வசனங்களின் எண்கள்

திருக்குர்ஆனில் எத்தனை வசனங்கள் இருக்கின்றன என்பது குறித்து அறிஞர்கள் பலவிதமான எண்ணிக்கை யைக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

அலீ (ரலி) அவர்கள் 6218 வசனங்கள் என்கிறார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் 6616 வசனங்கள் என்கிறார்கள்.

ஹுமைத் என்பார் 6212 வசனங்கள் என்கிறார்கள்.

அதா என்பார் 6177 வசனங்கள் என்கிறார்கள்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் 6204 வசனங்கள் என்றும் குறிப்பிடுகிறார்.

மக்கள் பொதுவாக 6666 வசனங்கள் என்று பரவலாகக் குறிப்பிடுகிறார்கள்.

இப்போது உலகம் முழுவதும் அச்சிடப்படும் திருக்குர்ஆன் பிரதிகளில் 6236 வசனங்கள் உள்ளன.

வசனங்கள் எத்தனை என்று அல்லாஹ்வோ, அவனுடைய தூதரோ கூறவில்லை. மேலும், உஸ்மான் (ரலி) அவர்களுடைய மூலப் பிரதியிலும் திருக்குர்ஆனுடைய மொத்த வசனங்கள் குறித்து எந்தவொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் குறிப்பிடப்படவில்லை.

உஸ்மான் (ரலி) அவர்கள் தொகுத்த மூலப் பிரதியில் ஒவ்வொரு வசனம் முடிவுறும்போது அதன் இறுதியில் வசனத்தின் எண் குறிப்பிடப்படவில்லை. ஒரு வசனம் எங்கே முடிகிறது என்பதற்கு மூலப் பிரதியில் அடையாளமிடப்படவில்லை.

எனவே தான் வசனங்களை எண்ணும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு எண்ணிக்கையைக் கூறுகிறார்கள். எண்ணிக்கை எத்தனை என்பதில் கருத்து வேறுபாடு இருந்தாலும் எந்த எண்ணிக்கையைக் கூறினாலும் திருக்குர்ஆனில் எதுவும் அதிகரிப்பதோ, குறைவதோ இல்லை.

ஒருவர் இரண்டு வசனங்களை ஒரு வசனமாகக் கருதுவார்; இன்னொருவர் ஒரு வசனத்தை இரண்டு வசனங்களாகக் கருதுவார்; எங்கே வசனத்தை முடிப்பது என்பதில் தான் கருத்து வேறுபாடு உள்ளது.

உலகம் முழுவதும் மக்கள் பயன்படுத்தி வருகின்ற திருக்குர்ஆனில் இப்போது போடப்பட்டிருக்கின்ற எண்களை நாம் ஆய்வு செய்தால் எண்களிடுவதில் அறிஞர்கள் போதுமான கவனம் செலுத்தவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

சில இடங்களில் எழுவாயை ஒரு வசனமாகவும், பயனிலையை இன்னொரு வசனமாகவும் குறிப்பிட்டிருக்கிறார்கள். இரண்டையும் சேர்த்து ஒரு வசனமாகக் கூறும்போது தான் அதனுடைய பொருள் முழுமை பெறும்.

வசனங்களைக் குறிக்க ‘ஆயத்’ என்ற சொல்லை திருக்குர்ஆன் பயன்படுத்துகிறது. “ஆயத்’ என்றால் சான்று என்று பொருள். ஒவ்வொரு வசனமும் முழுமையான கருத்தைத் தந்து சான்றாக அமைந்திருப்பதால் இவ்வாறு திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

ஒரு செய்தி முழுமை பெறும்போது தான் அது ஒரு சான்றாக ஆக முடியும். கருத்து முழுமை பெறாதபோது அதைச் சான்று எனக் கருத முடியாது.

ஆனால் வசனங்களுக்கு எண்கள் இட்டவர்கள் கருத்து முழுமை பெறுவதைக் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை இப்போது போடப்பட்டிருக்கின்ற எண்களை ஆய்வு செய்தால் நாம் தெரிந்து கொள்ளலாம்.

சில இடங்களில், ஒரு கருத்து ஒரு வசனமாகவும், அந்தக் கருத்திலிருந்து விதிவிலக்கு இன்னொரு வசனமாகவும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த இரண்டையும் சேர்த்து ஒரு எண்ணாக அவர்கள் அமைத்திருந்தால் புரிந்து கொள்வதற்கு எளிதாக இருந்திருக்கும்.

உதாரணத்திற்காகச் சில வசனங்களை நாம் காண்போம்.

நான்காவது அத்தியாயத்தில் 168, 169 ஆகிய இரு வசனங்களை எடுத்துக் கொள்வோம்.

இதில் “அவர்களுக்கு வழிகாட்ட மாட்டான்’ என்பது 168வது வசனத்திலும், “நரகத்தின் வழியைத் தவிர’ என்பது 169வது வசனத்திலும் உள்ளது. இரண்டும் சேர்ந்து தான் ஒரு வாக்கியமாகும். ஆனாலும் இதை இரண்டு வசனங்களாகப் பிரித்திருக்கிறார்கள்.

7வது அத்தியாயத்தின் 121, 122 ஆகிய வசனங்களை எடுத்துக் கொண்டால், 121வது வசனத்தில் “நாங்கள் அகிலத்தின் இறைவனை நம்பினோம் எனக் கூறினார்கள்” என்றும் 122வது வசனத்தில் “மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாகிய” என்றும் உள்ளது.

“மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாகிய” என்பதில் எந்தவொரு கருத்தும் முழுமை பெறவில்லை. “மூஸா மற்றும் ஹாரூனின் இறைவனாகிய அகிலத்தின் இறைவனை நாங்கள் நம்பினோம்” என்று சொன்னால் தான் வாக்கியம் முழுமை பெறுகிறது. இரண்டும் சேர்ந்து தான் ஒரு வாக்கியமாகும். ஆனாலும் இதையும் இரண்டு வசனங்களாகப் பிரித்திருக்கிறார்கள்.

இதே போல் 11வது அத்தியாயத்தில் 96, 97 வசனங்களை எடுத்துக் கொண்டால் 96வது வசனத்தில் “மூஸாவைத் தகுந்த சான்றுகளோடு அனுப்பினோம்” என்று இருக்கிறது. 97வது வசனத்தில் “ஃபிர்அவ்னிடமும், அவனது கூட்டத்தினரிடமும்” என்று இருக்கிறது.

“ஃபிர்அவ்னிடமும், அவனது கூட்டத்தினரிடமும்” என்பது 96 வசனத்துடன் இணைய வேண்டிய சொற்றொடராகும். ஆனால் “ஃபிர் அவ்னிடமும், அவனது கூட்டத்தினரிடமும்” என்பதை தனியாகப் பிரித்ததால் அதற்குப் பொருள் இல்லாமல் போய் விடுகிறது.

இப்படி ஏராளமான வாக்கியங்களைக் கருத்து முழுமை பெறாத வகையில் வசனங்களாகப் பிரித்திருப்பதை நாம் பார்க்கிறோம். சில இடங்களில் ஒரு வாக்கியத்தை நான்கு, ஐந்து வசனங்களாகக் கூட பிரித்து வைத்திருக்கிறார்கள். கருத்து முழுமை பெறாத ஒரே ஒரு சொல்லைக் கூட ஒரு வசனம் என்று சில இடங்களில் கணக்கிட்டிருக்கிறார்கள்.

திருக்குர்ஆன் அதனுடைய ஆழமான கருத்துக்களுக்காகவும், அதன் அழகான நடைக்காகவும் தனிச் சிறப்பு பெற்றிருக்கிறது.

வசனங்களைப் பிரிப்பதென்றால் அதற்கு இரண்டு அளவு கோல்கள் இருக்க வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓதும்போது எந்த இடத்தில் நிறுத்தினார்களோ அந்த இடத்தை ஒரு வசனம் என்று கணக்கிட்டிருந்தால் அது ஏற்கத்தக்கதாக இருக்கும்.

அல்லது ஒரு கருத்து எந்த இடத்தில் முழுமை பெறுகிறதோ அதை ஒரு வசனம் என்று கணக்கிட்டிருந்தால் அது அறிவுப்பூர்வமானதாக இருந்திருக்கும். ஆனால் இந்த இரண்டு அளவுகோல்களின் அடிப்படையில் வசனங்களுக்கு எண்கள் இடப்படவில்லை.

மாறாக ஒவ்வொரு வசனத்தையும் குறிப்பிட்ட ஒரு எழுத்தைக் கொண்டு முடிக்க வேண்டும் என்பதைத் தான் வசனங்களைப் பிரிப்பதற்கு அளவு கோலாகக் கொண்டுள்ளனர்.

உதாரணமாக “யஃலமூன்’, ‘தஃலமூன்’, “யஃப்அலூன்’ என்று வருகிறதா எனப் பார்த்து அந்த இடங்களில் வசனங்களை முடித்துள்ளார்கள். கருத்தைக் கவனத்தில் கொள்ளவில்லை.

பொருத்தமில்லாமல் வசனங்களுக்கு எண்களிட்டதால் வேறு சில இடையூறுகளும் ஏற்படுகின்றன. ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு திருக்குர்ஆன் மாற்றப்படும்போது முழுமை பெறாத அந்தப் பகுதியை முழுமைப்படுத்துவதற்காக அடைப்புக்குறியில் சில வார்த்தைகளைச் சொந்தமாகச் சேர்க்கும் நிலை ஏற்படுகிறது.

எல்லா மொழிபெயர்ப்புகளிலும் அதிக அளவிலான அடைப்புக் குறிகள் இடம் பெறுவதற்கு கருத்து முழுமை பெறாத இடத்தில் வசனங்களைப் பிரித்தது தான் முக்கியக் காரணம்.

மேலும் வசனங்களுக்கு எண்கள் போடப்பட்ட இந்த வரலாற்றைத் தெரியாதவர்கள், இறைவன் தான் இவ்வாறு வசனங்களுக்கு எண்களை இட்டிருக்கிறான் என்று நினைப்பார்கள்; முழுமை பெறாத வசனங்களைப் பார்த்தால் அவர்களுடைய நம்பிக்கை பாதிப்படையும் என்பதையும் அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை.

அவர்கள் அரபுமொழி பேசுவோராக இருந்ததால் மொழிபெயர்ப்பினால் ஏற்படும் சங்கடங்களும், மற்றவர்கள் திருக்குர்ஆனைப் பற்றி தவறான எண்ணம் கொள்வதற்கு நாம் காரணமாக ஆகி விட்டோம் என்பதும் அவர்களுக்குத் தோன்றவில்லை.

ஆனாலும் இப்போது சான்றுகளை எடுத்துக் காட்டுவதற்கும், விவாதங்கள் புரிவதற்கும், சொற்பொழிவுகள் நிகழ்த்துவதற்கும், குறிப்பிட்ட ஒரு வசனத்தைத் தேடி எடுப்பதற்கும் இந்த வசன எண்கள் உதவியாக இருக்கின்றன.

இப்போது இதில் ஒவ்வொருவரும் மாற்றம் செய்யப் புகுந்தால் தேவையற்ற குழப்பங்கள் தான் ஏற்படும். எனவே எந்த எண்களைச் சில நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தி வருகிறோமோ அதில் நாம் எந்த மாறுதலும் செய்யவில்லை.

அதே சமயத்தில் முழுமை பெறாத அந்த வசனங்களைச் சேர்த்து தமிழாக்கம் செய்து தேவையற்ற அடைப்புக் குறிகள் வருவதைத் தவிர்த்திருக்கிறோம்.

வசனங்களுக்கு எண்கள் போட்டவர்கள் தாமாகத் தான் போட்டனர் என்பதற்கு இரண்டு தமிழ் மொழி பெயர்ப்புகளை உதாரணமாகக் கூறலாம்.

ஆ.கா. அப்துல் ஹமீத் பாகவியின் மொழிபெயர்ப்பில் 6வது அத்தியாயம் 73வது வசனத்தை ஒரு வசனமாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதையே நிஜாமுத்தீன் மன்பஈ 73, 74 என இரண்டு வசனங்களாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் இந்த அத்தியாயம் முழுவதும் இரண்டு மொழிபெயர்ப்புகளுக்கிடையே ஒரு எண் வித்தியாசத்தில் அமைந்திருப்பதைக் காணலாம்.

சில சகோதரர்களுக்கு இதுவரை கேள்விப்பட்டிராத செய்திகளைப் போல் இது தோன்றலாம். ஆனால் ஒவ்வொரு காலகட்டத்திலும் இது அந்தந்தக் காலத்தவருக்கு நினைவூட்டப்பட்டுக் கொண்டே வந்திருக்கிறது.

திருக்குர்ஆனில் இல்லாத வசன எண்கள், ஸஜ்தாவுடைய அடையாளங்கள், பத்து வசனங்கள் முடியும்போது ஒரு அடையாளம், நிறுத்தல் குறிகள் ஆகியன திருக்குர்ஆனில் கலக்கவே கூடாது என்று பைஹகீ கூறியதாக அறிஞர் ஸுயூத்தி அவர்கள் தமது “அல்இத்கான்’ என்ற நூலில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சொல்லியிருப்பதைப் பார்க்கிறோம்.

ஐந்து வசனங்களுக்கு ஒரு அடையாளம், பத்து வசனங்களுக்கு ஒரு அடையாளம், அத்தியாயங்களின் பெயர்கள், வசனங்களின் எண்கள், இவற்றை எழுதுவது வெறுக்கத்தக்கது என்றும் இதே நூலில் “சுலைமி’ என்ற அறிஞர் கூறியதை ஸுயூத்தி எடுத்துக் காட்டுகிறார்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் “பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம்” என்பதைத் தவிர வசன எண்களோ, அத்தியாயத்தின் பெயர்களோ, இடையிடையே எழுதப்படுகின்ற விஷயங்களோ மூலப் பிரதியில் இல்லை.

முஸ்லிமல்லாதவர்களுக்கு ஸலாம் கூறலாமா

ஸலாம் முஸ்லிம்களுக்கு மட்டுமா? முஸ்லிம்களுக்கு மட்டுமே ஸலாம் கூற வேண்டும் என்று பெரும்பாலான முஸ்லிம்கள் கருதுகின்றனர். இதன் காரணமாக முஸ்லிமல்லாத மக்களைச் சந்திக்கும் போது ஸலாம் கூறத் தயங்கி வணக்கம், வந்தனம், நமஸ்காரம் போன்ற ...

ஒட்டு முடி வைக்கலாமா

ஒட்டு முடி வைக்கலாமா பதில் : ஒட்டுமுடி வைத்துக் கொள்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். 5205حَدَّثَنَا خَلَّادُ بْنُ يَحْيَى حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ عَنْ الْحَسَنِ هُوَ ...

முதல் இருப்பில் ஸலவாத் ஓத வேண்டுமா

முதல் இருப்பில் ஸலவாத் ஓத வேண்டுமா முதல் இருப்பில் அத்தஹிய்யாத் என்று துவங்கும் துஆவை ஓத வேண்டும். அத்தஹிய்யாத் துஆ صحيح البخاري 1202 - التَّحِيَّاتُ لِلَّهِ وَالصَّلَوَاتُ وَالطَّيِّبَاتُ، السَّلاَمُ عَلَيْكَ ...

குர்ஆன் ஓதத் தெரியாதவர் எப்படி தொழுவது?

குர்ஆனில் எதுவும் மனனம் இல்லாதவர்கள் எப்படி தொழுவது? தொழுகையை துவக்கும் போது ஆரம்பமாக ஓதும் துஆக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளனர். அதன் பின்னர் அல்ஹம்து அத்தியாயமும் தெரிந்த அத்தியாயங்களும் ஓதவேண்டும் ...

அரைக்கை சட்டை டீஷர்ட் பணியன் அணிந்து தொழலாமா

அரைக்கை சட்டை டீஷர்ட் பணியன் அணிந்து தொழலாமா நம் தமிழகத்து மவ்லவிமார்களில் பலரும் அரைக்கைச் சட்டை அணியக்கூடாது என்கின்றனர். இன்னும் சிலர் பொதுவாக அரைக்கைச் சட்டை அணியலாம் என்றாலும்,தொழுகையின் போது முழங்கை வரை மறைக்க ...

ஜனாஸா தொழுகைச் சட்டங்கள்

ஜனாஸா தொழுகை சட்டங்கள் இணை கற்பிக்காதவர்களுக்கே ஜனாஸா தொழுகை ஜனாஸா தொழுகை என்பதில் தொழுகை என்ற சொல் உள்ளடங்கி இருந்தாலும் இதில் ருகூவு, ஸஜ்தா மற்றும் இருப்புக்கள் கிடையாது. நின்ற நிலையில் இறைவனைப் போற்றிப் ...

துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு நோற்பது சுன்னத்தா?

துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு நோற்பது சுன்னத்தா? துல்ஹஜ் மாதம் 1 முதல் 9 வரை சிலர் நோன்பு வைக்கிறார்கள், அப்படி வைக்கலாமா? அல்லது 9 அரபாத் நாள் மட்டும் வைக்க ...

கலீஃபாக்கள் யார்? அவர்களைப் பின்பற்ற வேண்டுமா?

நேர்வழி பெற்ற கலீபாக்களின் வழியைப் பின்பற்ற வேண்டுமா? நபித்தோழர்களைப் பின்பற்ற வேண்டும் என்று சொல்பவர்கள் பின்வரும் நபிமொழியை ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள். 2600حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ حَدَّثَنَا بَقِيَّةُ بْنُ الْوَلِيدِ عَنْ بَحِيرِ ...

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம்

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம் இவ்வசனத்தில் 67:3 அல்லாஹ் தனது நான்கு பண்புகளைக் குறிப்பிடுகிறான். 1, அவ்வல் (முதலானவன்) 2, ஆகிர் (முடிவானவன்) 3, ளாஹிர் (மேலானவன்) 4, பாதின் (அடித்தளமானவன்) இந்த நான்கு ...

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம்

521.அல்லாஹ்வுடைய நான்கு பண்புகளின் விளக்கம் இவ்வசனத்தில் 67:3 அல்லாஹ் தனது நான்கு பண்புகளைக் குறிப்பிடுகிறான். 1, அவ்வல் (முதலானவன்) 2, ஆகிர் (முடிவானவன்) 3, ளாஹிர் (மேலானவன்) 4, பாதின் (அடித்தளமானவன்) இந்த நான்கு ...

பெண்கள் பிராணிகளை அறுக்கலாமா

பெண்கள் பிராணிகளை அறுக்கலாமா? பெண்கள் அறுப்பதற்கு எவ்விதத் தடையும் ஹதீஸ்களில் இல்லை. மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒரு பெண் அறுத்ததை அங்கீகரித்துள்ளார்கள். صحيح البخاري 5504 - حَدَّثَنَا صَدَقَةُ، أَخْبَرَنَا ...

மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்று பொருள் உண்டா?

மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்று பொருள் உண்டா? இக்பால், முத்துப்பேட்டை பதில் மர்ஹூம் என்ற சொல்லுக்கு மரணித்தவர் என்ற பொருள் அகராதியில் இல்லை. ரஹ்மத் رَحْمَة என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த சொல் ...

விரலசைத்தல் பற்றிய ஹதீஸ் ஷாத் எனும் வகையில் அடங்குமா

ஸாயிதா பற்றிய விமர்சனம் ஆஸிம் வழியாக அறிவிக்கும் அறிவிப்பாளர் ஸாயிதா ஆவார். இவரது நம்பகத் தன்மையில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆயினும் இவரைத் தொடர்பு படுத்தி வேறு ஒரு விமர்சனத்தை சிலர் செய்து ...

கணக்கர் மற்றும் ஆடிட்டர் பணி செய்யலாமா? கட்டுரை

கணக்கர் மற்றும் ஆடிட்டர் பணி செய்யலாமா? இவ்விரு பணிகளிலும் கணக்கு எழுதும் போது நிறுவனங்கள் தொடர்பான வட்டி விபரத்தையும் சேர்த்து கணக்கு பார்க்க வேண்டும். இது வட்டியை எழுதியதாக ஆகும் என்று கருதி இந்தப் ...

குரங்கு விபச்சாரம் செய்யுமா?

குரங்கு விபச்சாரம் செய்யுமா? 3849.அம்ர் இப்னு மைமூன்(ரஹ்) அறிவித்தார். அறியாமைக் காலத்தில் விபசாரம் புரிந்த பெண் குரங்கொன்றைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதை கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன் ...

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு?

தம்பதியர் பிரிந்துவிட்டால் குழந்தை யாருக்கு? கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது. குழந்தை பாலருந்தும் ...

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்?

மாலையில் சிறுவர்களை வெளியே விடக் கூடாது என்பது ஏன்? 3304حَدَّثَنَا إِسْحَاقُ أَخْبَرَنَا رَوْحٌ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْن عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ...

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா?

அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? அலங்காரம் செய்யப்பட்ட புர்காவை அணியலாமா? என்ற இக்கேள்விக்கு பதிலை அறிந்து கொள்வதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் பர்தா முறை எவ்வாறு இருந்தது என்பதை முதலில் ...

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா?

நபியின் இரத்தம் குடித்தால் நரகம் தீண்டாதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மீதுள்ள அன்பினால் நபியவர்களின் சிறுநீரை நபித்தோழியர்கள் குடித்தார்கள் என்ற பொய்யான செய்தி ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தி கருத்து ரீதியிலும் ...

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு

இஸ்லாத்தின் பார்வையில் ஜல்லிக்கட்டு மாடுகளைத் துன்புறுத்துதல்: ஜல்லைக் கட்டு வீர விளையாட்டு என்ற பெயரில் நியாயப்படுத்தப்பட்டாலும் இஸ்லாமியப் பார்வையில் இது அனுமதி இல்லாத விளையாட்டாகும். வீர விளையாட்டு என்றால் அதில் சமநிலை இருக்க வேண்டும் ...

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா?

மக்காவிலோ, மதீனாவிலோ மரணிப்பதில் சிறப்பு உண்டா? மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது பாக்கியம் என்ற ‎நம்பிக்கை பலரிடமும் உள்ளது இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை ‎அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.‎ المعجم ...