பணி செய்யும் நிறுவனத்தில் நமக்கு வர வேண்டியதை தெரியாமல் எடுத்துக் கொள்ளலாமா?

நான் பத்து வருடமாக ஒரு கம்பெனியில் வேலை செய்கிறேன். பத்து வருடம் வேலை செய்பவருக்கு தங்க நாணயம் பரிசாகத் தருவார்கள். அதை ஒரு பார்ட்டி வைத்து அதில் தான் வழங்குவார்கள். நான் அந்தப் பார்டிக்கு முன் தாயகம் வரத் திட்டமிட்டுள்ளேன். எனவே எனக்கு அந்தக் காசு கிடைக்காது. இதனால் அதன் மதிப்புக்கு ஒரு பொருளை நான் திருடிக் கொள்ளலாமா?

பதில்:

பத்து ஆண்டுகள் பணியாற்றியவருக்கு நிகழ்ச்சி நடத்தி அதில் தான் பரிசை வழங்குவார்கள் என்று உங்களுக்கு தெரிந்திருக்கிறது. அதைத் தெரிந்து தான் அதில் நீங்கள் பணியாற்றினீர்கள்.

எனவே தெரியாமல் திருடிக் கொள்வது பாவச்செயலாகும்.

உங்கள் நிலையை எடுத்துச் சொல்லி அந்த நிறுவனத்தில் நீங்கள் கோரிக்கை வைக்கலாம். அவர்கள் மறுத்தால் கம்பெனி கூறுவது போல நிகழ்ச்சி நடைபெறும் வரை காத்திருப்பதைத் தவிர வேறு வழி இல்லை.

14.06.2011. 9:46 AM