தங்கம் விலை உயர்ந்து வருவது குறித்து
தங்கம் விலை உயர்ந்து வருவது குறித்து மக்களுக்கு சொல்லும் அறிவுரை என்ன?
கேள்வி: தங்க விலை கிடுகிடு என உயர்ந்து வரும் இந்த நேரத்தில் மக்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன?
– அபூ ஜஸீம் ஜாபர் அலி, சார்ஜா
பல விஷயங்களில் நல்ல ஆலோசனைகளை மக்கள் கேட்கக் கூடியவர்களாக இருந்தாலும் சில விஷயங்களில் அவர்கள் யாருடைய ஆலோசனையையும் கேட்க மாட்டார்கள். அதில் முதலிடத்தில் தங்க நகை மீதுள்ள மோகம் உள்ளது. உலக நாடுகளில் இந்தியர்களை விட வசதியானவர்கள் அதிகம் உள்ளனர். அவர்களில் யாரும் இந்தியப் பெண்கள் போல் நகை மோகம் கொண்டு அலைவதில்லை. நமது பெண்களின் இந்த மோகத்தை அடிப்படையாகக் கொண்டு தான் ஆன்லைன் மூலம் தங்கத்தை வாங்கி வைத்துக் கொண்டு நாளுக்கு நாள் நிமிடத்துக்கு நிமிடம் விலையை ஏற்றிக் கொண்டு உள்ளனர். இந்த மோகம் குறைய வேண்டும் என்பது தான் நாம் சொல்லும் ஒரே அறிவுரை. நகைகள் அணிவது தான் பெண்களுக்கு ஒரே இலக்கணம் என்ற நிலை மாறித்தான் ஆக வேண்டும். ஆனால் யாரும் இதைக் கேட்க மாட்டார்கள். உணர்வு 16:16