தாயின் காலடியில் சொர்க்கம் என்ற கருத்தில் ஹதீஸ் உள்ளதா? அப்படி இருந்தால் அது ஆதாரப்பூர்வமானதா? என்பது குறித்து நாம் ஒரு ஆய்வை வெளியிட்டோம். அந்த ஆய்வு தவறானது என்று ததஜ வில் உள்ள போலி அறிஞர்கள் மறுப்பு வெளியிட்டனர். அந்த மறுப்புக்கும் நாம் மறுப்பை வெளியிட்டோம். நமது இறுதி மறுப்புக்கு எந்த பதிலும் அவர்களால் சொல்ல முடியவில்லை. இது குறித்து அனைத்து ஆக்கங்களையும் தொகுத்து இங்கே வெளியிடுகிறோம்

முதலாவது கட்டுரை

தாயின் காலடியில் சொர்க்கம் என்று ஹதீஸ் உள்ளதா?

இந்தக் கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் பலவீனமான ஹதீஸ்களும் உள்ளன. ஏற்கத்தக்க ஹதீஸ்களும் உள்ளன.

3053 أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْحَكَمِ الْوَرَّاقُ قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ طَلْحَةَ وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ طَلْحَةَ عَنْ مُعَاوِيَةَ بْنِ جَاهِمَةَ السَّلَمِيِّ أَنَّ جَاهِمَةَ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَدْتُ أَنْ أَغْزُوَ وَقَدْ جِئْتُ أَسْتَشِيرُكَ فَقَالَ هَلْ لَكَ مِنْ أُمٍّ قَالَ نَعَمْ قَالَ فَالْزَمْهَا فَإِنَّ الْجَنَّةَ تَحْتَ رِجْلَيْهَا رواه النسائي

ஜாஹிமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் போர் செய்ய நாடுகிறேன். இது தொடர்பாக உங்களிடம் ஆலோசிக்க வந்துள்ளேன் என்று கூறினார்கள். உமக்கு தாய் இருக்கிறார்களா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் ஆம் என்றார். அவரை பற்றிக் கொள் ஏனெனில் சொர்க்கம் அவரது பாதங்களுக்குக் கீழ் உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஆவியா பின் ஜாஹிமா

நூல் : நஸாயீ

ஹாகிமிலும் இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.

المستدرك على الصحيحين للحاكم

2502 – أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الْفَقِيهُ، بِالرِّيِّ، ثنا مُحَمَّدُ بْنُ الْفَرَجِ الْأَزْرَقُ، ثنا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ قَالَ: قَالَ ابْنُ جُرَيْجٍ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ مُعَاوِيَةَ بْنِ جَاهِمَةَ، أَنَّ جَاهِمَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنِّي أَرَدْتُ أَنْ أَغْزُوَ فَجِئْتُ أَسْتَشِيرُكَ. قَالَ: «أَلَكَ وَالِدَةٌ؟» قَالَ: نَعَمْ، قَالَ: «اذْهَبْ فَالْزَمْهَا، فَإِنَّ الْجَنَّةَ عِنْدَ رِجْلَيْهَا» هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ وَلَمْ يُخَرِّجَاهُ “

التعليق – من تلخيص الذهبي صحيح

ஆரம்பத்தில் இவ்விரு ஹதீஸ்களையும் கீழ்க்கண்ட காரணத்தால் பலவீனமான ஹதீஸ் என்று எழுதி இருந்தோம்.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மானின் மகன் முஹம்மத் பின் தல்ஹா என்பவர் இடம்பெற்றுள்ளார்.

இந்த முஹம்மத் பின் தல்ஹா என்பவரை யாரும் நம்பகமானவர் என்று கூறவில்லை. இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் நம்பகமானவர் என்ற தமது நூலில் பதிவு செய்துள்ளார்கள். ஒருவரை யாரும் குறை கூறவில்லையானால் அவரை நம்பகமானவர் பட்டியலில் சேர்ப்பது இப்னு ஹிப்பானின் வழக்கமாகும். எனவே இமாம் இப்னு ஹிப்பான் மட்டும் ஒருவரை நம்பகமானவர் என்று கூறினால் அதை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்க மாட்டார்கள். எனவே இந்த முஹம்மத் பின் தல்ஹா என்பவர் யாரென அறியப்படாதவர் என்ற நிலையில் பலவீனமானவராகிறார்.

இப்படி நாம் எழுதி இருந்தோம்.

ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் தாயின் காலடியில் சொர்க்கம் என்ற ஹதீஸை வைத்து அரசியல்வாதிகள் ஒரு தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள். இவர்கள் மதிக்கும் அரசியல் தலைவி அனைவருக்கும் தாயாக இருப்பதால் அவர் காலடியில் சொர்க்கம் என்று கூறி தேர்தல் பரப்புரை செய்தார்கள்.

இது அப்போது முஸ்லிம்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய போது இப்படி ஒரு ஹதீஸ் உண்டா என்ற சர்ச்சை கிள்ம்பியது.

அந்த நேரத்தில் நாம் எழுதியதைப் பதிவிடலாம் என்பதற்காக அதை மறு ஆய்வு செய்த போது மேலே நாம் சொன்ன காரணம் தவறானது என்பதும் மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூரவமாக அமைந்துள்ளதும் தெரிய வந்தது. அதன் காரணமாக அந்த ஆக்கத்தை நமது இணைய தளத்தில் இருந்து நீக்கி விட்டோம்.

அப்போதே இது குறித்து விளக்கம் அளிக்க நினைத்து காலப்போக்கில் அதை மறந்து விட்டோம்.

இப்போது இது பற்றி சுட்டிக்காட்டப்பட்டதால் இது சரியான ஹதீஸ் தான் என்பதைத் தெளிவுபடுத்துகிறோம்.

இந்த ஹதீஸில் முன்னர் நாம் குறிப்பிட்டவாறு முஹம்மத் பின் தல்ஹா பின் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் என்பார் இடம் பெற்றுள்ளது உண்மை. இப்னு ஹிப்பான் மட்டுமே இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளதால் இவர் யார் என அறியப்படாதவர் என்று நாம் குறிப்பிட்டது தவறாகும்.

இவர் அறியப்பட்டவராக இருந்தார் என்பதே சரியான கருத்தாகும்.

மேலே நாம் பதிவிட்டுள்ள ஹதீஸில் ஹாகிம் அவர்கள் இந்த ஹதீஸின் அடியில் இது ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடர் கொண்டது என்கிறார். இதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் ஹாகிம் கருத்துப்படி நம்பகமானவர்கள் என்றால் அறிவிப்பாளர்க்ளில் ஒருவரான முஹம்மத் பின் தல்ஹாவும் நம்பகமானவர் ஆகிறார்.

ஹாகிம் நூலை திறனாய்வு செய்த தஹபி அவர்கள் இது சரியான ஹதீஸ் என்று கூறியுள்ளார். அதாவது அனைத்து அறிவிப்பாளர்களும் நம்பமகானவர்கள் என்பது இதன் கருத்தாகும்.

இப்னு ஹஜர் அவர்கள் இவர் உண்மையாளர் என்று கூறியுள்ளார்.

رتبته عند ابن حجر :  صدوق

எனவே இவர் அறியப்படாதவர் என்ற வாதம் சரியில்லை.

ஒருவர் அறியப்படாதவர் என்று சொல்வதாக இருந்தால் இரண்டு அம்சங்கள் கவனிக்கப்பட வேண்டும்.

அவரை நம்பகமானவர் என்று ஒருவரும் கூறாமல் இருக்க வேண்டும்.

மேலும் அவர் வழியாக ஒரே ஒருவர் மட்டுமே அறிவித்திருக்க வேண்டும்.

இப்படி இருந்தால் தான் அறியப்படாதவர் என்று ஒருவரைப் பற்றிக் கூற வேண்டும்.

முஹம்மத் பின் தல்ஹா அவர்கள் விஷயத்தில் இந்த இரு குறைகளும் இல்லை.

புகாரி அவர்கள் தமது தாரீகுல் கபீர் நூலில் கூறுகிறார்கள்:

التاريخ الكبير للبخاري بحواشي محمود خليل

357- مُحَمد بْن طَلحَة بْن عَبد اللهِِ بْن عَبد الرَّحمَن بْن أَبي بَكر، القُرَشِيُّ.قَالَ لِي إِسحاق: حدَّثنا أَبو عَامِرٍ، وشَبابَة، قَالَا: حدَّثنا عَبد الرَّحمَن بْنُ أَبي بَكر، عَنْ مُحَمد بْن طَلحَة بْن عَبد اللهِِ بْن عَبد الرَّحمَن بْنِ أَبي بَكر، عَنْ أَبيه طَلحَة، أَنَّ أَبَا بَكر الصِّدِّيق قَالَ لعُفَير: مَا سَمِعتَ النَّبيَّ صَلى اللَّهُ عَلَيه وسَلم فِي الوُدِّ؟ قَالَ: سَمِعتُ النَّبيَّ صَلى اللَّهُ عَلَيه وسَلم يقولُ: الوُدُّ والعَداوَةُ تُتَوارَثُ. وَقَالَ لَنَا بِشر بْنُ مُحَمد: عَنِ ابْنِ المُبارك، عَنْ مُحَمد بْنِ عَبد الرَّحمَن بْنِ فُلان بْنِ طَلحَة، عَنْ أَبي بَكر بْنِ حَزم، عَنْ رجلٍ مِن أصحابِ النَّبيِّ صَلى اللَّهُ عَلَيه وسَلم، عَنِ النَّبيِّ صَلى اللَّهُ عَلَيه وسَلم … ، مِثلَهُ. وقَالَ ابْنُ جُرَيج: أَخبرني مُحَمد بْنُ طَلحَة بْنِ عَبد اللهِ، عَنْ أَبيه، عَنْ مُعاوية بْنِ جاهِمَة؛ فِي الْجِهَادِ. وَقَالَ لَنَا أَبو عَاصِمٍ: عَنِ ابْنِ جُرَيج، عَنْ مُحَمد بْنِ طَلحَة، عَنْ أَبيه، عَنْ مُعاوية: أَتَيتُ النَّبيَّ صَلى اللَّهُ عَلَيه وسَلم، فَقال: أَلَكَ أُمٌّ؟ فَفَيها فَجاهِد.وَقَالَ لِي يُوسُف بْنُ بُهلُول: حدَّثنا عَبدَة، عَنِ ابْنِ إِسحاق، عَنِ الزُّهرِيِّ، عَنْ ابن طَلحَة ابن عُبَيد اللهِ، عَنْ مُعاوية السُّلَمِيِّ … بِهَذَا. حدَّثني الحَسَن بْنُ أَحْمَدَ، قَالَ: حدَّثنا ابْنُ سَلَمة، عَنْ مُحَمد بْنِ إِسحاق، عَنْ مُحَمد بْنِ طَلحَة بْنِ عَبد الرَّحمَن بْنِ أَبي بَكر، عَنْ مُعاوية بْنِ جاهِمَة السُّلَمِيِّ: أَتَيتُ النَّبيَّ صَلى اللَّهُ عَلَيه وسَلم.. بِهَذَا. حدَّثني سَعِيد بْنُ يَحيى، قَالَ: حدَّثنا أَبي، قَالَ: حدَّثنا ابن جُرَيج، قال: أَخبرني مُحَمد ابن طَلحَة بْنِ رُكانة، عَنْ أَبيه، عَنْ مُعاوية بْنِ جاهِمَة: أَتَيتُ النَّبيَّ صَلى اللَّهُ عَلَيه وسَلم …وقَالَ عليٌّ: سَمِعتُ سُفيان: كَانَ مُحَمد بْن طَلحَة بْن عَبد اللهِِ بْن عَبد الرَّحمَن بْن أَبي بَكر على مَكَّة، استعملَهُ عَبد الْعَزِيزِ بْن عُمَر بْن عَبد الْعَزِيزِ، فكَانَ يدعو ابْن شُبرمَة، وابْن أَبي نَجِيح يستشيرهما. قَالَ أَبو عَبد اللهِ: أحسبه صاحب عُمَر بْن عَبد العزيز.

இவர் அபூபக்ர் (ரலி) அவர்களின் கொள்ளுப்பேரனாவார். உமர் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் ஆட்சியில் இவரை மக்காவின் ஆளுனராக நியமித்து இருந்தார்கள். இவர் வ்ழியாக அப்துர்ரஹ்மான் பின் அபீ பக்ர், இப்னுல் முபாரக் இப்னு ஜுரைஜ், ஸுஹ்ரி, முஹம்மத் பின் இஸ்ஹாக் ஆகியோர் அறிவித்துள்ளனர்.

புகாரியின் தாரீகுல் கபீர்

இவரிடமிருந்து பிரபலமான ஐவர் அறிவித்துள்னர் என்றால் ஐவரும் இவரை அறிந்துள்ளார்கள் என்று ஆகிறது. இவர் உமர் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் தோழராகவும், மக்காவின் ஆளுனராகவும் இருந்துள்ளதால் யாரென அறியப்படாதவர் என்ற விமர்சனம் இவருக்கு அறவே பொருந்தாது.

இது தவிர அறியப்படாதவர்கள் வழியாக எதையும் அறிவிக்காத வடிகட்டுவதில் கடும் போக்குடைய நஸாயி அவர்கள் இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ளதும் இவர் அறியப்படாதவர் அல்ல என்பதை உறுதி செய்கிறது.

எனவே இந்த ஹதீஸ் பலவீனமானது அல்ல. ஏற்கத்தக்க தரமுடைய ஹதீஸ் என்பதில் ஐயமில்லை.

இரண்டாவது கட்டுரை

தாயின் காலடியில் – மறுப்புக்கு மறுப்பு

தாயின் காலடியில் சொர்க்கம் என்ற ஹதீஸ் பலவீனமானது அல்ல.

இது குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒரு ஆய்வுக்கட்டுரை வெளியிட்டு இருந்தனர். அந்த ஆய்வு பிழையானது என்று நாம் மறு ஆய்வுக் கட்டுரை வெளியிட்டோம். நமது மறு ஆய்வுக் கட்டுரைக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்(?) குழுவினர் ஒரு மறுப்பை வெளியிட்டுள்ளனர்.

எனவே இது குறித்து முழுமையான விளக்கம் அளிப்பதற்காக இந்த ஆக்கம் வெளியிடப்படுகிறது.

தாயின் காலடியில் சொர்க்கம் என்ற கருத்தில் உள்ள ஹதீஸ்களில் ஒரு ஹதீஸைத் தவிர மற்ற ஹதீஸ்கள் பலவீனமானவையாகும். ஒரு ஹதீஸ் மட்டும் ஆதாரப்பூர்வமானதாகும் என்று நாம் குறிப்பிட்டோம்.

அந்த ஹதீஸ் இது தான்.

سنن النسائي

3104 – أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْحَكَمِ الْوَرَّاقُ، قَالَ: حَدَّثَنَا حَجَّاجٌ، عَنْ ابْنِ جُرَيْجٍ، قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ طَلْحَةَ وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ طَلْحَةَ، عَنْ مُعَاوِيَةَ بْنِ جَاهِمَةَ السَّلَمِيِّ، أَنَّ جَاهِمَةَ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَرَدْتُ أَنْ أَغْزُوَ وَقَدْ جِئْتُ أَسْتَشِيرُكَ، فَقَالَ: «هَلْ لَكَ مِنْ أُمٍّ؟» قَالَ: نَعَمْ، قَالَ: «فَالْزَمْهَا، فَإِنَّ الْجَنَّةَ تَحْتَ رِجْلَيْهَا»

ஜாஹிமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! நான் போர் செய்ய நாடுகிறேன். இது தொடர்பாக உங்களிடம் ஆலோசிக்க வந்துள்ளேன் என்று கூறினார்கள். உமக்கு தாய் இருக்கிறார்களா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் ஆம் என்றார். அவர்களை அவசியமாக்கிக் கொள். ஏனெனில் சொர்க்கம் அவரின் பாதங்களுக்குக் கீழ் உள்ளது என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாஹிமா (ரலி)

நூல் : நஸாயீ

இந்த ஹதீஸ் பலவீனமானது என்பதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் கீழ்க்கண்டவாறு காரணம் கூறுகின்றனர்.

முஹம்மத் பின் தல்ஹா என்பவரை யாரும் நம்பகமானவர் என்று கூறவில்லை. இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் நம்பகமானவர் என்ற தமது நூலில் இவரைப் பதிவு செய்துள்ளார்கள்.

ஒருவரை யாரும் குறை கூறவில்லையானால் அவரை நம்பகமானவர் பட்டியலில் சேர்ப்பது இப்னு ஹிப்பானின் வழக்கமாகும். அவரின் வழக்கமாகும். எனவே இப்னு ஹிப்பான் மட்டும் ஒருவரை நம்பகமானவர் என்று கூறினால் அதை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்க மாட்டார்கள். எனவே இந்த முஹம்மத் பின் தல்ஹா என்பவர் யாரென அறியப்படாதவர் என்ற நிலையில் பலவீனமானவராகிறார்.

முஹம்மத் பின் தல்ஹா என்பவரை நம்பகமானவர் என்று யாரும் சொல்லவில்லை என்பது தான் இந்த ஹதீஸ் பலவீனமானது என்பதற்கு இவர்கள் சொல்லும் காரணம்.

இதை மறுத்து நாம் பின்வரும் வாதத்தை முன்வைத்தோம்.

المستدرك على الصحيحين للحاكم

2502 – أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الْفَقِيهُ، بِالرِّيِّ، ثنا مُحَمَّدُ بْنُ الْفَرَجِ الْأَزْرَقُ، ثنا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ قَالَ: قَالَ ابْنُ جُرَيْجٍ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ مُعَاوِيَةَ بْنِ جَاهِمَةَ، أَنَّ جَاهِمَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنِّي أَرَدْتُ أَنْ أَغْزُوَ فَجِئْتُ أَسْتَشِيرُكَ. قَالَ: «أَلَكَ وَالِدَةٌ؟» قَالَ: نَعَمْ، قَالَ: «اذْهَبْ فَالْزَمْهَا، فَإِنَّ الْجَنَّةَ عِنْدَ رِجْلَيْهَا» هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ وَلَمْ يُخَرِّجَاهُ “

التعليق – من تلخيص الذهبي صحيح

மேலே நாம் பதிவிட்டுள்ள ஹதீஸில் ஹாகிம் அவர்கள் இந்த ஹதீஸின் அடியில் இது ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடர் கொண்டது என்கிறார். இதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் ஹாகிம் கருத்துப்படி நம்பகமானவர்கள் என்றால் அறிவிப்பாளர்க்ளில் ஒருவரான முஹம்மத் பின் தல்ஹாவும் நம்பகமானவர் ஆகிறார்.

ஹாகிம் நூலை திறனாய்வு செய்த தஹபி அவர்கள் இது சரியான ஹதீஸ் என்று கூறியுள்ளார். அதாவது அனைத்து அறிவிப்பாளர்களும் நம்பகமானவர்கள் என்பது இதன் கருத்தாகும்.

என்று நாம் எழுதினோம்.

அதாவது இந்த ஹதீஸைப் பதிவு செய்த ஹாகிம் அவர்கள் இந்த ஹதீஸை ஆதாரப்பூர்வமானது என்று குறிப்பிட்டுள்ளார். அறிவிப்பாளர்கள் அனைவரையும் திறனாய்வு செய்து அவர்கள் நம்பகமானவர்கள் என்று தெரிந்தால் தான் ஒரு ஹதீஸை ஆதாரப்பூர்வமானது என்பார்கள்.

முஹம்மத் பின் தல்ஹா என்ற அறிவிப்பாளரை ஹாகிம் அறிந்துள்ளார். அவர் நம்பகமானவர் என்றும் அறிந்துள்ளார். எனவே இப்னு ஹிப்பானைத் தவிர வேறு யாரும் இவரை நம்பகமானவர் என்று கூறியதில்லை என்ற வாதம் தவறாகும் என்பது நமது முதல் வாதமாகும்.

இதற்கு மறுப்புச் சொல்லப் புகுந்த ததஜவினர் வாதம் இதுதான்

ஹாகிம் அவர்களின் நூலை படித்தவர்களுக்கு தெரியும் அவர் அறிவிப்பாளரை தரம் பிரிப்பதில் அலட்சியப்போக்குள்ளவர். அவரின் பெரும்பாலான முடிவுகள் தவறாக அமைந்துள்ளது. ஹாபிழ் தஹபீ அவர்கள் பல இடங்களில் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

உதாரணத்திற்கு சில செய்திகளை குறிப்பிடுகிறோம்.

இது தான் இவர்களின் மறுப்பு. ஹாகிம் சரியான ஹதீஸ்கள் கூறிய சில பலவீனமான ஹதீஸ்களையும் எடுத்துக் காட்டியுள்ளனர்.

அறிவிப்பாளர்களை எடை போடும் அறிஞர்கள் பல தரத்தில் உள்ளனர். முதல் நிலையில் உள்ளவர்கள் அதிக கவனமுடன் ஆய்வு செய்தவர்கள். குறைவாகவே அவர்களின் ஆய்வில் பிழை இருக்கும்.

இரண்டாம் நிலையில் உள்ளவர்களும் திறனாய்வு செய்யும் திறமை உள்ளவர்கள் தான். ஆனால் அதிக கவனம் எடுக்காததால் அவர்களின் ஆய்வில் தவறுகள் அதிகம் காணப்படும். இந்த வகையான ஆய்வாளர்களில் ஹாகிமும் ஒருவர்.

இதில் ஒருவருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால் இதை வைத்து ஹாகிம் அவர்களை முற்றாகப் புறக்கணிக்க வேண்டும் என்று ததஜவினர் சித்தரித்துள்ளனர். அவர்களின் வாதம் இது தான்:

எனவேதான் ஹாகிம் செய்தியை ஆதாரப்பூர்வமானது என்றால் அறிஞர்கள் அதை ஏற்றுக் கொள்வதில்லை.

النكت الوفية بما في شرح الألفية للبقاعي (4/ 9)

الثاني : أَنَّ ابنَ الصلاح قد حكمَ بما يليقُ على مقتضى مذهبهِ فحكمَ بضعفِ ما فيهِ علةٌ وبالاحتجاجِ بما انفردَ بتصحيحهِ ، ولم تظهرْ فيهِ علةٌ ، وامتنعَ مِنْ إطلاقِ الصحةِ عليهِ ؛ لأنَّ الحاكمَ متساهلٌ فلم يعتمدهُ

ஹாகிம் மட்டும் ஆதாரப்பூர்வமானது என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் அலட்சியப் போக்குள்ளவர் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (நூல் : நுகத், பாகம் :4,பக்கம்: 9)

எனவே ஹாகிமை ஆதாரமாகக் காட்டுவது ஏற்றுக் கொள்ள முடியாது.

ஹாகிமை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதற்கு இவர்கள் காட்டும் ஆதாரம் இது தான்.

இவர்கள் எடுத்துக்காட்டிய மேற்கண்ட மேற்கோளில் ததஜவினர் பல தில்லுமுல்லுகள் செய்துள்ளனர்.

இப்னு ஹஜர் கூறியதாகக் கூறியுள்ளனர். இதில் இப்னுஹஜர் கூறியதாகக் குறிப்பிடப்படவில்லை.

மூலத்தில் உள்ள சொற்களுக்கு மொழி பெயர்க்காமல் வாயில் வந்ததை இதன் மொழி பெயர்ப்பாகக் காட்டியுள்ளனர்.

மேலும் இப்னுஸ்ஸலாஹ் கூறியதைப் பற்றி பேசும் இந்த வாக்கியத்தில் பாதியைக் கட் பண்ணி தவறான கருத்து வரும் வகையில் இருட்டடிப்பு செய்துள்ளனர்.

இவர்கள் இருட்டடிப்பு செய்த வாசகத்துடன் சேர்த்து முழுமையான மொழி பெயர்ப்பைப் பாருங்கள்!

النكت الوفية بما في شرح الألفية

الثاني: أَنَّ ابنَ الصلاح قد حكمَ بما يليقُ على مقتضى مذهبهِ، فحكمَ بضعفِ ما فيهِ علةٌ، وبالاحتجاجِ بما انفردَ بتصحيحهِ، ولم تظهرْ فيهِ علةٌ، وامتنعَ مِنْ إطلاقِ الصحةِ عليهِ؛ لأنَّ الحاكمَ متساهلٌ، فلم يعتمدهُ، وهوَ قد سدَّ بابَ التصحيحِ على نفسهِ، وغيرهِ في زمانهِ (1)، ولم يزحزحهُ عن رتبةِ الاحتجاجِ بهِ؛ لأنهُ لم يسد بابَ التحسينِ كما سيأتي أنَّ كلامهُ يُفهِمُ ذَلِكَ (2) فهوَ دائرٌ بينَ المرتبتينِ لم ينزلْ عنهما.

இவர்கள் அர்த்தத்தை மாற்றும் வகையில் இருட்டடிப்பு செய்த வாசகம் சிவப்பு எழுத்தில் பதியப்பட்டுள்ளது.

இதன் முழு மொழி பெயர்ப்பு இது தான்.

இப்னுஸ் ஸலாஹ் அவர்கள் தமது நிலைபாட்டின் படி முடிவு செய்துள்ளார். (சரியான ஹதீஸ் என்று ஹாகிம் முடிவு சொன்ன ஹதீஸ்களில்)  எந்த ஹதீஸில் பலவீனம் உள்ளதோ அதைப் பலவீனம் என்று முடிவு செய்ய வேண்டும். எந்தக் குறையும் வெளிப்படாமல் ஹாகிம் மட்டும் ஸஹீஹ் என்று சொன்னவைகளை ஆதாரமாக ஏற்க வேண்டும் என்று இப்னுஸ்ஸலாஹ் கூறியுள்ளார். அதை ஸஹீஹ் என்று முடிவு செய்ய அவர் மறுத்து விட்டார். (ஹஸன் என்ற தரத்தில் வைக்க வேண்டும் என்றார்) ஏனெனில் ஹாகிம் கவனக் குறைவானவர் ஆவார். ஹாகிம் மட்டும் ஸஹீஹ் எனக் கூறியதை ஸஹீஹ் என்று இப்னுஸ்ஸலாஹ் அவர்கள்   தானும் முடிவு செய்யவில்லை, தன் காலத்தில் மற்றவர்களும் முடிவு செய்வதை ஏற்கவில்லை. ஆனால் அதை ஹஸன் என்று சொல்வதையும், ஆதாரமாகக் கொள்வதையும் இப்னுஸ்ஸலாஹ் மறுக்கவில்லை. இப்னுஸ்ஸலாஹ் கூற்றில் இருந்து கிடைக்கும் விளக்கம் இதுதான்.

இது தான் இதன் நேரடியான மொழி பெயர்ப்பாகும்.

ஆனால் இதற்கு ததஜ செய்த மொழி பெயர்ப்பைப் பாருங்கள்.

ஹாகிம் மட்டும் ஆதாரப்பூர்வமானது என்று சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர் அலட்சியப் போக்குள்ளவர் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (நூல் : நுகத், பாகம் :4,பக்கம்: 9)

இந்த இரண்டு மொழி பெயர்ப்புக்கும் உள்ள வித்தியாசசத்தைப் பாருங்கள். எடுத்துக் காட்டிய அரபு மூலத்தில் உள்ளதற்கு எதிரான கருத்தை எழுதி அதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள் என்றால் எந்த அளவு மார்க்கத்தில் விளையாட துணிந்து விட்டனர் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

ஹாகிம் ஸஹீஹ் என்று கூறியதை ஆதாரமாக எடுக்கலாம் என்று இப்னுஸ் ஸலாஹ் கூறியிருக்க ஆதராமாக எடுக்கக் கூடாது என்று நேர்முரணாக அர்த்தம் செய்து அனர்த்தமாக்கியுள்ளனர்.

நாம் எதைச் சொன்னாலும் நம்பும் குருட்டுக் கூட்டம் உள்ளது என்ற நம்பிக்கையால் இப்படி மார்க்கத்தில் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.

இவர்கள் எதை ஆதாரமாகக் காட்டுகிறார்களோ அதை முழுமையாக மொழி பெயர்க்காமல் இஷ்டப்படி எழுதி விட்டு இப்னு ஹஜர் மீது பழியைப் போட்டுள்ளனர்.

இப்படித் தான் கதா யக்தூ என்ற சொல்லுக்கு அர்த்தம் சொல்லும் போது இப்னு ஹஜர் சொன்னதாக ஒரு கருத்தைப் போட்டு அதற்கு எதிராக இப்னு ஹஜர் சொன்ன அரபு மூலத்தைப் போட்டு மாட்டிக் கொண்டார்கள். (புள்ளி வச்ச தால் விஷயம்)

ஹாகிம் குறித்து இப்னுஸ்ஸலாஹ் அவர்கள் தமது முகத்திமாவில் தெளிவாகக் கூறியுள்ளார்.

مقدمة ابن الصلاح

 ( 14 ) وهو واسع الخطو في شرط الصحيح متساهل في القضاء به . فالأولى أن نتوسط في أمره فنقول : ما حكم بصحته ولم نجد ذلك فيه لغيره من الأئمة إن لم يكن من قبيل الصحيح فهو من قبيل الحسن يحتج به ويعمل به إلا أن تظهر فيه علة توجب ضعفه

இது தான் இப்னுஸ்ஸாலாஹ் அவர்களின் முகத்திமா எனும் நூலில் உள்ள வாசகம். இதன் பொருள் இதுதான்:

ஹாகிம் அவர்கள் சரியான ஹதீஸ்களை எடை போடுவதில் தாராளமாகப் பிழை விடுபவர் ஆவார். அவர் விஷயமாக நடுநிலையான முடிவையே நாம் எடுக்க வேண்டும். அவர் ஒரு ஹதீஸைச் சரியானது எனக் கூறினால் அது குறித்து மற்ற அறிஞர்கள் கூறிய விபரம் நமக்குக் கிடைக்காவிட்டால் ஸஹீஹ் எனும் தரத்தில் இல்லாவிட்டாலும் ஹஸன் எனும் தரத்தில் அதைக் கருதி அமல் செய்ய வேண்டும். ஆதாரமாகக் கொள்ள வேண்டும். பலவீனம் என்று முடிவு செய்யத் தக்க காரணம் இருந்தால் தவிர.

இது தான் இப்னுஸ்ஸலாஹ் கூறியதாகும்.

இப்னுஸ் ஸலாஹ் கூறும் இந்தக் கர்டுத்து தான் நேர்மையான பார்வையாகும். ஹாகிம் செய்த முடிவுக்கு எதிராக அவரை விட தகுதியில் மிகைத்த அறிஞர்கள் முடிவு செய்திருந்தால் தான்  ஹாகிம் முடிவை ஏற்கலாமா என்று ஆய்வு செய்ய வேண்டும்.

ஹாகிம் ஒருவரை நம்பகமானவர் என்று சொல்கிறார். அவரைப் பற்றி எந்த அறிஞரும் வேறு கருத்துச் சொல்லவில்லை. அப்படியானால் 2020 ஆம் ஆண்டில் வாழும் இவர்கள் அதைத் தவறு என்று சொல்வார்களாம்! இதை விட அறிவீனம் என்ன இருக்க முடியும்? ஹாகிம் சொன்னது தவறு என்பதற்கு எந்த அறிஞரின் கூற்றும் ஆதாரமாக இல்லாத போது அவரது கருத்தை ஏற்க முடியாது என்று ததஜ கூறுவது ஆணவமா? அறிவீனமா?

இது குறித்து தத்ரீபுர்ராவி நூலில் நவவி அவர்களும், சுயூத்தி அவர்களும் இவ்வாறே கூறுகின்றனர்.

تدريب الراوي في شرح تقريب النواوي – السيوطي

قال فما صححه ولم نجد فيه لغيره من المعتمدين تصحيحا ولا تضعيفا حكمنا بأنه حسن إلا أن يظهر فيه علة توجب ضعفه والتساهل في القدر المملى قليل جدا بالنسبة إلى ما بعده ( فما صححه ولم نجد فيه لغيره من المعتمدين تصحيحا ولا تضعيفا حكمنا بأنه حسن إلا أن يظهر فيه علة توجب ضعفه )

قال البدر بن جماعة والصواب أنه يتتبع ويحكم عليه بما يليق بحاله من الحسن أو الصحة أو الضعف ووافقه العراقي وقال إن حكمه عليه بالحسن فقط تحكم قال إلا أن ابن الصلاح قال ذلك بناء على رأيه أنه قد انقطع التصحيح في هذه الأعصار فليس لأحد أن يصححه فلهذا قطع النظر عن الكشف عليه

ஹாகிம் அவர்கள் எந்த ஹதீஸை ஆதாரப்பூர்வமானது என்று சொன்னாரோ, திறன் மிக்க அறிஞர்கள் அது குறித்து பலவீனம் என்றோ, சரியானது என்றோ எந்தக் கருத்தும் சொல்லவில்லையோ, அதை ஹஸன் என்று நாம் முடிவு செய்வோம். பலவீனம் என்று சொல்வதற்கான காரணம் வெளிப்படையாகத் தெரிந்தாலே தவிர என்று நவவி அவர்கள் கூறுகிறார்கள்.

ஹாகிம் ஸஹீஹ் என்று கூறியதை ஹஸன் ஸஹீஹ், ளயீப் என்று ஆராய வேண்டும் என்பதே சரியான நிலைபாடாகும் என்று இப்னு ஜமாஆ கூறுகிறார். ஹாபிள் இராக்கி அவர்களும் இதே கருத்தில் உள்ளார். ஹஸன் என்று முடிவு செய்வது பிடிவாதப் போக்காகும் என்கிறார். இந்தக் காலத்தில் அறிவிப்பாளர்களின் தகுதிகளை நாம் எடை போட முடியாது. முந்தைய அறிஞர்களின் சொல்லை வைத்துத் தான முடிவு செய்ய வேண்டும் என்பதால் இப்னுஸ்ஸலாஹ் சொன்ன கருத்து தான் சரி.(ஹாகிம் சொன்னது சரியா தவறா என்று எதனடிப்படையில் இவர்கள் முடிவு செய்வார்கள்?)

எனவே ஹாகிம் அவர்கள் செய்த விமர்சனம் சரியில்லை என்றால் அதை தற்காலத்தில் உள்ளவர்களால் மதிப்பிட முடியாது. ஹாகிம் காலத்துக்கு முன், அல்லது ஹாகிம் காலத்தில் வாழ்ந்த அறிஞர்கள் செய்த வேறு விதமான முடிவு இருந்தால் தவிர ஹாகிமைத் தள்ளிவிட முடியாது.

ஹாகிம் கூறுவதற்கு மாற்றமாக மற்ற அறிஞர்கள் கருத்து சொல்லாமல் இருந்தால் ஹாகிம் அவர்களின் விமர்சனத்தை ஏற்க வேண்டும் என்பது தான் ஹாகிம் குறித்த சரியான நிலைபாடு.

ஆக ஹாகிம் அவர்கள் ஒரு ஹதீஸைச் சரியானது என்று சொன்னால் அந்த அறிவிப்பாளர்கள் ஆதாரமாகக் கொள்ளத் தக்கவர்கள் என்பது உறுதியாகி விட்டது.

எனவே முஹம்மத் பின் தல்ஹா அவர்கள் அறியப்படாதவர் அல்ல. மாறாக நம்பகமானவர் என்பது உறுதியாகி விட்டது.

அடுத்து ஹாகிம் நூலை மேலாய்வு செய்த தஹபி அவர்கள் ஹாகிம் கூறுவது போல் இது சரியான ஹதீஸ் தான் என்று உறுதிப்படுத்துகிறார் என்பதையும் நாம் ஆதாரமாகக் குறிப்பிட்டு இருந்தோம்.

முஹம்மத் பின் தல்ஹா உள்ளிட்ட அறிவிப்பாளர் ஒவ்வொருவரையும் பற்றி தஹபி அறிந்துள்ளார். அவர்கள் அனைவரின் நம்பகத் தன்மையையும் அறிந்துள்ளார் என்பதால் தான் இது சரியான ஹதீஸ் என்பதை உறுதிப்படுத்துகிறார் எனவும் நாம் வாதம் வைத்தோம்.

இதையும் மார்க்க அறிவின்றி ததஜவினர் மறுக்கின்றனர்

தஹபீ அவர்கள் தனது காலத்திற்கு முந்திய அறிஞர்களின் கருத்துக்களை கவனித்து ஒரு அறிவிப்பாளரை நம்பகமானவர் என்றோ அல்லது பலவீனமானவர் என்றோ குறிப்பிடுவார்கள். அவர்களின் முடிவிலும் தவறுகள் ஏற்பட்டுள்ளன.

உதாரணமாக

المستدرك على الصحيحين للحاكم مع تعليقات الذهبي في التلخيص (1/ 448)

 1148 – حدثنا علي بن حمشاد ثنا أبو المثنى ثنا أبو الوليد الطيالسي

 و أخبرنا أحمد بن سهل الفقيه ببخارى ثنا قيس بن أنيف ثنا قتيبة بن سعيد قالا : ثنا الليث بن سعد عن يزيد بن أبي حبيب عن عبد الله بن راشد الزوفي عن عبد الله بن أبي مرة الزوفي عن خارجة بن حذافة العدوي قال : خرج علينا رسول الله صلى الله عليه و سلم فقال : إن الله قد أمدكم بصلاة هي خير لكم من حمر النعم و هي الوتر فجعلها لكم فيما بين صلاة العشاء إلى صلاة الفجر

 هذا حديث صحيح الإسناد و لم يخرجاه

 رواته مدنيون و مصريون و لم يتركاه إلا لما قدمت ذكره من تفرد التابعي عن الصحابي

تعليق الذهبي قي التلخيص : صحيح

சிவப்பு ஒட்டகம் கிடைப்பதைவிட அல்லாஹ் உங்களுக்கு தொழுகை நீட்டி (அதைவிட சிறந்த நன்மையை) தந்துள்ளான். அதுதான் வித்ரு தொழுகையாகும். அந்த தொழுகையை இஷாவிற்கும் பஜ்ருக்குமிடையில் அமைத்துள்ளான்.

என்ற செய்தியை ஹாகிம் அவர்கள் ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் வரிசை கொண்டதாகும் என்று சொல்லியுள்ளார்கள். தஹபீ அவர்களும் இது ஆதாரப்பூர்வமானது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

ஆனால் தஹபீ அவர்கள். இந்த செய்தியில் இடம்பெறும் அப்துல்லாஹ் பின் அபீ முர்ரா என்பவரை மீஸானுல் இஃதிதால் என்ற நூலில் இதே செய்தியையும் குறிப்பிட்டு பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.

ميزان الاعتدال (2/ 501)

4594 – عبدالله بن أبى مرة [ د، ت، ق ] الزوفى.

وقيل ابن مرة.له عن خارجة في الوتر.لم يصح.

قال البخاري: لا يعرف سماع بعضهم من بعض.رواه يزيد بن أبى حبيب، عن عبدالله بن راشد، عنه، عن خارجة بن حذافة.

قال: خرج علينا رسول الله صلى الله عليه وسلم فقال: إن الله قد أمدكم (3) بصلاة هي خير لكم من حمر النعم [ الوتر ]

அப்துல்லாஹ் பின் அபீ முர்ரா என்பவர் காரிஜா வழியாக வித்ரு தொழுகை தொடர்பாக அறிவித்துள்ளார். இந்த செய்தி ஆதரப்பூர்வமானது இல்லை. இதில் சில அறிவிப்பாளர் சிலரிடம் செவியுறவில்லை என்று புகாரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்: 2, பக்கம்: 501

தஹபீ இமாம் அவர்களே தனது வேறு நூலில் ஒரு செய்தியை பலவீனமானது என்று சொல்லிவிட்டு ஹாகிமில் ஆதாரப்பூர்வமானது என்று சொல்லியுள்ளார்கள். மனிதர் என்ற அடிப்படையில் இது போன்ற தவறுகள் ஏற்பட்டுள்ளது.

இந்த மடமையை என்னவென்பது?

ஹதீஸ் கலை அறிஞர்கள் பலரின் விமர்சனங்களில் தவறுகள் நேர்வது சாதாரணமானதாகும். தவறு நேராதவர் ஒருவர் கூட உலகில் இல்லை.

ஒரு அறிஞரின் மதிப்பீட்டில் எது தவறு என்று நிரூபனமானதோ அதை மட்டும் தான் நாம் தவிர்க்க வேண்டும்.

ஒரு அறிஞரின் திறனாய்வில் சில பிழைகள் இருப்பதால் அவரது எல்லா முடிவுகளையும் நிராகரிக்க வேண்டும் என்ற நிலைபாடு ஹதீஸ் கலையில் இல்லை. அப்படி ஒரு நிலைபாடு இருந்தால் சரியான ஹதீஸ்கள் என்று முடிவு செய்யப்பட்ட ஹதீஸ்களில் கால்வாசி ஹதீஸ்கள் பலவீனமானவை ஆகிவிடும்.

இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களை சரியானவர்கள் என்று தஹபீ சொல்கிறார். முஹம்மத் பின் தல்ஹாவையும் நம்பகமானவர் என்கிறார். இது தவறு என்றால் 2020ஆம் ஆண்டில் வாழும் இந்த மேதாவிகள் இதை எப்படிக் கண்டுபிடித்தார்கள்?

தஹபி இப்படி சொன்னது தவறு என்று இதோ பல அறிஞர்கள் கூறியுள்ளனர் என்று எடுத்துக்காட்டி விட்டு காரண காரியத்துடன் விளக்கி விட்டு தவறு என்று சொல்ல வேண்டும்.

தஹபி சொன்னதற்கு மாற்றமாக ஒருவரும் சொல்லாத போது தஹபி சொன்னது தவறு என்று சொல்வது ஆணவமா? அறியாமையா? எந்த வித தரவுகளையும் காட்டாமல் எனக்குப் பிடிக்கவில்லை என்பதால் தஹபி சொல்வதை ஏற்க முடியாது என்பதா?

ஹதீஸ் கலையை ஒழித்துக் கட்டிவிட்டுத் தான் மறு வேலை என்று இறங்கி விட்டார்கள். இவர்களிடம் படித்து விட்டு மிஸ்க் பட்டம் வாங்குவோர் எந்த மாதிரி வழிகெடுக்கப் போகிறார்களோ?

அடுத்து இப்னு ஹஜர் அவர்கள் இந்த முஹம்மத் பின் தல்ஹா அவர்களைப் பற்றி உண்மையாளர் என்று சான்றளித்துள்ளார் என்பதால் இவர் அறியப்படாதவர் அல்ல என்று நாம் எடுத்துக் காட்டி இருந்தோம்.

இதை மறுக்கும் விதமாக சில புரட்டு வாதங்களை எடுத்துக் காட்டியுள்ளனர்.

الكاشف (1/ 30)

وهذا الانحاء الثلاثة التي وقفها الذهبي من توثيق ابن حبان: ثقة، صدوق، وثق، جاء مثلها من ابن حجر في ” التقريب “، فهو يقول: ثقة، صدوق، مقبول، وهذا اللفظ الاخير هو الاكثر الاغلب،

وهذا الانحاء الثلاثة التي وقفها الذهبي من توثيق ابن حبان: ثقة، صدوق، وثق، جاء مثلها من ابن حجر في ” التقريب “، فهو يقول: ثقة، صدوق، مقبول، وهذا اللفظ الاخير هو الاكثر الاغلب،

இப்னு ஹஜர் அவர்களும் இப்னுஹிப்பான் அவர்கள் நம்பகமானவர் என்று சொன்னால் அதை பின்பற்றி ‘ஸிகதுன்’ ‘ஸதூகுன்’(உண்மையாளர்), மக்பூலுன் என்று குறிப்பிடுவார்.

நூல்: அல்காஷிப் முன்னுரை

அதாவது யார் மீது குறை சொல்லப்படவில்லையோ அவர்களை இப்னு ஹிப்பான் ஸிகதுன், (நம்பகனாவர்) சதூகுன் (உண்மையாளர்) உஸ்ஸிக (நம்பகமானவர் என்று கருதப்பட்டுள்ளார்) என்று சொல்வாரோ அதைப் பின்பற்றி இப்னு ஹஜர் அவர்களும் கூறுவார் என்று ததஜ கூறுகின்றது.

இவர்கள் எடுத்துக் காட்டிய மேற்கோளில் இவர்கள் சொன்னவாறு கூறப்படவில்லை.

இப்னு ஹிப்பானைப் பின்பற்றி இந்த வார்த்தைகளை இப்னு ஹஜரும் பயன்படுத்தியுள்ளார் என்று இதில் கூறப்படவில்லை. இப்னு ஹிப்பானைப் பின்பற்றி என்ற வாசகம் இவர்களாகச் சேர்த்துக் கொண்ட பொய்யாகும். இப்னு ஹிப்பான் பயன்படுத்தியது போன்ற வாசகங்கள் இப்னு ஹஜர் அவர்களாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று தான் இதில் உள்ளது.

அப்படியானால் இப்னு ஹஜர் அவர்கள் இவ்வார்த்தைகளை இப்னு ஹிப்பான் பயன்படுத்திய பொருளில் பயன்படுத்தினாரா? வேறு பொருளில் பயன்படுத்தினாரா என்று எப்படி அறிவது?

இது மிக எளிதானது. இப்னு ஹஜர் அவர்கள் தக்ரீப் நூலின் முன்னுரையில் அறிவிப்பாளர் குறித்து தான் பயன்படுத்தும் சொற்களின் பொருள் என்ன என்பதை விளக்கி விட்டார். அவரது சொல்லுக்கு என்ன விளக்கம் என்று இப்னு ஹஜர் அவர்களே தெளிவுபடக் கூறி விட்டார்கள்.

இப்னு ஹிப்பான் எந்த அர்த்தத்தில் உண்மையாளர் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளாரோ அந்த அர்த்தத்தில் இப்னு ஹஜர் அவர்கள் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தவில்லை.

இப்னு ஹஜர் எந்த அர்த்தத்தில் இதைப் பயன்படுத்தியுள்ளார் என்று அவரே தக்ரீப் நூலின் முன்னுரையில் பின்வருமாறு சொல்லி உள்ளார்.

அதாவது அறிவிப்பாளர்களைப் பன்னிரண்டு தரத்தில் வகைப்படுத்தியுள்ளதாகக் கூறி அவற்றைப் பட்டியலிடுகிறார்.

تقريب التهذيب : ابن حجر (1/ 1)

فأولها : الصحابة: فأصرح بذلك لشرفهم.

சஹாபாக்கள் அவர்களில் முதல் தரத்தில் உள்ளவர்கள்

الثانية : من أُكد مدحه : إما : بأفعل : كأوثق الناس، أو بتكرير الصفة لفظاً: كثقة ثقة، أو معنى : كثقة حافظ .

மனிதர்களில் மிக நம்பகமானவர், நம்பகமானவர் நம்பகமானவர் என்று இரு தடவை சொல்லப்பட்டவர்கள், நம்பகமானவர், ஹாஃபிள் என்று சொல்லப்பட்டவர்கள் என்று நான் சொன்னால் அவர்கள் இரண்டாம் தரத்தில் உள்ளவர்கள்.

الثالثة: من أفرد بصفة، كثقة، أو متقن، أو ثَبْت، أو عدل.

உறுதியானவர், நம்பகமானவர், நீதியானவர், வலுவானவர் என்ற சொற்களால் நான் குறிப்பிட்டால் அவர்கள்  மூன்றாம் தரத்தில் உள்ளவர்கள்.

الرابعة: من قصر عن درجة الثالثة قليلاً، وإليه الإشارة: بصدوق، أو لا بأس به، أو ليس به بأس

சதூகுன் (உண்மையாளர்) பரவாயில்லை. இவரிடம் குறையில்லை என்ற சொற்களால் நான் குறிப்பிடும் நபர்கள் நான்காம் தரத்தில் உள்ளவர்கள்.

இப்படி பன்னிரண்டு தரத்தையும் இப்னு ஹஜர் பட்டியல் போடுகிறார். நம்பகமானவர்களில் நான்காம் தரத்தில் உள்ளவர்களுக்குத் தான் சதூக் உண்மையாளர் என்ற சொல்லைப் பயன்படுத்தியதாக இப்னு ஹஜர்  கூறுகிறார்.

இதை முன்னுரையில் இப்னு ஹஜரே சொல்லி விட்டார். ஆனால் இப்னு ஹிப்பானைப் பின்பற்றி அறியப்படாதவர்களை உண்மையாளர் என்று இப்னு ஹஜர் சொல்வார் என ததஜ துணிந்து பொய்யை இட்டுக்கட்டியுள்ளனர்.

இப்னு ஹஜர் அவர்கள் தமது தக்ரீப் நூலில் புகாரியில் இடம் பெற்ற பல அறிவிப்பாளர்களை சதூக் – உண்மையாளர் என்ற சொல்லால் குறிப்பிட்டுள்ளார். இப்படி நூற்றுக்கணக்கான ஹதீஸ்கள் உள்ளன.

தக்ரீப் நூலில் இப்னு ஹஜர் அவர்கள் 8826 நபர்களைப் பற்றி விமர்சனம் செய்துள்ளார். அதில் 825 நபர்களை நாம் எடுத்துக் கொண்டோம். இவர்களில் உண்மையாளர் என்று யாரை எல்லாம் விமர்சனம் செய்துள்ளார் என்று தேடினோம். அதிலும் உண்மையாளர் என்று இப்னுஹஜர் விமர்சனம் செய்தவர்களில் புகாரியில் இடம் பெற்றவர்களைத் தேடினால் கீழே உள்ள பட்டியல் கிடைக்கின்றது.

29 – أحمد بن حميد الطريثيثي بضم أوله وراء ومثلثتين مصغرا يكنى أبا الحسن ويعرف بدار أم سلمة ثقة حافظ من العاشرة مات سنة عشرين وقيل بعدها خ س

76 – أحمد بن عبيد الله بن سهيل بن صخر الغداني بضم المعجمة والتخفيف بصري يكنى أبا عبد الله صدوق من العاشرة مات سنة أربع وعشرين وقيل بعد ذلك خ د

84 – أحمد بن عمر الحميري أبو جعفر البغدادي المخرمي بضم الميم وفتح المعجمة وتشديد الراء يعرف بحمدان صدوق من الحادية عشرة مات سنة ثمان وخمسين خ

134 – آدم بن علي العجلي الشيباني صدوق من الثالثة خ س

168 – إبراهيم بن حمزة بن محمد بن حمزة بن مصعب بن عبد الله بن الزبير الزبيري المدني أبو إسحاق صدوق من العاشرة مات سنة ثلاثين خ د س

222 – إبراهيم بن عمر بن مطرف الهاشمي مولاهم أبو إسحاق بن أبي الوزير المكي نزيل البصرة صدوق من التاسعة خ 4

303 – أزهر بن جميل بن جناح الهاشمي مولاهم البصري الشطي بالمعجمة وتشديد الطاء صدوق يغرب من العاشرة خ د س

314 – أسامة بن حفص المدني صدوق ضعفه الأزدي بلا حجة من الثامنة خ

358 – إسحاق بن سويد بن هبيرة العدوي البصري صدوق تكلم فيه للنصب من الثالثة مات سنة إحدى وثلاثين خ م د س

359 – إسحاق بن شاهين بن الحارث الواسطي أبو بشر بن أبي عمران صدوق من العاشرة مات بعد الخمسين وقد جاز المائة خ س

381 – إسحاق بن محمد بن إسماعيل بن عبد الله بن أبي فروة الفروي المدني الأموي مولاهم صدوق كف فساء حفظه من العاشرة مات سنة ست وعشرين خ ت ق

460 – إسماعيل بن عبد الله بن عبد الله بن أويس بن مالك بن أبي عامر الأصبحي أبو عبد الله بن أبي أويس المدني صدوق أخطأ في أحاديث من حفظه من العاشرة مات سنة ست وعشرين خ م د ت ق

552 – أمية بن بسطام العيشي بالياء والشين المعجمة بصري يكنى أبا بكر صدوق من العاشرة مات سنة إحدى وثلاثين خ م س

597 – أيمن بن نابل بنون وموحدة أبو عمران ويقال أبو عمرو الحبشي المكي نزيل عسقلان صدوق يهم من الخامسة خ ت س ق

676 – بشر بن آدم الضرير أبو عبد الله البغدادي بصري الأصل صدوق من العاشرة مات سنة ثماني عشرة وله ثمان وستون سنة خ ق

695 – بشر بن عبيس بالموحدة والمهملتين مصغر بن مرحوم بن عبد العزيز العطار البصري نزيل الحجاز وقد ينسب إلى جده صدوق يخطئ من العاشرة خ

701 – بشر بن محمد السختياني أبو محمد المروزي صدوق رمي بالإرجاء من العاشرة مات سنة أربع وعشرين خ

746 – بكر بن عمرو المعافري المصري إمام جامعها صدوق عابد من السادسة مات في خلافة أبي جعفر بعد الأربعين خ م د ت س فق

822 – ثابت بن عجلان الأنصاري أبو عبد الله الحمصي نزل إرمينية صدوق من الخامسة خ د س ق

இதில் கூறப்பட்ட 18 நபர்கள் உண்மையாளர்கள் என்று இப்னு ஹஜர் அவர்களால் விமர்சிக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அவர்கள் புகாரியின் அறிவிப்பாளர்களாக மிக நம்பகமானவர்களாக உள்ளனர். யாரென அறியப்படாதவர்களை இப்னு ஹஜர் உண்மையாளர்கள் எனக் கூறவில்லை. மிக நம்பகமானவர்களையும் உண்மையாளர்கள் எனக் கூறியுள்ளார். அப்படியானால் புகாரியில் இடம் பெற்ற இந்த 18 ஹதீஸ்களும் பலவீனமானவையா? இப்னு ஹஜரின் முழு நூலிலும் புகாரியின் அறிவிப்பாளர்கள் சுமார் 200 நபர்கள் உண்மையாளர்கள் எனக் கூறப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் யாரென அறியப்படாதவர்களா?

எனவே இப்னு ஹஜர் பெயரில் பொய்யை இட்டுக்கட்டி தாங்கள் சொன்னதை மெய்யாக்கப் பார்க்கின்றனர்.

ஆக முஹம்மத் பின் தல்ஹா அவர்கள் நம்பகமானவர் என்று ஹாகிம், தஹபி, இப்னு ஹஜர் ஆகியோர் கூறியுள்ளதால் இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்பது நிருபணமாகிறது.

முஹம்மத் பின் தல்ஹா அவர்கள் தனது தந்தை தல்ஹா மூலம் அறிவிப்பதாக இந்த ஹதீஸ் கூறுகிறது.

தல்ஹாவும் யாரென அறியப்படாதவர் என்றும் ததஜ கூறி இதைப் பலவீனமாக்க முயல்கிறது.

முன்னர் சொன்ன விமர்சனத்திலேயே இதற்கான பதிலும் அடங்கியுள்ளது.

இந்த ஹதீஸை ஹாகிம் சரியான ஹதீஸ் என்று சொன்னதில் இதன் எல்லா அறிவிப்பாளர்களும் அடங்குவார்கள். முஹம்மதும் நம்பகமானவர். அவரது தந்தையும் நம்பகமானவர் என்று இருந்தால் தான் இதைச் சரியான ஹதீஸ் என்று ஹாகிம் கூற முடியும்.

தஹபி அவர்களும் இதை சரியான ஹதீஸ் எனக் கூறியதன் மூலமும் இதுவே உறுதி செய்யப்படுகிறது.

எனவே முஹம்மதும் நம்பகமானவரே; தல்ஹாவும் நம்பகமானவரே. இந்த ஹதீஸும் நம்பகமானதே என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் நிரூபிக்கப்படுகிறது.