தாயின் காலடியில் சொர்க்கம் என்று ஹதீஸ் உள்ளதா?
இந்தக் கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. அவற்றில் பலவீனமான ஹதீஸ்களும் உள்ளன. ஏற்கத்தக்க ஹதீஸ்களும் உள்ளன.
3053 أَخْبَرَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْحَكَمِ الْوَرَّاقُ قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ عَنْ ابْنِ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ طَلْحَةَ وَهُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ طَلْحَةَ عَنْ مُعَاوِيَةَ بْنِ جَاهِمَةَ السَّلَمِيِّ أَنَّ جَاهِمَةَ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَدْتُ أَنْ أَغْزُوَ وَقَدْ جِئْتُ أَسْتَشِيرُكَ فَقَالَ هَلْ لَكَ مِنْ أُمٍّ قَالَ نَعَمْ قَالَ فَالْزَمْهَا فَإِنَّ الْجَنَّةَ تَحْتَ رِجْلَيْهَا رواه النسائي
ஜாஹிமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நான் போர் செய்ய நாடுகிறேன். இது தொடர்பாக உங்களிடம் ஆலோசிக்க வந்துள்ளேன் என்று கூறினார்கள். உமக்கு தாய் இருக்கிறார்களா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் ஆம் என்றார். அவ்ரை பற்றிக் கொள் ஏனெனில் சொர்க்கம் அவரது பாதங்களுக்குக் கீழ் உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : முஆவியா பின் ஜாஹிமா
நூல் : நஸாயீ
ஹாகிமிலும் இது இடம் பெற்றுள்ளது.
المستدرك على الصحيحين للحاكم
2502 – أَخْبَرَنَا إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الْفَقِيهُ، بِالرِّيِّ، ثنا مُحَمَّدُ بْنُ الْفَرَجِ الْأَزْرَقُ، ثنا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ قَالَ: قَالَ ابْنُ جُرَيْجٍ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، عَنْ مُعَاوِيَةَ بْنِ جَاهِمَةَ، أَنَّ جَاهِمَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: إِنِّي أَرَدْتُ أَنْ أَغْزُوَ فَجِئْتُ أَسْتَشِيرُكَ. قَالَ: «أَلَكَ وَالِدَةٌ؟» قَالَ: نَعَمْ، قَالَ: «اذْهَبْ فَالْزَمْهَا، فَإِنَّ الْجَنَّةَ عِنْدَ رِجْلَيْهَا» هَذَا حَدِيثٌ صَحِيحُ الْإِسْنَادِ وَلَمْ يُخَرِّجَاهُ “
التعليق – من تلخيص الذهبي صحيح
ஆரம்பத்தில் இந்த ஹதீஸையும் கீழ்க்கண்ட காரணத்தால் பலவீனமான ஹதீஸ் என்று எழுதி இருந்தோம்.
இதன் அறிவிப்பாளர் வரிசையில் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மானின் மகன் முஹம்மத் பின் தல்ஹா என்பவர் இடம்பெற்றுள்ளார்.
இந்த முஹம்மத் பின் தல்ஹா என்பவரை யாரும் நம்பகமானவர் என்று கூறவில்லை. இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் நம்பகமானவர் என்ற தமது நூலில் பதிவுசெய்துள்ளார்கள். ஒருவரை யாரும் குறை கூறவில்லையானால் அவரை நம்பகமானவர் பட்டியலில் சேர்ப்பது இப்னு ஹிப்பானின் வழக்கமாகும். எனவே இமாம் இப்னு ஹிப்பான் மட்டும் ஒருவரை நம்பகமானவர் என்று கூறினால் அதை ஹதீஸ் கலை அறிஞர்கள் ஏற்க மாட்டார்கள். எனவே இந்த முஹம்மத் பின் தல்ஹா என்பவர் யாரென அறியப்படாதவர் என்ற நிலையில் பலவீனமானவராகிறார்.
இப்படி நாம் எழுதி இருந்தோம்.
ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் தாயின் காலடியில் சொர்க்கம் என்ற ஹதீஸை வைத்து அரசியல்வாதிகள் ஒரு தேர்தல் பிரச்சாரம் செய்தார்கள். இவர்கள் மதிக்கும் அரசியல் தலைவி அனைவருக்கும் தாயாக இருப்பதால் அவர் காலடியில் சொர்க்கம் என்று கூறி தேர்தல் பரப்புரை செய்தார்கள்.
இது அப்போது முஸ்லிம்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்திய போது இப்படி ஒரு ஹதீஸ் உண்டா என்ற சர்ச்சை கிள்ம்பியது.
அந்த நேரத்தில் நாம் எழுதியதைப் பதிவிடலாம் என்பதற்காக அதை மறு ஆய்வு செய்த போது மேலே நாம் சொன்ன காரணம் தவறானது என்பதும் மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூரவமாக அமைந்துள்ளதும் தெரிய வந்தது. அதன் காரணமாக அந்த ஆக்கத்தை நமது இணைய தளத்தில் இருந்து நீக்கி விட்டோம்.
அப்போதே இது குறித்து விளக்கம் அளிக்க நினைத்து காலப்போக்கில் அதை மறந்து விட்டோம்.
இப்போது இது பற்றி சுட்டிக்காட்டப்பட்டதால் இது சரியான ஹதீஸ் தான் என்பதைத் தெளிவுபடுத்துகிறோம்.
இந்த ஹதீஸில் முன்னர் நாம் குறிப்பிட்டவாறு முஹம்மத் பின் தல்ஹா பின் அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான் என்பார் இடம் பெற்றுள்ளது உண்மை. இப்னு ஹிப்பான் மட்டுமே இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளதால் இவர் யார் என அறியப்படாதவர் என்று நாம் குறிப்பிட்டது தவறாகும்.
இவர் அறியப்பட்டவராக இருந்தார் என்பதே சரியான கருத்தாகும்.
மேலே நாம் பதிவிட்டுள்ள ஹதீஸில் ஹாகிம் அவர்கள் இந்த ஹதீஸின் அடியில் இது ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் தொடர் கொண்டது என்கிறார். இதன் அறிவிப்பாளர்கள் அனைவரும் ஹாகிம் கருத்துப்படி நம்பகமானவர்கள் என்றால் அறிவிப்பாளர்க்ளில் ஒருவரான முஹம்மத் பின் தல்ஹாவும் நம்பகமானவர் ஆகிறார்.
ஹாகிம் நூலை திறனாய்வு செய்த தஹபி அவர்கள் இது சரியான ஹதீஸ் என்று கூறியுள்ளார்.அதாவது அனைத்து அறிவிப்பாளர்களும் நம்பமகானவர்கள் என்பது இதன் கருத்தாகும்.
இப்னு ஹஜர் அவர்கள் இவர் உண்மையாளர் என்று கூறியுள்ளார்.
رتبته عند ابن حجر : صدوق
எனவே இவர் அறியப்படாதவர் என்ற வாதம் சரியில்லை.
ஒருவர் அறியப்படாதவர் என்று சொல்வதாக இருந்தால் இரண்டு அம்சங்கள் கவனிக்கப்பட வேண்டும்.
அவரை நம்பகமானவர் என்று ஒருவரும் கூறாமல் இருக்க வேண்டும்.
மேலும் அவர் வழியாக ஒரே ஒருவர் மட்டுமே அறிவித்திருக்க வேண்டும்.
இப்படி இருந்தால் தான் அறியப்படாதவர் என்று ஒருவரைப் பற்றிக் கூற வேண்டும்.
முஹம்மத் பின் தல்ஹா அவர்கள் விஷயத்தில் இந்த இரு குறைகளும் இல்லை.
புகாரி அவர்கள் தமது தாரீகுல் கபீர் நூலில் கூறுகிறார்கள்:
التاريخ الكبير للبخاري بحواشي محمود خليل
357- مُحَمد بْن طَلحَة بْن عَبد اللهِِ بْن عَبد الرَّحمَن بْن أَبي بَكر، القُرَشِيُّ.قَالَ لِي إِسحاق: حدَّثنا أَبو عَامِرٍ، وشَبابَة، قَالَا: حدَّثنا عَبد الرَّحمَن بْنُ أَبي بَكر، عَنْ مُحَمد بْن طَلحَة بْن عَبد اللهِِ بْن عَبد الرَّحمَن بْنِ أَبي بَكر، عَنْ أَبيه طَلحَة، أَنَّ أَبَا بَكر الصِّدِّيق قَالَ لعُفَير: مَا سَمِعتَ النَّبيَّ صَلى اللَّهُ عَلَيه وسَلم فِي الوُدِّ؟ قَالَ: سَمِعتُ النَّبيَّ صَلى اللَّهُ عَلَيه وسَلم يقولُ: الوُدُّ والعَداوَةُ تُتَوارَثُ. وَقَالَ لَنَا بِشر بْنُ مُحَمد: عَنِ ابْنِ المُبارك، عَنْ مُحَمد بْنِ عَبد الرَّحمَن بْنِ فُلان بْنِ طَلحَة، عَنْ أَبي بَكر بْنِ حَزم، عَنْ رجلٍ مِن أصحابِ النَّبيِّ صَلى اللَّهُ عَلَيه وسَلم، عَنِ النَّبيِّ صَلى اللَّهُ عَلَيه وسَلم … ، مِثلَهُ. وقَالَ ابْنُ جُرَيج: أَخبرني مُحَمد بْنُ طَلحَة بْنِ عَبد اللهِ، عَنْ أَبيه، عَنْ مُعاوية بْنِ جاهِمَة؛ فِي الْجِهَادِ. وَقَالَ لَنَا أَبو عَاصِمٍ: عَنِ ابْنِ جُرَيج، عَنْ مُحَمد بْنِ طَلحَة، عَنْ أَبيه، عَنْ مُعاوية: أَتَيتُ النَّبيَّ صَلى اللَّهُ عَلَيه وسَلم، فَقال: أَلَكَ أُمٌّ؟ فَفَيها فَجاهِد.وَقَالَ لِي يُوسُف بْنُ بُهلُول: حدَّثنا عَبدَة، عَنِ ابْنِ إِسحاق، عَنِ الزُّهرِيِّ، عَنْ ابن طَلحَة ابن عُبَيد اللهِ، عَنْ مُعاوية السُّلَمِيِّ … بِهَذَا. حدَّثني الحَسَن بْنُ أَحْمَدَ، قَالَ: حدَّثنا ابْنُ سَلَمة، عَنْ مُحَمد بْنِ إِسحاق، عَنْ مُحَمد بْنِ طَلحَة بْنِ عَبد الرَّحمَن بْنِ أَبي بَكر، عَنْ مُعاوية بْنِ جاهِمَة السُّلَمِيِّ: أَتَيتُ النَّبيَّ صَلى اللَّهُ عَلَيه وسَلم.. بِهَذَا. حدَّثني سَعِيد بْنُ يَحيى، قَالَ: حدَّثنا أَبي، قَالَ: حدَّثنا ابن جُرَيج، قال: أَخبرني مُحَمد ابن طَلحَة بْنِ رُكانة، عَنْ أَبيه، عَنْ مُعاوية بْنِ جاهِمَة: أَتَيتُ النَّبيَّ صَلى اللَّهُ عَلَيه وسَلم …وقَالَ عليٌّ: سَمِعتُ سُفيان: كَانَ مُحَمد بْن طَلحَة بْن عَبد اللهِِ بْن عَبد الرَّحمَن بْن أَبي بَكر على مَكَّة، استعملَهُ عَبد الْعَزِيزِ بْن عُمَر بْن عَبد الْعَزِيزِ، فكَانَ يدعو ابْن شُبرمَة، وابْن أَبي نَجِيح يستشيرهما. قَالَ أَبو عَبد اللهِ: أحسبه صاحب عُمَر بْن عَبد العزيز.
இவர் அபூபக்ர் (ரலி) அவர்களின் கொள்ளுப்பேரனாவார். உமர் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் ஆட்சியில் இவரை மக்காவின் ஆளுனராக நியமித்து இருந்தார்கள். இவர் வ்ழியாக அப்துர்ரஹ்மான் பின் அபீ பக்ர், இப்னுல் முபாரக் இப்னு ஜுரைஜ், ஸுஹ்ரி, முஹம்மத் பின் இஸ்ஹாக் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
புகாரியின் தாரீகுல் கபீர்
இவரிடமிருந்து பிரபலமான ஐவர் அறிவித்துள்னர் என்றால் ஐவரும் இவரை அறிந்துள்ளார்கள் என்று ஆகிறது. இவர் உமர் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் தோழராகவும் மக்காவின் ஆளுனராகவும் இருந்துள்ளதால் யாரென அறியப்படாதவர் என்ற விமர்சனம் இவருக்கு அறவே பொருந்தாது.
இது தவிர அறியப்படாதவர்கள் வழியாக எதையும் அறிவிக்காத வடிகட்டுவதில் கடும் போக்குடைய நஸாயி அவர்கள் இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ளதும் இவர் அறியப்படாதவர் அல்ல என்பதை உறுதி செய்கிறது.
எனவே இந்த ஹதீஸ் பலவீனமானது அல்ல. ஏற்கத்தக்க தரமுடைய ஹதீஸ் என்பதில் ஐயமில்லை.