சுன்னத்தான தொழுகையைப் பின்பற்றி கடமையான தொழுகை தொழலாமா?

இஷா தொழுகையின் ஜமாஅத்தைத் தவற விட்ட பின்னர் பள்ளிவாசலில் நடைபெறும் இரவுத் தொழுகையுடன் சேர்ந்து இஷாவை நிறைவேற்றலாமா?

ஆரிப் ராஜா, விருத்தாச்சலம்

பதில்:

தாராளமாகத் தொழலாம். இமாமுடைய தொழுகையும், பின்பற்றித் தொழுபவருடைய தொழுகையும் வெவ்வேறாக இருப்பதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

صحيح البخاري

700 – حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ: «أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ، كَانَ يُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ يَرْجِعُ، فَيَؤُمُّ قَوْمَهُ»

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுது விட்டு தமது சமுதாயத்தினரிடம் சென்று அவர்களுக்கு இமாமாக தொழுகை நடத்துபவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல் : புகாரி700, 701

முஆத் (ரலி) அவர்கள் கடமையான தொழுகையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நிறைவேற்றி விட்டு அதே தொழுகைக்கு தமது சமுதாயத்தினரிடம் சென்று இமாமத் செய்துள்ளார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது.

கடமையான தொழுகையை ஒரு தடவை தான் தொழ முடியும். ஒரு காரணத்துக்காக மீண்டும் தொழும் நிலை ஏற்பட்டால் இரண்டாவ்தாக தொழுதது உபரியான தொழுகையாக ஆகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பின்பற்றி கடமையான தொழுகையை முஆத் (ரலி) அவர்கள் நிறைவேற்றியவுடன் கடமை நீங்கி விடுகிறது, அவர்கள் தமது சமுதாய மக்களுக்கு தொழுகை நட்த்தியது அவர்களுக்கு உபரித் தொழுகையாகவும் மக்களுக்கு கடமையான தொழுகையாகவும் இருந்துள்ளது என்பதை இதிலிருந்து அறியலாம்.

صحيح مسلم

238 – (648) حَدَّثَنَا خَلَفُ بْنُ هِشَامٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، ح قَالَ: وَحَدَّثَنِي أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ، وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، قَالَا: حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ أَبِي عِمْرَانَ الْجَوْنِيِّ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الصَّامِتِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ لِي رَسُولُ اللهِ: «كَيْفَ أَنْتَ إِذَا كَانَتْ عَلَيْكَ أُمَرَاءُ يُؤَخِّرُونَ الصَّلَاةَ عَنْ وَقْتِهَا؟ – أَوْ – يُمِيتُونَ الصَّلَاةَ عَنْ وَقْتِهَا؟» قَالَ: قُلْتُ: فَمَا تَأْمُرُنِي؟ قَالَ: «صَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا، فَإِنْ أَدْرَكْتَهَا مَعَهُمْ، فَصَلِّ، فَإِنَّهَا لَكَ نَافِلَةٌ» وَلَمْ يَذْكُرْ خَلَفٌ: عَنْ وَقْتِهَا

அபூதர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தொழுகையை அதன் உரிய நேரத்தை விட்டுத் தாமதப்படுத்துபவர்கள், அல்லது தொழுகையை அதன் உரிய நேரத்தில் நிறைவேற்றாமல் சாகடிப்பவர்கள் உங்களுக்குத் தலைவர்களாய் அமைந்தால் உங்களது நிலை எப்படி இருக்கும்? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், கேட்டார்கள். (அப்போது) நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்கு உத்தரவிடுகிறீர்கள்? நான் என்று கேட்டேன். அதற்கு அவர்கள், தொழுகையை அதன் உரிய நேரத்தில் தொழுது கொள்ளுங்கள். பிறகு அவர்களுடன் நீங்கள் தொழுகையை அடைந்துகொண்டால் அப்போதும் (அவர்களுடன் இணைந்து) தொழுது கொள்ளுங்கள். அது உங்களுக்குக் உபரியான தொழுகையாக அமையும் என்று கூறினார்கள்.

நூல் முஸ்லிம்