சுனாமித் திருடர்களின் துரோக வரலாறு
தமுமுக இயக்கத்தை நாமும் நாட்டில் உள்ள நன்மக்களும் சுனாமித் திருடர்கள் என்ற அடைமொழி கொடுத்து குறிப்பிட்டு வருகிறோம். இவர்களுக்கு சுனாமி திருடர்கள் என்ற பட்டம் ஏன் கிடைத்தது என்ற விபரம் புதிய தலைமுறைக்கு தெரியாது என்ற நம்பிக்கையில் சுனாமி தொடர்பாக நம்மைப் பார்த்து கேள்விகள் எழுப்பி வருகிறார்கள். இவர்கள் எழுப்பும் கேள்விகள் புதியவை அல்ல. ஏற்கனவே கேட்கப்பட்டு அப்போதே உணர்வு இதழ் மூலம் பதிலளிக்கப்பட்டவை தான். நம்மை நோக்கி கேள்வி எழுப்புவோரின் முதுகெலும்பை முறிக்கும் பதில்கள் இறுதி தொடரில் இடம் பெறும் இன்ஷா அல்லாஹ்
திருடிக் கொண்டு ஓடுபவன் திருடன் திருடன் என்று கூச்சல் போட்டுக் கொண்டு திருடனைப் பிடிக்க ஓடுவது போல் சுனாமித் திருடர்களான தமுமுகவினர் தங்களின் திருட்டை மறைக்கப் பார்க்கின்றனர். கையும் களவுமாக மாட்டிக் கொண்ட சுனாமித் திருடர்களின் வண்டவாளம் அன்றைக்கே எப்படி தண்டவாளத்தில் ஏறியது என்பதை விளக்க நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி தந்த தமுமுக வினருக்கு நாம் நன்றி செலுத்துகிறோம்.
பின்னணி என்ன?
சுனாமியின் போது தவ்ஹீத் ஜமாஅத் நிதி திரட்டியது போல் தமுமுகவும் நிதி திரட்டியது. அந்த நிதி சம்மந்தமாக தவ்ஹீத் ஜமாஅத் கணக்குக் காட்டவில்லை என்றும் உணர்வில் முன்னுக்குப் பின் முரண் உள்ளது என்றும் குற்றம் சாட்டி நபிவழி தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் ஒரு பிரசுரம் அச்சிடப்பட்டு அது தமிழகத்தின் பல ஊர்களின் தமுமுக வினரால் வினியோகம் செய்யப்பட்டது. இது குறித்து உணர்வு வாசகர் ஒருவர் உணர்வு இதழில் கேள்வி கேட்டிருந்தார். அதற்கு நான் அளித்த பதிலில் இருந்து இந்த விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்தது.
உணர்வு உரிமை 10 : குரல் 12, நவம்பர் 25 – டிசம்பர் 01, 2005. பக்கம் 5. ல் வெளியான அந்தக் கேள்வியும் பதிலும் வருமாறு:
கேள்வி : சுனாமி கணக்கை வெளியிடுவதில் ஏற்பட்ட தாமதத்துக்கு நீங்கள் தெரிவித்துள்ள காரணத்தை அடிப்படையாகக் கொண்டு பினாமி பிரசுரம் வெளியிட்டுள்ளதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
இஸ்மாயில், நேதாஜிநகர், சென்னை.
பதில் : நபிவழி தவ்ஹீத் என்ற பெயரில் தமிழ்நாட்டில் எந்த அமைப்பும் இல்லை. இல்லாத அமைப்பின் பெயரில் இப்பிரசுரத்தை இலட்சக்கணக்கில் தமிழகத்தின் பல ஊர்களில் தமுமுக நிர்வாகிகளே விநியோகம் செய்ததற்கு நேரடி சாட்சியங்கள் உள்ளன.
இருக்கின்ற அமைப்பின் பெயரில் அச்சிடப்பட்ட பிரசுரத்தை இவர்கள் விநியோகம் செய்தால் பிரசுரத்தை இவர்கள் அச்சிடவில்லை விநியோகம் மட்டுமே செய்தனர் என்று எடுத்துக் கொள்ளலாம்.
ஆனால் இல்லாத அமைப்பின் பெயரில் தமிழகத்தின் பல பகுதிகளில் பிரசுரம் விநியோகிக்கிறார்கள் என்றால் இதை அச்சிட்டவர்களே இவர்கள்தான் என்பது தெளிவாகிறது. எனவே பினாமி பிரசுரம் வெளியிட்ட அவர்களுக்கு எனது பகிரங்க சவாலை பதிலாக வெளியிட்டுள்ளேன். அதை 8 ம் பக்கச் செய்தியில் காண்க. பிரசுரத்தில் எடுத்து வைக்கப்படும் வாதங்கள் எவ்வளவு விஷமத்தனமானவை என்பதைப் பார்ப்போம்.
பகிரங்க அறிவுப்புச் செய்து நிதி திரட்டும் போது அதுபற்றிய தகவலை உடனடியாக வெளியிடும் போது கடைசி நேரத் தடங்கல் ஏற்படுவது தவிர்க்க இயலாத ஒன்று தான்.
நாம் இணைந்திருந்த காலத்தில் கோவை கலவர நிவாரண நிதி, பழனிபாபா கொல்லப்பட்ட போது ஏற்பட்ட கலவரத்தில் கொல்லப்பட்டோர்களுக்கான நிவாரண நிதி ஆகியவற்றின் பட்டியலை வெளியிட்ட போது இது போல் திருத்தங்களை வெளியிட்டுள்ளோம். மக்களுக்கு உண்மையாகக் கணக்குக் காட்டக் கூடியவர்கள் நிச்சயம் இது போன்ற நிலையைச் சந்திப்பார்கள். இது எவ்வாறு ஏற்படுகிறது என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
துபாயில் உள்ள ஒருவர் பத்து நபர்களிடம் திரட்டிய பத்தாயிரம் ரூபாயை அனுப்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். இது பற்றிய விபரம் உணர்வு இதழுக்குத் தெரிவிக்கப்பட்டவுடன் அவர் பெயரில் பத்தாயிரம் வெளியிடப்படும். சில நாட்கள் கழித்து அவர் கடிதம் எழுதி பத்தாயிரம் என்னுடைய பணம் அல்ல. பத்துப் பேரிடம் திரட்டிய தொகை, எனவே அவர்களது பெயர்களையும் வெளியிடவும் என்று அதில் குறிப்பிடுவார்.
இந்தத் தகவல் ஜமாத் மூலம் உணர்வு இதழுக்குத் தெரிவிக்கப்படும். பெரும்பாலும் இந்த விபரங்கள் சரியாகவே வெளியிடப்பட்டு விடும். ஆனாலும் சில நேரங்களில் கவனமின்மையால் ஏற்கனவே வெளியான பட்டியலின் விரிவாக்கம் என்று வெளியிடுவதற்குப் பதிலாக மீண்டும் பத்தாயிரம் ரூபாயை பத்துப் பேரின் பெயரில் வெளியிட்டு விடுவதுமுண்டு. இப்படி நடந்திருப்பதால் உணர்வில் வெளியான பட்டியலுடன் தலைமையில் உள்ள கணக்குகள் ஒத்துப் போகாமல் ஆகிவிடும்.
இவ்வாறு பிழை ஏற்பட்ட பட்டியலைக் கண்டுபிடித்து சரி செய்கிறோம் என்று கூறுவது எப்படி மோசடியாகும்?
இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து பத்தாயிரம் அனுப்புகிறார்கள் என்றால் அந்தப் பெயரில் அந்தத் தொகை வெளியிடப்படும். இந்தந்தக் கிளைகள் மூலம் வழங்கியது என்ற விரிவாக்கப் பட்டியலை தாமதமாக அவர்கள் அனுப்பும் போது அது மற்றொரு தடவை உணர்வில் வெளியாகி விடுவதுண்டு.
இது போன்ற தவறுகள் ஏற்படுவதை நாம் உணர்வில் வெளியிடாமலேயே காலம் கடத்த முடியும். ஏன் தாமதமாகிறது என்ற சந்தேகத்தை மக்களுக்கு விளக்குவது அவசியம் என்று நாங்கள் நினைக்கிறோம். எங்களிடம் ஏற்பட்ட பிழையை மறைத்து பொய்யான காரணம் சொல்ல நாம் விரும்பவில்லை. கவனக் குறைவால் ஏற்பட்ட இப்பிழையைத் தான் மோசடி என்று பிரசுரம் வெளியிட்டுள்ளனர்.
மக்களுக்குத் தாங்கள் கணக்கு காட்டப் போவதில்லை என்று நினைப்பவர்களுக்கும் சுருட்டிக் கொண்டவர்களுக்கும் இது போன்ற விளக்கம் அளிக்கும் அவசியம் ஏற்படப் போவதில்லை.
கணக்கை முறையாக வெளியிடுபவர்களுக்கு இது போன்ற நிர்பந்தம் ஏற்படும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
(எனது பொருளாதார நிலை பற்றியும் பினாமி பிரசுரத்தைப் பரப்பி வருகின்றனர். எனது முதல் பிரசுரம் மக்களைச் சென்றடைந்தவுடன் எனது இரண்டாம் பிரசுரம் விரைவில் வரும். இவர்களின் முகத்திரை முழுமையாகவே கிழியும். இவர்கள் பரப்பும் மொட்டைப் பிரசுரங்களை இவர்கள் வெளியிடுவதாகவே எடுத்துக் கொண்டு இவர்களை நேருக்கு நேர் சந்திப்பேன். இன்ஷா அல்லாஹ்)
இஸ்மாயீல் என்ற சகோதரரரின் கேள்விக்கு உணர்வு உரிமை 10 : குரல் 12, நவம்பர் 25 – டிசம்பர் 01, 2005. பக்கம் 5. ல் நான் மேற்கண்டவாறு பதில் அளித்ததுடன் பகிரங்க அறை கூவலுக்கான அழைப்பையும் அதே இதழில் வெளியிட்டேன். அந்தப் பகிரங்க அழைப்பிலேயே உங்களுக்கு உண்மை பளிச்சென்று தெரிந்து விடும்.
அந்த பகிரங்க அழைப்பு இது தான்
இறைவனின் திருப்பெயரால்…
த.மு.மு.க.வுக்குப் பகிரங்க அறை கூவல்
சுனாமி நிவாரண நிதியைப் பற்றி தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக ஒரு துண்டுப் பிரசுரத்தை த.மு.மு.கவினர் தமிழகமெங்கும் வினியோகம் செய்து வருகின்றனர்.
தங்கள் இயக்கத்தின் பெயரில் வெளியிடாமல் வழக்கம் போலவே பினாமி பிரசுரமாக அதைப் பரப்பி வருகின்றனர்.
பொதுமக்களிடம் திரட்டப்படும் நிதிகளுக்கு வெளிப்படையான கணக்கை வெளியிடும் அவசியத்தை இதன் மூலம் த.மு.மு.கவினர் ஒப்புக் கொண்டதற்கு அவர்களுக்கு நாம் நன்றி செலுத்துகிறோம்.
அந்த இயக்கத்திலிருந்து தவ்ஹீத் ஜமாஅத் பிரிந்த பின், த.மு.மு.கவும், தவ்ஹீத் ஜமாஅத்தும் பொதுமக்களிடமிருந்து பகிரங்க அறிவிப்பு செய்து, மூன்று தடவை நிதிகளை வசூலித்தன.
2004 ஃபித்ரா
சுனாமி நிவாரண நிதி
2005 ஃபித்ரா
2004 ஃபித்ரா
2004 ஆம் வருடம் நோன்புப் பெருநாள் தர்மத்தை (ஃபித்ராவை) தவ்ஹீத் ஜமாஅத்தும் திரட்டியது. தமுமுகவும் திரட்டியது.
இலட்சக்கணக்கில் தவ்ஹீத் ஜமாஅத் திரட்டிய நிதிக்குரிய கணக்கை உடனடியாக உணர்வு இதழில் வெளியிட்டது.
தமுமுகவும் இலட்சக்கணக்கில் நிதியைத் திரட்டியது. மிகச் சிறிய அளவுக்கு மட்டுமே மக்களுக்கு வழங்கியதால் 13 மாதங்கள் கடந்த பின்பும் இன்று வரை அந்தக் கணக்கை தமுமுக வெளியிடவில்லை.
சுனாமி நிவாரண நிதி
சுனாமியால் ஏற்பட்ட பாதிப்புக்காக இலட்சக்கணக்கான ரூபாய்களை தவ்ஹீத் ஜமாஅத் திரட்டியது.
தமுமுகவும் இலட்சக்கணக்கான ரூபாய்களைத் திரட்டியது.
தவ்ஹீத் ஜமாஅத் திரட்டிய நிதியில் 95 சதவிகிதத்தைப் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிவிட்டது. எஞ்சியதை விரைவில் வழங்கிவிட்டு கணக்குகளைச் சரி செய்து மிக விரைவில் உணர்வு இதழில் வெளியிடுவதாக தவ்ஹீத் ஜமாஅத் பகிரங்க அறிவிப்புச் செய்துள்ளது.
ஆனால் தமுமுக 68 லட்சம் ரூபாய் திரட்டியதாக தனது பத்திரிகையில் வெளியிட்டது. திரட்டிய 68 லட்சம் ரூபாயில் 10 சதவிகிதத்தைக் கூட சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று வரை வழங்கவில்லை.
68 லட்சம் ரூபாய் எவ்வாறு செலவிடப்பட்டது?
கணக்கு வெளியிடப்படுமா?
எப்போது வெளியிடப்படும்?
என்பது பற்றி தமுமுக மௌனம் சாதித்து வருகிறது. இந்த நிலையில் வெட்கமில்லாமல் பினாமி பிரசுரத்தை தமுமுக வினியோகம் செய்து வருகின்றது.
2005 ஃபித்ரா
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 2005ம் ஆண்டுக்கான நோன்புப் பெருநாள் தர்மத்தை 25 லட்சத்திற்கு மேல் திரட்டியது. அனைத்தையும் தமிழகமெங்கும் தவ்ஹீத் ஜமாஅத் வினியோகம் செய்து விட்டது.
இதன் முழுக் கணக்கையும் உணர்வு இதழில் முழுமையாக தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்டுவிட்டது.
ஆனால் தமுமுக இது பற்றி எந்த அறிவிப்பும் செய்யாமல் படம் (?) காட்டி மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றது.
மூன்று கணக்குகளுக்கும் பொதுவிசாரணை
மேற்கண்ட மூன்று கணக்குகளிலும் தவ்ஹீத் ஜமாஅத்தும் தனது நேர்மையை நிரூபிக்கும் அவசியம் உள்ளது.
மேற்கண்ட மூன்று கணக்குகளிலும் தமுமுகவும் தனது நேர்மையை நிரூபிக்கும் அவசியம் உள்ளது.
இரண்டு இயக்கங்களுமே பொது விசாரணைக்கு தன்னை உட்படுத்திக் கொள்வது தான் இரண்டு இயக்கங்களின் நேர்மையை நிரூபிக்க ஏற்ற வழியாகும்.
தமிழகத்தில் மக்களால் ஓரளவு அறியப்பட்ட இயக்கங்கள் சார்பில் தலா இரண்டு அல்லது மூன்று உறுப்பினர்கள் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்து இரண்டு இயக்கங்களும் அந்தக் குழுவிடம் மேற்கண்ட மூன்று கணக்குகளையும் ஒப்படைத்து பொது விசாரணைக்கு முன்வருவது காலத்தின் கட்டாயமாக உள்ளது.
தமிழகத்தில்,
முஸ்லீம் லீக்.
தேசிய லீக்.
ஜமாஅத்துல் உலமா சபை
ஜமாஅத்தே இஸ்லாமி
இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம்
மனித நீதிப் பாசறை
ஆகிய இயக்கங்கள் மக்களால் அறியப்பட்ட இயக்கங்களாக உள்ளன.
இந்த இயக்கங்கள் சார்பில் தலா இரண்டு அல்லது மூன்று உறுப்பினர்கள் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்து, அந்தக் குழுவிடம் மேற்கண்ட மூன்று கணக்குகளையும் இரண்டு இயக்கங்களும் ஒப்படைத்து பொது விசாரணைக்கு முன்வர வேண்டும்.
* அத்துடன் தவ்ஹீத் ஜமாஅத் கணக்குகளை விசாரணைக்குழு விசாரிக்கும் போது விசாரணைக் குழுவில் தமுமுக இடம் பெற வேண்டும்.
* தமுமுக கணக்குகளை விசாரணைக்குழு விசாரிக்கும் போது விசாரணைக் குழுவில் தவ்ஹீத் ஜமாஅத் இடம் பெற வேண்டும்.
இந்த இயக்கங்கள் அனைத்தும் தவ்ஹீத் ஜமாஅத்தை விட தமுமுகவுக்கே நெருக்கமாக உள்ளன. சில இயக்கங்கள் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிரானவை.
அப்படி இருந்தும் இவர்களைக் கொண்டு அமைக்கப்படும் விசாரணைக்கு
தவ்ஹீத் ஜமாஅத் தன்னை உட்படுத்தத் தயார்!
தமுமுக மாநிலத் தலைமை தயாரா?
2004, 2005 பித்ரா கணக்குகள்,
சுனாமி நிவாரண நிதியின் வரவு செலவு கணக்குகள்
ஆகியவற்றை விசாரணைக்கு உட்படுத்த தமுமுக முன்வர வேண்டும்.
அந்த விசாரணைக் குழுவில் தனது நேர்மையைச் சந்தேகத்திற்கு இடமின்றி இன்ஷா அல்லாஹ் தவ்ஹீத் ஜமாஅத் நிரூபித்துக் காட்டும். மேலும் மேற்கண்ட மூன்று நிதியிலும் தமுமுக பெருமளவு ஊழல் செய்துள்ளதை நான் நிரூபிப்பேன்.
தமுமுக நல்ல இயக்கம் என்று நம்பி அவர்கள் அனுப்பும் அவதூறுப் பிரசுரங்களைப் பரப்பும் அப்பாவிகளே! விசாரணைக்கு முன்வருமாறு உங்கள் தலைமையை வற்புறுத்துங்கள்! அவர்கள் முன்வந்தால் நீங்கள் அந்த இயக்கத்தில் இருந்ததற்காக நீங்கள் வெட்கப்படும் அளவுக்கு விசாரணையில் தெளிவாகும்.
விசாரணைக்கு உடன்பட மறுத்தால் நீங்கள் இதுவரை இருந்த இயக்கத்தின் இலட்சணத்தை அப்போதும் நீங்கள் விளங்கலாம்.
இவர்களுக்கு நிதி உதவி செய்பவர்களுக்கு ஒரு வார்த்தை : இவர்கள் விசாரணைக்கு உட்பட மறுத்தால் இவர்களுக்கு நிதி உதவி செய்வதால் பாவம் தான் ஏற்படும் என்பதை உணருங்கள்.
விசாரணைக்கு உட்பட மறுத்தால் நமது இந்தப் பிரசுரத்துக்கு எதிராக நீதிமன்றத்தையாவது அனுகட்டும்! இவர்களைச் சட்டபூர்வமாக அம்பலப்படுத்த அது ஒரு வாய்ப்பாக அமையும்.
இதுமெட்டைப் பிரசுரம் அல்ல! பி. ஜைனுல் ஆபிதீன் விடுக்கும் நேரடி அறைகூவல்.
இதற்குத் தயார் என்றால் எனது கீழ்க்கண்ட முகவரிக்கு தமுமுக தொடர்பு கொள்ளலாம்.
இவர்களைத் தோலுரித்துக் காட்டும் யுத்தத்தின் துவக்கம் தான் இது!
அன்புடன்
“பி.ஜைனுல் ஆபிதீன்,
30, அரண்மனைக்காரன் தெரு,
மண்ணடி, சென்னை – 1,
(உணர்வு உரிமை 10 : குரல் 12, நவம்பர் 25 – டிசம்பர் 01, 2005. பக்கம் 8.)
மேற்கண்டவாறு நான் அறைகூவல் விட்டேன். அழைப்பு விட்டது மட்டுமின்றி நடுவர்களாகப் பரிந்துரைக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து இது தொடர்பான கோரிக்கையை எழுத்து மூலமும் கொடுத்தோம்.
அது பற்றியும் உணர்வு இதழில் நான் எழுதிய விபரத்தில் இருந்து நீங்கள் கூடுதல் தெளிவைப் பெறலாம்.
நான் சவால் விட்டவுடன் அந்த சமாதானக் குழுவை ஏற்றுக் கொள்வதாக தமுமுகவும் ஒப்புக் கொண்டு தனது மக்கள் உரிமை இதழில் எழுதியது. அதன் பின்னர் தான் மேற்படி ஆறு இயக்கத்தினர் தவ்ஹீத் ஜமாஅத்தையும் தமுமுகவையும் விசாரணைக்காக வருமாறு அழைப்பு விடுத்தனர்.
அந்த ஆறு இயக்கத்தினரும் தேசிய லீக் தலைவர் பஷீர் அஹ்மது அவர்களை இதற்கான ஒருங்கிணைப்பாளராக நியமித்தனர்.
ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பஷீர் அஹ்மது அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் தமுமுகவுக்கும் பொது விசாரணைக்கு ஒத்துழைப்பு கேட்டு கடிதம் எழுதினார்கள். அந்தக் கடிதமே உங்களுக்கு பல விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும்.
அந்தக் கடிதம் இது தான்.
அந்தக் கடித இமேஜ் பைல் –
இந்தக் கடிதம் வந்த உடன் விசாரணைக்காக அழைக்கப்பட்ட இடத்துக்கு வந்து எல்லா வகையிலும் ஒத்துழைப்பு நல்க சம்மதம் தெரிவித்து தவ்ஹீத் ஜமாஅத் எழுத்து மூலம் பதில் கொடுத்தது.
இந்தப் பொதுவிசாரணை மூலம் தவ்ஹீத் ஜமாஅத் தனது அப்பழுக்கற்ற தன்மையை நிரூபிக்கவும் சுனாமி பணத்தையே தின்ற பாவிகளை இனம் காட்டவும் தயாராக இருந்தது. இந்த நடுவர்களின் அழைப்புக்கு தவ்ஹீத் ஜமாஅத் கீழ்க்கண்டவாறு பதில் அளித்தது. அந்தப் பதில் உணர்விலும் பகிரங்கமாக வெளியிடப்பட்டது. அந்தப் பதில் இது தான்:
இறைவனின் திருப்பெயரால்…
நடுவர்கள் அழைப்பை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்றது தமுமுக ஏற்குமா?
அன்பிற்குரிய இஸ்லாமியப் பொது மக்களே! பொதுமக்களின் நிதியில் மோசடி நடந்துள்ளதா என்பதை விசாரிக்கும் விசாரணைக் குழு வருகின்ற 10.11.2005 அன்று தவ்ஹீத் ஜமாஅத்தையும் தமுமுகûவுயும் தான் ஏற்பாடு செய்த இடத்துக்கு அழைத்துள்ளது.
நடுவர்களின் அழைப்பை ஏற்று நடுவர்களை மதித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள், அவர்கள் அழைத்த நாளில் அழைத்த இடத்துக்குச் சென்று அவர்கள் கேட்டுக் கொள்ளும் உறுதிமொழிப் பத்திரம் வழங்கவுள்ளனர்.
ஃபித்ரா, சுனாமி நிதி குறித்து அவர்கள் கேட்கும் அனைத்து தகவல்களையும், ஆதாரங்களையும் வழங்கவும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தயாராகவுள்ளது.
நடுவர்கள் வரிக்கு வரி கணக்குகளைப் பரிசீலனை செய்ய முழுமையான ஒத்துழைப்பை அளிக்கவும் தவ்ஹீத் ஜமாஅத் தயாராகவுள்ளது.
தமுமுக தனது மேற்கண்ட மூன்று நிதிகளிலும் நேர்மையாக நடந்து கொண்டுள்ளது, உண்மை என்றால் நடுவர்களின் அழைப்பை ஏற்று நடுவர்களின் முன் ஆஜராக வேண்டும்.
இந்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (tntj),
மாநிலத் தலைமையகம்.
(உணர்வு உரிமை 10 : குரல் 13, டிசம்பர் 02 – 08, 2005. பக்கம் 3)
ஆனால் நடுவர்களை ஏற்றுக் கொண்டதாக சீன் காட்டிய தமுமுக நடுவர்கள் முன்னால் ஆஜராக மறுத்து விட்டது. தாங்கள் ஒரு மண்டபத்தில் காத்திருப்பதாகவும், அங்கே நடுவர்கள் தங்கள் உறுப்பினர் அட்டையுடன் வர வேண்டும் என்று பதில் கொடுத்து பொது விசாரணையில் இருந்து ஓட்டம் பிடித்தது.
அது குறித்து தங்கள் பத்திரிகையில் என்னைப் பற்றி தரக்குறைவாக திட்டி தீர்த்தனர். பொது விசாரணக்கு தயார் ஆனால் தயாரில்லை என்ற பாணியில் அவ்ர்களின் பதில் அமைந்திருந்தது. இது பற்றி நான் உணர்வு இதழில் வரிக்கு வரி அளித்த பதில் வருமாறு:
இறைவனின் திருப்பெயரால்…
சவாலை ஏற்க மறுக்கும் த.மு.மு.க.
தமுமுக 2004 ஆம் ஆண்டு திரட்டிய ஃபித்ரா கணக்கையும், 2005 ம் ஆண்டு திரட்டிய ஃபித்ரா கணக்கையும் வெளியிடவில்லை என்பது ஊரறிந்த உண்மை. அது போல் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்காக திரட்டிய நிதியின் பட்டியலை வெளியிட்ட தமுமுக அதை விநியோகித்த விபரங்களை வெளியிடவில்லை. இதுவும் நாடறிந்த உண்மை.
பொதுமக்களுக்குச் சேர வேண்டியதைப் பொதுமக்களுக்குச் சேர்த்துவிட வேண்டும் என்ற நன்னோக்கில் தான் பி.ஜைனுல் ஆபிதீனாகிய நான் அறைகூவல் விட்டேன்.
நான் சுட்டிக்காட்டிய மூன்று நிதிகளையும் முறையாக விநியோகம் செய்திருந்தால் ஏற்க வேண்டிய விதத்தில் எனது அறைகூவலை தமுமுக ஏற்றிருக்க வேண்டும். ஆனால், தாங்கள் பொது விசாரணைக்குத் தயாரில்லை என்பதை சவாலை ஏற்கிறோம் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளனர்.
இப்பிரச்சனையுடன் தொடர்பு இல்லாத பல விஷயங்களைக் குறிப்பிட்டு பிரச்சனையைத் திசை திருப்ப முயன்றுள்ளனர்.
பொது விசாரணைக்குத் தொடர்பு இல்லாத அதைப் பற்றி விளக்குவதற்கு முன் பொது விசாரணை பற்றி அவர்கள் கூறியுள்ளதை அலசுவோம்.
பொதுவிசாரணை பற்றி
நமது அறிக்கையில் நாம் விட்ட அறைகூவல் என்ன? இவர்கள் அளித்த பதில் என்ன? என்பதைக் கொஞ்சம் ஈடுபாட்டுடன் கவனிப்பவர்கள் கூட தமுமுகவினர் பொது விசாரணைக்குத் தயாராக இல்லை என்பதையும், பொது விசாரணையிலிருந்து பின்வாங்கி ஓட்டம் பிடிக்கிறார்கள் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
(தமுமுக நிர்வாகி ஒருவரின் உள்ளக் குமுறல் தனியாக இடம் பெற்றுள்ளது. அதிலிருந்து மக்களின் மனநிலையைப் புரிந்து கொள்ளலாம்.)
* முஸ்லீம் லீக், தேசிய லீக், ஜமாஅத்தே இஸ்லாமி, ஜமாஅத்துல் உலமா, மனித நீதிப் பாசறை, இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம் ஆகிய இயக்கங்கள் சார்பில் தலா இருவர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும்.
* அந்த விசாரணைக் குழுவில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும், தமுமுகவும் தங்களின் மூன்று கணக்குகளையும் முழுமையாக ஒப்படைக்க வேண்டும். விசாரணைக் குழு இந்தக் கணக்குகள் தொடர்பாக கேட்கும் அனைத்து தகவல்களையும் இரண்டு இயக்கத்தினரும் அந்தக் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.
இது தான் பொதுவிசாரணை!
மேற்கண்ட மூன்று கணக்குகளிலும் தமுமுக தலைமை எவ்வித முறைகேடும் செய்யாமல், எந்த நோக்கத்திற்காக நிதி திரட்டப்பட்டதோ அதற்கே நிதியைச் செலவிட்டிருந்தால் என்ன செய்திருக்க வேண்டும்?
தங்களின் நேர்மை கேள்விக்குறியாக்கப்பட்டுள்ள நிலையில் தங்களின் நேர்மையைச் சந்தேகமற நிரூபிக்கக் கிடைத்த வாய்ப்பாக இதைக் கருதி முன்முயற்சி எடுத்திருக்க வேண்டும்.
* ஆனால், இவர்கள் நடுவர்களை மதிக்காமல் அவர்களை இழிவுபடுத்தும் வகையிலான அறிவிப்பை வெளியிட்டு நடுநிலையாளர்களை முகம் சுளிக்க வைத்துவிட்டனர்.
“பொது விசாரணையை நாங்கள் ஏற்கிறோம்; நடுவர் குழுவை அமைக்க நீங்கள் முயற்சியுங்கள்” என்று கூறினால் அது சரியான பதிலாக இருந்திருக்கும்.
“பொது விசாரணையை நாங்கள் ஏற்கிறோம்; நடுவர் குழுவை அமைக்க நாங்களே முன்முயற்சி எடுக்கிறோம்” என்று அவர்கள் பதிலளித்திருந்தால் அதுவும் கூட சரியான பதிலாக அமைந்திருக்கும்.
“பொது விசாரணையை நாங்கள் ஏற்கிறோம்; இருவரும் சேர்ந்து நடுவர் குழுவை அமைக்க முயற்சிப்போம்” என்று கூறியிருந்தால் அதுவும் சரியான பதிலாக அமைந்திருக்கும்.
ஆனால், தமுமுக தலைமை தன்னை நடுவராக்கிக் கொண்டு, ஆறு இயக்கங்களையும் தன்னால் விசாரிக்கப்படக் கூடியவர்களாக ஆக்கி அநியாயமான ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
* அதாவது பத்தாம் தேதியன்று ஒரு மண்டபத்தில் தமுமுக நிர்வாகிகள் இருப்பார்களாம்!
* இவர்களைத் தேடிக் கொண்டு நடுவர்களான ஆறு இயக்கங்களின் பிரதிநிதிகள் செல்ல வேண்டுமாம்.
* ஆறு இயக்கங்களின் பிரதிநிதிகள் தங்கள் இயக்கத்தின் உறுப்பினர் அட்டையைக் கொண்டு வர வேண்டுமாம்!
இப்படி அறிவித்துள்ளனர். இதில் அறைகூவலை ஏற்கும் அம்சம் கடுகளவு கூட இல்லை.
எவரும் தங்களை விசாரிக்க முடியாது என்ற ஆணவப் போக்கு தான் இதில் உள்ளது.
யுத்தத்தின் தொடக்கம்
அடுத்து யுத்தத்தின் தொடக்கம் என்ற வார்த்தையைப் பிடித்துக் கொண்டு இதற்கு வன்முறை அர்த்தம் கற்பித்துள்ளனர். நோட்டீஸை வெளியிட்டு இந்த நோட்டீஸ் யுத்தத்தின் துவக்கம் என்று கூறினால் அது போல பிரசுரங்கள் மூலம் யுத்தம் தொடரும் என்று தான் அறிவுடைய மக்கள் புரிந்து கொள்வார்கள்.
நீதிபதிகளுக்கு ஆணையிடும் பிரதிவாதிகள்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தும், தமுமுகவும் அந்த மூன்று கணக்குகளில் வாதிகளாகவும், பிரதிவாதிகளாகவும் உள்ளனர். ஆறு இயக்கங்களும் நீதிபதிகளாகவுள்ளனர்.
இந்தப் பொது விசாரணைக்குத் தயார் என்பதை மட்டும் தான் வாதிகளும், பிரதிவாதிகளும் கூறவேண்டும்.
அதை எப்படி அமைத்துக் கொள்வது?
எந்த இடத்தில் வைத்துக் கொள்வது?
எத்தனை நாளில் விசாரணையை முடிப்பது?
என்பதையெல்லாம் பொது விசாரணைக் குழு தான் முடிவு செய்ய வேண்டும்.
பொது விசாரணைக் குழு எடுக்க வேண்டிய முடிவை இவர்களே எடுத்தால் மானமுள்ள எந்த இயக்கமாவது இதை ஏற்றுக் கொள்ளுமா? “நமக்கு உத்தரவு போடுபவர்கள் நமது விசாரணைக்கு எப்படி ஒத்துழைப்பார்கள்” என்று நினைக்க மாட்டார்களா?
“அம்மூன்று கணக்குகள் விஷயங்களில் அதில் சம்பந்தப்பட்ட இரண்டு இயக்கங்கள் தான் நம்மைத் தேடி வர வேண்டுமே தவிர நாம் ஏன் இவர்களைத் தேடிச் செல்ல வேண்டும்” என்று நினைக்க மாட்டார்களா?
அப்படி நினைத்து நீதிபதிகள் ஒதுங்கிக் கொள்ளட்டும் என்பதற்காகவே மேற்கண்ட அறிவிப்பைச் செய்துள்ளதை சிறிதளவு சிந்தனை படைத்தவர்களும் அறிவார்கள்.
அதுமட்டுமின்றி மேற்கண்ட ஆறு இயக்கத்தின் சார்பில் கலந்து கொள்ளும் நீதிபதிகள் குழுவினர், உறுப்பினர் அட்டையோடு இவர்களைத் தேடிச் செல்ல வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். இது ஆணவத்தின் உச்சக்கட்டம். மேலும் பின்னங்கால் பிடறியில் பட ஓட்டம் எடுப்பதற்கான ஒப்புதல் வாக்குமூலம்.
ஏனெனில் மேற்கண்ட ஆறு இயக்கங்களில் நாமறிந்த வரை இரு இயக்கம் தவிர மற்ற இயக்கங்களில் உறுப்பினர் அட்டை வழங்கும் முறை கிடையாது. இது தமுமுக தலைமைக்கும் நன்றாகத் தெரியும். எனவே, உறுப்பினர் அட்டை இல்லாமல் தான் அவர்கள் வருவார்கள் என்பதும் தமுமுக தலைமைக்குத் தெரியும்.
“நடுவர்களிடம் உறுப்பினர் அட்டை இல்லை என்று தெரிந்திருந்தும் உறுப்பினர் அட்டையுடன் நடுவர்கள் வரவேண்டும் என்று கூறியிருப்பது நடுவர்களை விரட்டியடித்து பிரச்சினை ஏற்படுத்தவா? விசாரணைக்கு உட்பட்டு நேர்மையை நிரூபிக்கவா? உறுப்பினர் அட்டை உள்ளதா?” என்று குற்றம் சுமத்தப்பட்ட தமுமுகவினர் சோதனை செய்து நடுவர்களைத் திருப்பி அனுப்புவார்கள். இதையே காரணம் காட்டி பொது விசாரணையை எதிர்கொள்ளாமல் தவிர்த்து விடலாம். பழியை மற்றவர்களின் மீது போடலாம் என்று சதி ஆலோசனை செய்து இவ்வாறு அறிவித்துள்ளனர்.
இவர்களிடம் நேர்மையான கணக்கு இல்லை என்பது விசாரணைக்கு முன்பே உறுதியாக நிரூபணமாகி விட்டது. நடுவர்களை எந்த அளவு அவமானப்படுத்த வேண்டுமோ அந்த அளவுக்கு அவமானப்படுத்தி விட்டு அவர்களை அழைத்து வா பார்க்கலாம் என்று முண்டா தட்டுவது தான் பொது விசாரணையை ஏற்கும் இலட்சணமா?
நடுவர்கள் தான் நமக்கு நிபந்தனைகள் போட வேண்டுமே தவிர நடுவர்களையே சோதனை நடத்துவோம் என்பது அறை கூவலை ஏற்க மறுத்து ஓட்டம் பிடிப்பது தானே தவிர அறைகூவலை ஏற்பது அல்ல.
எதை ஏற்க முடியாதோ எதை ஏற்பது நியாமில்லையோ நடுவர்கள் எதை ஏற்க மறுப்பார்களோ அதையே நிபந்தனையாகப் போடுவது ஓடி ஒளியும் தந்திரம் என்பதை யாரும் விளங்கலாம்.
“நீதிபதிகளாகச் செயலாற்றவுள்ள அந்தத் தலைவர்களுக்கு பத்தாம் தேதி வசதிப்படுமா? வேறு அலுவல்கள் உள்ளனவா? அவர்களுக்கு வசதியான நாள் எது? எந்த இடத்தில் வைத்துக் கொள்ளலாம்? நாங்களே ஒரு இடத்தைத் தேர்வு செய்யலாமா?” என்று ஆறு இயக்கங்களின் தலைவர்களிடம் சம்மதம் பெற்று அறிவித்திருந்தால் கூட ஓரளவுக்கு விசாரணைக்கு ஒத்துழைக்கிறார்கள் என்று கருதிக் கொள்ளலாம்.
“பிரச்சனைக்குரிய மூன்று கணக்குகளையும் நடுவர்களிடம் முழுமையாக ஒப்படைத்து அவர்களின் சுதந்திரமான விசாரணைக்கு தமுமுக தயாராக இல்லை” என்பது தான் “சவாலை ஏற்கிறோம்” என்ற பிரசுரத்தின் சாரம்சமாகும்.
முஸ்லிம் மீடியா டிரஸ்ட் கணக்கு
முஸ்லிம் மீடியா டிரஸ்ட் கணக்கையும் ஒப்படைக்க வேண்டும் என்று அக்குழுவிடம் முறையிடுவோம் என்று கூறியுள்ளனர். நன்றாக முறையிடட்டும்.
நாம் பிரிந்த பின்னர் தனித்தனியாக திரட்டிய நிதி பற்றி தான் நாம் விசாரணை கோரினோம். நாம் இணைந்திருந்த போது நடந்தவை பற்றியும் அவர்கள் விசாரணை கோரினால் நாமும் அதுபோல் கோரிக்கை வைப்போம்.
சம்பந்தமில்லாத சங்கதிகள்
* நான் அபுஜஹலை விட மோசமானவன் என்றும், கிரிமினல்களுக்கெல்லாம் கிரிமினல் என்றும் தமுமுகவிலிருந்து பிரிந்தபோது மிரட்டினர்.
* ஊருக்கு ஊர் கர்பலா யுத்தம் நடத்துவேன் என கர்ஜித்தார்.
* தமுமுகவினர் மீது ஜிஹாது (போர்) நடத்துங்கள் என்று ஜும்ஆ உரையில் பகிரங்கமாக கூறினார்.
* தமுமுக தலைமைக் கழகத்தில் ரவுடிகளை நுழைத்து தலைமை நிர்வாகிகள் மீது மிகப் பெரியதொரு கொலைவெறித் தாக்குதலை நடத்த முயற்சித்தார்.
* தமுமுகவினருக்கு எதிராக ஏராளமான பொய்களையும், பழிகளையும் அள்ளி வீசினார். இவரின் சூழ்ச்சிகளையெல்லாம் வல்ல அல்லாஹ் முறியடித்தான்.
இவை நாம் பொது விசாரணைக்கு அழைப்பு விட்டிருக்கும் பிரச்சனையுடன் எந்த வகையிலும் தொடர்பு இல்லாதவை. முற்றிலும் பொய்யான கற்பனை.
மேற்கண்ட குற்றச்சாட்டுகள் பற்றியும், உண்மை பேசுவோம் என்ற தலைப்பில் தமுமுக தலைமை வெளியிட்ட குறுந்தகட்டில் தெரிவித்த அனைத்து குற்றச்சாட்டுகளைப் பற்றியும் பொதுமக்கள் மத்தியில் பகிரங்க விவாதம் செய்யத் தயாரா? என்று ஏராளமான தடவை வற்புறுத்தி விட்டோம். அதை ஏற்க மறுப்பதன் மூலம் இக்குற்றச்சாட்டுகளிலும் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பது தெளிவாகி விட்டதாலும், அவர்கள் செய்த வன்முறைகள் அனைவருக்கும் தெரிந்த விஷயமாக இருப்பதாலும் இதை நாம் அலட்சியப்படுத்துகிறோம்.
ஜகாத் பற்றி
அடுத்து ஜகாத் பற்றிய நமது நிலைப்பாட்டைப் பற்றியும் குறிப்பிட்டு மக்களைத் திசை திருப்ப முயன்றுள்ளனர்.
ஜகாத் பற்றிய நமது கருத்தை கடந்த ஐந்து ஆண்டுகளாக நாம் கூறி வருகிறோம். அவர்கள் நம்மோடு இணைந்திருந்த காலகட்டத்தில் அதற்கு எதிராக வாய் திறக்கவில்லை. எதிர்த்ததில்லை. தங்களோடு சேர்ந்திருக்கும் வரை சரியாகத் தெரிந்த ஒரு விஷயம் பிரிந்த பின்னர் தவறாகத் தெரிகிறது என்றால் இவர்களின் நோக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.
அந்தப் பிரச்சனை பற்றியும் நட்பு முறையில் கருத்துப் பரிமாற்றம் செய்து நாங்கள் கூறுவது தவறு என்பதை நிரூபித்தால் அதை ஏற்கத் தயார் என்று தொடர்ந்து கூறி வருகிறோம். அந்த அழைப்பு இன்றளவும் உயிருடன் உள்ளதால் அதை அவர்கள் ஏற்றுக் கொள்ள முன்வர வேண்டும் என்பது தான் அதற்கு நாம் அளிக்கும் பதில்.
15 ரூபாய் மதிப்பில் ஜகாத் நூல்
அடுத்து ஏழு ரூபாய் மதிப்புடைய ஏகத்துவம் இதழில் வெளியான ஜகாத் பற்றிய ஆய்வை 15 ரூபாய் மதிப்பில் நூலாக பீ.ஜே வெளியிட்டார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இதுவும் எடுத்துக் கொண்ட பிரச்சனையுடன் தொடர்பில்லாதது.
ஏகத்துவம் மாத இதழின் பேப்பர் வேறு! புத்தகத்தின் பேப்பர் வேறு!
இரண்டின் முகப்பு அட்டைகளும் வேறு!
இந்த மாதம் எவ்வளவு விற்பனையாகுமோ அந்த அளவிற்கு மாத்திரம் ஏகத்துவம் அச்சிடப்படும். புத்தகங்கள் ஆண்டுக்கணக்கில் பாதுகாத்து விற்கப்படும். வாடகை, ஊதியம் உள்ளிட்ட செலவுகள் இதற்காக ஆகும் என்பதால் மாத இதழுக்கும், புத்தகங்களுக்கும் விலை வித்தியாசம் இருக்கும். ஆறு ரூபாய்க்குக் கிடைக்கும் குமுதம் இதழ் அதே அளவு பக்கங்களில் புத்தக வடிவம் பெறும் போது 30 ரூபாய்க்கு விற்கப்படுவது இதனால்தான்.
தமுமுகவின் தலைவர் முகஸ்துதி பற்றி ஒரு புத்தகம் வெளியிட்டார். 96 பக்கங்கள் கொண்ட அந்த நூலில் விலை 25. ஆனால், அதே நீள, அகலத்தில் 280 பக்கங்கள் தவ்ஹீத் ஜமாஅத் வெளியிட்ட இஸ்லாமிய அடிப்படைக் கல்வி என்ற நூலின் விலை 50 ரூபாய் தான்.
கொள்ளை லாபம் வைத்து புத்தக விலை நிர்ணயம் செய்வதில் முதலிடத்தில் இருக்கும் ஜவாஹிருல்லா இப்படி புலம்பியிருப்பது தான் ஆச்சரியம்.
அவர் முகஸ்துதி பற்றி புத்தகம் வெளியிட்டு ஓராண்டுக்குப் பின்தான் இஸ்லாமிய அடிப்படைக் கல்வி வெளியிட்டோம். ஒரு ஆண்டில் காகிதத்தின் விலை அதிகரித்திருந்தும் 280 பக்கங்களுக்கு நாம் நிர்ணயித்தது, 50 ரூபாய் தான். அந்தக் கணக்கின்படி அவர் 16 ரூபாய் தான் தனது புத்தகத்துக்கு விலை நிர்ணயம் செய்திருக்க வேண்டும்.
ஒரு சந்தேகமும் விளக்கமும்
மேலப்பாளையம் பழ்லுல் இலாஹி என்பரை முபாஹலாவுக்கோ, விவாதத்துக்கோ ஒப்பந்தம் செய்ய அழைத்து நீங்கள் தானே மண்டபத்தையும், நாளையும் முடிவு செய்தீர்கள். அதுபோல் தான் இதுவும் என்று சிலர் விவரம் புரியாமல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இதற்கும் நாம் எடுத்துக் கொண்ட பிரச்சனைக்கும் எள்ளளவும் சம்பந்தமில்லை.
* அது, பழ்லுல் இலாஹி, ஜைனுல் ஆபிதீன் ஆகிய இருதரப்பு மட்டுமே சம்பந்தப்பட்ட விவகாரம்.
நம் இருவரையும் மூன்றாவது தரப்பு விசாரிக்க வேண்டும் என்பது இப்போதுள்ள நிலை.
அதாவது முடிவு எடுக்கும் அதிகாரம் இரண்டு தரப்புக்கும் இல்லை. நடுவருக்கே உள்ளது என்ற நிலையில் இரண்டு தரப்பில் யாரும் முடிவு எடுக்க முடியாது.
நடுவர் நியமிக்கப்படாத விஷயங்களில் சம்பந்தப்பட்ட இருவர் முடிவு எடுக்க அதிகாரம் பெற்றுள்ளனர்.
அந்த நிலையில் கூட ஒருதலைப் பட்சமாக நாளையும், இடத்தையும் அறிவிப்பதற்கு ஏற்கத் தக்க ஏராளமான காரணங்கள் இருக்க வேண்டும். பழ்லுல் இலாஹியைப் பொருத்தவரை ஏற்கத்தக்க காரணங்கள் இருந்தன.
நமக்கு எதிராக பழ்லுல் இலாஹி, தொடர்ந்து அவதூறுப் பிரசுரங்களை வெளியிட்டு வந்தார். அவரை நேரடி விவாதத்துக்கு தொலைபேசி மூலம் துபை சென்ற போது அழைத்தோம். அவர் ஏற்க மறுத்தார். எனவே தான் ஒருதலைப்பட்சமாக நாளையும், இடத்தையும் அறிவித்தோம்.
வேறு சில இயக்கங்களுடன் விவாத ஒப்பந்தம் செய்வதற்கான நாளையும், இடத்தையும் நாமே அறிவித்துள்ளோம். மேற்கண்ட அந்த இயக்கங்கள் நீங்களே இடத்தையும் நாளையும் முடிவு செய்யுங்கள் என்று நமது பொறுப்பில் விட்டதன் அடிப்படையில் அவ்வாறு முடிவு செய்துள்ளோம்.
இடத்தையும், நாளையும் முடிவு செய்யுங்கள் என்று நாம் பொறுப்பு ஒப்படைக்காத நிலையில், நாமே அழைப்பு விட்டுள்ள நிலையில், நடுவர்கள் முன்னிலையில் வாதிகளாகவும், பிரதிவாதிகளாகவும் தமுமுக நிற்க வேண்டிய நிலையில் தன்னிச்சையாக நாளையும், இடத்தையும் ஒருதலைப்பட்சமாக அறிவித்திருப்பது பின்வாங்கி ஓடுவதற்கான தந்திரம் தவிர வேறில்லை.
பதிவுத்தபால்
நாம் வெளியிட்ட பகிரங்க அறைகூவலைப் பதிவுத் தபால் மூலம் தமுமுக தலைமையின் அலுவலக முகவரிக்கு அனுப்பினோம். அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டதற்காக ஒப்புகைக் சீட்டும் நமக்கு கிடைத்துவிட்டது.
ஆனால், தமுமுக தலைமை நமது முகவரிக்கு நேரடியாக தங்கள் நிலைபாட்டைத் தெரிவிக்கும் வகையில் தபால் எதுவும் இன்றுவரை வரவில்லை.
முகவரி இல்லை
நமது பகிரங்க அழைப்பில் கையெழுத்து இல்லை என்றும் துண்டுப் பிரசுரத்தில் அச்சகத்தின் பெயர் இல்லை என்றும் தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர். ஆனால், அவர்களின் அறிக்கையிலும் கையெழுத்து இல்லை. அவர்கள் வெளியிட்ட துண்டுப்பிரசுரத்திலும் அச்சகத்தின் பெயர் இல்லை. முரண்பாடுகளின் மொத்த உருவம் தமுமுக என்று நாம் கூறி வருவதற்கு மற்றொரு சான்று இது.
(உணர்வு உரிமை 10 : குரல் 13, டிசம்பர் 02 – 08, 2005. பக்கம் 4 மற்றும் 21 )
நாம் பொது விசாரணைக்கு அழைத்தால் அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் எப்படியெல்லாம் சம்மந்தமில்லாமல் உளறியுள்ளனர் என்பதை இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.
எப்படியும் இந்தப் பொது விசாரணை நடக்க வேண்டும் என்பதற்காக தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் என்னென்ன முயற்சிகள் எடுக்கப்பட்டன என்ற விபரத்தையும் உணர்வு இதழில் நாம் வெளியிட்டோம். அந்த அறிவிப்பு இது தான்:
இறைவனின் திருப்பெயரால்…
அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும்…
தவ்ஹீத் ஜமாஅத் செய்த முன்முயற்சிகள்
விசாரணைக் குழுவாக இருந்து எங்கள் கணக்குகளைச் சரிபார்த்து சமுதாயத்துக்கு அறிவியுங்கள் என்று முன்வரக் கடமைப்பட்ட தமுமுக பின்வாங்கிக் கொண்டது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலப் பொது செயலாளர் எஸ்.எம். பாக்கர்,
மாநிலச் செயலாளர்கள் கோவை ஜாபர்,
எம்.ஐ. முஹம்மது முனீர்
ஆகியோர் கொண்ட குழு
முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் டாக்டர் சையத் சத்தார் அவர்களையும்,
தேசிய லீக் தலைவர் கோனிகா எம். பஷீர் அஹமது அவர்களையும்,
ஜமாஅத்தே இஸ்லாமியின் செயலாளர் நஸீர், துணைத் தலைவர் ரஹீம் மற்றும் சிக்கந்தர் ஆகியோரையும்,
மனித நீதிப் பாசறையின் தலைவர் குலாம் முஹம்மது அவர்களையும்,
இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகத்தின் சார்பில் அ. முஹம்மது கான் பாகவி அவர்களையும்
சந்தித்தனர்.
ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மதுரையில் இருந்ததால் அவர்களை நேரில் சந்திக்க இயலவில்லை. கடிதம் மூலம் அழைப்பு விடப்பட்டது. ஏழைகள் சம்பந்தப்பட்ட நிதி விவாகரத்தில் நீங்கள் தலையிட்டு விசாரித்து நீதி செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அனைவருமே தமுமுக அழைப்பு விடுத்த இடத்துக்கு தாங்கள் வருவது நியாயமற்றது என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். நடுவர்கள் தானே அந்த முடிவை எடுக்க வேண்டும் எனவும் கூறினார்கள்.
நடுவார்களாகிய நீங்கள் அழைக்கும் நாளில், அழைக்கும் இடத்துக்கு நாங்கள் வருகிறோம். மூன்று கணக்குகள் பற்றி முழு விபரங்களையும் தருகிறோம். தேவையான எல்லா ஒத்துழைப்பையும் வழங்குகிறோம் என்று தெரிவித்தோம்.
அப்படியானால் தாங்கள் அனைவரும் கூடி திங்கட்கிழமை அன்று முடிவை அறிவிப்பதாகக் கூறினார்கள். அதன்படி அவர்களின் முடிவுகளை எழுத்து மூலம் தெரிவித்துள்ளனர்.
(உணர்வு உரிமை 10 : குரல் 13, டிசம்பர் 02 – 08, 2005. பக்கம் 2)
இதுவரை கூறப்பட்ட விபரங்களில் இருந்து தமுமுகவினர் சுனாமிப் பணத்தைச் சுருட்டியுள்ளனர் என்பது உறுதியாகிறது. இதை விட வலிமையான ஆதாரங்களுடன் இவர்களின் சுனாமித்திருட்டு எப்படி நிரூபிக்கப்பட்டது என்பதை அடுத்த தொடரில் தெரிவிக்கிறேன். இன்ஷா அல்லாஹ்
தொடர் 2
சுனாமி மற்றும் ஃபித்ரா வசூல் தொடர்பாக பொது விசாரணைக்குத் தயார் என்று நாம் அறைகூவல் விட்ட போது அதை தமுமுக ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த விவகாரம் நடக்கும் போது நடுவர்களாக நாம் குறிப்பிட்ட ஆறு இயக்கத்தவர்களும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு நெருக்கமானவர்கள் அல்லர். மாறாக தமுமுகவுக்குத் தான் நெருக்கமாக இருந்தனர். தமுமுகவோடு ஒரே மேடையில் பல ஆலோசனைக் கூட்டங்களில் கலந்து கொண்டவர்கள். தவ்ஹீத் ஜமாஅத்துடன் இவர்களுக்கு நெருக்கமான உறவு கிடையாது. மாறாக தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக அனைவரும் கூடி ஒரு முடிவு எடுக்கும் போதெல்லாம் இந்த ஆறு இயக்கத்தினரும் கலந்து கொண்டதுண்டு.
இன்றைக்கும் கூட அது தான் நிலைமை. அப்படி இருந்தும் நம்மிடம் எந்த தில்லுமுல்லுகளும், ஒளிவு மறைவும் இல்லாததால் நாம் இவர்களை நடுவர்களாக ஏற்றுக் கொண்டோம். ஆனால் தமுமுகவினர் சுனாமி நிதியிலும் பித்ராவிலும் மோசடி செய்த காரணத்தால் அவர்கள் விசாரணைக்கு உடன்படவில்லை என்பதை மேற்கண்ட விபரங்களில் இருந்து நீங்கள் அறிந்து கொள்ள முடியும்.
இதன் பின்னர் சில சகோதரர்கள் இது போல் நாம் சவால் விட்டதைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் தனிப்பட்ட காழ்ப்புணர்வு காரணமாக நாம் விமர்சனம் செய்வதாகப் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர். இது குறித்து உணர்வு ஏட்டிலும் ஒரு சகோதரர் கேள்வி கேட்டிருந்தார். அந்தக் கேள்வியும் அதற்கு நாம் அளித்த பதிலும் வருமாறு:
கேள்வி : நமக்கிடையே உள்ள பிரச்சனைகளைப் பற்றி துண்டுப் பிரசுரங்கள் வெளியிடுவது சரிதானா?
தி. அப்துல் மாலிக், திருச்சி.
பதில் : ஃபித்ரா, சுனாமி நிவாரண நிதி பற்றி நாம் வெளியிட்ட பிரசுரத்தின் அடிப்படையில் இக்கேள்வியை எழுப்பியுள்ளீர்கள்.
ஃபித்ரா என்பது இரண்டு இயக்கங்களுக்கிடையே உள்ள பிரச்சனை அல்ல. அது மார்க்கத்தின் ஓர் அம்சமாகும். ஏழைகள் சம்பந்தப்பட்ட பொருளாதராரப் பிரச்சனையாகும்.
ஒவ்வொரு முஸ்லிமும் தான் கொடுத்த ஃபித்ரா தொகை ஏழைகளைச் சென்றடையும் என்ற நம்பிக்கையில் தான் இயக்கங்களின் பொறுப்பாளர்களிடம் ஒப்படைக்கிறான். அந்தப் பணம் ஏழைகளைச் சென்றடைந்ததா என்பதைக் கண்காணிக்கும் கடமை எங்களுக்கு மட்டுமின்றி உங்களுக்கும் உண்டு.
அங்கே இவ்வளவு கொடுத்தோம். இங்கே இவ்வளவு கொடுத்தோம் என்று செய்திகள் வெளியிடுவது போதுமானதல்ல. எந்தக் கணக்காக இருந்தாலும் வரவு என்ன? எந்த வகையில் வந்தது என்பதை விபரமாக வெளியிட வேண்டும். அப்படி வந்த வரவு ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டதா என்ற செலவையும் வெளியிட வேண்டும்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை தலைமைக்கு வந்து சேர்ந்தது எவ்வளவு என்ற விபரப் பட்டியலையும் வெளியிட்டோம்.
அவை எந்தெந்த ஊர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது என்ற செலவுப் பட்டியலையும் வெளியிட்டோம்.
இது போல் ஃபித்ரா திரட்டிய மற்ற இயக்கங்களும் தாங்கள் திரட்டிய தொகை எவ்வளவு? அவை முழுமையாக விநியோகம் செய்யப்பட்டதா என்ற கணக்கை வெளியிடச் சொல்வது நமக்கிடையே உள்ள பிரச்சனையா?
இதுபோல் சுனாமிப் பேரழிவின் போது உள்ளம் உருகிய மக்கள் வாரி வாரி வழங்கினார்கள். தாங்கள் வழங்கிய ஒவ்வொரு பைசாவும் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களைச் சென்றடையும் என்ற நம்பிக்கையில் குடும்பத்தாருக்குக் கூட பணம் அனுப்பாமல் ஒரு மாத ஊதியத்தை வழங்கியவர்களும் இருந்தனர்.
சுனாமி நிதி திரட்டியவர்கள் வரவுகளை மட்டும் பட்டியல் போட்டு வெளியிட்டனர். சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கிய விபரத்தை வெளியிடவில்லை.
அதாவது பித்ராவில் வரவு விஷயம் வெளியிடப்படவில்லை.
சுனாமியில் செலவு விபரம் வெளியிடப்படவில்லை.
இதை வற்புறுத்துவது நமக்கிடையே உள்ள பிரச்சனையா?
இதைத் தட்டிக் கேட்கும் கடமை உங்களுக்கும் உள்ளது. ஒவ்வொருவருக்கும் உள்ளது.
இதை வெளியிடாதவரை நமது நடவடிக்கை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
( உணர்வு உரிமை 10 : குரல் 13, டிசம்பர் 02 – 08, 2005. பக்கம் 15 )
சுனாமி மற்றும் ஃபித்ராவில் தமுமுக ஊழல் செய்து விட்டது; அதை நாங்கள் நடுவர்கள் முன்னிலையில் நிரூபிப்போம் என்று நாம் விட்ட அறைகூவல் இன்றைக்கு தமுமுகவுக்கு முட்டுக் கொடுக்கும் புதுசுகளுக்கு தெரியாது. ஆனால் தமுமுகவுக்காக அன்றைக்கு உழைத்த பல உண்மையான சகோதரர்கள் எந்த அளவுக்கு மனம் நொந்தார்கள் என்பதையும் அப்போதைய உணர்வில் நாம் வெளியிட்டோம்.
அந்த வகையில் நாம் வெளியிட்ட ஒரு கடிதத்தைப் பாருங்கள்!
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்
தமுமுக தலைமை நிர்வாகிகள் பொது விசாரணைக்கு தாங்கள் தயராக இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த சில தந்திரங்களைக் கையாண்டு அதன் மூலம் தங்களை நம்புகின்ற மக்களைத் தக்க வைக்கலாம் என்று எண்ணுகின்றனர்.
நேர்மையையும் நியாயங்களையும் விரும்புகின்றவர்கள் நிச்சயம் இந்தத் தந்திரங்களையும் சரியாகப் புரிந்து கொள்வார்கள்.
நேர்மையை விட இயக்க வெறியை மட்டுமே பார்ப்பவர்கள் மட்டும் தான் மிஞ்சுவார்கள் என்பதற்கு சேலம் மாநகர தமுமுக செயலாளர் டி.முஹம்மது ஹுஸைன் எழுதிய மடலை ஒரு சோற்றுப் பதமாக வெளியிடுகிறோம்.
தமுமுக ஊழல் இயக்கமா?
1995 களில் தமிழகத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தொடங்கப் பட்ட போது தமிழக முஸ்லிம்களில் மிகக் குறைவானவர்கள் இவ்வியக்கத்தை ஏற்றுக் கொண்டனர். காரணம் தமுமுக மீது சுமத்தப்பட்ட தீவிரவாத முத்திரையும், “நஜாத் இயக்கம்” என்கிற ஏளனமுமே! ஆனால் இறைவனின் கருணையினால் இன்று பெரும்பான்மை முஸ்லிம்கள் திரும்பிப் பார்க்கும் வகையில் “தமுமுக” உருவெடுத்துள்ளது. இதற்கு காரணம் இந்த இயக்கம் கடந்து வந்த பாதை, தனித்தன்மை பணிகள், அதிகார வர்க்கத்திற்கு அஞ்சாத துணிவு, தன்னரிகல்லா எளிமையான தலைவர்கள், இவை அனைத்திற்கும் மேல் அல்லாஹ்விற்காக செய்கிறோம் என்கிற தூய எண்ணம்.
தமுமுகவின் ஒவ்வொரு அடிமட்ட தொண்டனுக்கும் இந்த உணர்வு உள்ளதாலேயே எத்தனை இன்னல்கள் வந்தாலும் சகித்துக் கொண்டு சமுதாய பணிகள் செய்து வருகிறோம்.
மற்ற இயக்கங்களை விட தமுமுகவினுடைய தனித்தன்மைகளைச் சொல்லி பிரச்சாரம் செய்து தான் நாம் மக்களைச் சந்திக்கிறோம். சமுதாய மக்கள் இதன் காரணமாகவே நம் மீது நம்பிக்கை வைத்து தங்களுடைய பொருளாதாரத்தைக் கொடுக்கின்றனர். ஒன்றுபட்ட தமுமுகவாக இருந்த போது ஒரு புறம் ஏகத்துவ பிரச்சாரப் பணிகளையும் மறுபுறம் சமுதாயப் பணிகளையும் செய்து வந்துள்ளோம். இடையில் சகோ. பி.ஜே உள்ளிட்ட சில சகோதரர்கள் தமுமுகவை விட்டு விலகிய பின்பும், சமுதாய நலன் கருதி தமுமுகவில் நிலைத்து இருந்துள்ளோம். இவையெல்லாம் தமுமுக தலைமை நிர்வாகிகள் மீது நாம் கொண்ட நம்பிக்கையே!
ஆனால் இன்றைக்கு பிரிந்த சகோதரர் பி.ஜே அவர்கள் தமுமுக மீது எழுப்பியுள்ள “ஊழல் குற்றச்சாட்டுகள்” சாதாரணமானது அல்ல. பி.ஜே, மற்ற அமைப்புகள் மீது தொடுக்கும் விமர்சனங்களும், தமுமுக மீது கூறியுள்ள குற்றச்சாட்டையும் ஒன்றாக எடுத்துக் கொள்ளக் கூடாது.
இன்றைக்கும் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் தமுமுகவைப் பற்றி மக்களிடம் தவறான பிரச்சாரத்தைச் செய்து வருகின்றனர். என்னவெனில், “கோவை கலவரத்தில் நடந்த காட்சிகளை வீடியோ தொகுப்பாகத் திரட்டி சுருட்டி விட்டனர்” என்று பேசி வருகின்றனர். இவை நமக்கு ஒன்றும் பொருட்டல்ல….
ஆனால் சகோதரர் பி.ஜேவைப் பொறுத்த வரை பதில் கூற வேண்டிய பொறுப்பு நிச்சயமாக நமக்கு (தமுமுக தலைமைக்கு) உண்டு. காரணம் பி.ஜே நம்மில் இருந்து விலகிச் சென்றவர் என்ற காரணத்தை வைத்துக் கொண்டு நம் மீது அவதூறு பரப்புபவர்களுக்கு இச்செய்தி ”வெறும் வாய்க்கு அவல்” ஆகி உள்ளது.
தமுமுகவினுடைய ஆரம்பகால தொண்டனாகவும், சேலம் மாவட்டத்தில் அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து நிர்வாகத்தில் இருந்து வருகின்ற நான் தற்போது மாநகர செயலாளர் ஆக இருக்கும் என்னுடைய ஓர் வேண்டுகோள் :
தமுமுக மாநில நிர்வாகிகளுக்கு :
தமுமுகவினருக்கு பகிரங்க அறைகூவலை விடுத்த சகோ. பி.ஜே அவர்களுக்கு “இறைவனின் துணைக் கொண்டு சவாலை ஏற்கிறோம்” என்று அறிவித்த மாநில நிர்வாகிகள் பாராட்டுக்குரியவர்கள். ஆனால் தமுமுக மாநில தமைமை எதிர் தரப்பாரிடம்….
ஒன்றரை மணிநேரம் காத்திருப்போம், 2 மணி நேரம் காத்திருப்போம் வந்து விட வேண்டும் என்பதும்….
சகோ. பி.ஜே விற்கு பதில் கூறத் தேவையில்லை. ஆனால் முதலும் இது தான் கடைசியும் இது தான் என்பதும்…
“நடுநிலையான பொது நபர்கள்” அடங்கிய குழுவை சகோ. பி.ஜே தான் ஏற்படுத்த வேண்டும் என்பதும்….
தமுமுகவினர் நழுவிச் செல்கிறார்களோ! என்பதாக அமைந்துள்ளது.
மாறாக….
சகோ. பி.ஜேயின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்பதில் நாம் உறுதியோடு இருப்பின் அதை பட்டவர்த்தமாக வெளிப்படுத்த நமக்குக் கிடைத்த வாய்ப்பை முழுமையாக பயன்படுத்த வேண்டும். இதற்காக ஓரிரு நாட்கள் ஆனாலும் கவலைப்பட தேவையில்லை.
“பொது நபர்கள்” அடங்கிய குழுவை அமர்த்துவதற்கு சகோ. பி.ஜேயை விட நமக்கு அதிக ஆர்வம் ஏற்பட வேண்டும். நமக்கு விடப்பட்ட சவாலை எதிர் கொள்ள வேண்டும்.
இனி ஒரு முறை சகோ. பி.ஜே. தமுமுவைப் பற்றி விமர்சனம் செய்ய வாய்ப்பு இல்லாமல் செய்ய இதுவே தருணமாகும்.
tntj மாநில தலைவர் சகோ. பி.ஜே அவர்களுக்கு :
தமிழக முஸ்லிம் சமுதாயத்தின் மீது உண்மையான கவலை இருந்து தவறான ஓர் இயக்கத்தில் இளைஞர்கள் இருக்கிறார்கள் என்று கருதி தாங்கள் தமுமுக மீது பகிரங்கமாக ஊழல் குற்றச்சாட்டை கூறி இருப்பின் அதற்கான ஆதாரத்துடன் தாங்கள், எவ்வித ஒளிவு மறைவும் இன்றி சாமான்ய தொண்டனும் புரியும் விதத்தில் சாட்சிகளுடன் நிரூபிக்க வேண்டும். அவ்வாறு தமுமுக ஊழல் இயக்கம் தான் என்பதை நிரூபித்தால் நிச்சயமாக தமுமுக வளர்க்கப் பாடுபட்ட நாம் தமுமுகவை புறந்தள்ள தாமதிக்க மாட்டோம். ஒவ்வொரு தமுமுக தொண்டனும் tntj தொண்டனும் இந்த விசயங்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டு வரும் வேளையில் உங்களிடம் உண்மை இல்லை என்று தெரிய வந்தால் “தூய இஸ்லத்தைப் பற்றி பேசவோ, சமுதாய மக்கள் பற்றி பேசவோ செய்கிற தகுதியை அறவே இழக்கிறீர்கள்” என்பதை கவனத்தில் கொள்வீராக!
தமுமுகவினருக்கும், தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கும் இடையே நடைபெறும் “இப்பனிப் போர்” முற்றுப் பெறவேண்டும். சமுதாயப் பணிகள் செய்யக் கூடிய நாம் ஒவ்வொரு சமுதாய மக்களின் வீட்டுப் படியேறி சென்று சமுதாய பணிகளுக்கு நிதியைத் திரட்டுகிறோம். அவர்களுடைய கேள்விகளுக்கு பதில் கூற வேண்டிய பொறுப்பு மாநில நிர்வாகிகளை விட நம்மை (என்னைப் ) போன்றவர்களுக்கு அதிகமாக உள்ளதாகக் கருதுகிறோம்.
இறுதியாக….
மேற்கண்ட விவகாரத்தின் உண்மை நிலை தெரியும் வரை…. சேலம் மக்களின் தமுமுக செயலாளராக பொறுப்பில் இருக்கும் நான் என்னுடைய உள்ளார்ந்த முடிவின்படி இன்றைய தினத்திலிருந்து “செயலாளர்” பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன். “இராஜினாமா” செய்கிறேன். இன்ஷா அல்லாஹ்…
தமுமுக தலைமையின் தூய்மை வெளிப்படுமாயின் இயக்கத்தின் அடிப்படை உறுப்பினராக பணியாற்ற கடடைப்பட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறúன்.
அன்புடன்
டி.முஹம்மது ஹுஸைன்
“(உணர்வு உரிமை 10 : குரல் 13, டிசம்பர் 02 – 08, 2005. பக்கம் 22)
தமுமுகவின் கடந்த கால செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு அதில் ஈடுபாடு கொண்டு பொறுப்பும் வகித்தவருக்கே தமுமுக செய்யும் கள்ளத்தனமும் பொது விசாரணையில் இருந்து ஓட்டம் பிடித்ததும் புரிந்து போனதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
அது மட்டுமின்றி வெளிநாடுகளில் தமுமுகவுக்காக நிதி திரட்டி வழங்கிய சகோதரர்கள் எத்தகைய மன உளைச்சலுக்கு ஆளானார்கள்? தமுமுக மோசடி செய்தது எந்த அளவுக்கு அவர்களைப் பாதித்தது என்பதை ஒரு தமுமுக பொறுப்பாளரான மார்க்க அறிஞரின் கடிதம் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.
அந்தக் கடிதம் இதோ:
இதில் இருந்து பொது விசாரணைக்கு தமுமுகவினர் முன்வராமல் பாரதூரமான குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து அலட்சியமாக நடந்து கொண்டது தமுமுகவில் உள்ள நன்மக்களை எந்த அளவுக்கு பாதித்தது என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம். இந்த வரலாறூகள் தெரியாத சில சில்லறைகள் நம்மைப் பார்த்து சுனாமி கணக்கு குறித்து கேள்வி கேட்கின்றனர், அனைத்து கேள்விகளுக்கும் நம்மை உட்படுத்திக் கொண்டு விசாரணைக்கு தயார் என்று நாம் பகிரங்கமாக ஒப்புக் கொண்டு அழைத்த போது பின்னங்கால் பிடரியில் பட ஓட்டம் எடுத்த தமுமுகவினர், இன்றைக்கு சில சில்லறைகளைக் கிளப்பி விட்டுள்ளனர். அனைத்துக்கும் தக்க பதில் அளிக்கப்பட்டு விட்டது. இனியும் அளிக்கப்படும் என்பதை உறுதி படக் கூறிக் கொள்கிறேன். இன்ஷா அல்லாஹ்.
பொருளாதார மோசடி தொடர்பாக என்னைப் பற்றியோ நான் பொறுப்பில் இருந்த, இருக்கும் ஜமாஅத் பற்றியோ எவனும் எந்தக் குற்றச்சாட்டையும் கூற முடியாது என்பதை திட்டவட்டமாக கூறிக் கொள்கிறேன்.
நடுவர் குழுவினர் பொது விசாரணைக்கு அழைப்பு விட்ட போது அதற்கு நான் அளித்த பதிலில் இருந்து தவ்ஹீத் ஜமாஅத் பொருளாதார விஷயத்தில் தூய்மையானது என்பதை அறிந்து கொள்ள முடியும்.
சுனாமித் திருடர்களின் துரோக வரலாறு 3
நடுவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு தன்னையும் உட்படுத்தி தமுமுகவையும் உட்படுத்த வேண்டும் என்று பிஜேயாகிய நான் வைத்த கோரிக்கையை ஏற்பது போல் நடித்த தமுமுக கடைசி நேரத்தில் நடுவர்கள் முன்னிலையில் விசாரணக்கு வராமல் ஓட்டம் பிடித்தது. அந்த இயக்கத்தில் உள்ள அப்பாவிகளை ஏமாற்றுவதற்காக தானே ஒரு மண்டபம் பிடித்து கணக்கு காட்டும் நிகழ்ச்சி என்ற பெயரில் நாடகம் நடத்தியது. கணக்கு காட்டும் நாடகத்திலும் அங்கே காட்டிய கணக்கிலும் உள்ள கள்ளத் தனங்களை அன்றைக்கே நாம் அம்பலப்படுத்தினோம். ஆனாலும் இதெல்லாம் மக்களுக்குத் தெரியாது என்று நினைத்துக் கொண்டு சிலர் தமுமுக கணக்கு காட்டிய வைபவத்தைப் பரப்பி மீண்டும் மக்களை ஏமாற்ற முயல்கின்றனர்.
நடுவர்களாக தங்கள் பணியை ஆற்றிய ஆறு இயக்கத்தினர் செய்த எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. தவ்ஹீத் ஜமாஅத் தனது கணக்குகளை முழுமையாக விசாரணைக்கு உட்படுத்திட தயாராக இருந்தும் தமுமுகவினர் இதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. தமுமுக ஓட்டம் பிடித்தது என்பதை இறுதியாக நடுவர்கள் சமுதாயத்துகு வெளியிட்ட அறிக்கையில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர் ரஹீம்
முஸ்லிம் அமைப்புகளின் சமுதாய சமாதானக்குழு
நாள்: 8/12/2005
பெறுநர்:
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழகம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தலைவர்- பொதுச்செயலாளர் தலைவர்- பொதுச்செயலாளர்
மற்றும் நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகள்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
முஸ்லிம் அமைப்புகளின் சமுதாய சமாதானக் குழுவின் இரண்டாவது ஆலோசனைக் கூட்டம் 7/12/2005 அன்று பிற்பகல் 4 மணியளவில் மண்ணடி , ராமசாமி தெரு, கிரீன் பேஸலில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் மாநிலத் தலைவர் மௌலவி O.M அப்துல் காதர் பாகவி ஹஜ்ரத் கிப்லா அவர்கள் தலைமையில் கூடியது.
தீர்மான வடிவத்தை ஜமா அத்-இ-இஸ்லாமி தமிழகத் தலைவர் ஜனாப்.எச்.அப்துர் ரஹீம் சாஹிப் அவர்கள் முன்மொழிந்தார்கள். இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகச் செயலாளர் மௌலவி ஜி,எம். தர்வேஸ் ரஷாதி அவர்கள் வழிமொழிந்தார்கள்.
கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானம் -1::
சமாதானக் குழு 28-11-2005 அன்று த.மு.மு.க மற்றும் தவ்ஹீது ஜமாஅத் இருவருக்கும் 10-12-2005 அன்று விசாரணைக்கு வர வேண்டும் என்றும் அதற்கான ஒப்புதல், உறுதிமொழிக் கடிதத்தை மூன்று தினங்களுக்கு முன் அளிக்க வேண்டும் என கடிதம் அனுப்பியது.
அதனடிப்படையில் தவ்ஹீத் ஜமாஅத் எழுத்து மூலம் ஒப்புதல் தெரிவித்து 3-12-2005 அன்று கடிதம் கொடுத்து விட்டார்கள்.
06-12-2005 இரவு வரை த.மு.மு.கவிடமிருந்து கடிதம் எதுவும் வரவில்லை.
இந்தத் தகவலை சமாதானக்குழு சம்பந்தப்பட்டவர்களுக்கும் சமுதாயத்திற்கும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம்- 2:
சமாதானக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் அல்ஹாஜ் எம்.பஷீர் அஹமது அவர்கள் இத்தகவலை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்து விட வேண்டும் என்று இக்குழு கேட்டுக்கொள்கிறது.
எனவே சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிப்பது யாதெனில்,
சமாதானக்குழு கடந்த 26-11-2005 அன்று ஏகமனதாக தீர்மானித்து பொது விசாரனை குறித்து இருசாரருக்கும் அனுப்பிய கடிதத்தை ஒரு சாரர் மட்டும் (தவ்ஹீது ஜமாஅத்) ஒப்புக்கொண்டுள்ள நிலையில் , த.மு.மு.க விடமிருந்து இதுவரை ஒப்புதல் கடிதம் வராத காரணத்தால், 10-12-2005 அன்று சென்னை பிரசிடென்சி ஹோட்டலில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த சமாதானக் குழுவின் நடுவர்கள் அமர்வு நடைபெறாது என்பதை இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்ஷா அல்லாஹ் எல்லாம் வல்ல இறைவன் நம்முடைய எண்ணங்களையும் செயல்களையும் தூய்மையானதாகவும் வாய்மையானதாகவும் ஆக்கிவைப்பானாக ஆமீன்!
நன்றி! வஸ்ஸலாம்.
இப்படிக்கு
சமாதானக்குழுவினரின்
சார்பாக ஒருங்கிணைப்பாளர்
அல்ஹாஜ் எம்.பஷீர் அஹமது
மாநிலத் தலைவர்
இந்திய தேசியலீக்
நடுவர் குழுவின் விசாரணக்கு வராமல் தமுமுக ஓட்டம் பிடித்தது குறித்து அப்போது உணர்வு (உணர்வு, உரிமை 10 : குரல் 15, டிசம்பர் 16 – 22, 2005, பக்கம் : 13) இதழில் நாம் செய்த விமர்சனம்
நடுவர்கள் அழைப்பை ஏற்காது தமுமுக ஓட்டம்
ஃபித்ரா நிதியை 2004, 2005 ஆகிய இரண்டு ஆண்டுகள் திரட்டிய தமுமுகவினர் தாங்கள் எவ்வளவு திரட்டினோம் என்ற விபரங்களை இன்று வரை வெளியிடவில்லை.
சுனாமி நிவாரண நிதியையும் தமுமுகவினர் திரட்டினார்கள். எவ்வளவு திரட்டினோம் என்பதை விலாவாரியாக வெளியிட்ட தமுமுகவினர் அந்த நிதியை என்ன செய்தோம் என்பதை இன்று வரை வெளியிடவில்லை.
இந்த நிலையில் அனைத்துக் கணக்குகளையும் முறையாகப் பராமரித்து வரும் டி.என்.டிஜே மீது சுனாமி நிதி பற்றி பினாமி பிரசுரம் வெளியிட்டு அவதூறு பரப்பினார்கள்.
அதன் பிறகு தான் தவ்ஹீத் ஜமாஅத்தும், தமுமுகவும் நடுவர்களின் பொது விசாரணைக்கு முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தோம்.
தமுமுகவினர் சுனாமி நிதியைத் திரட்டும் போது தங்கள் பத்திரிகையில் பின்வருமாறு மக்களுக்கு அறிவிப்புச் செய்தனர்.
இந்த அறிவிப்பில் இரண்டு விஷயங்களை தமுமுகவினர் குறிப்பிட்டனர்.
50 குடும்பங்களுக்கு 75 இலட்சம் செலவில் வீடு கட்டித் தருவோம் என்பது முதலாவது செய்தி.
சமுதாயத்துக்கு அளித்த வாக்குறுதியின்படி 50 குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்திருந்தால் அந்தக் கணக்கை மிக எளிதாகக் காட்டி விடலாம்.
ஐம்பது ரூபாய்க்கு நோட்புக் கொடுத்ததையெல்லாம் கால்பக்கச் செய்தியாக விளம்பரப்படுத்திக் கொள்ளும் தமுமுகவினர் 75 லட்சம் ரூபாய்க்கு வீடுகள் கட்டிக் கொடுத்திருந்தால் அந்த வீடுகள் பெற்றவர்களின் விபரங்களையும், வீடுகளின் பயன்களையும் வெளியிட்டு தங்கள் நேர்மையை நிரூபித்திருக்க முடியும்.
நீங்கள் அனுப்பும் நிதி பற்றிய விபரங்களும் அது செலவு செய்யப்பட்டது குறித்த விபரமும் தொடர்ந்து மக்கள் உரிமையில் பிரசுரமாகும் என்பது அவர்கள் தெரிவித்த இரண்டாவது செய்தி.
அற்பமான ஊதியத்துக்காக பாலை மணலில் வெந்து சாம்பலாகும் நம் சகோதரர்கள் சுனாமியால் ஏற்பட்ட பாதிப்பபைக் கண்டு கலங்கிப் போய் வாரி வாரி வழங்கினார்கள்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நிதியை முறையாகச் சேர்ப்பார்கள், அவர்களின் தேவைகள் பூர்த்தியாகும், அந்த மக்களின் துயரில் பங்கு கொண்டதற்காக மறுமையில் இறைவனிடம் கூலி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அந்த மக்கள் வாரி வழங்கினார்கள்.
வரவுகளை மட்டும் விலாவாரியாக வெளியிட்டவர்கள், பல இதழ்களில் பக்கம் பக்கமாக பட்டியல் போட்டவர்கள் ஐம்பது வரிகளில் 50 வீடுகள் கட்டிக் கொடுத்த விபரங்களை வெளியிடுவதற்கு என்ன தடை?
நிதியளித்தவர்கள் பல முறை வலியுறுத்திய பிறகும் இன்று வரை சுனாமி நிதி எவ்வாறு செலவிடப்பட்டது என்பதை வெளியிட மறுக்கும் மர்மம் என்ன? இதற்காகத் தான் பொது விசாரணை கோரினோம்.
ஆனால், நடுவர்களை இவர்கள் மதிக்கவில்லை. தங்கள் நேர்மையை நிரூபிக்க தங்களுக்குக் கிடைத்த சிறந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
மடியில் கனம் இல்லாவிட்டால் வழியில் பயம் ஏன்?
விசாரணைக்கு முன்பே இவர்களின் நேர்மையின்மையை அம்பலப்படுத்தும் நடுவர்களின் கடிதத்தைப் பாருங்கள். (கட்டத்தில் உள்ளது)
நடுவர் குழுவின் விசாரணையை ஏற்றுக் கொண்டு தவ்ஹீத் ஜமாஅத் அதிகாரபூர்வமாக கடிதம் கொடுத்ததையும், தமுமுக முன் வரவில்லை என்பதையும் நடுவர்கள் தெளிவுபடுத்தி விட்டனர்.
இதற்கு பிறகு பேசாமல் மௌனம் சாதிருத்திருந்தால் கூட , இனிமேல் முளறையாகக் கணக்கை வெளியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பாவது மிஞ்சியிருக்கும்.
ஆனால், இவர்கள் நடத்திய கோமாளிக் கூத்துக்களால் இவர்கள் மேலும் அசிங்கப்பட்டு விட்டார்கள்.
இவர்களே பிடித்த மண்டபத்தில் தங்கள் இயக்கத்தினரைக் கூட்டி வீதியெங்கும் கொடிகளைத் தோரணம் கட்டி கணக்கு காட்டும் நாடகத்தை அரங்கேற்றினார்கள்.
கணக்கை பொது விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பது தான் முக்கிய பிரச்சனை.
இதைச் செய்யாமல் தங்கள் கட்சியினரை அழைத்து வைத்து மொட்டைத் தாத்தன் குட்டையில் விழுந்தான் என்பது போல் வாசித்து விட்டு விபரங்களை நமது அலுவலகத்தில் வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று அற்புதமான (?) முறையில் கணக்கு காட்டி விட்டார்கள்.
முக்கியமான மார்க்கக் கடமையின் பெயரால், நிதி திரட்டி (ஃபித்ரா) அந்தத் தொகை எவ்வளவு? எந்த வகையில் வந்தது? என்ற விபரங்களை வெளியிடாதவர்கள் மற்ற நிதியாதாரங்கள் விஷயத்தில் எப்படி நடப்பார்கள் என்பதை சமுதாயமே புரிந்து கொள்ளட்டும்.
சுனாமியின் பாதிப்பைக் கண்டு கல்நெஞ்சம் படைத்தவர்களும் வாரி வழங்கியிருக்க… அந்த நிதியைப் பற்றியே வாய் திறக்க மறுக்கிறார்கள் என்றால் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாது ஓட்டம் எடுக்கிறார்கள் என்றால் இவர்களை எப்படி நம்பலாம் என்பதை சமுதாயம் புரிந்து கொள்ளட்டும்.
(உணர்வு, உரிமை 10 : குரல் 15, டிசம்பர் 16 – 22, 2005, பக்கம் : 13)
இவர்களே மண்டபம் பிடித்து தனக்குத் தானே கணக்கு காட்டிக் கொண்ட லட்சணத்தை தமுமுகவினர் தமது இணைய தளத்தில் இப்படி எழுதினார்கள்
சுனாமி பேரழிவின் போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டு தமிழக மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம்பெற்ற தமுமுக சமீபகாலமாக தமிழகத்தில் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறது.
இந்நிலையில் தமிழக பொதுநல வரலாற்றில் யாரும் செய்யாத முன்மாதிரியை ஏற்படுத்தியிருக்கிறது தமுமுக! சுனாமி பேரலையின் போது நிவாரண உதவிகளுக்காக பல்வேறு தொண்டு நிறுவனங்களும், அமைப்புகளும் பொதுமக்களிடம் சுனாமி நிவாரண நிதியைத் திரட்டினார்கள். அதுபோல் தமுமுகவும் ரூ.68,36,873.07 நிதியாக திரட்டியது.
இந்நிலையில் திரட்டிய நிதியிலிருந்து இதுவரை எவ்வளவு தொகை செலவிடப்பட்டுள்ளது என்பதையும், மீதியுள்ள தொகையை என்ன செய்யப் போகிறோம் என்பதையும் இன்று 10.12.2005 (சனிக்கிழமை) சென்னை மண்ணடி அங்கப்பன் தெருவில் உள்ள எஸ்.வி.ஆர். (மிலன்) திருமண மண்டபத்தில் திரளாகக் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கையை சமர்பித்தது.
தாங்கள் திரட்டிய நிவாரண நிதி குறித்த விவரங்களையும் வருமானவரித் துறை மற்றும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு சமர்ப்பித்த நிதிநிலை அறிக்கைகளையும் பொதுமக்களைத் திரட்டி அந்நிகழ்வில் தாக்கல் செய்த தமுமுகவின் நடவடிக்கை தமிழக பொதுநல வரலாற்றில் நல்ல முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிகழ்வில் பத்திரிகையாளர் சோலை அவர்கள், பஞ்சமீட்பு இயக்கத்தின் தலைவரும் ஒய்வுப் பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியுமான கருப்பன் ஐ.ஏ.எஸ் அவர்கள், காயிதே மில்லத்தின் பேரன் தாவூத் மியாகான் அவர்கள், சிறுபான்மை கூட்டமைப்பின் செயலாளர் பாதர் சேவியர் இவர்களுடன் வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், தொழிலதிபர்கள் என சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் சிறப்பு பார்வையாளர்களாக கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கான பொதுமக்களும் காலை 11 மணியிலிருந்து மாலை 4 மணி வரை அனைத்து வரவு-செலவு கணக்குகளையும் கவனித்துக் கொண்டிருந்தனர். மத்திய மற்றும் மாநில அரசுகளின் உளவுத்துறையினரும் இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களாக அமர்ந்திருந்தனர்.
வங்கி கணக்குகள், மீதமுள்ள வங்கி இருப்புகள் உள்பட பல ஆவணங்களை டிஜிட்டல் திரையின் வழியாக ஆதாரங்களுடன் பொதுமக்களுக்கு தமுமுக கணக்குகளை சமர்ப்பித்தது.
இடையிடையே பொதுமக்கள் எழுப்பிய ஐயங்களுக்கு அவர்கள் உரிய முறையில் பதிலளித்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் இதுகுறித்து முழு விவரங்களும் தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tmmk.in தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தமுமுக அறிவித்துள்ளது.
சுனாமி நிதி விவர பட்டியல்
வசூலான மொத்த தொகை 68,36,837.07
இதுவரை நிவாரண உதவிகளுக்கு
செலவிட்ட தொகை 33,25,435.25
மீதமுள்ள தொகை 35,11,437.82
இதில் மீதமுள்ள தொகையில் நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் அறிவுரைக்கேற்ப நாகூர் அருகே சுமார் 25 லட்ச ரூபாய் செலவில் அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் பேரிடர் பாதுகாப்பு மையம் கட்டப்பட உள்ளதாகவும், மற்றுமொரு ஐந்து லட்சத்தில் காரைக்காலில் பாதிக்கப்பட்ட மக்களுக்குநிரந்தர பயன்தரும் கட்டமைப்பை மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனையின் அடிப்படையில் தமுமுக விரைவில் பயன்படுத்தும். மீதமுள்ள தொகையில் சுனாமியில் பாதிக்கப்பட்ட பல்வேறு ஊர்களைச் சேர்ந்த மக்களின் மனுக்களை பரிசீலித்து தேவையான உதவிகள் செய்யப் போவதாகவும் தமுமுக அறிவித்துள்ளது.
மேலும், 2004 மற்றும் 2005 ஆண்டுகளில் நோன்பு பெருநாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு தமுமுக சார்பில் வசூல் செய்து வினியோகிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் (ஃபித்ரா) குறித்த நிதிநிலை அறிக்கையும் அக்கூட்டத்தில் வாசிக்கப்பட்டது.
2004ஆம் வருடத்தில் 20,73,940 ரூபாய்க்கும், 2005ஆம் வருடத்தில் 27,69,762 ரூபாய்க்கும் ஃபித்ரா உதவிகள் வழங்கப்பட்டதற்கான விவரங்களையும் மக்கள் மன்றத்தில் சமர்பித்தது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு பார்வையாளர்களாக பங்குகொண்ட தாவூத் மியாகான் மற்றும் கருப்பன் ஐ.ஏ.எஸ். ஆகியோர் தமுமுகவின் முன்மாதிரியை பின்பற்றி பொதுமக்களிடம் மற்ற அமைப்புகளும் கணக்குகளை சமர்பிக்க வேண்டும் என்று கூறினர்.
இந்நிகழ்ச்சிக்கு தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் தலைமையேற்றார். பொதுச்செயலாளர் செ. ஹைதர் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். முன்னதாக மாநிலச் செயலாளர் பி. அப்துர் ரஹீம் திருக்குர்ஆன் விரிவுரையுடன் கூடிய தொடக்கவுரையை நிகழ்த்தினார். மாநிலப் பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் கணக்குகளை வாசிக்க, கணக்காளர் ஹாரூண் ரஷீத் அவற்றுக்கு உரிய ஆதாரத் தகவல்களை அளித்தார். மாநிலச் செயலாளர் ஜே.எஸ்.ரிஃபாயி நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
நாம் கேட்ட இந்தக் கேள்விகளுக்கு தமுமுக அன்றும் பதில் சொல்லவில்லை. இன்றும் சொல்ல முடியாது. இவர்கள் நடுவர்கள் முன்னிலையில் தங்கள் கணக்கை ஒப்படைத்து அதில் எழும் ஆட்சேபனைகளுக்கும் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்க திராணியில்லாமல் மண்டபத்தில் கணக்கு காட்டி விட்டு அந்தக் கணக்குக்கு ஆடிட்டர் சர்ட்பிகெட் கொடுத்து விட்டார் எனக் கூறி அதனால் தாங்கள் காட்டிய கணக்கு சரியானது என்று எழுதினார்கள்.
அரசாங்கத்தில் மாட்டிக் கொள்ளாமல் தவறான கணக்குகளையும் சரியானதாக ஆக்கிக் காட்டுவது தான் ஆடிட்டரின் முக்கிய வேலை. ஆனால் ஆடிட்டர் சான்றளிக்கும் கணக்குகளில் 95 சதவிகிதம் செட்டிங் தான் என்பதை சாதராணமாக அனைவரும் அறிவார்கள். ஆனால் தமுமுகவினர் தங்கள் கணக்கு சரியானது என்பதற்கு இதை ஆதாரமாகக் காட்டுவது எவ்வளவு அபத்தமானது என்பதை அன்று உணர்வு இதழில் நாம் தோலுரித்துக் காட்டினோம்.
பொது விசாரணையும் கணக்குக் காட்டுவதும்
சுனாமி நிவாரண நிதி குறித்து முதன் முதலாக தமுமுக-வினர் தான் மொட்டைப் பிரசுரத்தின் மூலம் தவ்ஹீத் ஜமாஅத்தை வம்புக்கு இழுத்து விவகாரத்தை துவக்கி வைத்தார்கள்.
அவர்களைப் போல் முதுகெலும்பில்லாமல் மொட்டைப் பிரசுர வேலையை நாம் செய்ய வேண்டியதில்லை. நேருக்கு நேராகவே தமுமுகவின் விஷமப் பிரச்சாரத்தை எதிர்கொள்வது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் முடிவு செய்தது.
ஃபித்ரா, சுனாமி ஆகிய நிதிகளைத் திரட்டியதிலும், மக்களுக்கு வழங்கியதிலும் தவ்ஹீத் ஜமாஅத்தும், தமுமுகவும் நேர்மையாக நடந்து கொண்டனவா என்பதைக் கண்டறிவதற்காக முஸ்லிம் லீக், தேசிய லீக், ஜமாஅத்துல் உலமா சபை, ஜமாஅத்தே இஸ்லாமி, இஸ்லாமிய விழிப்புணர்வுக் கழகம், மனித நீதிப் பாசறை ஆகிய ஆறு இயக்கங்கள் கொண்ட விசாரணைக் குழுவின் முன் தவ்ஹீத் ஜமாஅத்தும், தமுமுகவும் தமது மேற்கண்ட கணக்குகளை ஒப்படைத்து விசாரணைக்கு உட்படத் தயாரா? என்று தவ்ஹீத் ஜமாஅத் அறைகூவல் விட்டது.
இந்த அறைகூவலை ஏற்க அஞ்சிய தமுமுக இதைத் தவிர்ப்பதற்காக ஒரு திருமண மண்டபத்தைப் பதிவு செய்து தனது இயக்கத்தினரைக் கூட்டி வைத்து கணக்குக் காட்டும் நாடகத்தை நடத்தி முடித்திருக்கிறது.
நாங்கள் கணக்குக் காட்டி விட்டோம் என்று இதன் மூலம் மக்களை நம்ப வைக்கலாம் என்று தப்புக் கணக்குப் போட்டுள்ளனர்.
பொது விசாரணைக்கு முன்வராமல் ஓடி ஒளிந்ததற்காக கோமாளித்தனமான காரணங்களை தமது பத்திரிகையில் எழுதியுள்ளனர். தொடர்ந்து முரண்பாட்டின் மொத்த உருவமாக தமுமுக திகழ்ந்து வருவதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.
எனவே, தமுமுகவிடம் நேர்மை இல்லை என்பதை வெட்ட வெளிச்சமாக்கிட சமுதாயத்திற்கு சில செய்திகளைப் பதிவு செய்கிறோம்.
ஆடிட்டர் அங்கீகாரம் நேர்மைக்குச் சான்றாகுமா?
தமது கணக்குகளுக்கு ஆடிட்டரிடம் அங்கீகாரம் வாங்கி இருப்பதை தங்களின் கணக்கு நேர்மையானது என்பதற்கு ஆதாரமாகக் காட்டியுள்ளனர்.
கணக்கு காட்டுவதில் ஆடிட்டரின் பங்கு என்ன? அரசாங்கத்தின் பங்கு என்ன? என்பதை அறியாத அப்பாவிகள் வேண்டுமானால் கணக்குக் காட்டி விட்டார்களே! என்று எண்ணி ஏமாந்து விடலாம்.
கணக்குக் காட்டுவது பற்றி அறிந்து வைத்திருக்கும் யாருமே இதில் ஏமாற மாட்டார்கள்.
பொது விசாரணைக்கும், கணக்குக் காட்டுவதற்கும் உள்ள வித்தியாசத்தை அனைவரும் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் விளக்கும் அவசியத்தை இவர்கள் ஏற்படுத்தி விட்டனர்.
ஆடிட்டரின் வேலை என்ன?
எந்த ஒரு இயக்கமானாலும் தமக்கு வந்து சேரும் வரவுகளுக்காக ரசீது போட வேண்டும்.
அது போல் எந்தச் செலவு செய்வதானாலும் செலவுக்கான ஆதாரத்தையும் வைத்திருக்க வேண்டும். அதாவது பொருட்கள் ஏதும் வாங்கப்பட்டிருந்தால் அதற்கான பில்லை வைத்திருக்க வேண்டும். தனி நபர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்தால் அவர்கள் பெற்றுக் கொண்டதற்கான ஆதாரமாக அவர்களின் கையெழுத்தை வவுச்சரில் பெற்று வைத்துக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக ஆந்திராவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஐந்து நபர்களுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வழங்கினோம் என்று ஒரு இயக்கம் கணக்கு எழுதுகிறது என்று வைத்துக் கொள்வோம்.
இதில் ஆடிட்டரின் வேலை என்ன?
ஐந்து லட்சம் பெற்றுக் கொண்ட ஐந்து நபர்களின் கையெழுத்துடன் கூடிய வவுச்சர்களை ஆடிட்டர் கேட்பார்.
ராமசாமி – 1 லட்சம்,
ரங்கசாமி – 1 லட்சம்,
இஸ்மாயில் – 1 லட்சம்,
ஜோசப் 1 லட்சம்,
வீரமணி – 1 லட்சம்
என்று ஐந்து நபர்கள் கையெழுத்திட்ட ஐந்து வவுச்சர்கள் உள்ளது என்றால் இந்தக் கணக்கு சரியானது என்று ஆடிட்டர் கூறி விடுவார். கணக்குகளைச் சரிபார்க்கும் அதிகாரிகளும் அதைச் சரி என்று ஏற்றுக் கொள்வார்கள்.
உண்மையில் மேற்கண்ட பெயரில் உள்ள ஐந்து நபர்கள் கற்பனையாக இருக்கலாம்.
ராமசாமி என்று உஸ்மான் என்பவர் கையெழுத்துப் போட்டிருக்கலாம்.
ரங்கசாமி என்று அப்துல் காதிர் என்பவர் கையெழுத்துப் போட்டிருக்கலாம்.
இஸ்மாயில் என்று சிக்கந்தர் என்பவர் கையெழுத்துப் போட்டிருக்கலாம்.
ஜோசப் என்று ஹாரூன் என்பவர் கையெழுத்துப் போட்டிருக்கலாம்.
வீரமணி என்று அன்வர்தீன் என்பவர் கையெழுத்துப் போட்டிருக்கலாம்.
வவுச்சரில் குறிப்பிடப்பட்டவர்கள் கற்பனைப் பாத்திரமா?
உண்மையிலேயே அப்படி யாரும் உள்ளனரா?
உள்ளனர் என்றால் வவுச்சரில் குறிப்பிட்ட தொகையை அவர்கள் பெற்றார்களா?
அந்தக் கையெழுத்து அவர்களுடையது தானா?
என்பதையெல்லாம் எந்த ஆடிட்டரும் விசாரிக்க மாட்டார்; அது அவரது வேலையும் அல்ல.
30 லட்சம் வழங்கி விட்டோம் என்று கணக்கு காட்டுபவர்களானால் அதற்கான வவுச்சர்களைக் கேட்பதோடு ஆடிட்டரின் வேலை முடிந்து விடும்.
பொது விசாரணை என்றால் என்ன?
ஆனால், பொது விசாரணை என்றால் இதை விட அதிகமான வேலை இருக்கிறது.
மேற்கண்ட ஐந்து வவுச்சர்களில் சந்தேகம் வந்தால் அவர்கள் யார்? அவர்களின் ஊர் எது? என்று விசாரித்து அவர்களைத் தேடிப் பார்த்து நீங்கள் ஒரு லட்சம் பெற்றீர்களா? என்று பொது விசாரணைக் குழு விசாரிக்கும். அப்படி யாரும் இல்லை என்றால் அதையும் விசாரணைக்குழு பதிவு செய்யும். இந்த வேலையை ஆடிட்டர் செய்ய மாட்டார்.
ஒரு இயக்கம் சம்பந்தப்பட்ட கணக்குகளைப் பொறுத்தவரை அந்த இயக்கத்தை நம்பும் மக்களிடம் கணக்குக் காட்டுவதே போதுமானது.
அவர்கள் இயக்கப் பணிகளுக்காக திரட்டிய தொகை பற்றியோ, அதை அவர்கள் செலவு செய்த விபரம் குறித்தோ நாம் கேள்வி எழுப்பவில்லை. அது நமது வேலையும் அல்ல.
ஆனால் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக திரட்டப்பட்ட நிதியில் சந்தேகம் எழுந்தால் இது போல் கணக்குக் காட்டுவது அந்தச் சந்தேகத்தை நீக்காது.
பொது விசாரணை தான் அந்தச் சந்தேகத்தை நீக்கும்.
அதுவும் தவ்ஹீத் ஜமாஅத்தின் கணக்கை விசாரிக்கும் போது தமுமுகவும், தமுமுகவின் கணக்கை விசாரிக்கும் போது தவ்ஹீத் ஜமாஅத்தும் கண்காணிக்க வேண்டும் என்று நாம் குறிப்பிட்டதால் இரண்டு இயக்கங்களுமே மற்றவரின் வவுச்சர் சரியா என்று விசாரணை மேற்கொள்ளும். எல்லாம் சரியாக இருந்தால் இரண்டு இயக்கங்களின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படும்
சரியாக இல்லாவிட்டால் நேர்மையற்றவர்கள் அம்பலப்படுவார்கள்.
நேர்மையாகக் கணக்கு வைத்திருப்பவர்கள் விசாரணைக்கு ஏன் அஞ்ச வேண்டும்?
மேலும் படகு வாங்கிய வகையில் ஐந்து லட்சம் என்று கணக்கு எழுதினால் படகு தயாரிக்கும் கம்பெனியின் பெயரில் ஐந்து லட்சத்துக்கு பில் இருக்கிறதா? என்பதை மட்டுமே ஆடிட்டர் பார்ப்பார்.
அந்த பில் சரியானாதா? என்பதை எந்த ஆடிட்டரும் பார்க்க மாட்டார். அது அவரால் இயலாது.
இரண்டு லட்சத்துக்கு படகு வாங்கி விட்டு ஐந்து லட்சம் என்று பில் கேட்டாலும் தரக்கூடியவர்கள் உள்ளனர். அவ்வாறு வாங்கப்பட்ட பில்லாக இருந்தாலும் ஆடிட்டருக்கு அதுவே போதும். அல்லது இல்லாத கம்பெனியின் பெயரில் போலியாக பில்லைத் தயாரித்து வழங்கினாலும் அது ஆடிட்டருக்குப் போதும். இதற்காக சம்பந்தப்பட்ட ஊருக்குச் சென்று அப்படி ஒரு கம்பெனி உள்ளதா என்று ஆடிட்டர் பார்க்க மாட்டார்.
ஆனால் பொது விசாரணை எனும் போது இவற்றில் சந்தேகம் எழுந்தால் இது பற்றி விசாரிக்கப்படும்.
இது போன்ற விசாரணையின் மூலம் தான் கணக்கு உண்மையானதா? என்பதை முடிவு செய்ய இயலும்.
இத்தகைய விசாரணைக்கு தவ்ஹீத் ஜமாஅத் தயாராக இருந்தது; இப்போதும் இருக்கிறது.
தமுமுக இதற்குத் தயாராக இல்லை.
இது போல் வரவு விஷயத்திலும் தவறு நடக்கலாம்.
ஒரு இயக்கத்துக்கு 10 லட்சம் வரவு வந்துள்ளது என்று வைத்துக் கொள்வோம். அதில் ஐந்து லட்சத்துக்கு மட்டும் ரசீது போட்டுவிட்டு மீதி ஐந்து லட்சத்திற்கு ரசீது போடாவிட்டால் அந்த ஐந்து லட்சத்தை அதன் நிர்வாகிகளே எடுத்துக் கொண்டால் அதைப் பற்றி ஆடிட்டருக்கு ஏதும் தெரியாது.
வரவு ஐந்து லட்சம் என்று கணக்கு எழுதப்பட்டிருந்தால் ஐந்து லட்சத்துக்கு ரசீது போடப்பட்டுள்ளதா என்று மட்டுமே ஆடிட்டர் பார்ப்பார்.
பித்ரா வரவு 5 லட்சம் என்று போட்டால் பணம் கொடுத்தவர்கள் தனது தொகையும் இதில் சேர்ந்திருக்கும் என்று நினைத்துக் கொள்வார்கள்.
பொது விசாரணைக் குழு இதைப் பற்றி விசாரிக்கும்.
ஐந்து லட்சம் ரசீது போடப்பட்ட பட்டியலை வெளியிடும். அப்போது தான் ரசீது போடப்படாதவர்கள் தாங்கள் கொடுத்த பணத்திற்கு ரசீது போடப்படவில்லை என்று தெரிவிப்பார்கள். இதன் மூலம் வந்த வரவுகள் அனைத்தும் வரவு வைக்கப்பட்டதா என்பதை அறிய முடியும்.
இது பொது விசாரணையின் மூலம் தான் சாத்தியமாகும்.
ஒவ்வொரு வியாபாரியும், தொழிலதிபரும் அரசாங்கத்துக்குக் கணக்கு காட்டுகிறார். அவ்வாறு காட்டும் கணக்குக்கு ஆடிட்டரின் அங்கீகாரத்தையும் பெற்றே காட்டுகிறார். அரசும் அதனை ஏற்றுக் கொள்கிறது.
இவர்களின் வாதப்படி எவருடைய கணக்குமே நூறு சதவிகிதம் சரி என்று ஆகிவிடும்.
தற்போது பல கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறையில் சிக்கும் எல்லோருமே ஆடிட்டர் மூலம் கணக்கு தாக்கல் செய்தவர்கள் தான்!
ஆடிட்டர் கணக்குக்கும், உண்மை நிலவரத்துக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள இது போதும்.
(உணர்வு. உரிமை 10, குரல் 16. டிசம்பர் 23 லி 29, 2005. பக்கம் : 3 மற்றும் 7)
தங்கள் கணக்கு சரியானது என்பதற்கு மத்திய அரசிடம் வெளிநாட்டில் நிதி திரட்ட அனுமதி பெற்றதை ஒரு ஆதாரமாகக் குறிப்பிட்டனர். மத்திய அரசிடம் அனுமதி பெற்று விட்டால் அந்தக் கணக்கில் தில்லு முல்லு இருக்காது என்று ஆகுமா? இவர்கள் மக்களைப் பற்றி என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்? என்பதைப் பற்றி அன்று உணர்வில் எழுதியது.
த.மு.மு.க. சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள்
சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் என்ற தலைப்பில் சில ஆணவங்களை வெளியிட்டுள்ளனர்.
18 ஆம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு பக்கத்தில் தங்கள் கணக்கு நேர்மையானது என்று நிரூபிக்கத் தக்க எந்த ஆவணமும் இல்லை.
மத்திய அரசிடம் அனுமதி பெற்றதற்கான ஆதாரங்களைத் தான் வெளியிட்டுள்ளனர்.
மத்திய அரசில் இவர்கள் அனுமதி பெற்றார்களா? இல்லையா? என்பது பிரச்சினையில்லை. இது பற்றி யாரும் கேள்வி கேட்கவில்லை.
பல்வேறு மோசடிகளை செய்த பல நிறுவனங்களும் மத்திய – மாநில அரசுகளின் அனுமதி பெற்றவை தான். அனுமதி பெற்ற காரணத்தினால் தங்களின் கணக்கு நேர்மை என்று ஆகிவிடுமா? மக்களை இவர்கள் இன்னமும் மூடர்களாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
(உணர்வு. உரிமை 10, குரல் 16. டிசம்பர் 23 லி 29, 2005. பக்கம் : 4)
இவர்கள் விசாரணைக்கு வராமல் ஓடி ஒளிந்ததன் மூலம் தாங்கள் சுனாமி நிதியைத் திருடியவர்கள் என்பது அம்பலாமான போதும் பொது விசாரணைக்கு வராமல் ஓட்டம் பிடித்ததற்கு புதுப்புது காரணங்களைக் கூறி வந்தனர். முஸ்லிம் ட்ரஸ்ட் முஸ்லிம் மீடியா ட்ரஸ்ட் ஆகிய இரண்டு ட்ரஸ்டுகளுக்கு பீஜெ சேர்மனாக இருக்கிறார். அது குறித்த விசாரணைக்கு பீஜெ ஒப்புக் கொள்ள மறுப்பதால் நாமும் பொது விசாரணைக்கு மறுக்கிறோம் என்பது தான் அவர்களில் பதிலாக இருந்தது. இதற்கும் அன்றைக்கு உணர்வு இதழில் நாம் பதிலடி கொடுத்தோம். அது வருமாறு:
முஸ்லிம் டிரஸ்ட், முஸ்லிம் மீடியா டிரஸ்ட்
தாங்கள் ஓடி ஒளிந்ததற்கு மற்றொரு காரணத்தையும் கூறுகின்றனர். அதாவது முஸ்லிம் டிரஸ்ட், முஸ்லிம் மீடியா டிரஸ்ட் பற்றி பேச பி.ஜே பின்வாங்குவதால் தாங்கள் ஓடி ஒளிந்ததாக மக்களை நம்ப வைக்க முயல்கின்றனர். இதோ அவர்கள் எழுதியது :
ஏன் நழுவுகிறார்?
பி.ஜே. டிரஸ்டு விஷயங்களைச் சம்பந்தமில்லாதது என்று கூறி ஏன் நழுவப் பார்க்கிறார் என்பது நாடறிந்த விஷயம்.
இப்போது அமைப்புகள் தலையிட்டால் தனது நிலை நாற்றமாகிவிடும் என்பது அவருக்குத் தெரியும்.
அவரின் வேஷம் முழுவதுமாய் கலைக்கப்பட்டு விடும் என்று அஞ்சுகிறார்.
அவரின் பொய்முகம் கிழிந்துவிடும் என்றும் ஒதுங்குகிறார்.
எத்தனின் வெத்துவாதம் எடுபடாது போய்விடும் என்று கலங்குகிறார்.
முஸ்லிம் மீடியா ட்ரஸ்டு மற்றும் முஸ்லிம் டிரஸ்ட் விவகாரங்களில் இரு தரப்பினரும் உரிமை கொண்டாடுகிறார்கள். அதனால் இது விஷயத்தில் இரு தரப்பும் வாதியும், பிரதிவாதியுமாவார்கள். ஆனால் பி.ஜே. அவைகளைச் சம்மந்தமில்லாதவை என்று ஒதுக்குவதால் பி.ஜே. எழுதியுள்ள விவகாரத்தில் வாதி பிரதிவாதி என்ற நிலைப்பாட்டுக்கு பொருள் இல்லை.
என்று தமுமுகவினர் தமது பத்திரிகையில் எழுதியுள்ளனர்.
தாங்கள் நழுவியதற்கு நியாயம் கற்பிக்கின்றனர்.
இது பற்றி பி.ஜே. மிகத் தெளிவாக பின்வருமாறு எழுதியுள்ளார்.
நாம் பிரிந்த பிறகு திரட்டிய நிதிகள் பற்றி நான் விசாரணை கோரினேன். இதையும் தாண்டி முஸ்லிம் டிரஸ்ட், முஸ்லிம் மீடியா டிரஸ்ட் கணக்குகளையும் விசாரிக்க வேண்டும் என்று நடுவர்களிடம் தமுமுகவினர் தாராளமாகக் கோரிக்கை வைக்கலாம் என்று எழுதியுள்ளார்.
எனவே நடுவர்கள் அழைப்பை ஏற்று நடுவர்கள் முன் வருகை தந்து, இந்தக் கோரிக்கையையும் ஏற்க வேண்டும் என்று தமுமுகவினர் தாராளமாகக் கோரியிருக்கலாம்.
அப்படிக் கோரினால் அதை பி.ஜே. ஆட்சேபிக்க முடியாது.
கோவை நிவாரண நிதி மற்றும் பல நிதிகளைக் கூட விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்பது தான் பி.ஜே.யின் நிலை.
எனவே, மேற்கண்ட இரண்டு ட்ரஸ்டுகள் பற்றிய கணக்குகளை நடுவர்கள் விசாரிக்க வேண்டுமென்பது தான் நழுவியதற்குக் காரணம் என்றால் விசாரணை எல்லையை விரிவுபடுத்த தவ்ஹீத் ஜமாஅத் உடன்படுகிறது.
இரண்டு பித்ரா கணக்குகள், சுனாமி கணக்குகள், இரண்டு டிரஸ்ட் விவகாரங்கள். இருவரும் இணைந்திருந்த போது திரட்டிய அனைத்து நிதிகள் பற்றியும் விசாரணைக்கு உட்படுத்த தவ்ஹீத் ஜமாஅத் தயாராகவுள்ளது.
தமுமுகவினர் நழுவியதற்குக் கூறிய அனைத்துக் காரணங்களையும் சரிப்படுத்த நாம் தயார். இதன் பிறகாவது தமுமுக தனது கணக்கை பொது விசாரணைக்கு உட்படுத்தத் தயாரா?
(உணர்வு. உரிமை 10, குரல் 16. டிசம்பர் 23 லி 29, 2005. பக்கம் : 7)
இரண்டு டரஸ்ட் விஷயமாக நாம் விசாரணைக்கு தயார் என்று நடுவர்களிடம் கொடுத்த கடிதத்தில் சொல்லி இருப்பதையும் காண்க. சரி அனைத்து கணக்குகளைப் பற்றியும் பொது விசாரணைக்குத் தயார் என்று பீஜே அறிவித்த பிறகு அவர்கள் விசாரணைக்கு உட்பட்டிருக்க வேண்டும் அல்லவா? இதன் பின்னரும் அவர்கள் விசாரணைக்கு உடன்படவில்லை.
பொது விசாரனைக்கு தயார் இல்லை என்றால் அதைச் சொல்லி விட்டுப் போவதை விட்டு விட்டு நாம் நடித்ததாகவும் நழுவியதாகவும் வியாக்கியானம் செய்து அதிலும் மாட்டிக் கொண்டனர். அதற்கும் நாம் தக்க பதிலை உணர்வு இதழில் கொடுத்துள்ளோம்.
நழுவியதும் நடித்ததும் தமுமுக தான்!
நழுவியது யார்? நடித்தது யார் என்ற தலைப்பில் இரு பக்க இழுப்புக் கட்டுரை ஒன்றை தமுமுகவினர் எழுதியுள்ளனர்.
வாதி, பிரதிவாதி
நடுவர்கள் அழைப்பைத் தான் வாதிகளும், பிரதிவாதிகளும் ஏற்க வேண்டும். வாதிகளோ, பிரதிவாதிகளோ நடுவர்களுக்குக் கட்டளை பிறப்பிக்கக் கூடாது என்று பி.ஜே. எழுதிய கருத்தை மறுப்பதற்காக கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளனர்.
….. ஆனால், பி.ஜே. எழுப்பியுள்ள ஃபித்ரா மற்றும் சுனாமி வசூல் விவகாரத்தில் அப்படி எதுவும் இல்லை. பி.ஜே. வசூலில் நமக்கு உரிமை இல்லை. தமுமுக வசூலில் அவருக்கு உரிமை இல்லை. இவர் கூற்றுப்படி மக்கள் முன்னிலையில் இருவருமே குற்றம் சுமத்தப்பட்டவர்கள்.
ஆகவே, பி.ஜே. தம்மை இங்கு வாதி என்பதும், தமுமுகவை பிரதிவாதி என்பதும் அறியாமையின் வெளிப்பாடு…
என்று தமுமுகவினர் தமது பத்திரிகையில் எழுதியுள்ளனர்.
பி.ஜே. தன்னை வாதி என்றும் தமுமுகவை பிரதிவாதி என்றும் எழுதவில்லை. இருவருமே வாதிகளாகவும், பிரதிவாதிகளாகவும் உள்ளனர் என்று தான் எழுதினார்.
தமுமுகவின் கணக்கு சரியில்லை என்று கூறும் விஷயத்தில் பி.ஜே. வாதியாக இருக்கிறார். தமுமுக பிரதிவாதியாக உள்ளது.
தவ்ஹீத் ஜமாஅத்தின் கணக்கு சரியில்லை என்று கூறும் விஷயத்தில் தமுமுக வாதியாகவும் பி.ஜே. பிரதிவாதியாகவும் இருக்கிறார். எனவே ஒவ்வொருவரும் ஒரு கணக்கில் வாதியாகவும், மற்றொரு கணக்கில் பிரதிவாதியாகவும் உள்ளனர்.
இதைத் தான் பி.ஜே. எழுதியிருந்தார்.
மூன்று கணக்குகளுக்கும் பொது விசாரணை
மேற்கண்ட மூன்று கணக்குகளிலும் தவ்ஹீத் ஜமாஅத்தும் தனது நேர்மையை நிரூபிக்கும் அவசியம் உள்ளது.
மேற்கண்ட மூன்று கணக்குகளிலும் தமுமுகவும் தனது நேர்மையை நிரூபிக்கும் அவசியம் உள்ளது.
இரண்டு இயக்கங்களுமே பொது விசாரணைக்கு தன்னை உட்படுத்திக் கொள்வது தான் இரண்டு இயக்கங்களின் நேர்மையை நிரூபிக்க ஏற்ற வழியாகும்.
பி.ஜே தங்களை வாதி என்று எழுதியது தான் நழுவியதற்குக் காரணம் என்று அவர்கள் கூறுவது அப்பட்டமான பொய் என்பதில் சந்தேகம் இல்லை.
நானும் நடுவர்களுக்குக் கட்டளை இட முடியாது; நீங்களும் கட்டளை இட முடியாது. நடுவர்கள் இடும் கட்டளையை நாம் இருவரும் ஏற்க வேண்டும் என்று கூறுவதை சுய அறிவும் நியாய உணர்வும் உடைய யாரும் குறை கூற மாட்டார்கள்.
(உணர்வு. உரிமை 10, குரல் 16. டிசம்பர் 23 லி 29, 2005. பக்கம் : 7)
ஆறு அமைப்புகளில் ஜாக் அமைப்பை ஏன் சேர்க்கவில்லை என்பதும் ஓடி ஒளிந்ததற்குக் காரணமாகச் சொன்னார்கள். அதற்கும் தவ்ஹீத் ஜமாஅத் தக்க பதிலடி கொடுத்தது.
ஜாக் அமைப்பை ஏன் அழைக்கவில்லை?
நான் கேட்கிறேன்: குர்ஆன் – ஹதீஸை அவருடன் நெருங்கிப் பின்பற்றும் ஜாக் அமைப்பை அந்த நடுவர் குழுவில் அவர் ஏன் தேர்வு செய்யவில்லை என்பதற்கு பதில் கூறுவாரா?
ஜாக்கிற்கு அதற்கான தகுதி இல்லை என்று கூறுவாரா? இல்லை பி.ஜே. வண்டவாளத்தை முன்பு தெரிந்து வைத்துள்ளதால் ஜாக்கை இடம்பெறச் செய்யாததற்கு காரணம் என்று சிலர் பேசிக் கொள்வது தான் உண்மையா?
என்றும் தமுமுகவினர் தமது பத்திரிகையில் வாந்தி எடுத்துள்ளனர்.
ஜாக் இயக்கமும் நடுவர்களில் இருப்பதில் நமக்கு ஆட்சேபணை இல்லை.
நமக்கும், ஜாக்குக்கும் உள்ள கடும் பகை அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும் ஆதாரங்களின் அடிப்படையில் தான் விசாரணை நடக்கும் என்பதால் ஜாக்கையும் சேர்த்துக் கொள்வோம்.
தமுமுக-வினரே! இப்போதாவது பொது விசாரணைக்கு முன் வருகிறீர்களா?
யுத்தத்தின் தொடக்கம், ஜிஹாத், ஹாமித் பக்ரி, அபு ஜஹில் போன்ற அனைத்துக் குற்றச்சாட்டுக்கள் பற்றியும் விவாதம் நடத்தத் தயார் என்று நாம் கூறியிருந்தோம். அதையும் மறுத்து நழுவியுள்ளனர்.
தமுமுக நழுவியது மட்டுமின்றி அதற்குக் கூறும் காரணம் ஏதும் ஏற்புடையதாக இல்லை என்பதே உண்மை.
(உணர்வு. உரிமை 10, குரல் 16. டிசம்பர் 23 லி 29, 2005. பக்கம் : 7)
ஏழை மக்களுக்காக திரட்டிய நிதியை திருடி விட்டார்கள் என்று நான் குற்றம் சாட்டினால் அதற்குத் தான் பதில் சொல்ல வேண்டும். அதை விடுத்து பீஜே குர்ஆனை விற்று பிழைப்பு நடத்துகிறார் என்று மடத்தனமாக எழுதினார்கள். பீஜே குர்ஆன் தமிழாக்கத்தை விற்பனை செய்கிறார். அதற்கான விலையை நிர்ணயித்து அந்த விலைக்கு விற்கிறார். அதை விரும்பியவர்கள் வாங்கிச் செல்கின்றனர். இதில் யாருக்கும் எந்த மோசடியும் இல்லை. ஆனாலும் இது போன்ற கிறுக்குத் தனங்களுக்கும் பீஜேயாகிய நான் பதில் சொல்லாமல் இருக்கவில்லை. உணர்வு இதழில் இதற்கு நான் அளித்த பதில் வருமாறு:
திருக்குர்ஆனை விற்றுப் பிழைப்பா?
பி.ஜே. மொழி பெயர்த்து வெளியிட்ட திருக்குர்ஆன் தமிழாக்கத்தின் விலை மிகவும் அதிகமாக உள்ளதாகவும், தமுமுக ஏட்டில் எழுதி குர்ஆனை சொற்ப விலைக்கு விற்காதீர்கள் என்ற வசனத்தையும் ஆதாரமாகக் காட்டியுள்ளனர்.
(இவர்கள் அந்த வசனத்தை மேற்கோள் காட்டியிருப்பது உண்மையிலேயே தெரிந்து தான் செய்தார்களா? அந்த வசனத்தின் அர்த்தத்தை விளங்கித் தான் மேற்கோள் காட்டினார்களா? அந்த வசனத்தை மேற்கோள் காட்டியிருப்பதன் மூலம் அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? ஒரு வேளை சொற்ப விலைக்கு விற்காதீர்கள். இன்னும் அதிக விலைக்கு விற்பனை செய்யுங்கள் என்று சொல்ல வருகிறார்களா? அல்லது குர்ஆனை அச்சிட்டு விற்கக் கூடாது என்று சொல்ல வருகிறார்களா? என்ற குழப்பம் வாசகர்களுக்கு ஏற்பட்டால்…. அது தான் ஜவாஹிருல்லாஹ்.)
தமிழாக்க திருக்குர்ஆன் பிரதியின் விலை அதிகமாக உள்ளது என்று அவர்கள் கூற வருவார்களேயானால், அதன் காரணம் என்னவென்று தமுமுக மாநில நிர்வாகிகளுக்கும் தெரியும். இன்னும் சொல்வதாக இருந்தால் என்ன விலை நிர்ணயம் செய்யலாம் என்பது பற்றி ஜவாஹிருல்லா, ஹைதர், பாக்கர், ஏ.எஸ்.அலாவுத்தீன் உள்ளிட்டவர்களிடம் ஆலோசனை செய்யப்பட்டது.
அனைவரும் கலந்து பேசித்தான் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதை விட குறைவான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்.
உயர் தரமான பேப்பர், உயர் தரமான பைண்டிங், சிறப்பான அச்சமைப்பு ஆகியவற்றின் காரணமாகவும்,
பல சந்தர்ப்பங்களில் மார்க்க அறிஞர்கள் பலர் கூட்டாக பல நாட்கள் பரிசீலனை செய்த வகையில் ஏற்பட்ட மேலதிகமான செலவுகள்,
உள்ளிட்ட அனைத்தையும் கவனத்தில் கொண்டு தான் விலை நிர்ணயிக்க வேண்டும் என்று தக்க காரணங்களுடன் கூறினார்கள்.
மேலும், தமிழாக்கம் நேர்காணல் என்ற சி.டி.யிலும் பி.ஜே. இது பற்றி விளக்குகிறார். ஜவாஹிருல்லா அதை ஆமோதித்தார்.
இவர்கள் தற்போது ஒப்பிட்டுக் காட்டும் மற்றொரு மொழிபெயர்ப்பை விட பைண்டிங்கிலும், அச்சமைப்பிலும் நமது தமிழாக்கம் தரமானது.
உதிரிப் பேப்பர் வாங்கினால் பாதி விலைக்குக் கூட கொடுக்க முடியும். ஆனால் ஒவ்வொரு பேப்பரும் ஒவ்வொரு தரத்தில் ஒவ்வொரு நிறத்தில் இருக்கும். இப்படியெல்லாம் இல்லாமல் ஒரே தரத்தில் பேப்பர் அமைவதாலும் அதிகமான தரத்தை கருத்தில் கொண்டு கல்கத்தாவில் அச்சிடுவதாலும் தான் சிறிது விலை அதிகம். இதை நன்றாக அறிந்து கொண்டே இதைப் பிரச்சினையாக்கி முக்கிய பிரச்சினையைத் திசை திருப்ப முயல்கிறார்கள்.
திருக்குர்ஆன் தமிழாக்கப் பிரதிக்கு விலை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்காற்றியவர்களே இப்போது விமர்சனம் செய்வது இவர்கள் முரண்பாட்டின் மொத்த உருவம் என்பதையே காட்டுகிறது.
(உணர்வு. உரிமை 10, குரல் 16. டிசம்பர் 23 லி 29, 2005. பக்கம் : 9)
அடுத்து அவர்கள் கணக்குக் காட்டியதில் இருந்து அது தவறான கணக்கு என்பதை நிரூபிக்கும் வகையில் நாம் கேள்வி எழுப்பினோம். அதற்கு இன்று வரை பதில் இல்லை. அந்தக் கட்டுரை இது தான்.
ஆவணங்கள் கூறுவது என்ன?
மொத்தச் செலவு 33,25,435,25 ரூபாய்கள் என்றும் மொத்த வரவு 68,36,873,07 ரூபாய்கள் என்றும் மீதி தொகை 33,11,437,82 என்றும் அவர்கள் வெளியிட்ட கணக்கில் கூறியுள்ளனர்.
தங்கள் கணக்குக்கு ஆதாரமாக வங்கியின் ஸ்டேட்மென்டை வெளியிட்டுள்ளனர்.
நாற்பது நாட்களுக்குரிய ஸ்டேட்மென்டில் நான்கு தடவை பணத்தை டெபாசிட் செய்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதுவும் ரொக்கமாக டெபாசிட் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது.
சுனாமி நிதி திரட்டுவது முடிந்து பல மாதங்களுக்குப் பின் ரொக்கமாக டெபாசிட் செய்தது ஏன்?
சுனாமி விவகாரம் வெடித்துக் கிளம்பிய பின் வங்கியில் பணத்தை டெபாசிட் செய்தது நேர்மையைக் காட்டுகிறதா?
ஒரு இயக்கத்தின் தலைவர் இயக்கத்தின் பணத்தில் பத்து லட்சத்தை எடுத்து விட்டார் என்று வைத்துக் கொள்வோம். இது பிரச்சனையாக ஆக்கப்பட்ட பின் உடனே எடுத்த பணத்தை வங்கியில் செலுத்தி அன்றைய ஸ்டேட்மென்டைக் காட்டி நான் பத்து லட்சம் எடுக்கவில்லை. வங்கிக் கணக்கில் தொகை சரியாகவுள்ளது என்று கூறினால் அவர் பத்து லட்சம் எடுக்கவில்லை என்று ஆகி விடுமா?
இதற்கு முந்தைய ஸ்டேட்மெண்டுகளில் என்னென்ன பூதம் கிளம்புமோ?….
(உணர்வு. உரிமை 10, குரல் 16. டிசம்பர் 23 லி 29, 2005. பக்கம் : 9)
அடுத்து நடுவர்கள் உண்மையில் தவ்ஹீத் ஜமாஅத்தை விட தமுமுகவுக்குத் தான் அனுதாபிகளாக இருந்தனர். அப்படி இருந்தும் ஓடி ஒளிந்ததற்கு நடுவர்களிடம் நடு நிலை இல்லை என்றும் காரணம் கூறினார்கள். அதற்கும் நாம் தக்க பதில் அளித்தோம்.
தமுமுகவுக்குத் தான் சாதகம்
நடுவர்கள் உண்மையில் பார்த்தால் தமுமுகவுக்குத் தான் சாதகமாக நடந்து கொண்டனர். பத்தாம் தேதியன்று நாங்கள் வருகிறோம். பொதுமக்களையும் அழைத்து எங்கள் கணக்கை வாங்கிக் கொள்ளுங்கள். தமுமுக ஓட்டம் பிடிப்பதை அம்பலப்படுத்துங்கள் என்று பஷீர் அஹ்மது அவர்களிடம் கேட்டோம். தமுமுகவுக்குச் சாதகமாக நிகழ்ச்சியையே அவர் ரத்து செய்தார்.
நடுவர்கள் அளித்த இறுதி முடிவு உண்மையில் பார்த்தால் தமுமுகவுக்குத் தான் சாதகம் எனலாம்.
தாங்கள் அறிவித்தபடி மண்டபத்தில் எங்களை அழைத்து எங்கள் கணக்கை தணிக்கை செய்யுங்கள்! தமுமுக வர மறுத்ததை அம்பலப்படுத்துங்கள்! என்று நாம் விடுத்த நியாயமான கோரிக்கையை தேசிய லீக் தலைவர் ஏற்கவில்லை.
தமுமுக மறுத்ததால் விசாரணையைக் கைவிடுகிறோம் என்று தீர்ப்பளித்தனர். உண்மையில் நாம் தான் இத்தீர்ப்பினால் கவலைப்பட வேண்டும். பாரபட்சம் என்று நாம் தான் கூற வேண்டும்.
நடுவர்கள் மக்கள் மத்தியில் இப்பிரச்சனைகளைக் கொண்டு சென்றிருந்தால் தமுமுக இன்னும் நன்றாக அம்பலப்பட்டுப் போயிருக்கும். தேசிய லீக் தலைவர் அந்த வகையில் தமுமுகவுக்குத் தான் உதவியிருக்கிறார் என்று கூற வேண்டும். ஆனாலும் அவ்வாறு நாம் கூறமாட்டோம்.
(உணர்வு. உரிமை 10, குரல் 16. டிசம்பர் 23 லி 29, 2005. பக்கம் : 9)
பித்ரா கணக்கையும் காட்டவில்லை என்று பிஜே பொய் சொல்லி விட்டார். ஆனால் நாங்கள் பித்ரா கணக்கை இதோ முன்னரே காட்டியுள்ளோம் என்று திசை திருப்பினார்கள். ஆனால் அதுவும் பொய் என்று உணர்வு ஏட்டில் நாம் அம்பலப்படுத்தினோம்.
2004 ஃபித்ரா – 20 லட்சமா? 6 லட்சமா?
2004 பித்ரா பற்றி பின்வருமாறு எழுதியுள்ளனர்.
பி. ஜைனுல் ஆபிதீனின் மற்றொரு பொய் பிரச்சாரமும் தகர்ந்தது…
தமுமுகவுக்கு பகிரங்க அறைகூவல் என்ற தனது பிரசுரத்தில் 13 மாதங்கள் சென்ற பிறகும் தமுமுக ஃபித்ரா 2004 கணக்குகளை வெளியிடவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் ஃபித்ரா 2004 கணக்கு மக்கள் உரிமை யில் (1:30 – டிசம்பர் 23, 2004) இதழில் பிரசுரமாகியுள்ளது. இதன் மூலம் பி. ஜைனுல் ஆபிதினின் மற்றொரு பொய்ப் பிரச்சாரமும் தகர்ந்தது.
கண் மூடித்தனமாக அவரது சொல்லை நம்பி அவதூறு பரப்பும் சகோதரர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட பிரார்த்திப்போம்.
இதிலும் இரண்டு குழப்பங்கள் உள்ளன.
ஃபித்ரா வழங்கியதை வெளியிட்ட தமுமுக வரவு வந்த விபரத்தை ஏன் வெளியிடவில்லை என்பது தான் நமது கேள்வி. இன்று வரை ஃபித்ரா தொகை எந்தப் பகுதியிலிருந்து எவ்வளவு வந்தது என்பதை வெளியிடவில்லை. இது தான் பி.ஜே.யின் குற்றச்சாட்டு.
இந்த விபரங்களை இன்றளவும் வெளியிடவில்லை என்பதால் பி.ஜே. கூறியது முற்றிலும் உண்மை என்பது நிரூபணமாகிறது.
மேலும் 2004 ஆம் ஆண்டு ஃபித்ரா கணக்கை 1:31 இதழில் இது பற்றி வெளியிட்டதாக மேம்போக்காக கூறி நழுவிவிட்டனர்.
ஆனால், அந்தக் கணக்கைப் பாருங்கள்.
அவர்கள் குறிப்பிட்ட அந்த இதழிலும் யார் யார் எவ்வளவு அனுப்பினார்கள் என்ற விபரம் அறவே இல்லை.
20 லட்சம் ஃபித்ரா கொடுத்ததாகத் தான் அவர்கள் சுட்டிக்காட்டும் இதழில் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் 1:31-ல் 20 லட்சம் ஃபித்ரா வரவு என்று காட்டியவர்கள் இப்போது வெளியிட்ட கணக்கில் 6 லட்சம் ஃபித்ரா வரவு என்று குறிப்பிட்டுள்ளனர். இதை மூடி மறைப்பதற்காக கிளைகள் மூலம் 14 லட்சம் என்று கணக்கு காட்டியுள்ளனர்.
1:31-ல் 20 லட்சம் ஃபித்ரா கொடுத்ததாகக் கூறியது சரியா?
6 லட்சம் என்று இப்போது கூறியது சரியா?
ஜவாஹிருல்லாஹ் கடிதம்
தனக்குத் தானே முரண்படுவதில் முதல் இடத்தை வகிக்கும் ஜவாஹிருல்லாஹ் நடுவர்களான ஆறு இயக்கங்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அவர்களிடம் விளக்கம் கேட்டுள்ளார். அந்தக் கடிதத்தை வாசிக்கும் யாருமே இந்த அளவுக்கு அறியாமை உள்ளவரா ஒரு இயக்கத்துக்கு தலைமை தாங்குகிறார்(?) என்று ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது.
சிறுபிள்ளைத்தனம்
ஒரு அமைப்பின் சார்பாக அதன் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர்கள் சமாதானக் குழுவில் கலந்து கொண்டிருக்கும் போது அவர்களுக்கு ஜவாஹிருல்லாஹ் கடிதம் எழுதுகிறார்….
சகோதரர் பஷீர் அஹ்மத் தனது கடிதத்தில் பி.ஜே. கேட்டுக் கொண்டதின் அடிப்படையில் சென்னை பிரசிடெண்ட் ஹோட்ட லில் 28.11.05 அன்று ஒரு கூட்டம் நடந்ததாகவும், இக்கூட்டத்தில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் பொதுச் செயலாளர் டாக்டர் சையது சத்தார், இந்திய தேசிய லீக் சார்பில் பஷீர் அஹ்மத், தி.மு. அப்துல் காதர், ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் மவ்லவி முஹம்மது தாஹா மிஸ்பாஹி மற்றும் மவ்லவி முஹம்மது இல்யாஸ் காஸிமி, ஜமாஅத்தே இஸ்லாமி சார்பில் அப்துர் ரகீப் மற்றும் நஸீருல்லாஹ், இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம் சார்பில் மவ்லவி தர்வேஷ் ரஷாதி ஆகியோர் பங்கு கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் பங்குகொண்ட உங்கள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் உங்கள் அமைப்பின் சார்பில் அதிகாரப்பூர்வமாக கலந்து கொண்டார்களா?
இவ்வாறு ஜவாஹிருல்லாஹ் கடிதம் எழுதியுள்ளார்.
நீங்கள் எழுதிய கடிதம் தமுமுக இயக்கத்தின் அதிகாரப்பூர்வமானதா என்று ஆறு இயக்கத்தினர் திருப்பிக் கேட்டால் இவருக்கு எப்படி இருக்கும்? இது போன்ற கேள்விகளைக் கேட்டு தனது அறியாமையை மட்டுமின்றி ஆணவத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.
மிலன் மண்டபத்தை புக் செய்வதற்கு முன் உங்கள் இயக்கத்தின் பொதுக் குழுவைக் கூட்டி ஒப்புதல் பெற்றீர்களா? என்று ஜவாஹிருல்லாவைத் திருப்பிக் கேட்டால் எப்படி இருக்குமோ அது போன்ற கேள்வியைக் கேட்டுள்ளார்.
இது போன்ற சிறுபிள்ளைத்தனமான செயலை இதுவரை எந்த இயக்கத்தின் தலைவரும் செய்ததாக வரலாறு இல்லை.
ஐந்து இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டதாக பகிரங்கமாக அறிவிக்கப்படுகிறது. அதைப் பற்றி அந்தத் தலைவர்களோ அவர்கள் சார்ந்த இயக்கங்களோ எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்றால் அந்த இயக்கங்கள் அதில் சம்பந்தப்பட்டுள்ளன என்று சாதாரண அறிவு படைத்தவர்களே புரிந்து கொள்வார்கள்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இன்னார் கலந்து கொண்டார்கள் என்று கருணாநிதி கூறுவார். அதில் கருணாநிதியின் கையெழுத்து தான் இருக்கும்.
இதில் கலந்து கொண்ட தலைவர்களிடம் நீங்கள் உங்கள் இயக்கத்தில் சார்பில் கலந்து கொண்டீர்களா? உங்கள் இயக்கத்தின் ஒப்புதல் பெற்றீர்களா? என்று கேட்டால் எப்படி இருக்கும்? கருணாநிதியின் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜவாஹிருல்லாவிடம் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தால் கேட்டவரை கடித்துக் குதறியிருப்பார்.
(உணர்வு. உரிமை 10, குரல் 16. டிசம்பர் 23 லி 29, 2005. பக்கம் : 10)
பஷீர் அஹமதின் நடுநிலை
ஒருங்கிணைப்பாளர் பஷீர் அஹ்மத் பி.ஜே.வுக்கு வசதியாக நடந்து கொண்டுள்ளார். உணர்வு வார இதழ் வழக்கமாக திங்கட் கிழமை (நவம்பர் 28) இரவு அச்சுக்குச் செல்லும் என்பதால் அன்று பஷீர் அஹ்மத் கூட்டத்தை நடத்தியுள்ளார். கூட்டத்தில் பங்குகொண்ட அமைப்புகளும் திங்கட்கிழமை (நவம்பர் 28) கூடி உங்களுக்கு முடிவை அறிவிக்கிறோம் என்று கூறினார்கள் என்று பி.ஜே. உணர்வு இதழிலும் எழுதியுள்ளார். முன்கூட்டியே பி.ஜே.யின் விருப்பப்படி கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று பஷீர் அஹ்மத் பி.ஜே.யிடம் தெரிவித்திருக்கக் கூடும். மேலும் பஷீர் அஹ்மத் தனது கடிதத்தில் கூறப்பட்டுள்ளது பற்றி முடிவு தெரிவிக்க டிசம்பர் 10க்கு மூன்று தினங்களுக்கு முன்பாக பதில் தந்துவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த பின்னணியில் பார்க்கும் போது உங்கள் அனைத்து அமைப்புகளின் சார்பாக ஒருங்கிணைப்பாளராக தன்னை கடிதத்தில் அறிவித்துள்ள பஷீர் அஹ்மத்துக்கும், பி.ஜே.வுக்கும் ஒரு ரகசிய உடன்பாடு இருக்குமோ என்ற சந்தேகமும் எங்களுக்கு உள்ளதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம்.
பி.ஜே.யின் வசதிக்கேற்ப நடந்து கொண்டதால் பஷீர் அஹமது தலைமையில் சிறுபான்மை ஆணையத்தை சந்தித்த தேசிய லீக் கட்சியினரின் படம் உணர்வு பத்திரிகையில் முதல் பக்கத்திலேயே பிரசுரமானது கவனிக்கத்தக்கது. (உணர்வு வார இதழின் பத்தாண்டு கால வரலாற்றில் இதுவரை முதல் பக்கத்தில் பிற அமைப்புகளின் சமுதாய பணி படமாக பிரசுரிக்கப்பட்டதில்லை).
என்று தலைவர்களுக்கு தான் எழுதிய கடிதத்தில் சிண்டு முடியப் பார்க்கிறார் ஜவாஹிருல்லாஹ்.
பஷீர் அஹ்மத் அவர்களைப் பொறுத்தவரை நம்மைவிட தமுமுகவுடன் தான் தொடர்பும் நெருக்கமும் அதிகம்.தேசியலீக் தலைவர் சுலைமான் சேட் அவர்கள் மரணித்து புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்ட போது உடனடியாக அவரை தமுமுக அலுவலகம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்தவர் பஷீர் அஹ்மத். இதை தங்கள் பத்திரிகையிலும் பெருமையுடன் போட்டுக் கொண்டனர். (இதை அவர்கள் பத்திரிகையில் 1:50-ல் எழுதியுள்ளனர்)
சிறிய இடைவெளிக்குப் பின்னர் தவ்ஹீத் ஜமாஅத் தான் பேரியக்கமாக உள்ளது என்பதை நண்பர்கள் மூலம் அறிந்து கொண்ட பிறகு தான் தேசிய லீக் தலைவர் தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகம் அழைத்து வரப்பட்டார்.
மேலும் இந்த ஆண்டு நடந்த டிசம்பர் 6 போராட்டம் உள்பட பல சந்தர்ப்பங்களில் தேசிய லீக் தலைவரிடம் தமுமுக நன்கொடை பெற்றது. இந்த விவகாரம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் பஷீர் அஹ்மத் அவர்களைச் சந்திக்க நமது நிர்வாகிகள் சென்ற போது டிசம்பர் நிதி வசூலுக்காக தமுமுகவினர் அங்கு வந்திருந்ததைக் காண முடிந்தது.
ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்துக்காக தேசிய லீக் தலைவர் எந்த நிதியும் அளித்ததில்லை. நாம் கேட்டதுமில்லை.
தமுமுகவுக்கு இவ்வளவு நெருக்கமுடைய ஒருவர் எப்படி நமக்கு சாதகமாக முடிவு எடுப்பார்.
தேசிய லீக்கின் டிசம்பர்-6 போராட்டம் படத்துடன் கூடிய செய்தியாக தமுமுக பத்திரிகையில் கால் பக்கத்தை விட பெரிய அளவில் இடம் பெற்றிருந்தது (1:31). தேசிய லீக் கட்சியின் தீர்மானத்தையும் முக்கியத்துவத்துடன் 1:45 இதழில் வெளியிட்டனர்.
இன்னும் சொல்வதாக இருந்தால் தேசிய லீக் தலைவர் பஷீர் அஹ்மத் அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத் அலுவலகத்துக்கு இது நாள் வரை ஒரே ஒரு முறை தான் வந்துள்ளார். ஆனால் தமுமுக அலுவலகத்துக்கு ஏழெட்டு தடவை சென்று அதன் தலைவர்களைச் சந்தித்துள்ளார். பஷீர் அஹமதை ஹைதர் அலி உள்ளிட்ட தமுமுக மாநில நிர்வாகிகள் தேடிச் சென்றும் பல முறை சந்தித்துள்ளனர். இந்த அளவுக்கு தமுமுகவுடன் நெருக்கமாக உள்ள ஒருவருக்கு தமுமுகவுக்கு அநீதி இழைக்கும் அவசியம் ஏதும் இல்லை.
மேலும், தேசியலீக் தலைவர் நடத்தும் வீரசோழன் மதரஸாவில் ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் பணிபுரிகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஜமாஅத்துல் உலமாவும், தவ்ஹீத் ஜமாஅத்தும் கொள்கையில் ஒன்றுக்கொன்று நேரெதிரானவை. சுன்னத் ஜமாஅத் கொள்கையை நிலை நிறுத்த மதரஸா நடத்தும் பஷீர் அஹ்மத் அவர்கள் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு சாதகமாக எப்படி நடப்பார்.
சமுதாய மக்கள் அனைவருக்கும் தெரிந்த இந்த உண்மை தமுமுகவுக்கும் நன்றாகத் தெரியும். தெரிந்திருந்தும் தங்களின் நேர்மையின்மையை மறைப்பதற்காகவே ஒரு இயக்கத்தின் தலைவர் மீது வீண் பழி சுமத்தி மக்களை ஏமாற்ற முயன்றுள்ளனர்.
பஷீர் அஹ்மத் அவர்களை நாம் இந்த விவகாரம் தொடர்பாக சந்திக்கும் எந்த எண்ணமும் நமக்கு இருக்கவில்லை. பி.ஜே.வே நடுவர்களை அழைத்து வரட்டும் என்று தமுமுக அறிவிப்பதற்கு முன் இது தொடர்பாக நாம் அவரையோ மற்ற தலைவர்களையோ சந்தித்ததும் இல்லை.
அவர்களைச் சந்திக்கும் நிலைக்கு தமுமுகவே நம்மைத் தள்ளியதன் அடிப்படையில் தான் நாம் சந்தித்தோம். எனவே இது குறித்து ஏற்கனவே பேசப்பட்டிருக்கும் என்று எழுதியிருப்பது திட்டமிட்ட அவதூறு என்பதில் ஐயம் இல்லை.
(உணர்வு. உரிமை 10, குரல் 16. டிசம்பர் 23 லி 29, 2005. பக்கம் : 10)
தென் சென்னை ஃபித்ரா விநியோகம்
தென் சென்னை மாவட்டத்தின் ஃபித்ரா விநியோகம் 92,740 என்று மக்கள் உரிமை 2:27 இதழில் கணக்கு(?) வெளியிட்டுள்ளார்கள். ஆனால் தற்போது மக்கள் மன்றத்தில் (?) சமர்ப்பிக்கப்பட்டதாக அவர்கள் கூறும் கணக்கில் தென் சென்னை மாவட்டம் – 96,772 என்று குறிப்பிட்டுள்ளனர்.
அது மட்டுமல்ல! தென்சென்னை 92,740 என்று கணக்கு காட்டியதில் கே.கே.நகர், எம்.ஜி.ஆர். நகர் ஆகிய பகுதிகள் காலியாக விடப்பட்டுள்ளன. ஆனால், மக்கள் உரிமை 2:26 இதழில் கே.கே.நகரில் 18,700 விநியோகம் செய்ததாகவும், எம்.ஜி.ஆர். நகரில் 9,180 விநியோகம் செய்ததாகவும் படம் காட்டியுள்ளனர். இதையும் சேர்த்தால் 92,740+18,700+9,180 மொத்தம் 1,20,620 கணக்காகின்றது.
ஆனால், இவர்கள் மக்கள் மன்றத்தில்(?) சமர்ப்பித்த கணக்கில் 96,772 என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இது தான் அவர்கள் சமர்ப்பித்த கணக்கின் லட்சணம்!
இது அவர்களே வெளியிட்ட ஆவணங்களில் உள்ள கணக்கிலிருந்து தான் நாம் இதை எழுதியுள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது.
(உணர்வு. உரிமை 10, குரல் 16. டிசம்பர் 23 லி 29, 2005. பக்கம் : 10)
மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு!
மேலும் தங்கள் கூற்றுக்குச் சான்றாக(?) இரண்டு விஷயங்களை முன் வைத்துள்ளனர்.
உணர்வு இதழில் தேசிய சிறுபான்மைக் கமிஷன் தலைவரை தேசிய லீக் தலைவர்கள் சந்தித்த படம் உணர்வில் வெளியானது என்பது இவர்கள் எடுத்து வைக்கும் முதல் ஆதாரம்.
இது ஏன் என்பதை விளக்கும் அவசியம் நமக்கு உள்ளது.
நடுவர்களை அழைத்து வரும் பொறுப்பை பி.ஜே.யிடம் தமுமுக ஒப்படைத்ததால் ஆறு இயக்கங்களின் தலைவர்களை தவ்ஹீத் ஜமாஅத்தினர் நேரடியாக சந்தித்துள்ளனர்.
அந்தச் சந்திப்பின் போது பல விஷயங்களும் பேசப்பட்டது. தேசிய சிறுபான்மைக் கமிஷன் தலைவரைச் சந்தித்த விபரமும் பரிமாறிக் கொள்ளப்பட்டது. அப்போது நாங்களும் சந்தித்தோம் என்று கூறி அதன் படத்தை வழங்கினார்கள். உணர்வில் இதை வெளியிடலாமே என்று அப்போது கேட்டுக் கொண்டனர்.
இது கொள்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்பதாலும், ஏற்கனவே தேசிய லீக்கின் போராட்டங்கள் உணர்வில் வெளியிடப்பட்டதன் அடிப்படையிலும் சமுதாய நன்மை கருதி அவர்கள் நடுவர்களாக செயல்பட முன் வரும்போது அவர்களின் சமுதாயப் பணியை நாம் மதிக்கவேண்டும் என்ற அடிப்படையிலும் அந்தப்படம் வெளியிடப்பட்டது.
இதில் எந்த உள்நோக்கமும் இல்லை.
உணர்வு வார இதழின் பத்தாண்டு கால வரலாற்றில் இதுவரை முதல் பக்கத்தில் பிற அமைப்புகளின் சமுதாய பணி படமாக பிரசுரிக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர். அதிலும் உண்மை இல்லை. சிமி போன்ற அமைப்புகளின் நிகழ்ச்சிகள் முதல் பக்க செய்தியாக படங்களுடன் உணர்வில் வெளிவந்துள்ளன.
தப்லீக் ஜமாஅத் இஜ்திமா, முஸ்லிம் லீக் தலைவர் அப்துல் ஸமத் சாஹிப் மரணம் போன்றவையும் உணர்வின் முதல் பக்கத்தில் இடம் பெற்றுள்ளதை உணர்வு உள்ளவர்கள் யாரும் மறந்திடவில்லை.
அடுத்து தங்கள் கூற்றை நியாயப்படுத்த தமுமுக எடுத்து வைக்கும் மற்றொரு ஆதாரமாக நவம்பர் 28ஆம் தேதி உணர்வு தயாராகும் கடைசி நாளில் கொடுத்தது ஏன்? என்று தமுமுகவினர் கேட்கின்றனர்.
இதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. 28ஆம் தேதி அன்று தான் கடிதம் தரமுடியும் என்று கூறினார்கள். நாம் எப்படியாவது 27ஆம் தேதி தரமுடியுமா? என்று பலமுறை வற்புறுத்தினோம். 28ஆம் தேதியன்று தான் நாங்கள் கூடுகிறோம். அந்த முடிவை மறுநாள் தான் அனுப்பி வைப்போம் என்றனர்.
நள்ளிரவு என்றாலும் பரவாயில்லை. முடிவு செய்த பின் தயவு செய்து எங்களுக்குத் தெரிவியுங்கள். நாங்கள் நேரடியாக வந்து கடிதத்தைப் பெற்றுக் கொள்கிறோம் என்று கேட்டுக் கொண்டோம். அதன் அடிப்படையில் கடிதம் தயாரானவுடன் அந்தக் கடிதத்தை 28ஆம் தேதி இரவு நேரடியாகப் பெற்று வந்தோம்.
28ஆம் தேதியே பதில் தந்தால் நல்லது என்று கோரிக்கை வைப்பதில் எந்த முறைகேடும் இல்லை. இதுபோல் தமுமுகவும் தனக்கு விருப்பமான தேதியில் பதில் கடிதத்தைக் கேட்கலாம்.
28ஆம் தேதி கடிதம் தரப்பட்டதால் யாருடைய உரிமையாவது பறிக்கப்பட்டதா? இதனால் தமுமுகவுக்கு பாதிப்பு ஏற்பட்டதா? 29ஆம் தேதி கடிதம் தந்திருந்தால் அப்போது தமுமுக பொது விசாரணைக்கு உட்பட்டிருக்குமா?
தாங்கள் ஓட்டம் பிடித்ததற்கு எதையெல்லாம் காரணமாகக் கூறுகிறார்கள் என்பதை சமுதாயம் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறது.
எங்களை யாரும் விசாரிக்க முடியாது. எங்கள் இயக்கத்திற்குத் தான் நாங்கள் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்று நேரடியாக ஒரு வரியில் கூறிவிட்டுப் போக வேண்டியது தானே!
தமுமுகவினரே! உங்களின் அறிவை மக்கள் தவறாக எடை போட நீங்களே காரணமாகி விடாதீர்கள். சொல்வதை நேரடியாகச் சொல்லுங்கள்.
(உணர்வு. உரிமை 10, குரல் 16. டிசம்பர் 23 லி 29, 2005. பக்கம் : 11)
நடுவர்கள் யார்?
பி.ஜே. தமது பிரசுரத்தில் ஒருதலைப் பட்சமாக தானே நடுவர்களை நியமித்துக் கொண்டார்.
நடுவர்கள் பற்றி தமுமுகவிடம் முன்கூட்டி எதுவும் கேட்கவில்லை.
நியாயமாக அவர் என்ன செய்திருக்க வேண்டும்?
ஃபித்ரா கணக்குகள் பற்றியும், சுனாமி கணக்கு பற்றியும் மக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டு இருக்கிறது. ஆகவே, இருதரப்பு கணக்குகளையும் பொது தணிக்கைக்கும், விசாரணைக்கும் உட்படுத்த வேண்டும். அதற்கு நான் தயார்… தமுமுக தயாரா? என்று கேட்டிருக்க வேண்டும்.
நம் இருவரையும் மூன்றாவது தரப்பு விசாரிக்க வேண்டும் என்பது இப்போதுள்ள நிலை என்று ஒரு இடத்தில் பி.ஜே. எழுதுகிறார்.
நான் கேட்கிறேன்: அந்த மூன்றாவது தரப்பை ஒருதலைப் பட்சமாக நீங்கள் எப்படி முடிவு செய்தீர்கள்?
என்றும் தமுமுகவினர் தமது பத்திரிகையில் எழுதியுள்ளனர்.
நழுவியதற்கு இது தான் காரணம் என்றால் தமுமுக என்ன செய்திருக்க வேண்டும்?
நீங்கள் சுட்டிக் காட்டிய நடுவர்களில் இவர்களை மட்டும் தான் நாம் ஏற்போம். இவர்களை ஏற்க மாட்டோம் என்று கூறியிருக்க வேண்டும்.
அது போல் மேலும் இந்த இந்த இயக்கத்தையும் சேர்க்க வேண்டும் என்று கூறியிருக்க வேண்டும்.
இரு தரப்பும் ஒத்த கருத்தின் அடிப்படையில் யாரை நடுவர்களாக ஏற்கிறோமோ அவர்கள் விசாரிக்கட்டும் என்று தமுமுகவினர் எழுதியிருந்தால் அதை நாம் ஏற்றிருப்போம். பொது விசாரணைக்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்பதை அது பறைசாற்றியிருக்கும்.
அவ்வாறு எழுதாமல் நடுவர்களை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தது ஏன்? பி.ஜே.வே அவர்களை அழைத்து வரட்டும் என்று எழுதியது ஏன்?
பொது விசாரணைக்குத் தயார்! ஆனால் நடுவர் குழுவை மாற்றியமைக்க வேண்டும் என்று கோருவதை விட்டு விட்டு அவசரம் அவசரமாக மண்டபம் புக் செய்து, நடுவர் களைக் கேவலப்படுத்தும் நிபந்தனைகளைப் போட்டது நழுவியதன் அப்பட்டமான அடையாளம் அல்லவா?
தமுமுக என்ன தான் நழுவ முயன்றாலும் இதிலும் நாம் இறங்கி வரத் தயாராக இருக்கிறோம்.
மேற்கண்ட ஆறு இயக்கங்களில் யார் நடுவராக இருக்க வேண்டாம் என்று உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள்.
யார் நடுவராக இருக்க வேண்டும் என்பதையும் தெரிவியுங்கள்.
இரு தரப்பும் கூட்டாகவே நடுவர்களை முடிவு செய்து இரு இயக்கங்களின் நேர்மையை நிரூபிப்போம். தமுமுக நேர்மையான கணக்கை வைத்திருந்தால் இது அவர்களது வளர்ச்சிக்குத் தானே உதவும்.
இப்போதும் காலம் கடந்து விடவில்லை. தவ்ஹீத் ஜமாஅத் விசாரணைக் குழுவை மாற்றியமைக்க தயாராக உள்ளது.
அதே சமயம் தமுமுக கணக்குகளை விசாரிக்கும் போது குழுவில் தவ்ஹீத் ஜமாஅத் இடம் பெற வேண்டும். தவ்ஹீத் ஜமாஅத் கணக்கை விசாரிக்கும் போது குழுவில் தமுமுக இடம் பெற வேண்டும். அப்போது தான் இரு தரப்பினரும் விழிப் புடன் மற்றவர்களின் தவறைச் சுட்டிக் காட்ட முடியும்.
இதற்காவது தமுமுக ஒப்புக் கொள்கிறதா?
(உணர்வு. உரிமை 10, குரல் 16. டிசம்பர் 23 லி 29, 2005. பக்கம் : 11)
முஸ்லிம் டிரஸ்ட் சொத்து
முஸ்லிம் டிரஸ்டு மதுரை சொத்தை தொண்டி ஆசானுக்கு 29 வருடம் மீட்க முடியாத கண்டிஷன்களுடன் ஒத்தி என்ற பெயரில் கள்ளத்தனமாக தாரைவார்த்திருக்கும் தற்குறிச் செயல் ஆவணங்களை சமுதாய அமைப்புகளும் பார்த்துவிட நேருமோ என்று ஆவேசப்படுகிறார்.
என்று எழுதியுள்ளனர்.
முஸ்லிம் டிரஸ்டு சொத்தை 29 வருடங்களுக்கு குத்தகைக்கு விட்டது பற்றிய உண்மையை நன்றாகத் தெரிந்திருந்தும் திசை திருப்புகின்றனர். அவர்கள் புளுகுவதை ஒருக்காலும் விடவே மாட்டார்கள் என்பதற்கு இது ஆதாரமாக உள்ளது.
அவர்கள் சுட்டிக் காட்டும் அந்த இடம் நாம் ஒன்றாக இணைந்திருந்த காலத்திலேயே தவ்ஹீத் பள்ளிவாசலுக்காக விட்டுக் கொடுக்கப்பட்டது. இணைந்திருந்த காலங்களில் மூன்று ஆண்டுகளாக அது தவ்ஹீத் பள்ளிவாசலாக இயங்கி வருகிறது. ஐவேளைத் தொழுகை, ஜும்ஆத் தொழுகை, வாராந்திர குர்ஆன் வகுப்பு, ரமளான் இரவு வணக்கம் என்று நான்கு ஆண்டுகளாக இயங்கி வருகிறது.
மதுரை செல்லும் யாரும் இதைப் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். தவ்ஹீத் ஜமாஅத்தின் மதுரை நிர்வாகியாக தொண்டியைச் சேர்ந்த சகோதரர் இருந்ததன் அடிப்படையில் பள்ளிவாசலுக்காக அவர் பெயரில் வழங்கப்பட்டது என்ற உண்மை தெரிந்திருந்தும் புளுகுகிறார்கள்.
எந்தத் தனிநபருக்கும் குத்தகைக்கு விடப்படவில்லை. பள்ளிவாசலுக்குத் தான் வழங்கப்பட்டது. தமுமுகவின் சொத்துக்கள் ஜவாஹிருல்லாஹ் பெயரில் இருந்ததால் அவர் தனக்காக எழுதிக் கொண்டார் என்று கூறினால் அதை ஏற்றுக் கொள்வார்களா? ஒரு இயக்கத்துக்காக வழங்கினாலும் இயக்கம் கையெழுத்துப் போடாது; இயக்கத்தின் சார்பில் மனிதர்கள் தான் போடுவார்கள். அந்த அடிப்படையில் பள்ளிவாசல் சார்பில் தொண்டி கலீல் என்பவர் கையெழுத்திட்டுள்ளார். இதுதான் உண்மை.
இவர்கள் நழுவக் கூடாது என்பதற்காக இதையும் விசாரணைக்கு உட்படுத்த நாம் தயார். இப்போதாவது முன்வருவார்களா?
(உணர்வு. உரிமை 10, குரல் 16. டிசம்பர் 23 லி 29, 2005. பக்கம் : 11)
மக்கள் எழுப்பும் கேள்விகள்
பி.ஜே. கேள்வி எழுப்பும் வரை 35 லட்சம் மீதியிருப்பதாகச் சொல்லாதது ஏன்?
பேரிடர் பாதுகாப்பு மையம் கட்டிக் கொடுக்கப்படும் என்று அறிவிக்க இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டது ஏன்?
மக்களுக்கு வீடு கட்டிக் கொடுப்பதாக நிதி திரட்டிவிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்காமல் பேரிடர் பாதுகாப்பு மையம் அமைப்பதாகக் கூறுவது என்ன நியாயமாகும்?
அடுத்த சுனாமி நாகூரில் தான் வரும் என்று இவர்களுக்கு வஹீ ஏதும் வந்ததா?
25 லட்சம் ரூபாயில் ஒரு நல்ல வீடு கட்டலாம்! சுனாமியைத் தாக்குப் பிடிக்கும் வகையில் கட்டப்படும் பேரிடர் பாதுகாப்பு மையம் எந்த லட்சணத்தில் இருக்கும்.
பேரிடர் பாதுகாப்பு மையம் என்ற பெயரில் திருமண மண்டபம் கட்டி தமுமுகவின் சொத்தாக அது இருக்குமா? சுனாமி வராத காலங்களில் வாடகைக்கு விட்டு வருமானம் பார்க்குமா? தமுமுக தலைமை விரும்பினால் அதை விற்பனை செய்து விட்டு காசாக ஆக்கிக் கொள்ளும் வகையில் கட்டப்படுமா? அல்லது அரசிடம் ஒப்படைக்கப்படுமா?
தமுமுகவின் கல்யாண மண்டபமாக இருந்தால் இயக்கத்திற்கு சொத்து சேர்ப்பதற்குத் தான் அந்த மக்கள் வழங்கினார்களா?
என்ற ஏராளமான கேள்விகளுக்குப் பதில் என்ன?
(உணர்வு. உரிமை 10, குரல் 16. டிசம்பர் 23 லி 29, 2005. பக்கம் : 12)
கால் புள்ளி முற்றுப்புள்ளியாகாது!
பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம். எங்களுக்கு த.ந.த.ஜ. அமைப்பின் உறுப்பினர்கள் யாரும் எதிரிகள் அல்லர். அவர்களும், சகோதரர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவர்கள் தனி இயக்கம் கண்டிருக்கிறார்கள். அவர்கள் நற்பணிகள் செய்தால் அதற்கான கூலியை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்ளட்டும்.
தமுமுகவினர் தங்களின் வார இதழில் மேற்கண்டவாறு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம் என்று எழுதியுள்ளார்கள்.
இவர்களின் அகாராதியில் முற்றுப்புள்ளி என்பதற்கு அர்த்தம் தான் தப்பாக இருக்கிறது.
அதாவது தமுமுக பெயரில், தங்கள் பத்திரிகையில் அவதூறுப் பிரச்சாரம் செய்யமாட்டோம் என்பது தான் இதன் பொருள்.
கள்ள வெப்சைட் மூலம் அவதூறு பரப்புவது,
தங்களால் கயவர்கள் என்று அறிவித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டவர்களின் அவதூறுப் பிரசுரங்களை பரப்புவது.
பி.ஜே. மட்டுமின்றி, ஸைஃபுல்லா, பாக்கர், லுஹா, கலீல், ரசூல் உள்ளிட்ட பலருக்கும் எதிரான அவதூறுப் பிரசுரங்களைப் பரப்பியவர்கள் இவர்கள் தான். கட்டிங் புகழ் பேர்வழியைத் தூண்டிவிட்டு டவுசர் கார்ட்டூன் போட்டவர்களும் இவர்கள்தான்.
இது போன்ற ஈனத்தனமான செயல்களைச் செய்யாமல் இருப்பார்களேயானால் அவர்கள் தங்கள் கூற்றில் உண்மையுள்ளவர்கள் என்று நாமும் எடுத்துக் கொள்வோம்.
பினாமி நடவடிக்கைகளை கொல்லைப்புறமாக அவர்கள் தொடர்வார்களேயானால் இவர்களைப் போல் பினாமியாக அதை எதிர்கொள்ள மாட்டோம். சொந்தப் பெயரிலேயே அதை எதிர் கொள்வோம் என்பதை சமுதாயத்துக்கு நாம் தெரிவித்துக் கொள்கிறோம்.
(உணர்வு. உரிமை 10, குரல் 16. டிசம்பர் 23 லி 29, 2005. பக்கம் : 12)
வாசகர் மன்றம்
கடைத் தேங்காய் வழிப் பிள்ளையாருக்கா?
அல்லாஹ் கூறுகிறான் (நபியே!!) வேதத்தையுடையோரில் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் நீர் ஒரு (பொற்) குவியலை ஒப்படைத்தாலும், அவர்கள் அதை (ஒரு குறைவும் இல்லா மல், கேட்கும்போது) உம்மிடம் திருப்பிக் கொடுத்து விடுவார்கள். அவர்களில் இன் னும் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் ஒரு (காசை) தீனாரை ஒப்படைத்தாலும், நீர் அவர்களிடம் தொடர்ந்து நின்று கேட்டாலொழிய, அவர்கள் அதை உமக் குத் திருப்பிக் கொடுக்கமாட்டார்கள். அதற் குக் காரணம், பாமரர்களிடம் (இருந்து நாம் எதைக் கைப்பற்றிக் கொண்டாலும்) நம்மை குற்றம் பிடிக்க (அவர்களுக்கு) வழியில்லை என்று அவர்கள் கூறுவதுதான். மேலும், அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் பேரில் பொய் கூறுகிறார்கள். (அல்குர்ஆன் 3:75)
மேலே காண்பது மதீனாவில் வாழ்ந்த யூதர்களைப் பற்றிக் கூறும் வசனமாகும். சுனாமி ஏற்பட்டு ஒரு வருடத்தைக் கடந்தும் இங்கிருந்து வசூல் செய்து அனுப்பிய சகோதரர்கள் தொடர்ந்து அவர்களது தலைமைக்கு தபால் எழுதியும் அவை செவிடன் காதில் ஊதிய சங்காக ஆனப் பிறகு பி.ஜே. அவர்கள் கேட்ட பின்பே தங்களை சுதாரித்துக் கொண்டவர்களாக (அதுவும் முறையாக இல்லாமல்) கணக்குக்காட்டும் படலம் முழுக்க முழுக்க ஒரு நாடகமாகவே அரங்கேறியது.
இவர்களை யூதர்களுடன் ஒப்பிட்டு உவமை கூறுவதால் தமுமுகவினர் வருத்தப்படக் கூடாது. இப்படிப்பட்டவர்கள் எல்லாம் தோன்றுவார்கள் என்பது இறை வாக்காகும்.
சுனாமி நிதியில் மீதமுள்ள தொகையில் நாகை மாவட்ட ஆட்சியர் அறிவுரைக்கேற்ப நாகூர் அருகே சுமார் 25 லட்ச ரூபாய் செலவில் அனைத்து மக்ளுக்கும் பயன்படும் வகையில் பேரிடர் பாதுகாப்பு மையம் கட்டப்பட உள்ளதாகவும், மற்று மொரு ஐந்து லட்சத்தில் காரைக்காலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர பயன் தரும் கட்டமைப்பை மாவட்ட நிர்வாகத்தின் ஆலோசனையின் அடிப்படையில் தமுமுக விரைவில் பயன்படுத்தும். என தமுமுகவின் அதிகாரப்பூர்வ இணைய தளம் 10.12.05 அன்று வெளியிட்ட செய்தியாகும்.
அரசிடமிருந்து சலுகைகளைப் பெற்று ஒடுக்கப்பட்டோருக்கு வழங்குவதற்காக உருவாக்கப்பட்டது தான் தமுமுக. அதன் அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் பாதுகாப்பு பேரியக்கம் என்று இன்றளவும் அவர்களது இணையத்தில் பளிச்சென மின்னிக் கொண்டிருப்பதைக் காணலாம்.
நாங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சேவைகள் செய்யப் போகிறோம். நீங்கள் இதற்குள் இருந்து கொண்டு மார்க்க மஸாயில்கள் பேசுவது, எங்களுடைய செயல்பாடுகளுக்கு மாபெரும் தடையாக இருக்கிறது. மக்கள் வந்து அணி அணியாக இணைவதற்கும் பெரும் முட்டுக்கட்டை யாக இருக்கிறது. ஓடி விடுங்கள்! என்று கூறினார்கள். சரி ஒடுக்கப்பட்டோருக்காக நன்றாக குரல் கொடுக்கட்டும். இயன்றளவு அரசிடமிருந்து சலுகைகளை பெற்றுக் கொடுக்கட்டும். நாம் ஏன் முட்டுக் கட்டையாக இருக்க வேண்டும். ஒதுங்கிக் கொள்வோம் என்று ஒதுங்கிக் கொண்டோம்!
அரசிடமிருந்து சலுகைகளைப் பெற்ற ஒடுக்கப்பட்டோருக்கு வழங்க வேண்டியவர்கள் ஒடுக்கப்பட்டோரிடமிருந்து பிடுங்கி அரசுக்கு கொடுக்கப் போகிறார்களாம்.
நாகை மாவட்ட ஆட்சியர் எப்போது தமுமுகவின் ஆலோசனைக் குழு உறுப் பினரானார்? என்று தெரியவில்லை. ஆனாலும், பேரிடர் பாதுகாப்பு மையம் அமைத்துக் கொடுத்தால் நல்லது என்று ஆலோசனை தான் கூறியிருப்பாரே தவிர கட்டிக் கொடுத்துத் தான் ஆக வேண்டும் என்று அடம் பிடித்திருக்க மாட்டார்.
அய்யா! இது சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென்று வசூல் செய்ததாகும். அவர்களுக்கே முறையாக இதை சேர்த்தாக வேண்டும்.
இயற்கை சீற்றத்தால் எளிதில் அபாயத்தை நோக்கும் நாகூர், போன்ற இடங்களில் பேரிடர் மையங்களை அமைக்க அரசுக்கு எடுத்துக் கூறி, அரசை கட்டித் தரச் சொல்லி நீங்கள் வற்புறுத்துங்கள். அதற்கு நீங்களே மிகவும் தகுதியானவர்கள். மேற்குறிப்பிட்ட ஊர்கள் உங்களது ஆட்சிக்குட்பட்ட மாவட்டத்தில் உள்ளவைகளாகும் என்று கூறினால் இன்னும் அவர் சந்தோஷப்பட்டிருப்பார். அவைகளை அமைத்துத் தருவதற்கு மாபெரும் முயற்சியை மேற்கொண்டிருப்பார்.
அதை விட்டு அவர் ஆலோசனை கூறினார் என்பதற்காக திக்கற்ற நிலையில் உள்ள மக்களுக்கு கொடுக்க வேண்டியதை அரசுக்கு தாரை வார்த்து விடலாமா?
பேரிடர் பாதுகாப்பு மையம் அமைப்பது அரசுடைய பணி. இதை செய்து கொடுக்க நீங்கள் யார்? 33 லட்சமும் உங்கள் வீட்டுப் பணமா? அடுத்தவனுடைய பணம். கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கலாமா?
அவரவர்களுக்குரிய பாத்தியத்தை முறையாக அவரவர்களுக்கு சேர்ப்பது ஒரு முஃமினுடைய கடமையல்லவா?
இது விஷயமாக என் மீது வழக்குத் தொடர்வதாக இருந்தாலும் வழக்குத் தொடர்ந்து கொள்ளுங்கள். நீதி மன்றத்தில் சந்திக்கிறேன் என்று பி.ஜே. தனது சவாலில் குறிப்பிட்டிருந்ததால், ஒருவேளை நம்மீது வழக்குப் பாய்ந்து விடுமோ என்று பயந்தவர்கள் அரசைக் குளிப்பாட்டும் விதமாக 33 லட்சம் ஏழை நிதியை அரசுப் பணிக்காக ஒதுக்குவதாக அறிவித்தார்கள் என்று அறிவு ஜீவிகள் தமுமுகவினரின் காதுகளில் விழும்படியாகக் கூறுகிறார்கள்.
சுனாமியில் பிள்ளைகளை இழந்து திக்கற்று நிற்கும் தாய் தந்தையரும், தாய் தந்தையரை இழந்து எவராவது நம்மை தத்தெடுத்துக் கொள்ள மாட்டார்களா என்று ஏங்கும் பிள்ளைகளும். தாய் தந்தையரை இழந்து எவராவது செலவு செய்து நமக்கு திருமணம் செய்து வைக்க மாட்டார்களா? என்று பரிதவிக்கும் இளம் பெண்களும், கணவனை இழந்த பெண்கள் எவராவது எந்த அமைப்பாவது செலவு செய்து மறுமணம் செய்து வைக்க மாட்டார்களா? என்று காத்திருக்கும் கைம்பெண்களும், உடல் உறுப்புகளை இழந்தவர்கள் ஒரு பெட்டிக்கடை வைத்துக் கொடுக்க எவரும் முன்வருவார்களா? என்று ஏங்கித் தவிக்கும் ஊனமுற்றோரும், பேரலைகளுக்கிடையே தங்களது படகுகளை இழந்தவர்கள் எவராவது நமக்கு ஒரு படகு வாங்கித் தரமாட்டார்களா என்று ஏங்கும் ஏழை மீனவர்களும் தங்களைச் சேர வேண்டிய லட்சக் கணக்கான பணங்கள் அரசுப் பணிக்கு செலவிட இருப்பதை அறிந்து ஆங்காங்கே இறைவனிடம் முறையிட்டார்களேயானால் உங்கள் நிலைமை இம்மையிலும் மறுமையிலும் என்னவாகும் என்பதை சிந்தித்துக் கொள்ளுங்கள். சுனாமி பாதிப்பு என்பது பாதிப்பிற்குள்ளானோரை குறைந்தது ஐம்பது வருடம் பின்னோக்கி இட்டுச் சென்று விட்டதாக ஆய்வறிக்கைகள் கூறின. இந்த ஒரு வருடத்திற்குள் அவர்கள் தன்னிறைவு பெற்றுவிட்டதாக பேராசிரியர் நினைக்கிறாரா?
இன்னும் 2004, மற்றும் 2005 ஃபித்ரா கணக்கு முறையாக சமர்ப்பிக்கப்படவில்லை. மீண்டும் அவைகளும் வீரியம் பெற்றால் சுதாரித்துக் கொண்டு அருகில் உள்ள கலெக்டரை அழைத்து வைத்து, அவரது ஆலோசனை என்று சொல்லி வாணியம்பாடிக்கும், சென்னைக்கும் நெடுஞ்சாலை அமைத்துத் தருவதாக வாக்களிப்பீர்களா?
அல்லாஹ் கூறுகிறான்: யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியை யும் தம் சத்தியப் பிரமாணங்களையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக மறுமையில் யாதொரு நற்பாக்கியமும் இல்லை. அன்றியும், அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான். இன்னும் இறுதி நாளில் அவன் அவர்களை (கருணையுடன்) பார்க்கவும் மாட்டான். அவர்களைப் (பாவத்தை விட்டு) பரிசுத்தமாக்கவும் மாட்டான். மேலும் அவர்களுக்கு நோவினை மிக்க வேதனையும் உண்டு.
(அல்குர்ஆன் 3:77)
எதற்காக யாரிடம் வாக்களிப்பட்டதோ அதையே செய்ய வேண்டும். அதை மீறக்கூடாது என்பதையே மேற்காணும் திருமறைவசனம் எச்சரிக்கிறது.
– உமர் ரியாத்
(உணர்வு. உரிமை 10, குரல் 16. டிசம்பர் 23 லி 29, 2005. பக்கம் : 14)
இறைவனின் நீதிமன்றத்தில் நியாயம் கேட்பேன்
குமுறும் முன்னாள் தமுமுக நிர்வாகி
தமுமுக – தமிழக முஸ்லிம்களின் பாதுகாப்பு அரண், நேர்மை, நியாயம் முதலியன மிகைத்துக் காணப்படுகின்றது என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்த காலங்கள் மலையேறிப் போனது. தற்போது மிஞ்சி இருப்பது பொய்யர்களும், அநியாயக்காரர்களுமே என்பது கசப்பான உண்மை. ஒரு சமுதாய அமைப்பிற்கு தலைமை ஏற்கும் தகுதியை அறவே இழந்தவிட்டவரான பேரா. ஜவாஹிருல்லாஹ்வை – இத்தனை நாளும் தலைவனாக ஏற்று அடிமைப்பட்டுக் கிடந்தோமே என எண்ணும் போது வெட்கித் தலை குனிகிறேன்.
தமுமுகவின் கொள்கை (?) பரப்பு இதழான மக்கள் உரிமை டிச. 16-22ல் வெளியான என்னைத் தொடர்பு படுத்திய செய்தியில்….
சேலத்தில் பணமோசடியில் ஈடுபட்டு அதனால் நிர்வாக நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் இருந்தவர் என்று புகழாரம் சூட்டுகின்றனர் தன்னிகரில்லா தலைவர்கள், சேலத்தில் அமைப்பு தொடங்கப்பட்டதிலிருந்து சுமார் 6 ஆண்டுகள் தொடர்ந்து அனைத்து பொறுப்புகளிலும் இருந்து வந்த நான் சொந்தப் பணிகளை விட, இயக்கப் பணிகளுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்பட்ட காரணத்தினால் சொந்த தொழில் மையத்தை நடத்தி வந்த நான் பெரும் பொருளாதார நஷ்டப்பட்டு இருந்த சூழ்நிலையிலும் என் மீது திணிக்கப்பட்ட பொறுப்பை ஏற்று செயல்பட்டு வந்தேன். இதை சேலத்தைச் சேர்ந்த தமுமுகவினரும் அறிவர். மாநிலச் செயலாளர் ஒருவரும் நன்கு அறிவார். இவர்கள் அனைவரையும் விட ஏகன் அல்லாஹ்வே மிகப்பெரிய சாட்சி! அச்சமயங்களில் எல்லாம் என் மீது எழாத பணமோசடி குற்றச்சாட்டு உணர்வு வார இதழில் என்னுடைய இராஜினாமா கடிதத்திற்கு பிறகு புனையப்பட்டது ஏனோ?
கடந்த இரு வாரங்களுக்கு முன் உணர்வு வார இதழில் வெளிவந்த என்னுடைய மடலில். நான் குறிப்பிட்ட நடுநிலையான கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இல்லாத தமுமுகவினர் தங்களுடைய மூளை வறட்சியின் காரணமாக – குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதையாக என் மீது அபாண்டமாக பணமோசடிப் புகாரை எழுப்பியுள்ளனர். கற்புள்ள பெண்ணை விபச்சாரியாக சித்தரித்தால் குமுறி வெடிப்பாள் என்று நியாயம் பேசும் நியாயவான்கேள!
நான் யார் யாரிடம் மோசடி செய்தேன். எவ்வாறு மோசடியானது. என்னால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? எந்த விதமான புகார் என் மீது வந்தது என்பதை கூற முடியுமா?
நிர்வாக நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையிலிருந்தவர் என்று குறிப்பிடும் – மூளை வறட்சிக்கும்பல் – என் மீது எந்த விதமான நடவடிக்கை, எப்போது எடுக்கப்பட்டது என்பதை தெரியப்படுத்துமா?
நான் சேலம் மாநகர தமுமுக செயலாளராக கடந்த 27.11.05 வரை பொறுப்பில் இருந்துள்ளேன். இந்நிலையில் பணமோசடி மீதான நடவடிக்கை எடுக்கப்பட்டது எப்பொழுது?
தமுமுகவின் நம்பகத்தன்மை வெளிப்பட வேண்டும். மீண்டும் சகோ. பி.ஜே. போன்றோர் தமுமுகவை வம்பிழுக்கக் கூடாது என்ற நோக்கில் நான் இராஜினாமா செய்தேன். என்னுடைய இராஜினாமாவைப் பற்றியோ, என்னுடைய கருத்துக்களைப் பற்றியோ இதுவரை என்னிடம் கருத்து கேட்காத தமுமுக தலைமை என்னைப் பற்றி ஆதாரமில்லாத செய்தியை தங்கள் பத்திரிகையில் பிரசுரித்து சிற்றின்பம் அடைந்துள்ளது.
ஆனால் உண்மை நிலை என்னவெனில்… தமுமுகவைச் சேர்ந்த நல் உள்ளம் கொண்ட இரு சகோதரர்களிடம் நட்பு ரீதியாக கடன் பெற்றிருந்தேன். இயக்கத்தின் பொறுப்பிலிருந்து நான் இராஜினாமா செய்தவுடன் சம்பந்தப்பட்ட சகோதரர்களுக்கு தொடர்பு கொண்டு கடனை திருப்பித்தர சிறிது கால அவகாசம் கேட்டேன். அவர்களும் மறுப்பு ஏதும் இன்றி ஏற்றுக் கொண்டார்கள்.
இதை சம்பந்தப்பட்ட சகோதரர்கள் அறிவர். ஏகன் அல்லாஹ்வே இதற்கு சாட்சி.
இந்நிலையில் உணர்வு இதழில் என்னுடைய கடிதம் ஏற்படுத்திய தாக்கம் காரணமாக தமுமுக மாநில நிர்வாகிகளின் தூண்டுதலின் பேரில் என் மீது ஏதாவது ஓர் பழியைப் போட வேண்டும் என்கிற ஒரே நோக்கில் நான் கடன் பெற்றவர்களிடம் சென்று நான் கடன் பெற்றுக் கொண்டு கால தாமதம் செய்வதாகவும், தர மறுப்பதகாவும் எழுதிக் கொடுக்கச் சொல்லி வற்புறுத்தி உள்ளனர். எழுதியும் வாங்கி உள்ளனர். இதை வைத்துக் கொண்டு மிரட்டல் தொணியில் நடந்து கொண்ட சம்பவங்களும் நடந்தேறின. நேற்றைக்கு வரையில் நண்பர்களாக செயல்பட்டவர்கள். தமுமுக தலைமைக்கு எதிராக என்னுடைய கருத்துக்கள் இருந்த காரணத்தினால் இன்று… சங். கும்பலைவிட மோசமாக நடந்து கொண்டுள்ளனர். இயக்க வெறி இவர்களின் கண்களை மறைத்துள்ளது. என் மீதான அபாண்டமான குற்றச்சாட்டுகளையும், மோசடிப் புகார்களையும் இறைவனின் சாட்சி கொண்டு மறுப்பதுடன், என் மீது அபாண்டம் சுமத்திய ஜவாஹிருல்லாவையும், அவரது கூட்டாளிகளையும் இறைவனின் நீதிமன்றத்தில் நிறுத்தி நியாயம் தேடுவேன். இன்ஷா அல்லாஹ்…
சுனாமி மற்றும் ஃபித்ரா கணக்குகள்
மக்கள் மன்றத்தில் சமர்ப்பித்த தமுமுக எனும் வசனத்துடன் நடந்து முடிந்த திருவிளையாடல் மக்கள் காதில் பூ சுற்றும் விதமாகவே அமைந்திருந்தது. சுனாமியின் கோரத் தாண்டவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போய்ச் சேர வேண்டும் என்கிற ஒரே நோக்கில் முஸ்லிம் சமுதாயத்தின் ஒவ்வொரு ஆத்மாவும், பாலை சுடுமணலில் கஷ்டப்பட்டு வாரி இறைத்த நன்கொடையும் சம்பந்தப்பட்ட பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு போய்ச் சேர்ந்ததா? என்பதே முக்கிய கேள்வி. இதில் உண்மை நிலை சமுதாய மக்கள் அனைவர்க்கும் போய்ச் சேர வேண்டுமே தவிர தமுமுகவினருக்கு மட்டும் படம் காட்டுவது அல்லவே!
முஸ்லிம் சமுதாய மக்களின் பிரதிநிதிகளாக இருப்பவர்களிடம் தங்களுடைய கணக்குகளை சரிபார்க்க வேண்டுமே தவிர தங்களுடைய நண்பர்களிடம் காட்டுவது அல்ல!
தமுமுகவின் தலைவர்கள் – முஸ்லிம் சமுதாய பிரமுகர்களான பஷீரையோ, சைய்யத் சத்தாரையோ, அப்துர்ரஹீமையோ, அப்துல் காதிர் பாகவியையோ, தர்வேஸ் ரஷாதியையோ ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக கருப்பன், சோலை, ஆரோக்கியராஜ், குப்பன், சுப்பன் ஆகியோரை முக்கியமாக கருதுகின்றனர் போலும்!
எது எப்படி இருப்பினும் தங்களிடம் சரியான கணக்குகள் இருந்தால் மக்கள் மன்றத்தில் வெளியிட்டு அனைவரையும் வாயடைக்க வைத்து இருக்கலாம். அதை விட்டுவிட்டு நடுநிலையான சமுதாய கவலை கொண்டு சமாதானம் பேச வந்தவர்களை தாறுமாறக விமர்சனம் செய்வது எந்த வகையில் நியாயம் என்பதே கேள்வி.
அசுரகதியில் வளர்ந்து கொண்டு இருந்த தமுமுகவில் தவ்ஹீத் ஜமாஅத்தினரால் (அவர்கள் பாணியில்), முட்டுக்கட்டை என்று கூறி, சகோ. பி.ஜே. போன்றோர் விலகுவதற்கு நிர்பந்தம் ஏற்படுத்திய தமுமுகவினர் சகோ. பி.ஜே. விலகிய பின், ஒவ்வொரு அரபிக்கல்லூரிகளிலும், பள்ளிவாசல்களிலும் ஏறி உலமா பெருந்தகைகளை தாஜா செய்து இப்பொழுது தமுமுக சுத்தமான(?) அமைப்பாக ஆகிவிட்டது. நமக்கு ஒத்துழையுங்கள் என்று கூறிய பொழுதெல்லாம் ஜமாஅத்துல் உலமாவினர் இனித்தார்கள். ஆனால் இன்று சமுதாய நன்னோக்கோடு இருதரப்பினரின் பூசல் மறைய வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்பட்டவர்களின் செயல் தமுமுகவினருக்கு நெருடலை ஏற்படுத்திய ஒரே காரணத்திற்காக ஜமாஅத்துல் உலமா முரண்பட்ட ஜமாஅத்தாக ஆகிவிட்டதோ?
அன்புடன்
அ. முஹம்மது ஹூஸைன், சேலம்
(உணர்வு. உரிமை 10, குரல் 17. டிசம்பர் 30, 2005 லி ஜனவரி 05 2006. பக்கம் : 13)
நேற்றைய சிந்தனையும் இன்றைய நிந்தனையும்
காலத்திற்கு காலம் நிறம் மாறுவது, தடம் மாறுவது மற்றும் வழி மாறுவது ஒரு சில மக்கள் உரிமையாகும். அந்த உரிமைகளை நக்கல் செய்யும் நோக்கம் நமக்கல்ல என்பதை முதலிலேயே தெரிவித்துக் கொள்கிறோம். அண்ணன் என்பார்கள் பின்னர் அபுஜஹில் என்பார்கள். ஜகாத் விஷயத்தில் சரி என்றார்கள் பின் அதுவே ஒரு சதி என்றார்கள். அழகிய வடிவமைப்பு அடக்கமான விலை என்று கூறிய குர்ஆன் மொழியாக்கத்தை, அநியாய விலை, அடுக்குமா இது என்றார்கள்.
சொல்வதை நேருக்கு நேராவது சொன்னார்களா என்றால் அதுவும் இல்லை. உலக இணைய தள வரலாற்றிலேயே முதன் முறையாக அவதூறுக்கு என்று தனி வலைத்தளம் கண்டு அதில் இளையவன் முதியவன் என்ற பொய்ப் பெயர்களில், புனைந்த கதைகளைத் தவழவிட்டார்கள். அதன் மிச்ச சொச்சத்தை பினாமி பெயர்களில் பள்ளிக்கு பள்ளி வினியோகித்து மக்கள் மத்தியில் மதி கெட்டு நின்றார்கள். இதுவரை கள்ள வெப்சைட் பற்றி மறுப்போ ஆதரவோ வெளியிடாததன் மூலம் தங்களுக்கு முதுகெலும்பு இல்லை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போல் 24 பக்க அதிகாரப்பூர்வ அவதூறு ஏட்டில் நடுவர் குழுவினரையும் வம்புக்கிழுத்து தங்களது நரித்தனத்தை நாடு முழுக்க வெட்ட வெளிச்சமாக்கினார்கள்.
இந்த வகையில் ஜமாஅத்தே இஸ்லாமி பற்றி பீ.ஜே. கொண்ட நிலைப்பாடு என்னவென்பது அவர்களுக்குத் தெரியும். அப்போதெல்லாம் அதை சரி கண்டார்கள். இப்போது வழக்கம் போல் தவறாகப்படுகிறது. மவ்லானா மவ்தூதியை பீஜே. விமர்சித்த போது உடன் இருந்து ஆமோதித்த இவர்கள் இப்போது ஏதோ புதிதாக விமர்சித்தது போல் கதையை மாற்றுகிறார்கள்.
ஜமாஅத்தே இஸ்லாமி இயக்கத்தை காரிஜிய்யா இயக்கம், வழிகெட்ட கூட்டம் என்று ரமளான் டி.வி. தொடர் நிகழ்ச்சியில் பி.ஜே. பேசியதாக புளுகித் தள்ளி இருக்கிறார்கள். அந்தத் தொடரை தொடர்ந்து பார்த்தவர்களுக்கு புரியும். இவர்கள் தொடர் புளுகர்கள் என்பது.
ஹைதர் அ;இக்கு ஏது சுமோ? என்று பிரசுரம் போட்டவர்களோடு எல்லாம் இப்போது கைகோர்த்து விட்டால் களங்கம் துடைத்தெறியப்பட்டு விடுமா?
49 என்றும் 51 என்றும் அனுப்பினேனே பாவிகளா! என்ன செய்தீர்கள்? என்று இவர்களை கேள்வி கேட்ட இ……ஹி எல்லாம் இப்போது அவதூறு ஆலோசகர்கள். வண்டி வண்டியாய் குப்பைகளை வாரிக் கொட்டிய வாட்ச் ரிப்பேர்காரர் இப்போது மதி மந்திரி.
ஒரே ஒரு கேள்வி மட்டும் பொது மக்கள் சார்பில் கேட்க விரும்புகிறோம். , அவது று இணையதளத்தை இழுத்து மூடி விட்டு ஒரேயொரு முறையாவது பினாமி பெயரில் இல்லாமல் இயக்கத்தின் பெயரில் குற்றச் சாட்டுக்களை சொல்வதற்கு திராணி இருக்கிறதா? அவ்வாறு செய்தீர்கள் என்றால் உங்களை குறைந்த பட்சம் முதுகெலும்பு உள்ளவர்கள் என்றாவது ஒத்துக் கொள்வோம். ஏனெனில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தோ அதன் தலைவரோ தங்களது பெயரில்தான் உங்களைத் தோலுரித்துக் காட்டி வருகிறார்கள் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். பத்திரிகைத் துறைக்கே உரித்தான புனைப்பெயர் கலாச்சாரத்தை அவதூறு பரப்புவதற்கும் பயன்படுத்தலாம் என்ற குறுக்கு வழியை முதன் முத-ல் அரங்கேற்றிய பெருமையும்(?) உங்களையே சாரும். சமுதாயப் பணியோடு நிறுத்திக் கொண்டால் இழந்த பெயரை தக்க வைக்கலாம். சாக்கடை பாணியைத் தொடர்ந்தால் மக்கள் மத்தியில் மேலும் நாற்றமெடுத்து தான் போவீர்கள்!
– கே.எஸ்.ஹமீது சுல்தான்,
துபாய்.
(உணர்வு. உரிமை 10, குரல் 17. டிசம்பர் 30, 2005 ஜனவரி 05 2006. பக்கம் : 13)
அன்று உணர்வு ஏட்டில் நாம் எழுதிய இச்செய்தியில் இருந்து தமுமுக வினர் சுனாமியில் சுருட்டி விட்டனர் என்பது எப்படி எல்லாம் நிரூபண்மாகியுள்ளது என்று தொகுத்துப் பாருங்கள்.
சுனாமிக்கு நிதி திரட்டும் போது வீடுகள் கட்டித் தருவோம் என்று சொன்னார்கள். ஆனால் ஒரே ஒரு வீடு கூட கட்டித் தரவில்லை.
பாதிப்பணத்தை செலவிட்டு விட்டு மீதிப் பணம் இருக்கிறது என்றார்கள். அதில் நாகூரில் ஒரு திருமன மண்டபம் கட்டி அதை தமுமுகவின் சொத்தாக வைத்திருக்கிறார்கள் அதாவது சுனாமி நிதியில் 30 லடச்ம் ரூபாய்க்கு சொத்து வாங்கி இயக்கத்துக்கு வைத்துக் கொண்டார்கள.
காரைக்காலில் ஐந்து லட்சத்துக்கு ஏதோ கட்டப் போவதாக கணக்குக் காட்டும் நாடகத்தில் சொன்னார்கள் . ஏழு ஆண்டுகள் கடந்தும் என்ன வாங்கினார்கள் என்பதைச் சொல்லவில்லை.
கணக்குக் காட்டும் நாடகத்தில் வங்கியின் ஸ்டெட் மெண்ட் நாற்பது நாளுக்கு காட்டியுள்ளனர். ஆரம்ப முதலே அந்தப் பணம் வங்கியில் இருந்ததா என்பதை நிரூபிக்க சொல்லியும் நிரூபிக்கவில்லை
பிதரா வரவு ஆறு லட்சம் என்று பின்னர் 20 லட்சம் என்றும் சொன்னார்கள். இரண்டில் ஒன்று பொய். ஆனாலும் அதைக் கூட எந்த நாட்டில் இருந்து எவ்வளவு என்ற விபரம் இல்லை
கணக்கில் இவர்கள் செய்த மோசடிகள் இன்னும் உள்ளன. அடுத்த தொடரில் விளக்கப்படும்.
தொடரும் இன்ஷா அல்லாஹ்
தொடர் நான்கு
சுனாமிக் கணக்கில் கேள்விகளும் விளக்கங்களும்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேரியக்கம் தமுமுக போல் சுனாமிக் கணக்கில் நடந்து கொள்ளவில்லை. முழு வரவையும் செலவிட்டு அனைத்தையும் செலவிட்டு கணக்கு காட்டியது. தமுமுக போல் சுனாமிக் காசில் கல்யாண மண்டபம் எழுப்பி தனது சொத்தாக ஆக்கி வைத்துக் கொண்டது போல் தவ்ஹீத் ஜமாஅத் நடந்து கொள்ளவில்லை.
ஆனால் தமுமுகவின் சுனாமி மோசடி பற்றி கேள்வி கேட்டு நெருக்கடி உண்டாக்க வக்கில்லாத பொய்யன் கூட்டமும் மமகட்சி கூட்டமும் நம்முடைய சுனாமிக் கணக்கில் சந்தேகத்தை விதைத்து தங்களின் மோசடியை மறைக்கலாம் என்று நினைக்கின்றனர்.
கடல் இல்லாத ஊருக்கு சுனாமி நிதியா
கடல் இல்லாத வேலூர் மாவட்டத்துக்கு சுனாமி நிதி கொடுத்ததாக ஒரு செய்தியை தவறான நோக்கத்தில் பரப்பி வருகின்றது சுனாமித் திருடர் கூட்டம்.
இது குறித்து இப்போது புதிதாக பதில் சொல்லத் தேவை இல்லை. அனைத்துக்கும் முன்னரே உணர்வில் தக்க விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதை எடுத்துக் காட்டுவதே இதற்கு போதுமான விளக்கமாகும்.
உரிமை : 10, குரல் : 30. மார்ச் 31 ஏப்ரல் 06, 2006 இதழில் கீழ்க்கண்ட கேள்விக்கு அளிக்கப்பட்ட பதிலையே இங்கே எடுத்துக் காட்டுகிறோம்.
கேள்வி : சுனாமி வரவு செலவுக் கணக்கில் கடற்கரையே இல்லாத வேலூர் மாவட்டத்திற்கு 60 ஆயிரம் எனவும், கடல் இருந்தும் சுனாமி பாதிப்பு ஏற்படாத இராமநாதபுரத்திற்கு 30,000 ரூபாயும் வழங்கியதாகக் கணக்கு வெளியிட்டுள்ளது நம்பும்படியாக இல்லையே?
பதில் : முதலில் சுனாமியால் பாதிப்புக்குள்ளானோர் பற்றிய அடிப்படை விபரங்களை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். சுனாமி பேரலையால் பாதிப்புக்குள்ளானோர் கடற்கரை அருகில் இருந்தவர்கள் மட்டும் தான் என்பது தான் உங்கள் கேள்வியின் அர்த்தமாக உள்ளது. உங்கள் கேள்வி சரிதான் என்றாலும் அந்த பாதிப்புகளை குறித்த விபரங்களை நீங்கள் சரியாக விளங்கிக் கொள்ளவில்லை என்பதும் தெரிகிறது.
கடற்கரை அருகில் இருந்தவர்கள் தான் பாதிக்கப்பட்டார்கள் என்பது உண்மை தான். ஆனால் பாதிக்கப்பட்ட எல்லோரும் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களா? என்றால் அப்படி இல்லை. உதாரணத்திற்கு நாகூர், வேளாங்கன்னி போன்ற ஊர்களில் சுனாமி பேரலையில் சிக்கி பலர் இறந்தனர். இறந்த எல்லோரும் நாகூர், வேளாங்கன்னியைச் சேர்ந்தவர்களா? என்று பார்த்தால் இல்லை. அந்த ஊரைச் சேர்ந்தவர்களோடு, வெளியூர்களிலிருந்து அங்கு வந்து பலரும் இறந்துள்ளனர்.
இறந்தவர்களில் வேலூர், இராமநாதபுரம் போன்ற பல மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளனர். அப்படி இறந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 6 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு தலா 10 ஆயிரம் வீதம் 60 ஆயிரம் வழங்கப்பட்டது.
அதேபோன்று, இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
இராமநாதபுரத்தில் நடைபெற்ற மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில், பொதுக்குழு உறுப்பினர் அனைவரது முன்னிலையிலும் பாதிக்கப்பட்ட 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்களையும் அழைத்து அவர்களிடம் அந்தத் தொகை வழங்கப்பட்டது. அந்த உதவியைப் பெற்றதற்கு ஆதாரமாக அவர்களிடம் கையெழுத்தும் பெறப்பட்டுள்ளது. இப்படி நாம் செலவழித்த ஒவ்வொரு தொகைக்கும் தக்க சாட்சிகளும், தகுந்த ஆவணங்களும் நம்மிடம் உள்ளன.
இவ்வாறு நாம் முன்னரே தெளிவுபடுத்தியுள்ளோம். சுனாமி நிதியை நாம் விநியோகம் செய்து கொண்டிருந்த கால கட்டத்தில் எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் நாகூர் சென்ற போது பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்று வேலூர் மாவட்ட நிர்வாகிகள் மாநிலத்தலைமையை தொடர்பு கொண்டனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை அணுகுவதாகவும் கூறி இருந்தனர்.
இதைக் கவனத்தில் கொண்ட மாநில நிர்வாகம் அவர்கள் சுனாமியால் பாதிப்புக்கு உள்ளான போது பாதிக்கப்பட்டதற்கான ஆதாரம் இருந்தால் உதவலாம் எனக் கூறினோம். அதன் அடிப்படையில் அர்சாங்கத்தின் மூலம் அவர்கள் சுனாமி நிதி சிறிதளவு பெற்றிருப்பதற்கான ஆதாரத்தை அனுப்பி வைத்தனர். இதன் அடிப்படையில் தான் மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்ட அடிப்படையில் அவர்களுக்காக 60 ஆயிரம் ஒதுக்கி மாவட்டத்தின் வழியாக வழங்கப்பட்டது. இதை அறிந்து இராமநாதபுரத்தைச் சேர்ந்தவர்கள் இதே அடிப்படையில் நம்மை அணுகிய போது அதை விசாரித்து உண்மை என்று உறுதி செய்து கொண்ட பின்னர் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.
வீண்பழி சுமத்தும் திருட்டுக் கும்பல் அதிகாரப்பூர்வமாக இதை நிரூபிக்க கோரிக்கை வைத்தால் பணம் வாங்கியவர்களையும் அவர்கள் பாதிக்கப்பட்டதற்கான ஆதாரங்களையும் காட்டி நிருபிக்கிறோம். அப்படி நிரூபிக்கத் தவறினால் பொது வாழ்க்கையில் இருந்து விலகிக் கொள்கிறோம். நாம் நிரூபித்து விட்டால் அவதூறு கூறியதற்காக பொது மக்கள் மத்தியில் எண்பது கசையடி வாங்கிக் கொள்ள அவர்கள் தயாரா?
கள்ளமெயிலில் அவதூறு பரப்புவதை விட்டு இந்த அறைகூவலை ஏற்க முன்வரட்டும்
கணக்கில் முரண்பாடு ஏன்
அது போல் பல இலட்சம் ரூபாய் நிதி திரட்டும் போது சில தொகைகள் இரண்டு தடவை கூட எழுதப்பட்டு விடும். ஆனால் கணக்கைச் சரி பார்க்கும் போது ஒரே தொகை இரண்டு தடவை வெளியிடப்பட்டது தெரிய வரும். இது போல் நாம் திருஹ்தம் வெளியிட்டதை பிடித்து கொண்டு சுனாமி திருடர் கூட்டம் அப்போதே கேள்வி கேட்டது. அதற்கும் அப்போதே பதில் சொல்லி விட்டோம்.
உரிமை : 10, குரல் : 30. மார்ச் 31 ஏப்ரல் 06, 2006 இதழில் இது குறித்து கேட்ட கேள்விக்கு நாம் அளித்த பதில் வருமாறு:
கேள்வி: டி.என்.டி.ஜே.யின் சுனாமி கணக்கு விபரத்தில் இரண்டு தடவை ஒரே பட்டியல் என்ற தலைப்பின் கீழ் வெளியான தவறு-1ல் முகம்மது லியாகத் அலி என்பவர் பெயரில் ரூ.50 ஆயிரம் இரண்டு தடவை வெளியாகி விட்டதாகவும், மொத்த தொகையிலிருந்து கழிக்கும் போது 50 ஆயிரத்தைக் கழிப்பதற்கு பதிலாக ஒரு லட்ச ரூபாயைக் கழித்து கணக்கு வெளியிடப்பட்டுள்ளதே?
அப்துல்லாஹ், துபை.
பதில்: நாம் கொடுத்திருந்த விபரங்களைச் சரியாக படிக்காத காரணத்தினாலேயே இந்தக் கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். நாம் அதனை மிகத் தெளிவாகவே விளக்கி உள்ளோம். மேலும் அந்தக் கணக்கோடு சம்பந்தப்பட்ட கத்தார் கிளை டி.என்.டி.ஜே. நிர்வாகிகளின் தொலைபேசி எண்களையும் வெளியிட்டு அவர்களை தொடர்பு கொண்டு விசாரித்து அறியலாம் என்பதையும் தெரியப்படுத்தி இருந்தோம்.
நாம் எழுதியிருந்த விளக்கங்களைக் கவனமாக படித்து இருந்தாலோ, அல்லது சம்பந்தப்பட்ட நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு விசாரித்து இருந்தாலோ உங்களுக்குச் சந்தேகம் எழுந்திருக்காது.
நாம் அதில் குறிப்பிட்டிருந்தது இதுதான்.
கத்தரைச் சேர்ந்த லியாகத் அலி பெயரில் 50 ஆயிரம் என்று இரு முறை வெளியாகியுள்ளது. அதே பெயரில் மீண்டும் ஒருமுறை 78,964.00 ரூபாய் வெளியாகியுள்ளது. ஆக மொத்தம் லியாகத் அலி பெயரில் வெளியான மொத்தத் தொகை ரூ.1,78,964 ஆகும்.
அதே தொகை ரியாய்தீன் மற்றும் நண்பர்கள் என்ற பெயரில் மறுபடியும் வெளியிடப்பட்டுள்ளது. ரியாய்தீனும், முகம்மது லியாகத் அலியும் கத்தார் டி.என்.டி.ஜே. நிர்வாகிகள் என்பதனால் இரண்டு முறை வெளியானதும் ஒரே தொகை தான் என்பதை குறிப்பிட்டிருந்தோம்.
முகம்மது லியாகத் அலி 1,78,964 என்றும்
ரியாய்தீன் மற்றும் நண்பர்கள் 1,78,964 என்றும்
ஆக மொத்தம் 3,57,928.
இரண்டு தனித் தனித் தொகை என்று கருதிக் கொண்டு கூட்டினால், கத்தர் கிளை மூலம் வந்த தொகை 3,57,928 ஆகிறது. ஆனால் உண்மையில் வந்த தொகை 1,78,964 மட்டுமே. இரண்டு முறை வெளியான தொகையை தனித்தனியாக கணக்கிட்டு நாம் மொத்தத் தொகையாக கூட்டியிருந்த 3,57,928-லிருந்து 1,78,964ஐ தான் கழித்து உள்ளோம்.
நீங்கள் குறிப்பிட்டுள்ளபடி 50 ஆயிரம் என்பதை ஒரு லட்சமாக கழிக்கவில்லை என்பதை விளங்கிக் கொள்ளுங்கள்!
இப்படி சுனாமி தொடர்பாக என்ன கேள்வி கேட்டாலும் அவற்றுக்கு அப்போதே பதில் அளிக்கப்பட்டு விட்டது. ஆனால் பழைய இதழ்களை புரட்டி ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டுவது வேலைப்பளுவின் காரணமாக தாமதமாகிறது