விசிட் விசாவில் உம்ராச் செய்யலாமா?

என்னுடைய தாயாரைக் குவைத்திற்கு விசிட் விசாவில் வரவழைத்து உம்ராவுக்கு அனுப்புவது கூடுமா?

ஹமீத், குவைத்.

பதில் :

ஒருவரை விசிட் விசாவில் வெளிநாட்டிற்கு அழைத்து அங்கிருந்து உம்ராவிற்கு அனுப்பவதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை.

பாதுகாப்பாக இருந்தால் ஹஜ் மற்றும் உம்ராவுக்காக பெண்கள் தனியாகப் பயணம் செய்வதற்கும் மார்க்கத்தில் தடையில்லை.

ஆனால் சவூதி அரசாங்கம் உம்ராச் செய்ய வருவோரின் எண்ணிக்கைக்கு ஏற்ப வசதிகளைச் செய்து கொடுக்கும். அதை விட அதிகமான மக்கள் குழுமினால் நெரிசலும் அதனால் உயிரிழப்புகள் வரை ஏற்படலாம். விசிட் விசாவில் சென்றவர்களுக்காக உம்ராவுக்கான ஏற்பாட்டைச் செய்திருக்க மாட்டார்கள்.

ஓரிருவர் என்றால் பிரச்சனை ஏற்படாது. பல்லாயிரம் பேர் இந்த வழிமுறையைக் கடைப்பிடித்தால் கடும் நெரிசல் ஏற்பட்டு பாரதூரமான விளைவுகள் ஏற்படும். மேலும் சவூதி அரசு இதைக் கண்டுபிடித்து விட்டால் அதற்கான சட்டப்படி தண்டிக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே சட்டங்களுகு கட்டுப்பட்டு நடப்பது தான் உம்ரா ஒழுங்காக நடைபெற உதவும்.

பெண்கள் தனியாக ஹஜ் செய்யலாமா என்ற ஆக்கத்தைப் பார்க்கவும்.