வேண்டாத ஆய்வுகள்

“கஹ்ஃபு’ (குகை) என்ற 18வது அத்தியாயத்தின் 19வது வசனத்தில் “வல்யத்தலத்தஃப்’ என்ற ஒரு சொல்லை மட்டும் பெரிய எழுத்தாக எழுதியிருப்பார்கள்.

திருக்குர்ஆனின் எழுத்துக்களை எண்ணி, அதில் சரிபாதி இடமாக இந்தச் சொல் இடம் பெற்றுள்ளது என ஓரத்தில் குறிப்பு எழுதியுள்ளனர்.

இப்படி எழுத்துக்களை, புள்ளிகளை, குறியீடுகளை எண்ணுமாறு அல்லாஹ்வோ, அவனது தூதரோ நமக்குக் கட்டளையிடவில்லை. ஒரு சொல் சரிபாதி இடத்தில் அமைந்திருப்பதால் அதற்கு மார்க்கத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை.

இதில் மக்களுக்கு எந்த அறிவுரையும், வழிகாட்டலும் இல்லை. மேலும் திருக்குர்ஆனில் அதை மட்டும் பெரிதாக எழுதியிருப்பது திருக்குர்ஆனுடன் விளையாடுவதாகவே அமையும்.

இவை வேண்டாத வேலைகள். பிற்காலத்தில் வரும் மக்களுக்கு இது ஒரு புரியாத புதிர் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கும்.

இவ்வாறு எழுத்துக்களை எண்ணியே சிலர் வழிகெட்டுப் போனதையும் இங்கு நினைவு கூர வேண்டும்.