தொழும்போது பேசிவிட்டால்…?

நான் அறையில் தனியாகத் தொழுது கொண்டிருக்கும் போது என் தாயார் என்னை அழைத்தார். நான் என்ன செய்வதென்று தெரியாமல் என்ன என்று கேட்டு விட்டேன். இதற்காக தொழுகை முடிந்தவுடன் ஸஜ்தா செய்து விட்டேன். இது சரியா? ஆதாரத்துடன் விளக்கவும்.

எஸ். ஜெஹபர் சாதிக், கருக்கங்குடி

தொழுகையில் பேசுவதற்குத் தடை உள்ளது. எனினும் மறதியாகப் பேசி விட்டால் தொழுகை முறியும் என்றோ, ஸஜ்தா செய்ய வேண்டும் என்றோ கூறப்படவில்லை.

صحيح مسلم

1227 – حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ وَأَبُو بَكْرِ بْنُ أَبِى شَيْبَةَ – وَتَقَارَبَا فِى لَفْظِ الْحَدِيثِ – قَالاَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ عَنْ حَجَّاجٍ الصَّوَّافِ عَنْ يَحْيَى بْنِ أَبِى كَثِيرٍ عَنْ هِلاَلِ بْنِ أَبِى مَيْمُونَةَ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ عَنْ مُعَاوِيَةَ بْنِ الْحَكَمِ السُّلَمِىِّ قَالَ بَيْنَا أَنَا أُصَلِّى مَعَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- إِذْ عَطَسَ رَجُلٌ مِنَ الْقَوْمِ فَقُلْتُ يَرْحَمُكَ اللَّهُ. فَرَمَانِى الْقَوْمُ بِأَبْصَارِهِمْ فَقُلْتُ وَاثُكْلَ أُمِّيَاهْ مَا شَأْنُكُمْ تَنْظُرُونَ إِلَىَّ. فَجَعَلُوا يَضْرِبُونَ بِأَيْدِيهِمْ عَلَى أَفْخَاذِهِمْ فَلَمَّا رَأَيْتُهُمْ يُصَمِّتُونَنِى لَكِنِّى سَكَتُّ فَلَمَّا صَلَّى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَبِأَبِى هُوَ وَأُمِّى مَا رَأَيْتُ مُعَلِّمًا قَبْلَهُ وَلاَ بَعْدَهُ أَحْسَنَ تَعْلِيمًا مِنْهُ فَوَاللَّهِ مَا كَهَرَنِى وَلاَ ضَرَبَنِى وَلاَ شَتَمَنِى قَالَ « إِنَّ هَذِهِ الصَّلاَةَ لاَ يَصْلُحُ فِيهَا شَىْءٌ مِنْ كَلاَمِ النَّاسِ إِنَّمَا هُوَ التَّسْبِيحُ وَالتَّكْبِيرُ وَقِرَاءَةُ الْقُرْآنِ ». أَوْ كَمَا قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّى حَدِيثُ عَهْدٍ بِجَاهِلِيَّةٍ وَقَدْ جَاءَ اللَّهُ بِالإِسْلاَمِ وَإِنَّ مِنَّا رِجَالاً يَأْتُونَ الْكُهَّانَ. قَالَ « فَلاَ تَأْتِهِمْ ». قَالَ وَمِنَّا رِجَالٌ يَتَطَيَّرُونَ.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான், “யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக)” என்று கூறினேன். உடனே மக்கள் என்னை வெறித்துப் பார்த்தனர். நான், “என்னை என் தாய் இழக்கட்டும். நீங்கள் ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்?” என்று கேட்டேன். மக்கள் தங்கள் கைகளால் தொடைகள் மீது தட்டினர். என்னை அவர்கள் அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்பதை நான் அறிந்து கொண்டு நான் அமைதியாகி விட்டேன்.

என் தாயும்தந்தையும் நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்அல்லாஹ்வின் தூதர் (ஸல்அவர்கள் தொழுது முடித்ததும் (எனக்கு அறிவுரைகூறினார்கள்அவர்களுக்கு முன்னரோபின்னரோ அவர்களை விட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் கண்டதேயில்லைஅல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னைக் கண்டிக்கவுமில்லைஅடிக்கவுமில்லைதிட்டவுமில்லைஅவர்கள், “இந்தத் தொழுகையானது மக்களின் பேச்சுகளுக்கு உரிய நேரமன்றுதொழுகை என்பது இறைவனைத் துதிப்பதும்பெருமைப்படுத்துவதும்குர்ஆன் ஓதுவதுமாகும்” என்றோ அல்லது இதைப் போன்றோ சொன்னார்கள்.

அறிவிப்பவர்: முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி)

நூல்: முஸ்லிம் 836

தொழுகையில் தெரியாமல் பேசிவிட்ட ஒரு நபித்தோழருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கமளிக்கின்றார்கள். ஆனால் ஸஜ்தா செய்யுமாறோ, திருப்பித் தொழுமாறோ கூறவில்லை. எனவே மறதியாகப் பேசியதற்குப் பரிகாரம் எதுவும் தேவையில்லை.

தொழுகையில் பேசக் கூடாது என்ற சட்டம் தெரியாமல் பேசியவருக்கும், மறந்த நிலையில் பேசியவருக்கும் தான் இந்த நிலை. தொழுகையில் பேசக் கூடாது என்ற சட்டம் தெரிந்த நிலையில் வேண்டுமென்றே தான் நீங்கள் பேசியுள்ளீர்கள் என்று தெரிகிறது. இது தொழுகையை முறித்துவிடும் என்பதால் மீண்டும் அத்தொழுகையை நீங்கள் தொழுதாக வேண்டும்.