்வசனத்துக்கு நேர்முரணாக அமைந்துள்ளது.

ஹஜ் மட்டும் செய்தால் குர்பானி கொடுத்தல் இல்லை என்று 2:196 வசனம் சொல்கிறது. 22:28 வசனத்துக்கு இவர்கள் செய்த அர்த்தத்தின் படி ஹஜ் மட்டும் செய்தால் குர்பானி அவசியம் அர்த்தம் வருகிறது.

நாம் செய்த அர்த்தத்தின் படி இரண்டு வசனங்களுக்கிடையே எந்த முரண்பாடும் இல்லாமல் பொருந்திப் போகிறது.

22:28 வசனம் குர்பானியைப் பற்றிப் பேசவில்லை; மாறாக கால்நடைகளை அல்லாஹ் வழங்கியதற்காக குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்வதற்காக வருவார்கள் என்ற கருத்து கிடைக்கும்.

இதன்படி ஹஜ்ஜுக்குச் செல்வோர் குறிப்பிட்ட நாட்களில் தக்பீர், தல்பியா, மற்றும் பல திக்ருகள் மூலம் அல்லாஹ்வைத் துதிக்க வருவார்கள் என்ற கருத்து கிடைக்கும். இக்கருத்து 2:196 வசனத்துடன் மோதாமல் பொருந்திப் போகிறது.

அதாவது அல்லாஹ்வைப் போற்றிப் புகழ வருவார்கள் என்ற நமது கருத்துப்படி ஹஜ்ஜுக்கு குர்பானி அவசியம் இல்லை.

குறிப்பட்ட நாட்களில் குர்பானி கொடுப்பதற்காக ஹஜ்ஜுக்கு வருவார்கள் என்று இவர்கள் சொல்லும் கருத்துப்படி ஹஜ்ஜுக்கு குர்பானி கடமை என்ற கருத்து உருவாகி 2:196 வசனத்துடன் மோதுகிறது.

மேலும் ஹஜ் மட்டும் செய்பவருக்கு குர்பானி இல்லை என்பது அனைத்துப் பிரிவினரும் ஏற்றுக் கொண்ட ஒரே கருத்தாகும்.

எனவே ஒன்றுக்கு மேற்பட்ட நாட்களில் குர்பானி கொடுக்கலாம் என்று வாதிடுவோர் எடுத்து வைத்த வசனம் குர்பானியைப் பற்றிப் பேசவில்லை என்பதால் இந்த வாதமும் அடிபட்டுப் போகிறது.

صحيح البخاري 
1561 – حَدَّثَنَا [ص:142] عُثْمَانُ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلاَ نُرَى إِلَّا أَنَّهُ الحَجُّ، فَلَمَّا قَدِمْنَا تَطَوَّفْنَا بِالْبَيْتِ، فَأَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَمْ يَكُنْ سَاقَ الهَدْيَ أَنْ يَحِلَّ، فَحَلَّ مَنْ لَمْ يَكُنْ سَاقَ الهَدْيَ، وَنِسَاؤُهُ لَمْ يَسُقْنَ فَأَحْلَلْنَ، قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: فَحِضْتُ فَلَمْ أَطُفْ بِالْبَيْتِ، فَلَمَّا كَانَتْ لَيْلَةُ الحَصْبَةِ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، يَرْجِعُ النَّاسُ بِعُمْرَةٍ وَحَجَّةٍ، وَأَرْجِعُ أَنَا بِحَجَّةٍ، قَالَ: «وَمَا طُفْتِ لَيَالِيَ قَدِمْنَا مَكَّةَ؟» قُلْتُ: لاَ، قَالَ: «فَاذْهَبِي مَعَ أَخِيكِ إِلَى التَّنْعِيمِ، فَأَهِلِّي بِعُمْرَةٍ ثُمَّ مَوْعِدُكِ كَذَا وَكَذَا» قَالَتْ صَفِيَّةُ: مَا أُرَانِي إِلَّا حَابِسَتَهُمْ، قَالَ: «عَقْرَى حَلْقَى، أَوَمَا طُفْتِ يَوْمَ النَّحْرِ» قَالَتْ: قُلْتُ: بَلَى، قَالَ: «لاَ بَأْسَ انْفِرِي» قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا: فَلَقِيَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ مُصْعِدٌ مِنْ مَكَّةَ، وَأَنَا مُنْهَبِطَةٌ عَلَيْهَا، أَوْ أَنَا مُصْعِدَةٌ وَهُوَ مُنْهَبِطٌ مِنْهَا

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோடு ஹஜ் மாதத்தில், ஹஜ் நாட்களில், ஹஜ் காலத்தில் புறப்பட்டு ஸரிஃப் எனமிடத்தில் இறங்கினோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தம் கூடாரத்திலிருந்து) புறப்பட்டு தம் தோழர்களிடம் வந்து, யாருடன் குர்பானிப் பிராணி இல்லையோ அவர் தம் இஹ்ராமை உம்ராவுக்காக ஆக்கிக் கொள்ள விரும்பினால் அவ்வாறே ஆக்கிக் கொள்ளட்டும்; யாருடன் குர்பானிப் பிராணி உள்ளதோ அவர் இவ்வாறு செய்ய வேண்டாம் என்றனர். ………….. சுருக்கம்

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி 1560

ஹஜ மட்டும் செய்பவர் மீது குர்பானி இல்லை என்று திருக்குர்ஆனும் ஹதீஸ்களும் தெளிவாக சொலிவிட்டதால் 22:68 வசனம் குர்பானியைப் பற்றிப் பேசுகிறது என்ற வாதம் அடியோடு அடிபட்டுப் போகிறது

கால் நடைகளை அல்லாஹ் வழங்கியதற்காக அல்லாஹ்வின் பெயரைக் கூறி போற்றிப் புகழுதல் என்ற பொருளை இவ்வசனத்துக்கு அரபி மொழி வல்லுனர்கள் கூறியுள்ளார்களா? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். நிறையப் பேர் செய்துள்ளனர்.

அதிகமான மொழி வல்லுனர்களான விரிவுரையாளர்கள் நாம் செய்தவாறு இவ்வசனத்துக்குப் பொருள் கொண்டுள்ளனர். இவர்கள் கூறியவாறும் பொருள் கொண்டுள்ளனர்.

اللباب في علوم الكتاب

. لأن الذكر على «بَهِيمَةِ الأَنْعَامِ» يدل على التسمية على نحرها. والنحر للهدايا إنما يكون في هذه الأيام

கால்நடைகள் மீது பெயர் கூறுதல் என்பது அதை அறுக்கும் போது பெயர் கூறுவதைக் குறிக்கிறது.

நூல் : அல்லுபாப் ஃபீ உலூமில்கிதாப்

تفسير القاسمي = محاسن التأويل

أقول- لا يبعد أن تكون (على) تعليلية، والمعنى: ليذكروا اسم الله وحده في تلك الأيام بحمده وشكره وتسبيحه، لأجل ما رزقهم من تلك البهم.

இந்தக் கால்நடைகளை அல்லாஹ் வழங்கியதற்காக இந்த நாட்களில் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றுவதைக் குறிக்கிறது என்பது தூரமான கருத்தல்ல.

நூல் மஹாஸினுத் தஃவீல்

التفسير المنير للزحيلي

وليذكروا اسم الله أي حمده وشكره والثناء عليه بالتكبير والتسبيح، على ما رزقهم من بهيمة الأنعام وهي الإبل والبقر والغنم، وذلك في أيام معلومات هي أيام النحر الثلاثة أو الأربعة وهو قول الصاحبين ومالك، وقيل: عشر ذي الحجة وهو رأي أبي حنيفة والشافعي. وإذا كان ذكر اسم الله بمعنى الحمد والشكر فتكون عَلى للتعليل

அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காக என்பதன் விளக்கம் இந்தக் கால்நடைகளை அல்லாஹ் வழங்கியதற்காக அவனைப் போற்றிப் புகழுதல் ஆகும். அதன் மீது அல்லாஹ்வின் பெயர் கூறுதல் என்ற இடத்தில் மீது என்பது அதற்காக என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

நூல் : அத்தஃப்ஸீருல் முனீர்

تفسير الشعراوي

ومعنى: {على مَا رَزَقَهُمْ مِّن بَهِيمَةِ. .} [الحج: 28] أي: يشكرون الله على هذا الرزق الوقتي الذي يأكلون منه ويشربون، ويبيعون ويشترون في أوقات الحج. أو يشكرون الله على أنْ خلقَ لهم هذه الأنعام، وإنْ لم يحجُّوا، ففي خَلْق الأنعام – وهي الإبل والبقر والغنم والماعز – وتسخيرها للإنسان حكمة بالغة، ففضلاً عن الانتفاع بلحمها وألبانها وأصوافها وأوبارها اذكروا الله واشكروه أنْ سخَّرها لكم، فلولا تسخير الله لها لَمَا استطعتُم أنْ تنتفعوا بها، فالجمل مثلاً هذا الحيوان الضخم يقوده الطفل الصغير، وينُيخه ويحمله في حين لم يستطع الإنسان تسخير الثعبان مثلاً أو الذئب.

அல்லாஹ்வின் பெயரைக் கூறுதல் என்பதன் பொருள் என்னவென்றால் ஹஜ் காலங்களில் உண்டு பருகி விற்று வாங்கி பயன் அடைவதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதாகும்.

நூல் : தஃப்ஸீருஷ் ஷஃராவீ

تفسير البحر المحيط أبو حيان

وقوله { على ما رزقهم } ولو قيل لينحروا { في أيام معلومات } { بهيمة الأنعام } لم تر شيئاً من ذلك الحسن والروعة انتهى . واستدل من قال أن المقصود بذكر اسم الله هو على الذبح والنحر على أن الذبح لا يكون بالليل ولا يجوز فيه لقوله { في أيام } وهو مذهب مالك وأصحاب الرأي . وقيل : الذكر هنا حمده وتقديسه شكراً على نعمته في الرزق ويؤيده قوله عليه السلام : « أنها أيام أكل وشرب » وذكر اسم الله والأيام المعلومات أيام العشر قاله ابن عباس والحسن وإبراهيم وقتادة وأبو حنيفة ، والمعدودات أيام

அறுக்கும் போது அல்லாஹ்வின் பெயரைக் கூறுதல் என்று பொருள் செய்தவர்கள் இரவில் அறுக்கக் கூடாது என்கின்றனர். இவ்விடத்தில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுதல் என்பது அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தி அல்லாஹ்வைப் போற்றிப் புகழுதல் என்றும் இதற்கு பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

நூல் : தஃப்ஸீருல் பஹ்ருல் முஹீத்

قِيلَ لَهُ يُحْتَمَلُ أَنْ يُرِيدَ لِمَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ كَمَا قال لِتُكَبِّرُوا اللَّهَ عَلى ما هَداكُمْ وَمَعْنَاهُ لِمَا هَدَاكُمْ وَكَمَا تَقُولُ اُشْكُرْ اللَّهَ عَلَى نِعَمِهِ وَمَعْنَاهُ لِنِعَمِهِ وَأَيْضًا فَيَحْتَمِلُ أَنْ يُرِيدَ بِهِ يَوْمَ النَّحْرِ وَيَكُونَ قَوْله تَعَالَى عَلى ما رَزَقَهُمْ يُرِيدُ بِهِ يَوْمَ النَّحْرِ وَبِتَكْرَارِ السِّنِينَ عَلَيْهِ تَصِيرُ أَيَّامًا

உங்களுக்கு நேர்வழி காட்டியதன் மீது என்பதற்கு நேர்வழி காட்டியதற்காக என்று பொருள் செய்வது போல் உங்களூக்கு அல்லாஹ் வழங்கியதன் மீது என்பதற்கு அல்லாஹ் வழங்கியதற்காக என்று பொருள் கொள்ள இடமுண்டு. அல்லாஹ்வின் அருட்கொடைகள் மீது நன்றி செலுத்து என்ற சொல்லுக்கு அருட்கொடைகளுக்காக நன்றி செலுத்து என்று பொருள் கொள்வது போல் இங்கும் பொருள் கொள்ளலாம். பிராணிகளை அறுக்கும் போது அல்லாஹ்வின் பெயரைக் கூறுதல் என்றும் பொருள் கொள்ளலாம்

நூல் : அஹ்காமுல் குர்ஆன்

அல்லாஹ் வழங்கியதன் மீது குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.

அல்லாஹ் வழங்கியதற்காக அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.

இரண்டுமே இலக்கண அடிப்படையில் சரியானது தான். ஆனால் ஹஜ்ஜுக்கு குர்பானி அவசியம் இல்லை என்பதால் நாம் செய்யும் மொழிபெயர்ப்பு தான் சரியானது என்பதில் சந்தேகமில்லை.

அடுத்து இதே வசனத்தில் இடம் பெற்ற மற்றொரு சொல்லையும் தங்களுக்கான ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

மேற்கண்ட வசனத்தில் அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்! என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால் இது அறுப்பதைத் தானே குறிக்கிறது என்பது தான் அந்த வாதம்.

இந்தக் கால்நடைகளை அல்லாஹ் வழங்கியதற்காக அல்லாஹ்வைப் புகழுங்கள். அத்துடன் அறுக்கும் நாளாகிய பத்தாம் நாளில் அறுத்து அதை நீங்களும் உண்ணுங்கள் மற்றவருக்கும் கொடுங்கள் என்று புரிந்து கொள்ளும் போது எந்தக் குழப்பமும் இல்லை.

அறியப்பட்ட நாட்கள் என்பது 10, 11, 12, 13 ஆகிய நாட்களைத் தான் குறிக்கும் என்று இவர்கள் சொல்வது போல் இதற்கு இன்னும் பலவாறாக பலர் விளக்கம் சொல்லி உள்ளனர்.

சட்டம் எடுப்பதற்காக சொல்லப்படுபவை அந்தச் சட்டத்தை தெளிவாகச் சொல்ல வேண்டும். அப்படி இல்லை.

التفسير البسيط

قوله: {وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ} قال ابن عباس في رواية عطاء: يريد أيام الحج، وهي يوم عرفة والنحر وأيام التشريق

அறியப்பட்ட நாட்கள் என்பது 9,10,11,12,13 ஆகிய நாட்கள் என்று இப்னு அப்பாஸ் கூறுகிறார்.

குர்பானியுடன் இப்னு அப்பாஸ் இதைச் சம்மந்தப்படுத்தவில்லை. ஏனெனில் ஒன்பதாம் நாள் குர்பானி கொடுக்க முடியாது.

التفسير البسيط

وقال الحسن وقتادة: الأيام المعلومات أيام عشر ذي الحجة

ஹஸன் கதாதா ஆகியோர் அறியப்பட்ட நாட்கள் என்பது   துல்ஹஜ் பத்து நாட்கள் என்கின்றனர்.

اللباب في علوم الكتاب

{وَيَذْكُرُواْ اسم الله في أَيَّامٍ مَّعْلُومَاتٍ} قال الأكثرون: هي عشر ذي الحجة قيل لها «مَعْلُومَات»

அதிகமான அறிஞர்கள் துல்ஹஜ் பத்து நாட்கள் என்கின்றனர்.

இவர்களும் அறியப்பட்ட நாட்கள் என்பதை குர்பானியுடன் சம்மந்தப்படுத்தவில்லை. ஏனெனில் முதல் ஒன்பது நாட்கள் குர்பானி கொடுக்க முடியாது. மேலும் இவர்கள் தஷ்ரீகுடைய நாட்களையும் அறியப்பட்ட நாட்களில் சேர்க்கவில்லை

تفسير ابن كثير

وَقَوْلُهُ: وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُوماتٍ عَلى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعامِ، قَالَ شُعْبَةُ وَهُشَيْمٌ عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدٍ، عَنِ ابن عباس رضي الله عنهما: الْأَيْامُ الْمَعْلُومَاتُ أَيْامُ الْعَشْرِ، وَعَلَّقَهُ الْبُخَارِيُّ عَنْهُ بصيغة الجزم به. وروي مثله عن أبي موسى الأشعري ومجاهد وقتادة وعطاء وسعيد بن جبير والحسن وَالضَّحَّاكِ وَعَطَاءٍ الْخُرَاسَانِيِّ وَإِبْرَاهِيمِ النَّخَعِيِّ، وَهُوَ مَذْهَبُ الشَّافِعِيِّ وَالْمَشْهُورُ عَنِ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ. وَقَالَ الْبُخَارِيُّ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ، حَدَّثَنَا شُعْبَةُ عن سليمان، عن مسلم البطين، عن سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا الْعَمَلُ فِي أَيْامٍ أَفْضَلَ مِنْهَا فِي هَذِهِ» قَالُوا: وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ؟ قَالَ: «وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ إِلَّا رَجُلٌ يَخْرُجُ يُخَاطِرُ بِنَفْسِهِ وَمَالِهِ فَلَمْ يَرْجِعْ بِشَيْءٍ» «1» ، رَوَاهُ الْإِمَامُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَالتِّرْمِذِيُّ وَابْنُ مَاجَهْ بنحوه. وَقَالَ التِّرْمِذِيُّ: حَدِيثٌ حَسَنٌ، غَرِيبٌ، صَحِيحٌ، وَفِي الْبَابِ عَنِ ابْنِ عُمَرَ وَأَبِي هُرَيْرَةَ وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَجَابِرٍ.

துல்ஹஜ் பத்து நாட்களுக்கு சிறப்பு உள்ள ஹதீஸை எடுத்துக் காட்டி அறியப்பட்ட நாட்கள் துல்ஹஜ் பத்து நாட்கள் என்று இப்னு அப்பாஸ், அபூ மூஸல் அஷ்அரி, முஜாஹித், கதாதா, அதா, ஸயீத் பின் ஜுபைர், ஹஸன், ளஹ்ஹாக், அதாவுல் குராசானி, இப்ராஹீம் நகயீ, ஷாஃபி, அஹ்மத் பின் ஹம்பல் உள்ளிட்டோர் கூறுகின்றனர்.

நூல் : இப்னு கஸீர்

இவர்களும் அறியப்பட்ட நாட்கள் என்பதை குர்பானியுடன் சம்மந்தப்படுதவில்லை. ஏனெனில் முதல் ஒன்பது நாட்கள் குர்பானி கொடுக்க முடியாது. இவர்களும் தஷ்ரீகுடைய நாட்களை அறியப்பட்ட நாட்களில் சேர்க்கவில்லை

بعده وَأخرج عبد بن حميد وَابْن الْمُنْذر عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا فِي قَوْله {فِي أَيَّام مَعْلُومَات} قَالَ: قبل يَوْم التَّرويَة بِيَوْم وَيَوْم التَّرويَة وَيَوْم عَرَفَة

ஏழாம் நாள், எட்டாம் நாள், ஒன்பதாம் நாள் ஆகியவை தான் அறியப்பட்ட நாட்கள் என்று இப்னு அப்பாஸ் மற்றொரு அறிவிபில் கூறுகிறார்

تفسير الرازي

المسألة الرابعة : أكثر العلماء صاروا إلى أن الأيام المعلومات عشر ذي الحجة

அதிகமான அறிஞர்கள் துல் ஹஜ் பத்து நாட்கள் என்கிறார்கள்.

இப்படி பலவாறாகச் சொல்லி இருப்பதில் இருந்து அறியப்பட்ட நாட்கள் என்பது அறுக்கும் நாட்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டதாக இவர்கள் கருதவில்லை என்று தெரிகிறது.

எனவே இந்த வசனத்தைக் குர்பானி கொடுக்கும் நாட்களைச் சொல்லும் வசனமாகக் கருதுவது பொருத்தமற்றது என்பது இதன் மூலமும் உறுதியாகிறது. 

இவர்கள் இவ்வாறு கூறக் காரணம் ஹஜ்ஜுக்கு குர்பானி அவ்சியம் என்பது தான்.

மேலும் இப்ராஹீம் நபியவர்கள் அல்லாஹ் வழங்கிய பலிப்பிராணியை அறுத்தார்கள். அதையே வழிமுறையாக ஆக்கியதாக அல்லாஹ் கூறுகிறான்.

{فَلَمَّا أَسْلَمَا وَتَلَّهُ لِلْجَبِينِ (103) وَنَادَيْنَاهُ أَنْ يَاإِبْرَاهِيمُ (104) قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ (105) إِنَّ هَذَا لَهُوَ الْبَلَاءُ الْمُبِينُ (106) وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ (107) وَتَرَكْنَا عَلَيْهِ فِي الْآخِرِينَ (108) سَلَامٌ عَلَى إِبْرَاهِيمَ (109) كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ (110) إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُؤْمِنِينَ (111)37

103, 104, 105. இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, “இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்” என்று அவரை அழைத்துக் கூறினோம். இது தான் மகத்தான சோதனை. பெரிய பலிப்பிராணியை அவருக்குப் பகரமாக்கினோம். பின்வருவோரில் அவரது புகழை நிலைக்கச் செய்தோம்.

இப்ராஹீம் நபியைப் பின்பற்றியே குர்பானி கொடுப்பது வழிமுறையாக்கப்பட்டுள்ளதை இவ்வசனங்கள் கூறுகின்றன. இப்ராஹீம் நபி அவர்கள் எந்த நாளில் குர்பானி கொடுத்தார்களோ அந்த நாள் ஒரு நாளாகத் தான் இருக்க முடியும். நான்கு நாட்களாக இருக்க முடியாது.

எனவே அவர்கள் குர்பானி கொடுத்த அந்த ஒரு நாளாகிய பெருநாள் தினத்தில் மட்டும் தான் குர்பானி கொடுக்க வேண்டும்

மேலும் பெருநாள் தினமாகிய துல்ஹஜ் பத்தாம் நாளுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நஹ்ருடைய நாள் என்று பெயரிட்டு உள்ளார்கள். நஹ்ர் என்றால் அறுத்துப் பலியிடுதல் என்று பொருள். அறுத்துப் பலியிடும் நாள் என்று அவர்கள் பெயர் சூட்டிய நாள் தான் அறுப்பதற்குரிய நாளாகும்.

{إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ (1) فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ (2) إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ (3) 108

கவ்ஸர் அத்தியாயத்தில் அறுத்துப் பலியிடுவீராக என்பதை நஹ்ர் என்ற வார்த்தையால் தான அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருநாள் தினத்தை நஹ்ருடைய நாள் என்று குறிப்பிட்டதை கீழே உள்ள ஹதீஸ்களில் காணலாம்,

صحيح البخاري

67 – حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا بِشْرٌ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنِ ابْنِ سِيرِينَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ، ذَكَرَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَعَدَ عَلَى بَعِيرِهِ، وَأَمْسَكَ إِنْسَانٌ بِخِطَامِهِ – أَوْ بِزِمَامِهِ – قَالَ: «أَيُّ يَوْمٍ هَذَا»، فَسَكَتْنَا حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ سِوَى اسْمِهِ، قَالَ: «أَلَيْسَ يَوْمَ النَّحْرِ» قُلْنَا: بَلَى، قَالَ: «فَأَيُّ شَهْرٍ هَذَا» فَسَكَتْنَا حَتَّى ظَنَنَّا أَنَّهُ سَيُسَمِّيهِ بِغَيْرِ اسْمِهِ، فَقَالَ: «أَلَيْسَ بِذِي الحِجَّةِ» قُلْنَا: بَلَى، قَالَ: «فَإِنَّ دِمَاءَكُمْ، وَأَمْوَالَكُمْ، وَأَعْرَاضَكُمْ، بَيْنَكُمْ حَرَامٌ، كَحُرْمَةِ يَوْمِكُمْ هَذَا، فِي شَهْرِكُمْ هَذَا، فِي بَلَدِكُمْ هَذَا، لِيُبَلِّغِ الشَّاهِدُ الغَائِبَ، فَإِنَّ الشَّاهِدَ عَسَى أَنْ يُبَلِّغَ مَنْ هُوَ أَوْعَى لَهُ مِنْهُ»

صحيح البخاري

968 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ زُبَيْدٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنِ البَرَاءِ، قَالَ: خَطَبَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ النَّحْرِ، قَالَ: «إِنَّ أَوَّلَ مَا نَبْدَأُ بِهِ فِي يَوْمِنَا هَذَا أَنْ نُصَلِّيَ، ثُمَّ نَرْجِعَ، فَنَنْحَرَ فَمَنْ فَعَلَ ذَلِكَ فَقَدْ أَصَابَ سُنَّتَنَا، وَمَنْ ذَبَحَ قَبْلَ أَنْ يُصَلِّيَ، فَإِنَّمَا هُوَ لَحْمٌ عَجَّلَهُ لِأَهْلِهِ لَيْسَ مِنَ  النُّسُكِ فِي شَيْءٍ»، فَقَامَ خَالِي أَبُو بُرْدَةَ بْنُ نِيَارٍ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَنَا ذَبَحْتُ قَبْلَ أَنْ أُصَلِّيَ وَعِنْدِي جَذَعَةٌ خَيْرٌ مِنْ مُسِنَّةٍ قَالَ: ” اجْعَلْهَا مَكَانَهَا – أَوْ قَالَ: اذْبَحْهَا – وَلَنْ تَجْزِيَ جَذَعَةٌ عَنْ أَحَدٍ بَعْدَكَ “

صحيح البخاري

1640 – حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَرَادَ الحَجَّ عَامَ نَزَلَ الحَجَّاجُ بِابْنِ الزُّبَيْرِ، فَقِيلَ لَهُ: إِنَّ النَّاسَ كَائِنٌ بَيْنَهُمْ قِتَالٌ، وَإِنَّا نَخَافُ أَنْ يَصُدُّوكَ، فَقَالَ: (لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ إِسْوَةٌ حَسَنَةٌ) إِذًا ” أَصْنَعَ كَمَا صَنَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِنِّي أُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ عُمْرَةً، ثُمَّ خَرَجَ، حَتَّى إِذَا كَانَ بِظَاهِرِ البَيْدَاءِ، قَالَ: مَا شَأْنُ الحَجِّ وَالعُمْرَةِ إِلَّا وَاحِدٌ، أُشْهِدُكُمْ أَنِّي قَدْ أَوْجَبْتُ حَجًّا مَعَ عُمْرَتِي، وَأَهْدَى هَدْيًا اشْتَرَاهُ بِقُدَيْدٍ، وَلَمْ يَزِدْ عَلَى ذَلِكَ، فَلَمْ يَنْحَرْ، وَلَمْ يَحِلَّ مِنْ شَيْءٍ حَرُمَ مِنْهُ، وَلَمْ يَحْلِقْ وَلَمْ يُقَصِّرْ، حَتَّى كَانَ يَوْمُ النَّحْرِ، فَنَحَرَ وَحَلَقَ، وَرَأَى أَنْ قَدْ قَضَى طَوَافَ الحَجِّ وَالعُمْرَةِ بِطَوَافِهِ الأَوَّلِ ” وَقَالَ ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: كَذَلِكَ فَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

صحيح البخاري

1691 – حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: تَمَتَّعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الوَدَاعِ، بِالعُمْرَةِ إِلَى الحَجِّ وَأَهْدَى، فَسَاقَ مَعَهُ الهَدْيَ مِنْ ذِي الحُلَيْفَةِ ، وَبَدَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَهَلَّ بِالعُمْرَةِ ثُمَّ أَهَلَّ بِالحَجِّ، فَتَمَتَّعَ النَّاسُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالعُمْرَةِ إِلَى الحَجِّ، فَكَانَ مِنَ النَّاسِ مَنْ أَهْدَى، فَسَاقَ الهَدْيَ وَمِنْهُمْ مَنْ لَمْ يُهْدِ، فَلَمَّا قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ قَالَ: لِلنَّاسِ «مَنْ كَانَ مِنْكُمْ أَهْدَى، فَإِنَّهُ لاَ يَحِلُّ لِشَيْءٍ حَرُمَ مِنْهُ، حَتَّى يَقْضِيَ حَجَّهُ، وَمَنْ لَمْ يَكُنْ مِنْكُمْ أَهْدَى، فَلْيَطُفْ بِالْبَيْتِ وَبِالصَّفَا وَالمَرْوَةِ، وَلْيُقَصِّرْ وَلْيَحْلِلْ، ثُمَّ لِيُهِلَّ بِالحَجِّ، فَمَنْ لَمْ يَجِدْ هَدْيًا، فَلْيَصُمْ ثَلاَثَةَ أَيَّامٍ فِي الحَجِّ وَسَبْعَةً إِذَا رَجَعَ إِلَى أَهْلِهِ». فَطَافَ حِينَ قَدِمَ مَكَّةَ، وَاسْتَلَمَ الرُّكْنَ أَوَّلَ شَيْءٍ، ثُمَّ خَبَّ ثَلاَثَةَ أَطْوَافٍ وَمَشَى أَرْبَعًا، فَرَكَعَ حِينَ قَضَى طَوَافَهُ بِالْبَيْتِ عِنْدَ المَقَامِ رَكْعَتَيْنِ، ثُمَّ سَلَّمَ فَانْصَرَفَ فَأَتَى الصَّفَا، فَطَافَ بِالصَّفَا وَالمَرْوَةِ سَبْعَةَ أَطْوَافٍ، ثُمَّ لَمْ يَحْلِلْ مِنْ شَيْءٍ حَرُمَ مِنْهُ حَتَّى قَضَى حَجَّهُ، وَنَحَرَ هَدْيَهُ يَوْمَ النَّحْرِ، وَأَفَاضَ فَطَافَ بِالْبَيْتِ، ثُمَّ حَلَّ مِنْ كُلِّ شَيْءٍ حَرُمَ مِنْهُ، وَفَعَلَ مِثْلَ مَا فَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَهْدَى وَسَاقَ الهَدْيَ مِنَ النَّاسِ،

ஹஜ் பெருநாள் தினத்தை நஹ்ருடைய நாள் அறுத்துப் பலியிடக்கூடிய நாள் என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

ஹஜ் பெருநாளுக்கு அடுத்துள்ள நாட்களுக்கு தஷ்ரீக் நாட்கள் என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

தஷ்ரீக் என்றால் உப்புக் கண்டம் போடும் நாட்கள் என்று பொருள்.

فتح الباري – ابن حجر

قوله أيام التشريق أي أيام منى سميت بذلك لأنهم كانوا يشرقون فيها لحوم الأضاحي أي يقطعونها ويقددونها

அவர்கள் இறைச்ச்சியை வெட்டி உப்புக் கண்டம் போடும் நாட்கள் என்பதால் தான் தஷ்ரீக் (உப்புக் கண்டம் போடும் நாட்கள்) என்று சொல்லப்பட்டது என்று இப்னு ஹஜர் கூறுகிறார்.

எனவே துல்ஹஜ் மாதம் பத்தாம் நாள் மட்டுமே குர்பானி கொடுப்பதற்குரிய நாளாகும். அதற்கு பிறகு வரும் மூன்று நாட்கள் உண்ணும் பருகும் நாட்களே தவிர குர்பானி கொடுக்கும் நாட்கள் அல்ல.