சிலுவை பதிக்கப்பட்ட ஆடைகளை அணியலாமா?
அஷ்கர் மைதீன்
ஏனைய மக்களால் புனிதப் பொருளாகக் கருதப்படும் பொருட்களின் உருவங்கள் உள்ள பொருட்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை. இதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது.
5952حَدَّثَنَا مُعَاذُ بْنُ فَضَالَةَ حَدَّثَنَا هِشَامٌ عَنْ يَحْيَى عَنْ عِمْرَانَ بْنِ حِطَّانَ أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا حَدَّثَتْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ يَتْرُكُ فِي بَيْتِهِ شَيْئًا فِيهِ تَصَالِيبُ إِلَّا نَقَضَهُ رواه البخاري
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வீட்டில் சிலுவைகளைப் பொறித்த எந்தப் பொருளையும் அழிக்காமல் விட மாட்டார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி 5952
எனவே சிலுவை அடையாளம் உள்ள ஆடைகளை அணிவது கூடாது.