வானத்தில் ஈஸா நபிக்கு உணவு உண்டா?

மர்யமின் மகன் மஸீஹ் (என்னும் ஈஸா) தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவரது தாய் அதிக நம்பிக்கை கொண்டவர். அவ்விருவரும் உணவு உண்பவர்களாக இருந்தனர். நாம் அவர்களுக்குச் சான்றுகளை எவ்வாறு தெளிவுபடுத்துகிறோம் என்பதை கவனிப்பீராக! பின்னர் அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர் என்பதையும் கவனிப்பீராக!

திருக்குர்ஆன் : 5:75

ஆயினும், ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்ற கருத்துடையோர் மேற்கண்ட வசனத்தை தமது கருத்துக்குச் சான்றாக முன் வைக்கின்றனர். “அவர்கள் இருவரும் உணவு உண்பவர்களாக இருந்தனர்” என்ற சொற்றொடரை ஆதாரமாகக் கொண்டு ஈஸா நபி மரணித்து விட்டார் எனக் கூறுகின்றனர்.

ஈஸா நபி உயிரோடு இருந்தால் அவர் உணவு உட்கொள்ள வேண்டும். வானத்தில் உணவுப் பொருட்கள் பயிரிடப்படுகின்றனவா? அங்கே எப்படி உணவு உட்கொள்ள முடியும்?

என்றெல்லாம் அற்புதமான (?) கேள்விகளைக் கேட்டு ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்று நிறுவ முயல்கின்றனர். ஈஸா நபி இப்பூமியில் இல்லாததால் அவர் உணவு உட்கொள்ள வில்லையாதலால் அவர் மரணித்து விட்டார் என்பது உறுதி என்பது இவர்களின் வாதம்.

பொதுவாக நபிமார்கள் உணவு உட்கொள்பவர்களாகவே இருந்தனர் எனக் கூறும் 21:8, 25:20 ஆகிய வசனங்களையும் தமது கருத்துக்கு ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

இது அறியாமை நிறைந்த வாதம் என்றாலும் இதை ஒரு வலுவான ஆதாரமாக மாற்றுக் கருத்துடையவர்கள் சித்தரிக்கிறார்கள்.

ஈஸா நபி உயிருடன் இருக்கிறார்களா? இல்லையா? என்பது தான் அடிப்படையான பிரச்சனை. அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்பது நிரூபணமாகிவிட்டால், அதிலிருந்தே அவர்கள் உணவு உண்கிறார்கள் என்றோ அல்லது உணவு உண்ணாமல் வேறு வகையில் உயிருடன் உள்ளனர் என்றோ முடிவு செய்தாக வேண்டும்.

உயிருடன் இருக்கிறார்கள் என்பதிலிருந்து உணவு உட்கொள்கிறார்கள் என்று விளங்குவதற்கு பதிலாக ஈஸா நபி உணவு உண்பது தமக்குத் தெரியவில்லை என்பதிலிருந்து அவர் மரணித்து விட்டார் என்று தலைகீழாக விளங்கிக் கொள்கின்றனர்.

உணவு என்பது அரிசியும், பருப்பும் மட்டும் அல்ல. அல்லாஹ் நாடினால் வாய் வழியாக இல்லாமல் தனது வல்லமையால் உணவளிக்க இயலும் என்பதற்கு திருக்குர்ஆனில் பல சான்றுகள் உள்ளன.

கஹ்ப் அத்தியாயத்தில் நன்மக்கள் சிலரை பல வருடங்கள் தூங்க வைத்ததாக அல்லாஹ் கூறுகிறான். (18:11)

அவர்கள் ஒரு பக்கமாகவே படுத்துக்கிடந்தால் உடலைப் பாதிக்கும் என்பதற்காக வலப்புறமும், இடப்புறமும் புரட்டிப் போடுவதாக 18:18 வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்.

பல வருடங்கள் உண்ணாமல் ஒருவர் தூங்க முடியுமா? நிச்சயமாக முடியாது. ஒரே பக்கமாகப் படுத்துக் கிடப்பதே முடியாது என்பதால் அவர்களைப் புரட்டிப் போடும் இறைவன் உணவு வழங்கவே இல்லை. இறைவன் மறைமுகமாக ஏதோ ஒரு வகையில் அவர்களுக்கு உணவளித்திருக்க வேண்டும்; அல்லது உணவு உட்கொள்ளாமலேயே உயிர் வாழ்வதற்குரிய ஏற்பாட்டைச் செய்திருக்க வேண்டும். அவர்கள் உணவு உட்கொள்ளாததிலிருந்து அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கருதுவது அறியாமையாகும்.

இது போல் ஒரு நல்லடியாரை அல்லாஹ் நூறு வருடங்கள் மரணிக்கச் செய்ததாக குர்ஆன் கூறுகிறது.

259. அல்லது ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா?) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. “இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்?” என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்து “எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்?” என்று கேட்டான். “ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்” என்று அவர் கூறினார். “அவ்வாறில்லை! நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர்! உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக!406 (செத்துவிட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை எடுத்துக் காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டுகிறோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக்கிறோம் என்பதையும் கவனிப்பீராக!” என்று அவன் கூறினான். அவருக்குத் தெளிவு பிறந்தபோது “அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்” எனக் கூறினார்.79

திருக்க்குர் ஆன் 2:259

இந்த நல்லடியாரை உறக்க நிலையில் இறைவன் வைத்தான் என்று ஈஸா நபி மரணித்து விட்டார்கள் என்ற கருத்துடையோர் விளக்கம் கூறுகின்றனர்.

நூறு வருடங்கள் எதையுமே உண்ணாமல், பருகாமல் அந்த நல்லடியாரை உயிர் வாழச் செய்த இறைவன் ஈஸா நபியை வாழச் செய்வான் என்பதில் மட்டும் சந்தேகம் கொள்கின்றனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவு பகல் 24 மணி நேரமும் தொடர்ந்து பல நாட்கள் நோன்பு நோற்றனர். மற்றவர்களுக்கு அதைத் தடை செய்தனர். “என் இறைவன் புறத்திலிருந்து எனக்கு உணவளிக்கப்படுகிறது” என்று விளக்கமும் கூறினார்கள்.

(புகாரி 1961, 1962, 1963, 1964)

இந்த உணவு வாய்வழியாக அளிக்கப்படும் உணவு என்றால் நோன்பு முறிந்துவிடும். எனவே, இறைவன் வேறு விதமாக வழங்கும் ஆற்றல் என்பதே இதன் கருத்தாகும்.

அல்லாஹ் ஒருவரை உயிர் வாழச் செய்ய நினைத்தால் அவன் அதற்கான ஏற்பாட்டைச் செய்வான் என்பது ஆச்சரியப்படக்கூடிய ஒன்றல்ல.

பூமியில் மட்டும் தான் உண்பதற்குரிய உணவுகள் உள்ளன என நினைப்பதும் அறியாமையின் வெளிப்பாடுதான்.

“இறைவா! வானிலிருந்து எங்களுக்கு உணவுத் தட்டை அனுப்பு என்று ஈஸா நபி பிரார்த்தனை செய்தார்கள். அதை ஏற்று அல்லாஹ் அதை வழங்கினான் என்பதை 5:114 வசனத்திலிருந்து அறியலாம்.

“வானத்தில் உணவெல்லாம் கிடையாது. பூமியிலேயே தயார் செய்து கொள்ளுங்கள்” என்று அல்லாஹ் கூறவில்லை. மாறாக வானத்திலிருந்து உணவை இறக்கி வைத்தான். மன் ஸல்வா என்னும் பதார்த்தங்களை மூஸா நபியின் சமுதாயத்திற்கு இறக்கி வைத்ததாக 20:80, 7:160, 2:57 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

இதன் பிறகும் வானத்தில் உணவு கிடைக்குமா என்று கேட்பது அறியாமையில்லாமல் வேறு என்ன?

51:22, 34:24, 16:73 ஆகிய வசனங்களில் வானங்களிலும் உணவு உள்ளன என்பது தெள்ளத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

எனவே, ஈஸா நபி உயிருடன் உள்ளனர் என்பதற்கு மறுக்க முடியாத சான்றுகள் பல உள்ளதாலும், இறைவனைப் பொருத்த வரை உணவு என்பது ஒரு பிரச்சனையே அல்ல என்பதாலும் இவர்களின் இந்த வாதமும் அடிபட்டுப் போகின்றது.

அருவருப்பான முறையில் பல் துலக்கும் மடமை

தொழுகை வரிசையில் நின்றதும் சிலர் பல் துலக்கி விட்டு சட்டைப்பையில் போட்டுக் கொள்கின்றனரே? லண்டனில் ஒரு பள்ளிவாசலில், இகாமத் சொல்லப்படும் போது சிலர் மிஸ்வாக் குச்சியை எடுத்து, லேசாகப் பல் துலக்கிவிட்டு, அந்தக் குச்சியை ...

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா?

பயணத்தில் வசிய்யத் செய்யும் சட்டம் மாற்றப்பட்ட சட்டமா? "பயணத்தின் போது ஒருவர் மரண சாசனம் (வஸிய்யத்) செய்யும் போது, சாட்சிகளைத் தொழுகைக்குப் பிறகு நிறுத்தி வைத்து சத்தியம் வாங்க வேண்டும் குர்ஆன் 5:106 என்ற ...

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது

5 110 வசனத்தில் இஞ்சீலுடன் வேதம் கொடுக்கப்பட்டதாக உள்ளது அந்த வேதம் எது ஈஸா நபிக்கு வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இஞ்சீலையும் கற்றுக்கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். கேள்வி என்னவென்றால்: தவ்ராத் மற்றும் இஞ்சீல் ஏற்கனவே ...

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன?

திருக்குர்ஆன் 5 20 வசனத்தில் ஆட்சியாளர் என்பதன் விளக்கம் என்ன? மூஸா நபி தனது மக்களிடம், "அல்லாஹ் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்கினான்" என்று கூறுகிறார். இது எப்போது நடந்தது? இதை எப்படிப் புரிந்து கொள்ள ...

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது?

குர்ஆன் 3:113, 114, 115 வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் பற்றி பேசுகிறது? 3, 113, 114, 115 — மூன்று வசனங்கள் எந்த வேதக்காரர்களைப் (People of the Book) பற்றிப் பேசுகின்றன? அவை ...

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்?

ஜனாஸாவின் கட்டை விரல்களை இணைத்துக் கட்டுவது ஏன்? "எங்கள் பகுதியில் ஒரு நபர் இறந்துவிட்டால், இறந்தவரின் கால் விரல்களை ஒன்றாகச் சேர்த்து, குறிப்பாகப் பெருவிரல்களைச் சேர்த்து ஒட்டி வைத்துக் கட்டுகிறார்கள். இதன் காரணம் எனக்குத் ...

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?

நோன்பு நோற்க சக்தி இல்லாதவர் ஏழைக்கு உனவளித்தல் எனும் பரிகாரம் செய்ய வேண்டுமா? அவர் கேட்கிறார்: "எங்கள் வீட்டில் அனைவரும் நோன்பு நோற்கிறார்கள். எனது உடல்நிலை காரணமாக என்னால் நோன்பு நோற்க முடியவில்லை. அதற்குப் ...

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா?

வரலாற்றுச் சிரப்பு மிக்க இடங்களுக்கு சுற்றுலா செல்லலாமா? "எனக்குத் தெரிந்த ஒருவர் உம்ரா சென்றிருக்கிறார். அங்கே, ஒரு உம்ரா சர்வீஸ் (நிறுவனம்) அவர்களை தாயிஃப் நகரத்திற்கு அழைத்துச் சென்று, அது ஒரு 'சுன்னத்தான பயணம்' ...

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி?

ஜோதிடர் சரியாகக் கணித்துச் சொன்னார். இது எப்படி? நான் முஸ்லிம்களால் நடத்தப்படும் ஒரு ரியல் எஸ்டேட் (மனை விற்பனை) மேம்பாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறேன். ஒரு நாள், அந்த நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் (MD) என்னை ...

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா?

கணவனின் தவறை மனைவி மறைக்கும் போது அதை வெளிப்படுத்துமாறு கட்டாயப்படுத்தலாமா? என் கணவரின் தந்தை ஒரு தவறு செய்த போது அவரது மனைவி அந்தத் தவறை மறைத்து, அது நடக்கவே இல்லை என்று கூறியுள்ளார் ...

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா?

முஸ்லிம்களப் படுகொலை செய்யும் நெதன்யாகுவைக் கொல்ல அனுமதி உண்டா? முஸ்லிம்களைக் கொன்று வரும் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை செய்யப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நினைப்பது சரியா? அது சரி என்றால், பாலஸ்தீனத்திற்கு ...

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா?

இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் சண்டையிட்டால் இருவரும் நரகவாசிகளா? "இரண்டு முஸ்லிம்கள் ஆயுதங்களுடன் ஒருவருடன் ஒருவர் சண்டையிட்டுக் கொண்டால், இருவருமே நரகவாசிகளாக இருப்பார்கள்" என்று ஒரு ஹதீஸ் உள்ளது. இருவரும் அநீதி இழைத்திருந்தால், இருவரும் நரகத்திற்குச் ...

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா?

பள்ளிவாசல் படம் போட்ட தொப்பியை அணியலாமா? மக்காவிலிருந்து திரும்புபவர்கள் சில நேரங்களில் மஸ்ஜிதுல் ஹராம் (புனித கஃபா) படம் அச்சிடப்பட்ட தொப்பிகளைக் கொண்டு வருகிறார்கள், அதை அணிந்து கொண்டு தொழுகிறார்கள். இது அனுமதிக்கப்பட்டதா? -கொளத்தூரைச் ...

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா?

லைலதுல் கத்ர் இரவில் கூட சில பவங்கள் மன்னிக்கப்படாது என்று ஹதீஸ் உள்ளதா? ரமலான் மாதத்தில், 'நிச்சயிக்கப்பட்ட இரவில்' (லைலத்துல் கத்ர்) கூட சில குறிப்பிட்ட மனிதர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள் என்று சமூக ஊடகங்களில் ...

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா?

வசதி படைத்தவர் கடன் அடிப்படையில் விற்பதற்காக அதிக லாபம் அடைந்தால் அது வட்டியா? நான் ஒரு ஜவுளிக்கடை வைத்திருக்கிறேன். நிதி நெருக்கடியின் காரணமாக, வேறொரு நபர் எனக்காகப் பொருட்களை (துணிகளை) வாங்கி, அதில் லாபத்தைச் ...

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா?

ஒன்றைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்தால் அதை மீறலாமா? “ஒரு விஷயம் ஹராம் (தடுக்கப்பட்டது) என்று நான் நினைத்து, அதை ஒரு போதும் செய்ய மாட்டேன் என்று அல்லாஹ்விடம் ﷻ சத்தியம் செய்தேன் ...

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது

மாதவிடாய்ப் பெண்கள் ஏன் பள்ளிவாசலுக்கு வரக் கூடாது “இஸ்லாத்தில் மாதவிடாய் என்பது அசுத்தம் அல்ல என்று நீங்கள் கூறுகிறீர்கள். மாதவிடாய் காலத்தில் பெண்கள் தொழ அனுமதிக்கப்படுவதில்லை — அதை அவர்களுக்குச் சிரமம் கொடுக்க இஸ்லாம் ...

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா?

வவ்வாலை ஈஸா நபி தான் படைத்தார்களா? வௌவால் என்று ஒரு படைப்பு இருக்கிறது. இந்த வௌவாலை அல்லாஹ் ﷻ நேரடியாகப் படைக்கவில்லை என்றும், ஈஸா நபி (இயேசு) தான் அதைப் படைத்தார் என்றும் ஒரு ...

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா?

மனைவி வீட்டார் விரும்பி அழைத்தால் அவர்கள் வீட்டில் குடியேறலாமா? ஒரே மகளுடன் உள்ள பெற்றோர் மருமகனை தங்கள் வீட்டில் வசிக்கச் சொன்னால் அது வரதட்சணையாகுமா? "எனக்குச் சொந்தமாக வீடு உள்ளது, எனது மனைவியை என்னால் ...

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" – விரிவான ஆய்வு

"மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" - விரிவான ஆய்வு "மூன்று விஷயங்களைத் தாமதப்படுத்தக் கூடாது" என்ற ஹதீஸ் பலவீனமானதா? இதில் வரும் 'ஸயீத் இப்னு அப்துல்லாஹ்' என்பவரைப் பற்றி பல அறிஞர்கள் அவர் யாரென்று ...

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு

100 கொலைகள் செய்த மனிதனின் ஹதீஸ்: ஒரு விரிவான ஆய்வு "100 கொலைகள் செய்த ஒரு மனிதனின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாகக் கூறும் ஹதீஸ் இட்டுக் கட்டப்பட்டது (பொய்யானது) என்று 'த.த.ஜ' (TNTJ) அமைப்பினர் கூறி ...