தொழுகையின் ஆரம்ப துஆ
தொழுகையைத் துவக்கிய உடன் கிராஅத் ஓதுவதற்கு முன் சில துஆக்கள் உள்ளன. அவற்றில் எதையாவது ஓதலாம்.
صحيح البخاري
744 – حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ بْنُ زِيَادٍ، قَالَ: حَدَّثَنَا عُمَارَةُ بْنُ القَعْقَاعِ، قَالَ: حَدَّثَنَا أَبُو زُرْعَةَ، قَالَ: حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْكُتُ بَيْنَ التَّكْبِيرِ وَبَيْنَ القِرَاءَةِ إِسْكَاتَةً – قَالَ أَحْسِبُهُ قَالَ: هُنَيَّةً – فَقُلْتُ: بِأَبِي وَأُمِّي يَا رَسُولَ اللَّهِ، إِسْكَاتُكَ بَيْنَ التَّكْبِيرِ وَالقِرَاءَةِ مَا تَقُولُ؟ قَالَ: ” أَقُولُ: اللَّهُمَّ بَاعِدْ بَيْنِي وَبَيْنَ خَطَايَايَ، كَمَا بَاعَدْتَ بَيْنَ المَشْرِقِ وَالمَغْرِبِ، اللَّهُمَّ نَقِّنِي مِنَ الخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الأَبْيَضُ مِنَ الدَّنَسِ، اللَّهُمَّ اغْسِلْ خَطَايَايَ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالبَرَدِ “
கைகளை நெஞ்சில் கட்டிய பின்னர் பின் வரும் துஆக்களில் ஏதாவது ஒன்றை ஓத வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்காக தக்பீர் கூறினால் குர்ஆன் வசனங்களை ஓதுவதற்கு முன்பு சிறிது நேரம் மவுனமாக இருப்பார்கள். இறைத்தூதரே! என் தாயும், தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தக்பீருக்கும், கிராஅத்துக்கும் (குர்ஆன் ஓதுதலுக்கும்) இடையே தாங்கள் என்ன ஓதுகிறீர்கள்? என நான் கேட்டேன். அதற்கு,
அல்லாஹும்ம பாயித் பைனீ வ பைன கதாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரி(க்)கி வல் மக்ரிப். அல்லாஹும்ம நக்கினீ மினல் கதாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யலு மினத் தனஸ். அல்லாஹும் மக்ஸில் கதாயாய பில்மாயி வஸ்ஸல்ஜி வல்பரத்
என்று ஓதுவேன் என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.
பொருள்: இறைவா! கிழக்குக்கும், மேற்குக்கும் இடையே வெகு தூரத்தை நீ ஏற்படுத்தியதைப் போல் எனக்கும், என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போல் என்னை என் தவறுகளிலிருந்து தூய்மைப்படுத்துவாயாக! இறைவா! தண்ணீராலும், பனிக்கட்டியாலும், ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவி விடுவாயாக!
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ 744
سنن النسائي
897 – أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ قَالَ: حَدَّثَنِي عَمِّي الْمَاجِشُونُ بْنُ أَبِي سَلَمَةَ، عَنْ عَبْدُ الرَّحْمَنِ الْأَعْرَجِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنُ أَبِي رَافِعٍ، عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهِ عَنْهُ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا اسْتَفْتَحَ الصَّلَاةَ كَبَّرَ، ثُمَّ قَالَ: «وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا، وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ، إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ، اللَّهُمَّ أَنْتَ الْمَلِكُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَنَا عَبْدُكَ ظَلَمْتُ نَفْسِي وَاعْتَرَفْتُ بِذَنْبِي فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، وَاهْدِنِي لِأَحْسَنِ الْأَخْلَاقِ لَا يَهْدِي لِأَحْسَنِهَا إِلَّا أَنْتَ، وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا لَا يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلَّا أَنْتَ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ كُلُّهُ فِي يَدَيْكَ، وَالشَّرُّ لَيْسَ إِلَيْكَ أَنَا بِكَ وَإِلَيْكَ تَبَارَكْتَ وَتَعَالَيْتَ أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ»
நபி (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போது தக்பீர் கூறுவார்கள். பிறகு பின்வரும் துஆவை ஓதி விட்டு கிராஅத் ஓதுவார்கள்.
வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ ஃபதரஸ் ஸமாவா(த்)தி வல்அர்ள ஹனீஃபன் வமா அன மினல் முஷ்ரி(க்)கீன். இன்ன ஸலா(த்)தீ வநுசு(க்)கீ வமஹ்யாய வமமா(த்)தீ லில்லாஹி ரப்பில் ஆலமீன். லாஷரீ(க்)கலஹு வபிதாலி(க்)க உமிர்(த்)து வஅன மினல் முஸ்லிமீன். அல்லாஹும்ம அன்(த்)தல் மலி(க்)கு லாயிலாஹ இல்லா அன்(த்)த, வஅன அப்து(க்)க ளலம்(த்)து நஃப்ஸீ, வஃதரஃப்(த்)து பிதன்பீ ஃபஃக்பிர்லீ துனூபி ஜமீஆ, லாயஃக்ஃபிருத் துனூப இல்லா அன்(த்)த வஹ்தினீ லி அஹ்ஸனில் அக்லா(க்)கி லா யஹ்தீ லிஅஹ்ஸனிஹா இல்லா அன்(த்)த, வஸ்ரிஃப் அன்னீ ஸய்யிஅஹா,லாயஸ்ரிஃபு அன்னீ ஸய்யிஅஹா இல்லா அன்(த்)த, லப்பை(க்)க வஸஃதை(க்)க வல்கைரு குல்லுஹு ஃபீயதை(க்)க வஷ்ஷர்ரு லைஸ இலை(க்)க அன பி(க்)க வஇலை(க்)க தபாரக்(த்)த வ(த்)தஆலை(த்)த அஸ்தஃபிரு(க்)க, வஅ(த்)தூபு இலை(க்)க
பொருள்: இணை வைத்தவர்களில் ஒருவனாக நான் இல்லாமல் கட்டுப்பட்டவனாக, வானங்களையும் பூமியையும் படைத்தவனை நோக்கி என் முகத்தைத் திருப்புகிறேன். என் தொழுகையும், என் இதர வணக்கங்களும், என் வாழ்வும்,என் மரணமும் அகில உலகையும் படைத்து இரட்சிக்கும் இறைவனுக்கே உரியன. அவனுக்கு நிகராக எவருமில்லை. இவ்வாறு தான் ஏவப்பட்டுள்ளேன். கட்டுப்பட்டு நடப்பவர்களில் நானும் ஒருவன். இறைவனே! நீயே அதிபதி. உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு எவருமில்லை. நான் உனது அடிமை. எனக்கே நான் அநீதி இழைத்து விட்டேன். என் குற்றத்தை ஒப்புக் கொண்டு விட்டேன். எனவே என் குற்றங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! உன்னைத் தவிர வேறு யாரும் குற்றங்களை மன்னிக்க முடியாது. நற்குணத்தின் பால் எனக்கு வழி காட்டுவாயாக! உன்னைத் தவிர யாரும் வழி காட்ட முடியாது. தீய குணங்களை விட்டும் என்னைக் காப்பாயாக! உன்னைத் தவிர யாரும் தீய குணங்களை விட்டும் காக்க முடியாது. இதோ உன்னிடம் வந்து விட்டேன். அனைத்து நன்மைகளும் உன் கைகளிலே உள்ளன. தீமைகள் உன்னைச் சேராது. நான் உன்னையே சார்ந்துள்ளேன். உன்னிடமே சரணடைந்தேன். நீ பாக்கியம் மிக்கவன். உயர்ந்தவன். உன்னிடம் பாவமன்னிப்பு தேடுகின்றேன். உன்னை நோக்கி மீள்கின்றேன்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: நஸாயீ 887
தொழுகையை துவக்கும் போது சுப்ஹானகல்லாஹும்ம எனும் துஆவை ஹனபி மத்ஹபினர் ஓதுகின்றனர்.
இது குறித்து பல ஹதீஸ்கள் பலவீனமாக இருந்தாலும் சில ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானதாகவும் உள்ளன.
سنن النسائي
899 – أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ فَضَالَةَ بْنُ إِبْرَاهِيمَ قَالَ: أَنْبَأَنَا عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَنْبَأَنَا جَعْفَرُ بْنِ سُلَيْمَانَ، عَنْ عَلِيِّ بْنُ عَلِيٍّ، عَنْ أَبِي الْمُتَوَكِّلِ، عَنْ أَبِي سَعِيدٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ قَالَ: «سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ تَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى جَدُّكَ وَلَا إِلَهَ غَيْرُكَ»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும் போது சுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக, தபாரகஸ்முக, வ தஆலா ஜத்துக வலா இலாஹ கைருக என ஓதுவார்கள்.
நூல் நஸாயி
துஆவின் பொருள்
இறைவா நீ தூயவன். உன்னைப் புகழ்கிறேன். உன் பெயர் பாக்கியமானது. உன் வல்லமை உயர்ந்துள்ளது. உன்னைத் தவிர வணக்கத்துக்கு உரியவன் யாருமில்லை
இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அலீ பின் அலீ என்பார் இடம் பெற்றுள்ளார்.
இந்த ஹதீஸ் அறிவிப்பாளர் தொடரில் வரும் அலீ பின் அலீ என்பார் பலவீனர் என்று கூறி இந்த ஹதீஸை பலர் ஆதாரமாகக் கொள்ளவில்லை.
இவரைப் பற்றிய குறை நிறைகளை முழுமையாக ஆய்வு செய்தால் இவர் நம்பகமான அறிவிப்பாளர் என்பதே சரியாகும்.
குறை கூறும் விமர்சனங்கள்
قال المروذي: وقال في علي بن علي الرفاعي: لم يكن بهذا الشيخ بأس إلَّا أنه رفع أحاديث. (العلل
இவரிடம் குறை இல்லை. இருந்தாலும் நபித்தோழர் சொன்ன சில செய்திகளை நபிகள் சொன்னதாக அறிவித்துள்ளார் என்று மரூதீ கூறுகிறார்.
ஒருவரிடம் இந்தக் குறை இருந்தால் அவர் பலவீனர் என்றாலும் இவரைப் பற்றி இவ்வாறு முடிவு செய்ய எந்த ஆதாரத்தையும் காட்டவில்லை.
ابن حبان: عَليّ بن عَليّ بن نجاد بن رِفَاعَة الرِّفَاعِي كنيته أَبُو إِسْمَاعِيل من أهل الْبَصْرَة يروي عَن الْحسن وَأبي المتَوَكل روى عَنهُ وَكِيع وَأَبُو نعيم كَانَ مِمَّن يخطء كثيرا على قلَّة رِوَايَته وينفرد عَن الْأَثْبَات بِمَا لَا يشبه حَدِيث الثِّقَات لَا يُعجبنِي الِاحْتِجَاج بِهِ إِذَا انْفَرد رَوَى عَنْ أَبِي الْمُتَوَكِّلِ النَّاجِيِّ عَنْ أَبِي سَعِيدٍ …
இவர் அதிகம் தவறாக கூறுபவர்; நம்பகமானவர்கள் வழியாக இவர் தனித்து பல செய்திகளை அறிவித்துள்ளார் என்று இப்னு ஹிப்பான் கூறுகிறார். இவரை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்று இப்னு ஹிப்பான் கூறுகிறார்.
அதிகம் தவறாக கூறுபவர் என்பதை இப்னு ஹிப்பான் ஆதாரத்துடன் நிறுவவில்லை. எனவே பலவீனர் என்று நிரூபிக்கப்படாத ஒருவர் நம்பகமானவர்கள் வழியாக தனித்து அறிவிப்பதில் எந்தப் பிரச்சனையும் இல்லை
قال الترمذي كان يحيى يعني القطان يتكلم فيه
وقال ابن المديني، عن يحيى بن سعيد: كان يرى القدر، وتكلم فيه ابن معين لقوله بالقدر. وذكره العقيلي لقوله بالقدر
யஹ்யா பின் சயீத் அல்கத்தான் அவர்கள் இவரைக் குறை கூறியுள்ளார் என்று திர்மிதீ கூறுகிறார்.
இவர் கத்ரியா கொள்கை உடையவர் என்ற காரணத்தினால் தான் யஹ்யா பின் சயீத் அல்கத்தான் குறை கூறியுள்ளார் என்று இப்னுல் மதீனீ காரணத்தை விளக்குகிறார்.
மாறுபட்ட கொள்கையில் உள்ளவர் என்பதற்காக நம்பகமான எவரது ஹதீஸும் நிராகரிக்கப்படாது. பல கத்ரியாக்களின் ஹதீஸ்கள் புகாரி முஸ்லிமில் கூட உள்ளன.
இவை தான் அலீ பின் அலீ குறித்து குறை கூறும் விமர்சனங்கள்.
இவரைப் பற்றிய நற்சான்றுகள் வருமாறு:
وَقَال الفضل بْن سَهْلٍ الأَعْرَجِ عَنْ يَعْقُوبَ بْنِ إسحاق الحضرمي: قدم علينا شعبة، فَقَالَ: اذهبوا بْنا إِلَى سيدنا وابْن سيدنا علي بْن علي الرفاعي.
ஷுஃபா அவர்கள் எங்களிடம் வந்த போது நம் தலைவரும், தலைவரின் மகனுமாகிய அலீ பின் அலீ அவர்களிடம் என்னைக் கொண்டு செல்லுங்கள் என்று கூறினார்கள்.
ஹதீஸ் கலை மாமேதை ஷுஃபா அவர்கள், தலைவர் என்று இவரை மதித்திருப்பது இவருக்கான நற்சான்றாகும்.
وَقَال النَّسَائي: لا بأس به.
இவரிடம் குறை இல்லை என்று நஸாயீ கூறுகிறார்.
وَقَال أَبُو عُبَيد الآجري (2) : سئل أَبُو داود عن سُلَيْمان بْن سُلَيْمان وعلي بْن علي الرفاعي، فَقَالَ: علي بْن علي الرفاعي. وجعل يثني عَلَى علي بْن علي الرفاعي.
அலீ பின் அலீ குறித்து அபூதாவூத் அவர்களிடம் கேட்கப்பட்ட போது அவரைப் புகழ்ந்துரைத்தார்கள்.
وَقَال عَبْد الرَّحْمَنِ (1) بْن أَبي حاتم: سَأَلتُ أَبِي عَنْهُ، قال: ليس بحديثه بأس. قُلْتُ: يحتج بحديثه؟ قال: لا. ثُمَّ قال: حدث وكيع عَنْهُ فَقَالَ: حَدَّثَنَا علي بْن علي، وكان ثقة.
அலீ பின் அலீ ஹதீஸில் குறை இல்லை என்று அபூ ஹாத்தம் கூறினார். அவரை ஆதாரமாகக் கொள்ளலாமா என்று கேட்ட போது கூடாது என்றார்கள். பின்னர் அவர் வழியாக வகீவு அறிவித்துள்ளதாகவும் அவர் நம்பகமானவராக இருந்தார் என்றும் குறிப்பிட்டார்கள்.
இப்னு ஹாத்தம் முன்னர் சொன்ன கருத்தை மாற்றிக் கொண்டார் என்று இதிலிருந்து தெரிகிறது.
وَقَال عثمان بْن سَعِيد الدارمي (2) عَن يحيى بْن مَعِين، وأبو زُرْعَة (3) : ثقة (4) .
அலீ பின் அலீ நம்பகமானவர் என்று அபூ ஸுர்ஆ, யஹ்யா பின் மயீன் ஆகியோர் கூறியுள்ளனர்
وَقَال مُحَمَّد بْن عَبد اللَّهِ بْن عمار: كَانَ – زعموا – يصلي كل يوم ست مئة ركعة، وكان تشبه عينيه (5) بعيني النبي صَلَّى اللَّهُ عليه وسلم، وكان رجلا عابدا ما أرى يكون لَهُ عشرون حديثا. قِيلَ لَهُ: أثقة هُوَ؟ قال: نعم
அலீ பின் அலீ நம்பகமானவரா என்று முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் அம்மார் அவர்களிடம் கேட்ட போது ஆம் நம்பகமானவர் என்று கூறினார்கள்.
وَقَال مُحَمَّد بْن عَلِيٍّ الوراق: سمعت أَحْمَد بْن حنبل سئل عن حديث علي بْن علي، فَقَالَ: صالح. قِيلَ: قد كَانَ يشبه بالنبي صَلَّى اللَّهُ عليه وسلم. قال: كذا كَانَ يقال.
وَقَال محمد بْن إسحاق الصاغاني عن أحمد بْن حنبل نحو ذَلِكَ
قال حرب (3) بْن إسماعيل، عَنْ أَحْمَد بْن حَنْبَل: لم يكن به بأس (1) .
ـ وقال أَبو داود: قلت لأحمد: علي بن علي الرفاعي؟ قال: ليس به بأس. «سؤالاته» (497).
அலீ பின் அலீ நல்லவர் என்றும் நபிகளின் சாயலில் இருப்பார் என்றும் அஹ்மத் பின் ஹம்பல் கூறியதாக முஹம்மத் பின் அலீ அல் வர்ராக், முஹம்மத் பின் இஸ்ஹாக், ஹர்ப் பின் இஸ்மாயீல், அபூதாவூத், ஆகியோர் கூறியுள்ளனர்.
இந்த ஹதீஸ் சரியானதல்ல என்று அஹ்மத் இமாம் கூறினாலும் இந்த அறிவிப்பாளரை நல்லவர் எனக் கூறியுள்ளார்.
அலீ பின் அலீ என்பார் பலவீனர் என்று காரணம் கூறி இது பலவீனமானது என்று முன்னர் நாம் கூறியுள்ளோம். ஆனால் பலவீனர் என்று சொல்பவர்கள்: அதற்கான காரணத்தைக் கூறாததாலும் அதிகமான அறிஞர்கள் நம்பகமானவர் எனக் கூறியுள்ளதாலும் இவர் நம்பகமானவ்ர் என்பதே சரியாகும்
இந்த துஆவையும் ஓதிக் கொள்ள்லாம்.
மற்றொரு துஆவையும் ஓதியுள்ளனர். இது பெரிய துஆவாக உள்ளதால் ஜமாஅத் தொழுகையில் ஓத வாய்ப்பு இருக்காது. தனியாக தொழுதால் ஓதிக் கொள்ளலாம்.
صحيح مسلم مشكول (1/ 534)
201 – (771) حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ، حَدَّثَنَا يُوسُفُ الْمَاجِشُونُ، حَدَّثَنِي أَبِي، عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ كَانَ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ، قَالَ: «وَجَّهْتُ وَجْهِيَ لِلَّذِي فَطَرَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ حَنِيفًا، وَمَا أَنَا مِنَ [ص:535] الْمُشْرِكِينَ، إِنَّ صَلَاتِي، وَنُسُكِي، وَمَحْيَايَ، وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، لَا شَرِيكَ لَهُ، وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ، اللهُمَّ أَنْتَ الْمَلِكُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَنْتَ رَبِّي، وَأَنَا عَبْدُكَ، ظَلَمْتُ نَفْسِي، وَاعْتَرَفْتُ بِذَنْبِي، فَاغْفِرْ لِي ذُنُوبِي جَمِيعًا، إِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ، وَاهْدِنِي لِأَحْسَنِ الْأَخْلَاقِ لَا يَهْدِي لِأَحْسَنِهَا إِلَّا أَنْتَ، وَاصْرِفْ عَنِّي سَيِّئَهَا لَا يَصْرِفُ عَنِّي سَيِّئَهَا إِلَّا أَنْتَ، لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ كُلُّهُ فِي يَدَيْكَ، وَالشَّرُّ لَيْسَ إِلَيْكَ، أَنَا بِكَ وَإِلَيْكَ، تَبَارَكْتَ وَتَعَالَيْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ»، وَإِذَا رَكَعَ، قَالَ: «اللهُمَّ لَكَ رَكَعْتُ، وَبِكَ آمَنْتُ، وَلَكَ أَسْلَمْتُ، خَشَعَ لَكَ سَمْعِي، وَبَصَرِي، وَمُخِّي، وَعَظْمِي، وَعَصَبِي»، وَإِذَا رَفَعَ، قَالَ: «اللهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ مِلْءَ السَّمَاوَاتِ، وَمِلْءَ الْأَرْضِ، وَمِلْءَ مَا بَيْنَهُمَا، وَمِلْءَ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ»، وَإِذَا سَجَدَ، قَالَ: «اللهُمَّ لَكَ سَجَدْتُ، وَبِكَ آمَنْتُ، وَلَكَ أَسْلَمْتُ، سَجَدَ وَجْهِي لِلَّذِي خَلَقَهُ، وَصَوَّرَهُ، وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ، تَبَارَكَ اللهُ أَحْسَنُ الْخَالِقِينَ»، ثُمَّ يَكُونُ مِنْ آخِرِ مَا يَقُولُ بَيْنَ التَّشَهُّدِ وَالتَّسْلِيمِ: «اللهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ، وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ، وَمَا أَسْرَفْتُ، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي، أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ».
வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ, ஃபதரஸ் ஸமாவாதி வல் அர்ள ஹனீஃபன் வமா அன மினல் முஷ்ரிகீன், இன்ன ஸலாதீ வனுஸுகீ, வமஹ்யாய வமமாதீ, லில்லாஹி ரப்பில் ஆலமீன், லா ஷரீக லஹு, வபிதாலிக உமிர்த்து, வ அன மினல் முஸ்லிமீன், அல்லாஹும்ம அன்தல் மலிkகு, லா இலாஹ இல்லா அன்த, அன்த ரப்பீ, வ அன அப்துக ளலம்து நஃப்ஸீ, வஃதரஃப்து பிதன்பீ, ஃப்க்ஃபிர் லீ துனூபீ ஜமீஆ, இன்னஹு லா யக்ஃபிருத் துனூப இல்லா அன்த, வஹ்தினீ லி அஹ்ஸனில் அக்லாகி, லா யஹ்தீ லி அஹ்ஸனிஹா இல்லா அன்த, வஸ்ரிஃப் அன்னீ சய்யிஅஹா, லா யஸ்ரிஃப் அன்னீ சய்யிஅஹா இல்லா அன்த, லப்பைக், வ சஃதைக், வல் கைரு குல்லுஹு பி யதைக், வஷ்ஷர்ரு லைஸ இலைக், அன பிக வ இலைக, தபாரக்த வத ஆலைத்த, அஸ்தஃபிருக வ அதுபு இலைக்,