உம்மு ஷரீக் ரலி அவர்கள் ரகசியமாக ஒவ்வொரு வீடாக பெண்களிடத்தில் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்து பெண்கள் ஏராளமாக இஸ்லாத்தில் வந்தார்களா? அதன் காரணமாக அவரை ஒட்டகத்தில் விரிப்பு இல்லாமல் மர்ம உருப்பு அழுத்தி வேதனை ஏற்பட்டு பதிப்புகள் ஏற்படும் அளவுக்கு பாலைவன வெயிலில் மூன்று நாட்கள் தண்ணீர் இல்லாமல் கொடுமைப்படுத்தப்பட்டார்களா? அப்போது விண்ணில் இருந்து ஒரு குடுவையில் தண்ணீர் இறைவனால் இறக்கப்பட்டது அதை பருகினார்களாம் அதை கண்ட காவலாளி அனைவரும் இஸ்லாத்தை ஏற்றார்களாம். இந்த சம்பவம் உன்மையா? சபரிமாலா அவர்கள் சொல்லும் இந்தச் செய்தி உண்மையா?
பதில்
உம்மு ஷரீக் ரலி அவர்களுக்கு வானிலிருந்து இனிமையான பானம் இறக்கப்பட்டதாக சபரிமாலா சொல்கிறார். இது சரியான செய்தியா என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள்.
இவர் சொல்லக்கூடிய இந்தச் செய்தி பைஹகியின் தலாயிலுன் நுபுவ்வா எனும் நூலிலும் இன்னும் சில நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் சொல்வது போல் இஸ்லாத்தை வீடுவீடாக பிரச்சாரம் செய்து வந்ததாக இல்லை. ஒரு யூதரிடம் தன்னை நபிகளிடம் கொண்டு போய் சேர்க்க உதவி தேடியதாகவும் அந்த யூதர் அழைத்துச் சென்று அவருக்கு தண்ணீர் கொடுக்கவில்லை. அப்போது வானத்தில் இருந்து வெண்மையான தேனைவிட இனிமையான பானம் வானிலிருந்து இறங்கியதாக ஒரு ஹதீஸ் பைஹகியின் தலாயிலுன் நுபுவா எனும் நூலிலும் இன்னும் சில நூல்களிலும் உள்ளது.
அந்த ஹதீஸின் அரபு மூலம் கீழே உள்ளது.
دلائل النبوة للبيهقي
بَابٌ فِيمَا ظَهَرَ مِنَ الْكَرَامَاتِ عَلَى أُمِّ شَرِيكٍ فِي هِجْرَتِهَا إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا ظَهَرَ مِنْ دَلَالَاتِ النُّبُوَّةِ فِي الْعُكَّةِ الَّتِي أَهْدَتْهَا لَهُ.
أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ: مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ الْجَبَّارِ، حَدَّثَنَا يُونُسُ بْنُ بُكَيْرٍ، عَنْ عَبْدِ الْأَعْلَى بنْ أَبِي الْمُسَاوِرِ الْقُرَشِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ عَطَاءٍ عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: كَانَتِ امْرَأَةٌ مِنْ دَوْسٍ يُقَالُ لَهَا: أُمُّ شَرِيكٍ أَسْلَمَتْ فِي رَمَضَانَ، فَأَقْبَلَتْ تَطْلُبُ مَنْ يَصْحَبُهَا إِلَى رَسُولِ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمَ، فَلَقِيَتْ رَجُلًا مِنَ الْيَهُودِ، فَقَالَ: مَا لَكِ يَا أُمَّ شَرِيكٍ؟ قَالَتْ: أَطْلُبُ رَجُلًا يَصْحَبُنِي إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَتَعَالَيْ فَأَنَا أَصْحَبُكِ، قَالَتْ: فَانْتَظِرْنِي حَتَّى املأ سقاي مَاءً، قَالَ: مَعِي مَاءٌ لَا تُرِيدِينَ مَاءً، فَانْطَلَقَتْ مَعَهُمْ فَسَارُوا يَوْمَهُمْ حَتَّى أَمْسَوْا، فَنَزَلَ الْيَهُودِيُّ وَوَضَعَ سُفْرَتَهُ فَتَعَشَّى، فَقَالَ: يَا أُمَّ شَرِيكٍ! تَعَالَيْ إِلَى الْعِشَاءِ، فَقَالَتِ: اسْقِنِي مِنَ الْمَاءِ فَإِنِّي عَطْشَى وَلَا أَسْتَطِيعُ أَنْ آكُلَ حَتَّى أَشْرَبَ، فَقَالَ: لَا أَسْقِيكَ حَتَّى تَهَوَّدِي، فَقَالَتْ: لَا جَزَاكَ اللهُ خَيْرًا [غَرَّبْتَنِي وَمَنَعْتَنِي أَحْمِلَ مَاءً فَقَالَ: لَا وَاللهِ لَا أَسْقِيكَ من قطرة حتى تهوّدين! فَقَالَتْ: لَا وَاللهِ] ، لَا أَتَهَوَّدُ أَبَدًا بَعْدَ إِذْ هَدَانِي اللهُ لِلْإِسْلَامِ، فَأَقْبَلَتْ إِلَى بَعِيرِهَا فَعَقَلَتْهُ، وَوَضَعَتْ رَأْسَهَا عَلَى رُكْبَتِهِ فَنَامَتْ، قَالَتْ: فَمَا أَيْقَظَنِي إِلَّا بَرْدُ دَلْوٍ قَدْ وَقَعَ عَلَى جَبِينِي، فَرَفَعْتُ رَأْسِي فنظرت إلى مَاءٍ أَشَدَّ بَيَاضًا مِنَ اللَّبَنِ وَأَحْلَى مِنَ الْعَسَلِ، فَشَرِبْتُ حَتَّى رَوِيتُ، ثُمَّ نَضَحْتُ عَلَى سِقَاءٍ حَتَّى ابْتَلَّ، ثُمَّ مَلَأْتُهُ، ثُمَّ رُفِعَ بَيْنَ يَدَيَّ وَأَنَا أَنْظُرُ حَتَّى تَوَارَى مِنِّي فِي السَّمَاءِ، فَلَمَّا أَصْبَحْتُ جَاءَ الْيَهُودِيُّ، فَقَالَ: يَا أُمَّ شَرِيكٍ! قُلْتُ: وَاللهِ قَدْ سَقَانِي اللهُ، فَقَالَ: مِنْ أَيْنَ أَنْزَلَ عَلَيْكِ مِنَ السَّمَاءِ؟ قُلْتُ: نَعَمْ وَاللهِ، لَقَدْ أَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ عَلَيَّ مِنَ السَّمَاءِ، ثُمَّ رَفَعَ بَيْنَ يَدَيَّ حَتَّى تَوَارَى عَنِّي فِي السَّمَاءِ، ثُمَّ أَقْبَلَتْ حَتَّى دَخَلْتُ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَصَّتْ عَلَيْهِ الْقِصَّةَ، فَخَطَبَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهَا نَفْسَهَا، فَقَالَتْ: يَا رَسُولَ اللهِ لَسْتُ أَرْضَى نَفْسِي لَكَ، وَلَكِنْ بُضْعِي لَكَ فَزَوِّجْنِي مَنْ شِئْتَ، فَزَوَّجَهَا زَيْدًا، وَأَمَرَ لَهَا بِثَلَاثِينَ صَاعًا، وَقَالَ كُلُوا وَلَا تَكِيلُوا، وَكَانَ مَعَهَا عُكَّةُ سَمْنٍ هَدِيَّةٌ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عليه وسلم، فَقَالَتْ لِجَارِيَةٍ لَهَا: بَلِّغِي هَذِهِ الْعُكَّةَ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قُولِي أُمُّ شَرِيكٍ تُقْرِئُكَ السَّلَامَ، وَقُولِي هَذِهِ عُكَّةُ سَمْنٍ أَهْدَيْنَاهَا لَكَ، فَانْطَلَقَتْ بِهَا فَأَخَذُوهَا فَفَرَّغُوهَا، وقَالَ لَهَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلِّقُوهَا ولا تأكلوها» ، فَعَلَّقُوهَا فِي مَكَانِهَا فَدَخَلَتْ أُمُّ شَرِيكٍ، فَنَظَرَتْ إِلَيْهَا مَمْلُوءَةً سَمْنًا، فَقَالَتْ: يَا فُلَانَةُ أَلَيْسَ أَمَرْتُكِ أَنْ تَنْطَلِقِي بِهَذِهِ الْعُكَّةِ إِلَى رَسُولِ اللهِ صَلَّى الله عليه وسلم؟ فقالت: قد وَاللهِ انْطَلَقْتُ بِهَا كَمَا قُلْتِ، ثُمَّ أَقْبَلْتُ بِهَا أَصُوبُهَا مَا يَقْطُرُ مِنْهَا شَيْءٌ، وَلَكِنَّهُ قَالَ: عَلِّقُوهَا ولا توكئوها، فَعَلَّقْتُهَا فِي مَكَانِهَا وَقَدْ أَوْكَتْهَا أُمُّ شَرِيكٍ حِينَ رَأَتْهَا مَمْلُوءَةً، فَأَكَلُوا مِنْهَا حَتَّى فَنِيَتْ، ثُمَّ كَالُوا الشَّعِيرَ فَوَجَدُوهُ ثَلَاثِينَ صَاعًا لَمْ يَنْقُصْ مِنْهُ شَيْءٌ
இது ஆதாரமாக ஏற்கக்கூடாத செய்தியாகும். இதன் அறிவிப்பாளராக
عَبْدِ الْأَعْلَى بنْ أَبِي الْمُسَاوِرِ الْقُرَشِيِّ
என்பார் இடம் பெற்றுள்ளார். இவரைப் பற்றி இமாம் தஹபி அவர்க ள் பின்வருமாறு விமர்சனம் செய்துள்ளார்கள்.
. تاريخ الإسلام
213 – ق: عَبْدُ الأَعْلَى بْنُ أَبِي الْمُسَاوِرِ الْكُوفِيُّ الْفَاخُورِيُّ الْجَرَّارُ، [الوفاة: 161 – 170 ه] نَزِيلُ الْمَدَائِنِ. عَنْ: الشَّعْبِيِّ، وَعِكْرِمَةَ، وَعَطَاءٍ، وَعِدَّةٍ. وَعَنْهُ: شَبَابَةُ، وَسَعِيدُ بْنُ سُلَيْمَانَ، وَصَالِحُ بْنُ مَالِكٍ الْخَوَارِزْمِيُّ، وَجُبَارَةُ بْنُ الْمُغَلِّسِ، وَجَمَاعَةٌ.
ضَعَّفَهُ الْكُلُّ. قَالَ ابْنُ مَعِينٍ: لَيْسَ بِشَيْءٍ. وَقَالَ الْبُخَارِيُّ: مُنْكَرُ الْحَدِيثِ. وَقَالَ النَّسَائِيُّ وَغَيْرُهُ: مَتْرُوكٌ.
இவரை அனைத்து அறிஞர்களும் பலவீனமானவர் என்கிறார்கள். இவர் கணக்கில் எடுத்துக் கொள்ளத்தக்கவர் அல்ல என்று இப்னு மயீன் கூறுகிறார்.
இவரது ஹதீஸ்கள் முன்கர் நிராகரிக்கப்பட்டவை என்று புகாரி கூறுகிறார்.
நஸாயியும் இன்னும் பலரும் இவர் பொய்யர் என சந்தேகிக்கப்பட்டவர் என்று கூறியுள்ளனர்.
மேலும் மற்றொரு பலவீனமான அறிவிப்பாளரும் இதில் உள்ளார். அஹ்மத் பின் அப்துல் ஜப்பார் எனும் அந்த அறிவிப்பாளர் பற்றிய விமர்சனம் இதுதான்
تاريخ الإسلام ت بشار (6/ 485)
وقَالَ ابنُ عدي: رأيتهم مجمعين على ضعفه. ولم أر له حديثا منكرًا. إنما ضعفوه بأنه لم يلق أولئك
அனவரும் ஒருமித்து இவரை பலவீனமாக்கியுள்ளனர். இவர் தான் சந்திக்காதவர்கள் வழியாக அறிவிப்பதால் இவரை பலவீனமாக்கியுள்ளனர்.
الكامل في ضعفاء الرجال (1/ 313)
30- أحمد بن عَبد الجبار.أبو عُمَر العطاردي الكوفي، رأيت أهل العراق مجمعين على ضعفه وكان أحمد بن مُحَمد بن سَعِيد لا يحدث عنه لضعفه، وذكر أن عنده عنه قِمطرا. على أنه لا يتورع أن يحدث عن كل أحد.
حَدَّثَنَا مُحَمد بن أحمد بن حمدان، حَدَّثني أبو بكر بن صدقة، سمعت أبا كريب يقول: قد سمع أحمد بن عَبد الجبار العطاردي من أَبِي بَكْرِ بْنِ عَيَّاشٍ. قَالَ الشيخ: ولاَ يعرف له حديث منكر رواه، وإِنَّما ضعفوه لأنه لم يلق من يحدث عنهم.
மேற்கண்ட அதே விமர்சனங்களை இப்னு அதீ அவர்களும் கூறுகிறார்கள்.
எனவே இது கடுமையான பலவீனம் உள்ள ஹதீஸாகும். பொய்யர் என சந்தேகிக்கப்பட்டவர் உள்ளதால் இது இட்டுக்கப்பட்ட செய்தியாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது.
யாரோ உலமாக்கள் இதுபோன்ற இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அவருக்கு எடுத்துக் கொடுத்து பரப்புகிறார்கள்.